Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழினி ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளராக வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போராளிகள் என்றால் இரத்தம் வடிக்கும் சிலருக்கு குத்தகையில் உழைத்த உழைப்பின் ருசி போகாமல் இருக்கிறது. 

 

தமிழினி ஓர் போர்க்கைதி எதிரியின் கையில் இருக்கிற ஒரு போர்க்கைதி. என்பதனை புரிந்தால் இந்து நீண்ட விவாதம் தேவையாக இருக்காது.

 

எல்லாவற்றுக்கும் மேலாக சுகமாக வெளிநாட்டில் இருந்து கொண்டு தேசியசாசனத்தை சுமக்கிற சிலருக்கு மட்டும் தமிழினியை மட்டுமல்ல இந்த துப்புக்கெட்ட இனத்துக்காக போராடி வலியோடு தினம் வதைபடுகிற போராளிகளை தமிழன் என்ற பெயரால் விமர்சிக்கவும் பங்கெடுக்கவும் பங்கிருப்பதாகவும் வேறு வீராப்பு. வாழ்க இந்தத் தமிழனும் தமிழ் உணர்வும்.

வவுனியாவில் தமிழினியின் முகத்தை தரிசித்தவர்களுக்கு தமிழினி எதையும் முகத்தில் எழுதி ஒட்டி வைத்து தன்னை பொதுச்சொத்தாக பிரகடனப்படுத்தவில்லையென்ற உயர்திரு தமிழர்களுக்கு தெரியாதோ என்னவோ. இவர்களது எண்ணத்தை தமிழினியும் விரும்புகிறராம். பூவைக்கிறதெண்டு முடிவெடுத்த பிறகு பூசையும் நேரமும் பொதுவானது தான்.

 

 

 

 

 

உங்களின் கோபம் தமிழினி அரசியலை மோசமானதாக விமர்சிக்கும் பக்கத்தின் மீதா? இல்லை தமிழினியின் அரசியல் பிரவேசம் பொய் என்ற அடிப்படையின் பின்னாலும் வளர்ந்து கொண்டிருக்கும் இருவகையான விவாதங்களின் மேலாகவுமா?

இல்லை, தமிழினிக்கு அந்த உரிமை நியாயமாகவே இருக்கின்றது. என்ற அடிப்படையினாலா?

  • Replies 64
  • Views 4.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விமர்சிக்கும் முன்னாலை சில கேள்விகளுக்கு உங்களுக்கு நீங்களே பதில் சொல்லிக்கொள்ள வேண்டும் அண்ணை...  

 

நீங்கள் கூட்டமைப்பை அங்கீகரிக்கிறீர்களா...??  

 

அப்படி அங்கீகரிக்க முடிந்தால் அவர்களுள் அமிர்தலிங்கம் முதல் ஆனந்தசங்கரி சம்பந்தர் வரை,  1986ல் இந்திய இராணுவ கால  EPRLF, 1989 முதல் PLOT, TELO  எல்லோரும்  இலங்கை அரசின் அதோடு  இராணுவத்தின்  நிகழ்ச்சி நிரலுக்கு அமைய அரச கட்டுப்பாட்டுக்குள் செயற்பட்டார்கள் என்பதை மறுக்கிறீர்களா...??   இல்லை வெளிநாட்டு அழுத்தங்களுக்காக குமார் பொன்னம்பலம்  அவர்களை சுட்டதை போல சுடாமல் வைத்து தமிழர்களின் அரசியல் தலைமையை சிங்கள அரசு மனிதாபிமானத்தோடு பாதுகாத்தது எண்று சொல்ல வருகிறீர்களா...?? 

 

கூட்டமைப்பு அமையும் முன்னர் வந்த தேர்தல்கள் எல்லாவற்றையும் நீங்களுக்கும் எதிர்த்த போதும் அவர்கள் தனித்தனியாக  தேர்தலில் நிண்றார்கள் இப்போது கூட்டமைப்பாக போர் முடிந்த பின்னர்  நிற்க்க போகிறார்கள்...  வித்தியாசம் அவ்வளவுதான்.... 

 

மாற்றம் ஒண்றுதான் இண்று வரைக்கும் மாறாமல் இருக்கிறது... 

 

அல்லது நீங்கள் சொல்ல வருவது கைது செய்யப்பட்ட ஒருவர் அரசியலில் தலைமைக்கு வரமுடியாது எண்று சொல்ல வருகிறீர்களா...??  

