Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் வாழ் தமிழீழ மாணவர்கள் மீதான சிங்களவரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கடும் கண்டனம்

Featured Replies

தமிழ்த் தேசிய இனத்தின் மீது தொடர்ச்சியான இனவழிப்புப் போரை கட்டவிழ்த்து விட்டுள்ள சிங்கள இனவெறியாளர்களின் ஆட்சியரங்காகவுள்ள சிறிலங்காவினை புறக்கணிக்கக் கோரி புலம்பெயர் தமிழீழ மாணவர்களினால் 17.06.2013 அன்று ஓவல் துடுப்பாட்ட மைதானம் முன்பாக ஒழுங்கு செய்யப்பட்ட அமைதிவழியான கவனயீர்ப்புப் போராட்டம் சிங்கள இனவெறியாளர்களின் காட்டுமிராண்டித்தனமான வன்முறைத் தாக்குதலுக்குள்ளானது.
 
தாயகத்தில் பல்வேறுபட்ட ஒடுக்குமுறைகளுக்குள் அடக்கி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் எமது தமிழீழ மக்கள் தமது அடிப்படை உரிமைகள் யாவும் மறுக்கப்பட்டு திறந்த வெளிச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். தாயகத்தில் தமிழீழ மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள இன அடக்குமுறைக்கு எதிராக எழுப்பப்படும் எந்தவகையான குரல்களும் சிங்கள இனவெறி ஆதிக்க சக்திகளினால் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படுகின்றன. இனவழிப்பின் விழிம்பில் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் தமிழீழ மக்கள் தமது இன்னல்களை வெளிப்படுத்த வழிதெரியாது அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
 
இந்நிலையில் தாயகத்தில் இனவழிப்புக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமது சொந்தங்களின் துயரங்களை அனைத்துலகலவில் அம்பலப்படுத்தி அம்மக்களது அடிப்படை சனனாயக உரிமைகளை மீள நிறுவுவதற்காக புலத்து தமிழர்கள் சனனாயக வழியிலான கவனயீர்ப்பு நிகழ்வுகளை நடாத்தி வருகின்றனர்.
 
தாயகத்தில் சனனாயக வழிப்போராட்டங்களை மானிட தர்மத்திற்கு முரணாக அழித்தொழிக்க முயன்று கொண்டிருக்கும் சிங்கள இனவெறியாளர்கள் தற்போது புலம்பெயர் தேசத்திலும் தமது இனவாத வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இதன் ஒரு வெளிப்பாடே ஓவல் மைதானத்தில் நடாத்தப்பட்ட வன்முறைத் தாக்குதல்
 
சிங்கள இனவெறி அரசின் இவ் எல்லை மீறிய பயங்கரவாதச் செயலை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (பிரித்தானியா) மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. சனனாயக விழுமியங்கள் ஒப்பீட்டளவில் செம்மையாக கட்டிக்காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் ஐரோப்பிய தேசத்திலே எமது தமிழீழ மக்களின் அடிப்படை சனனாயக உரிமைகள் சிங்கள இனவெறியாளர்களினால் மிதிக்கப்படுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
 
சிங்கள ஆதிக்க சக்திகளின் இவ் எல்லை மீறிய பயங்கரவாதத்தை அனைத்துலகில் அம்பலப்படுத்துவதோடு தாயகத்தில் எமது மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்க நாம் அனைத்துலக அரங்கில் தொடர்ந்து போராடுவோம்.
 
அந்த வகையில் எதிர்வரும் 20.06.2013  அன்று Cardiff Wales Stadium  இல் சிங்களவெறியர்களின் அகங்காராச் சின்னமாக திகழ்கின்ற சிங்கள துடுப்பாட்ட அணியினர் பங்குபற்றுகின்ற நிகழ்வில் அவர்களது இனவெறித்தனத்தை அனைத்துலக அரங்கில் மீண்டும் அம்பலப்படுத்த நாம் அனைவரும் ஒன்று திரள்வோம்.
 
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

 

 

http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=16094:britain-s-savage-attack-on-london-life,-sinhalese,-tamils-%E2%80%8B%E2%80%8Bof-eelam-students-coordination-committee-denounced&catid=86:eezham&Itemid=104

தயங்காமல் உடனடியாக, போலீசில் முறையிட்டு, சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஒவ்வொருவரினதும் அடிப்படை உரிமை - இல்லையா?

இதை செய்யாமல்விட்டால் அதைவிட மாபெரும் தவறு எதுவும் இருக்கவே முடியாது.

