Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் விமான ஓடுபாதையில் தரையிறங்கிய மஹிந்த

Featured Replies

ம்ம்ம்

உண்மையான பயங்கரவாதி என்று பிரபாகரனை அவர் நினைத்தால் அவரை நோக்கி  கை நீட்டுவாரா???

பாவம்

இப்படியும் நாலு வேண்டும் தானே

யாழிலேயே அதை புரிந்து கொள்ளலாம்................. :(

புலிகள் செய்த பிழை விட்டுக்கொடுப்புக்கு தயாராக இல்லாமல் இருந்தது மட்டும் தான்...   அதை இவர்கள்  பயங்கர வாதம் என்கிறார்கள்... 

இலங்கை அரசு செய்த கொலைகள், தடை செய்ய பட்ட ஆயுத பாவனை, மனித உரிமை மீறல்கள் , கருத்து சுதந்திர மறுப்பு எண்று எல்லாத்துக்கும்  மேற்கு நாடுகளிடம் ஆதாரம் இருக்கு ஆனால்  அவர்களை பயங்கரவாதிகள் எண்று சொல்ல வில்லை... காரணம் அவர்களிம் நலன்களுக்கு இலங்கை விட்டு கொடுப்பதால்...  

தங்களது நலன்களுக்கு உதவாதவர்கள் பயங்கரவாதிகள் இதுதான் எப்போதுமே நிலையான மாறாத விடயம்... 

என்னை பொறுத்தவரைக்கும் அனைத்து  சிங்களவன் கூட நல்லவன் தான் தன் இனத்துக்கு விசுவாசமாக நலனுக்கு ஏற்ப்ப நடக்கிறான்...   ஆனால் தமிழர்கள்...?? 

  • Replies 52
  • Views 3.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

விட்டுக்கொடுப்பு  என்பது எதில்???

எதைக்கேட்கிறார்கள்???

அதை விட்டால் அடுத்தது என்ன கேட்பார்கள்??

முழுவதுமாக உரிந்து முச்சந்தியில் விட்டுவிடுவார்கள் என்பது தெரிந்தால்............???

இதில்தான்

எதற்காக போராடத்தொடங்கினோமோ

எதற்காக இத்தனை மாவீரர்கள் உயிரைத்தந்தார்களோ

எதற்காக தமிழ் மக்கள் ஆணை  தந்தார்களோ

அதை விட்டுக்கொடுப்பதில்லை என்று முடிவெடுத்தார்கள்

இப்பொழுது  தோல்வியை  வைத்து விட்டுக்கொடுத்திருக்கலாம் என்ற முடிவுக்கு வருவோமாயின்........

விட்டுக்கொடுத்திருந்தாலும் இதே முடிவு தான்.

அப்பொழுது எதைச்சொல்வோம்...........??? :( 

விட்டு கொடுப்பது எனபது என்ன எண்டால் சிங்களவனிடம் இருந்து  வேறு யாரிடமாவது அடிமையாக மாறுவது...  ( பிறகு எதுக்கு போராட்டம் எண்டு எல்லாம் கேக்கப்படாது..) 

சுருங்க சொன்னால் மேற்கு நாடுகளிடம் கடன் வாங்கி கொண்டு தனது நாட்டு உடமைகளை அடகுவைத்த இலங்கை  வட்டி கட்டுவதுக்காக முழு இலங்கையையும் சீனாவிடம் குத்தகைக்கு விடுகிறதே அது மாதிரி... 

இப்படி விளக்கமாக சொல்ல வேணும் அண்ணை... 

நன்றி  தயா

புலிகளோடு நடந்த  மக்கள் நாம்.....

எந்த முடிவிலும் 

விட்டுக்கொடுப்பிலும்

விட முடியாதவற்றிலும் அவர்களுடன் நாம்  இருந்தோம்.

தோல்வியைக்காட்டி

உன் முடிவு பிழை என்று கை காட்டினால் நாம் தூர நின்றவர்களாவோம்

தோளோடு நின்றுவிட்டு தோல்வியைக்கண்டவுடன் தூரப்போனவர்களாவோம்.

அதில் எனக்கு உடன்பாடில்லை

உயிர் உள்ளவரை அதை நான் செய்யமாட்டேன்

ஏனெனில் அவர்கள் இருந்தபோது

அவர்களின் ஒவ்வொரு முடிவிலும் எனக்கு உடன்பாடிருந்தது

இந்திய இராணுவ காலம் பற்றி கிட்டண்ணா எழுதிய ஒரு புத்தகம் ஒண்டை படிச்சனான் ( பெயர் ஞாபகத்தில் இல்லை)...   அதில்  போர் நடந்த காலத்தில் கிட்டண்ணா இந்தியாவில் விட்டுக்காவலில் இருந்த போது  புலிகள் இந்திய இராணுவ போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தினார்கள்...    அதில் 300 கோடி இந்திய ரூபாய்களை புலிகளுக்கு தருவதாகவும்  புலிகள்  இந்திய இலங்கை ஒப்பந்தபடி புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து விட வேண்டும் எண்று முடிவெடுத்து தகவலை தலைவருக்கு தெரியப்படுத்தினார்கள்...   புலிகளிடம் அப்போது இருந்த ஆயுதங்களை போல பத்து மடங்கு வாங்க போதுமான பணம் அது...   அதே நேரம் மணலாற்றில் மிக குறுகியவட்டத்துக்குள் தலைவர் சுற்றிவளைக்கப்பட்டும் இருந்தார்..

