Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோழமையுடன் ஒரு குரல் - தமிழ் முஸ்லிம் தேசியமும் உறவுகளும் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  1983ல் நான் எழுதிய முஸ்லிம் மக்களும் தேசிய இனப் பிரச்சினையும் நூல் இந்த தொகுப்பின் தொடக்க கட்டுரையாக  இடம் பெற்றுள்ளது. பின்னர் 1990களில் சரி நிகர் வார இதழில் நான் எழுதிய கட்டுரைகள் இந்த தொகுப்பின் மையமாகியுள்ளது. புதிய நிலவரங்களை உள்வாங்கி அண்மையில் எழுதிய இரண்டு கட்டுரைகள் இந்நூலின் இறுதிப் பகுதியாக இடம் பெற்றுள்ளது. முன்னனி ஆய்வாளர் எம்.பெளசரின் முன்னுரையோடு இந்த நூலை எழுநா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. .

 

    தோழமையுடன் ஒரு குரல்

June 22, 2013 · by ezhuna · in first-announceNon-Fiction

வ.ஐ.ச ஜெயபாலன்

எழுநா வெளியீடு 10

யூன் 2013

இந்த நூல் வெளிவருகின்ற இன்றைய காலகட்டம் ஒட்டுமொத்த இலங்கை மக்களினதும் இனத்தேசிய அரசியலில் பொறுப்புமிகு காலகட்டமாகும். இலங்கை முஸ்லிம்கள் மீதான இன மத அடையாளங்கள் சார்ந்த நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. சிங்கள தேசத்திற்கும் தமிழ் தேசத்திற்குமான யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதும் அவ்வெற்றியின் இனத்துவப் பெருமையும், அரசியல் களிப்பும் அடுத்த கட்டப் பாய்ச்சலாக முஸ்லிம்கள் மேல் திரும்பியுள்ளது.

இந்த இக்கட்டான நிலைமையில் தமிழ் முஸ்லிம் மக்கள் தமக்குள்ளும் தமக்கு வெளியேயும் ஆற்ற வேண்டிய பணிகள் நிறையவே உள்ளன. தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் எழுத்தாளர்களும் சிவில் சமூகமும் இந்த விடயங்களையிட்டு பரந்துபட்ட வகையில் ஆக்கபூர்வமான உரையாடல்களைத் தொடங்குவது அவசியமானதாகும். தமிழ் முஸ்லிம் மக்களை இனவிரோத உணர்ச்சி சார்ந்த அரசியலிலிருந்து வெளியே எடுத்து தேசிய இனங்களின் விடுதலைக்கும் சமத்துவ வாழ்விற்குமான களத்திற்கு இட்டுச்செல்ல வேண்டியுள்ளது. இந்த விடயத்தில் இந்நூல் முக்கியமான பங்களிப்பை வழங்கும் என உணர்கிறேன்
-எம்.பௌசர்

http://www.ezhunamedia.com/?p=84

 

Edited by poet

வாழ்த்துக்கள்.... நல்லதொரு முயற்சி... வரவேற்கப்படவேண்டிய ஒன்று....

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்களுக்கு தேசியம் உண்டென்றால் மலையகத்தமிழருக்கும் ஒரு தேசியம் உண்டு.. இவர்களையும் இணைத்து முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்.. நுவரெலியாவும் தமிழருக்கே.. :icon_idea:

  1983ல் நான் எழுதிய முஸ்லிம் மக்களும் தேசிய இனப் பிரச்சினையும் நூல் இந்த தொகுப்பின் தொடக்க கட்டுரையாக  இடம் பெற்றுள்ளது. பின்னர் 1990களில் சரி நிகர் வார இதழில் நான் எழுதிய கட்டுரைகள் இந்த தொகுப்பின் மையமாகியுள்ளது. புதிய நிலவரங்களை உள்வாங்கி அண்மையில் எழுதிய இரண்டு கட்டுரைகள் இந்நூலின் இறுதிப் பகுதியாக இடம் பெற்றுள்ளது. முன்னனி ஆய்வாளர் எம்.பெளசரின் முன்னுரையோடு இந்த நூலை எழுநா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. .

 

    தோழமையுடன் ஒரு குரல்

June 22, 2013 · by ezhuna · in first-announceNon-Fiction

இந்த நூல் வெளிவருகின்ற இன்றைய காலகட்டம் ஒட்டுமொத்த இலங்கை மக்களினதும் இனத்தேசிய அரசியலில் பொறுப்புமிகு காலகட்டமாகும். இலங்கை முஸ்லிம்கள் மீதான இன மத அடையாளங்கள் சார்ந்த நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. சிங்கள தேசத்திற்கும் தமிழ் தேசத்திற்குமான யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதும் அவ்வெற்றியின் இனத்துவப் பெருமையும், அரசியல் களிப்பும் அடுத்த கட்டப் பாய்ச்சலாக முஸ்லிம்கள் மேல் திரும்பியுள்ளது.

வ.ஐ.ச ஜெயபாலன்

எழுநா வெளியீடு 10

யூன் 2013

இந்த இக்கட்டான நிலைமையில் தமிழ் முஸ்லிம் மக்கள் தமக்குள்ளும் தமக்கு வெளியேயும் ஆற்ற வேண்டிய பணிகள் நிறையவே உள்ளன. தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகளும் எழுத்தாளர்களும் சிவில் சமூகமும் இந்த விடயங்களையிட்டு பரந்துபட்ட வகையில் ஆக்கபூர்வமான உரையாடல்களைத் தொடங்குவது அவசியமானதாகும். தமிழ் முஸ்லிம் மக்களை இனவிரோத உணர்ச்சி சார்ந்த அரசியலிலிருந்து வெளியே எடுத்து தேசிய இனங்களின் விடுதலைக்கும் சமத்துவ வாழ்விற்குமான களத்திற்கு இட்டுச்செல்ல வேண்டியுள்ளது. இந்த விடயத்தில் இந்நூல் முக்கியமான பங்களிப்பை வழங்கும் என உணர்கிறேன்

-எம்.பௌசர்

http://www.ezhunamedia.com/?p=84

 

முஸ்லீம்களின் மீது எதையோ திருப்பப்பட்டிருக்கு என்பது பிரச்சார வசனம். உண்மை ஒன்றும் இல்லாத பொய்.

 

தமிழ் மக்கள் மீது நடந்தது தீரும் சம்பவங்களுடன் முஸ்லீம்கள் மீது நடப்பவை ஒப்புவுவமை இல்லை.

 

சிங்கள மக்களாக(முஸ்லீம் மக்களாக) கடந்த நான்கு வருடங்களுக்குள் மாற்ற பட்ட தமிழ் மக்களின் எண்ணிக்கையை  கண்டு பிடிப்பது கஸ்ட்டம், கடத்தப்பட்ட, வன்புணர்வு செயப்பட்ட, நிலங்கள் பறிக்கப்பட்ட, சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்ட, விமான நிலைத்தில் வைத்துக் கைது செய்யப்பட்ட, வெள்ளை வானால் கடத்தப்பட்டோர் .... தமிழரின் பட்டியல் முடியாதது. இதில் எதுவும் முஸ்லீம் மக்கள் மீது திருப்பப்படவில்லை. போராளி பெண்களுக்கு நடந்த கொடுமைகளில் ஒன்றுதானும் ஒரு முஸ்லீம் ஒரு பெண்ணுக்கு நடந்து என்று இங்கே ஒருவரால் விபரம் தர முடியாது. கைது செய்யப்பட்ட ஒரே ஒரு அரசியல் வாதி அசாத் சாலி உடனேயே விடுதலை செய்யப்பட்டார். ஆனால் கனகரத்தினத்தின் கதை அது அல்ல. புலிகளின் அரசியல் வாதிகளான தயா மாஸ்டர், தமிழினி பொன்றோர் நகைப்பிற்கிடமான பொருள்களாக மாற்றப் பட்டிருக்கிறார்கள்.

 

இலங்கை கொலைக்களத்தில். தோன்றியவர்களுக்கு நடந்து தெரியும். ஆமியில் வலோற்காரமாக எந்த முஸ்லீம் பெண்ணும் சேர்க்கப்படவில்லை.  அதற்கு மொழி பெயர்க்க போன டாக்டரே துன்புறுதப் பட்டார். சிறிதரன், அடைக்கலநாதன்,  சுரேந்திரனின் கதை எந்த முஸ்லீம் பா.உக்கும் நடக்க இல்லை. வடக்கு கிழகில் இந்த நாலு ஆண்டுகளும் கட்டப்பட்ட புத்த கோவில்கள் முஸ்லீம் பகுதிகளில் இலங்கையின் சரித்திர காலம் முழுவதும் கட்டப்படவில்லை.  தம்புலவில் ஒரு பள்ளிவாசல் நீக்க பல ஆண்டுகள் எடுக்கிறது. பாராளுமன்றத்திற்கு பின்னால் இருந்த மாரிஅம்மன் ஒருநாளிள் வெளியேற்றப்பட்டா. தமிழ் ஒட்டுக்குழுக்கள் தமிழரை எது எதுவோ எல்லாம் செய்கிறார்கள். அவர்களின் பதியுதின் செய்வது கூட தமிழர் மீதே தாக்குவது. யாழ்பல்கலைக்கழகத்தில் நடந்தது எந்த முஸ்லீம் பகுதியிலும் நடக்க இல்லை

 

லண்டனின் வைத்தே தமிழ் பெண்களை அடிக்கிறார்கள். பிரான்சில் வைத்து பருதியை கொலை செய்தார்கள். இதுகள் மாதிரி ஒரு முஸ்லீம்மக்களை செய்ய முடியாது.

 

முஸ்லீம்களின் மந்திரிகளின் எண்ணிக்கை பல மடங்காக அண்மையில் கூடியிருக்கு.  முஸ்லீம்களின் பிரதி நிதிக்கட்சியான மு.க அண்மையில் அரசுடன் இணைந்தது, அரசு தமக்கு நன்மை செய்வதாக ஐ.நா, அமெரிக்கா, இந்தோனேசியா ..... எங்கோ எல்லாம் சென்று சொல்லியிருக்கிறார்கள். சவுதி்  அரேபியா தனி முஸ்லீம்  பல்கலைக்கழகம் கட்ட அரசு காணி ஒதுக்கிக்கொடுத்திருக்கு. அது இனிதான் நடக்க போகிறது. ஆனால் வடக்கு கிழகில் 70 பாடசாலைகள் சாராதண படிப்பிற்கே இல்லாமல் போய்விட்டது.  முஸ்லீம் நாடுகள் வேலை வாய்ப்புக்களை கூட்டியிருகின்றன. கழுத்து அறுத்துக்கொல்லபட்ட பெண்ணின் குடுபத்திற்கு அரசு வீடு கட்டிக்கொடுத்தது. போரால் சொத்துப்பத்து அழிந்த மக்களுக்கு என்று ஆரம்பிக்கப் பட்ட இந்திய வீட்டுத்திட்டம் அரச, முஸ்லீம் அழுத்தங்களால் பல முஸ்லிம்களுக்கு கொடுக்கப்படுகிறது. மன்னார், வவுனியா... பல இடங்களில் தமிழ் மக்கள் இழந்த இடங்களில் முஸ்லீம்களுக்கு வீடுகள் கட்டிகொடுத்து முஸ்லீம்கள் குடியேற்றப்பட்டார்கள்.

 

முஸ்லீம் மந்திரிகளில் சிலர் கறக்கக் கிடைத்த மாட்டின் முலையை இறுக்கி இழுத்து மடி கழன்று கையோடு வந்திருக்கு. கடந்த சில வருடங்களாக 70,75 முஸ்லீம் மாணவர்களுக்கு 5,6 சிங்கள மாணவர்கள் நீதித்துறைக்  கல்வியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.  இதனால் மருண்ட போன சிங்கள பிக்குகள் பொதுபல சேனா என்று அமைத்திருக்கிறார்கள். கலால் என்பது அரச ஏற்றுமதியை முன்னேற்ற அண்மையில் கொண்டுவந்த ஒழுங்கு. இப்போது முஸ்லீம் நாடுகளுக்கு ஏற்றுமதியிலும் பார்க்க சீனாவுடதான் வியாபரம் செய்ய இலங்கை விரும்புகிறது. எனவே எதிர்ப்பு அங்கே ஆரம்பமானது.

 

அரசு அவர்கள் மீது எதையோ திருப்பி இருப்பதாகக் கூறுவது சுத்தப்பொய். குறந்த பட்டசம்  கிழக்கில் ஆட்சியை ஏற்க மறுக்கும் மு.க  கூட அதை ஏற்கவில்லை.  கிழக்கில் முஸ்லீம்கள் அரசின் கையிலிருந்து ஆட்சியை தாம் எடுக்க மறுக்கிறார்கள்.  அவர்களின் வாதம் தம்மைத்தாம் ஆழ்வதை விட சிங்கள் அரசு கிழக்கில் தம்மை ஆழும் போது தமக்கு நன்மைகள் அதிகம் என்பதே.

 

பொய்யட்டின்  புத்தகத்தின் "முஸ்லீம் மக்களின் மீது திருப்பப்பட்டிருக்கு" என்ற புழுக்கு பதில் கொடுத்து ஒரு புத்தகம் எழுதலாம். ஆனால் வருமானம் உள்ளவன் மாதிரி எங்களால் செய்ய முடியாது. ஆனால் வெளிநாடுகள் பிளேக் காலத்தில் காடிய அக்கறை இப்போது காட்டுவதில்லை. கக்கீம் அமெரிக்கா, ஐ.நா எங்கும் சென்று பொய்யடின் புத்தகத்திற்கு எதிராக கருத்துக்கள் ஆங்கிலத்தில் வெளியிடும் போது இதன் உண்மையை எல்லோரும் தெரிய வருகிறார்கள்.

 

 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் அவர்களே இதற்கான விவாதம் ஒன்றில் ஈடுபட தயாரா?. உங்கள் கவிதைக்கு தாறுமாறான விளக்கங்கள் பலரால் வைக்கப்பட்டதை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள்.பலரிடம் சந்தேகங்களும் உள்ளன.இவற்றை தெளிவாக்க நீங்கள் ஒரு விவாதத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் உள்ளது.விவாதம் எவ்வாறு தமிழ் முஸ்லிம் மக்கள் தமக்குள்ளும் தமக்கு வெளியேயும் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியதாக இருந்தால் நல்லது.முஸ்லிம் மக்களின் முற்போக்கு சக்திகள் யார்? தமிழ் மக்களின் முற்போக்கு சக்திகள் யார்? எவ்வாறு இணைந்து செயலாற்றுவது போன்ற விடயங்கள் பற்றி ஆராயலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

திருத்தியமை: எழுத்துப்பிழை

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் அவர்களே இதற்கான விவாதம் ஒன்றில் ஈடுபட தயாரா?. உங்கள் கவிதைக்கு தாறுமாறான விளக்கங்கள் பலரால் வைக்கப்பட்டதை நீங்கள் அவதானித்து இருப்பீர்கள்.பலரிடம் சந்தேகங்களும் உள்ளன.இவற்றை தெளிவாக்க நீங்கள் ஒரு விவாதத்தில் ஈடுபட வேண்டிய அவசியம் உள்ளது.விவாதம் எவ்வாறு தமிழ் முஸ்லிம் மக்கள் தமக்குள்ளும் தமக்கு வெளியேயும் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியதாக இருந்தால் நல்லது.முஸ்லிம் மக்களின் முற்போக்கு சக்திகள் யார்? தமிழ் மக்களின் முற்போக்கு சக்திகள் யார்? எவ்வாறு இணைந்து செயலாற்றுவது போன்ற விடயங்கள் பற்றி ஆராயலாம்.

 

முஸ்லிம் மக்களின் முற்போக்குச்சக்தி ?எண்ணி ஒரு நாலு பேரை சொல்லலாம்....ஆனால் தமிழரின் முற்போக்குசக்தி முன்னாள் ஆயுத போராளிகள் பின்னாளில் புலத்தில் இருந்து சிறிலங்கா தேசியத்தை வளர்க்க பாடுபடுபவர்கள்....இலக்கியவாதிகள் ....

 

 

 

 

 

 

 

திருத்தியமை: எழுத்துப்பிழை

Edited by nunavilan

"திருப்பிவிட்ட" என்ற பதம்,கறையான் புற்றேடுத்து முடித்திருப்பதாகவும், தான் நுளைந்துகொள்ள சரியான நேரமாகவும் கணக்கிடும், மிக கவனமாக தெரியப்பட்டு பொய்யட்டும் சகாக்களும் பிரயோசனப்படுத்தும் பதம். மிக மிக நச்சுத்தன்மை வாய்ந்த பதம்.

 

தமிழர்கள், 65 ஆண்டுகால அடக்கு முறையிலிருந்து மீள வழி இல்லாதால் ஆயுதம் தூக்கி போராடினார்கள். இந்த ஆயுதப்போராட்டம் நடந்து கொண்டிருந்த அதே நேரம்தான் முஸ்லீம் பயங்கரவாதிகள் சர்வதேச நாடுகளால் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இந்த இரண்டையும் பிணைத்து சிங்களம் தமிழரை பயங்கரவாதிகளாக காட்ட முயன்ற போது இந்த குழு அதற்கு உதவி செய்து இலங்கையின் முஸ்லீம் பயங்கரவாதிகளை சர்வதேசத்திடமிருந்து காப்பாற்றி, இலங்கையில் முஸ்லீம்கள், தமிழ் பயங்கரவாதிகளாலும், சிங்கள அரசாலும் தாக்கப்படுவதாகக் காட்டினார்கள்.  நான் சில, கடந்தகால நடந்த உண்மைகளை முன்கொண்டுவந்து காட்டி இந்த பொய்யட் போன்ற வகுப்புவாதிகள் தேடித்திரியும் பசிக்கு தீனி போடமல் தவிர்க்கிறேன். இவர் நேராக நெடுக்காலைபோவானின் இனம்(தமிழ் இனம்) அழிய வேண்டும் என்று சபித்து யாழில் மன்னிப்பு கோரிய வகுப்புவாத எழுத்தாளர்.

 

மேலும் இந்த இடத்தில், அவை நிச்சயமாக அநாவசியமானவை ஏன் எனில் நுணாவிலான், இந்த யாபார விளம்பரங்களை மட்டும் இலவச யாழில் கொண்டுவந்து பதிந்துவிட்டு நிறுத்தாமல்,  கௌவரமான விவாதம் ஒன்றுக்கு வரும்படி  பொய்யட்டை அழைத்திருக்கிறார்.  இப்படியான விவாதம் ஒன்றை மனச்சுத்தியுடன் விவாதித்தால் நடந்த பழையவற்றுக்கு இரண்டு பக்கமும், யாழை மையமாகவைத்து, எழுத்து முலம் மன்னிப்புக்கள் கோரி, முன்னால் போக பாதை வகுக்கலாம்.

