Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளுக்கு உதவியதை அமெரிக்க நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார் கனேடியத் தமிழர் சுரேஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகளுக்கு உதவியதை அமெரிக்க நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார் கனேடியத் தமிழர் சுரேஸ்
[ புதன்கிழமை, 03 யூலை 2013, 02:09 GMT ] [ கனடா செய்தியாளர் ]

 

விடுதலைப் புலிகளுக்கு இராணுவத் தொழில்நுட்பங்களை பெற்றுக் கொடுக்க உதவியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியான சுரேஸ் சிறீஸ்கந்தராஜா.

2004 செப்ரெம்பருக்கும். 2006 ஏப்ரலுக்கும் இடையில் விடுதலைப் புலிகளின் ஆயுதக் கொள்வனவாளருக்கு, விமான கருவிகள், நீர்மூழ்கி, போர்க்கப்பல் வடிவமைப்பு மென்பொருட்கள், இரவுப்பார்வைக் கருவிகள், தொடர்பாடல் தொழில்நுட்பங்களை பெறுவதற்கு இவர் உதவியுள்ளார்.

நியூயோர்க், புரூக்லின் நீதிமன்றத்தில், சுரேஸ் சிறீஸ்கந்தராஜா, நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட விசாரணையின் போது விடுதலைப் புலிகளுக்குத் தாம் இராணுவத் தொழில்நுட்பங்களை பெறுவதற்கு உதவியதை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து அவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

2006ல் ரொரொன்ரோவில் கைது செய்யப்பட்ட சுரேஸ் சிறீஸ்கந்தராஜா, ஏற்கனவே சிறையில் இருந்து வருவதால், அவரது தண்டனைக்காலம் குறைக்கப்பட வாயப்புகள் உள்ளன என்று கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்காவில் பிறந்து கனேடியக் குடியுரிமை பெற்ற இவர், தண்டனைக்காலம் முடிந்த பின்னர் அமெரிக்காவில் இருந்து கனடாவுக்கு நாடு கடத்தப்படுவார்.

http://www.puthinappalakai.com/view.php?20130703108596

  • கருத்துக்கள உறவுகள்

இவரையும் இப்ப ஆரும் கள்ள மட்டைக்காரர் என்று சொல்லிக்கொண்டு வரப்போகினம்.....அல்லது துப்பறிந்து  பத்தி  எழுதப்போகினம்...அல்லது சாதி பற்றி எழுதுவினம்.....தாங்கள் மட்டும் சிங்களவரோடை கூடிக் குடித்து சல்லாபிப்பினம்.இவையெல்லம் நம்ம இனம்...

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்

சிறையில் இருந்த காலம் தண்டனை காலமாக்கப்பட்டு விரைவில் விடுதலை ஆகலாம் என ஆங்கில பத்திரிகை (national post or global mail)ஒன்று கூறியதாக  தமிழ் இணைய வானொலி ஒன்று கூறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அதுசரி, புலிகள்தான் அழிந்துவிட்டார்களே? பிறகு ஏன் அவர்களுக்கு உதவியவரை இன்னும் அலைக்கழிக்கிறார்கள் ? 

குற்றத்தை ஒப்புக்கொண்டால், தண்டனை குறைவடைய வாய்ப்புகள் இருக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

குற்றத்தை ஒப்புக்கொண்டால், தண்டனை குறைவடைய வாய்ப்புகள் இருக்கலாம் .

 

 

அந்த தம்பி  அனுபவித்தது போதும்

வெளியில் வரணும்

கடவுளை  வேண்டுகின்றேன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.