Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்கினேஸ்வரனை முதலமைச்சராக்கிப் பார்க்கும் சம்பந்தனின் கனவு யாருடையது? (ஆதாரங்களுடன் சிறப்பாய்வு)

Featured Replies

விக்கினேஸ்வரனை முதலமைச்சராக்கிப் பார்க்கும் சம்பந்தனின் கனவு யாருடையது? (ஆதாரங்களுடன் சிறப்பாய்வு)
 

ஞாயிற்றுக்கிழமை, ஆடி 14, 2013 1:48 pm

sampanthan321-270x155.jpg

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு சார்பில் போட்டியிரும் வேட்பாளரைத் தெரிவு செய்யும் முயற்சி கடும் சர்ச்சைகளுக்குள்ளாகியுள்ளது. சட்ட அறிவுடைய ஒருவரே வடக்கு முதல்வராக வரவேண்டும் என்ற தலைவர் சம்பந்தனின் விருப்பமும், வடக்கை  சேர்ந்த ஒருவரே முதலமைச்சராக வரவேண்டும் என்று கட்சியிலுள்ள வடபகுதியைச் சேர்ந்தவர்களின் விருப்பமும் மோதி்க் கொள்வதால் இந்தச் சர்ச்சை எழுந்துள்ளது.

இதனால் நேற்று வரையில் மூன்று தடவைகள் கூடிய போதும் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரைக் கட்சி உறுப்பினர்களால் தெரிவுசெய்ய முடியவில்லை. அநேகமாக நாளை அதுபற்றிய இறுதி முடிவு எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசாவை முன்னிலைப்படுத்தி தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை அண்மையில் முயற்சி எடுத்திருந்தது. தலைவர் சம்பந்தன் வேறு ஒருவரை முதலமைச்சராக்க முயற்சிக்கிறார் என்பதன் அடிப்படையிலேயே அந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. ஆனால், அவற்றையெல்லாம் மீறி சி.வி.விக்கினேஸ்வரனை முதன்மை வேட்பாளராக்குவதில் சம்பந்தன் விடாப்பிடியாக உள்ளார்.

கூட்டமைப்பில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒருமித்துக் கேட்டால்தான் போட்டியிடக்கூடும் என்று சி.வி.விக்கினேஸ்வரன் கடந்தவாரம் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே முதல்வர் வேட்பாளர் ஆவதற்கான இணக்கத்தை அவர் தமிழரசுக் கட்சியிடம் தெரிவித்துவிட்டார் என்று நம்பகரமாக தெரிகின்றது. அதன் பின்னரே அவரை முதலமைச்சராக்குவதில் சம்பந்தன் தீவிரமாகச் செயற்பட ஆரம்பித்தார். ஆனால், கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சியினரும் சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் தவிர்ந்த தமிழரசுக் கட்சியினரும்கூட மாவை சேனாதிராசாவை முதன்மை வேட்பாளராக்கும்படி வலியுறுத்தியதையும் தாண்டி சி.வி.விக்கினேஸ்வரனை முதன்மை வேட்பாளராக்குவதில் விடாப்பிடியாக இருந்தார். இதற்கு சில காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றில் முதன்மையானது சி.வி.விக்கினேஸ்வரனை முதன்மை வேட்பாளாராக்கும்படி இந்தியாவே சமிஞ்சை காட்டியது என்பது. சம்பந்தனை சர்ச்சைக்குள் மாட்டியுள்ள பிரச்சினை இதுவே. அவர் இந்தியாவின் சொற்கேட்டே செயற்படுகின்றார் என்பது இப்போது முழுமையாக வெளிவந்துவிட்டது என்று அவரை விமர்சிப்பவர்கள் கூறுகின்றார்கள்.