தகவலை கேட்ட தலைவர் கிட்டண்ணாவுக்கு தெரியப்படுத்த  சொன்னது ..  நான் சாவடைந்த பிறகு போராட்டத்தையும் மக்களையும் மொத்தமாகவோ சில்லறையாகவோ விற்றுக்கொள்ளுங்கள் என்பது...  

இந்த தகவல்கள் எமக்கு தெரியவந்தபோது

தலைவரை

புலிகளை

முன்னரைவிட மேலும்  நேசித்தோமல்லவா???

இந்த வரலாறு எம் கண் முன்  ஆனது

அதனுடன் நாமும் நடந்தோம்

விலகி  நின்றவர்கள்

வியாபாரிகள்

பார்வையாளர்கள்.............வேண்டுமென்றால் கை நீட்டட்டும் :(

மொக்குதனமாக புலம்பாமல் பயங்கரவாதத்துக்கு வரை விலக்கணம் என்ன எண்டு சொல்லுங்கோ... 

அதோடை விடுதலை போராடாட்டம் பயங்கரவாதத்திலை இருந்து எவ்வளவு வித்தியாசப்படுகிறது எண்டதை ஒருக்கா விளங்கப்படுத்த முடியுமோ...?? 

உங்களுக்கும் உண்மைதெரியும் இருந்தும் விட்டு கொடுக்க மனமில்லை .உதாரணத்திற்கு கிட்டுவை இழுக்கும் போது உங்கள் தெளிவு பற்றி யோசிக்கவேண்டியும் கிடக்கு .சர்வதே கண்காணிப்பாளர்கள் ,யாரையாவது உதாரணத்திற்கு கொண்டுவந்தால் நல்லது .

Political figures assassinated by LTTE[82] Position/Status Number President of Sri Lanka 1 Prime Minister of India 1 Presidential candidate 1 Leaders of political parties 10 Cabinet Ministers 7 Members of Parliament 37 Members of Provincial Councils 6 Members of Pradeshiya Sabha 22 Political Party Organisers 17 Mayors 4

கொலை ,கொள்ளை ,சிறுவர் படையில் சேர்ப்பு ,கப்பம் ,பலாத்தகாரமாக ஆட்களை பிடித்தல் அதைவிட சர்வதேச சட்ட மீறல்கள் பட்டியல் வெகு நீளம் .

எங்களை நாங்களே திருப்தி படுத்த நாங்கள் வளைந்து கொடுக்கவில்லை ,விட்டு கொடுக்கவில்லை ,தர்மயுத்தம் செய்தோம் ,உலகமே சேர்ந்து அடித்தது ,ஆயுதங்களை மௌனித்தோம் எதையும் எழுதலாம்.

ஆனால் உண்மை எதுவென்றால்  நாங்கள் பிழையாக ஒற்றுமையில்லாமல் போராடி சிங்களவனிடம் தோற்றுவிட்டோம் .உண்மையை உணர்ந்து விட்ட பிழைகளை திருத்தாவிட்டால் தொடர்ந்தும் தோற்றுகொண்டே இருப்போம் .

கொரிலா யுத்தம் என்றதை தான் அகராதி பயங்கரவாதம் என்கிறதா?  அல்லது கொரில்லா யுத்தத்திலிருந்து மரபு முறைக்கு புலிகள் மாறியதையா தாங்கள் விடுதலை போராட்டத்திலிருந்து பயங்கரவாதமாக மாறியது என்றது?

போரின் முடிவில் புலிகள் மீதும் போர்க்குற்றம் தான் சட்டப்படுகிறது என்பது தெரிய வந்தா? அது மரபு வழி போர்களுக்கான வழிமுறை என்பதில்லையா?

தெளிவு வந்தால் இந்த ஆண்டுகளையும் சேர்த்துப்போட முடியுமா?எந்த ஆண்டில் இந்தியாவும் அமெரிக்கவும் பயங்கரவாத்தை முடிக்க இரசாயனக் குண்டுகள் கொடுத்தார்கள் என்றும் போட முடியுமா?

இதில் தமிழரின் விடுதலைக்கு எதிராக செயல்படாத அரசியல்வாதிகள் அல்லாதவர்கள், புலிகளை அடக்க முயற்சித்து எதிர் வினைகளில் இறங்காதவர்கள் எத்தனை பேர் என்பதையும் போட முடியுமா?

