Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இாத்தம் எழுதிய கவிதை - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரத்தம் எழுதிய கவிதை

வ.ஐ.ச.ஜெயபாலன் 

 

 

(1985ல் குமுதினிப் படுகொலைச் சேதி கேட்டு எழுதிய கவிதை) 

 

 

மே பதினைந்தில்
இந்துட்துமா கடலில்
வானம் அதிர ஓலமிட்டது
புயல் தீண்டிய கருங்கடலல்ல.
என்னரும் தீவின் மக்கள் அறிவீர்!
அன்று என் கரைகளில் சிவப்பாய்ச் சுடர்ந்தது
மேதினத் தன்றென் தோழர்கள் கட்டிய
தோரணங்களும் கொடிகளுமல்ல.
உருண்ட நம் தலைகள் சிந்திய குருதி!

கண்கள் அகன்று பிதுங்கிய முகங்களில்
கடித்துக் கிடந்த நாவுகள் தோறும்
இரத்தம் எழுதிய கவிதையைச் சொல்வேன்.
போர்த்துக்கீசரை எதிர்த்து வீழ்ந்த என்
மூதாதையரின் கிராமியப் பாடலில்
முன்னரும் இதுபோற் கவிதைகள் கேட்டுளேன்.

கொதித்து எழுந்த நம் இளைஞரைப்போல
வெண்மணல் போர்த்த முருகைக் கற்களில்
தலைவிரித்தடின கறுத்த பனைகள்.
நெடுந்தீவின் பசும்புல் வெளியெலாம்
காட்டுக் குதிரைகள் கனைத்தன.
உப்புக் கழிகளில்
புலம் பெயர்ந்துறையும்
சர்வதேசப் பறவைகள் அரற்றின.

பருத்தித் தோட்ட வெளிகளை எரித்து
குதிரைகளுக்காய்ப் புல்வெளி விரித்த
டச்சுக் கொடுங்கோல் அஞ்ச எழுந்த என்
முன்னோர் இசைத்த போர்ப்பாடல்களை
அன்று மீண்டுமென் கரைகளிற் கேட்டேன்.

மௌனித்து நிற்பதேன் உலகம்?

முகமிழந்த என்னரும் மக்கள்
தம் மூதாதையரின் முகங்களைப் பெறுக!
பாண்டவர் தம்முள் பொருதிக் கிடக்கிறார்.
குருசேத்திரத்து மக்களே எழுக!
-- 1985

(நெடுந்தீவின் பயணிகள் படகினைத் தாக்கி இலங்கைக் கடற் படையினர் நாற்பதுக்கும் அதிகமானவரைக் கொன்றதால் எழுந்த கண்ணீர்க் கவிதை. நிகழ்ச்சி: மே 15, 1985)


 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

kumuthini.jpg

 

நினைவஞ்சலிகள். கவிதைக்கு நன்றி கவிஞர்.

 



குமுதினி ………
இந்தப் பெயரை,
உச்சரிக்கும் உதடுகள்- இன்றும் கூட
துக்கத்தால் ஒரு கணம்
ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்கின்றன!!

காகம் கத்தித் துயிலெழும் – என்
இனிய தீவினை ……..
பட்டணத்தோடு இணைத்த
பாலம் அவள்!

அவள் மடிமீது ஏறிய பின்புதான்,
எங்களின் பனாட்டும், பாயும்…….
ஓலையும், ஒடியலும் ………
பண நோட்டுக்களாக மாறின !!

பிரபஞ்ச உருண்டைக்குள் தான்,
எத்தனை பிரமிப்புகள் -அத்தனையும்
அந்தப் பாவைமீது காலை வைத்த – பின்புதான்
நாம் கண்டுணர முடிந்தது !!!

ஆயிரம் பேதம் சொல்லி,
பனம்கிழங்குக் கூறுகளாய்……..
கிழிபட்டுக் கிடந்த என் மக்களை
“மனிதமே, நேயமென்று”
தன் மடிமீது சுமந்து ……
பரஸ்பரம் புரிந்துண்ர்வுள்ளவர்களாக்கிய
புண்ணியவதி அவள் !