சி.வி.விக்கினேஸ்வரனை இந்தியா முன்தள்ளுவதற்கு, அவர் இதுவரையில் எந்த அரசியல் சாயமும் பூசிக் கொள்ளாதவர் என்பது காரணமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள். அதாவது முன்னாள் ஆயுதக் குழுக்கள் அல்லது பிரிவினைக் கோரிக்கையை ஆரம்பித்த தமிழரசுக் கட்சி என்று எந்த அரசியலையும் சாராதவர் அவர். எனவே அவரை தெற்குச் சிங்களவர்கள் அச்சங்கொண்டு பார்க்கப்போவதில்லை என்று இந்தியா கருதுகின்றது. அவருடைய இந்த முகம் அரசமைப்பின் 13 ஆம் திருத்தத்துக்கு கிழான காணி, பொலிஸ் அதிகாரங்களைக் கொண்ட மாகாண சபைகளைப் பெற்றுக் கொடுக்கவும், அதிகாரப் பகிர்வை நியாயமாக மேற்கொள்ளவும் உந்துசக்தியாக அமையும் என்றும் அது கருதுகின்றது. அதாவது இயக்கங்களை அல்லது தமிழரசுக் கட்சியைச் சாராத ஒருவர் முதலமைச்சர் ஆவதன்மூலம் அதிலும் சிங்கள அமைச்சரான வாசுதேவ நாணயக்காராவை தனது சம்மந்தியாகக் கொண்டிருக்கக் கூடியவர் முதலமைச்சர் ஆவதன் மூலம் இரு இனங்களுக்கும் இடையிலான வெளியைக் குறைக்க முடியுமென்று நம்பப்படுகின்றது. குறிப்பாக சி.வி. விக்கினேஸ்வரன் தமிழீழத்தை ஒருபோதும் கோரமாட்டார் என்று சிங்களவர்கள் நம்புவார்கள் என்பதே அந்த எதிர்பார்ப்பு.

இவற்றின் அடிப்படையிலேயே சி.வி.விக்கினேஸ்வரனை முதன்மை வேட்பாளாராக இந்தியா திணிப்பதாகக் கூறப்படுகின்றது.

இதற்கும் மேலாக சி.வி.விக்கினேஸ்வரன் சட்ட நுணுக்கங்களை நன்கு அறிந்தவர் என்பதால் அவர் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களைப் பயன்படுத்துவதில் பெரும் பங்காற்றக் கூடியவர் என்றும், அவரது ஆங்கிலப் புலமை வெளிநாட்டுத் தலைவர்களையும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கழகத்தின் உறுப்பினர்களையும் கையாள்வதற்கு பெரிதும் உதவும் என்பதும் முதன்மை வேட்பாளராக சி்.வி.விக்கினேஸ்வரன் முன்மொழியப்படுவதற்கான காரணங்கள் என்று ஆலோசனைக் கூட்டத்தில் சம்பந்தன் ஏனையவர்களுக்கு கூறியிருக்கின்றார்.

இவரது இந்த நியாயங்களை முழுமையாக ஏற்றுக் கொள்வதற்கு சுமந்திரன் தவிர்ந்த ஏனைய தமிழரசுக் கட்சி உறுப்பினர்களும், ஏனைய கட்சிகளும் ஆரம்பத்தில் தயாராக இருக்கவில்லை. இதனால் எழுந்த சர்ச்சையில் ஒருகட்டத்தில் சம்பந்தன் தலைவரான தான் முன்வைத்த ஒருவரை ஏனையோர் ஆதரிக்கத்தானே வேண்டும் என்று அழுத்தமாக கருத்துத் தெரிவிக்கவேண்டிய நிலை சம்பந்தனுக்கு ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் வேண்டுமானால் சுழற்சி முறையில் மாவையும், மற்றொருவரும் முதலமைச்சர் பதவியை வகிக்கலாம் என்றொரு முன்மொழிவும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினை இப்பிடியே சர்ச்சையாக தொடர்ந்து கொண்டிருந்த காரணத்தினால் இந்தப் போட்டியிலிருந்து தான் விலகிக் கொண்டு சி.வி.விக்கினேஸ்வரனுக்கு இடமளிக்க மாவை முன்வந்தார். தன்னை முன்னிலைப்படுத்திய தனது ஆதரவாளர்களிடம் அவர் இதனை வெளிப்படுத்தியிருக்கிறார். “நான் விட்டுக் கொடுத்து விலகியிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார். ஆனால் அவரது ஆதரவாளர்களிடம் இருந்து இதற்கு எதிர்மாறான கருத்துக்களையே அவர் கேட்கவேண்டியிருந்தது. சி.வி.விக்கினேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக இருந்தால் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டி முடிவெடுக்க வேண்டிவரும் என்று கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டிருக்கின்றார். இவற்றை அடுத்து நேற்றைய தினமும் இது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

யாரை முதலமைச்சர் ஆக்குவது என்பது தொடர்பில் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் ஒவ்வொன்றும் தனித்தனியே ஆராய்ந்து அந்த முடிவுகளுடன் திங்கட்கிழமை மீண்டும் சந்தித்து பேசலாம் என்று சம்பந்தன் தெரிவித்தார் என்று கூறப்படுகின்றது.