சுதந்திர போர்வீரனாக போற்றப்படும் பகவத் சிங் சுட்ட கொமாண்டரை விட உத்தரவு கொடுத்தவர்களைத்தான் தேடினார் என்பது தெரியுமா? பிரஞ்சுப்புரட்சியில், ரூசியப் புரட்சியில் யார் மீது போர் தொடுத்தார்கள் என்பதை பற்றி படித்திருக்கா?

ரஜீவ் காந்தி காந்தி கொடுத்த கட்டளைப்படி பேச்சுவார்த்தைக்கு போன தலைவரை முடிப்பதில் வெற்றி ஈட்டியிருந்தால் அது மரபு வழிப்போராட்டமா அல்லது கொறில்லா யுத்தாமா அல்லது பயங்கரவாதமா?. 

புலிகளை பிள்ளை பிடிகாரர்களாக ஐ.நாவில் காட்டிகொண்டிருந்த ராதிக்க குமாரசாமி அதே நேரத்தில் கருணாவுக்கு மட்டக்களப்புக்கு கோல் எடுப்பவ என்பது தெரியுமா? சுவீடிஸ் கண்காணிப்பு குழு போர்நிறுத்தம் குழம்பியது பற்றி என்ன சொன்னர்கள் தெரியுமா? அப்போது எங்கு பயங்கரவாத இயக்கம் இருந்தது?

உங்களின் இணைப்புகளை  தொடர முயற்சித்த போது, மேலே, எதோ வெட்டிப்பிரட்ட்ட போவதாக கூறி விசுகின் வாயை அடக்கிவிட்டு,  ஏற்கனவே அவிழ்த்துவிட்ட கதைகளுக்கு விக்கீபீடியாவில் ஆதரம் தேடி எங்கோவோ போய்விழுந்திருந்த ஆதாரங்கள் கிடைதிருந்தது.

Political figures assassinated by LTTE%5B82%5D Position/Status Number President of Sri Lanka 1 Prime Minister of India 1 Presidential candidate 1 Leaders of political parties 10 Cabinet Ministers 7 Members of Parliament 37 Members of Provincial Councils 6 Members of Pradeshiya Sabha 22 Political Party Organisers 17 Mayors 4

கொலை ,கொள்ளை ,சிறுவர் படையில் சேர்ப்பு ,கப்பம் ,பலாத்தகாரமாக ஆட்களை பிடித்தல் அதைவிட சர்வதேச சட்ட மீறல்கள் பட்டியல் வெகு நீளம் .

இந்திய இராணுவத்தோடை நிண்டு தமிழர்களை படுகொலை செய்த, தமிழ் தேசிய இராணுவத்துக்கு சிறுவர்களை கட்டாய ஆள்சேர்ப்பு செய்த ENDLF, EPRLF, மற்றும் சில குழுக்கள் பயங்கரவாதிகளாக இந்தியாவால் ஏன் அறிவிக்க படவில்லை...?? அவர்களின் தலைமை பொறுப்பில் இருந்த வரதராச பெருமாள் ஏன் இந்திய பாதிகாப்பில் உள்ளால்...?? இல்லை அவர்கள் தவறே செய்யவில்லை தமிழ் மக்களால் காரணமே இல்லாமல் வெறுக்க படுகிறார்கள் எண்று சொல்கிறிர்களா...

கப்பம்...??? நீங்கள் வாழும் நாட்டில் உழைக்கும் 60% மான காசை சட்ட பூர்வமாக உங்களிடம் இருந்து வரி எனும் பெயரில் புடுங்கி கொள்கிறார்களே அதை நீங்கள் கப்பம் எனும் தூய சொல்லால் சொல்ல முடியாதோ...??

எங்களை நாங்களே திருப்தி படுத்த நாங்கள் வளைந்து கொடுக்கவில்லை ,விட்டு கொடுக்கவில்லை ,தர்மயுத்தம் செய்தோம் ,உலகமே சேர்ந்து அடித்தது ,ஆயுதங்களை மௌனித்தோம் எதையும் எழுதலாம்.

ஆனால் உண்மை எதுவென்றால்  நாங்கள் பிழையாக ஒற்றுமையில்லாமல் போராடி சிங்களவனிடம் தோற்றுவிட்டோம் .உண்மையை உணர்ந்து விட்ட பிழைகளை திருத்தாவிட்டால் தொடர்ந்தும் தோற்றுகொண்டே இருப்போம் .

ஜனநாயகத்தின் படி வேண்டுமானால் தேர்தலை வைத்து பாருங்கள் ஊரிலும் புலத்திலும் புலிகளை எவ்வளவு பேர் ஆதரிப்பார்கள் உங்களின் பக்கம் எவ்வளவு பேர் நிற்பார்கள் எண்று... அப்போ மக்கள் எல்லாம் அனியாயத்தின் பக்கம் நிக்கிறார்கள் எண்று தான் உங்கள் அறிவு சொல்கிறதா...??

அர்ஜூன்...

