Jump to content

நாங்கள் ஏன் இலக்கிய சந்திப்பில் இல்லை? - யோ. கர்ணன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஏன் இலக்கிய சந்திப்பில் இல்லை?

- யோ. கர்ணன்

ஐரோப்பாவிலுள்ள நண்பரொருவர் சிலதினங்களின் முன்னர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அது சற்றே நீண்டது. அதன் குறிப்பிட வேண்டிய பகுதிகள் கீழே உள்ளன.

‘சில விடயங்களை ஊகிக்கத்தான் முடியும். ஆதாரங்களுடன் நிறுவ முடியாது. ஆதாரமான நம்பிக்கைகளினடிப்படையில் முன்னேறிச் சென்று கொண்டிருந்தால், சிலவேளைகளில் அவற்றை ஆதாரங்களுடன் நிறுவவும் கூடும். இலக்கிய சந்திப்பு விவகாரமும் இவ்வாறனதே. இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதே ஒருவிதமான உள்நோக்கத்தினடிப்படையிலானதுதான் என்பதே எனதும் இங்குள்ள சில தோழர்களினதும் அசையாத நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அதனை ஆதாரபூர்வமாக நிறுவ முடியவில்லை. உங்கள் முகப்புத்தக தகவல்களை கவனித்து வருகிறேன். எனது நம்பிக்கைகளிற்கான பல ஆதாரங்கள் இப்பொழுது கிடைத்துள்ளது என்றே நினைக்கிறேன். ஆனாலும், எந்த சந்தர்ப்பத்திலும் இலக்கிய சந்திப்பு குழாமிலிருந்து நீங்கள் விலககூடாது. வளைந்து கொடுக்காமல், அதிகாரங்களிற்கு எதிரான சந்திப்பொன்று நடப்பதை உறுதி செய்வது உங்கள் கடமை. ஏனெனில், சந்திப்பை இலங்கைக்கு எடுத்து சென்றுவிட்டு பாதியில் விட்டு செல்வது, சந்திப்பு பாரம்பரியத்தை ஊறு செய்ய கூடியது.’ என நீண்டு சென்ற அவரது மின்னஞ்சலிற்கு நானும் நீண்ட பதிலளித்திருந்தேன்.

‘மன்னிக்கவும். சில விடயங்களில் நீங்கள் தவறான புரிதல்களை கொண்டிருக்கிறீர்கள். இலக்கியசந்திப்பு இலங்கைக்கு வரவேண்டுமென நான் எந்த சந்தர்ப்பத்திலும் குரல் கொடுத்திருக்கவில்லை. உண்மையில் இலங்கையில் சுயாதீனமாக எழுதவும், பேசவும் உகந்ததான சூழல் இன்றில்லை. அண்மையில் நடைபெற்ற எனது நூல் வெளியீட்டில் கூட பல நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சாதாரண எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள்தான் இலங்கையில் நெருக்கடிகளை எதிர் கொள்கிறார்கள் என்றில்லை. அதிகாரத்தை சார்ந்து நிற்காத கட்சிகள், அமைச்சர்கள், தலைவர்கள் என யாருமே இயங்க முடியாத ஒரு காலத்தை நோக்கி நாங்கள் பயணித்து கொண்டிருக்கிறோம்.

நிலமை இவ்வாறிருக்க, இலங்கையில் நெருக்கடிகள் இல்லையென்று சொல்ல, நான் இன்னும் அரசகட்சிகளெதிலும் அங்கத்தவனாகவில்லை. இலங்கையில் நடக்கும் சகலவிதமான அநீதிகளிற்கெதிராகவும் குரல் கொடுக்கும் என ஏற்பாட்டாளர்கள் வழங்கிய உறுதிமொழியினடிப்படையிலேயே நான் இலங்கை எற்பாட்டு குழுவில் அங்கத்தவனாகினேன். ஆனால் யதார்த்தம் அந்த உறுதிமொழிகளை அண்மித்ததாக கூட இருக்கவில்லை.

உங்களிற்கு தெரிந்திருக்கலாம், இந்த இலக்கிய சந்திப்பு குழாம் வலுவான குடும்ப ஆதிக்கத்திற்குள் உட்பட்டிருப்பது. தமிழ் தேசிய அரசியலின் தீவிர எதிர்பாளர்களான வாசுகி போன்றவர்கள் இதில் சம்மந்தப்பட்டுள்ளனர். இந்த நிழல் ஆதிக்கத்திலிருந்து வெளிவர முடியாமல், ‘மாற்றுகருத்து’ நண்பர்கள் திண்டாடுகிறார்கள். வாசுகி, தமிழ்அழகன் போன்றவர்கள் தீவிரமான தமிழ்தேசிய அரசியல் எதிர்ப்பாளர்களாக மட்டுமல்லாமல், அதனைவிட தீவிரமான அரச ஆதரவாளர்களாகவும் உள்ளனர்.

