Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லயன் எயார் விமான பாகங்களோடு மீட்கப்பட்ட அடையாள அட்டைக்குரிய பெண் யாழில் உயிரோடு இருப்பது தெரியவந்துள்ளது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
lionair-id-seithy-20130515-150.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அரசாங்கத்தினால் குற்றஞ்சாட்டப்படும் லயன் எயார் விமான பாகங்களோடு மீட்கப்பட்ட அடையாள அட்டைக்குரிய பெண்ணொருவர் உயிரோடு இருப்பது தெரியவந்துள்ளது. விமானம் வெடித்து சிதறியபோது இந்த பெண் உயிரிழந்திருக்கலாம் என்று முன்னர் கருதப்பட்டது. ஆனால் இவர் சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலிப் பகுதியில் தற்போதும் உயிரோடு வாழ்ந்து வருகின்றார். இவரது பெயர் குணமணி கோவிந்தசாமி (59 வயது) (547642317V)என்பதாகும். 1998 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் 29 ஆம் திகதி பலாலியிலிருந்து இரத்மலானை நோக்கி 42 பயணிகளுடனும் 8 விமானப்படைச் சிப்பாய்களுடனும் லயன் எயார் அன்ரனோவ் 24 ரக இந்த விமானம் பயணித்த போது இரணை தீவுக்கடலில் வீழ்ந்தது. இவ் விமானத்தின் பாகங்களை மீட்கும் நடவடிக்கைகள் கடந்த 03ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட போதே இந்த அடையாள அட்டையும் மீட்கப்பட்டுள்ளது. ஆனால் கறுப்பு பெட்டி இன்னமும் மீட்கப்படவில்லை.

  

1995 ஆம் ஆண்டு நீர்வேலி சிறுப்பிட்டியில் வசித்து வந்த இப்பெண் திருமணம் ஆனதையடுத்து, தனது பெயருடன் கணவரது பெயரை பதிவு செய்யும் நோக்குடன் குணமணி பாலசுப்பிரமணியம் என்று பெயருக்கு மாற்றம் செய்ய கிராம சேகவர் ஊடாக ஆட்பதிவு திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். இதன் பின்னர் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த அவர் வன்னி மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளார். இதனை அயல் வீட்டுக்காரர்கள் அவருக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அடையாள அட்டையை யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிக்கு வரும் உறவினர் ஒருவரிடம் கொடுத்து விடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவர் விமானத்தில் அடையாள அட்டையோடு செல்லும் போது விமானம் கடலில் வீழ்ந்துள்ளது. இதனால் அடையாள அட்டை அவரது கையில் கிடைக்காமலே போய் விட்டது. இதனைத் தொடர்ந்து வெளிநாடு செல்வதற்காக அடையாள அட்டை ஒன்றை பெற்றுக்கொண்டுள்ளார்.

 

ஆனால் அதுவும் சிறிது காலத்தில் மீண்டும் தொலைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இறுதியாக 2012ஆம் ஆண்டு 4ஆம் மாதம் 05ஆம் திகதி இறுதியாக அவர் அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவரது வீட்டிற்கு சென்ற பயங்கரவாதத் தடுப்பு பொலிஸார் விபரத்தை தெரிவித்த போது அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனார்.

 

lionair-id-seithy-20130515-348.jpg

 

http://www.seithy.com/breifNews.php?newsID=82763&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் 8 விமானப்படை சிப்பாய்களை சாகடிப்பதற்காக 42 தமிழ் மக்களை கவனத்தில் எடுக்காது விமானத்தினை சுட்டு வீழ்த்தியிருக்கின்றனர்.............  :(  :(

புலிகள் 8 விமானப்படை சிப்பாய்களை சாகடிப்பதற்காக 42 தமிழ் மக்களை கவனத்தில் எடுக்காது விமானத்தினை சுட்டு வீழ்த்தியிருக்கின்றனர்.............  :(  :(

 

லயன் எயார் விமானம்  Antonov An-124  வகையை சார்த்த கதையை நீங்கள் கேள்விப்பட்டது உண்டா...?? 

 

அன்ரனோவ் விமானங்கள் ரஸ்யாவால் போர் தளவாட துருப்புக்கள் நகர்வுக்காக தயாரிக்கப்பட்ட இராணுவ விமானம்...   அந்த விமானத்தை பயணிகள் விமானமாக இராணுவத்தோடு பணயக்கைதிகளாக மக்களும் ஏற்றப்பட்டதை ஏன் சொல்வதில்லை...?? 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் அந்த நேரத்திற்கு அடிக்க எதிர் பார்த்து காத்திருந்தது ஆமியின்ட விமானத்திற்கு தான்.ஆனால் அன்று ஏதோ ஒரு காரணத்திற்காக அவர்களது விமானம் பறக்காமல் அந்த நேரத்திற்கு பொது மக்கள் பயணம் செய்த விமானம் பறந்தது.இது ஒரு விபத்து

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் 8 விமானப்படை சிப்பாய்களை சாகடிப்பதற்காக 42 தமிழ் மக்களை கவனத்தில் எடுக்காது விமானத்தினை சுட்டு வீழ்த்தியிருக்கின்றனர்.............  :(  :(

பொதுமக்கள் பயணம் செய்த விமானத்தில் சிறிலங்கா இராணுவம் ஏன் பயணம் செய்தது ? ஏனெனில் அவர்களின் பாதுகாப்புக்காக சிறிலங்கா இராணுவம் பொதுமக்களை பணயக் கைதிகளாக பாவித்ததை நன்கு அறிந்தும் கண்டு கொள்ளாது பொதுமக்களின் இழப்புக்கு புலிகள் மேல் பழியை போடுகின்றீர்கள் இது ஒருபக்க சார்பான கருத்தாகும்.   

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொதுமக்கள் பயணம் செய்த விமானத்தில் சிறிலங்கா இராணுவம் ஏன் பயணம் செய்தது ? ஏனெனில் அவர்களின் பாதுகாப்புக்காக சிறிலங்கா இராணுவம் பொதுமக்களை பணயக் கைதிகளாக பாவித்ததை நன்கு அறிந்தும் கண்டு கொள்ளாது பொதுமக்களின் இழப்புக்கு புலிகள் மேல் பழியை போடுகின்றீர்கள் இது ஒருபக்க சார்பான கருத்தாகும்.   

 

Repeat it for முள்ளிவாய்க்கால்

Volcano: இது என்ன விளையாட்டு...இப்படியா மூஞ்சியிலே அடிச்சா மாதிரி சொல்லுறது

 



இந்த news ஒரு தேவையில்லாத ஒரு பதிவு..துலைந்த தபாலுகெல்லாம் ஒரு பதிவா?

 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் 8 விமானப்படை சிப்பாய்களை சாகடிப்பதற்காக 42 தமிழ் மக்களை கவனத்தில் எடுக்காது விமானத்தினை சுட்டு வீழ்த்தியிருக்கின்றனர்.............  :(  :(

77ஆயிரம் வரையிலான சிங்கள இராணுவத்தை கொல்வதற்காக............

 
3 லட்சம் வரையிலான தமிழ் மக்களை காவு கொடுத்தவர்கள்தான் புலிகள்.
 
இது ஒரு சிறிய சம்பவம் இதையே பலர் ஏற்கவில்லை என்பது ஏமாற்றமாக இருக்கிறது ஜெனனாயகத்திட்கு.

 

 

Edited by யாழ்அன்பு

தமிழனின் வீரம் பாரீர் துரோகிகளின் கதைய கேளீர் 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.