 

தமிழ் மக்களின் இன்றையநிலை குறித்து மட்டுமே பேசுகின்றேன்

மீண்டும்  அமிர்தலிங்கம் வரை செல்ல விரும்பவில்லை.

 

இதுவரை தாயகம் சார்ந்து நான் ஆதரித்தவை 

தாயக மக்களின் விருப்புக்கு  மாறாக இருந்ததில்லை

 

அந்தவகையில் மகிந்தவின் இந்த முயற்சியை  ஏற்கமுடியவில்லை

இன்றையநிலையில் வாக்குகள் சிதறுவதை ஏற்கமுடியவழில்லை.

மற்றும்படி மீண்டும் சொல்கின்றேன் தமிழினி  பற்றி  இங்கு நான் பேசவில்லை.

அவர் தேர்தலில் நின்று தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் நிச்சயம் நான் அதை ஏற்றுக்கொள்வேன். 

 

மேலும் இந்த திரியே  சாட்சி  எம்மவர்களை  மோதவிட எவ்வளவு சுலபமான வழி என்று.

எனவே இத்திரியிலிருந்து இத்துடன் விடை பெறுகின்றேன்.

 

காலம் எல்லாத்தையும் ஆற்றும். மாற்றும்

நன்றி  தயா நேரத்திற்கும் கருத்துக்கும்.

இதுவரை தாயகம் சார்ந்து நான் ஆதரித்தவை 

தாயக மக்களின் விருப்புக்கு  மாறாக இருந்ததில்லை

 

அந்தவகையில் மகிந்தவின் இந்த முயற்சியை  ஏற்கமுடியவில்லை

இன்றையநிலையில் வாக்குகள் சிதறுவதை ஏற்கமுடியவழில்லை.

மற்றும்படி மீண்டும் சொல்கின்றேன் தமிழினி  பற்றி  இங்கு நான் பேசவில்லை.

அவர் தேர்தலில் நின்று தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் நிச்சயம் நான் அதை ஏற்றுக்கொள்வேன். மூ

 

ஒரு  விசயத்தை மட்டு தொளிவாக சொல்லி விடுகிறேன்...  நான் இலங்கை சிங்கள ஆட்சியாளர்களின் அரசியல் யாப்பை ஏற்க்கவில்லை...   (அந்த யாப்பு எழுதும் போது தமிழர்கள் பங்கேற்கவும் இல்லை...  )  அந்த யாப்பை ஏற்காத என்னால் அங்கு நடக்கும் தேர்தல்களை ஏற்க வேண்டும் எண்று இல்லை..   அதோடு நடக்கும் தேர்தல்கள் தமிழ் மக்களுக்கு எந்த பயனையும் கொடுக்கப்போவதும் இல்லை...   கடந்த நான்கு வருடங்களே அதற்கு சாட்ச்சி... 

 

இதை ஏற்றுக்கொண்டால் மேலும் படியுங்கள்...  

 

இதில் முன்னாள் போராளிகள் அரசியலுக்கு வருவதினால் ஏதும் கெட்டுவிட போவதில்லை... மாறாக தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் பலப்படும்...   அதற்கு மகிந்த உதவினால்  நல்லதுதான்...!!  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் மாபெரும் கட்டமைப்பு அதன் உறுப்பினர்களின் தேவைகளை முன்னிறுத்தி போராட்டத்தின் தேவையினை அன்று சமரசம் செய்ய முன்வன்திராதமல் அந்த கட்டமைப்பை தற்கொலை செய்தது! இன்று அந்த நியாயத்தை தலைகீழாக பிடிக்க முற்படுபவரின் நியாயத்தனத்தை புரிந்து கொள்ள முடியவில்லை!

 

ஒரு  விசயத்தை மட்டு தொளிவாக சொல்லி விடுகிறேன்...  நான் இலங்கை சிங்கள ஆட்சியாளர்களின் அரசியல் யாப்பை ஏற்க்கவில்லை...   (அந்த யாப்பு எழுதும் போது தமிழர்கள் பங்கேற்கவும் இல்லை...  )  அந்த யாப்பை ஏற்காத என்னால் அங்கு நடக்கும் தேர்தல்களை ஏற்க வேண்டும் எண்று இல்லை..   அதோடு நடக்கும் தேர்தல்கள் தமிழ் மக்களுக்கு எந்த பயனையும் கொடுக்கப்போவதும் இல்லை...   கடந்த நான்கு வருடங்களே அதற்கு சாட்ச்சி...