புலிகள் பயங்கரவாதிகளாக்கப்பட்டது நீலன் திருச்செல்வம், கதிர்காமர் காலத்தில் சந்திரிக்காவால் வெளிநாட்டமைசரான கதிர்காமர் நாடுநாடாக செண்று நான் தமிழன் என்னை போல தமிழர்கள் புலிகளை வெறுக்கின்றனர் எண்று பிரச்சாரம் செய்ய, நீலந்திருச்செல்வன் இலங்கையில் இருந்த தூதரகங்களில் பிரச்சாரம் செய்யாமல் தமிழர்கள் போராட்டம் பயங்கரவாதமாக்க படவில்லை..

சிறுவர் போராளிகள் பற்றி சொல்கிறீர்கள்..

விடுதலை புலிகளில் படத்துறை பள்ளி ஆரம்பிக்க பட்டு 16 வயதுக்கு உட்பட்ட போராளிகள் கற்பிக்கப்பட்டனர்... களமுனைக்கு 1990 களுக்கு பின்னர் அனுப்ப படுவதில்லை... பின்னரான காலங்களில் சிறுத்தை படைப்பிரிவு ஆரம்பிக்க பட்டு விசேட பயிற்ச்சிகள் 2 வருடம் எனும் அளவுக்கு கொடுக்க பட்டது...

பின்கள வேலைகள் மிக முக்கியமாக தொழில்நுட்பம், தொலைதொடர்பு, வரைபடம், மாதிரி உருவமைப்பு, அறிக்கைகள் எண்று பயிற்றப்பட்ட வேலைகள் கொடுக்கபட்ட போராளிகள் படைத்துறைப்பள்ளிக்கு போனதில்லை...

16 வயதிலை முதிர்ச்சினான தோற்றத்தை அடையும் ஐரோப்பியர்களால், 20 வயது தென்னாசிய இளைஞன் சிறுவனாக தான் தெரியும்..

  • கருத்துக்கள உறவுகள்

தயா என்னிடம் கேள்வி கேட்டால் அதற்கு நான் பதில் எழுதுவன் தானே .தெரியாதா விடயங்களுக்க ஏன் வந்து தலைய நீட்டுகின்றீர்கள் 

இதை எழுதிய அர்ஜுன் அண்ணாதான் சண்டமாருதனுக்கு நான் எழுதிய பதிலுக்கும் கருத்து வைத்தவர்.. :icon_mrgreen:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=124258&page=1#entry907451 :icon_idea:

Edited by nunavilan

இதை எழுதிய அர்ஜுன் அண்ணாதான் சண்டமாருதனுக்கு நான் எழுதிய பதிலுக்கும் கருத்து வைத்தவர்.. :icon_mrgreen:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=124258&page=1#entry907451 :icon_idea:

அதுதான் பாயிண்ட் யுவரானர்...............தட்ஸ் ஆல் யுவரானர் .... :D  :D  :D 

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் பாயிண்ட் யுவரானர்...............தட்ஸ் ஆல் யுவரானர் .... :D  :D  :D 

இப்ப எதிர்த்தரப்பு வக்கீல் ஏதாவது சொல்ல விரும்பிறாரா? :D

தயா ,

சர்வதேசம் ஏதோ குழந்தை பிள்ளைகள் கதிர்காமரும் நீலனும் சொல்லித்தான் புலிகளை பற்றி தெரியும் .இந்த அளவு விளக்கத்தில தான் புலிகள் கடைசி வரை இருந்தார்கள் .

வெளிநாட்டு தூதரகங்கள் ,நிருபர்கள் ,புலனாய்வு அதிகாரிகளுக்கு எமது நாட்டில் நடக்கும் அத்தனை விடயங்களும் சுட சுட தெரியும் .நாங்கள் நினைப்பது மற்றவனுக்கு எதுவும் தெரியாது என்று .86 இல் டெல்கியில் இருக்கும் போது படித்த பாடம் இது .

புலம் பெயர்ந்த புலிகளுக்கே அது இன்னமும் விளங்கவில்லை .இன்னமும் ஒழிச்சு செய்வம் என்ற யோசனைதான் .

திருப்பி திருப்பி ஒன்றையே எழுதுகின்றீர்கள் .புலிகள்  செய்தது புலிகளுக்கு மட்டுமே நியாயமாக இருந்தது அது உலகிற்கு நியாயமாக படவில்லை .

தேர்தல் வைக்க சொல்லி கேட்டிகின்றிர்கள் அப்ப ராஜபக்சாவும் தேர்தல் வைத்து வென்று வந்தவர்தான் அப்ப அவர் செய்தது சரியென்றா சொல்ல வருகின்றீர்கள்

முட்டுகொடுகும்   ஹிந்திய  ஆதரவாளர்கள்  வலிமையுடன் இருக்கும்வரை , ஆனால்  அது  நிரந்தரம்  கிடையாது .

உண்மை ................குறைந்தது இந்த அடிப்படை அறிவு கொஞ்சமாவது மனிதனுக்கு வேணுமுங்க ..............

Edited by தமிழ்சூரியன்

இனி கிந்திய அரசு வலிமையாக இருந்தென்ன விட்டேன்ன ?