யுத்தத்தின் பின்னர், ஆட்சியாளர்கள் கட்டமைக்க முயலும் ‘தேசியத்தை’ ஏற்று கொள்வதும், வலுப்படுத்துவதும் தமது வரலாற்று கடமையென கருதுகிறார்கள். இலங்கையிலுள்ள சிறுபான்மையின தேசியங்களை அவர்கள் நிராகரிக்கிறார்கள். இந்த வகையான கருத்துக்கள் இலக்கிய சந்திப்பில் ஒலிக்க கூடாதென்பது அவர்களின் பிரதான செயற் திட்டமாகவே இருக்கின்றது.

இந்த போக்கை எதிர்த்ததுடன், தமிழ்தேசிய கருத்து நிலை சார்ந்தவர்களையும் பேச்சாளர்களாக பிரேரித்தேன். இதனால் முரண்பாடு முற்றியது. குறிப்பாக யாழ் பல்கலைகழக சட்டத்துறை விரிவுரையாளர் குருபரன் குமரவடிவேல் கலந்து கொள்ளகூடாதென்பதில் உறுதியாக இருந்தனர். இதற்காக யாழ்ப்பாணத்திலுள்ள வாசுகி தொடக்கம் லண்டனிலுள்ள அவரது இரத்த உறவுகள் வரை ஒரு குடும்பமே சன்னதமாடியது.

இதன் அடுத்த கட்டமாக, ‘இலங்கை தேசியத்தை’ முன்னிலைப்படுத்திய பார்வைகளிற்கு இடையூறாக இருந்தவர்களை தவிர்த்துவிட்டு, அரச ஆதரவாளர்கள் மட்டும் கலந்துரையாடல்களை முன்னெடுத்து செல்கிறார்கள். ஆகவே, நீங்கள் விரும்பவதை போல -நாங்கள் விரும்பினாலும்- இனி ஆலோசனை கூட்டங்களில் பங்கெடுக்க முடியாது. ஆலோசனை கூட்டங்களில் பங்கெடுக்க வேண்டும் என்பதற்காக அரச ஆதரவாளர்களாக மாறவும் நாங்கள் தயாராகயில்லை’. இதுதான் இலங்கையில் யூலைமாத பிற்பகுதியில் நடக்கவுள்ள 41வது இலக்கிய சந்திப்பின் சுருக்கமான கதையும், தற்போதைய நிலவரமும். இதன் மூலம் யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கின்றதென்ற சுருக்கமான அறிமுகமொன்றாவது கிடைத்திருக்குமென நம்புகிறேன்.

இலங்கை சந்திப்பு சகலவிதமான ஒடுக்குமுறைகளிற்கும் எதிரானதாக இருக்குமென்ற ஏற்பாட்டாளர்களின் உறுதிமொழிக்கும், யாழ்ப்பாண குழவின் கூட்டங்களிற்கும் ஒரு புள்ளியளவான தொடர்பும் இருந்திருக்கவில்லை. இந்த குழு பெரும்பாலும் ஏற்பாட்டாளர்களின் நண்பர்கள், சக செயற்பாட்டாளர்களினால் ஆனது. மேற்குறிப்பிட்ட நான்கு பேரும்தான் வெளியில் இருந்து உள்நுழைநதவர்கள். மிகுதியானவர்களெல்லோரும் கிட்டதட்ட ஒரேவித சிந்தனை, கருத்து உடையவர்கள்தான்.

முதலாவது கூட்டம் வாசுகி வீட்டில் நடந்த பொழுதே, இந்த முரண்பாடுகள் ஆரம்பித்துவிட்டன. அன்றைய சந்திப்பில் வாசுகி, வேல்.தஞ்சன், கருணாகரன், இராகவன், தாஸ், நான் ஆகியோர் கலந்து கொண்டோம். தாஸ் மற்றும் என்னை தவிர்ந்த மற்றையவர்கள் சந்திப்பை மாற்றுகருத்தாளர் சங்கமமாக நடத்த வேண்டுமென பிடிவாதமாக இருந்தனர். இதனால், சுமுகமான உடன்பாட்டை எட்ட முடியாமல் போனதுடன், அது பற்றி தொடர்ந்து பேசுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

எந்தெந்த விடயங்களை இலக்கியசந்திப்பில் பேசுவதென்ற உரையாடல் ஆரம்பித்ததும், தேசிய இனப்பிரச்சனை என்ற எனது முதலாவது பரிந்துரையை முன் வைத்தேன். தாஸ் தவிர்ந்த மற்றவர்களிடமிருந்து அதற்கு பலமான எதிர்ப்பு உருவானது. ஒரு நண்பர் கேட்டார், ‘இலங்கையில் இப்ப உங்களிற்கு என்ன பிரச்சனை’ என. இன்னொரு நண்பர் கேட்டார், ‘தேசிய இனப்பிரச்சனை என எதனை சொல்லுகிறீர்கள். நாங்களும் இலங்கையில்தானே இருக்கிறோம். அப்படியொன்றையும் உணரவில்லை’ என.