 

அந்த அழைப்பை பொய்யட் ஏற்றால் அவர் தனது புத்தகத்தில் நேர்மையாக உழைத்திருக்கிறார் என்பது பொருள். இல்லையேல், அவரின் நோக்கம், தமிழ் மக்கள் மிக மிக இக்கட்டான நிலைமையில் இருக்கும் போது, அந்த நிலையின் உண்மையை வேறு எங்கோ கொண்டுபோய்க் காட்டி, கறையான் புற்றெடுக்க பாம்பு குடி கொண்டது போல, இவ்வளவு காலமும் தமிழ் மக்கள் பட்ட கஸ்டத்தில் வேறு சிலரை  ஆதாயப்பட வைத்து, ஒரு இனத்தை அழித்து ஒரு புத்தகம் விற்கும் கைங்கரியத்தில் இறங்கியிருப்பதாக கணக்கெடுக்கப்படும்.

 

எனவே இனறுவரை அவர்கள் செய்துவந்த அதே உதாரணத்தை நானும் பயன்படுத்தாமல், அதாவது ஒரு சிறு பான்மை இனத்தை அழிப்பது இன்னொன்றுக்கு ஆதாயம் என்ற பொய்யட் போன்றவர்களின் சதிவலைக்குள் சிக்காமல், நான் அந்த நிகழ்சிகளை சொல்வதை இங்கே தவிர்க்கிறேன். மேலும் சாதிய சண்டைகளை கிழறிவிட பல அதிகாரிகளையும், எழுத்தாளர்களையும் இலங்கை அரசு நியமித்து அவர் full swing கில் செயல்ப்பட்டுகொண்டிருக்கும் போது, தமிழரை சீண்டி, இனவிரோத கருத்துக்களை முன் வைக்க அரசு எற்படுத்தியிருக்கும் இந்த குழுக்களுக்கு இரையாகமல் இருப்பதும் முக்கியம்.

 

புதிய தலைமுறை TV யில் பொய்யட் தோன்றி 13ம் திருத்தத்தை இலங்கைக்கு தீர்வாக இந்தியா செயல்படுத்த வேண்டும் என்று கேட்ட காலத்தில், 13இன் இன்றைய வலிமையற்ற நொய்த நிலைமையை பல தமிழர் சுட்டிக்காட்டி, அதை இந்தியாவிடம் மறுத்துவந்த காலம். தமிழக மாணவர்கள், ஐ.நா பிரேரணை கூட வேண்டாம், இந்தியா தமிழரின் பிரிந்து போகும் உரிமையை வெளிப்படையாக அங்கீகரிக்க வேண்டு என்று கேட்டு, பள்ளிகள் போகாமல் சிறைகள் போய்க்கொண்டுகொண்டிருந்த காலம்.(அதை குழப்பத்தான் பொய்யட் TVயில் தோன்றி 13ம் திருத்தம் கேட்டார்)  தமிழ் அறிஞர்களின், அரசியல்வாதிகளின், பொது மக்களின் வாதம், இன்று 13ம் திருத்தம் மந்திரிகள் சபையில் சந்திக்கும் அடி உதை, கொல்லு, வெட்டு, கொலைகளை அது சந்திப்பது வெறும் காலத்தின் தெரிவே அல்லாமல் 13ம் திருத்தம் அதன் அழிவை காப்பாறும் வலிமை இல்லாது என்பதுதான். அதாவது வாழைத் தண்டைத் தூக்கி கொண்டு வாள் சமருக்கு போவது பொன்றது, 13ம் திருத்தத்துடன் சிங்களவெறியர்களின் இன அழிப்பை சமாளிக்க முயல்வது. அந்த சதியை(13ம் திருத்தம்), ரஜிவ் வரைந்த போது புலிகள் அதில் பங்கும் இல்லை; அவர்கள் இருந்த காலத்தில் அதை அவர்கள் மீது திணிக்கவும் முடியவில்லை. இன்று அது அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அது என்றுமே, எந்த இடத்து தீர்வுக்காக கொண்டுவரப்பட்டதோ அங்கு அரசால் பயன் படுத்த மறுக்கப்பட்டுவிட்டது. அதன் உபயோகம், இது வரை, அரச அடி வருடிகளுக்கு, காரும், தனிவீடும், அலுவலகமும் கொடுப்பத்தற்கான ஒரு சட்டமாக தெற்கில் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதை அழித்து அந்த உத்தியோகங்களை அரச அடிவருடிகளுக்கு,  செனட் என்ற பெயரில் கொடுக்கவும் அரசு சதி செய்து வந்தது. 

 

இன்று 13ம் திருத்தம் முடிவுக்கு வருகிறது. ஆனால் அன்று அதை தட்டிக்கழித்துவிட்ட கூட்டமைப்பும், மற்றும் பலரும் அதை காப்பாற்ற பார்க்கிறார்கள். அவர்களின் அதற்கான காரணம் இன்று வேறு. அரசு சர்வதேசத்திடம், தனது தமிழரின் ஆயுதப் புரட்சியை நீக்க உதவினால் தான் 13+ கொடுக்க முடியும் என்று பொய் வாக்குறுதி கொடுத்ததின் நோக்கம் இதுதான். 13ம் திருத்தத்தையே காலம் பார்த்து நீக்கிவிடமுடியுமென்பதே.  சிங்கள அரசுகள் எல்லாமே பதவிக்கு வருவது இனத்துவேசத்தை கக்கியே. அதையேதான் மகிந்தா அரசும் செய்து பதவிக்கு வந்தது. ஆனால், தான் தமிழருக்கு, 13+, செனட் சபை என்றேல்லாம் தீர்வுகள் தரப்போவதாக மேற்குநாடுகளை ஏமாற்றி போரை வென்றபின்னர், 13ம் திருத்தை சிங்கள் மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று கூறி நீக்குகிறது.

 

மேற்கு நாடுகள், போருக்கு உதவி, தமிழரின் சுதந்திரத்தை நசுக்கி, தமிழரை இன்னொருதடவை சிங்கள ஆக்கிரமிப்பாளரிடம் அடி பணிய வைக்க முதல்,  எந்த நேரத்தில் தன்னும் தமிழருக்கு தீர்வுகள் கொடுப்பதை சிங்கள மக்கள் ஏற்பார்களா என்பதை அரசிடம் கேட்டறியவில்லைப் போலிருக்கு. இதனால் இன்று மகிந்த மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் 13ம் திருத்தமளவான மாகாணசபைத் தீர்வை சிங்கள மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று கூறி நீக்குகிறது. இந்த நேரம், அதாவது புதிய தலைமுறை, ஜெயா TV, கலைஞர் TV எல்லாவற்றிலும் தோன்றி 13ம் திருத்தம் நீக்கம் பற்றி எதிர்ப்புக்காட்ட வேண்டிய நேரத்தில் பொய்யட் தனது 1983ம் ஆண்டைய புத்தகத்துக்கான வியாபார விளம்பரங்களில் இறங்கி,  நொய்து போயிருக்கும் தமிழ்- முஸ்லீம் உறவுகளை வலித்து, தனக்கு தனிப்பட்ட ஆதயம் தேடுவ்து போல் நடந்து கொள்கிறார்.

 

பொய்யட் நுணாவிலானின் கருத்தை வாசிக்கவில்லை மாதிரி நடித்தாலோ, அல்லது பதில் அளிக்க தவிர்த்தாலோ, அவரின் கருத்தை முக நூலுக்கு எடுத்து சென்று அங்குதன்னும் பொய்யட்டை ஒரு ஆக்க பூரவமான விவாதத்திற்கு வரும்படி அழைக்கலாம். 

Edited by மல்லையூரான்

Sri Lanka Muslim party will not quit the government over PSC
Fri, Jun 28, 2013, 05:02 pm SL Time, ColomboPage News Desk, Sri Lanka. SLMC.jpg

June 28, Colombo: Ally of Sri Lanka's governing party, the Sri Lanka Muslim Congress (SLMC) says it would not leave the alliance government.

SLMC Secretary M.T. Hassan Ali told the media that the party did not have any intention of leaving the government although members of the party were not nominated by the government to the parliamentary select committee (PSC) to discuss constitutional amendments.

He noted that it was up to the President and government to sack the SLMC members from the Alliance government.

According to Ali, the SLMC has openly expressed its displeasure for not including any SLMC members in the PSC.

He also added that the party did not pursue the government to receive nominations to the PSC.

Speaker Chamal Rajapaksa appointed 19 members from the ruling United People's freedom Alliance (UPFA) and asked the opposition political parties to name their representatives.

The major opposition parties United National Party, Marxist Janatha Vimukthi Peramuna and Tamil National Alliance have said that they will not appoint any members to the PSC.

 

http://www.colombopage.com/archive_13A/Jun28_1372419159JR.php

 

இந்தக் கட்சி மானமில்லா ஒட்டுண்ணிங்க மாறி முஸ்லீம்களின் மட்டுமல்ல, இலங்கையின் மனித ஜீவங்களின் கௌரவத்தையே சந்தியில் இழுதுவருகிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மீராபாரதி இசைக்கலைஞன் புத்தன்.

 

விழுந்து கிடக்கும் எங்கள் மக்கள் எவ்விதத்திலாவது மீண்டெழ வேண்டுமென்பதில் உங்களுக்குள்ள அதே அக்கறைதான் என்னையும் வழி நடத்துகிறது.  2006ல் இருந்து விடுதலைப் புலிகளுக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையில் உறவை ஏற்படுத்த ஒவொரு கோடைகாலத்திலும் உயிரைப் பணயம் வைத்து வடகிழக்கு மாகானங்களுக்குச் சென்று வேலை செய்திருக்கிறேன்.

 

தமிழ் முஸ்லிம் மக்களது பின்னிப் பிணைந்த சமூக இயல் இராணுவ புவியியல் அரசியல் என்பவற்றை ஆராய்ந்து அறிந்த யாரும் யதார்த்த நிலையில் இருந்துதான் நம் மக்களின் மீட்ச்சிக்கு வேண்டிய பணிகளை செய்ய விரும்பும்யாரும் என் பணிகளை எதிர்க்க மாட்டார்கள். நான் எனக்குத் தெரியாத அர்ப்பணிப்புகளுக்கூடாக ஆய்ந்து அறிந்துகொள்ளாத விடயங்கள் பற்றி எப்பவும் பேசுவதில்லை. வெருமையில் இருந்து விவாதம் வளக்கிறவர்கலைப் பெரும்பாலும் பொருட்ப்படுத்துவதுமில்லை. 

 

 1996 - 2006 காலக் கட்டங்களில் உயிர் ஆபத்துக்களுக்கு மத்தியில்  ஒவொரு வருமும் வன்னிக்கும் படுவாகரைக்கும் முஸ்லிம் பிரதேசங்கலுக்குமிடையில் சமாதான தூதுவனாக அலைந்திருக்கிறேன். அப்போதெல்லாம் என் உயிரைக் காப்பாற்றியது விடுதலைப் புலிகளும் முஸ்லிம் தலைமையும்தான். இதற்க்குமேல் நான் என்னத்தை சொல்ல.

 

1983ல் நான் எழுதிய முஸ்லிம் மக்கலும் தேசிய இனப் பிரச்சினையும் புத்தகத்தை அதிகம் கொள்வனவு செய்தவர்கள் விடுதலைப் புலிகள்தான். அது அவர்களது reference புத்தகமாக இருந்தது. இதற்க்குமேல் நான் என்னத்தைச் சொல்ல.                                                                                                                                                                                                                                                                           

 

யாழ்ப்பாணத்துக்கு வெளியில் எதுவும் தெரியாதவர்களது பேச்சுக்கும் ஈழத்தில் வாழும் மக்களின் கையறு நிலைபற்றி எந்த அறிவும் அனுதாபமும் இன்றி வாய்வீரம் பேசுகிறவர்களது பேச்சுக்கும்  நான் என்ன பதில் சொல்ல? ஈழத்துக்குப்போய் போராடவேண்டாம் என்று அவர்களிடம் யாரும் சொல்லவில்லையே.

 

முழு ஈழம் பற்றிய சமூக பொருளாதார புவியியல் அரசியல் அறிவுள்ளவர்கள், அங்கு தமிழ் மக்களின் இடுக்கண்களைக் கழைய யாருடன் சமரசமாக வேண்டும் யாரைத் தனிமைப் படுத்த வேண்டும் என்கிற அடிப்படை அரசியல் அறிவுஉள்ளவர்கள் எப்பவும் என் பக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே நான் யாழிலும் எழுதுகிறேன்.

 

கவிதையென்ராலும் அரசியல் என்ராலும் வான்கோழிகளின் ஆட்டம் வேறு மயில்களின் ஆட்டம் வேறு..

 

மோகனுக்கு என்மீது ஏதும் misunderstanding உள்ளது போலும். விவாதப் பொருளுக்கு சம்பந்தமில்லாத வகையில்  யாழ் விதிகளை மீறி cyber crime மட்டத்தில்  சிலகோழைகள் முகமூடிபோட்டுக்கொண்டு  என்னை கேவலப்படுத்த அவர் தொடர்ந்தும் அனுமதிக்கிறார்.

 

நன்றி நுணாவிலான். வாதாட அழைக்கிறீர். கோழைகளுடன் நான் வாதாடுவதில்லை.  வான்கோழிகளிடம் முகமூடியைக் களற்றி சொந்த பெயரில் வரச் சொல்லுங்கள் சொல்லுங்கள்  கவிதையோ அரசியலோ ஆடிப் பார்த்துவிடலாம்.

Edited by poet

நன்றி மீராபாரதி இசைக்கலைஞன் புத்தன். விழுந்து கிடக்கும் எங்கள் எவிததிலாவது மக்கள் மீண்டெழ வேண்டுமென்பதில் உள்ள அக்கறைதான் என்னையும் வழி நடத்துகிறது.2006ல் இருந்து விடுதலைப் புலிகளுக்கும் முஸ்லிம் மக்களுக்குமிடையில் உறவை ஏற்படுத்த உயிரைப் பணயம் வைத்து வேலை செய்திருக்கிறேன். தமிழ் முஸ்லிம் மக்களது சமூக இயல் இராணுவ புவியியல் அரசியல் என்பவற்றை ஆராய்ந்து அறிந்த யதார்த்த நிலையில் இருந்துதான் நம் மக்களின் மீட்ச்சிக்கு வேண்டிய பணிகளை நான் செய்கிறேன். 1996 - 2006 காலக் கட்டங்களில் ஒவொரு வருமும் வன்னிக்கும் படுவாகரைக்கும் முஸ்லிம் பிரதேசங்கலுக்குமிடையில் சமாதான தூதுவனாக அலைந்திருக்கிறேன். 1983ல் நான் எழுதிய முஸ்லிம் மக்கலும் தேசிய இனப் பிரச்சினையும் புத்தகத்தை அதிகம் கொள்வனவு செய்தவர்கள் விடுதலைப் புலிகள்தான். அது அவர்களது reference புத்தகமாக இருந்தது.                                                                                                                                                                                                                                                                            

 

யாழ்ப்பாணத்துக்கு வெலியில் எதுவும் தெரியாதவர்களது பேச்சுக்கும் ஈழத்தில் வாழும் மக்களின் கையறு நிலைபற்றி எந்த அறிவும் அனுதாபமும் இன்றி சிலர்பேசும் வீராப்புகளுக்கும்  நான் என்ன பதில் சொல்ல? அவர்கள் ஈழத்துக்குப்போய் போராடவேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை.

 

முழு ஈழம் பற்றிய அறிவுள்ளவர்கள், அங்கு தமிழ் மக்களின் இடுக்கண்களைக் கழைய யாருடன் சமரசமாக வேண்டும் யாரைத் தனிமைப் படுத்த வேண்டும் என்கிற அடிப்படை அரசியல் அறிவுஉள்லவர்கள் எப்பவும் என் பக்கத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்காகவே நான் யாழிலும் எழுதுகிறேன்.

 

வான்கோழிகலின் ஆட்டம் வேறு மயில்களின் ஆட்டம் வேறு..

 

மோகனுக்கு என்மீது சில misunderstanding உள்ளது போலும். விவாதப் பொருளுக்கு சம்பந்தமில்லாத வகையில்  யாழ் விதிகளை மீறி cyber crime மட்டத்தில்  சிலகோழைகள் முகமூடிபோட்டுக்கொண்டு  என்னை கேவலப்படுத்த அவர் தொடர்ந்தும் அனுமதிக்கிறார்.

 

நன்றி நுணாவிலான். வாதாட அழைக்கிறீர். கோழைகளுடன் நான் வாதாடுவதில்லை.  வான்கோழிகளிடம் முகமூடியைக் களற்றி சொந்த பெயரில் வரச் சொல்லுங்கள் சொல்லுங்கள்  ஆடிப் பார்த்துவிடலாம்.

 

 

இந்தக் காதல் பாட்டு யாருக்காவது நினைவுக்கு வருகிறதா? காதலில் ஊடல்கொண்ட ஆணும் பெணும் தங்கள் பிள்ளையை தூதுவிடுவதாக உருவகப்படுத்தி கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் இது. இந்த ஊடல் தூதுதான் நம்ம மயில் கவி பொய்யட், வான் கோழி கவிஞனாகிய  எனக்கு நுணாவிலானை தூதுவிடும் பாணி. இது அவரின் மனதில் தவழும் கற்பனை உருவகம் மட்டுமே.

 

ஏன் என்ன நடந்தது என்றா கேட்கிறீர்கள்? நுணாவிலான் அவரை சிறுபான்மைச்  சமூக நலன் சம்பந்தமாக ஒரு நிதானமான கருத்தியல் உரையாடலுக்கு அழைத்தார்.  அவருக்குதான் திருவிளையாடல் நாகேஸ் மாதிரி ஒருபக்கம் மட்டும்தானே முடியும். அவர் அதை தவிர்க்க, என்னையாம் விவாததிற்கு அழைக்கிறார். அதுதான் அவர் விடும் தூது.

 

நான் பலதடவை கேள்விகள் கேட்க அவர் செய்தது பதிலுக்கு நிர்வாகத்தை அழைத்து குழப்பியடித்துக்கொண்டு ஓடியது மட்டும்தான்.  அதே தந்திரத்தை மயில் கவிஞர் பொய்யட் இந்த தனது புதிய காவியமான "நுணாவிடும் தூதிலும்" காட்டி  கொண்டுதான் வந்து இறங்குகிறார்.  இறங்க முதலே மனமோகனா, வள்ளிமணாளா, முருகா  நான் மயூறக் கவிஞன் என்னை நீ காப்பற்றுகிறாய் இல்லையே என்று மோகனை அழைத்து அவலக்குரல் விட்டுக்கொண்டுதான் வந்து இறங்குகிறார். 