இங்கிலாந்தில் உள்ள தமிழ் அமைப்புக்கள் படங்களை வெளியிட்டு, கண்டித்து மகிழ்வதால் எதுவும் ஆகிவிடப் போவதில்லை.

புகைப்பட ஆதாரங்கள் இருந்தும் இதுவரை தாக்குதல் நடத்திய சிங்களக் காடையர்கள் யாரும் கைது செய்யப்பட்டதாக தெரியவில்லை. இது இலண்டன் வாழ் தமிழரின், இலண்டனில் உள்ள தமிழ் அமைப்புக்களின் கையாலாகாத் தனத்தை, மூடத்தனத்தை காட்டுகிறது என்பது - மிகவும் கவலையான செய்தி.

இதைப் பார்க்கும் போது, ரதியக்கா எழுதியமாதிரி இலண்டன் வாழ் தமிழர்கள் விடுப்புப் பார்க்கவும், ....... இத்தியாதிகளுக்கும் மட்டும் தான் லாயக்கு என்பதை மறுக்க முடியாது தானே!

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஒரு சிறு சம்பவத்தையும் காவல்துறையிடம் முறையிட்டுவிட வேண்டும்.. பல சிறு சம்பவங்கள் ஒன்று சேரும்போது நடவடிக்கை எடுப்பார்கள்.

கவல் துறை குற்றவியல் நடவடிக்கை எடுக்காவிட்டால் எப்போதும் சிறுமி பக்கத்தில் இருந்து சிவில் வழக்கு தொடர முடியும்.

1001059_477326695669695_1682898750_n.jpg
அரசியல் வேறு விளையாட்டு வேறு என்று சொல்லும் நல்ல மனம் படைத்த (முட்டாள்) உள்ளங்களே இதையும் கொஞ்சம் பாருங்களன்...
  •  

992859_10152405164550656_898433725_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

992859_10152405164550656_898433725_n.jpg

 

இவர்கள் சிங்கள குண்டர்கள்.ஏதோ ஒரு திட்டத்துடன் இலங்கையரசால் அனுப்பபட்டு இருக்கிறார்கள்.தமிழ்ர்கள் தான் கவனமாகவும்,அவதானத்தோடும் இருக்க வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லண்டனிலும் அடி வாங்கியது அதுவும் சிங்களர்களிடம் அடி வாங்கியது தமிழனே!

 

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனிலும் அடி வாங்கியது அதுவும் சிங்களர்களிடம் அடி வாங்கியது தமிழனே!

 

இதென்ன முதல் முறையே.................

பழகிப்போச்சு.................

பழகிக்கொள்ளவேண்டியது தான்............ :(

லண்டனிலும் அடி வாங்கியது அதுவும் சிங்களர்களிடம் அடி வாங்கியது தமிழனே!

 

இலண்டனில் வைத்து அடித்தபடியால் கலால் மட்டுதான் அடித்தான்.

 

இங்கே அவனின் கூலிகள் வந்து எழுதும் போது தமிழருக்கு மேட்டுக்குட்த்தனம், சாதித்துவம் என்று எழுதுவார்கள்.  ஆனால் தடிப்பு பிடித்த சிங்களன் நினைத்து கொள்வது தான் ஆரியன்  என்றும் தமிழன் திராவிடன் என்றும்.

 

அதனால் இனக்கலவரங்களில் அடித்தானாயின் "கள்ளத்தோனி காறய, பறத்தெமிழோ' என்று சொல்லிப்போட்டுத்தான் அடிப்பான். அதையெல்லாம மறக்க வைத்தது முள்ளிவாய்காலும், அதன் பின்னர் இராணுவம் போராளிகளுக்கு செய்த வதையும். அதை விட பிரதானமானது அவனின் கூலிக்கு விலை போன, தமிழரை வன்முறையாளர்களாக காட்ட முயலும்  தமிழ்க் கோமாளிகள்.

 

பணம் பாதாளம் வரையும் போகும். இதனால் யாழில் பல இணக்க அரசியல் எழுதுகிறார்கள். சில ஈழத்தமிழர் தமிழ் நாட்டில் இருந்து 13ம் திருத்தத்திற்காக கூப்பாடு போடுகிறார்கள்.

 

ஆனால் சிங்களவன் அமெரிக்க தூதுவர் ரோபேட் பிளேக்கையும் காரால் இறக்கு "நடந்து போ" என்று நடக்கத்தான் வைத்தவன்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.