Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பள்ளிவாசல்களில் படுகொலை நடத்தியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பள்ளிவாசல்களில் படுகொலை நடத்தியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்

Published on May 12, 2013-12:44 pm   ·   No Comments

Eravur-150x150.jpg

 

வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இன சுத்திகரிப்பு செய்தது தவறு என்பதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலேயே தமிழ்த் தரப்பு மற்றவர்களிடம் நியாயம் கோர முடியும் என அண்மையில் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியிருந்தார்.

 

சுமந்திரன் கூற்று தவறே இல்லை. வடபகுதியிலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியது மட்டுமன்றி காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்களில் துப்பாக்கி சூட்டை நடத்தி அப்பாவி மக்களை படுகொலை செய்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் யார் யார் இப்போது உயிருடன் இருக்கிறார்களோ அவர்களை கண்டு பிடித்து தண்டனை வழங்க வேண்டும். 1990களில் பள்ளிவாசல்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் பொறுப்பாளராகவும், இத்தாக்குதல்களுக்கு உத்தரவை வழங்கியவருமான கருணா உட்பட குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்க வேண்டும் என்பதில் தமிழ் மக்களுக்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

 

கிழக்கில் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்களை நடத்திய கருணா உட்பட குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்.  ஆனால் தற்போது பிரதியமைச்சராக இருக்கும் கருணா உட்பட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் என எந்த ஒரு முஸ்லீம் தலைவர்களும் கோரியதாக தெரியவில்லை.

 

ஆனால் வடபகுதியிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது பற்றியும் பள்ளிவாசல் படுகொலை பற்றியும் பேசுபவர்கள் கிழக்கில் முஸ்லீம்களால் இழைக்கப்பட்ட கொடுமைகள் பற்றி பேச ஏன் மறுத்து வருகிறார்கள்.  நடுநிலைவாதிகள், என தங்களை சொல்லிக்கொள்பவர்கள் முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டது பற்றி பறையடித்து சொல்லி வருகிறார்கள். வருடாவருடம் ஆட்டத்துவசம் செய்வது போல மேடைபோட்டு பேசி வருகிறார்கள்.
ஆனால் 1981ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் இனசுத்திகரிப்பு பற்றி யாராவது ஒருவராவது பேசியதுண்டா?

 

முஸ்லீம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிபற்றி அல்லது முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகள் பற்றி தமிழர் தரப்பில் உள்ள பலர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் கூட அதன் தலைமை யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டமை பற்றி வருத்தம் தெரிவித்திருந்தார்கள்.

 

ஆனால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் முஸ்லீம்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பல சைவ ஆலயங்கள் முஸ்லீம்களால் உடைக்கப்பட்டிருக்கிறது. 40க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப் பட்டிருக்கிறார்கள். கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட கொடுமைகள் தவறு என்பதை ஒரு முஸ்லீம் தலைவர்களாவது ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா? முஸ்லீம் அரசியல் தலைவர்களை விடுவோம், சாதாரண ஒரு முஸ்லீம் நபராவது கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களால் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களா?

 

போர் நடத்த காலத்தில் மட்டுமல்ல இன்று கூட கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களால் தமிழ் மக்கள் மீதும் தமிழ் கிராமங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டு கொண்டுதான் இருக்கிறது.

 

வரலாற்றுப் பிரசித்திபெற்ற சம்மாந்துறை ஸ்ரீபத்திரகாளி அம்;பாள் ஆலய முகப்பிலிருந்த பிள்ளையார் விக்கிரகம் மீண்டும் முஸ்லீம்களால் கடந்த வாரத்தில் சேதமாக்கப்பட்டிருந்தது. இரு மாதங்களுக்கு முதலும் இந்த விக்கிரகம் தகர்க்கப்பட்டிருந்தது. பின்னர் புனரமைக்கப்பட்ட போதிலும் மீண்டும் அது உடைக்கப்பட்டிருக்கிறது.

