Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிள்ளையாரடியில் புத்தர் சிலையை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு நகரின் வடக்கு நுழைவாயிலில் புத்தர் சிலை நிர்மாணிப்பதற்கு ஆட்சேபனை தெரிவித்தும் இதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்துச் செய்யக் கோரியும் புதன்கிழமை அந்தப் பகுதியில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதியின் வேண்டுகோளின் பேரில் மட்டக்களப்பு நகர் வடக்கு நுழைவாயிலில், பிள்ளையாரடிச் சந்தியில் புத்தர் சிலை வைப்பதற்கு நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளரினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் உள்ளுர் மக்களும் இணைந்து, ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்திலும் பேரணியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராசா, பா. அரியநேத்திரன் மற்றும் சீ. யோகேஸ்வரன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

பிள்ளையாரடி ஸ்ரீபுலவி பிள்ளையார் ஆலயம் முன்பாக இன்று காலை ஒன்று கூடிய பெண்கள் மற்றும் மதகுருமார் உட்பட உள்ளுர் மக்கள் புத்தர் சிலை வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் இதற்கான நடவடிக்கைகளை நிறுத்தக் கோரியும் வாசக அட்டைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பியவாறு பிள்ளையாரடிச் சந்தி வரை ஆர்ப்பாட்ட பேரணியொன்றையும் நடத்தினார்கள்.

பௌத்த மக்கள் வசிக்காத இடமொன்றில் புத்தர் சிலை வைக்க முற்படுவது இனங்களுக்கிடையிலும் மதங்களுக்கிடையிலும் முறுகலை ஏற்படுத்தும் செயல் என்பதை பிரதிபலிக்கும் வகையில் அங்கு காணப்பட்ட வாசக அட்டைகளில் புத்தர் சிலை வைப்பதற்கான நடவடிக்கைகள் கைவிடப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி கூறப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்ட முடிவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் அரசாங்க அதிபர் பி. எம். எஸ் சார்ள்ஸை நேரில் சந்தித்து இதனை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுக்களையும் கையளித்தனர்.

பின்னர் இராணுவ கட்டளை அதிகாரி பிரிகேடியர் சுதத் திலகரட்ணவையும் சந்தித்து இந்த விடயம் தொடர்பாக உரையாடினார்கள்.

ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரிகேடியர், குறித்த இடத்தில் புத்தர் சிலை வைக்கப்படமாட்டாது என்று உறுதி மொழி வழங்கியதாகவும் இதனையடுத்து ஆர்பாட்ட பேரணி அமைதியாக கலைந்து சென்றதாகவும் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன. செல்வராசா தெரிவித்தார்.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/05/130529_battibhdhaprotest.shtml

 

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரை தமிழ்மக்களுக்கு அறிமுகம் செய்யவேண்டுமெனில் சிங்களவர்கள் செய்ய வேண்டியது .......புத்தருக்கு பாலபிசேகம்,கும்பாபிசேகம் மற்றும் தேர்,தீர்த்த திருவிழா போன்றவற்றை பிராமணர்கள் மூலம் செய்ய வேண்டும் ...தமிழர்கள் புத்தரை தலையில் வைத்து கும்பிடுவார்கள்...புத்தருக்கு அரோகரா போடச் சொன்னால் எல்லாம் சரியாகிவிடும்.....

  • கருத்துக்கள உறவுகள்

புத்தரை தமிழ்மக்களுக்கு அறிமுகம் செய்யவேண்டுமெனில் சிங்களவர்கள் செய்ய வேண்டியது .......புத்தருக்கு பாலபிசேகம்,கும்பாபிசேகம் மற்றும் தேர்,தீர்த்த திருவிழா போன்றவற்றை பிராமணர்கள் மூலம் செய்ய வேண்டும் ...தமிழர்கள் புத்தரை தலையில் வைத்து கும்பிடுவார்கள்...புத்தருக்கு அரோகரா போடச் சொன்னால் எல்லாம் சரியாகிவிடும்.....

விகாரைக்கும் ஒரு 'சின்ன' கும்பாபிசேகம் ஒன்றைச் செய்து விட்டாப் போச்சு! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஏனைய மதங்களை  தாக்கவில்லை என்ற சனாதிபதியின் கூற்று பொய்யானது.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.