நாட்டில அலுவல் முடிந்துவிட்டது .சம்பந்தன் இப்ப காலுக்க நிற்கின்றார் .

ஓடி வந்து கொடி பிடிப்பவர்கள் பற்றி அவர்கள் என்றுமே கணக்கில் எடுத்ததில்லை .அவர்கள் இணைய புட்சி(புரட்சி ) செய்ப மட்டும் தான் லாயக்கு .

ஆனால்  அது  நிரந்தரம்  கிடையாது .

சண்டமாருதன்.. எதையாவது குடுத்தால்தான் யாராவது வருவார்கள்.. சிங்களவனிடம் அங்கீகரிக்கப்பட்ட அரச பரிபாலனம் உள்ளது.. நிலத்தை, வளத்தை, வியாபார வாய்ப்புக்களை விற்று தன் அரசியலைச் செய்கிறான்.. சில்லறைகளுக்கு மது, மாது மற்றும் இரத்தினக்கற்கள் போதுமானவையாக உள்ளன.. :D

இவற்றுள் தமிழரிடம் என்ன உள்ளதென்று நினைத்து நீங்கள் தமிழரின் அரசியலை சிங்களவனுடையதுடன் ஒப்பிடுகிறீர்கள்?

தமிழர்கள் இனரீதியாக ஒன்றுபட்டு இல்லை என்பதுதான் குறைபாடு. சிங்களவர்களுக்கு என்ன இருக்கின்றதோ அதை விட பல மடங்கு தமிழர்களிடம் இருக்கின்றது. தமிழர்கள் என்றவகையில் தமிழகம் மற்றும் உலகமெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் என்ற வகையில் அது மாபெரும் சக்தி. இந்த முதலாளிய வர்த்தக உலகில் கொடுக்கல் வாங்கல் என்பதில் சிங்களவர்களை விட பல பத்து மடங்கு அரசியல் ரீதியாக கொடுத்து வாங்க முடியும். மக்கள் தொகை, புத்திசாலித்தனம, தேர்தல் வாக்குகள் மற்றும் வர்த்தகம் எல்லாம் பெரும் முதலீடுகள். இவற்றில் இனரீதியான ஒற்றுமைப்பாடு பிரயோகிக்கப்படுமானால் சிங்களத்தால் எதிர்த்து நிற்ற முடியாது. சிங்களவரிடம் இரத்தினக்கல் எங்களிடம் பனங்காய் பணியாரம் என்று கணக்குப்போட முடியாது.அப்படிப்பார்த்தால் கரும்பையும் சுருட்டையும் மட்டும் வைத்து காஸ்ரோவால் அமரிக்க சார்பு ஆட்சியை கவிடதும் தொடர்ந்து முப்பது வருடம் ஆட்செய்வதும் சாத்தியமில்லை. இஸ்ரேல் கொரியாவிடம் புவியியல் வளத்தை விட புத்திசாலித்தனமே பெரும் முதலீடு. தமிழர் என்ற இனரீதியான ஒற்றுமைப்பாடு பரந்துபட்டு உருவாகி வர்த்தகம் அரசியலில் ஒருங்கிணையுமானால் அது ஒரு மாபெரும் சக்தி. அந்த சக்தியால் எதுவும் சாத்தியமாகும். ஆனால் அவ்வாறு நடப்பது நடைமுறைக்கு பொருந்தாது என்பதை விட அதிகப்படியான கற்பனை என்றும் சொல்லலாம்.

சில எதார்த்தமான கருத்துக்கள் உள்ளன..

தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய குறைபாடாக இருந்தது.. ஆனால் இன்று தமிழ்நாட்டில் எழுச்சி ஒன்று ஏற்படும் தறுவாயில் வெளிவரும் கருத்துக்கள் வேறுமாதிரியானவையாக இருக்கின்றன என்பது மிக்கப்பெரிய குறைபாடு. அதாவது, காலம் தாழ்த்திய எழுச்சியால் பயனில்லை என்பது போன்ற ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது..

உலகத் தமிழர்கள் அனைவருமே ஒற்றுமையாக ஒரு குடையின்கீழ் வந்தாலும் சிங்களவனிடம் இருக்கின்ற அரச பரிபாலனம், அதனூடாக அவர்கள் பெற்றுக்கொள்ளுகின்ற இறையாண்மையுடன் கூடிய பாதுகாப்பு போன்றவை அதிக வலுவைக் கொண்டவை.

தமிழருக்கு ஒப்பீடு, ஃபிடல், இஸ்ரேல் கிடையாது. குர்திஷ் இன மக்கள் சரியான உதாரணமாக இருக்கமுடியும். அல்லது திபெத்தியர்களையும் கூறலாம் ( ஒட்டுமொத்த மக்கள் தொகையில் தமிழர்களைக் காட்டிலும் குறைவாக இருந்தாலும்).