சிங்கள அரசியல் அமைப்பை ஏற்பதா, தேர்தலை ஏற்பதா என்பதெல்லாம் தத்துவ விசாரணை. சிங்கள மேலாதிகம் என்பதும் தமிழரை அடிமையாக்கல் என்பதும் இலங்கையில் நடை பெற்றுக்கொண்டிருக்கும் இன்றைய நடை முறை யாதார்தம்.  இலங்கையில் அதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது. இது தான் தமிழஈழ மண்ணில் இருக்கும் சிக்கல். போராட்டம் என்பது நின்றுவிடாமல் இருக்கும் மூலதனகளை வைத்து தொடர வேண்டியது புலம் பெயர் தமிழரின் கடமை.

 

இலங்கையில்  இருக்கும் சட்டங்களை வைத்து தான் ஜனநாயக போராட்டம் நடத்தாலாம். அங்கே இருந்துகொண்டு நான் அரசியல் அமைப்பை ஏற்கவில்லை என்று கூறினால் பயங்கராவதியாகத்தான் கொள்ளப்படுவார். எனவே தமிழர் இரண்டு முகம் காட்டுவதை தவிர்க்கவே முடியாது. நிச்சயமாக புலம் பெயர் மக்கள் போராட்டத்தை தொடரும் போது தமது மற்றைய முகம் கூட்டமைப்பு, அதாவது அரசியல் அமைப்பை ஏற்று அதன் கீழ் நடக்க இருக்கும் தேர்தலில் பங்கு பற்றும் கட்சி என்பதை விளங்க வேண்டும்.

 

இது எனது தனிப்பட்ட கருத்து. இதை நான் மேலே சொல்லியிருக்கிறேன். இலங்கை வானொலி தமிழினியை அரசியலில் இறக்குவது பற்றி பிரஸ்தாபிக்கமல் வெளியில் விட்டிருந்தால் அது வேறு விதமாக இருந்திருக்கும்.

 

தமிழினி விடுதலை பெற வழிகள் கண்டு பிடித்து விடுவிக்கப்பட வேண்டும். கனகரத்திணம் போன்றவர்கள் மீது அரசு காட்டிய பின வழத்து பிடியின் பின்னர்  அவர் வெளி நாடு ஒன்றில் இளைப்பாறுவதுதான் நல்லது. இன்றைய கால கட்டத்தில் அவர் அரசியலை தவிர்ப்பது நல்லது.  சிறீதரன், அசாத் சாலி, மனோ கனேசன் போன்றவர்கள்  சுதந்திரமாக அரசியல் பேசாத போது தமிழினி பேச முடியாது. ஆனால் அவர் அரசால் இறக்கப்பட்டால் அதில் நமதோ, தமிழினியின் தவறோ இல்லை.

சிங்கள அரசியல் அமைப்பை ஏற்பதா, தேர்தலை ஏற்பதா என்பதெல்லாம் தத்துவ விசாரணை. சிங்கள மேலாதிகம் என்பதும் தமிழரை அடிமையாக்கல் என்பதும் இலங்கையில் நடை பெற்றுக்கொண்டிருக்கும் இன்றைய நடை முறை யாதார்தம்.  இலங்கையில் அதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்க முடியாது. இது தான் தமிழஈழ மண்ணில் இருக்கும் சிக்கல். போராட்டம் என்பது நின்றுவிடாமல் இருக்கும் மூலதனகளை வைத்து தொடர வேண்டியது புலம் பெயர் தமிழரின் கடமை.

 

இலங்கையில்  இருக்கும் சட்டங்களை வைத்து தான் ஜனநாயக போராட்டம் நடத்தாலாம். அங்கே இருந்துகொண்டு நான் அரசியல் அமைப்பை ஏற்கவில்லை என்று கூறினால் பயங்கராவதியாகத்தான் கொள்ளப்படுவார். எனவே தமிழர் இரண்டு முகம் காட்டுவதை தவிர்க்கவே முடியாது. நிச்சயமாக புலம் பெயர் மக்கள் போராட்டத்தை தொடரும் போது தமது மற்றைய முகம் கூட்டமைப்பு, அதாவது அரசியல் அமைப்பை ஏற்று அதன் கீழ் நடக்க இருக்கும் தேர்தலில் பங்கு பற்றும் கட்சி என்பதை விளங்க வேண்டும்.