 

விவாதத்திற்கு அழைக்கும் மயூரக் கவிஞர் பொய்யட் அவர்கள், நான் ஏற்கவே எழுப்பியிருக்கும் கேள்வியான "தமிழ் மக்களில் இருந்து முஸ்லீம் மக்களின் மீது இனப்பெருமையும்,  வெற்றிக் களிப்பு திருப்பப்பட்டுள்ளது"  என்ற கருத்துக்கு கேட்டிருந்த விளக்கத்துக்கு பதில் அளித்திருந்திருக்கலாம். அந்த முகவுரை சரியாக இருக்க முடியாது என்று சந்தேகம் எழுப்பியிருந்தேன். தமிழ் மக்கள் மீது நடந்தது இன அழிப்பு. இனப்பெருமை அல்ல. அப்படி ஒரு இன அழிப்பும் முஸ்லீம்கள் மீது திருப்பப்படவில்லை. அதை மூடி மறைக்கிறது முஸ்லீம் மக்களின் மீது இனப்பெருமை திருப்பப்பட்டிருக்கு என்ற  சொல் தொடர் என்று எதிர்ப்புக் காடியிருந்தேன். அவற்றுக்கு பதில் அழித்துகொண்டு என்னை விவாத்திற்கு அழைத்திருந்தால் ஆக்க பூர்வமாக கருதாட்டல்களுக்கு அழைக்கிறார் என்பது பொருள். ஆனால் எனது கேள்விகளுக்கு அவரின் பதில் "கோழைகளுடன் நான் வாதாடுவதில்லை.  வான்கோழிகளிடம் முகமூடியைக் களற்றி சொந்த பெயரில் வரச் சொல்லுங்கள் சொல்லுங்கள்  ஆடிப் பார்த்துவிடலாம்."  என்கிறார்.

 

அதாவது நான் கோழையாம். அதனால் வான் கோழி முக மூடி அணிந்திருக்கிறேனாம். தான் வீரனாம். அதானல் தான் மயூரமாம். இருந்தாலும் எனது கேள்விக்கு தனது சிந்தனையில் பதில் தோன்றுவதானால் எனது வான் கோழி முகமூடியை கழற்ற வேண்டுமாம். என்ன சொதப்பல் ஐயா இது. இவ்வளவு  சொதப்பலையும், தனிமனித தாக்குதலையும் சிந்தித்து என்னை தாக்குவதிலும் பார்க்க இரண்டு வரியில் " தமிழ் மக்களில் இருந்து முஸ்லீம் மக்களின் மீது இனப்பெருமையும்  வெற்றிக் களிப்பும் திருப்பப்பட்டுள்ளது"  என்பது சரியா பிழையா என்று எழுதி தள்ளிவிட்டிருக்க முடியாதா?.

உண்மையாக வே பதில் தெரிந்த ஒருவன், எனது உண்மை பெயர் தெரிந்தால் தான் பதில் சொல்வானா.  அதுதான் கருத்துகளங்களில் எங்கும் கடைப்பிடிக்கும் விதியா?  சைபர் கிறைம் பற்றி பாடம் எடுக்கிறார். குறைந்த பட்சம் இவர் விற்க போகும் இந்த புத்தகத்தை வாங்குபவர் தனது பெயரும் விலாசமும் இவரிடம் கொடுத்தால் மட்டும்தான் வாங்க முடியுமா? அப்படி இல்லையாயின் இந்த புத்தகத்தில் இவர் சில மானசீக கேள்விகளுக்கு விடை அளிக்காமலா புத்தகம் என்று ஒன்று எழுதி விற்கிறார்? மனச்சாட்சியான கேள்வி ஒன்று ஒருவர் மனதில் தோன்றியிருக்கு என்பது தெரிந்த பின்னர் எதற்காக வான்கோழி, தீங்கோழிக் கதைகள் எல்லாம் கதைகிறார்? அப்போ ஏன் பதில் அளிக்க மறுக்கிறார். பதில் அளிக்க விருப்பமில்லையாயின் ஏன் விவாதுக்கு அழைக்கிறார்?

 

நிர்வாகத்தை துணைக்கு அழைத்து வைத்துக்கொண்டு சவால் விட்டாலும், போனால் போகுது எதற்கும் எச்சரிக்கை புள்ளிகள் தானே முதல் வரும். யானை பின்னால்தானே வரும். கேள்விகளை நான் கேட்கவா அல்லது பொய்யட் ஐயா நீங்கள் கேட்கிறிர்களா?

Edited by மல்லையூரான்

இந்த புத்தகதை மீள பிரசுரம் செய்ய பொய்யட் சில மாதங்களுக்கு முன்னர் இந்த புத்தகத்தின் பிரதிகளை யாழில் வந்து தேடியவர். அவருக்கே யாரிடம் அந்த புத்தகம் இருக்கு என்று தெரியாது. இப்போது தனது புத்தகத்தை வாங்கியவர்கள் எல்லோரும் புலிகள் என்று கதை விடுகிறார். யார் வாங்கியவர்கள் என்று தெரிந்த பின்னர் அவர்களுடன் தொடர்பு கொண்டு ஒரு பிரதி திரும்ப பெற்றுக்கொள்ள முடியவில்லை? உண்மை என்பதற்கும் இவர்களுக்கும் வெகு தூரம்?

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த புத்தகதை மீள பிரசுரம் செய்ய பொய்யட் சில மாதங்களுக்கு முன்னர் இந்த புத்தகத்தின் பிரதிகளை யாழில் வந்து தேடியவர்

 

மற்றவர்கள் அது பற்றிய அறிதல் இல்லாதிருக்கிறார்கள் என்பதற்காக நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது மல்லையூரான். முதலில் தேடலும் வாசிப்பும் கொள்ளுங்கள். ஜெயபாலன் குறிப்பிட்ட முதற்கட்டுரை 1983 இல் வெளியாகியது. அது நுாலகம் படிப்பகம் போன்ற தளங்களில் பொதுப்பார்வைக்கே உள்ளது. மிகுதிக்கட்டுரைகள் சரிநிகரில் உள்ளன. அவையும் இணையத்தில் பொதுப்பாவனைக்கு உள்ளன. 83ம் ஆண்டு வெளியான கட்டுரை நுால் அப்போதையை விடுதலை இயக்கங்களால் பெற்று வாசிக்கப்பட்டது உண்மையே. தயவு செய்து சற்று வளருங்கள். ஆகக்குறைந்தது வளர முயற்சியாவது செய்யுங்கள்.

ஒருநுாலுக்கு அணிந்துரை எழுதியவரின் கருத்து நுாலாளரின் கருத்து அல்ல என்ற அடிப்படையை விளங்குவதற்கு நீங்கள் புத்தகங்கள் வாசிப்புத் தொடர்பாக சற்று அனுபவம் பெற வேண்டும். கருத்துக்களம் ஒரு நல்ல தளம்தான். ஆனால் அதற்கும் அப்பாலும் நிறைய உண்டு. ஆகக்குறைந்தது இந்தப்புத்தகத்தில் என்ன உள்ளது என்பதைத்தெரிந்த பிறகாவது நீங்கள் பேசியிருக்கலாம்.

முஸ்லீம்கள் மீது திருப்பப்பட்டுள்ளது என்பதில் பிழையொன்றும் இல்லை. இன்னும் 30 வ ருடத்தில் எவ்வாறான விளைவுகளை முஸ்லீம்கள் எதிர்கொள்ளப்போகிறார்கள்.. அல்லது அதைத்தவிர்க்க முஸ்லீம்கள் என்ன செய்வார்கள்.. எதிர்த்து நிற்பார்களா அல்லது இணங்கித்தவிர்த்துக் கொள்வாரா என்பதெல்லாம் காலம் சொல்ல வேண்டிய பதில்கள். ஆனால் சிங்கள பேரினவாதம் முஸ்லீம் சிறுபான்மையிடத்து தனது மேலாதிக்கத்தைக்காட்டப்புறப்பட்டாயிற்று என்பது உண்மைதான்.

உங்களிடம் கேட்பது ஒன்றுதான்.

இனியாவது........

Edited by காவடி

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை, உங்கள் ஆக்கபூர்வமான கேள்விகளை பட்டியலிடுங்கள்.விடைகளை கவிஞரிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

மற்றவர்கள் அது பற்றிய அறிதல் இல்லாதிருக்கிறார்கள் என்பதற்காக நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது மல்லையூரான். முதலில் தேடலும் வாசிப்பும் கொள்ளுங்கள். ஜெயபாலன் குறிப்பிட்ட முதற்கட்டுரை 1983 இல் வெளியாகியது. அது நுாலகம் படிப்பகம் போன்ற தளங்களில் பொதுப்பார்வைக்கே உள்ளது. மிகுதிக்கட்டுரைகள் சரிநிகரில் உள்ளன. அவையும் இணையத்தில் பொதுப்பாவனைக்கு உள்ளன. 83ம் ஆண்டு வெளியான கட்டுரை நுால் அப்போதையை விடுதலை இயக்கங்களால் பெற்று வாசிக்கப்பட்டது உண்மையே. தயவு செய்து சற்று வளருங்கள். ஆகக்குறைந்தது வளர முயற்சியாவது செய்யுங்கள்.

 

பொய்யட் எழுதியதை நீங்கள் வாசியுங்கள்.

 

ஒருநுாலுக்கு அணிந்துரை எழுதியவரின் கருத்து நுாலாளரின் கருத்து அல்ல என்ற அடிப்படையை விளங்குவதற்கு நீங்கள் புத்தகங்கள் வாசிப்புத் தொடர்பாக சற்று அனுபவம் பெற வேண்டும். கருத்துக்களம் ஒரு நல்ல தளம்தான். ஆனால் அதற்கும் அப்பாலும் நிறைய உண்டு. ஆகக்குறைந்தது இந்தப்புத்தகத்தில் என்ன உள்ளது என்பதைத்தெரிந்த பிறகாவது நீங்கள் பேசியிருக்கலாம்.

- உங்கள் கருத்துடன் ஒத்துவராத அணிந்துரையை நூலில் போட்டுத்தான் ஆக வேண்டுமா?.

 

எனது கருத்தை முதலில் படியுங்கள். கறையான் புத்தெடுக்க 1983 கதைகளில் இறங்க வேண்டாம் என்றுதான் சொன்னேன். அணிந்துரையை பற்றித்தான் சொன்னேன். பொய்யட் என்ன பேசுகிறார் என்பதையும் 1983ம் ஆண்டு கட்டுரைகளையும் ஏன் அவர் இங்கே இழுத்து தமிழ் - முஸ்லீம் ஒற்றுமை பேசுகிறார் என்பதை அவர் தீர்வுமாதிரி தோற்றமளித்த 13ம் திருத்ததை ஏன் இலங்கை மீது திணிக்க இந்தியாவை அழைத்தார் என்பதை புரிந்து கொண்டால் உங்களுக்கு புரியும்.

முஸ்லீம்கள் மீது திருப்பப்பட்டுள்ளது என்பதில் பிழையொன்றும் இல்லை. இன்னும் 30 வ ருடத்தில் எவ்வாறான விளைவுகளை முஸ்லீம்கள் எதிர்கொள்ளப்போகிறார்கள்.. அல்லது அதைத்தவிர்க்க முஸ்லீம்கள் என்ன செய்வார்கள்.. எதிர்த்து நிற்பார்களா அல்லது இணங்கித்தவிர்த்துக் கொள்வாரா என்பதெல்லாம் காலம் சொல்ல வேண்டிய பதில்கள். ஆனால் சிங்கள பேரினவாதம் முஸ்லீம் சிறுபான்மையிடத்து தனது மேலாதிக்கத்தைக்காட்டப்புறப்பட்டாயிற்று என்பது உண்மைதான்.

 

நிச்சயமாகப் பிழை.

 

முஸ்லீம்கள் இரண்டு சிறுபான்மை இனமும் இன்னமும் தாக்கப்படுகிறார்கள் என்றதை ஏற்றுக்கொண்டால், பதியுதின் வன்னியில், மன்னாரில் தமிழ்மக்களை நிம்மதியாக வாழவிட்டால், சேர்ந்து போராடுவோம்.  கக்கீம் ஆங்கிலத்தில் ஜெனிவாவில் ஒன்றும், சிங்களத்தில் ஜனாதிபதியே கடவுள் என்றும் , தமிழில் தமிழ் மக்களுக்கு இப்போ பிரச்சனை இல்லை, எல்லாம் முஸ்லீம் மக்கள் மீது திருப்பப்பட்டுவிட்டது,  முஸ்லிம் மக்களுக்குத்தான் இப்போது பிரச்சனை என்று இந்திய உதவிகளைக் கூட தட்டிபறிக்க முனைந்தால். பதில்கள் வரத்தவறாது.

 

இந்த புதிய "திருப்பப்பட்டுவிட்டது" என்ற கருத்துக்கு நாங்கள் எதிர்க் கருத்து எழுதியே திருவோம். முஸ்லீம்கள் தமக்கு இருக்கும் பிரச்சனையை இணக்க அரசிலால் தீர்க்க என்று போனவர்கள். பதியுதின் முகமெட் தரப்படுத்தலை கொண்டுவரும் போது முஸ்லீம் மக்களின் பிரதி நிதியாகக் கூட அவர் இருக்கவில்லை. சிறிமாவின் தனிப்பட்ட சேவண்டி. இப்படித்தான் இனங்களை எப்படி சட்டம் மூலம் அழிக்கலாம் என்று நஜிப் மஜீத்தை பதவிக்கு கொண்டு வர கக்கீம் உதவியவர். இணக்க அரசியல் தோல்வி என்று 1948ல் SJV கை விட்ட முறை. அவர்கள் SJV யிடம் நாங்கள் அரசியல் படிக்க முடியாது என்று மறுத்தவர்கள்.

உங்களிடம் கேட்பது ஒன்றுதான்.

இனியாவது........

 

இனியாவது ? என்னது அது?  முடிக்கவில்லையே. இனியாவது கக்கீம் கிழக்கு மாகண முதல் அமைச்சர் பதவியை தனது கட்சிக்கு ஏற்றுக்கொள்ள வேண்டுமா? 

கொஞ்சம் தமிழ் படியுங்கள். பிறகு, வாசித்தல் தேடல்....அப்புறம் பேசுவோம்.

சொல்களைக் கருத்துக்களத்தில் பாவிக்கும் போது பொருள் இருக்க வேண்டும்.

 

நவகால இனப்பிரச்சனை ஆரம்பித்தது 1915 ன் சிங்கள- முஸ்லீம் சண்டைகளில். அதில் எதை இன்று நீங்கள் வளைத்து திருப்புகிறீர்கள். அந்த முஸ்லீம் தலைமை முட்டள்களை SJV எத்தனையோ முறை அணைத்து பார்த்தும், இன்னொருதடவை சிங்களம் தங்களை அடிக்காது என்று அந்த நேரம் UNPயை வால் பிடித்தார்களே? இப்போது என்னத்தை யார் திருப்புகிறார்கள். அடி விழத்தொடங்க கதையை திருப்பி ஆகுமா?.  இவர்கள் மனம் திரும்பி தமிழ் மக்களுடன் சேர்த்தயாரா? பொய்யட் முஸ்லீம்களுக்குக்கும் ஒரு புத்தகம் எழுதுவாரா?

 

நுணிப்புல் மேயாமல் இனங்களின் அடிப்படைகளை ஆராய்ந்து போதியுங்கள். கிழக்கு மாகாணம் இரண்டு இனங்களுக்குமே இல்லாமல் போனது முஸ்லீம் தலைமைகளால். பிள்ளையானும் முதலமைச்சராக இருந்தான். நஜீப் மயித்தும் இருந்தார். இரண்டிலும் வித்தியாசம் இருக்கு. அவன் தனிய அடிமையாக மட்டும் இருந்தான். இந்த நஜீ மஜீத் தான் 13ம் திருத்தத்தைதே அழிக்கத்தான் பதவிக்கு கொண்டு வரப்பட்டவர். அதாவது இரண்டு இனங்களையும் அழிக்கவேயாகும். ஆனால் அதை வடிவாக தெரிந்தும் பொய்யட் நஜீப் பஜீதுக்குதான் கூட்டமைப்பு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டவர். அதே நேரம் மாணவர் புரட்சிக்கு எதிராக 13ம் திருத்தம் ப்ற்றி பேசியவர். ஆனால் இன்று பிள்ளையான் கூட 13ம் திருத்தத்தை காப்பாற்ற தான் எதிரிகளாக கொள்ளும் கூட்டமைப்புடன் இணைந்து போக தயார் என்கிறான். ஒரு முஸ்லீம் தலைமை சம்பந்தருடன் இந்தியா சென்று 13ம் திருத்தத்தை காப்பாற்றும் படி கேட்டார்களா? இல்லை இனித்தானும் தனியே போய் கேட்டுவிட்டு வருவார்களா?  

 

உங்கள் எல்லோரின் மனங்களின் உண்மைகள் இப்படித்தான்.

 

(நான் 13ம் திருத்தத்தை ஆதரிக்கவில்லை. இந்த முறை(மட்டும்) சம்பந்தர் இந்தியா போனதை ஆதரிக்கவில்லை.ஏன் எனில் அது தமிழ் மக்களுக்கு தீர்வு பற்றி பேச அல்ல. 13ம் திருத்தம் பற்றி பேச)

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோழமைக்குரிய காவடி, நன்றி. நீங்கள் கள நிலமையை உணர்ந்தவர். போராட்டத்தின் தோல்வியின்பின்னர் மக்களின் அவல நிலையும் தனிமைப்படுதலின் ஆபத்தையும் நீங்கள் உணர்ந்திருக்கிறீர்கள். வரலாற்றின் தனிமையில் இருந்து எமது இனத்தை மீட்டு எதிரியை தனிமைப் படுத்தாமல் நமக்கு மீட்ச்சி இல்லை. நாம்  தனிமைப்படுதல் சர்வதேச ரீதியாக எதிரியை விடுவித்து பலப்படுத்துவதாகும். அதி தீவிர முட்டாள்கள் எப்பவும் திருமலையில் போட்டி இட்டதுபோல எதிரி விரும்புவதையே செய்வார்கள். முட்டாள்கள் அரசியலில் தூக்க முடியாத பெரிய கல்லைத் தூக்க முனைந்து தங்கள் காலிலே போட்டுவிடுவார்கள் என்பது சீனப் பழமொழி.

