Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் அகதிகளாக இருக்கும் தமிழர்களை இலங்கை திரும்புமாறு கோரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் அகதிகளாக இருக்கும் தமிழர்களை இலங்கை திரும்புமாறு கோரிக்கை
24 ஜூன் 2013
 
இலங்கையில் நடந்த போர் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த வடக்கு மாகாணத்தின் பொருளாதார நிலைமை, ஸ்தீரமடைந்துள்ளதால், மீண்டும் இலங்கை திரும்புமாறு, இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் அகதிகளாக இருக்கும் தமிழர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மாத்திரமல்லாது, நாட்டின் அனைத்து பிரதேசங்களும் தற்போது துரிதமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.  இதனால் வெளிநாடுகளில் தொடர்ந்தும் அகதிகளாக இருக்கும் தேவையில்லை என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
 
அவுஸ்திரேலியா சென்றுள்ள அமைச்சர், அங்கு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்முகத்தின் போது இதனை கூறியுள்ளதாக இலங்கை வெளிவிகார அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி வேகமானது 22 வீதமாக இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.
 
போர் காலத்தில் நாட்டை விட்டு வெளியேறியவர்களை வரவேற்க இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளது. நாடு திரும்புபவர்கள் தொழில்களில் ஈடுபடவும் சந்தர்ப்பம் வழங்கப்படும். போர் நடைபெற்ற காலத்தில் பல லட்சம் தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

வரவேற்பு எப்படியிருக்கும?

  • கருத்துக்கள உறவுகள்

வரவேற்பு எப்படியிருக்கும?

கண்டிய நடனம் ஓக்கேயா? :D

 

dance2.jpg

முதலில உங்கட ஆட்கள கூப்பிடுங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

சரியா சொன்னீங்கள் அண்ணா.

அவுஸ்திரேலியாவிற்கு தப்பி செல்வோரில் 80% சிங்களவர்.

பீரீசு சும்மா பரப்புரை செய்யுறார்.

 

வணக்கம், படகில் வருபவர்களிலா அல்லது ஸ்கில் மைகிறேசனில் வருபவர்களிலா 80%?

Because over 99.9% of all statistics are made up on the spot, including the statistic that I just made up right now :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா ஆண்டு ஒன்றுக்கு 1500 அகதிகளுக்கென ஒதுக்கீடு செய்துள்ளது 2010 ஆம் ஆண்டில் படகு மூலம் வந்த அகதிகளின் எண்ணிக்கை 6555 இது எல்லா நாடுகளையும் உள்ளடக்கும். அதே ஆண்டில் மாணவர்களாக வந்தவர்களின் எண்ணிக்கை 270499 இதுவும் எல்லா நாடுகளையும் சேர்த்து. 2010 மொத்தமாக 21805பேர் அகதிகள் அந்தஸ்து அவுஸ்திரேலியாவால் வழங்கப்பட்டது ஆக படகில் வந்த அகதிகள் வெறும் 6555 பெரும்பான்மையான அகதிகள் மாணவ விசாவில் வந்தவர்களே. பாவம் ஓரிடம் பழி ஓரிடம்!

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் இயல்புநிலை திரும்பிவிட்டது என்று நம்பும் அகதிகள் கட்டாயம் நாடு திரும்ப வேண்டும்.. அகதியில் அ வெட்டுப்பட்டால் கதி உண்டு என்றுதானே அர்த்தம்.. ? :D

இவ்வாறு இவர்கள் விலகி வழிவிடும்போது உண்மையான அகதிகளுக்கு ஒரு போக்கிடம் கிடைக்கும்..! :unsure:

பய புள்ளைக்குஆசைய  பாரு?  எவ்வளவு புத்திசாலித் தனமா எங்களை அங்கே வரச் சொல்லுறான்  :o 

  • கருத்துக்கள உறவுகள்

உள்நாட்டில் உள்ளவர்களின் வாயை கட்டிப்போட்டாகி விட்டது. ஐ.நா போராட்டமோ, மகிந்த வந்தால் போராட்டமோ எதுவாகினும் புலம்பெயர்ந்தவர்கள் நடாத்துவதால் சிறிலங்காவுக்கு இவர்களை அழைத்து வைக்க வேண்டிய இடத்தில் வைக்கலாம். இதில் டக்ளஸ் போன்றவர்களின் ஆட்கள் தப்பி விடுவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.