இவர்களின் தற்போதைய அரசியல் நிலையைப் பற்றி நாம் அதிகம் கூற ஏதுமில்லை அல்லவா?! :icon_idea:

"சிங்களவரிடம் இரத்தினக்கல் எங்களிடம் பனங்காய் பணியாரம் என்று கணக்குப்போட முடியாது.அப்படிப்பார்த்தால் கரும்பையும் சுருட்டையும் மட்டும் வைத்து காஸ்ரோவால் அமரிக்க சார்பு ஆட்சியை கவிடதும் தொடர்ந்து முப்பது வருடம் ஆட்செய்வதும் சாத்தியமில்லை" இந்த குப்பைத்தனமான பேக்கதைகளை யாரும் இனி கேடக்கப்போவத்தில்லை. இவற்றை ஆலோசனை என்று நினத்து எழுதுபவர்கள் தங்கள் தலையில் மூன்றுமுறை குட்டிகொள்ளட்டும். இவை யாழில் எழுத்தும் இடத்துக்கு பெறுமதி இல்லாத கதைகள். இதில் எள்ளவும் அறிவோ, சிந்தனயோ வெளிப்படவில்லை. பிரசங்கம் செய்து தோற்றுப்போய்விட்ட ஆதங்கம்தான் வெளிப்படுகிறது.  இனி தமிழனை பனங்கொட்டை என்று நேளிப்பவர்கள் தங்களைத் தாங்கள் உணரப்போகிறார்கள். இரத்தினகள் உள்ளவர்கள் அல்ல 1956 வரைக்கும் இலங்கையிடம் பணக்கார நாடுகள் கடன்பட வைத்தது. இவர்கள் 1956க்கு பிறகு இலங்கையை கடன்காறாக நாடாக மாற்றியதுமட்டும்தான் செய்தது.

உந்த ஒற்றுமை இல்லை என்ற பிரிவினைக்கதையையும், இராமநாதனின் மேட்டுக்குடி கதையும் போதிக்கும் போது கேட்க யாரும் இனி மடையர்கள் இல்லை.  அந்தர நேரங்களில் சந்திக்க கேட்ட போது சந்திக்க மறுத்த கூட்டமைப்பை, மன்மோகன் சிங் தானாக் கூப்பிட்டு சந்திக்க பண்ணியிருக்கிறார்கள் தமிழ் நாட்டு மாணவர்கள். போராட்டம் போகும் பாதையை கண்டு பல இன்று தடுமாறுவதால் ஏமாற்று ஒருமை காட்டிதர முயல்கிறார்கள்.  மந்திந்தா இனி தனது நாளை  எண்ணிக்கொண்டிருக்கட்டும்.

தயா ,

சர்வதேசம் ஏதோ குழந்தை பிள்ளைகள் கதிர்காமரும் நீலனும் சொல்லித்தான் புலிகளை பற்றி தெரியும் .இந்த அளவு விளக்கத்தில தான் புலிகள் கடைசி வரை இருந்தார்கள் .

வெளிநாட்டு தூதரகங்கள் ,நிருபர்கள் ,புலனாய்வு அதிகாரிகளுக்கு எமது நாட்டில் நடக்கும் அத்தனை விடயங்களும் சுட சுட தெரியும் .நாங்கள் நினைப்பது மற்றவனுக்கு எதுவும் தெரியாது என்று .86 இல் டெல்கியில் இருக்கும் போது படித்த பாடம் இது .

புலம் பெயர்ந்த புலிகளுக்கே அது இன்னமும் விளங்கவில்லை .இன்னமும் ஒழிச்சு செய்வம் என்ற யோசனைதான்

இந்த கோதாரியைதான் நானும் சொல்லுறன்...  உங்களுக்கு தான் புரி பட மாட்டன் எண்டுது...  இவ்வளவும் தெரிந்த சர்வதேசம் ஏன் இலங்கை அரசை பயங்கரவாத அரசாக பிரகடனப்படுத்த இல்லை...   காரணம் என்ன...??  இலங்கை அரசு செய்த கொலைகள் அவர்களுக்கு தெரியவே தெரியாதோ...?? 

இலங்கையில் இந்திய அரச படைகளை செய்த கொலைகள், ஏன் இந்தியாவில் காஸ்மீர், மிசோரம், ஜார்கண்ட், பிகார், ஏன் தமிழ் நாடு கேரளா, கர்நாடகா எல்லை கிராமங்களில் நடந்த கொலைகள்... ???  இவை அனைத்தும் சர்வதேச மனித சட்டங்களுக்கு அமைவாக தான் நடக்கின்றனவா...??

இவை ஏதும் தெரியாத சர்வதேசம் சிரியாவில் நடக்கும் கொலைகளை கண்டிப்பதும் நடவடிக்கை எடுக்க துடிப்பதும் எதனால்...??  

சர்வதேசம் ஏன் பக்க சார்பாக நடந்துகொள்கின்றது...?   இதுக்கு பதிலை தேடிக்கொள்ளுங்கள்..   விடை எங்கள் அனைவருக்கும் தெரியும்...  