 

தமிழ் கிராமம் ஒன்றிற்கு பக்கத்தில் இருக்கும் பள்ளிவாசல் சேதமாக்கப்பட்டிருந்தால் தமிழ் கிராமங்கள் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும். உலகம் முழுவதும் அது பேசப்பட்டிருக்கும். சைவ ஆலய விக்கிரகம் சேதமாக்கப்பட்டதால் முஸ்லீம்கள் மட்டுமல்ல, சுமந்திரன் போன்றவர்களும் வாய் திறக்கவில்லை.

 

இதேபோன்று கல்முனையையடுத்துள்ள நற்பிட்டிமுனை சிவசக்தி வித்தியாலயத்தோடு இணைந்ததாக செயற்பட்டுவந்த தமிழரின் பிரபல நூலகம் கடந்த வாரம் முஸ்லிம் விரோதிகளாகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சம்மாந்துறை, கல்முனை பகுதியில் சைவ கோவில்களை உடைத்து வந்த முஸ்லீம் தீய சக்திகள் தமிழர்களின் நூலகத்தையும் எரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

 

இதேபோன்று வீரமுனை தமிழ் கிராமத்தில் முஸ்லீம்கள் செய்து வரும் சட்டவிரோத செயல்கள் பற்றியும் சுமந்திரன் போன்றவர்கள் வாயே திறக்கவில்லை.

 

சம்மாந்துறை போன்ற முஸ்லீம் பிரதேசங்களில் வெட்டப்படும் மாடுகளின் கழிவுகளை வீரமுனை கிராமத்தின் வீதி ஓரங்களில் கொண்டு வந்து வீசிவிட்டு செல்கின்றனர். வீரமுனையில் நூறு வீதம் சைவமக்கள் வாழ்கின்றனர். அயல் கிராமமான சம்மாந்துறை போன்ற முஸ்லீம்கள் வாழும் இடங்களிலேயே மாட்டிறைச்சி கடைகளும் மாடு வெட்டுபவர்களும் உள்ளனர். தினமும் வெட்டப்படும் மாடுகளின் தலைகள், தோல், குடல்கள் மற்றும் கழிவுகளை கொண்டு வந்து வீரமுனை கிராம வீதிகளில் வீசிவிட்டு செல்கின்றனர்.

 

தினமும் காலையில் எழுந்து பார்த்தால் வீதிகளில் மாட்டு கழிவுகளை தான் காணமுடிகிறது, அதனை நாய்கள் சாப்பிட்டு இழுத்துக்கொண்டு வீடுகளுக்கு வருகின்றன, காகங்கள் குடல்களையும் கழிவுகளையும் கொண்டு வந்து கிணற்றிற்குள்ளும், வீட்டு முற்றத்திலும் போடுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வீரமுனை கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். வீரமுனை கோவில் கிணறுகளுக்குள்ளும் காகங்கள் மாட்டு குடல்களை போடுகின்றன என அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.


மாடு வெட்டும் முஸ்லீம்கள் திட்டமிட்ட இந்த அராஜகத்தையும் அநாகரிகம் மிக்க செயலையும் செய்கின்றனர். தமிழ் மக்களுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு அவர்கள் இதனை செய்து வருகின்றனர் என வீரமுனை மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

1990களில் வீரமுனை பிள்ளையார் கோவில் உட்பட சைவ ஆலயங்களில் தஞ்சம் அடைந்திருந்த தமிழ் மக்களை முஸ்லீம்கள் ஈவிரக்கமின்றி வெட்டி கொலை செய்தனர். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். கைக்குழந்தைகளை கூட இரண்டு துண்டாக வெட்டி வீசினர். தமிழர்களை வெட்டி கொலை செய்த கொடுமைகளை செய்த முஸ்லீம்கள் இன்று மாடுகளை வெட்டி அதன் கழிவுகளை வீரமுனை கிராமத்திற்குள் வீசிவிட்டு செல்கின்றனர்.