 

இது எனது தனிப்பட்ட கருத்து. இதை நான் மேலே சொல்லியிருக்கிறேன். இலங்கை வானொலி தமிழினியை அரசியலில் இறக்குவது பற்றி பிரஸ்தாபிக்கமல் வெளியில் விட்டிருந்தால் அது வேறு விதமாக இருந்திருக்கும்.

 

தமிழினி விடுதலை பெற வழிகள் கண்டு பிடித்து விடுவிக்கப்பட வேண்டும். கனகரத்திணம் போன்றவர்கள் மீது அரசு காட்டிய பின வழத்து பிடியின் பின்னர்  அவர் வெளி நாடு ஒன்றில் இளைப்பாறுவதுதான் நல்லது. இன்றைய கால கட்டத்தில் அவர் அரசியலை தவிர்ப்பது நல்லது.  சிறீதரன், அசாத் சாலி, மனோ கனேசன் போன்றவர்கள்  சுதந்திரமாக அரசியல் பேசாத போது தமிழினி பேச முடியாது. ஆனால் அவர் அரசால் இறக்கப்பட்டால் அதில் நமதோ, தமிழினியின் தவறோ இல்லை.

 

தமது சொந்த கட்சி பாராளுமண்ற உறுப்பினர்கள் பாதிக்கப்படும் போது பாதுக்காக்கவோ குரல் கொடுக்கவோ செய்யாதவர்கள் தமிழர்களின் வாக்குக்களை வாங்கி மட்டும் என்னத்தை செய்வினம் என்பதுதான் எனது கேள்வி...   

 

கூட்டமைப்பு மௌனமாக இருப்பதின் ஊடாக இலங்கை சிங்களத்தின் ஒடுக்குதலை அங்கீகரித்து கொண்டு இருக்கின்றது என்பதை விளங்காத வரைக்கும் ஏது சொன்னாலும் உங்களை மாதிரியானவர்களுக்கு விளங்கப்போவதில்லை... 

கூட்டமைப்பை பேச வைக்க முடியுமா என்பது வேறுஒரு கதை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை தமிழ் மக்களைக் கேட்பதை முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் செய்யவேண்டும்.  இந்தக் கையாலாக அரசியல்வாதிகளை கண்விழிக்கப் பண்ணவே அடிக்கடி தேர்தல் வரவேண்டும். இல்லாவிட்டால் கொழும்பிலும், இந்தியாவிலும் மேற்குநாடுகளிலும் சுற்றுலாக்களிலேயே காலத்தை ஓட்டிவிடுவார்கள்.

 

சி.கு: உண்மையில் வடமாகாணத் தேர்தல் நடக்கப் போகின்றதா! :unsure:

சி.கு: உண்மையில் வடமாகாணத் தேர்தல் நடக்கப் போகின்றதா! :unsure:

 

இப்போதைக்கு நடக்க சாத்தியம் இல்லை...  அப்படி நடந்தால் கூட்டமைபே எதிர்க்கும் அளவில் தான் நடக்கும்...  

தேர்தல் தமிழருக்கு அழிவையும், இக்கட்டையும் தான் கொண்டுவரும். அதிகாரம் கைக்கு வராது. கூட்டமைப்பு வென்றால் கூட்டமைப்பை உடைப்பது 1...2...3. தேர்தலில் பங்கு பற்றாவிட்டால் மேற்கு நாடுகள் இனி சம்பந்தருடனும் பேசமட்டா.

 

இதை சமாளிக்கத்தக்க ஆள் வீரவன்சா மட்டும்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

திறமையான மொட்டந்தலைக்கும் முழந்தாலுக்குமான முடிச்சு.

 

மல்லையூரான் மொட்டந்தலையாலை எப்பிடி முளங்காலுக்கு முடிச்சுப் போடலாம் என்றதை ஒருக்கா தெளிவுபடுத்துங்கோ உங்கள் கேள்விக்கு பதிலைத் தேடலாம்.

 

 

வெளிநாடுகளில் பணம் சேர்த்து தமிழ் அகதிகளுக்கு உதவினால் தமிழினிக்கு வலிகளுக்குள்ளால் போகமால் விடுதலை தரப்படும் என்று ஒரு நம்ப்பிக்கை இப்போது இல்லைதானே?

