Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எல்லாரும் பார்க்கவும் இதை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
யாழ்களத்திலையே பழங்கதை கதைச்சுத்தான் போராட்டம் நடக்குது.....ஒராள் ஓலையை பிரட்ட....இன்னொராள் உறுதியை வாசிக்க....மற்றவர் டையறியை  தேடியெடுத்து தூசிதட்ட......ஒற்றுமையெண்டது எள்ளளவுமில்லை.
 
இவ்வளவத்துக்கும் எங்கை படிச்சனீங்கள் எண்டு கேட்டுப்பாருங்கோ? கேம்பிரிஜ் லெவெலுக்கு கதை விடுவினம். :lol:
 
நன்றி பையன் :)

இந்த வீடியோ முடிவில்லாமல் முடிகிறது. எப்படி இருவர் சேரலாம் என்று சொல்லவில்லை. பிரிவதற்கு இருக்கும் நியாயங்களை மட்டும் எடுத்துக் காட்டுகிறது. எந்த கூட்டத்திற்கும் மக்கள் ஆதரவு இல்லை என்கிறது. மக்களின் ஆதரவை சேர்க்க தக்க வழிகளை ஆராயவில்லை.

 

 

பையனை எடுத்துக்கொண்டால் உண்மையாக, மனச்சாட்சியாக தமிழ் மக்களுக்கு உழைப்பவர். அவரின் பல முயற்சிகள் யாழ் நிறைய இருக்கு. இப்படியான தொடக்கம், முடிவு, இல்லாத பின்னால் உள்ளவர்களை புலம் பெயர் மக்கள் சந்திக்க தக்க வழியில் தயாரிக்கப்படாத வீடியோவை நம்புவதை செய்ய வேண்டாம் என்று அவருக்கு யாரும் போதிப்பது ஏற்றுகொள்ளத்தக்கதல்ல. ஆனால் என்னை தனிப்பட கேட்டால், இதை தயாரித்தவர்கள் யாழுக்கு வந்து அதை பற்றி சில கேள்விகளுக்கு பதில் அளிக்க விரும்பாமல் ஒருபக்க விளம்பரமாக அவற்றை வெளிவிடும் போது இவற்றை என்னால் சட்டை செய்ய முடியாது. 

 

அரசியல் வானில் சித்தார்த்தன் நான் ஏற்றுக்கொள்ளாத ஒரு மனிதர். அவரும் இன்னொருவரும் ஒரு தேர்தலில் நின்றால் அந்த பெயர் ஊர் தெரியாதவர் எனது வாக்கை வாங்கும் சந்தர்ப்பம் இருக்கு. ஆனால் என்னல் அறியப்பட்ட, கந்தரோடையில் மிக மதிப்புக்குரிய வாழ்க்கை வாழ்ந்த சித்தார்த்தன் இதுவரையிலான வற்றால் என்னிடம் அந்த வாக்கைப் பெற நம்பிக்கை பெறவில்லை..

 

ஆனால் இன்று பதியப்பட்டிருக்கும் அவரின் பேட்டியை படிப்பவர்களுக்கு தெரியும், தலைவர்களுக்கிடையில் இருக்கும் வேற்றுமையை தொண்டர்கள் ஊதிப்பெருப்பிக்கிறார்களே அல்லாமல் அவர்களுக்கிடையில் நிறைய ஒற்றுமை இருக்கிறது என்பது.  அவர்கள் செல்ல வேண்டிய பாதையை சேர்ந்து முடிவெடுக்கத் தயாராக இருக்கிறார்கள். நான் தமிழரசுக்கட்சி என்பதால் நான் சித்தார்த்தனையும், புலொட்டை ஆதரிப்பவர்கள்  சம்பந்தரையும் தொடர்ந்து நீங்கள் பிரிந்திருக்கிறீர்கள் என்று பறை சாற்றுவதால் அவர்களுக்கு செய்யத்தக்கது பிரிவதுதான்.  நான் யாழுக்கு வந்த ஆரம்பதில் எழுதியிருந்த கருத்துக்களை படித்தீர்களானால் சம்பந்தர் ஆனந்த சங்கரியையும் சித்தார்தனையும் தேர்தல் நேரம் கூட்டமைப்பில் சேர்க்க வேண்டும் என்றுதான் எழுதியிருக்கிறேன். தேர்தலின் பின்னாலான கருத்துக்களை படித்தீர்களானால் அவர்களை இருவரையும் பலவற்றில் பிழை கூறித்தான் எழுதியிருக்கிறேன். இதில் என்னால் சிலரை நம்ப முடியாவிட்டாலும், இணையவது தமிழ் மக்களுக்கு தேவை என்பதை வைத்து அவர்களின் இணைவை ஆதரித்து எழுதியிருக்கிறேன். 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=122776#entry898348

