Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியின் காலில் விழுந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அப்பாத்துரை விநாயகமூர்த்தி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் நடந்த திருமண வைபவம் ஒன்றில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்ட ஜனாதிபதி மஹிந்தவின் காலில் விழுந்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான அப்பாத்துரை விநாயகமூர்த்தி.

 
கடந்தவார இறுதியில் கொழும்பு பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இந்த சுவாரசியமான சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது:
 
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதியசரர் ஸ்ரீஸ்கந்தராஜாவின் மூத்த புதல்வரின் திருமணம் கடந்தவார இறுதியில் பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. 
 
அதில் முக்கிய விருந்தினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்டார். அத்துடன் அங்கு நீதிபதிகள், சட்டத்தரணிகள் என பெருமளவானோர் திருமணத்தில் கலந்துகொண்டனர். 
 
மணமக்கள் ஜனாதிபதியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். ஆசியை வழங்கிய பின்னர் ஜனாதிபதி திரும்பிய போது கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதியின் காலடியில் விழுந்தார். 
 
உடனே எல்லோரும் விநாயமூர்த்தியும் ஜனாதிபதியின் காலில் விழுந்து ஆசிபெறுகிறார் என்று எண்ணினர். ஆயினும் நடந்தது அது வல்ல. மணமக்களை வாழ்த்துவதற்குச் சென்ற விநாயகமூர்த்தி தட்டுத்தடுமாறி ஜனாதிபதியின் காலடியில் விழுந்துவிட்டார். 
 
உடனே அங்கிருந்த ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினர் அவரை தூக்கிவிட உதவினர். ஜனாதிபதியும் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தியை தூக்குவதற்காக கையை நீட்டினார். அதற்குள் விநாயகமூர்த்தி சமாளித்துக்கொண்டு தானே எழும்பி நின்றார்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=485702070829527310

 

அடிமைகளுக்கு வேறு என்ன தெரியும்?

என்றாலும் மேர்வின் சில்வாவிற்கு அடி வருட போட்டி வந்துவிட்டது.

 

அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் அவ்வளவு மோசமானவர் இல்லை!

கொலைகாரர்களையும் கல்யாண வீட்டுக்கு கூப்பிடும் புதிய கலாச்சாரம் கொழும்புத் தமிழரிடம் பெருகுகிறதோ?

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் அவ்வளவு மோசமானவர் இல்லை!

கொலைகாரர்களையும் கல்யாண வீட்டுக்கு கூப்பிடும் புதிய கலாச்சாரம் கொழும்புத் தமிழரிடம் பெருகுகிறதோ?

 

நீதிபதி யாழ்ப்பாணத்தமிழர்......

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

இதில்

அவர் காலில் விழவேண்டும் என்ற எதிர்பார்ப்புத்தான் அதிகம் தெரிகிறது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில்

அவர் காலில் விழவேண்டும் என்ற எதிர்பார்ப்புத்தான் அதிகம் தெரிகிறது

 

என்னதான் பகிடி விட்டாலும் விசுவிர்க்கும் சில விடயங்கள் விளங்க தொடங்கிவிட்டது சந்தோசம்தான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.