 

அந்த நம்பிக்கையால் நீங்கள் உங்கள் தொண்டுகளை செய்யவில்லை தானே.

 

 

வெளிநாட்டிலிருந்து இப்படி வீரம் பேசுவதைவிடவும் ஏதோவொரு ஒளிவருமென்ற நம்பிக்கையை வளர்த்து அதற்காக உழைத்தல் மேல்.

ஐயா இங்கே எங்கும் நான் தொண்டு செய்யவில்லை. தமிழன் என்று மார்தட்டினால் மட்டும் போதாது தமிழன் தனத கடமையைச் செய்தலே தனது இனத்துக்கு அவன்(ள்) செய்யும் நன்மையாகும்.

 

இதில் நான் கடைமையின் பக்கமே நிற்கிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன்.. கூட்டமைப்பை தமிழரசுக் கட்சிக்கு என்று ஆயுதம் தரிக்காதவர்களுக்கு என்று ஆக்கிக் கொண்டிருக்கும் இன்றைய தருணத்தில்.. மகிந்த இந்தப் போராளிகளை அச்சுறுத்தி தனக்கான அரசியல் இலாபங்களுக்காகப் பாவிக்க முற்படுகிறார். இந்த நிலைக்கு சம்பந்தனின் நிலைப்பாடுகளே முக்கிய காரணம்..!

 

இந்த நிலையைப் போக்கி.. தமிழ் மக்களுக்காக இதய சுத்தியோடு உழைக்க முன்வரும் எல்லோருக்கும்.. கூட்டமைப்பில் இடமளிக்க வேண்டும். அதனைப் பலப்படுத்த வேண்டும்.

 

சம்பந்தன் புலி ஆதரவாளர்கள் என்று கூட்டமைப்பில் இருந்து.. தூக்கி எறிந்தவர்கள் இன்று மகிந்த கூட இணைந்தால்.. நிச்சயம் அவர்களுக்கு அமைச்சர் பதவி வரை கிடைக்கும். அடிப்படையில்.. சம்பந்தனின்.. வலதுசாரி அமிர்தலிங்கம் காலத்து விடாக்கண்டன் நிலைப்பாடு.. தமிழ் மக்களுக்கு பேராபத்தான ஒரு நகர்வு.

 

பெரும்பான்மை சிங்களக் கட்சிகளே முன்னாள் புலிகளை மூத்த அரசியல்வாதிகளாக்கத் துணிகின்ற போது சம்பந்தனும் சுமந்திரனும்.. இன்னும் புலிகளையும் தமிழ் மக்களையும் காட்டிக்கொடுத்து சிங்களவர்களிடமும் அமெரிக்கா இந்தியா போன்ற  வல்லாதிக்க சக்திகளிடமும்.. அனுதாபம் பெறலாம் என்ற தோறணையில் நிற்கின்றனர்.

 

இதனை எல்லாம் கடக்க வேண்டின்.. முன்னாள் போராளிகள் தமக்கான வாய்ப்புக்களை தமக்குரிய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு மக்களுக்கு அநியாயம் துரோகம்.. செய்யாத வகையில்.. பாவித்துக் கொள்வதில் தப்பில்லை..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் கோபம் தமிழினி அரசியலை மோசமானதாக விமர்சிக்கும் பக்கத்தின் மீதா? இல்லை தமிழினியின் அரசியல் பிரவேசம் பொய் என்ற அடிப்படையின் பின்னாலும் வளர்ந்து கொண்டிருக்கும் இருவகையான விவாதங்களின் மேலாகவுமா?

இல்லை, தமிழினிக்கு அந்த உரிமை நியாயமாகவே இருக்கின்றது. என்ற அடிப்படையினாலா?

தேவன்,

கடந்தகாலங்களில் போர்க்கைதிகளாக சிறையில் இருக்கும் பலரது வழக்குகள் முடியும் தறுவாயில் இருந்த போதெல்லாம் இந்த ஊடகங்கள் கேள்விஞானம் மூலம் தங்கள் ஊடகங்களில் செய்திகைள வெளியிட்டும் குறித்த போராளிகளின் விடுதலையை பின்தள்ளிய சம்பவங்கள் பல நடந்துள்ளது. சில வழக்குகள் குறித்த குற்றம் சாட்டப்பட்ட போராளி தனது வாக்குமூலத்தில் பதிவு செய்யாத விடயங்களையெல்லாம் இந்த ஊடகவியாபாரிகள் எழுதி அவர்களது வழக்குகளில் சிக்கல்கலை ஏற்படுத்தியுள்ளார்கள். இந்த வகையான சிக்கல்களை எதிர்நோக்கிய கைதிகளின் பெயர்களை இங்கே சில காரணங்களுக்காக தவிர்க்கிறேன்.