 

முள்ளிவாய்க்கால் இனக்கொலையின்பிறகு நாம் எல்லாவற்றையும் இழந்தபிறகு ஒருவர் பின்வருமாறு எழுதுகிறார். 

 

”இந்த புத்தகதை மீள பிரசுரம் செய்ய பொய்யட் சில மாதங்களுக்கு முன்னர் இந்த புத்தகத்தின் பிரதிகளை யாழில் வந்து தேடியவர். அவருக்கே யாரிடம் அந்த புத்தகம் இருக்கு என்று தெரியாது. இப்போது தனது புத்தகத்தை வாங்கியவர்கள் எல்லோரும் புலிகள் என்று கதை விடுகிறார். யார் வாங்கியவர்கள் என்று தெரிந்த பின்னர் அவர்களுடன் தொடர்பு கொண்டு ஒரு பிரதி திரும்ப பெற்றுக்கொள்ள முடியவில்லை? உண்மை என்பதற்கும் இவர்களுக்கும் வெகு தூரம்?”

 

இதுதான் அவர்களது நாடுபற்றிய அறிவு. இதுதான் அவர்களது புத்திசாலித்தனம். இதுதான் அவர்களுக்கும் உண்மைக்கும் இடையிலான தொலைவு. நுணாவிலான் இவர்களுக்குப் பதில் சொல்லுங்கள் என்று கேட்கலாமா? 

 

 

 

Edited by poet

முஸ்லீம்களுக்கு தேசியம் உண்டென்றால் மலையகத்தமிழருக்கும் ஒரு தேசியம் உண்டு.. இவர்களையும் இணைத்து முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும்.. நுவரெலியாவும் தமிழருக்கே.. :icon_idea:

உண்மையாய் எனக்கு ஒன்றும் புரியல ..........ஆனால் இசை உங்களை நான் புரிந்து கொள்கிறேன் ............... :D  :D 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு எழுத்தாளன் கவிதையாளன் பொதுக்களங்களில் தனது கருத்துக்களை முன்வைக்கும்போது எழுத்துப்பிழைகளை  சரிபார்க்கவேண்டும்.

விமர்சனங்களுக்கு உரிய முறையில் முகம் கொடுத்து அதற்கான பதில்களைக் கருத்திட வேண்டும். எழுத்தாளன் என்ற முறையில் பொதுவெளிகளில் விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் வேண்டும். அதைவிடுத்து என்னைவிட அறிவாளிகள் யாரும் இல்லையென்ற மமதையில் விமர்சகர்களைச் சீண்டுவது எழுத்தாளர்களுக்கு அழகில்லை.

 

புகழ் பாடுபவர்களுக்கு மட்டும் நன்றிகளும் நல்வாழ்த்துகளும் கூறி சற்று அதிகமான காரசாரமான கருத்துக்களை வைப்பவர்களை சபிப்பதும் ஒரு எழுத்தாளனுக்கு முறையல்ல.

இப்படியான எழுத்தாளர்களின் சீண்டல் கருத்துக்கள் வாசகர்கள் அவர்களின் தரத்தை எடைபோடுவதற்கு உதவி நிற்கின்றன.

 

ஈழத் தமிழர்களின் போராட்டம் அழிக்கப்பட்ட  நிலையில் என்ற கருத்து மிகவும் பிழையான கருத்து.   முஸ்லீம்கள் மீது சிங்களம் திரும்பியிருக்கின்றது என்பது 

தமிழர்களின் இனப்பிரச்சனை இப்போது இலங்கையில் இல்லை முஸ்லீம் மக்களே 

இன்று அதிகம் அவலப்படுகின்றார்கள் என முஸ்லீம்களுக்காக ஒப்பாரி

வைப்பதாக இருக்கின்றது.  

ஒரு எழுத்தாளன் கவிதையாளன் பொதுக்களங்களில் தனது கருத்துக்களை முன்வைக்கும்போது எழுத்துப்பிழைகளை  சரிபார்க்கவேண்டும்.

விமர்சனங்களுக்கு உரிய முறையில் முகம் கொடுத்து அதற்கான பதில்களைக் கருத்திட வேண்டும். எழுத்தாளன் என்ற முறையில் பொதுவெளிகளில் விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் வேண்டும். அதைவிடுத்து என்னைவிட அறிவாளிகள் யாரும் இல்லையென்ற மமதையில் விமர்சகர்களைச் சீண்டுவது எழுத்தாளர்களுக்கு அழகில்லை.

 

புகழ் பாடுபவர்களுக்கு மட்டும் நன்றிகளும் நல்வாழ்த்துகளும் கூறி சற்று அதிகமான காரசாரமான கருத்துக்களை வைப்பவர்களை சபிப்பதும் ஒரு எழுத்தாளனுக்கு முறையல்ல.

இப்படியான எழுத்தாளர்களின் சீண்டல் கருத்துக்கள் வாசகர்கள் அவர்களின் தரத்தை எடைபோடுவதற்கு உதவி நிற்கின்றன.

 

ஈழத் தமிழர்களின் போராட்டம் அழிக்கப்பட்ட  நிலையில் என்ற கருத்து மிகவும் பிழையான கருத்து.   முஸ்லீம்கள் மீது சிங்களம் திரும்பியிருக்கின்றது என்பது 

தமிழர்களின் இனப்பிரச்சனை இப்போது இலங்கையில் இல்லை முஸ்லீம் மக்களே 

இன்று அதிகம் அவலப்படுகின்றார்கள் என முஸ்லீம்களுக்காக ஒப்பாரி

வைப்பதாக இருக்கின்றது.  

அது அது ....................வாத்தியார் என்ற சொல்லுக்கு வரைவிலக்கணம் ஐயா .....................

ஐயா பொய்யட் அவர்களே தொடர்ந்து ஊடல் தூது விடாமல் நேராக இரண்டு வசனம் பேச முடியுமா? காவடி யாருமல்ல. இன்னொரு உறவு இன்னொரு ஐடியில் வருவது உங்களுக்கும் தெரியும். இதில் காவடி யாரையும் சுத்த முயவில்லை. நீங்கள் காவடியில் தூங்கினால் யாரும் பெரிதும் படுத்தமாட்டார்கள். 

 

நுணாவிலான் கடைசியாக எழுதியதற்கு பதில் சொல்லாமல் முதலில், முதல் எழுதியதற்கு பதில் சொல்ல முடியுமா? அவர்தான் உங்களை ஒரு பொது விவாத்திற்கு அழைக்கிறார். அதற்கு நீங்கள் ஒப்புக்கொண்டால் அவர் தான் பொறுப்பு எடுக்க விரும்புகிறார். முடியுமா முடியாத?

 

நீங்கள் சென்றதடவை அதற்கு பதில் அழிக்காமல் என்னை மட்டும் உண்மையான பெயரில் வரவேண்டும் என்றும் அப்போது என்னோடு, ஒரு கவிதைப் போட்டி, அரசியல் போட்டி இரண்டுக்கும் வரவிரும்புவதாகவும் தூது வைத்து எழுதியிருந்தீர்கள். எல்லோருக்கும் தெரியும் நான் உண்மையான பெயரில் வர விரும்பினால் எப்போதோ செய்திருப்பேன் என்றும், ஆகையால் நீங்கள் அழைக்கும் போட்டியில் உண்மை இல்லை என்றும். இதனால் உங்கள் அழைப்பை யாரும் சட்டை செய்யவில்லை. நீங்கள் நிர்வாகத்தை அழைத்ததும், மோகனிடம் சைபர் கிறைம் என்று மிரட்ட முனைந்ததிலிமிருந்து உங்களுக்கு எந்த வகையான விவாதத்திலோ போட்டியிலோ இருக்கும் ஆர்வத்தை நீங்கள் நன்றாகத்தான் வெளிக்காட்டியிருந்தீர்கள். அதனால், அப்போது வேறுயாரும் அதை பற்றி இந்த திரியில் பிரஸ்தாபிக்க வரவில்லை. இருந்தாலும், நான் அதில் .001% உண்மை இருந்தால் தன்னும் என்று அந்த அழைப்பை ஏற்றிருந்தேன். அதற்குதான் நூணா பதில் போட்டிருந்தார். இருந்தாலும் இரண்டாம் ஐடிக்குள் ஒழிக்கும் காவடிக்கு பதில் அளிக்கிறீர்கள், ஒரே ஒரு ஐடியில் வரும் என்னை எனது உண்மைப் பெயர் தெரியாததால் பதில் கூறத் தகுதில்லை என்று சொல்கிறீர்கள். இதுவும் உங்கள் உண்மைத்தன்மையை கேள்விக்குறிக்குள்ளாக்குகிறது.

 

நுணா,  உங்களின் தனி நபர் போட்டியை நான் ஏற்று உண்மையாக விவாதம் ஒன்று வந்தால், அது தனது பொது அழைப்பை குழப்பப் போகிறது என்ற கரிசனையால் தனி நபர் விவாதமொன்றிலும் பார்க்க தன்னுடன் பொது விவாதத்திற்குள் என்னையும் இணையும் படிதான் அவர் கருத்தில் "கேள்விகளை தயார் செய்ய மட்டும்" கூறியிருந்தார். அவர் உங்களை எனக்கு பதில் அளிக்க சொல்லவில்லை. அது உங்கள் தப்பு விளக்கம். 

 

 நுணாவுக்கு தேவையாயின் நான் அவர் தயார் செய்யும் Protocol இன் கீழும் விவாதத்திற்கு தயார்.  அதன் படி நூணாவோ அல்லது தமிழ் சூரியனோ யாரும் தமது ஐடிகளை வெளியே சொல்பவர்கள் மட்டும் தான் உங்களிடம் கேள்விகளை முன்வைக்கலாம். மற்றவர்கள் அவர்களுக்கு உதவி மட்டும்தான் அளிக்கலாம். உங்களிடம் நேராகக் கேள்வி கேட்கவோ அல்லது உங்களுக்கு பதில் அளிக்கவோ முடியாது.  இதற்கு தன்னும் நீங்கள் தயாரா? 

 

நீங்கள் அல்ல எதிரியை தனிமை படுத்தும் நபர் ஐயா பொய்யட். நீங்கள் கூட்டமைப்பு 19ம் தொடருக்கு ஜெனிவா போன போது  அதை எதிர்த்தவர். கக்கீம் போனதை ஆதரித்தவர். கூட்டமைப்பு கிழக்கில் தேர்தலுக்கு இறங்கிய போது எதிர்த்தவர். கூட்டமைப்பு மு.கா வை கிழக்கில் ஆட்சி அமைக்க கேட்ட போது எதிர்த்தவர். பின்னர் மு.க., SLFP இன்  நஜீப் மயீத்தை ஏற்று அவரை முதல் அமைச்சராகியவுடன் கூட்டமைப்பும் அவரை ஆதரிக்க வேண்டும் என்று எழுதியவர். தமிழக மாணவர் ஐ.நா பிரேரணையை எதிர்த்து இந்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி தமிழ் ஈழம் கேட்ட போது இந்திய அரசை ஆதரித்து புதிய தலைமுறையில் தோன்றி 13ம் திருத்தம் கேட்டவர். நீங்களா ஐயா எதிரியை தனிமைப்படுத்தும் அரசியல் சாணக்கியன்? பாலுக்கும் பூனையை யாரும் காவல் வைப்பார்களா?

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்துக்கு வருகிறவர்கள் முட்டாள்கலல்ல. பதில் சொல்ல வேண்டியது

 

முள்ளிவாய்க்கால் இனக்கொலையின்பிறகு நாம் எல்லாவற்றையும் இழந்தபிறகு ஒருவர் பின்வருமாறு எழுதுகிறார். 

 

”இந்த புத்தகதை மீள பிரசுரம் செய்ய பொய்யட் சில மாதங்களுக்கு முன்னர் இந்த புத்தகத்தின் பிரதிகளை யாழில் வந்து தேடியவர். அவருக்கே யாரிடம் அந்த புத்தகம் இருக்கு என்று தெரியாது. இப்போது தனது புத்தகத்தை வாங்கியவர்கள் எல்லோரும் புலிகள் என்று கதை விடுகிறார். யார் வாங்கியவர்கள் என்று தெரிந்த பின்னர் அவர்களுடன் தொடர்பு கொண்டு ஒரு பிரதி திரும்ப பெற்றுக்கொள்ள முடியவில்லை? உண்மை என்பதற்கும் இவர்களுக்கும் வெகு தூரம்?”

 

இதுதான் அவர்களது நாடுபற்றிய அறிவு. இதுதான் அவர்களது புத்திசாலித்தனம். இதுதான் அவர்களுக்கும் உண்மைக்கும் இடையிலான தொலைவு. நுணாவிலான் இவர்களுக்குப் பதில் சொல்லுங்கள் என்று கேட்கலாமா? 

 

கதையை மாற்றாமல் பதில் சொல்லுங்கள். காவடி உங்களிடம் கேட்கிறார் 

மற்றவர்கள் அது பற்றிய அறிதல் இல்லாதிருக்கிறார்கள் என்பதற்காக நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது மல்லையூரான். முதலில் தேடலும் வாசிப்பும் கொள்ளுங்கள். ஜெயபாலன் குறிப்பிட்ட முதற்கட்டுரை 1983 இல் வெளியாகியது. அது நுாலகம் படிப்பகம் போன்ற தளங்களில் பொதுப்பார்வைக்கே உள்ளது. மிகுதிக்கட்டுரைகள் சரிநிகரில் உள்ளன. அவையும் இணையத்தில் பொதுப்பாவனைக்கு உள்ளன. 83ம் ஆண்டு வெளியான கட்டுரை நுால் அப்போதையை விடுதலை இயக்கங்களால் பெற்று வாசிக்கப்பட்டது உண்மையே. தயவு செய்து சற்று வளருங்கள். ஆகக்குறைந்தது வளர முயற்சியாவது செய்யுங்கள்.

இதற்க்கு என்ன பதில்.யாழ்கல வாசகர்களுக்கு அறிவு இருக்கு என்கிற பொறுப்புணர்வுடன் கதையை மாற்றாமல் பதில் சொல்லுங்கள்.

 

யாழ்களத்துக்கு வருகிறவர்கள் முட்டாள்கலல்ல. பதில் சொல்ல வேண்டியது

 

முள்ளிவாய்க்கால் இனக்கொலையின்பிறகு நாம் எல்லாவற்றையும் இழந்தபிறகு ஒருவர் பின்வருமாறு எழுதுகிறார். 

 

”இந்த புத்தகதை மீள பிரசுரம் செய்ய பொய்யட் சில மாதங்களுக்கு முன்னர் இந்த புத்தகத்தின் பிரதிகளை யாழில் வந்து தேடியவர். அவருக்கே யாரிடம் அந்த புத்தகம் இருக்கு என்று தெரியாது. இப்போது தனது புத்தகத்தை வாங்கியவர்கள் எல்லோரும் புலிகள் என்று கதை விடுகிறார். யார் வாங்கியவர்கள் என்று தெரிந்த பின்னர் அவர்களுடன் தொடர்பு கொண்டு ஒரு பிரதி திரும்ப பெற்றுக்கொள்ள முடியவில்லை? உண்மை என்பதற்கும் இவர்களுக்கும் வெகு தூரம்?”

 

இதுதான் அவர்களது நாடுபற்றிய அறிவு. இதுதான் அவர்களது புத்திசாலித்தனம். இதுதான் அவர்களுக்கும் உண்மைக்கும் இடையிலான தொலைவு. நுணாவிலான் இவர்களுக்குப் பதில் சொல்லுங்கள் என்று கேட்கலாமா? 

 

கதையை மாற்றாமல் பதில் சொல்லுங்கள். காவடி உங்களிடம் கேட்கிறார் 

மற்றவர்கள் அது பற்றிய அறிதல் இல்லாதிருக்கிறார்கள் என்பதற்காக நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது மல்லையூரான். முதலில் தேடலும் வாசிப்பும் கொள்ளுங்கள். ஜெயபாலன் குறிப்பிட்ட முதற்கட்டுரை 1983 இல் வெளியாகியது. அது நுாலகம் படிப்பகம் போன்ற தளங்களில் பொதுப்பார்வைக்கே உள்ளது. மிகுதிக்கட்டுரைகள் சரிநிகரில் உள்ளன. அவையும் இணையத்தில் பொதுப்பாவனைக்கு உள்ளன. 83ம் ஆண்டு வெளியான கட்டுரை நுால் அப்போதையை விடுதலை இயக்கங்களால் பெற்று வாசிக்கப்பட்டது உண்மையே. தயவு செய்து சற்று வளருங்கள். ஆகக்குறைந்தது வளர முயற்சியாவது செய்யுங்கள்.

இதற்க்கு என்ன பதில்.யாழ்கல வாசகர்களுக்கு அறிவு இருக்கு என்கிற பொறுப்புணர்வுடன் கதையை மாற்றாமல் பதில் சொல்லுங்கள்.

                                                                                                                                                                                                                           

 

1983ல் நான் எழுதிய முஸ்லிம் மக்கலும் தேசிய இனப் பிரச்சினையும் புத்தகத்தை அதிகம் கொள்வனவு செய்தவர்கள் விடுதலைப் புலிகள்தான். அது அவர்களது reference புத்தகமாக இருந்தது. இதற்க்குமேல் நான் என்னத்தைச் சொல்ல.  

 

 

புத்தகத்தை முன்னால் போட்டு விவாதிக்க மறுப்பதை பார்த்தால் புத்தகத்திற்கும் இவர்களுக்கும் என்ன தொடர்பு என்று சந்தேக்கப்பட வேண்டியிருக்கு. இங்கே காவடியும் பொய்யடும் முரணுவதை பார்த்தால் முன்னர் தமிழ் சிறியின் கேள்வி ஒன்றுக்கு தனது ஆக்கங்கள் PhD மாணவர்களுக்கு பாடப்புத்தங்களாக இருக்கு என்ற தனது கூற்றை நிறுவாரா? அவற்றில் உண்மை இருக்கா?

 

திருவிளையாடல் நாகேஸ் மாதிரி என்னிடம் கேள்விமட்டும்தான் கேட்கமுடியுமாயின் பரவாயில்லை. அதில் கேவலம் தன்னால் ஒரு கேள்வியை கூட கண்டுபிடிக்க முடியாமல் இரண்டாம் ஐடியில் வந்து உளறிய காவடி சொல்ல வந்ததை கூட தான் விளங்காமல் இங்கே அதை கேள்வியாக்கி நடிக்கிறார்.  இரண்டு பேரும் தம்முள் தாம் முரணுவதை பார்த்தால் இவர்தான் இந்த புத்தகத்தை முழுவத்தாக தான் தான் எழுதினாரா அல்லது யாரிடமாவது வாங்கினாரா என்று விளக்கமளிக்க வேண்டும். எப்படி தன்னிடம் தனது கையேழுத்து பிரதி இல்லை என்று யாழில் எழுதினார்?