சிலவேளைகளிலை எங்களுக்கு எதுவும் தெரியாது எண்று நீங்கள் விடும் கரடிகள் தான் சகிக்க முடியவில்லை... 

.

திருப்பி திருப்பி ஒன்றையே எழுதுகின்றீர்கள் .புலிகள்  செய்தது புலிகளுக்கு மட்டுமே நியாயமாக இருந்தது அது உலகிற்கு நியாயமாக படவில்லை .

தேர்தல் வைக்க சொல்லி கேட்டிகின்றிர்கள் அப்ப ராஜபக்சாவும் தேர்தல் வைத்து வென்று வந்தவர்தான் அப்ப அவர் செய்தது சரியென்றா சொல்ல வருகின்றீர்கள்

புலிகள் செய்தவை அனைத்தும் தமிழ் மக்களின் நலன்களுக்காகவே... இங்கை பிரச்சினை "உயிர் வாழ்வு"... மாவோசேதுங் சொன்னது போல நாங்கள் கையில் எடுக்கும் ஆயுதத்தை எதிரிதான் தீர்மானிக்கிறான்...

பாம்பு வாழ வேண்டும் எண்றால் தவளையோ எலியோ சாவதில் தவறில்லை... அது பாம்பின் தரப்பு நியாயம்...

அமெரிக்கா, இந்தியா, இலங்கை, இஸ்ரேல் , சிரியா எல்லாருக்கும் இது பொருந்தும்...

சில எதார்த்தமான கருத்துக்கள் உள்ளன..

தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கவில்லை என்பதுதான் மிகப்பெரிய குறைபாடாக இருந்தது.. ஆனால் இன்று தமிழ்நாட்டில் எழுச்சி ஒன்று ஏற்படும் தறுவாயில் வெளிவரும் கருத்துக்கள் வேறுமாதிரியானவையாக இருக்கின்றன என்பது மிக்கப்பெரிய குறைபாடு. அதாவது, காலம் தாழ்த்திய எழுச்சியால் பயனில்லை என்பது போன்ற ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது..

உலகத் தமிழர்கள் அனைவருமே ஒற்றுமையாக ஒரு குடையின்கீழ் வந்தாலும் சிங்களவனிடம் இருக்கின்ற அரச பரிபாலனம், அதனூடாக அவர்கள் பெற்றுக்கொள்ளுகின்ற இறையாண்மையுடன் கூடிய பாதுகாப்பு போன்றவை அதிக வலுவைக் கொண்டவை.

தமிழருக்கு ஒப்பீடு, ஃபிடல், இஸ்ரேல் கிடையாது. குர்திஷ் இன மக்கள் சரியான உதாரணமாக இருக்கமுடியும். அல்லது திபெத்தியர்களையும் கூறலாம் ( ஒட்டுமொத்த மக்கள் தொகையில் தமிழர்களைக் காட்டிலும் குறைவாக இருந்தாலும்).

இவர்களின் தற்போதைய அரசியல் நிலையைப் பற்றி நாம் அதிகம் கூற ஏதுமில்லை அல்லவா?! :icon_idea:

//சண்டமாருதன்.. எதையாவது குடுத்தால்தான் யாராவது வருவார்கள்.. சிங்களவனிடம் அங்கீகரிக்கப்பட்ட அரச பரிபாலனம் உள்ளது.. நிலத்தை, வளத்தை, வியாபார வாய்ப்புக்களை விற்று தன் அரசியலைச் செய்கிறான்.. சில்லறைகளுக்கு மது, மாது மற்றும் இரத்தினக்கற்கள் போதுமானவையாக உள்ளன..

இவற்றுள் தமிழரிடம் என்ன உள்ளதென்று நினைத்து நீங்கள் தமிழரின் அரசியலை சிங்களவனுடையதுடன் ஒப்பிடுகிறீர்கள்?//

தமிழர்களிடம் என்ன உள்ளது என்ற உங்கள் கேள்விக்கே இதை எழுதினேன் அன்றி அந்த நாடுகளையோ இனங்களையோ ஒப்பிடவில்லை. என்னும் சொல்லப்போனால் எந்த ஒரு இனக்குழுமத்தையும் நான் தமிழர்களுடன் ஒப்பிடவும் விரும்பவில்லை. எனது கருத்து தமிழர்களிடம் சிங்களவர்களை விட அதிகமாக இருக்கின்றது அது எண்ணிக்கை பலமாக இருக்கின்றது இந்திய மத்திய அரசு தேர்தலில் வாக்குப் பலமாக இருக்கின்றது அறிவு வளம் நுகர்வு வர்த்தகம் உலகளாவிய பரந்துபட்ட தொடர்பு என சாதகமான விடயங்களில் பலம் இருக்கின்றது. ஆனால் இவைகள் எதுவும் சமூகம் இனம் சார்ந்து ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய தளத்தில் இல்லை. இதையே பலவீனமாக கருதுகின்றேன்.