 

இதில் தற்போது தனது வழக்கில் பெரும் சிக்கலை எதிர்நோக்கியுள்ள ஒரு கைதியின் அண்மைய நிலமையை இங்கே உதாரணமாக கூறலாம்.

சிலமாதங்கள் முன்னர் மகசீன் சிறையில் ஒருவர் உண்ணாவிரதமிருப்பதாக செய்தியொன்று வந்தது. அவர் எழுதியதாக ஒரு அறிக்கையும் வந்தது. அந்தக்கைதியின் வழக்கு இப்போது பின்தள்ளி வைக்கப்பட்டு மேலும் புதிதான சந்தேகங்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த கைதி ஊடகங்கள் வெளியிட்ட அறிக்கையை தான் எழுதவில்லையெனவும் அதனை சிறை நிலமைபற்றி தொலைபேசியில் கேட்டவர்களுக்கு 3ம் நபர் ஒருவர் குறித்த கடிதத்தை எழுதியனுப்பியுள்ளார் என அண்மையில் தொடர்பு கொண்டு சொல்கிறார்.

அடக்குறைக்குள் இருக்கிற ஒரு கைதியக்கு சுயவிருப்பத்தின் பேரிலான முடிவுகளை எடுக்கவோ இயங்கவோ அனுமதியில்லையென்பதை நீங்கள் புரிவீர்கள்.

 

தனது வழக்கில் பல சிக்கல்கள் தோன்றியுள்ளதாக உதவுமாறு கேட்கிறார். இந்த நிலமைக்கு எவ்வித உதவியையும் செய்ய முடியாதுள்ளது. சட்டத்தரணிகள் கூட பின்வாங்கம் நிலமை இந்தக் கைதிக்கு தோன்றியுள்ளது.

இப்படி எங்களது ஊடகங்கள் பரபரப்பாக்குகிற விடயங்களால் பலரது வழக்குகளும் , விடுதலையும் இழுத்தடிக்கப்படுகிறது. இதனை ஏன் தமிழ் ஊடகங்கள் புரிந்து கொள்ளாதிருக்கின்றனர் என்ற கோபம்தான். மற்றும்படி இவர்களில் எனக்கு எந்த கோபமும் இல்லை.

 

தமிழினியின் விடயம்கூட  இத்தகையதொரு இக்கட்டில் இருக்காதா என்பதனை புரிந்து கொள்ளாமல் தமிழினி ஏன் சேலைகட்டி தோழியாகப் போனாள் ? அவளது குடும்பத்தினர் ஏன் எதிர்பைக்காட்டவில்லையென்ற கேள்விகள் அந்தப் பெண்ணுக்காக எந்த வகையில் நன்மை செய்வதாக நினைக்கிறார்கள் ?

 

போர்க்கைதிகளாக இருக்கும் ஒவ்வொருவரும் நீதிமன்றம் போய் அவர்கள் சிறைக்கு திரும்ப முன்னரேயே அவர்கள் பற்றி எங்கள் ஊடகங்கள் பெரிய ஆய்வே நடத்தி முடித்துவிடுகின்றனர். சிங்கள அல்லது அரச ஊடகங்கள் ஒரு விடயத்தை எப்படி திட்டமிட்டு செய்தியாக்கி வெளியிடுகிறார்களோ அதனை எங்கள் ஊடகங்கள் கை, கால் ,மூக்கு ,முகம் வைத்து தங்கள் கற்பனையையும் கலந்து சோடித்து எழுதிவிடுகிறார்கள்.

இந்த எழுத்துக்களும் செய்திகளும் குறித்த போராளிகளை மனரீதியாகவும் அவர்களது விடுதலை ரீதியாகவும் மிகவும் பாதிப்பை உண்டு பண்ணுகிறது. இந்த உண்மையை புரிந்து கொண்டு இத்தகைய போராளிகள் மீது நாமும் நக்கீரர்களாகி சுட்டெரிப்பதை நிறுத்தினால் பல பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி ஒருமுறை தெளிவாகச் சொல்லிவிட்டாலும் கூட, நானும் அதை கூறுவதில் தவறில்லை என்று நினைக்கிறேன். இங்கே நாம் எதிர்ப்பது தமிழினி என்கிற முன்னால்ப் போராளியின் அரசியல் பிரவேசத்தையா அல்லது அவர் சிங்கள அரசு சார்பில் போட்டியிடுகிறார் என்பதையா??

