Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பழமையான கழுதைகளை பராமரிப்பதே எமது நோக்கம்: ரமேஸ்குமார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மன்னார் மாவட்டத்தில் காலகாலமாக வாழ்ந்து வருகின்ற கழுதைகளை பராமரித்து பாதுகாப்பதே தமது நோக்கமென இந்திய கழுதைகள் சரணாலயத்தின் கால்நடை மருத்துவரும் கால்நடை இணைப்பாளருமான ரமேஸ் குமார் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்திலுள்ள கழுதைகளை பராமரித்து அவற்றை பாதுகாக்கும் செயற்றிட்டங்களை மேற்கொள்வதற்கே தாம் மன்னாருக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மன்னார் நகரசபையும் டயஸ்போரா லங்கா அமைப்பும் இணைந்து மன்னார் மாவட்டத்திள்ள கழுதைகளின் பராமரிப்பு வேலைத்திட்டத்தை முன்னெமன்னார் மாவட்டத்தில் காலகாலமாக வாழ்ந்து வருகின்ற கழுதைகளை பராமரித்து பாதுகாப்பதே தமது நோக்கமென இந்திய கழுதைகள் சரணாலயத்தின் கால்நடை மருத்துவரும் கால்நடை இணைப்பாளருமான ரமேஸ் குமார் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்திலுள்ள கழுதைகளை பராமரித்து அவற்றை பாதுகாக்கும் செயற்றிட்டங்களை மேற்கொள்வதற்கே தாம் மன்னாருக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மன்னார் நகரசபையும் டயஸ்போரா லங்கா அமைப்பும் இணைந்து மன்னார் மாவட்டத்திள்ள கழுதைகளின் பராமரிப்பு வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன. இந்நிலையில், இங்குள்ள கழுதைகளின் பராமரிப்பு உள்ளிட்ட ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக  அவர்கள் தங்களை அழைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் தாம் மன்னார் மாவட்டத்திற்கு வந்தபோது, இங்குள்ள அனைவரிடமும் கழுதைகள் தொடர்பான  ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

கழுதைகளை எவ்வாறு பாதுகாக்க வேண்டுமென்பது தொடர்பில் ஆலோசனை செய்து கழுதைகளை பாதுகாப்பதற்காக மன்னாரில் கழுதைகள் பாதுகாப்பு காப்பகமொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

தங்களது கணக்கெடுப்பின்படி மன்னார் நகரசபை பிரிவுக்குட்;பட்ட பகுதிகளில் 375 கழுதைகள் உள்ளன. இவற்றில் பெண் கழுதைகளும் குட்டிக் கழுதைகளும் அதிகமாக உள்ளனவெனவும் அவர் கூறினார்.

கல்நடை வைத்தியர்கள் சிலர் அழைக்கப்பட்டு அவர்களுக்கு கழுதைகளுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பில் பயிற்சியளிக்கப்பட்டுள்ளன.

கழுதைகளினால் விபத்துக்கள் உட்பட பல இடைஞ்சல்கள் தங்களுக்கு  ஏற்படுவதாக மன்னார் மக்கள் ஏற்கெனவே கூறியதுடன், இதன் காரணமாக கழுதைகள் வேண்டாமெனவும் கூறியிருந்தனர்.

இந்நிலையில், கழுதைகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவான அறிவுரையை தாம் வழங்கியதாகத் தெரிவித்த  அவர், கழுதைகளின் முக்கியத்துவம் தொடர்பில் தற்போது கிராம மக்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வை மேலும் வழங்கி வருவதாகவும் கூறினார்.

tamilmirror.lk

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரைவிட கழுதைக்கு மதிப்பு

பராமரிப்பு......... :(  :(

மன்னார் மாவட்டத்தில் காலகாலமாக வாழ்ந்து வருகின்ற கழுதைகளை பராமரித்து பாதுகாப்பதே தமது நோக்கமென இந்திய கழுதைகள் சரணாலயத்தின் கால்நடை மருத்துவரும் கால்நடை இணைப்பாளருமான ரமேஸ் குமார் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்திலுள்ள கழுதைகளை பராமரித்து அவற்றை பாதுகாக்கும் செயற்றிட்டங்களை மேற்கொள்வதற்கே தாம் மன்னாருக்கு வந்துள்ளதாகவும் அவர் கூறினார்..