 

காவடி கூட அதை வைக்கும் போது தனது உண்மை முகத்தில் வைக்க வில்லை.

 

அதாவது அணிந்துரயை மட்டும் அல்ல புத்தகத்தில் உள்ள எதையுமே மட்டுமல்ல, இன்றைய குழம்பிய குட்டயில் மீன் பிடிக்கும் நோக்கமாக அந்த புத்தகதை மீளப்பிரசுரிப்பதையே ஒத்துக்கொள்ளமுடியாமல் தவிக்கிறீர்களா?  அதை மிளப்பிரசுரிப்பத்தாக ஒத்துக்கொண்டால் பணம் குறைந்து போய்விடும் என்பதா இந்த நடிப்பு? அல்லது மிளப்பிரசுரிக்கும் கம்பனியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்திற்கு இது எதிரா?

 

இதை பிரசுரிக்க இருக்கும் கம்பனியின் முழு விபரங்களையும் இங்கே வெளிவிட முடியுமா? அவர்களிடம் நாம் சில கேள்விகள் கேட்க சில தனி நபர்களின் பெயர்களை தரமுடியுமா? இதில் எவள்ளவு தூரம் உண்மையும், வெளிப்படையுமாக நடக்க முடியும்?

 

பொறுப்பு கெட்டதனமாக மாணவர் புரட்சி நேரம்  13ம் திருத்தத்தை திணித்த துரோக தனமாக குணத்தை யார் மறப்பார்கள். இன்று குழம்பிய குட்டையில்  1983 ஆண்டுகட்டுரைகளை வெளிவிட்டு பணம் சம்பாரிக்க முயலும் பேர்வழிகள் ஏன் இந்த அணிந்துறையில் உள்ள் கருத்தை விவாதிக்க ஆயிரம் பொய் சொல்லி ஒழிக்கிறார்கள்?

துரோகிகளால் தான் முள்ளிவாய்காளில் இழப்பு வந்தது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

"இந்தியாவும் இலங்கைத் தமிழர்களும் இணைந்து செயல்பட வேண்டும்"

ஆக்கம்: தளவாய் சுந்தரம்

யாழ்ப்பாணத்தில் பிறந்த வ.ஐ.ச. ஷெயபாலன், தற்கால ஈழத்துக் கவிஞர்களில் மிகவும் முக்கியமானவர். இலக்கியம் மட்டுமின்றி, சமூக, அரசியல் இயக்கங்களில் தீவிரமாகப் பங்கேற்றிருக்கிறார். தற்போது நார்வேயில் வசித்துவரும் ஷெயபாலன், நார்வே அரசு எடுத்துவரும் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான சமாதான முயற்சிகளில் சிலகாலம் ஆலோசகராக இருந்துள்ளார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சமூக பொருளாதார ஆய்வுக் கட்டுரைகள் பல எழுதியுள்ளார். ‘சூரியனோடு பேசுதல்’ (1986) ‘ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும்’ (1986), ‘நமக்கென்றொரு புல்வெளி’ (1987), ‘பெருந்தொகை’ (2000) ஆகிய கவிதைத் தொகுப்புகளும், ‘தேசிய இனப் பிரச்சினையும் முஸ்லிம் மக்களும்’ (1984) என்ற கட்டுரைத் தொகுப்பும் இவரது சில நூல்கள். சென்றமாதம் இந்தியா வந்திருந்த வ.ஐ.ச. ஷெயபாலனை தீராநதிக்காகச் சந்தித்தோம்.

 

தீராநதி: இலங்கைத் தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தில் இந்தியாவின் தலையீடு இருக்க வேண்டுமென்று தொடர்ந்து நீங்கள் வலியுறுத்தி வருகிறீர்கள். இதற்கு என்ன காரணம்?

 

வ. ஜ. ச. ஜெயபாலன: மிக முக்கியமான காரணம், இந்தியாவின் நலன்களும் இலங்கைத் தமிழர்களின் நலன்களும் ஒன்றையன்று பின்னிப் பிணைந்துள்ளன என்பதுதான். இரண்டாவது காரணம், ஒரு கவிஞன் என்ற வகையில், ஈழத்தை என்னுடைய அரசியல் தாயகமாகவும் இந்தியாவை என்னுடைய கலாசார தாயகமாகவும் கொள்கிறேன்; நான் இந்தியாவை நேசிக்கிறேன் என்பதுதான். உங்கள் கேள்விக்குப் பதில் சொல்லும் முன், எங்கள் விடுதலைப் போராட்டம் தொடர்பாகவும் இந்தியாவின் நலனுக்காகவும் நான் சில விஷயங்களை இந்த நேர்காணலில் சொல்லவேண்டும் என்று விரும்புகிறேன். குறிப்பாக, இந்திய வெளியுறவுக் கொள்கைகள் மற்றும் இந்தியாவுக்கு எதிராக அரங்கேறி வரும் உலக அரசியல் சதிகள் பற்றி. இதற்கு தீராநதி அனுமதிக்குமா?

 

தீராநதி: தாராளமாக நீங்கள் சொல்ல விரும்புபவற்றைச் சொல்லலாம்.

 

வ. ஐ. ச. ஜெயபாலன்: நன்றி. இந்தியா, தற்போது பாகிஸ்தான் தொடர்பாக கொண்டிருக்கும் வெளியுறவு கொள்கைகளையும், அந்நாடு தொடர்பாக உருவாக்கப்பட்ட வெளிவிவகார அமைப்புகளையும்தான் மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள் விஷயத்திலும் பயன்படுத்துகிறது. இதனை இந்தியாவின் மிக முக்கியமான தவறாக நான் கருதுகிறேன். இந்திராகாந்தி அம்மையார் இந்தியாவின் பிரதமராக இருந்த காலகட்டத்தில், தென்னாசியா தொடர்பான இந்திய வெளியுறவுக் கொள்கைகள் நீண்டகால நோக்கில் இந்தியாவின் நலன்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தன. பத்து விரல்களாலும் பத்து வண்ணத்துப் பூச்சிகளைப் பிடிக்க முடியாது. ஆனால், பிடிக்கக் கூடியவற்றைப் பிடிக்கவேண்டும் என்னும் அடிப்படையில் இந்திராகாந்தி செயல்பட்டார். அனுபவங்களில் இருந்து கற்றுக்கொண்டு இந்திய வெளியுறவுக் கொள்கைகளை மாற்றி செழுமைப்படுத்தினார். தென்கிழக்காசிய நண்பர்களை அவர் எப்போதும் கைவிட்டதில்லை.

இலங்கையைப் பொறுத்து உறுதியான பாடங்களை இந்திராகாந்தி கற்றிருந்தார். இலங்கை, சீனா மற்றும் பாகிஸ்தானுடன் உறவு கொண்டாடுவதற்குப் பதிலாக இந்தியாவுடன் உறவை மேம்படுத்திக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பு தொடக்கத்தில் அவருக்கு இருந்தது. எனவேதான், தமிழ்நாட்டின் அனுமதியோ சம்மதமோ இன்றி கட்சத்தீவை அவர் இலங்கைக்கு விட்டுக்கொடுத்தார். ஆனால், அவர் எதிர்பார்த்தது போல் இலங்கை நடந்துகொள்ளவில்லை. கட்சத்தீவை விட்டுக் கொடுத்தும், இலங்கையை இந்திராகாந்தியால் வெற்றிபெற முடியவில்லை. பங்களாதேஷ§ம் பாகிஸ்தானும் மோதிக்கொண்டிருந்த, பங்களாதேஷ் விடுதலைப் போராட்ட காலகட்டத்தில், இந்தியா, பங்களாதேஷை விடுதலை வீரர்களாக அங்கீகரித்து. ஆதரித்தது. ஆனால், இலங்கை ராணுவரீதியாக பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு எடுத்ததுடன் பாகிஸ்தானுக்காக தனது தளங்களைத் திறந்துவிட்டது.

இலங்கை, பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு எடுத்ததற்கு அவர்களுக்கு உறுதியான காரணங்கள் இருக்கின்றன. இலங்கைச் சிங்கள மக்களைப் பொறுத்தவரைக்கும், இந்தியா குறித்து, ஒரு பெரிய நாட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற அச்சத்துடனேயே அவர்கள் எப்போதும் இருந்து வருகிறார்கள். எனவே, இந்தியாவின் எதிரிகளுடன் உறவை வலுப்படுத்திக்கொள்வது, இந்தியாவிலிருந்து வரும் ஆபத்துகளை எதிர்கொள்ள உதவும் என்று அவர்கள் கருதுகிறார்கள். குறிப்பாக சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா இந்நாடுகளுடன் உள்ள நெருக்கமான உறவுகளின் மூலம்தான் இந்தியாவை எதிர்கொள்ள முடியும் என்று கருதுகிறார்கள். இந்திராகாந்தியின் காலகட்டத்தில் பண்டார நாயக்காவின் குடும்பம் சீனா மற்றும் அமெக்காவுடனான உறவு மூலமாக இந்தியாவை எதிர்கொள்ள வேண்டும் என்னும் கருத்தை வைத்திருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சி (யு.என்.பி.) அமெரிக்காவுடனான உறவு மூலமாக இந்தியா தன்னைப் பாதிக்காத வகையில் வைத்திருக்கவேண்டும் என்னும் கருத்தை வைத்திருந்தது. இப்போதும் இந்த அணுகுமுறையில் பெரிய மாற்றங்கள் இல்லை. ஆக, இலங்கைச் சிங்கள கட்சிகளைப் பொறுத்தவரைக்கும் பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா இந்நாடுகளுடனான உறவைப் பேணவே அவைகள் விரும்புகின்றன.

 

தீராநதி: இலங்கை சிங்களக் கட்சிகள் இந்த நிலைப்பாட்டை எடுக்கக் காரணமாக ஏதாவது சம்பவங்கள் நிகழ்ந்திருக்கிறதா, அதாவது அச்சுறுத்தல்கள் இந்தியாவிடமிருந்து வந்திருக்கிறதா?

 

வ. ஐ. ச. ஜெயபாலன்: சமீப நூற்றாண்டுகளில் இல்லை. ஆனால், வரலாற்று ரீதியான காரணங்கள் இருக்கின்றன. இந்திய துணைக் கண்டத்தைச் சேர்ந்த அரசுகள், இலங்கை மீது படையெடுத்து, அந்நாட்டைக் கைப்பற்றிய சம்பவங்கள் வரலாற்றில் நிகழ்ந்திருக்கின்றன. குறிப்பாக, சோழர்கள் பலம்பெற்றிருந்த காலங்களில் பலமுறை இலங்கை அவர்களின் ஆட்சிக்கு கீழே இருந்திருப்பதைப் பார்க்கிறோம். இதனடிப்படையில் வரலாற்று ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் மிகவும் உறுதிப்பட்ட அச்சம் சிங்களக் கட்சிகளுடையது.

 

தீராநதி: இப்படியரு அச்சம் இருக்கும்பட்சத்தில் இந்திய அமைதிப்படையை அவர்கள் அனுமதித்ததை எப்படிப் புரிந்துகொள்வீர்கள்?

 

வ. ஜ. ச. ஜெயபாலன்: இப்போது இந்தியாவுடனான இலங்கையின் உறவு என்பது, தமிழர்களை ஒடுக்குவதற்கு இந்தியாவைப் பயன்படுத்திக் கொண்டு வேலை முடிந்ததும் இந்தியாவை வெளியேற்றுவதை அடிப்படையாகக் கொண்டதுதான். 1987இல் ஜெயவர்த்தனேயின் கொள்கையும் இதுவாகத்தான் இருந்தது. இந்திய அமைதிப்படை இலங்கை வந்தபோது, உண்மையில் சிங்களவர்களிடம் அச்சம் இருந்தது. அப்போது ஜெயவர்த்தனே சொன்னார்: “என்னுடைய அரசியல் அனுபவத்தின் வயது, ராஜீவ்காந்தியின் வயதைவிட அதிகம்’’. இது பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சிங்களவர்கள் கவலைப்படத் தேவையில்லை; நமது தேவைகளுக்கு அவர்களைப் பயன்படுத்திக்கொண்டு, அவர்களை வெளியேற்ற என்னால் முடியும் என்பதுதான் இதற்குப் பின்னால் இருக்கும் செய்தி.

ஆனால், இந்தத் தந்திரம் இந்திராகாந்தி அம்மையார் காலகட்டத்தில் செல்லுபடியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷ் போரில் இலங்கை நடந்துகொண்ட விதத்திலிருந்து, இந்திராகாந்தி ஒரு தெளிவான பாடத்தைக் கற்றுக்கொண்டிருந்தார். அதனடிப்படையில் இலங்கைத் தொடர்பான வெளியுறவுக் கொள்கையை அவர் மீள் ஆய்வு செய்தார். இலங்கையிலுள்ள தமிழர்களும் இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்களும் இந்தியாவின் நண்பர்கள் என்ற அடிப்படையில் அவர் மாற்றியமைத்த இலங்கைத் தொடர்பான வெளியுறவுக் கொள்கைகள் அமைந்திருந்தன. இதற்கு, இலங்கையில் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையேயான காலம்காலமாக இருந்துவரும் பிரச்சினையே, அடிப்படையில் இந்தியா தொடர்பானதுதான் என்பது முக்கியக் காரணம்.

இலங்கைத் தமிழர்கள் இலங்கையின் வடகிழக்குப் பிரதேசங்களில் வாழ்கிறார்கள். இந்திய வம்சாவழி மலையகத் தமிழர்கள் இலங்கையின் மலைப்பிரதேசங்களில் தேயிலைத் தோட்டங்களில் வாழ்கிறார்கள். தமிழ் முஸ்லிம்கள் எல்லாப் பகுதிகளிலும் சிதறி வாழ்கிறார்கள். இலங்கையில் தமிழர்களுக்கு உரிமைகள் கொடுத்தால், அவர்கள் இந்தியா பக்கம் போய்விடுவார்கள், தங்களைக் காட்டிக்கொடுத்து விடுவார்கள் என்ற அச்சத்தின் அடிப்படையில்தான் சிங்களவர்கள் தமிழர்களுக்கு உரிமைகளை வழங்கத் தயங்குகிறார்கள். தமிழர்களை எதிரியாகக் கருதுகிறார்கள். இதனை இந்திராகாந்தி மிகச் சரியாகப் புரிந்துகொண்டிருந்தார். இதனடிப்படையில்தான் இலங்கைத் தமிழர்கள் விடுதலைப் போராட்டத்துக்கான அவரது ஆதரவுக் கொள்கை அமைந்திருந்தது. இலங்கையில் தமிழர்கள் சமஸ்டி அடிப்படையிலான ஓர் உரிமையைப் பெறும்பொழுது, இலங்கை, இந்தியாவுக்கு எதிராகப் போகாமல் பார்த்துக்கொள்ளும் வல்லமையை அவர்கள் பெறுவார்கள் என்று அவர் கருதினார். தமிழர்கள் தனி நாடாகப் போனாலும், அவர்களது தொப்புள்கொடி உறவு இந்தியாவுடன் உள்ளதால், இந்தியா சார்பான ஒரு நாடாகத்தான் அவர்கள் இருப்பார்கள் என்பது அவரது கருத்து. இந்த நோக்கில் காய்கள் நகர்த்தப்பட்டு, பணிகள் நடந்து கொண்டிருந்த போது, துரதிஷ்டவசமாக அவரது படுகொலைச் சம்பவம் நிகழ்ந்தது.

இந்திராகாந்தி அம்மையாரின் மறைவுக்குப் பிறகு, இந்தியாவில், குறிப்பாக இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட மாற்றங்கள், மிகவும் பாரதூரமான விளைவுகளை இலங்கையில் மட்டுமல்லாமல் தென்னாசியா முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தீர்மானங்களின் அடிப்படையில் அதிகாரவர்க்கத்தைச் செயல்படவைத்தார் இந்திராகாந்தி. அவருக்குப் பிறகு, அரசின் தீர்மானங்களை மீறி அதிகாரிகள் செயல்படுவது நிகழ்ந்தது. குறிப்பாக, நட்வர்சிங் வெளிவிவகாரத்துறை அமைச்சராகவும் தீக்சித் இலங்கைத் தூதுவராகவும் இருந்த காலகட்டத்தில், அரசின் தீர்மானங்களுக்கு ஏற்ப அதிகாரிகள் செயல்படுவதற்குப் பதிலாக, உளவுத்துறை அதிகாரிகளின் தீர்மானத்துக்கு ஏற்ப இந்திய அரசு செயல்பட்டது. இந்திராகாந்தியின் காலத்துக்குப் பிறகு, அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளும் போக்கையும் இந்தியா பின்பற்றவில்லை. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்திராகாந்திக்குப் பிறகு இந்தியாவின் பிரதமரான ராஜீவ்காந்திக்கு, அப்போது மிகவும் இளம் வயது; இளம் இரத்தம் தந்த உற்சாகத்துடனும் உறுதியுடனும், இந்தியாவை மேம்படுத்துவது தொடர்பாகவும் தென்னாசியாவில் ஒரு பிரதேச வல்லரசாக இந்தியாவை முன்னிலைப்படுத்தி மாற்றுவது தொடர்பாகவும் மிகவும் கனவுகளுடன் அவர் இருந்தார். ஆனால், அவரை நட்வர்சிங் போன்றவர்களும் தீக்சித் போன்ற அதிகாரிகளும், சரியாகச் சிந்தித்த பார்த்தசாரதியையும் வெங்கட்ராமனையும் ஓரம் கட்டி, தொடர்ச்சியாகவே பிழையாக வழிநடத்தி விட்டார்கள். இப்போது நட்வர்சிங் கையில் படிந்திருக்கும் கறை, இராக் எண்ணெய்க் கறை அல்ல; அமைதிப்படை காலத்தில் இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்கள், மானபங்கப்படுத்தப்பட்ட பெண்கள் இவர்களின் இரத்தக் கறைதான்.

அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இலங்கை வந்த இந்திய அமைதிப்படை அமைதியை ஏற்படுத்த முடியாதபட்சத்தில் வெளியேறிச் சென்றிருப்பதுதான் முறை. மாறாக, சிங்கள அரசுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான விடுதலைப் போராட்டத்தில் தமிழர்களுக்கு எதிரான ஒரு யுத்தத்தை அவர்கள் நடத்தினார்கள். இது நடந்திருக்கக் கூடாது. யாருடைய நலனுக்காக இந்திய அமைதிப்படை போராடியது? ஆயிரக்கணக்கான இந்திய சிப்பாய்கள் மரணமடைந்ததும், கை கால்களை இழந்ததும் யாருடைய நலனுக்காக?

 

தீராநதி: இந்திய அமைதிப்படை இலங்கை வந்தபோது, இலங்கைத் தமிழர்கள் ஆரவாரமாக அவர்களை வரவேற்றார்கள். ஆனால், விரைவிலேயே அங்கு காட்சிகள் மாறின. இதற்கு என்ன காரணம்?

 

வ. ஜ. ச. ஜெயபாலன்: அரசியல் காரணங்கள் ஒரு பக்கம் இருக்க, திரைமறைவு வேலைகளும் உலக அரசியல் சதிகளும்தான் இதில் முக்கியப் பங்காற்றின. நிறையப் பணம் கைமாறி இருக்கிறது. பெண்கள் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். குறிப்பாக, இந்திய ஆங்கிலப் பத்திரிகை ஆசிரியர் ஒருவருக்கு அரண்மனைப் படுக்கையறை வரைக்கும் திறந்திருந்தது எனக்குத் தெரியும். அதற்கு கைமாறாக, அவர் இந்திய பத்திரிகைகள் இலங்கைப் பிரச்சினையில் குரல் கொடுக்காமல் இருக்கும் வகையில் நிறைய பங்காற்றினார்.

 

தீராநதி: உலக அரசியல் சதி என்று எதனடிப்படையில் சொல்கிறீர்கள்?

 

வ. ஐ. ச. ஜெயபாலன்: தென்னாசிய நாடுகளுக்கு இடையேயான சதுரங்க போட்டியில், உண்மையில் காய்களை நகர்த்துவது சீனாவும் அமெரிக்காவும்தான். இந்த இரண்டு நாடுகளும் நேரடியாக இந்தியாவுடன் இராணுவ ரீதியாக முரண்படாமல், அதேநேரத்தில் பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், ஓரளவு பங்களாதேஷ் போன்ற நாடுகளை தங்களுடைய அம்புகளாகப் பயன்படுத்துகின்றன. பாகிஸ்தான், முழுமையான ஒரு கையாளாகப் பயன்படுத்தப்படுகிறது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சதுரங்கத்தையும்கூட சீனாவும் அமெரிக்காவும்தான் ஆடுகின்றன. இதில் சீனாவின் கைதான் இலங்கையில் ஓங்கியிருக்கிறது. சீனாவின் உளவுத்துறையும் பாகிஸ்தான் உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ.யும் இலங்கையில் பலப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு வல்லரசுகளுடன் உறவு இருப்பதால்தான், பங்களாதேஷ் யுத்தத்தில் இலங்கை துணிந்து பாகிஸ்தானுக்கு உதவியது. இதனை இந்திய அறிஞர்கள் உணர்ந்துகொள்வது அவசியம். நேபாளம், பங்களாதேஷ் போன்ற மற்ற தென்னாசிய நாடுகளிலும் இதுமாதிரியான போக்கு நிலவுகிறது. பாகிஸ்தான் உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் ராஜதந்திரிகளாக இலங்கையிலும் பங்களாதேஷிலும் நேபாளத்திலும் பணிபுரிகிறார்கள். அவர்கள் அங்கே பணிபுரிவது நிச்சயம் அந்தந்த நாடுகள் தொடர்பான விவகாரங்களுக்காக அல்ல. இந்தியா தொடர்பாகத்தான் அவர்கள் அங்கே பணிபுரிகிறார்கள். (அப்படி இலங்கையில் பணியாற்றும் ஒரு பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரியின் வாகனம் அண்மையில் வெடிகுண்டு தாக்குதலுக்கு உள்ளானது. பாகிஸ்தான், இதற்கு இந்தியாவைக் குற்றம் சாட்டுகிறது. இலங்கை, விடுதலைப்புலிகளைக் குற்றம் சாட்டுகிறது.)

1956இல் நேரு கொண்டு வந்த மொழிவாரி மாநில அமைப்பு தொடங்கி, இன்றைக்கு எழுதப்படாத ஒரு விதியாக இந்தியா கூட்டாட்சியை நோக்கி நகர்ந்து செல்கிறது. இதுவும் நீண்டகாலமாக வேரூன்றிய கலாசார உறவுகளும் இந்தியாவின் மிகப்பெரிய ஒரு பலம். என்றாலும், அகில இந்தியா என்பது சீனா மாதிரி நீண்டகால அமைப்பல்ல. அது அந்நியர்கள் இணைத்ததன் அடிப்படையில் அமைந்தது. எனவே, சில நிலைமைகளைப் பாதுகாப்பதன் மூலம்தான் இந்திய ஒருமைப்பாட்டை சிதையாமல் பலமாக வைத்திருக்க முடியும். இதனைப் புரிந்துகொண்டிருக்கும் இந்தியாவின் எதிரிகள், குறிப்பாக சீனாவும் அமெரிக்காவும், அந்த நிலைமைகளை உடைக்க விரும்புகிறார்கள். அதில் முனைப்பாக இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் நேரடியாகச் செயல்படாமல் ஆதரவாளர்கள் மூலமாகச் செயல்படுகிறார்கள். தொடக்கத்தில் வடஇந்திய மாநிலங்களில்தான் சீர்குலைப்பு வேலைகள் அதிகம் நடந்தன. பாகிஸ்தான், நாகலாந்து, பங்களாதேஷ், நேபாளம் எல்லைகளின் ஊடாக இந்தியாவுக்குள் ஊடுருவ முடியும் என்ற அடிப்படையில் இந்தச் சதிகள் திட்டமிடப்பட்டன. கட்மாண்ட் போன்ற வடமாநிலப் பகுதிகள் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவும் முயற்சி தீவிரமாக இருந்தது. மேலும், ஹிந்தி மொழி பேசும் பிரதேசங்களான வடமாநிலங்கள்தான் இந்தியப் பாராளுமன்றத்தைத் தீர்மானிக்கும் அதிகாரத்தையும் அப்போது வைத்திருந்தன. எல்லா இந்திய தேசிய கட்சிகளும்கூட வடமாநிலங்களை மையப்படுத்திதான் அமைந்திருந்தன. ஆனாலும், வடஇந்திய மாநிலங்கள் கடலை எல்லையாகக் கொள்ளாமல் நிலப்பரப்பை எல்லையாகக் கொண்ட மாநிலங்கள் என்பதால், பெரிய அளவில் இந்த யுக்தி வேலை செய்யவில்லை. மேலும், சீன பாகிஸ்தானிய பகைமை காரணமாகவும் காஷ்மீர் நெருக்கடி காரணமாகவும் இந்தியப்படை வளங்கள் வடக்கே குவிக்கப்பட்டிருந்தது. எனவே, இந்திய எதிரிகளது அணுகுமுறை இப்போது மாறியிருக்கிறது. இன்றைக்கு இந்திய எதிரிகளின் கவனம் முழுவதும் கடலை எல்லையாகக் கொண்டிருக்கும் மாநிலங்கள் பக்கம்தான். கடல் சார்ந்த மாநிலங்களுக்குள் ஊடுருவது தொடர்பான அணுகுமுறையில் பங்களாதேஷ§ம் இலங்கையும் முக்கியத்துவம் அடைந்துவிட்டன. பாகிஸ்தானின் உளவுத்துறை இலங்கை கடற்படைக்குள் ஊடுருவி இருக்கிறது. பம்பாய் போன்ற கடல் சார்ந்த பகுதிகளுக்குள் ஊடுருவதும் அவர்களுக்கு இலகுவாக இருக்கிறது.

கடல் சார்ந்த மாநிலங்களைப் பொறுத்தவரைக்கும், மீனவர்கள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சமூகம் என்பதை எதிரிகள் உணர்ந்திருக்கிறார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இதனை இந்தியா இன்றுவரை உணர்ந்து கொள்ளவில்லை. (இந்தியாவின் பல்வேறு உள்விவகார சிந்தனைகள் பெரும்பாலும் வாக்கு வங்கியின் அடிப்படையில்தான் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் மீனவர்கள் மிகப்பெரிய வாக்கு வங்கி இல்லை. மெல்லிய புள்ளிகளாக, கடற்கரையோரமாக அச்சமூகம் சிதறியிருப்பதால் ஒவ்வொரு தொகுதிக்குள்ளும் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பதில், அவர்களது பங்களிப்பு மிகவும் சிறியது.) இந்திய மீனவர்களை விரக்தியடைய வைத்தால், இந்திய அரசாங்கத்தின் மீது அவர்கள் நம்பிக்கையிழந்தால், அவர்களினூடாக இந்தியாவுக்கு எதிராகச் செயல்படமுடியும் என்று எதிரிகள் திட்டமிடுகிறார்கள். இந்த நோக்கோடு பார்த்தால், தொடர்ந்து இராமேஸ்வரம் மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதற்கு பின்னால் இருக்கும் சதியை உங்களால் புரிந்துகொள்ள முடியும். இதுவரை, முந்நூறுக்கும் அதிகமான இந்திய தமிழ் மீனவர்களை இலங்கைக் கடற்படை சுட்டுக் கொன்றிருக்கிறது. உண்மையில் இலங்கைக் கடற்படைக்குள் ஊடுருவி இருக்கும் பாகிஸ்தானின் தூண்டுதலின் பேரில்தான் இது நிகழ்ந்திருக்கிறது. இத்தனை மீனவ உயிர்கள் கொல்லப்பட்டும், பெரிதாக இந்தியா எதுவும் செய்யாதிருக்கும் நிலையில், விரக்தியடைந்திருக்கும் மீனவர்கள் இந்தியாவால் தங்களைப் பாதுகாக்க முடியாது என்ற எண்ணத்துக்கு வந்துவிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம், முந்நூறுக்கும் மேற்பட்ட இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை கொன்றுகொண்டிருக்கும் காலகட்டத்தில், இலங்கைக் கடற்படையைப் பலப்படுத்தும் வேலையை இந்தியா செய்துகொண்டிருக்கிறது. இது மீனவர்கள் மத்தியில் மேலும் நம்பிக்கையிழப்பை ஏற்படுத்தி, ஒரு எதிரான மனநிலையை உருவாகக் காரணமாகிறது. இதனைத்தான் எதிரிகளும் எதிர்பார்க்கிறார்கள். இந்திராகாந்தியின் காலகட்டத்தில் இந்த மீனவர்கள் பிரச்சினை கண்டுகொள்ளப்பட்டது. அதன்பிறகு ராஜிவ்காந்தி காலத்தில், எம்.ஜி.ஆர். கொடுத்த நெருக்குதல்கள் காரணமாக, ஒருமுறை இலங்கைக் கடற்படையினரைக் கைப்பற்றி இராமேஸ்வரத்துக்கு கொண்டு வந்தார்கள். அதன்பிறகு யாருமே இந்த மீனவர்களின் கண்ணீரைக் கண்டுகொள்ளவில்லை. இதன் பின்னணியில் உள்ள சூழ்ச்சி என்ன? முந்நூறுக்கும் மேற்பட்ட தன்னுடைய மீனவர்கள், அண்டை நாட்டுக் கடற்படையால் கொல்லப்பட்டிருக்கும் சூழ்நிலையில், இந்தியா தன்னை ஒரு பிரதேச வல்லரசாக சொல்லிக்கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது? (இந்திய மீனவர்களுக்கு எதிராக இலங்கைக் கடற்படையைப் பலப்படுத்துவதை இந்தியா உடனே நிறுத்த வேண்டும். மீனவர்களின் நலன்களைப் பேணாவிட்டால், இந்தியாவை உங்களால் பேணமுடியாது.)

இந்தச் சதியின் இன்னொரு பக்கம், இலங்கைத் தமிழர்களை இந்தியாவின் எதிரிகளாக மாற்றுவது. இலங்கை அரசாங்கத்துக்கு இலங்கைத் தமிழர்களைத் தோற்கடிக்கிற வல்லமை இல்லை. பாகிஸ்தானைக் கொண்டு இலங்கைத் தமிழர்களைத் தோற்கடித்தால், அவர்கள் இந்தியாவின் எதிரிகளாக மாறமாட்டார்கள். மேலும், அது இந்தியா_ இலங்கைத் தமிழர்கள் உறவுக்கும் வழி அமைத்துவிடக்கூடும். இந்த அடிப்படையில்தான் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தில் இந்தியாவைப் பயன்படுத்துவது என்னும் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவாலும் விடுதலைப்புலிகளை அழிக்க முடியாது; சர்வதேச மையப்பட்ட ஒரு போராளிக்குழு விடுதலைப் புலிகள். அதேநேரத்தில் புலிகளையும் இலங்கைத் தமிழர்களையும் தன்னுடைய எதிரிகளாக இந்தியாவால் மாற்றிவிட முடியும். இந்தியாவைக் கொண்டு இலங்கைத் தமிழர்களைத் தோற்கடித்தால், தோற்றுப்போனவர்கள் இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்துகொண்டு இந்தியாவுக்கு எதிராக மாறுவார்கள் என்று இந்தியாவின் எதிரிகள் கருதுகிறார்கள். இலங்கைத் தமிழர்கள், இலங்கை அரசுடன் சமரசப்பட்டு, முழுமையான இலங்கையும் இந்தியாவுக்கு எதிராக மாறவேண்டும் என்பதுதான் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் எதிர்பார்ப்பு. இலங்கைக்கு இந்தியா ஆயுதம் தராவிட்டால் நாங்கள் ஆயுதம் தருவோம் என்பது இந்தத் திட்டத்தை அமுலாக்க அவர்கள் பயன்படுத்தும் தந்திரம். இந்தியாவை பிளாக் மெயில் செய்வதுக்கான ஒரு யுத்தி.

பிரேமதாசா காலகட்டத்தில் இந்தத் திட்டம் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றது. இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதற்காக வந்த இந்திய அமைதிப்படை இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தைத் தொடங்கியது. இந்தச் சதியில் தீக்சித் தொடங்கி நட்வர்சிங் வரைக்கும் அனேகர் செயலாற்றியிருக்கிறார்கள். மேலும், நட்வர்சிங் மற்றும் தீக்சித் போன்றவர்களின் அணுகுமுறையும் இதற்கு முக்கியக் காரணம். இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பலமாக இருக்கும் அமைப்பை குலைத்துவிட்டு, பலமில்லாமல் இருக்கும் அமைப்புகளை மேலே கொண்டுவந்தால், அவர்கள் தாங்கள் சொல்வதைக் கேட்பார்கள் என்னும் கருத்து தீக்சித் போன்றவர்களுக்கு இருந்தது. இதனடிப்படையில் அவர்கள் அமைதிப்படையை வழிநடத்தினார்கள். அனேக விஷயங்கள் ராஜிவ்காந்திக்குத் தெரியாமல் நிகழ்ந்தது; அனேக விஷயங்களில் அவருக்குத் தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டன. (அமைதிப்படையில் பணியாற்றிய தளபதிகள், ராஜிவ்காந்திக்குத் தெரியாமல் பிரபாகரனைக் கொல்லும்படி தீக்சித் தங்களை நிர்பந்தித்ததாக இன்று வெளிப்படையாகப் பேசுகிறார்கள். தங்களுடைய புத்தகங்களில் தீக்சித்தை விமரிசித்திருக்கிறார்கள்.) எம்.ஜி.ஆர். உயிரோடு இருந்திருந்தால், அமைதிப்படை விவகாரத்தில் நிச்சயம் ராஜிவ்காந்தியின் கண்ணைத் திறந்திருப்பார். அவரது மரணம் சதிகாரர்களின் பணியைச் சுலபமாக்கிவிட்டது. இந்தச் சதி இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான சதி மட்டுமல்ல, இந்தியாவுக்கும் எதிரான சதியும்கூட. இந்திய அமைதிப்படை இலங்கையில் நடத்திய யுத்தம் நிச்சயம் இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது.

இதனால், இந்திய அமைதிப்படையை வெளியேற்றும் விஷயத்தில் இலங்கைத் தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றுபட்டார்கள். இத்தகைய ஓர் ஒன்றுபடுதலைத்தான் சீனாவும் பாகிஸ்தானும் எதிர்பார்க்கின்றன. அப்போது ஒன்றுபட்ட ஒட்டுமொத்த இலங்கையையும் இந்தியாவுக்கு எதிரான ஒரு தளமாகப் பயன்படுத்துவது சுலபமாக இருக்கும். அப்படியரு நிலை வரும்பட்சத்தில், அப்போது இங்கே இராமேஸ்வரத்தில் நாநூறு அல்லது ஐநூறு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு, மீனவ சமூகம் இந்தியாவின் மீது விரக்தி அடைந்திருக்கும். இந்நிலையில் இந்தியாவைச் சீர்குலைக்கும் திட்டத்தில், இலங்கையில் இருந்து இயங்கி அவர்களைப் பயன்படுத்துவது எதிரிகளுக்குச் சுலபமான வேலையாக இருக்கும். எனவேதான் இந்திய மீனவர்களின் நலன்களைப் பாதுகாக்காமல் இந்தியாவைப் பாதுகாக்க முடியாது என்று நான் சொல்கிறேன்.

இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்து திருப்பி அழைக்கப்பட்டதுக்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. முதல் காரணம், விடுதலைப்புலிகளின் உறுதியான எதிர்ப்பு. இரண்டாவது காரணம், விடுதலைப்புலிகளின் பெரும்பகுதியை அமைதிப்படை அழித்துவிட்டது; மிச்சமிருப்பவர்களைத் தங்களால் அழிக்க முடியும். புலிகளை முழுமையாக அழிப்பது வரைக்கும் அமைதிப்படையை இலங்கையில் வைத்திருந்தால், பிறகு அவர்கள் வெளியேற மாட்டார்கள் என்ற கருத்து சிங்களவர்கள் மத்தியில் இருந்தது. எனவே, இந்திய எதிர்நிலை எடுத்திருக்கிற புலிகளுடன் ஒரு சமரசத்துக்கு வருவதன் மூலமும் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஒரு நெருக்குதலைக் கொடுப்பதன் மூலமும் அமைதிப்படையை வெளியேற்றும் திட்டத்தை இலங்கை அரசு எடுத்தது. மூன்றாவது காரணம், அப்போது இந்தியாவில் வி.பி.சிங் அரசு பதவியேற்றது. கலைஞர் உறுதியாக இருந்தபடியால் அமைதிப்படையைத் திரும்ப அழைக்கும் முடிவு இந்திய அரசாங்கத்தால் எடுக்கப்பட்டது. இலங்கைத் தமிழர் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு கெட்ட கனவு கலைஞர் மூலம் முடிவுக்கு வந்தது.