முஸ்லீம்கள் மாடுகளை வெட்டுவதற்கோ குரங்குகளை வெட்டி சாப்பிடுவதற்கோ தமிழர்கள் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள். நீங்கள் மாடுகளையோ குரங்குகளையோ வெட்டி தின்னுவதற்கு முதல் அதன் கழிவுகளை பக்குவமாக மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காத வகையில் புதைத்து விட்டு செல்ல வேண்டும், இதை விடுத்து கழிவுகளை அடுத்த ஊருக்குள் கொண்டு சென்று வீசிவிட்டு வரும் கழிவு வேலைகளை நிறுத்த வேண்டும் என வீரமுனை தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

சம்மாந்துறை கிராமத்தில் இருந்த தமிழ் மக்கள் மீது 1990ஆம் ஆண்டு முஸ்லீம்கள் மேற்கொண்ட தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர். எஞ்சியவர்கள் சம்மாந்துறையை விட்டு வெளியேறி அம்பாறை மட்டக்களப்பு மாவட்டங்களில் உள்ள தமிழ் கிராமங்களில் 23ஆண்டுகளாக அகதிகளாக உள்ளனர்.

சம்மாந்துறையிலிருந்து இடம்பெயர்ந்த தமிழ் குடும்பங்களில் ஒரு தொகுதியினர் மட்டக்களப்பு திருப்பெருந்துறை கிராமத்தில் குடியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் சம்மாந்துறை பத்திரகாளி அம்பாள் ஆலயத்தையும் அங்கிருந்து அகற்றுவதற்கு சம்மாந்துறையில் இருக்கும் முஸ்லீம்கள் முயற்சி எடுத்து வருகின்றனர் என்றும் ஆலய விக்கிரகங்களை சேதமாக்கும் நாசகார வேலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும் ஆலய பரிபாலசபையினர் தெரிவித்துள்ளனர்.


வடபகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கு எந்த ஒரு தமிழனும் தடையாக இருக்க முடியாது.

யாழ்ப்பாணத்திலும் சரி வன்னியிலும் சரி அவர்கள் வாழ்ந்த காணிகளில் அல்லது வீடுகளில் அவர்கள் வாழ்வதற்கு யாரும் தடையாக இருக்க முடியாது.


முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் என்ற பெயரில் தமிழ் கிராமங்களை அபகரிக்கும் திட்டமிட்ட குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும்.
சாவகச்சேரி வன்னி போன்ற இடங்களில் இருந்த முஸ்லீம்களில் பெரும்பாலானவர்கள் இடம்பெயர்ந்த பின்னர் தங்கள் காணிகளை விற்றிருந்தனர். தங்கள் காணிகளை விற்றுவிட்டு இப்போது புதிய காணி தருமாறு கோருவது எந்த வகையில் நியாயம்?

 

1977லும் 1981 , 1983 ஆண்டு காலப்பகுதியிலும் தென்னிலங்கையிலிருந்த தமிழ் மக்கள் தங்கள் வீடுவாசல்களை விற்றுவிட்டு வெளியேறியிருந்தனர். எனக்கு தெரிந்த தமிழர்கள் பலர் வெள்ளவத்தை பகுதியில் 1983ஆம் ஆண்டுக்கு பின் வீடுகளை சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் விற்றுவிட்டு சென்றனர்.

 

இப்பொழுது நிலமை சீரடைந்து விட்டது என கூறிக்கொண்டு நாங்கள் கொழும்பில் காலம் காலமாக இருந்தோம் எங்களுக்கு அங்கு காணி தாருங்கள் என தமிழர்களால் கேட்க முடியுமா?

 

தமிழர்களால் தான் முஸ்லீம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது என்றும் முஸ்லீம்கள் தமிழர்கள் மீது ஒரு துன்பத்தை கூட கொடுக்கவில்லை என்பது போலவே சுமந்திரன் போன்ற தமிழர்களும், முஸ்லீம்களும் கூறிவருகின்றனர்.


நிரபராதிகள் மௌனமானால் குற்றவாளிகள் நீதிபதிகளாகி விடுவார்கள், அது போன்று தான் தமிழர்கள் மௌனமாக இருப்பதை பயன்படுத்திக் கொண்டு தமிழர்களுக்கு நடந்த கொடுமைகள் அனைத்தும் மூடி மறைக்கப்பட்டு வருகிறது.


யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களால் மீண்டும் தங்கள் இடங்களில் மீண்டும் குடியேற முடியும்.

 

ஆனால் சம்மாந்துறை, மீனோடைக்கட்டு, ஏறாவூர் என கிழக்கில் 43கிராமங்களிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இந்த கிராமங்களுக்கு தமிழ் மக்கள் கால் வைக்க முடியாத நிலையிலேயே உள்ளனர். இது பற்றி சுமந்திரனோ அல்லது முஸ்லீம் தலைவர்களோ பேசி இருக்கிறார்களா?

 

1990ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்திலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்ட பின்னரும் காத்தான்குடி ஏறாவூர் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னரும் தான் முஸ்லீம்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சிலர் கூறிவருகின்றனர்.

 

உண்மை அதுவல்ல. 1981ஆம் ஆண்டிலிருந்து கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம்களால் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. 1986ஆம் ஆண்டில் நடந்த உடும்பன்குளம் படுகொலை தொடக்கம் கிழக்கில் நடந்த படுகொலைகளில் சிறிலங்கா படையினருடன் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் இணைந்தே அத்தனை படுகொலைகளையும் செய்திருந்தனர்.

 

மிகக்கடுமையாக யுத்தம் நடைபெற்ற வன்னி பகுதிகளில் கூட இன்று மீள்குடியேற்றம் செய்யப்படுகிறது. அமைச்சர்கள் அதிகாரிகள் என அடிக்கடி அங்கு சென்று வருகிறார்கள். அந்த மீள்குடியேற்றம் பற்றி அனைத்துலக சமூகமும் அக்கறை கொண்டிருக்கிறது. ஆயிரம் முஸ்லீம் குடும்பங்கள் சென்ற இடத்தில் இப்போது 10ஆயிரம் முஸ்லீம் குடும்பம் மீள்குடியேற்றம் செய்யப்படுகின்ற சம்பவங்களும் இடம்பெறுகின்றன.

 

ஆனால் 23வருடங்களாக மீள்குடியேற்றம் செய்யப்படாது, தனது சொந்த வீட்டில் குடியேற முடியாது அகதி வாழ்க்கை வாழும் ஒரு பகுதி மக்கள் இருக்கிறார்கள், அதுவும் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் பிறந்த சொந்த மாவட்டத்தில் இருக்கிறார்கள் என்றால் உங்களில் பலருக்கு நம்புவதற்கு கஸ்டமாகத்தான் இருக்கும்.

 

1990ஆம் ஆண்டு மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் முஸ்லீம் கிராமங்களை அண்டியிருந்த தமிழ் கிராம மக்கள் இடம்பெயர்ந்தார்கள். அவ்வாறு இடம்பெயர்ந்த ஏறாவூர் 4ஆம் குறிச்சி, 5ஆம் குறிச்சி கிராமமக்கள் கடந்த 23 வருடங்களாக மீள்குடியேற்றம் செய்யப்படாது, தமது சொந்த வீடுகளை முட்கம்பி வேலிகளுக்கு அப்பால் நின்று ஏக்கத்துடன் பார்த்து தினம் தினம் கண்ணீர் விடும் அவலநிலையை பற்றி ஏறெடுத்து பார்க்க இன்று யாரும் இல்லை.
4ஆம் குறிச்சி, 5ஆம் குறிச்சி ஆகிய இரண்டு பிரிவுகளையும் சேர்ந்த சுமார் 180 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். சுமார் 50ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட காணியை காவல்துறையினர் முட்கம்பி வேலி போட்டு அடைத்து வைத்திருக்கிறார்கள்.

 

இந்த காணியின் ஒரு பகுதியை ( தமிழரின் காணியை) 35 இலட்சம் ரூபாவுக்கு வாங்கிய அலிசாகிர் மௌலானா அரபு நாடு ஒன்றின் நிதி உதவியுடன் மிகப்பெரிய பள்ளிவாசல் ஒன்றையும் கட்டி முடித்திருக்கிறார்.