“தமிழரசுக் கட்சியினர் முதலில் இது விடயத்தில் தங்களுக்கு ஒற்றுமையான முடிவை எடுக்கட்டும், பின்னர் நாங்கள் முடிவெடுக்கின்றோம் என்கின்றன ஏனைய கட்சிகள். கூட்டமைப்புக்குள் எல்லா முடிவுகளையும் தலைவர் சம்பந்தன் தானே தனித்து எடுக்கிறார் என்று தாங்கள் ஏற்கனவே கூறிவந்த விடயம் தற்போது தமிழரசுக் கட்சியினருக்கே “ஆப்பாக” வந்து முடிந்திருப்பதையிட்டு அவர்கள் வேடிக்கை பேசுகிறார்கள். சொந்தக் கட்சியின் விருப்பையே புறந்தள்ளி முடிவெடுக்க முனைகிறார் சம்பந்தன் என்பதை தமிழரசுக் கட்சியினர் இப்போதாவது புரிந்துகொள்வார்களா என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இவை எதற்கும் சம்பந்தன் அச்சப்படுவதாக – அசருவதாக – இல்லை. சி.வி. விக்கினேஸ்வரனே சிறந்த தெரிவு என்று திடமாக இருக்கிறார். தனது அந்த முடிவை நோக்கி ஒட்டுமொத்த கூட்டமைப்பையும் கவர்ந்திழுத்துச் செல்வதில் அவர் குறியாக இருக்கின்றார்.

 

http://urumal.com/2013/07/14/12141

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆதாரமா எங்கே?

கட்டுரை ஒன்றை எழுதி சில வசனங்களுக்கு நிறந்தீட்டிவிட்டால் அது ஆதாரமாகிவிடுமா? :o

மாவை இந்தியா சொன்னா எதுவும் செய்ய மாட்டார். தனித் தமிழ் ஈழம் பற்றி மட்டுமே சிந்திப்பவர். புதிய குழப்பமாக வடக்கை சேர்ந்தவர் வடக்கை ஆளனும்  நல்ல சிந்தனை. இதையே கிழக்கிலும் அமுல் படுத்துங்கோ. யாழை யாழ்ப்பாணி மட்டுமே ஆளணும். கொழும்புத் தமிழர் அமெரிக்காவில் இருந்தா வந்தவர்கள்? அவர்கள் தான் யாழின் பூர்விகக்குடிகள் 


TNAயின் முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதீயரசர் விக்னேஸ்வரனா? ஆளும் தரப்பு பீதியில்?

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக ஓய்வுபெற்ற நீதீயரசர் விக்னேஸ்வரன் வருவதனை ஆளும் தரப்பினர் விரும்பவில்லை என மகிந்த சகோதரர்களுக்கு நெருக்கமான தரப்பில் இருந்து தெரியவருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவோ அல்லது வேறு ஒரு கூட்டமைப்பின் பிரதிநிதி முதலமைச்சர் வேட்பாளராவது குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை எனக் கூறும ஆளும் தரப்பினர் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் வேட்பாளராவதனை விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

இலங்கையின் நீதிக் கட்மைப்பின் உயர் குழாமான உச்ச நீதிமன்ற நீதியரசர்களில் ஒருவராக இருந்த விக்னேஸ்வரன் சலுகைகளுக்காக வளைந்து கொடுக்காதவர் என்பதும் தனது நிலைப்பாட்டில் இருந்து ஒருபோதும் பின்வாங்குவது இல்லை எனவும் இவரது ஆளுமையை கையாள்வது கடினமான விடயம் எனவும் ஆளும் தரப்பு கருதுவதோடு இவர்மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துவது கடினமாக இருக்கும் எனவும் ஆளும் தரப்பு சிந்திப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

www.irruppu.com

 

  • கருத்துக்கள உறவுகள்

யார் வந்தாலும் ஹத்துரு சிங்கா சொல்வதை கேட்க வேண்டும். இல்லா விட்டால் கேட்க வைக்கப்படுவார்.

