Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையில் சீதைக்கு கோவில் கட்டும் இந்தியா!

Featured Replies

இலங்கையில், சீதா தேவி தீயில் இறங்கிய இடத்தில், ஒருகோடி இந்திய ரூபாய் செலவில், கோவில் கட்டப்படும் என, மத்திய பிரதேசமாநில முதல்வர், சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். 

இதற்கான அனுமதியை இலங்கை அரசுவழங்கியுள்ளது. பன்னா மாவட்டத்தில் உள்ள குன்ஹார் என்ற இடத்தில் நடந்த விழாவில், முதல்வர் சிவராஜ் இத்தகவலை கூறினார். 

கோவில் கட்டுவதற்கு, மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன், இதற்கான பணி துவக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

 

http://www.adaderana.lk/tamil/news.php?nid=39686

 

இந்தியாவில் ராவணன் வந்து இறங்கிய இடத்தில் ராவணனுக்கு கோவில் கட்ட இடம் கிடைக்குமா?

இந்திய ஆக்கிரமிப்பு படைக்கு இலங்கையில் தூபி இப்ப சீதாவிட்கு கோவில் நல்லாய் இருக்கு 

 

  • கருத்துக்கள உறவுகள்

கற்பிற்கிலக்கணமாகக் கற்பிதம் செய்யபட்டவளுக்குக் கோவில் கட்ட கற்புடைக் கன்னியரைத் துகிலுரிவதில் உலகில் முன்னிலைவகிக்கும் இவர்களுக்குத் தகுதி உண்டா?

  • கருத்துக்கள உறவுகள்

கற்பிற்கிலக்கணமாகக் கற்பிதம் செய்யபட்டவளுக்குக் கோவில் கட்ட கற்புடைக் கன்னியரைத் துகிலுரிவதில் உலகில் முன்னிலைவகிக்கும் இவர்களுக்குத் தகுதி உண்டா?

கோயிலைக் கட்டிப்போட்டு, இருபத்திநாலு மணி நேரமும், பொம்பிளை ஆமி காவலிருக்குமாக்கும்! :D

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சோனியா க்கு கட்ட மாட்டாங்களா?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சோனியா க்கு கட்ட மாட்டாங்களா?

 

அதன் முதற்கட்டம்தான் இது

இலங்கை 

இந்தியாவின் ஒரு பகுதி  என்ற நினைப்புத்தான் ......

ஆனால் தொடர் தோல்விகள் இலங்கையிடம்.......

  • தொடங்கியவர்

சிவராஜ் சிங் தனது மாநிலத்தில் புத்தரின் ஆய்வு கூடம் கட்ட மகிந்தாவுக்கு காணித்துண்டு கொடுத்து விட்டு இங்கே வந்து தாங்கள் வணங்கும் தேவிக்கு கோவில் கட்ட இடம் வாங்கிக் கொள்கிறார். இது மூட நம்பிக்கையா.

 

தெருவில் போன மராடிய பெண் குஸ்புக்கு கோவில் கட்டிய கூட்டத்தை பொன்சேக்கா கோமாளிகள் என்று அழைத்தார். ஜெயலலிதாவின் அரசாங்கத்தை, கோத்தா மானிநில அரசுடன் நாங்ககள் தொடர்பு வைப்பத்தில்லை என்று அவர்கள் நிறைவேற்றிய பிரேரணையை தூக்கி எறிந்த்தார். 

 

கருணாநிதி குடும்பத்துக்கு உழைப்பு தேடிக்கொடுக்கும் சினிமாவை பார்க்க தமிழ்நாட்டார் இலவச TV க்கு வாக்குப்போட்டுவிட்டு குஸ்புவுக்கு கோவில் கட்டி கும்பிடுகிறார்கள். செம்மொழி மகாநாடு என்று ஏம்மாற்றபட்டார்கள். சரித்திரம் இல்லாதவர்கள், தீராவிட போதனைகளையும், திராவிட அரசகுமாரியையும் தமதாக்கி, தமக்கென சரித்திரமும், தெய்வங்களும் தேடிக்கொள்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு புராணக்கதையைக்கூட எப்படி அரசியல் ஆக்குகிறார்கள் என்கிறதுக்கு ஒரு நல்ல உதாரணம்.. இப்ப மத்தியப் பிரதேச்த்தில் ஆரிய மகிந்தர் கதைதான் அடிபடும்.. :rolleyes:

  • தொடங்கியவர்

"ஒரு புராணக்கதையைக்கூட எப்படி அரசியல் ஆக்குகிறார்கள்"  :o 

 

நிறையத்தான் தெரிந்து கொள்ள இருக்கிறது. :( 

 

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

"ஒரு புராணக்கதையைக்கூட எப்படி அரசியல் ஆக்குகிறார்கள்"  :o 

 

நிறையத்தான் தெரிந்து கொள்ள இருக்கிறது. :( 

 

ஏன் மல்லை.. அது புராணக்கதை இல்லை என நம்புகிறீர்களா? :blink:

  • தொடங்கியவர்

ஏன் மல்லை.. அது புராணக்கதை இல்லை என நம்புகிறீர்களா? :blink:

 

 

அரசியல் கதையை புரணாமாக்குகிறார்களோ அல்லது புராணக்கதையை அரசியல் ஆக்குகிறார்களோ, அது எப்படி நமக்கு தெரியவரப்போகிறது. 5000 வருடம் கடந்துவிட்டது.

 

இன்றைய நமது வாழ்வு RSSம் மகிந்தாவும் திருப்பதியில், அல்லது சீத்தா எலியாவில்  வைத்து தீர்மானித்துக்கொள்வதை நாம் ஏற்கவேண்டியதுதானே.

 

நாம் மறுக்கிறோம் என்றால் அவங்க ஒத்துகொள்ளவா போகிறார்களா?

 

ஆனால் நமக்கு ஒரு பதையாவது திறந்திருக்கு. அவங்க சீதைக்கு கோயில் கட்டினால், நாங்கள் எம்மிடம் இருக்கும் பத்தினி தெய்வியோ  கோவில்களை அவங்கள் உடைக்கவிட்டு விட்டு குஸ்புக்கு கோவில் கட்டலாம். அப்போ அவங்கள் வந்து பந்தயத்துக்கு உடைக்க மாட்டாங்கள். ஆரியம் போனால் திராவிடம், திராவிடம் போனால் தமிழ் , தமிழ்.... 

 

கண்ணகி என்றால் தமிழாக பார்த்து எதிர்க்கிறார்கள், சீதை என்றால் ஆரியமாக பார்த்து எம்மை ஒதுக்கிவிடுகிறார்கள். குஸ்பு என்றால் வெல்லும் கட்சிகளான திராவிட கட்சி தானே. நமக்கும் மனவேதனையாக இருக்காது.

 

எதில் அரசியலை தொடுத்தாலும் புராண கதைகளில் அரசியல் சேராது? அது எண்ணையும் தண்ணியும் போலாக்கும்?

("புராணம்" என்ற வடமொழி பதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு "சரித்திரம்")

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.