எமது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கவே, பரிந்துரைகளை எழுத தயாhக இருந்த ஒருவர், தனது கையினால் தேசிய இனப்பிரச்சனை என்ற ஒன்றை எழுதவே மாட்டேன் என வெள்ளைதாளை கீழே வைத்துவிட்டார். இறுதியில், நானே தாளை எடுத்து தேசிய இனப்பிரச்சனையை முதலாவது பரிந்துரையாக எழுத வேண்டியதாயிற்று. இலங்கையில் தேசிய இனப்பிரச்சனை என்ற ஒன்று கிடையவே கிடையாதென தொடர்ந்து வாசுகி பிடிவாதமாக இருந்ததனால், ‘சமூகத்தில் மேல் தட்டில் இருப்பவர்களிற்கும், அரசுடன் இருப்பவர்களிற்கும் அதனை உணர்வதில் சிக்கல்கள் உள்ளன’ என கூற வேண்டியதாயிற்று. அது சற்று தடித்த வார்த்தையாக இருந்த போதும், எல்லைமீறியதாகவோ அவதூறானதாகவோ இல்லையென்பதே எனது உறுதியான எண்ணம்.

இலக்கிய சந்திப்பு அரச ஆதரவாளர்களின் கையில் உள்ளதென நான் சொல்வது, அகப்பட்ட கல்லை எறியும் உத்தியல்ல. உண்மையில் நோயாளர்களை நோயாளர்களெனவும், மருத்துவர்களை மருத்துவர்களெனவும், தேசியவாதிகளை தேசியவாதிகளெனவும், எதிர் தேசியவாதிகளை எதிர் தேசியவாதிகளென்றும் அழைப்பதில் எனக்கு தயக்கங்கள் எதுவும் கிடையாது. அவர்களும் வெட்கப்படவோ பெருமைப்படவோ வேண்டியதில்லை.

அரசஆதரவாளர்கள் என நான் எந்த அடிப்படையில் குறிப்பிட்டேன் என்றால், இப்பொழுது குழுவில் உள்ளவர்களில் பெரும்பகுதியினர் தாங்கள் அரச ஆதரவாளர்கள், அந்த நிலைப்பாட்டிற்கு பாதகமான சந்திப்பை நடத்த மாட்டோம் என்ற வெளிப்படையான நிலைப்பாட்டில் உள்ளவர்கள்தான். மிகுதியானவர்கள், அரச ஆதரவு தமிழ்கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுபவர்கள். இன்றைய திகதியில் குழுவில் அங்கம் வகிப்பவர்கள் அனைவருமே இந்த இரண்டில் ஏதாவதொன்றாகவே உள்ளனர். வரும்தேர்தலில், அரசதரப்பு வேட்பாளரான ஒருவரும் உள்ளார்.

சமயங்களில் சந்திப்பு நடப்பது வாசுகி வீட்டிலா அலரிமாளிகையிலா என்பது மாதிரியான குழப்பங்கள் கூட எனக்கு ஏற்படுவதுண்டு. கதையின் இடையில் ஒருவர் சொல்வார், தான் யாழ் படைகளின் தளபதியை மாதமொருமுறையாவது சந்திப்பதாகவும், கடந்த சந்திப்பில் தளதியிடம் கேட்டு கொண்டதாக, விடயத்தை பெருமை பொங்க சொன்னார். யாழ்ப்பாணத்திலுள்ள படைகளின் எண்ணிக்கையை குறைக்க சொல்லியிருப்பார் என யாரும் நினைத்து விடாதீர்கள். கிராமங்களில் குழு சண்டை நடந்தால், அதில் சம்மந்தப்பட்ட வெள்ளாளர்களிற்கு நல்ல அடி குடுக்குமாறு கேட்டு கொண்டாராம்.இன்னொருவர் வரும் மாகாண சபை தேர்தலிற்காக தங்களிற்கும் அரசுக்குமிடையில் நடக்கும் ‘டீலிங்’ பற்றி பேசுவார்.இன்னொருவர் ஆளுனருடன் தான் எங்கெல்லாம் சுற்றுலா செல்கிறேன் என்பதை சொல்வார்.

இந்த பின்னணியில், நம்மிடம் இரண்டு தெரிவுகள் மட்டுமேயிருந்தன.

1. நாங்கள் தனி குழுவாக கூடி, புதிய நிகழ்ச்சி நிரலொன்றை முன் வைப்பது.

