Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொந்த மக்களின் மரணத்தை வெற்றி விழாவாக கொண்டாடும் ஒரே நாடு இலங்கை மட்டுமே: மனோ கணேசன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

ஏறக்குறைய ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட சொந்த நாட்டு மக்களின் மரணத்துக்கு காரணமாக அமைந்த உள்நாட்டு யுத்தத்தில் கிடைத்த  வெற்றியை மாபெரும் தேசிய வெற்றி விழாவாக கொண்டாடும் ஒரே நாடு உலகத்தில் இலங்கை மட்டும்தான்.

 

அண்டை நாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிராக யுத்தம் செய்து பெற்ற வெற்றியை போன்று உள்நாட்டு யுத்த வெற்றியை கொண்டாடுபவர்கள், இந்த யுத்த வெற்றியின் பின்னால் மறைந்து நிற்கும் மனதை கொல்லும் சோகத்தை அங்கீகரிக்க மறுக்கின்றார்கள். அதனால் யுத்தத்தில் தமது உறவுகளை இழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்கள், உயிரிழந்த தமது அந்த உறவுகளை நினைவு கூறுவதற்கும் உரிமைகளை இழந்து நிற்கிறார்கள்.

 

இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து யுத்தம் நடத்திவிட்டு, இவ்வாரம் கொழும்பில் நடைபெறும் வெற்றி விழாவிலும் கலந்துகொள்ளும் இந்தியா, அமெரிக்கா மற்றும்உலக நாட்டு அரசாங்க பிரதிநிதிகள் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

 

கொழும்பில் நடைபெற ஆயத்தப்படுத்தப்படும் தேசிய வெற்றி விழா நிகழ்வுகள் பற்றி கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

நான்கு வருடங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்த யுத்தத்தை நாங்கள் மறக்க நினைக்கின்றோம். ஆனால் அதை வருடா வருடம் ஞாபகப்படுத்தி இந்த அரசாங்கம் அரசியல் செய்கிறது.

 

யுத்தம் நடத்தியவர்களது கோணத்தில் பாத்தாலும்கூட, யுத்தத்தை நடத்திய அன்றைய இராணுவ தலைமை தளபதி சரத் பொன்சேகாவுக்கு இந்த வெற்றி விழாவில் இடம் இல்லை. இதன்மூலம் இந்த வெற்றி விழாவை இந்த அரசாங்கம் தனது சொந்த வெற்றியாக அரசியல் இலாப கண்ணோட்டத்தில் நடத்துகின்றது என்பது தெளிவாகின்றது.

 

ஆகவே தனது சொந்த அரசியல் நோக்கங்களுக்காக யுத்தத்தில் தங்கள் இன்னுயிரை இழந்த ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்களின் நினைவுகளை இந்த அரசாங்கம் துச்சமாக நினைக்கின்றதும் தெளிவாகின்றது.

 

அதேபோல் இவர்கள் வெற்றிவிழா கொண்டாடும் அதேவேளையில் தங்கள் உறவுகளை இழந்து வாழ்பவர்களுக்கு, இறந்து போனவர்களை  நினைந்து நிகழ்வுகள் நடத்தவும் உரிமை மறுக்கப்படுகின்றது. இதன்மூலம் இந்த அரசாங்கம் இறந்து போனவர்களை அவமரியாதை செய்கின்றதும் தெளிவாகின்றது.

 

இந்த பின்னணியில் இந்த அரசாங்கம் நடத்தும் யுத்த வெற்றி விழாவில் கலந்துகொண்டு, இந்த விழாவுக்கு அங்கீகாரம் தந்து சிறப்பிக்க போகும் தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல்வாதிகள் யார் என்பதையும், சர்வதேச சமூக பிரதிநிதிகள் யார் என்பதையும் இலங்கை வாழ் தமிழ் மக்களும், நல்லெண்ணம் கொண்ட அனைத்து மக்களும் எதிர்நோக்கி இருக்கின்றார்கள்

 

http://www.virakesari.lk/article/local.php?vid=4506

 

  • கருத்துக்கள உறவுகள்

அரசுடன் ஒத்துழைக்கும் தமிழ் வீரர்கள் ஏன் கேள்வி கேட்க விரும்பவில்லை? என்றால் அவர்களும் தமிழர்களின் சாவில் இன்பம் காண்கிறார்கள் என்பது தானே அர்த்தம்.குறிப்பாக டக்ளஸுக்கு வக்காலத்து வாங்குபவர்களின் கருத்து என்ன ??

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெற்றி விழாவின் மூலம் மகிந்த தனது அதிகாரத்தை சிறிலங்காவில் இன்னும் 

ஆழமாக வேறூன்ற வைக்க முயற்சிக்கின்றார்.

சரத் பொன்சேகாவிற்கு  அழைப்பற்ற நிலையில் அவரை ஒதுக்கிவிட்டு

 

மகிந்த குடும்பமே இன்றைய சிங்களத்தின் பாதுகாவலர்கள் என்ற தொனியில் 

சிங்களவர்கள் திசை திருப்பப்படுகின்றனர் .

 

இதனை ஆதரிக்கும் சிங்களவர்கள் தமிழர்கள் என்றும் தனித்துவமானவர்கள் 

அவர்களுக்கும்  சிறிலங்காவிற்கும்  எந்தத் தொடர்பும் இல்லை

தனித் தமிழ் ஈழமே அவர்களது நாடு என்பதையும் ஏற்றுக் கொள்ளவேண்டும்

 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் தான் இப்பவும் சிறீலங்கன் என்று சொல்லிக் கொண்டு சிறீலங்கா அரசுக்கு சொந்த மக்களாக எம்மை சுய அடையாளப்படுத்தல் செய்து கொண்டிருக்கிறோம். ஆனால் இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் சிங்களவர்கள் தமிழர்களை சொந்த நாட்டு மக்களாகப் பார்ப்பதும் இல்லை. நடத்துவதும் இல்லை. அதனால் தான் எங்கள் நாட்டை எங்களிடமே தா என்று கேட்டோம். கேட்கிறோம். மனோ கணேசனும் தொடர்ந்து ஒரே கருத்தைச் சொல்லிக் கொண்டிராமல்... சர்வதேசத்திற்கு.. அமெரிக்கா இந்தியா போன்ற இரட்டை வேடதாரிகள்.. தமிழர்களுக்கு எதிராக இழைத்த.. சர்வதேசக் குற்றங்களையும் இனங்காட்டி.. சிங்களத்தின் தமிழர் விரோத சிந்தனையோட்ட...இந்த உண்மைகளையும்.. வெளிக்காட்டி தமிழர்கள் பிரிந்து செல்ல சிங்களவர்களே தூண்டுதலாக உள்ளனர் என்ற யதார்த்தத்தை இனங்காட்ட வேண்டும். இவை எல்லாம் எமக்கு சிங்களம் வெற்றி மமதையில் அளிக்கும் அரிய வாய்ப்புக்கள். இவற்றை நாம்.. தவறவிடும் படிக்கு தவறான.. ஐக்கிய இலங்கை விளக்கம் அளித்துக் கொண்டிருப்பது.. ஒரு வகையில் எமது முட்டாள் தனம் கூட..! :icon_idea:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.