 

 

இந்த வீடியோவில் இருப்பது போல ஒருவருக்கும் ஒரு ஆதரவும் இல்லை, ஒருவரையும் நம்பாதே என்பது ஒரு பிரச்சரமில்லை. இதன் நோக்கத்தை எனக்கு விளங்க நேரம் எடுக்கவில்லை என்றுதான் நான் எடுத்துக்கொள்கிறேன்.  நாடுகடந்த அரசின் கூட்டங்களுக்கு போயிருக்கிறேன் என்பதால் அவர்களுடன் அமெரிக்காவில் இருக்கும் எல்லா அமைப்புக்களும் இணைந்து செயல்ப்படுகின்றன என்பது எனக்குத் தெரியும். இதில் யாரும் எதுவும் சொல்ல இல்லை.

 

ஆனால் அவர்களை உடைக்க வேண்டுமாயின் அவர்களுக்குள் ஒருவராக சேர்ந்து நின்று தலைவர்களின் முடிவுகளை தொடர்ந்து எதிர்ப்பதின் மூலம் அவர்களை வலு இழக்கச் செய்யலாம். இதனால் அவர்கள் பிரிவினை வாதிகள் ஆக மட்டார்கள். அவர்களுக்குள் ஆப்பிறுக்கத்த முயற்சிகள் நடை பெறுகிறது என்பதுதான் உண்மை. 

 

எனவே இப்படியான வீடியோக்களுக்கு 100 பச்சைகள் விழுந்தாலும் அவற்றை சட்டை செய்யப் போவதில்லை. வீடியோவின் கீழ் எழுதப்படும் கருத்துக்களில்த்தான் ஆராய இருக்கிறது. நான் நேராக சித்தார்தனின் வாயாலும், சம்பந்தரின் வாயாலும் வருவதைதான் கணக்கில் எடுப்பது. இப்படிப்பட்டவற்றை தள்ளியே வைத்துவிடுவேன். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  தம்பி  இணைப்புக்கு......

 

இதில  நடித்திருப்பவர்கள் இங்கு தான் இருக்கிறார்கள்.

இந்த அம்மாதான் இந்த முறை  புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தால் நடாத்தப்பட்ட குறும்படப்போட்டியில் சிறந்த நடிகையாக தெரிவு செய்யப்பட்டவர்.

நடிப்பு பிரமாதம்.

கருவும் வரவேற்கத்தக்கது

 

இதில்

நன்மை தீமை என்று எவற்றை  நான் எடுத்துக்கொண்டேன் என்றால்

போராளிகளை  ஏற்றுக்கொள்ளல்

மாவீரர்களை மதித்தல்

தலைவரை நினைத்தல்

எமது இலட்சியத்தை தொடர வழி தேடல்

இவை நன்மைகள்

 

 

 

இந்த அம்மாவின் குரல்

அவர்களைத்திருத்துவதற்கு போடுவதாக தெரியவில்லை

அதட்டுவது போலுள்ளது

சமாதான வழிகளை  நாடியதாகவும்  தெரியவில்லை.