இவர் தனது நிபுணத்துவத்தின் மூலம் இந்தியாவில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்காரரை பராமரிக்க பயன்படுத்தலாமே!

:D

விமல் வீரவன்சவை இந்தாள் இன்னும் பார்க்கவிலை போலிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தனது நிபுணத்துவத்தின் மூலம் இந்தியாவில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்காரரை பராமரிக்க பயன்படுத்தலாமே!

:D

அவை காது கேளாத  கழுதைகள். :D  :D

"மன்னார் நகரசபையும் டயஸ்போரா லங்கா அமைப்பும் இணைந்து மன்னார் மாவட்டத்திள்ள கழுதைகளின் பராமரிப்பு வேலைத்திட்டத்தை முன்னெமன்னார் மாவட்டத்தில் காலகாலமாக வாழ்ந்து வருகின்ற கழுதைகளை பராமரித்து பாதுகாப்பதே தமது நோக்கமென இந்திய கழுதைகள் சரணாலயத்தின் கால்நடை மருத்துவரும் கால்நடை இணைப்பாளருமான ரமேஸ் குமார் தெரிவித்தார்."

மன்னார் DMK களை திருத்த வந்திருக்கும் இவர் என்ன தமிழ் நாட்டு DMK யா?(DMK= தி.மு.க) :D நிச்சயமாக இது ஒரு சந்தேக நடவடிக்கை. செய்தின் முதல் அரைப்பாகமும் ஒரே விசயத்தை திரும்ப திரும்ப சொல்லி வேண்டுமென்றே பெரிய செய்தியாக பிரசுரிக்கப்பட்டிருக்கு. றோ வின் திருகுதாளமாயின் மன்னர் ஆயர் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்.

Edited by மல்லையூரான்

தமிழரைவிட கழுதைக்கு மதிப்பு

பராமரிப்பு......... :(  :(

விசுகு,

மன்னாருக்கு போயிருக்கின்றீர்களா? அங்கு நிறைய கழுதைகளைக் காண முடியும். நெடுந்தீவில் குதிரை இருப்பது போன்றுதான் மன்னாரில் கழுதை இருக்கின்றது. ஊரும் அது சார்ந்த மண்ணும் பற்றி அக்கறைப்படும் போது அங்கு பாரம்பரியமாக வாழும் மிருகங்கள் பற்றியும் அக்கறைபடுதல் வேண்டும். சுற்றுப்புறச் சூழல் என்பது மனிதனை மட்டும் உள்ளெடுத்த ஒன்று இல்லைதானே.

மன்னாரில் கழுதைகள் வளம் பெற வேண்டும். அது மன்னார் மண் சார்ந்த விலங்கு,

உங்கட அளவுக்கு பெருந்தன்மையோ

தூரப்பார்வையோ  எனக்குக்கிடையாது ராசா

அந்த மண்ணில் தமிழனின் நிலை என்ன?

அவன் வாழ வழியுண்டா?

அதை இவர்கள் கேட்க மாட்டார்களா?

இது தான் என் கேள்வி?

சுயநலம் தான்

ஆனால் ஒன்றுமே இல்லாதவனிடம் கழுதை இருந்து  என்ன பயன்????

நாங்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறி விட , மிகுதியாக இருக்கிற கழுதைகளை பாதுகாக்க வேண்டும்  என்ற எண்ணம் பாராட்டுதற்குரியது. donkey-61.gif

நாங்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறி விட , மிகுதியாக இருக்கிற கழுதைகளை பாதுகாக்க வேண்டும்  என்ற எண்ணம் பாராட்டுதற்குரியது. donkey-61.gif

நாட்டைவிட்டு ஓடிய உங்களை நீங்கள் கழுதை என்று சொல்வதை பற்றி நாம் ஒன்று சொல்ல முடியாது. அது உங்கள் சுதந்திரம்.

ஆனால் நாட்டைவிட்டு வெளியேறிய ஏனையோரையும், மிகுதியாக உள்ளவர்களையும் கழுதைகளாக குறிப்பிதுவதன் நோக்கம் என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.