 

ஏன் கேட்கிறேன் என்றால், அவருக்கு வேறு எந்தத் தீர்வையும் நாங்களோ அல்லது சிங்கள அரசோ விட்டுவைக்கவில்லை என்பதால்த்தான். 

 

தமிழினியால் அரசை விட்டு வெளியே வந்து சுயேட்சையாக தமிழ் மக்களின் பிரச்சினைகளைச் சொல்லி வாக்குக் கேட்க முடியுமா?? அல்லது அரசுதான் அதைச் செய்ய விடுமா?? சித்திரவதைக் கூடத்திலிருந்த தமிழினியை அனைத்து குற்றச் சாட்டுக்களிலும் இருந்து விடுவித்து விடுதலையாக்குவது தமிழர்களுக்கு சுதந்திரம் தேடிக் கொடுக்கவல்ல. மாறாக முன்னால்ப் புலிப் போராளி என்கிற பதத்தைப் பாவித்து தனக்கு ஆதரவான வாக்குகளை எடுப்பது அல்லது கூட்டமைப்பு வாக்குகளைச் சிதைப்பது.

 

ஆகவே அரசு சொல்லுவதைச் செய்வதைத்தவிர தமிழினியால் வேறு எதுவும் செய்ய முடியாது.

 

நாம் சரியாக இருந்திருந்தால் தமிழினிக்கும் இன்னும் பல்லாயிரக்கணக்கான போராளிகளுக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கும் இவை எதுவும் நடந்திருக்காது. ஆகவே தமிழினியின் இன்றைய நிலைக்கு நாமும் ஒரு காரணம்.

 

இங்கே சிலர் கூறியதுபோல தனது இளமைக்காலத்தின் 20 வருடங்களை தான் நேசித்த மக்களுக்காக தியாகம் செய்து இறுதியில் சிங்களப் பேரினவாதத்தின் சித்திரவதைகளுக்கு முகம் கொடுத்து இன்று சுதந்திரமாக அவருக்கு இருக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறதென்றால், அதை வரவேற்பதை விடுத்து குறை கூறுவது சரியா?

 

அவரை ஏன் அரசு நிறுத்துகிறதென்கிற தெளிவுகூட இல்லாமலா தமிழ் மக்கள் இருக்கிறார்கள்? 

 

அவரைத் தனிப்பட்ட ரீதியில் சாடுவதில் எந்தப்பயனும் இல்லை. ஏனென்றால் நடப்பவை எதுவுமே அவரின் விருப்பத்தினால் நடக்கவில்லை என்பதுதான் உண்மை.

 

கடைசியாக ஒரு கேள்வி, அவர் மீண்டும் ஆயுதம் ஏந்திப் போராடப் போகிறேன் என்று கூறினால் நாம் என்ன சொல்லுவோம் ???

கண்காணத கற்பனை ஊடகங்களை திட்டித் தீர்க்க முடிகிறது. எதற்கு யாழுக்கு இந்த திரி கொண்டுவரப்பட்டது? யாழை வளர்க்கவா?. இப்படி திரிகளை நிர்வாகம் உடனே நீக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதற்கு பச்சை புள்ளி குத்தி தாங்கள் விளங்கவைக்க முயல்வதை நிர்வாகத்திற்கு தெரிய வைப்பார்களா?.

 

இது தான், தமிழ் ஊடகங்களை தீவைப்பாலோ, கொலையாலொ  அடக்க முடியாத போது தமிழரே அடக்கட்டும் என்ற சதிக்குள் அரசால் தமிழரை இழுத்து விடும் அரசின் திறமையே.

 

ஊடக சுதந்திரம் போராட்டத்தின் பகுதி. ஊடகங்களை மடக்கும் அரசு மற்ற மொழிகளில் தான் விரும்பிய வற்றை மட்டும் தான் பிரசுரிக்கிறது. தமிழ் ஊடகங்களுக்கு அரச செய்திகள் மற்றைய ஊடகங்களிடமிருந்துதான் கிடைக்கின்றன. 

 

 

 

 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.