 

 

அத்துடன் ஏதோ ஒருவகையில் ஒருத்தர் நாட்டுக்காக  பிரச்சாரம் செய்கின்றார்

அவரை அதைச்செய்யாதே என்று சொல்லும் உரிமை எவருக்கும் இல்லை

 

அடுத்து

இது போன்ற  கலைஞர்களது  தாயகம் சம்பந்தமாக பங்களிப்பு என்பது  நானறிந்தவரையில் மேடையிலும் திரையிலும் மட்டுமே.

அவற்றைத்தாண்டி ஒரு அடியேனும் நகராது.

 

எனவே இது ஒரு முயற்ச்சி.

தேவையானவற்றை  எடுத்துக்கொள்வோம்.

 

இன்னொன்னு

ஒரே கூரையின் கீழ்.

 

சரி  வராது

அப்படி இருக்கவும் வேண்டாம்

நாலாக நின்றாலும் இலட்சியத்தில் ஒன்றாக இருந்தால் போதும்.

 

 

நியானி: நீக்கப்பட்ட கருத்துக்கான பதில் தணிக்கை செய்யப்பட்டுள்ளது. 

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி பையன் !

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி சகோ !

 

 

இந்த அம்மாவின் குரல்

அவர்களைத்திருத்துவதற்கு போடுவதாக தெரியவில்லை

அதட்டுவது போலுள்ளது

சமாதான வழிகளை  நாடியதாகவும்  தெரியவில்லை.

அது தற்செயலாக நடந்திட்டதோ அல்லது திட்டமிடல் பிழையோ போல் தெரியவில்லை. தேவை இல்லாத ஒரு வசனம் வெளியே வந்திடாதபடி, போராட்டங்களை சிறுமைப் படுத்தி, கேவலப்படுத்த தயாரிக்கப்பட்டது போலவே படுகிறது. அந்த பெண் மட்டும் தான் புலம் பெயர் பொது மகனாக காட்டப்படிருக்கு.

 

போராட்டங்களின் மீதான காழ்ப்புணர்வை கக்கி, போராட்டங்களை இல்லாமல் போக செய்யத்தக்தான நிலைவரத்த மாதிரியே குரல் வைக்கப்பட்டிருகிறது.  முகம் வெறுப்பை பிரதி பலிக்கிறது. நடிப்பு திட்டமிட்ட படியே நேர்த்தியாக இருக்கிறது. முடிவில் போராடத்திற்க்கு எதிரான குரலுக்கு வெற்றியாகவேதான் இளைஞன் இனி இந்த போராட்டங்கள் வேண்டாம் என்று துண்டுப்பிரசுரங்களை ஏறிந்துவிட்டு தன் பாடாக போகிறான். முடிவு பிரிந்திருப்போர் சந்திப்பத்தாக காட்டவில்லை.

 

"படம் எடுக்க  அனுமதி பெற்றிருக்க வேண்டும்" என்பது  அந்த மேடையில் உள்ளவர்களின் நடிப்பாகவே காட்டப்பட்டிருக்கு. அதாவது ஒருவரும் இல்லாத சபையில் படம் எடுப்பது குற்றமா? என்பது மாதிரியே காட்சி அமைக்கப்பட்டிருக்கு, அது அங்கே ஒருவரும் இல்லை என்பதை முடி மறைக்க தவிப்பது போலவே காட்டப்படுகிறது.

 

போரட்ட பிரச்சாரங்கள் தோல்வியாகவும் போராடத்திற்கு எதிரான பிரச்சாரங்கள்தான் இன்று வெற்றி அளித்துள்ளதாகவும்தான் காட்டப்படுகிறது.

 

"நாலு இயக்கம் இருந்தாலும் கொள்கை ஒன்றாக இருந்தால்" சரி என்ற கருத்துக்கு எதிராகத்தான் படம் தாரிக்கப்பட்டிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி பையன் :)

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.