தமிழர்களை மீளக்குடியமர்த்த மறுக்கும் அரசாங்கமும் அரச படைகளும் தமிழர் காணியில் தமிழர்களின் பூர்வீக நிலத்தில் எப்படி முஸ்லீம் பள்ளிவாசல் ஒன்றை கட்டுவதற்கு அனுமதி வழங்கினார்கள். பாதுகாப்பு வலயம் என கூறி தமிழர்களை அந்த இடத்திற்கு செல்லவிடாது தடுத்து வரும் காவல்துறையினர் பள்ளிவாசலை கட்டுவதற்கும் எப்படி அனுமதித்தார்கள்?

 

இந்த பகுதியில் 4ஆம் குறிச்சி, 5ஆம் குறிச்சி பகுதிகளை அண்டிய இடங்களில் இருந்த முஸ்லீம் மக்கள் அனைவரும் தொடர்ந்து தமது சொந்த இடங்களில் வசித்து வருகிறார்கள். ஆனால் தமிழ் மக்களை மட்டும் அங்கு மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்காது படையினர் தடுத்து வருவதேன் என அப்பிரதேச மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

 

இப்பொழுது ஏறாவூரில் உள்ள முஸ்லீம் தலைவர்கள் சிலர் தமிழ் மக்களின் காணிகளை மிகக்குறைந்த விலைக்கு வாங்கி வருகின்றனர்.
ஏறாவூர் தமிழ் மக்களின் இந்த காணிகள் முஸ்லிம் நாடுகளின் நிதியுதவியைக் கொண்டு அபகரிக்கப்பட்டு வருகிறது.


1990ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி,நான்காம் குறிச்சி தமிழ் மக்களின் காணிகளை ஏறாவூர் முஸ்லிம் செல்வந்தர்கள் பலர் முஸ்லீம் நாடுகளின் நிதியுதவியை பெற்று இடைத்தரகர்கள் ஊடாக மிகப் பெரிய பணத்தொகையினை கொடுத்து நில அபகரித்து வருகின்றனர்.

ஒரு தமிழ் பாடசாலை, மூன்று பழமைவாய்ந்த இந்து ஆலயங்கள் உள்ள இந்த கிராமங்களைச் சுற்றியுள்ள காணிகளை முஸ்லீம்கள் கொள்வனவு செய்து வருவது எதிர்காலத்தில் தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியில கலாசார மத ரீதியான இன முரண்பாடுகளை தோன்றுவது தவிர்க்க முடியாததாகும்.

முஸ்லீம் பிரதேசங்களில் ஒரு அடி நிலத்தை கூட தமிழர்கள் வாங்கமுடியாது. இந்நிலையில் தமிழ் மக்களின் காணிகள் முஸ்லீம்களால் அபகரிக்கப்பட்டு வருகிறது. அண்மையில் கூட முள்ளிவளையில் தமிழ் மக்களின் வீடுகளை முஸ்லீம் அரசியல்வாதிகளின் அடியாட்கள் சிலர் தீக்கிரையாக்கியுள்ளனர்.

 

கிழக்கில் நடந்த உடும்பன்குள படுகொலை தொடக்கம், கிழக்கு பல்கலைக்கழக படுகொலை,(05.09.1990) சத்துருக்கொண்டான் படுகொலை,(09.09.1990) சம்மாந்துறை படுகொலை,(10.07.1990) சித்தாண்டிப்படுகொலை( 20, 27யூலை 1990) பொத்துவில் படுகொலை,( 30.07.1990) கல்முனை படுகொலை (11.08.1990) துறைநீலாவணை படுகொலை( 12.08.1990) ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை (12.08.1990) கோராவெளி படுகொலை 14.08.1990) ஏறாவூர் படுகொலை (10.10.1990) நற்பிட்டிமுனை படுகொலை (10.09.1990) புல்லுமலை படுகொலை (1986, 1990) வீரமுனை படுகொலை (20.06.1990) என நீண்டு செல்லும் இந்த தமிழின படுகொலைகளில் சிறிலங்கா படைகளுடன் முக்கிய பங்கு வகித்தவர்கள் முஸ்லீம் ஊர்காவல்படையினரே ஆகும். சத்துருக்கொண்டான், மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு படுகொலைகளில் நேரடியாக ஏறாவூர், காத்தான்குடி முஸ்லீம்கள் ஈடுபட்டிருந்தனர்.