 

தீராநதி: அமைதிப்படையின் வெளியேற்றத்துக்குப் பிறகு ராஜிவ்காந்தி பெரிய தவறு நிகழ்ந்துவிட்டது என்று உணர்ந்திருந்ததாகவும், பிரபாகரனைச் சந்திக்க விரும்பியதாகவும் சொல்லப்படுகிறது. அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாகச் சொல்கிறார்கள். இது உண்மையா?

 

வ. ஐ. ச. ஜெயபாலன்: இந்திய அரசுக்கு நெருக்கமான வட்டாரங்கள் மூலம், நான் அறிந்த வகையில் இது உண்மைதான். அமைதிப்படை திரும்பியதற்குப் பிறகு, சமஸ்டி அடிப்படையிலான விடுதலையை இலங்கைத் தமிழர்களுக்குப் பெற்றுக்கொடுக்க வேண்டும், புலிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை நடத்தவேண்டும் என்ற கருத்து ராஜிவ்காந்திக்கு இருந்ததாக அவர்கள் தகவல் தெரிவித்தார்கள். அமைதிப்படையின் கடைசி காலத்தில் பிரபாகரனுடன் ஓர் உடன்படிக்கைக்குக்கு வர, ராஜிவ்காந்தி தன்னை அணுகியதாக கலைஞரும் தெரிவித்துள்ளார். துரதிர்ஷ்டவசமாக அந்த சந்திப்பு நிகழவில்லை. ஒருவேளை அந்தச் சந்திப்பு நிகழ்ந்திருந்தால், இலங்கைப் படையினரும் நட்வர்சிங், தீக்சித் போன்ற இந்திய அரசுக்குள்ளேயே இருந்த சதியாளர்களும் கலைஞர் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தி இருக்கக்கூடும்.

 

தீராநதி: இலங்கை இனப் பிரச்சினையில் இந்தியாவின் தலையீடு இருக்கவேண்டும் என்று சமீபத்தில் ஆண்டன் பாலசிங்கம் ஒரு பேட்டியில் வேண்டுகோள் வைத்தார். திடீரென்று வந்த அவரது இந்த வேண்டுகோளுக்கு என்ன காரணம்?

 

வ. ஐ. ச. ஜெயபாலன்: அமைதிப்படை காலகட்டத்துக்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிரான போக்கில் புலிகளையும் இணைத்துக்கொள்ள முடியும் என்ற எண்ணம் இந்தியாவின் எதிரிகளுக்கு இருந்தது. பல்வேறு நிகழ்வுகளின் காரணமாக புலிகள் இந்தியாவுக்கு எதிரான போக்குடன் கைகோர்த்துக் கொள்ளத் தயாராவது புரிந்துகொள்ளக் கூடியதுதான். ஆனால், 1994இல் இந்திய நலன்களுக்கு எதிராகச் செயல்படுவதில்லை, இந்திய விரோதிகளுடன் சம்மந்தப்படுவதில்லை என்ற உறுதியான முடிவுக்கு புலிகள் வந்தார்கள். அதன் அடிப்படையில்தான் சில வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்த பிரபாகரன் _ பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சில சமிக்ஞைகள் இருந்தன. அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கிய காலகட்டத்தில் இருந்தே, சீர்குலைந்திருந்த இந்தியாவுடனான உறவை மேம்படுத்திக் கொள்வதுக்கான சமிக்ஞைகள், புலிகள் பக்கமிருந்து டில்லியையும் சென்னையையும் நோக்கி அனுப்பப்பட்டன.

 

தீராநதி: “இந்தியாவுடன் உறவை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்ற புலிகளின் முடிக்கு என்ன காரணம்?

 

வ. ஐ. ச. ஜெயபாலன்: முக்கியக் காரணம் வை.கோ., ராமதாஸ், திருமாவளவன், நெடுமாறன் போன்ற எங்கள் தமிழக நண்பர்கள்தான். இந்தியாவும் இலங்கைத் தமிழர்களும் இணைந்து நிற்கிற ஒரு மேம்பட்ட நிலைக்காக இவர்கள் போராடுகிறார்கள். இலங்கைத் தமிழர்கள் மற்றும் இந்தியாவின் நலன்களை நீண்டகால நோக்கில் கருத்தில் கொண்டு வெளிவிவகார கொள்கைகளை வகுத்த இந்திராகாந்தியின் நிலைப்பாட்டை மீண்டும் ஏற்படுத்தும் முயற்சியில், இந்த நண்பர்கள் செயல்படுகிறார்கள். இவர்கள் தமிழ்நாட்டில் இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்தியா தலையிட வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கும் அதேநேரத்தில், வன்னியில் வந்து, “இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நீங்கள் போகவேண்டாம், இந்தியா உங்களுக்கு எதிராகப் போகாமல் இருப்பதுக்கு நாங்கள் பொறுப்பு” என்று உறுதியாக கேட்டுக் கொள்கிறார்கள். இந்தக் கோரிக்கையை புலிகளால் மீற இயலாது. (ஆனால், இந்த அரசியல் தலைவர்கள் பல்வேறு அணிகளில் இருப்பது அவர்களது அரசியல் என்றாலும், அவர்களது பகைமை எங்களைப் பொறுத்தவரைக்கும் இன்னொரு துரதிர்ஷ்டமான நிகழ்வு.) இத்தகைய போக்கின் தொடர்ச்சியாகத்தான் ஆண்டன் பாலசிங்கத்தின் சமீபத்திய பேட்டியை நான் பார்க்கிறேன். இலங்கையில் நிகழ்ந்துவரும் ஈழத் தமிழர்களுக்கான விடுதலைப் போரில், இந்தியாவின் ஆதரவை அவர் கோரி நிற்கிறார்.

 

தீராநதி: இலங்கையில் தனிஈழம் அமைவது ஏதோவொரு வகையில் மீண்டும் இந்தியாவில் தமிழ் தேசியவாதமும் தனித்தமிழ்நாடு கோரிக்கையும் தலைதூக்க காரணமாகிவிடும் என்னும் அச்சம், குறிப்பாக வன்முறை சார்ந்த ஒரு தேசியமாக அது வளரும் என்னும் கருத்து இந்தியாவிலேயே ஒரு சாராரிடம் இருக்கிறது. இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் நிலையைத் தீர்மானிப்பதில், இந்தக் கருத்து ஒரு முக்கியமான பங்களிப்பாக இருப்பதாகக் கருதுகிறீர்களா?

 

வ. ஐ. ச. ஜெயபாலன்: நிச்சயமாக, இந்தக் குரலுக்கு முக்கியத்துவம் இருக்கிறது. ஆனால், இந்தக் குரல் சரியானதுதானா என்பதுதான் இங்கே என் கேள்வி. தமிழகத்தில் பிராமணர்களுக்கும் பிராமணர்கள் அல்லாதவர்களுக்கும் இடையே நீண்ட காலமாகவே ஒரு பனிப்போர் இருந்து வருகிறது. இந்தப் பனிப்போரின் தொடர்ச்சியாக, தவறான சில புரிதல்களின் அடிப்படையில், தமிழக பிராமணர்கள் பலர் எங்கள் போராட்டத்துக்கு எதிரான கருத்து நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு எதிரானவர்களுக்குத் துணைபோயிருக்கிறார்கள். எங்களின் பலமாக இங்கே இருப்பவர்கள், எதோவொரு வகையில் பெரியாருடன் சம்பந்தப்பட்டவர்களாகத்தான் இருப்பதும் அவர்கள் இந்தக் கருத்தை நோக்கி நகர காரணமாக இருக்கலாம். தமிழகத்தில் நடக்கும் பிராமணர்களுக்கும் பிராமணர்கள் அல்லாதவர்களுக்கும் இடையிலான பிரச்சினையை, இலங்கைப் பிரச்னையில் தீர்க்க முனைவது மிகவும் அபத்தமானது. இங்குள்ளது போலான பிராமணர்களுக்கும் பிராமணர் அல்லாதவர்களுக்கும் இடையேயான பிரச்சினை இலங்கையில் இல்லை. எங்கள் போராட்டத்தில் அங்குள்ள பிராமணர்கள் பங்கெடுத்திருக்கிறார்கள், இரத்தம் சிந்தியிருக்கிறார்கள். இலங்கைத் தமிழர்களுக்கு விடுதலை கிடைப்பது, தமிழகத் தமிழர்கள் மத்தியில் தமிழ் தேசியவாதத்தை வளர்க்கும் என்ற வாதத்துக்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை. தமிழகத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கிற தலைவர்கள் அனைவரும், தமிழர்களாக இருக்கிற அதேநேரத்தில் இந்தியர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் வன்னிக்கு வந்தபோது பேசியவற்றை நீங்கள் கேட்டால் இதனை உணரமுடியும். இங்கு தமிழ் தேசியம் ஒரு வன்முறை சார்ந்த தேசியமாக வளருமாக இருந்தால், அது காவிரியில் வராத தண்ணீரிலும், இராமநாதபுர மாவட்டத்து மீனவர்களின் கண்ணீரிலும் இருந்துதான் வருமேயழிய, நிச்சயம் இலங்கையிலிருந்து ஒருபோதும் ஏற்படப்போவதில்லை.

1956ஆம் ஆண்டு நேரு செய்த அரசியல் அமைப்புச் சீர்திருத்தங்களுக்குப் பிறகு, குறிப்பாக மொழி அடிப்படையிலான மாநிலங்கள் அமைந்த பிறகு, தொடர்ந்து சீர்திருத்தங்கள் வராவிட்டாலும்கூட, நடைமுறையில் கூட்டாட்சிப் பண்புகளை நோக்கி இந்தியா நகரத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் வடமாநில கட்சிகளால் மட்டும் தனித்து ஆட்சியமைக்க முடியாது என்ற சூழல் இன்றைக்கு உருவாகியிருக்கிறது. இத்தகையை ஒரு நெகிழ்வுப் போக்கும் பத்திரிகை சுதந்திரமும் நீதித்துறையின் சுயாட்சியும் இருக்கிற வரைக்கும் இந்தியாவில் தேசிய இனப் பிரச்சினை வருவதுக்கான வாய்ப்பு இல்லை. மேலதிகமாக இந்தியாவுக்கு இருக்கும் உள்நாட்டுப் பிரச்சினை, நதி நீர்கள் தொடர்பான சர்வதேச சட்டங்களை அமுலாக்குகிற வல்லமையை இந்திய மத்திய அரசு இழந்திருக்கிறது என்பதுதான். தமிழகம் மட்டுமல்லாமல் மற்ற ஏனைய இந்திய மாநிலங்களிலும் இந்தப் பிரச்சினை இருக்கிறது. (கடல், நதி, காற்று ஆகியவை தொடர்பான சர்வதேச சட்டங்களை நிலைநிறுத்துகிற வல்லமையை இந்திய அரசு பெறவேண்டும். ஏனெனில், அதுதான் இந்திய அரசுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்தும்.) இந்தியாவுக்கு இருக்கிற இன்னொரு முக்கியப் பிரச்சினை காஷ்மீர். அது இந்தியாவுக்கு ஒரு புற்றுநோய் மாதிரிதான். அதன் தொடர்ச்சியானது இந்து _ முஸ்லிம் பிரச்சினை. மற்றொன்று, நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, தன்னுடைய மீனவர்களைக் கொலைசெய்கிற நாட்டின் கடற்படையைப் பலப்படுத்துகிற இந்திய அரசின் செயல். இதுபோன்ற சிறுசிறு தவறுகளை உடனுடனே அவ்வப்போது கவனிக்காவிட்டால், அது பெரிய தவறுகள் நிகழக் காரணமாகிவிடும். இது எதிரிகளுக்குதான் சாதகமாகப் போய்முடியும். (இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்கும் முன், இந்தியா தன் மக்களைப் பாதுகாக்கவேண்டும் என்பது முக்கியம். இந்திய மீனவர்களின் நம்பிக்கையைப் பெற இலங்கைக் கடற்படைக்கு இந்தியா கொடுத்த கப்பலையும் ஆதரவையும் திரும்பப்பெற வேண்டும்.) ஜனநாயகக் கூட்டாட்சி அடிப்படையிலான, பத்திரிகை சுதந்திரமுள்ள இந்தியா, இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல் தென்னாசிய மக்களுக்கும் அவசியமான ஒரு காலம் இது.

இந்திய மாநில இனங்களில் வங்காளிகளும் தமிழர்களும் மட்டும்தான் ஒரு பல்தேசிய தன்மையுள்ள மாநில இனங்கள். இவர்கள் பலமான கடல்வழித் தொடர்புகள் கொண்ட இனங்களும்கூட. எனவே, இவர்களை அணுகுவதில் விசேஷமான அணுகுமுறை இந்திரகாந்தி காலத்தில் இருந்தது. பங்களாதேஷ் பிரச்சினையின் போது, அதனை டில்லியின் பார்வையோடு மட்டும் கையாளாமல், கல்கத்தாவில் இருந்த இடதுசாரிகளின் ஆலோசனைகளோடும்தான் அவர் கையாண்டார்; அவர்கள் எதிரணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை அவர் புறக்கணிக்கவில்லை. பாராட்டத்தக்க வகையில், வங்காளிகளின் பல்தேசிய தன்மையையே தனது பலமாகக் கொள்ளும் வகையில் அவர் வங்காளத்தைக் கையாண்டிருந்தார். அதுபோல், இலங்கைத் தமிழர் போராட்டத்திலும் இந்திராகாந்தி தமிழகத்தின் ஊடாகத்தான், குறிப்பாக எம்.ஜி.ஆரையும் கலைஞரையும் கலந்துதான், அதனைக் கையாண்டார். அந்த நாட்களில் யாரும் தமிழ்நாட்டுத் தமிழர்களைச் சந்தேகிக்கவும் இல்லை. இந்திராகாந்தி காலகட்டத்துக்குப் பிறகுதான், இலங்கைத் தமிழர்களுக்கு விடுதலை கிடைத்தால் தமிழகத்தில் சிக்கல் உருவாகும் என்ற கருத்து தமிழகத்தில் உள்ள சிலராலும் டில்லியிலுள்ள சிலராலும் உருவாக்கப்பட்டது. பங்களாதேஷ் விடுதலைப் போரில், அப்போது வங்காளத்தின் தலைமையில் இருந்த சி.பி.ஐ.யும் சரியான ஒரு நிலைப்பாட்டை எடுத்தது. ஆனால், அதே போன்று பல்தேசிய தன்மையுள்ள தமிழர்கள் விஷயத்தில் துரதிர்ஷ்டவசமாக இடதுசாரிகள் நேர்மாறாக நடந்துகொண்டார்கள். வங்காளத்தில் எடுத்த நிலைப்பாட்டை தமிழகத்தில் எடுக்கத் தவறிவிட்டார்கள். வங்காளிகளைப் போல தமிழர்களை நம்பாத போக்கு இந்திய நலன்களுக்கு எதிரான போக்கு.

ஆனால், இடதுசாரிகள் மத்தியில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டிக்கிற மாற்றங்கள் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. தமிழகத்திலுள்ள எங்களது நண்பர்களும் இடதுசாரிகளும் ஒன்று சேர்வார்களாக இருந்தால், அது டில்லி ஒரு சரியான நிலைப்பாட்டை எடுக்க உதவும். மட்டுமல்லாமல் இலங்கைத் தமிழர்களும் விடுதலைப்புலிகளும்கூட கடந்தகாலத் தவறுகளை, சில விமரிசனங்களுக்கு ஊடாகத் திருத்திக் கொண்டு, இந்தியா தொடர்பாக சரியான நிலைப்பாட்டை எடுக்க உதவும்.

 

தீராநதி: ஆனால், சோனியாகாந்தி தலைமையில் செயல்படும் இன்றைய அரசு, ராஜீவ்காந்தி படுகொலையை மறந்துவிட்டு, தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, அவ்வளவு சுலபத்தில் விடுதலைப்புலிகளுடன் உறவு பாராட்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?

 

வ. ஐ. ச. ஜெயபாலன்: ராஜிவ்காந்தி கொலை ஒரு மாபெரும் தவறு என்பதை நான் மறுக்கவில்லை. இரண்டு தரப்பிலும் அனேக தவறுகளைக் கடந்த காலங்களில் இழைத்துவிட்டோம். ராஜீவ்காந்தி கொலை என்னும் மாபெரும் தவறு தொடர்பாக தமிழகத்திடமும் இந்தியாவிடமும் ஈழத் தமிழ்க் கவிஞன் என்ற முறையில் நான் மன்னிப்பு கோருகிறேன். சோனியாகாந்தி, ஒரு பெரும்தாயின் மனதோடு மன்னிப்பார், இந்தப் பிரச்சினையை அணுகுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தக் கொலைவழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தவர்களை மன்னித்த வகையில், சோனியாகாந்தியின் பங்களிப்பு, ஒரு காந்திய நாட்டின் பெரும்தலைவியாக, தாயாக அவரது பண்பைச் சுட்டுகிறது. அவரது காலத்தில் இந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு, ஈழத்தமிழர்களும் இந்தியாவும் கைகோர்க்கும் நாட்கள் நிச்சயம் உருவாகும்.

இந்தியா எங்களின் கலாசார தாய்நாடு. அந்த உரிமையோடு நான் கேட்பது, ஒரு நீதியான தீர்வு இலங்கையில் ஏற்படுவதுக்கு உங்களது உதவியை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்பதுதான். செஞ்சோலை போன்ற, குழந்தைகளைக் கொன்ற நிகழ்வுகள் நடக்கும்போதுகூட குரல்கொடுக்காமல் மௌனமாக இருக்கும் நிலையை மாற்றிக்கொண்டு இந்தியா குரல் கொடுக்கவேண்டும்.