2. ஒதுங்கி செல்வது.

ஆரம்பத்தில் முதலாவதுதான் எமது இலக்காக இருந்தது. அப்படி நடந்திருந்தால், நான் உட்பட நான்கு நண்பர்கள் இந்த அணியில் இரந்திருப்போம். ஆனாலும் அந்த தீர்மானத்தை கைவிட வேண்டியதாயிற்று. காரணம், இரண்டு நண்பர்கள் திடீரென தயங்கினார்கள். அவர்களது தயக்கமும் ஏற்று கொள்ளகூடியதே. அரசுடன் தொடர்புடைய இந்த அணியுடன் முரண்பட்டால் தமக்கு உயிராபத்து கூட ஏற்படாலாம், அதனால் தனிப்பட்ட காரணங்களை காட்டி ஒதுங்கி கொள்வதாக சொன்னார்கள். இது பற்றி சொல்வதற்கு என்னிடம் கருத்துக்களெதுவும் கிடையாது.

இலங்கை சூழலை புரிந்து கொண்டதனால், முதலாவது வழிமுறையை கைவிடுவதென அனைவரும் தீர்மானித்துள்ளோம். அந்த இரண்டு நண்பர்கள் தவிர்ந்த, திசேராவும் நானும் இலக்கிய சந்திப்பு குழாமிலிருந்து விலகுகிறோம் என்ற தீர்மானத்தை பகிரங்கமாக அறிவித்து, ஒதுங்கி கொள்வதென்று எடுக்கப்பட்ட முடிவினடிப்படையில் இந்த குறிப்பை இங்கு பகிர்ந்துள்ளேன்.

(சஞ்சிகையொன்றில் வெளிவரவுள்ள விரிவான குறிப்பொன்றிலிருந்து தேர்ந்தெடுத்த சிறு குறிப்புகள்)

http://yokarnan.com/?p=446

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

யுத்தத்தின் பின்னர், ஆட்சியாளர்கள் கட்டமைக்க முயலும் ‘தேசியத்தை’ ஏற்று கொள்வதும், வலுப்படுத்துவதும் தமது வரலாற்று கடமையென கருதுகிறார்கள். இலங்கையிலுள்ள சிறுபான்மையின தேசியங்களை அவர்கள் நிராகரிக்கிறார்கள். இந்த வகையான கருத்துக்கள் இலக்கிய சந்திப்பில் ஒலிக்க கூடாதென்பது அவர்களின் பிரதான செயற் திட்டமாகவே இருக்கின்றது.
இதற்காக பலர் சிட்னியிலும் செயற்படுகிறார்கள்......இணைப்பிற்க்கு நன்றிகள்
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பதிவுக்கும் தகவலுக்கும் கிருபன்

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

////இதன் அடுத்த கட்டமாக, ‘இலங்கை தேசியத்தை’ முன்னிலைப்படுத்திய பார்வைகளிற்கு இடையூறாக இருந்தவர்களை தவிர்த்துவிட்டு, அரச ஆதரவாளர்கள் மட்டும் கலந்துரையாடல்களை முன்னெடுத்து செல்கிறார்கள்.//

 

\\அன்றைய சந்திப்பில் வாசுகி, வேல்.தஞ்சன், கருணாகரன், இராகவன், தாஸ், நான் ஆகியோர் கலந்து கொண்டோம். தாஸ் மற்றும் என்னை தவிர்ந்த மற்றையவர்கள் சந்திப்பை மாற்றுகருத்தாளர் சங்கமமாக நடத்த வேண்டுமென பிடிவாதமாக இருந்தனர்.\\

 

மேற் குறிப்பிட்ட தகவலின் படி, கர்ணனே , கருணாகரனை சிறிலங்கா அரச ஆதரவாளராக இனம் காட்டி உள்ளார். தனிப்பட்ட நட்பை ஒருவரின் அரசியல் நிலைக்கு அப்பால் நிறுத்துவது, அரசியலா நட்பா என்றால், அந்த நட்பு இன விடுதலைக்கான துரோகத்தை செய்யத் துணிந்த நிலையில் தேவையா என்பதை , திருமதி .சாந்தி அவர்கள் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

 

கருணாகரனின் செயற்பாடுகளை கர்ணனன் நன்கு அறிந்தே இதனை எழுதி இருப்பார் என்று நினைக்கிறேன். 

Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இவர் இன்னமும் உயிரோடு இருக்கிறாரா??

 
 
மாதம் ஒருமுறை என்றாலும் எழும்பி கூவ கூடாதா??
அப்பதானே உலகம் விடியும். இப்படியே இருளுக்குள் எத்தனை நாளிக்குதான் இருக்கிறது??
Link to post
Share on other sites
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றிகள்

Link to post
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.