இறமை என்பது விளங்கினால் பனங்காய் பணியாரக்கதையும்,  அமெரிக்கவும் அரசியல் செய்கிறது கியூபாவும் அரசியல் செய்கிறது என்றகதைகள் வருவது வேண்டுமென்றேதான் எடுத்துகொள்ள வேண்டும்.  இதற்குள் வலிய திரும்ப திரும்ப சோனி, பனங்காய் பணியாரகதைகளை எழுதுபவர்களின் சிந்தனைகளில் தேங்கி நிற்கும் பிரித்தாளும் சாக்கடைகளின் துர்நாற்றம்தான் சகிக்க முடியாதது. அரசு ஆயிரம்  தமிழ் கக்கீம், பதியுதின், மேர்வில் சில்வா, தேவானந்தா எதனையும் வைத்திருக்கலாம். ஆனால் தமிழர் தரப்பில் ஒரு சிங்கள கக்கீமைக் கூட வைத்திருக்க முடியாது.  இதில் இருப்பது தமிழர் பிழை அல்ல.தமிழர் பிழையாக மட்டும் இருந்திருந்தால் இந்துக்கோவில்கள் இடிபடும் போது பள்ளிவாசகள் இடுபடும் என்பது தெரிய வந்திருக்கும்.

கக்கீமுக்கும் தேவானந்தாவுக்கும்,மேர்வின் சில்வாவுக்கும் இடையில் பேதமில்லை. அதே மாதிரியே முஸ்லீம்களுக்கு, சிங்களவர்களுக்கும் தமிழருக்குமிடையில் கூட பேதமில்லைமிதுதால். இருந்திருந்தால் சோல்பரி அரியல் அமைப்பு துட்டகைமுணு இராச்சியமாகமுதல் காப்பாற்றப்பட்டிருக்கும் . கொழும்புத்துறை முகம் போத்த்துக்கீசர் கையில் போன அதே பாதையில் இ்லங்கையின் நுரை சோலை போய் இருக்காது. மிச்சமெல்லாம் இட்டுக்கட்டு கதை.  இலங்கை அரசு தேவையான கக்கீம்களை, பதியுதின்களை உடமையாக்குவதல்ல, தேவையான போது கருணாநிதி, சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன் போன்றவைகளையும் உடமையாக்கலாம். இது மட்டும் அல்ல இறமை என்பது.  தேவையான போது சோனியா, மன்மோகன் சிங் எல்லாவற்றையும் உடமையாக்கலாம்.  கருணாநிதியை கட்டில் போட்டது இந்திய இறமை அல்ல. இலங்கையின் இறமையால் உடமையக்கப்படிருக்கும் இந்திய இறமை. இன்று வரையும் இதுவேதான் மலேசியாவிலும்.

போர் வரும் போது சிங்களம் காட்டிய இன ஒற்றுமை தான் தனியத்தனிய மூன்று இராஜதானியும் மேற்கு நாடுகளால் கைபற்றப்பட்ட கதை. 

Edited by மல்லையூரான்

நீலகிரியில் சிங்கள்வர்கள் பபிற்சி எடுக்க முடியும். இந்தியக் கரைகளில் தமிழர்கள் மீன் பிடிக்க முடியாது என்பது இலங்கையின் இறமை.  மதராஸ் மாவட்டத்துடன் இருந்த கச்சதீவில் தமிழர் இறங்க முடியாது, சீன நேவி காம் அமைக்கலாம் என்பது சிங்கள இறமை. இவற்றுக்கெல்லம் எதிராகத்தான் தமிழர் போராட்டம் அமைய்ய வேண்டும். தலை  தேவை இல்லை, மனம் இருந்தால் இதை எல்லாம் விளங்கலாம்.

பிருத்தானியர் ஜனநாயகமாக ஆண்டார்கள். என்று தமிழர்கள் மட்டும்தான் செழித்தார்கள். அன்றைய காலத்தில் தமிழரின் ஒற்றுமைப் பலம் பற்றி எழுதுவார் இல்லை. ஆனால் இராமநாதன் இலங்கையின் வெள்ளைக்கார  தேசாதிபதியை கூட எதிர்த்து நடவடிக்கை எடுத்து வெற்றி கண்டார். அதை மேட்டுக்குடித்தனமென்று கண்டுபிடிக்கிறார்கள்.

இன்று சிங்களம் துட்ட கைமுணு அரசு நடத்துகிறது. தமிழர்கள்தான் தாக்கப்படுகிறார்கள் இதில் செயல் இல்லாத நாய் அகங்கள் தான் கருவிகளாகப் பாவிக்கப்படுகிறார்கள். அவர்களின் நடத்தைகளை பற்றி எழுதுவார் இல்லை. தமிழரின் ஒற்றுமை பற்றி பாடம் எடுக்கிறார்கள். இந்த ஒற்றுமைப் பாடத்தை குத்தி முன்னால் நிறு பேசி ஒரு படம் எடுத்து அதை யாழில் பிரசுரிக்க முடியுமா? வெறும் நடிப்பு

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.