 

தீராநதி: தமிழக முதல்வராக கலைஞர் மீண்டும் பதவியேற்றுள்ளார். மத்திய அரசிலும் அவரது குரல் சக்திவாய்ந்த ஒன்றாக இன்று இருக்கிறது. இந்நிலையில் அவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

 

வ. ஐ. ச. ஜெயபாலன்: எங்கள் போராட்டத்தைப் பொறுத்தவரைக்கும், ஒரு பெரும் ஆதரவு சக்தியாக இருந்த எம்.ஜி.ஆர். காலமான பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும், வல்லமையோடும் மனநிலையோடும் இன்று கலைஞர் மட்டும்தான் இருக்கிறார். எங்கள் உரிமைப் போராட்டத்தில் இந்திராகாந்தியின் மரணம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அவரைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர். மரணமும் நிகழ்ந்தது. இந்த இரண்டு நிகழ்வுகளும் நிகழாமல் இருந்திருந்தால், நீண்டகால அடிப்படையில் இந்தியாவின் நலன்களைப் பேணும் விதமாக 1980களின் கடைசிப் பகுதியிலேயே எங்கள் பிரச்சினைகள் பெருமளவில் தீர்க்கப்பட்டிருக்கும். அதனை நோக்கிய ஒரு அணுகுமுறை இந்திய அரசிடமும் விடுதலைப்புலிகளிடமும் இருந்தது.

இந்திராகாந்திக்கும் எம்.ஜி.ஆருக்கும் பிறகு இந்திய அரசையும் தமிழ்நாட்டையும் எங்கள் சார்பாக செயல்படுத்தக்கூடிய தலைவராக கலைஞர் இருந்தார். இந்திய அமைதிப்படை இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான யுத்தத்தை நடத்திக்கொண்டிருந்தபோது, அதனை எதிர்த்தவர் கலைஞர் என்பதை நாங்கள் ஒருபோதும் மறக்க இயலாது. ஆனால், அவரது அரசு கலைக்கப்பட்டது. அவர் அரசு கவிழ எங்களுடைய பிழைகளும் காரணமாக இருந்தன. இதுவும் எங்களது போராட்ட வரலாற்றில் நிகழ்ந்த ஒரு துரதிர்ஷ்டமான நிகழ்வு. எங்களது இன்னொரு பெரிய துரதிர்ஷ்டம் ராஜிவ்காந்தியின் கொலைத் தொடர்பான விஷயங்கள். இவைகள் அனைத்தும் நிகழாமல் இருந்திருந்தால் 1990களிலாவது எங்களுக்கு விடிந்திருக்கும். இந்தியாவுக்கும் ஒரு பலமான அணியாக இலங்கைத் தமிழர்கள் இருந்திருப்பார்கள். அன்று செய்யமுடியாமல் போன வரலாற்றுக் கடமையைச் செய்யக்கூடியவராக இன்றும் கலைஞர் இருக்கிறார். அன்று ராஜீவ்காந்திக்கும் கலைஞருக்கும் இருந்த உறவைவிட, இன்று அவருக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவு பலமாக இருக்கிறது. வை.கோ., ராமதாஸ், நெடுமாறன், திருமாவளவன் போன்ற தமிழக அரசியல் தலைவர்களும் இந்த வகையில் மிக முக்கிய பங்களிப்புகளைச் செய்ய முடியும்.

 

தீராநதி: கடைசியாக, இந்த நேர்காணலின் வழியாக நீங்கள் வலியுறுத்த விரும்பும் விஷயம் என்ன?

 

வ. ஐ. ச. ஜெயபாலன்: இந்தியா, சிறு மனிதர்களால் சூழப்பட்ட ஒரு கலிவர். மிகப்பெரிய சக்திகளைக் கொண்டவன்தான் என்றாலும், கலிவர், சிறு மனிதர்களைப் பகைத்துக்கொண்டு கண்ணை மூடித் தூங்க இயலாது. அதுபோல் கலிவரைச் சூழ்ந்திருக்கும் சிறு மனிதர்களாலும் அவனைப் பகைத்துக் கொண்டு நிம்மதியாக வாழ இயலாது. எனவே, சிறு மனிதர்களுக்கும் கலிவருக்குமான உறவு மிக முக்கியம். இந்தியா தனது வரலாற்றுப் பாதையை திரும்பிப் பார்த்து நண்பர்களையும் எதிரிகளையும் அடையாளம் காண வேண்டும். இந்த உறவு இரண்டு தரப்பினரின் நலன்களையும் பாதுகாக்கும் வகையில் அமையவேண்டும். அவ்வகையில் இந்தியா வெளியுறவுக் கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும்.

சீனாவில் மிகப் பெரும்பகுதியினர் சீன மொழி பேசுகிறார்கள். கிட்டத்தட்ட 94 சதவிகிதம். மேலும், ஐரோப்பிய காலனிய நாடுகளால்கூட வெல்லப்பட முடியாமல் இருந்தது, வரலாற்று காலம் தொட்டே அவர்கள் ஒரு பெரும் தேசமாக இருந்தது என்று நீண்ட கால அடிப்படையில் சீனாவுக்குப் பல்வேறு அனுகூலங்கள் இருக்கிறது. அண்மைக் காலங்களில் சீனாவின் வளர்ச்சி மிகவும் அசுரத்தனமானது. அதன் பலத்தின் அடிப்படையில்தான் சீனாவின் வெளிவிவகார கொள்கை அமைந்திருக்கிறது. எனவே மிகவும் நிதானமாக, தன்னுடைய நண்பர்களுடன் உறுதியாக நின்றுகொண்டு அவர்கள் காய்களை நகர்த்துகிறார்கள். ஆனால், மாறாக இந்தியாவின் வெளிவிவகார அணுகுமுறை பயம் மற்றும் சந்தேகங்களின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. இது இந்தியாவின் பலத்தின் அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும்.

பாகிஸ்தான் தொடர்பான தனது வெளியுறவுக் கொள்கையையே, ஏனைய தென்னாசிய நாடுகளுக்குமான வெளியுறவுக் கொள்கையாக இந்தியா வைத்திருக்கக்கூடாது. அதுபோல் பாகிஸ்தானைக் கையாள அமைக்கப்பட்ட ‘ரா’ போன்ற அமைப்புகளையே, மற்ற நாடுகளைக் கையாளவும் பயன்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. பாகிஸ்தான் தவிர்த்த மற்ற தென்னாசிய நாடுகளுடனான வெளியுறவுக் கொள்கைகளையும் அதனைக் கவனிக்கும் அமைப்புகளையும் இந்தியா மீளமைக்க வேண்டும். அப்படி மாற்றியமைக்கும்போது பல்வேறு ஊடுறுவல்களைத் தடுக்கிற வல்லமையை இந்தியா பெறும்.

இந்தியாவின் நலன்களுக்கு எதிராக இலங்கைத் தமிழர்களுக்கு விடுதலை இல்லை. அதே நேரத்தில் இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்கும் பணிகளில் இலங்கைத் தமிழர்கள் இந்தியாவுக்கு உதவ முடியும் என்பதையும் நான் வலியுறுத்த விரும்புகிறேன். குறிப்பாக, உலக அளவில் இந்தியாவுக்கு எதிராக நடந்துவரும் சதியில் விடுதலைப்புலிகள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். தங்களுக்குக் கிடைக்கிற, இந்தியாவுக்கு எதிரான உளவுத்துறைச் சார்ந்த தகவல்களை, புலிகள் இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

இந்தியாவின் நலன்களுக்காக இலங்கைத் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்காக இந்தியாவும் செயல்படும் ஒரு பொற்காலம் மிக அண்மையில் இருக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

 

சந்திப்பு: தளவாய் சுந்தரம்
படங்கள்: சித்ரம் மத்தியாஸ்

நன்றி: குமுதம் தீராநதி, October 01, 2006

 

மூலம்: குமுதம் தீராநதி

Edited by nunavilan

சந்திப்பு: தளவாய் சுந்தரம்

படங்கள்: சித்ரம் மத்தியாஸ்

நன்றி: குமுதம் தீராநதி, October 01, 2006

 

மூலம்: குமுதம் தீராநதி

 

இதை ஏன் நுணாவிலான் பதிந்தார் என்பது விளங்கவில்லை. அதில் சொல்லியிருக்கும் அரசியல் முதிர்ச்சி குறைந்த கருத்துக்களை பற்றி நான் கூறவரவிலை. ஆனால் உண்மையை பிரளவைக்கும் பிரமை தரத்தக்க சில கருத்துக்களை கண்டிக்கிறேன். அவர் தயாரானால் பொய்யடுடன் இதில் கூறப்பட்டிருக்கும் சமாசாரங்கள் பற்றி விவாதிக்கலாம்.  அவர் விரும்புகிறாரோ இல்லையோ இதில் காண்ப்படும் அரசியல் முதிர்ச்சி அற்ற சில கருத்துகள் விவரணத்துக்கு உள்ளக்கப்படும்.  தேவையான இடங்களில் பதியப்பட்டு கருத்து கூறப்படும்.

 

இந்த  பதில்களின் தன்மை பொய்யட் இந்தியாவை பந்தம் பிடிக்கும் நிலையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. மிகப்பெரிய பிழையாக இந்தியாவை எதிர்க்க மட்டும்தான் தமிழர் மீது இலங்கை தாக்குதல் நடத்துகிறது என்ற பிரமை உண்டாக்கப்படிருக்கிறது. இன்று டைம்ஸ் கூட அடிப்படையில் புத்தமதம் இனத்துவேசமான மதம் என்று கூறுகிறது. அதாவது 6ம் நூற்றாண்டு மகாவம்ச கதையில் இருக்கும் பிரிவினைவாதத்ததை சேர சோழ பாண்டியர் மீது தள்ளிவிட்டுவிட்டு, இன்றைய இந்தியாவை சேர சோழ பாண்டியராக இலங்கை நினைத்து குழம்புவதாக பொய்யட் விபரிக்கிறார்.  உலகத்தில் ஐ.நா என்று இருப்பதை பொய்யடின் விளக்கங்கள் மறந்து போகிறது. ரஜீவ் வெளிப்படையாக இலங்கைய பிடிக்க திட்டமிட்டார் என்றதை பொய்யட் தெரிந்திருந்தும் தனது பந்த குணத்தால் போலும் அதை நேரடியாக சொல்ல வேண்டிய இடத்தில் தவிர்த்துவிட்டார். 

 

அவை எல்லாம் பின்னர். ஆனால் இதில் எந்த இடத்திலும் பொய்யட் தனது 1983ம் காட்டுரைகளை மையப்படுத்தி முஸ்லீம்களின் பிரச்சனைகள்  பற்றிக்கூறவே இல்லை. எந்த இடத்திலும் முஸ்லீம்களுக்கு சிங்கள மக்களால் பிரச்சனை பற்றி கூறவில்லை.1915 ல் நடந்த இனக்கலவரத்தை பற்றி அறியாதவர் போல் பதில்கள் கொடுப்பட்ரிருக்கிறது. மேலும் தமிழருக்கு உரிமை கொடுத்தால் அவர்கள் இந்தியாவுடன் இணைவார்கள் என்பதால் உரிமை கொடுக்கவில்லை என்பதும், அதே நேரம் முஸ்லீம்களுக்கு உரிமை கொடுத்திருக்கு, ஏன் எனின் அவர்கள் பாகிஸ்தானுடன் இணைந்து இலங்கைக்கு உதவுவார்கள் என்றும் பொய்யடின் பதில்களில் இருந்து அனுமானிக்க வேண்டிய நிலைக்கு ஒருவர் தள்ளப்படுகிறார். இது வெறும் அரசியல் முதிர்ச்சி இல்லாத பதில்களால் வருவது.

 

 

கட்சத்தீவை விட்டுக் கொடுத்தும் (1974,1976 உடன்படிக்கைகள்), இலங்கையை இந்திராகாந்தியால் வெற்றிபெற முடியவில்லை. பங்களாதேஷ§ம் பாகிஸ்தானும் மோதிக்கொண்டிருந்த, பங்களாதேஷ் விடுதலைப் போராட்ட காலகட்டத்தில், இந்தியா, பங்களாதேஷை விடுதலை வீரர்களாக அங்கீகரித்து. ஆதரித்தது. ஆனால், இலங்கை ராணுவரீதியாக பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாடு எடுத்ததுடன் பாகிஸ்தானுக்காக தனது தளங்களைத் திறந்துவிட்டது. (1971 ம் ஆண்டு யுத்தம் )

 

 

1974ம் ஆண்டைய ஒப்பந்தம் 1971 போருக்கு பின்னால் வருவது. இதனால் இந்திராகாந்தியின் விட்டுக்கொடுப்புக்களால் பலன் இல்லை என்றதை பொய்யட் விளங்கப்படுத்த தவறுகிறார். உண்மையில் இங்கே அவர் தன்னை அறியாமல்  "ஆண்டுகளில்" ஒரு தப்பு விளக்கம்தான் கொடுக்கிறார்.  உண்மையில் ஏன் இந்திரா காந்தி தனது சொல்லை இலங்கை கேட்காது என்று தீர்மானித்தார் என்ற காரணத்தை பொய்யட்டுக்கு தெரியுமா என்பதுவே சந்தேகமேதான். ஆனால் அது பலதவை யாழின் விவாத்தங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

1900 இன் ஆரம்ப காலங்களில் இராமநாதன் அநாகரிக தர்மபாலாவுக்கு புத்தம் வளர்க்க உதவிகள் செய்தார்.  பிற்காலம் அருணாசலம் யாழ்ப்பாண தமிழ் காங்கிரசை வலோற்காரமாக UNP யுடன் இணைத்தார். இவர்கள் எவ்வளவோ அறிஞர்களாக இருந்தும், சார் பட்டம் பெற்றும் இப்படியான சில காரியங்கங்களால் தீர்க்க தரிசனம் குறைந்தவர்களாக பிற்காலம் எடுத்துகொள்ளப்பட்டார்கள். ஆனால் 1930 களில்,  கிறிஸ்த்தவ குடும்ப பண்டாரநாயக்கா, தான் கற்ற மேற்குநாட்டு கல்வியின் அடையாளமாக இருந்த கோட், ஸூட்டுக்களை எரித்துவிட்டு பௌத்தத்தை கையில் எடுத்தார். JR ஏற்கனவே சிங்களம் மட்டும் திட்டங்களில் இறங்கியிருந்தார். இதனால் சுதந்திரத்தின் பின்னர் இவர்களுக்கு சிங்களத்திடமிருந்து கிடைத்த அரசியல் வெற்றிகளால் சிங்கள மக்களால் தீர்கதரிசிகளாக, இனத்தை காப்பாற்றுபவர்களாகக் காணபட்டார்கள். 

 

நவகால அரசியல்ச் சிங்கள இனத்துவேசம் அங்கேதான் ஆரம்பமானது. இதற்கு முந்தையதுதான் இராமநாதன் சிங்களவளரை வெள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற பிருத்தானியா போயிருந்தார்.  இப்போது பௌத்தம்-இந்து, சேர-சோழ-பாண்டிய கதைகள் சொல்வோர் அதை நிறுவத் தவறினால் அவை இட்டுக்கட்டே. இன்றுமே மகாவம்ச கதை இனத்துவேசக்கதை அல்ல என்றும் அந்த நாட்களில் அது சிங்கள தமிழ் சண்டைக்காக பாவிக்கப்படவில்லை என்றும் வாதிக்கிறார்கள்.  இலங்கையில் இனத்துவேசம் Shape up பண்ணியதை அறியாத அர்ச்சுன் போன்ற ஓடுகாலிகள் இலங்கையின் இனத்துவேசம் இலங்கையின் ஒரு பாதுகாப்பு கொள்கையே என்ற விளக்கத்தை ஏற்க விரும்புகிறார்கள். அது இந்தியா மீதான பயத்தால் பிறந்தது என்கிறார்கள் இவரின் குருவானவர்கள்.

 

இந்த அவிவிவேக பூரண குருக்கள் இனத்துவேசத்தையும், உரிமையையும் போட்டுக் குழம்புகிறார்கள். இதனால் உரிமை பெறும் கதைகளில் இறங்குகிறார்கள். இனத்துவேசதால் 1971-, 1977 ஆண்டுகாலங்களில் இலங்கை அரசியல் அமைப்புகள் மாற்றப்பட்டு சோல்பரி அரசியல் அமைப்பு நீக்கப்பட்டு உரிமைகள் பறிக்கப்பட்ட கதைகளை PhD மாணவர்களுக்கு புத்தகம் எழுதுவோருக்கு விளங்காது. இவர்கள் மற்றவர்களை கோழைகளாக மட்டும்தான் காணமுடியும்.  இனத்துவேசத்தால் இலங்கையின் அரசியலில் 1948 இருந்து நடந்த மாற்றங்களை இவர்கள் அறிய வாய்ப்பில்லை. அரசியல் அமைப்பில் ஏற்பட்ட மாற்றங்களை மறக்கிறார்கள். சோல்பரி அரசியல் அமைப்பு விலைக்கு வாங்கப்பட்ட தமிழ் மந்திரிகளின் உதவியுடன் நடை முறைக்கு வரும் போது உரிமை தருவது என்ற  ஒரு சொல் இலங்கை அரசியல் அகராதியில் இருக்கவில்லை என்பது இந்த அரசியல் முட்டாள்களுக்கு விளங்காது. தமிழ் மக்களும் சிங்கள மக்களுடன் சம உரிமையுடன்தான் சுதந்திரம் அடைந்தார்கள்.

 

சிங்களம் மட்டும் சட்டம், புத்த மதம் ஆட்சி மதம் போன்ற சட்டங்கள் இந்தியாவிடமிருந்து இலங்கையை பாதுகாக்க வந்த பாதுகாப்பு கொள்கைகள் அல்ல. அவை சோல்பரி அரசியல் அமைப்பின் கீழ் சுதந்திரம் பெற்ற மக்களின் உரிமை பறித்தலாகும். இது சட்டங்களின் மூலம் செய்யபட்டது. ஆனாலும் இதில் சட்டங்களை தான் ஆக்கி கொண்டு இந்தியாவுடன் இணைய தமிழ் மக்களுக்கு அதிகாரம் இருந்திருந்தால் சிங்கள அரசால் படிபடியாக சட்டங்களை ஆக்க முடிந்திருக்கது என்பது இலங்கையின் இனத்துவேசத்தை இலங்கையின் பாதுகாப்பு கொள்கையாக வருணிப்பாரால் அறிய முடியாதல்ல. இவர்களில் சிலர் RAW இன் சம்பளப் பட்டியலில் இருக்கும் நபர்கள் என்பதால், இலங்கையின் இனத்துவேசத்தை மறைத்து இந்தியாவுக்கு சார்பாக அதை திரிக்கிறார்கள்.  இது அரிசுனின் அரசியலில் ஏற்றுக்கொள்ள கூடியது ஏன் எனில் யாழில் இந்தியாவின் அண்மைய முரண்பட்ட நடத்தைகளையும், புலிகள் மீதான் பழிவாங்கல்களையும் இந்திய பாதுகாப்பு கொள்கைகளா வலிந்து காட்டி சோர்ந்து போய் இருப்பவர்களில் அவரும் ஒருவரே. 

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.