Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா அரசுக்குள்ள பெருந்தன்மை இலங்கைக்கு இல்லை: குகவரதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Kugavarathan(1).jpg
கனடாவில் வீதியொன்றுக்கு 'வன்னிவீதி' எனப் பெயர் சூட்டப்பட்டு தமிழ் மக்கள் கௌரவப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால், இலங்கையில் தமிழர்கள் கணிசமாக வாழும் தேசிய தலைநகரில் வீதியொன்றுக்கு சட்டவிதிகளின்படிகூட 'தமிழ்ச் சங்க வீதி' எனப் பெயரிடப்படுவது தடுக்கப்பட்டுள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் உப பொதுச் செயலாளரும், கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான சண். குகவரதன் தெரிவித்துள்ளார். 
 
இவ்வாறானதோர் நிலையில் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைப்பதென்பது ஒருபோதும் நடக்காத காரியமென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இவர் தெரிவித்துள்ளார். 
 
இதுதொடர்பாக, ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினரும் திட்டமிடல் அபிவிருத்தி மற்றும் சட்டம் பொது விடயங்கள் தொடர்பான நிலையியற் குழுவின் தலைவருமான சண். குகவரதன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
  
வடக்கில் அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்துமா? என்பதும் சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது. யுத்தம் முடிந்து நான்கு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் கூட தமிழ் மக்களின் வாழ்வில் இன்னும் விடியல் ஏற்படவில்லை.  
 
நமது தலைநகர் கொழும்பில் வீதியொன்றுக்கு 'தமிழ்ச் சங்க வீதி' எனப் பெயரிடுவதற்கு நமது கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் வேலணை வேணியன் அவர்களின் முயற்சியால் கொழும்பு மாநகரசபையில் ஏகமனதான பிரேரணை நிறைவேற்றப்பட்டு பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்யவிருந்த தருணத்தில், இது பேரினவாத சக்திகளால் தடுத்து நிறுத்தப்பட்டது.
 
இன்று தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார இந்த விடயத்தை பொறுப்பேற்று இது தொடர்பாக நியாயம் பெற்று தருகின்றோம், பொறுமையாக இருங்கள் என நமது தலைவர் மனோ கணேசனிடம் வேண்டுகோள் விடுத்தும்கூட, கடந்த ஆறு மாதங்களாக இன்னமும் நியாயம் நிலைநாட்டப்படாத நிலைமை நிலவுகிறது.
 
நம் நாட்டில் சட்டப்படி மாநகரசபையில் நிறைவேற்றப்பட்ட ஒரு பிரேரணை மூலமாகக்கூட ஒரு வீதிக்கு பெயர் சூட்ட முடியாமல் உள்ளது. இதற்கும் மாகாண அரசும், மத்திய அரசும் தடை போடுகின்றன. 
 
ஆனால், அந்நிய நாடான கனடாவில் ஒரு வீதிக்கு 'வன்னிவீதி' எனப் பெயர் சூட்டி தமிழ் மக்கள் கௌரவப்படுத்தப்பட்டுள்ளார்கள். வெளிநாட்டவர்களுக்கு உள்ள இந்த மகிழ்ச்சிக்குரிய பரந்த மனப்பான்மை, தமிழர்களின் சொந்த நாடான இலங்கையில் ஆட்சி செய்கின்ற அரசுக்கும், இங்குள்ள பேரினவாத சக்திகளுக்கும் இல்லை.  
 
இந்தச் செயற்பாடு தமிழர்களுக்கு எதையும் வழங்கக்கூடாதென்ற, இலங்கை அரசின் இறுக்கமான இனவாதமான மனநிலையை வெளிப்படுத்தியுள்ளது. 
 
எனவே, வடக்கில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படப்போவதில்லை என்றும், அப்படியே நடத்தப்பட்டாலும் சட்டப்படி 13ஆம் திருத்தத்தில் உள்ள அதிகாரங்கள் தமிழ் மக்களுக்கு கிடைக்கப்போவதில்லை என்பதும் தெட்டத்தெளிவாகத் தெரிகின்றது.
 
தமிழ் மக்களும் எமது நாட்டு மக்கள். அவர்களும் உரிமைகளோடும், அதிகாரங்களோடும் வாழவேண்டும் என்ற மனப்பான்மை பேரினவாத சக்திகளுக்கு கிடையாது என சண். குகவரதன் அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.
 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/67180-2013-05-14-13-06-00.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர் சொல்லுவது சரியோ பிழையோ என்று தெரியவில்லை..நாலு இணைய வீரார்கள் வழிமொழிந்தால், நானும் ஒரு பின்னுட்டைத்தை போடுவம்.- உத்தியோக பூர்வ-

 

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இந்த ஒப்பீடே தப்பு

மனிதரையும்

மிருகத்தையும் ஒரே தராசில் வைத்து பார்ப்பதே தப்பு.....

  • கருத்துக்கள உறவுகள்

இதெல்லாம் சிங்களவன் காதில விழுந்து.. அது அவன்ர புத்திக்குப் புரிஞ்சு.. காரியம்.. ஆகிறது என்றால் இன்னும் பல பூமி ஆயுள் காலங்கள் அதற்குத் தேவை..! (பூமியின் வயது 4.5 பில்லியன் ஆண்டுகள்.. பூமி இன்னும் வாழுது. இப்படிப் பல ஆயுள் காலங்களை அது கண்டால்.. தான்.. முடியும்.) :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு அரசியலுக்காகப் பாவித்துள்ளார்.. ஆனால் அதில் தவறேதும் இல்லை.. :D கனடாவில் டமாஸ்கஸ் (சிரியாவின் தலைநகர்) வீதியும் உள்ளது.. :icon_idea:

 

http://www.canadiantire.ca/storelocator/store_profile.jsp?FOLDER%3C%3Efolder_id=2534374303521829&bmUID=1273503886221&store_num=224&from=sl

 

  • கருத்துக்கள உறவுகள்
 
கொழும்பில் உள்ள தமிழ் பெயர்களில் உள்ள வீதிகளின் பெயரை எழுத்து கூட்டி வாசித்தீர்கள் எனில் தலையை சுற்றும். அந்தளவுக்கு எழுத்து பிழை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.