பலனை எதிர்பாராமல்,
கடமையை மட்டும் செய்த
கீதை படிக்காத கோதை !

என் கையில் சுமந்த புத்தகங்கள் …..
காலில் நசிபடும் செருப்பு ……..
தீபாவளிப் புத்தாடை …..
பொங்கலாய்ப் பொங்கும் புதுப்பானை …….
அப்புவையும்,ஆச்சியையும்,
கிடத்திவைத்த சவப்பெட்டிகள் …….
எல்லாமே …… எல்லாமே ……….
அவள் சுமந்தவை !

கட்டுமரங்களுக்கும் கைவலி-வள்ளங்களுக்கும்
கல்தாக் கொடுத்துவிட்டுக்
கடும் வேகக் கப்பலாய் – என்
துறைமுகத்தில் மிதந்த அழகுராணி !

புள்ளிமானாய் துள்ளிக் குதித்து – அவள்
ஏழாற்றுப் பிரிவைக் கடக்கிறபோது …….
மலைபோல் உயரும் அலைகளும் – அவளிடம்
கைகட்டிப் பணிந்து,
மௌன நுரையாய் சிதறுண்டு போகும் !!

அதிகாலையின் பனிச்சிதறலோடு ……
அன்றும் அவள் – தன் அரும்புத்திரர்களோடு
புறப்பட்டுப் போனாள் !!

பிரளயம் என்பதை அறியா – அவளையே
பிரளயமாக்கின ஆயுதக் கூலிகள் !!

வெடித்து வீசியெறிந்த பட்டாசுத்
துண்டுகளாய் ……….
காலறுபட்டு ……..கையறுபட்டு ……..
துடிக்கத் துடிக்க ………
அவ்ள் மடியில் உயிர் போன,
என்னுயிர்த் தங்கைகளின்
அழகான கனவுகள் பற்றி …….
இன்னமும் ……. அவர்கள் ……..
வாழ விரும்பிய வாழ்க்கையைப் பற்றி …….
பலமாதமாய், பவித்திரமாய், உருவாகி
கணப்பொழுதில் கருவுடனேயே ……..
சிதையில் எரிந்த என் நண்பனின்,
மனைவி பற்றி ……..

பதைக்கப்,பதைக்க
கொலையுண்டு கிடந்த
பச்சை மழலை பற்றி …..

மரணிக்கும் போதும்,
எதிரியிடம் மண்டியிடாது
உயிர் விட்ட என்னூர்- வீர
அன்னைகள் பற்றி ……
என்னினிய உணர்வில்
தமிழைக் கலந்து,
தன்னுயிரைக் கூலிப்படைக்கு
காவு கொடுத்திட்ட
தமிழாசிரியன் பற்றி …….
எவரைப்பற்றி …….
எவரைப்பற்றி ……..
நான் புலம்பி அழ ?????

வெல்லை, பெருந்துறை …….
குடவிலி, குவிந்தா …….
எத்திசை நோக்கினும்
எங்கும் அழுகுரல் !!

கீழ்த்திசையிருந்து ……..
பெருந்துறையீறாய்………
ஈக்களும் கூட இரையற்றிருந்த நாள்.

என்னூர்க் கொண்டைச் சேவலும்,
காக்கையும், கூட மார்பில்
அடித்த மரண நாளது !!

வீகாமனும்,வெடியரசனும்,
ஆண்ட திருத்தீவு
விம்மல்களால் நிறைந்த நாளது !

பூதத்தைக் கொண்டு பொழிந்த – கிணறுகளில்
நன்னமுத நன்னீர் குடித்த – மனிதர்களின்
கண்ணீர் பெருகிக் கரையுடைந்த நாளது .

இந்து மாக்கன்னியின்,
பொட்டெனப் போற்றிடும் …….
நெடுந்தீவகத்தின் உயிர்களின் பெறுமதி – கேவலம்
காட்டிலே வெட்டிய கால்நடை போன்றதா ??

ஈழதேசத்து மூளையாய்த் திகழும் – அழகிய
தமிழின் இலக்கணத்தீவு ……..
அந்நியன் கண்ணில், துச்சமாய் ஆனதோ ???