 

முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது படுகொலை செய்யப்பட்டது பற்றியும் பேசுபவர்கள் கிழக்கில் முஸ்லீம்களால் நடத்தப்பட்ட தமிழின படுகொலை பற்றியும் பேச வேண்டும். 43க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கும் தமிழர்கள் பற்றியும் பேச வேண்டும்.

 

சம்பந்தன், மாவை போன்ற தமிழ் தலைவர்கள் முஸ்லீம் தமிழ் ஒற்றுமை குறித்து அடிக்கடி பேசி வருகின்றனர். வரவேற்கப்பட வேண்டிய விடயம் தான். ஆனால் ஒரு கை தட்டினால் சத்தம் வரப்போவதில்லை. இரு கைகளும் தட்டப்பட வேண்டும்.

 

இரா.துரைரத்தினம்

 

 

http://www.thinakkathir.com/?p=49996

 

Edited by நிழலி
மூல இணைப்பை வழங்க + பந்திகளுக்கு இடைவெளி விட

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம் தலைவர்கள் நேர்மையான அரசியலைச் செய்பவர்கள அல்லர்.. காத்தான்குடிப் படுகொலைக்கு கருணா காரணமாக இருந்தாலும் அவர் இப்போது மகிந்தருடன் இருப்பதால் யாரும் வாயைத் திறக்கமாட்டார்கள். இதே யாழ் மாகாணத்தில் டக்ளஸ் அவர்கள் வென்றாரென்றால் இந்த முஸ்லீம் வெளியேற்றக் கூப்பாடுகள் நின்றுவிடும்.. :D

வேறு வழியில்லாமல் தற்பாதுகாப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட பள்ளிவாசல் கொலைக்கு தண்டனை கொடுப்பதற்கு முன்னர் அதற்கு காரணமாக அமைந்த தமிழ் மக்கள் மீதான முஸ்லிம்களின் அனைத்து ஆராஜகங்களுக்கும் முதலில் தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இன்று கருணாவை தமிழ் மக்கள் விரும்பாவிட்டாலும் இந்த விடயத்தில் கருணாவை தண்டிக்க கோருவதை யாரும் ஆதரிக்கப் போவதில்லை.
 

 

  • கருத்துக்கள உறவுகள்

சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீண்டும் ஒன்றிணைய முடியாத பிளவுகளை ஏற்படுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. காயங்களை ஆற்றுவதற்குப் பதிலாக மீண்டும் மீண்டும் குத்திக் கொண்டிருப்பது சிங்களப் பேரினவாதிகளுக்கு வேலையை இலகுவாக்கும் என்பது எப்போதுதான் புரியுமோ தெரியவில்லை.

வேறு வழியில்லாமல்தான் பள்ளிவாசல் படுகொலையை நடாத்தியதாக கருணா சொல்லியிருந்தாரா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீண்டும் ஒன்றிணைய முடியாத பிளவுகளை ஏற்படுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. காயங்களை ஆற்றுவதற்குப் பதிலாக மீண்டும் மீண்டும் குத்திக் கொண்டிருப்பது சிங்களப் பேரினவாதிகளுக்கு வேலையை இலகுவாக்கும் என்பது எப்போதுதான் புரியுமோ தெரியவில்லை.

வேறு வழியில்லாமல்தான் பள்ளிவாசல் படுகொலையை நடாத்தியதாக கருணா சொல்லியிருந்தாரா?

 

 

கிருபன் ஒரு சிங்கன்தான் 

-சிலவேளைகளில் பந்தி பந்தியாக எழுதிய ஆக்கங்களை இணைப்பதை தவிர- :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.