கூவியெழும் அலைகளின் கூக்குரல் – இக்
காற்றில் தவழ்ந்து காதில் உறைக்கிறது.
மரணத்தை வென்ற மாமறவர் நீங்கள் !!
மண்ணின் மடிவெடித்து மறுபடியும் பிற்ப்பீர்கள்.

ஆழ்கடலிருந்து …..
அலைகடலின் மடியிருந்து ……
வெட்டத் தளைக்கும் மரங்களாய் …..-நீங்கள்
விட்ட இடமிருந்து விழுதுகளை எறிவீர்கள் !!!

மா.சித்திவினாயகம்” – மாவிலி” மலரிலிருந்து 

kumuthini-4.jpg

  • கருத்துக்கள உறவுகள்

கவிதை, மனதை உருக்குகின்றது, கவிஞரே!

 

வலிந்து பறிக்கப்பட்ட உயிர்களில் பல எனது உறவுகள் என்பதில், வலி இன்னும் அதிகம்!

 

தங்கள் இரையைத் தேடுவதும், தமது இனத்தைப் பெருக்குவதுமே சர்வதேசப் பறவைகளின் நோக்கமேயன்றி, எமக்காக அழுவது அவர்களின் நோக்கமல்ல!

 

நன்றிகள் கவிஞரே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுணாவிலானுக்கும் புங்கைஊரானுக்கும் எனது நன்றிகள். இந்தக்கவிதையை சேதி கேட்ட அன்றே அண்ணாநகரில் என் மைத்துணன் அ.வேலாயுதம்பிள்ளை வீட்டில் வைத்து எழுதினேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Can any Yarl reders translate this Poem? 

நன்றி கவிஞரே...

 

உங்கள் இந்தக் கவிதையை பல தடவைகள் பல இடங்களில் வாசித்தும் கேட்டும் உள்ளேன். ஒரு முறை உங்கள் வீட்டில் வைத்தும் வாசித்துள்ளேன். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு உணர்வுகள்.

 

முன்பெல்லாம் இதனை வாசிக்கும் போது இத்துயர் தந்தவர்களின் பிடியில் இருந்து எம் தேசம் விடுதலை பெறும் என்ற நம்பிக்கை இருந்தது. எம் இரத்தம் சிந்தப்பட்ட கடலில் எம்மவர்களின் படகுகளும் சென்று கொண்டு இருந்தது. கணக்குகள் தீர்க்கப்பட்டு சாவுகளுக்கு பெறுமதி கிடைக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது. இன்றோ அவையனைத்தும் கனவாகி, கதைகளாகி எமைச் சிதைத்தவனே வென்ற விதியாகி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
காலத்தால் அழிந்துபோகாத, உங்கள் கவி வரிகளை மொழி பெயர்க்க வார்த்தைகள் என்னிடம் இல்லை!
 
ஆனாலும், முயற்சித்தேன் என்று இருக்கட்டும்!
 
Poem written with Spilled Blood
 
15th May, 1985
The sky roared,
Over the Indian Ocean,
Neither thunder nor storm!
White surfs bracing our shores,
turned into Deep Red!
Wondered whether the banners of,
The May Day!
Not to be!
Stained our shoreline,
With the blood poured from,
my slaughtered Brothers!
 
The poems were sung by,
Twinkle forgotten eyes and,
Twisted mouths of,
my bludgeoned brothers!
Warrior songs were heard,
when my ancestors,
defeated  the Portuguese!
 
Like my angered youngsters,
Palmyra trees on the corals,
covered with sea sand,
performed the warrior dance!
Wild horses ran freely,
on those Green Grasslands.
Painful Cries of the migrant Birds,
mellowed over our salty Lagoons!
 
The farmlands of my ancestors,
turned into grasslands!.
To feed the Portuguese horses!
I hear the warrior songs again,
sung louder by my ancestors.
On the shores of My Island.
 
Unable to comprehend,
the pretentious silence,
of the civilised world.
 
May the lost faces of my Brothers,
Wear the masks of my ancestors!
Arise the people of Kurukchetra,
as your Kings battles, themselves!


Can any Yarl reders translate this Poem? 

I have tried in vain, in the preceding post. :D

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.