வடிவாக ஆப்பிறுக்கியிருக்கிறார்கள்.  தமிழர் எல்லோரையும் மொட்டைகளாக்கிவிட்டார்கள். கடைசியில் A=B=C  என்று சம்பந்தரை வாசுதேவாவின் சம்பந்தி யாக்கியிருக்கிறார்கள்.

 

இது தமிழ் மக்களுக்கு பொதுவான தேர்தல். இதில் வடக்கு கிழக்கை பற்றி மட்டும் சிந்திக்காமல் மலையகத்தையும் சேர்த்து சிந்திக்க வேண்டும். இது தீர்வுக்கு முந்தைய தேர்தல். தீர்வு வந்த பின்னர் தேடும் வேட்பாளர் பிராந்த நோக்கம் கொண்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் இதை வடக்கு, கிழக்கு, மலையகம் மூன்றுக்குமாக நடக்கும் தேர்தலாக காண மனம் வந்தால் மட்டுமே தீர்வை நோக்கிப் பயணிக்க முடியும். 

 

அதனால் பொது வேட்பாளர் தரத் தக்க பலனை கட்சி வேட்பாளர் ஒருவர் தர, அவர் மிக கடுமையான திறமைகள் பெற்ற்வராக இருக்க வேண்டும்.

 

 

 

Edited by மல்லையூரான்

யார் வந்தாலும் ஹத்துரு சிங்கா சொல்வதை கேட்க வேண்டும். இல்லா விட்டால் கேட்க வைக்கப்படுவார்.

அது உண்மை என்பதுடன் 13ம் திருத்தம் என்பது மாகாணசபை ஆட்சியாக இல்லாமல் அரசியல் அமைப்பிலேயே மானில கவுனர் ஆட்சியாக வரையறுக்கப்பட்டிருப்பதால் தான் தமிழர் தரப்பு ஆரம்பம் தொடக்கம் எதிர்த்தது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யார் வந்தாலும் ஹத்துரு சிங்கா சொல்வதை கேட்க வேண்டும். இல்லா விட்டால் கேட்க வைக்கப்படுவார்.

முதுகெலும்புள்ள ஒரு தலைவர் வட மாகாணத்துக்கு வேண்டுமென்றால் அதற்குப் பொருத்தமானவர் மனோ கணேசன் ஒருவர்தான். இந்தியாவுக்கும் கருணாநிதிக்கும் டக்ளசுக்கும் ராஜபக்சவுக்கும் அஜாரதத் துக்கும் தலை வணங்காத ஒருதமிழ் தலைவன் அவர் ஒருவர்தான்.... இன்றுவரை .... நாளை ????? தெரியாது

அவர் சம்மதிக்காவிடால் ஆசாத் சாலி , விக்ரமபாகு கருணாரத்ன ........

இதைக் கூறுவதால் எவரும் என்னை விமர்சிக்க வேண்டாம் நடக்க முடியாத ஒன்றுக்காக நாம் நமக்குள் சேறு பூச வேண்டியதில்லை

எனக்கு 100% நம்பிக்கை இருக்கிறது இதுபோன்று ஒருபோதும் நடவாது என்று

பின் குறிப்பு:: . . : நான் மலையகத்தைச் சேர்ந்தவனல்ல ... முஸ்லீமும் அல்ல ... இடதுசாரிக் கட்சியை சேர்ந்தவனும் கிடையாது நான் ஒரு யாழ் தமிழன் .. பிறப்பால்

Edited by சிவாசி

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் கடந்த 4 வருடங்களாக இணக்க அரசியல் செய்ய வெளிக்கிட்டு எங்கள் மக்கள் அடைந்த நன்மை என்ன..???! பூச்சியம். சம்பந்தனால் சிங்களத்தின் தமிழ் மக்களுக்கு எதிராக நகர்வுகளில்.. ஒரு துரும்பைக் கூட தடுத்து நிறுத்த முடியவில்லை. இந்த இலட்சணத்தில்.. சிறீலங்காவின் முன்னாள் நீதியரசர் வந்து.. பத்தாக்குறைக்கு ஐக்கிய இலங்கை என்று புராணம் பாட சோக்கா இருக்கும்..! அதோட போர்க்குற்றங்களும் மறப்போம் மன்னிப்போம் என்ற சம்பந்தனின் இலக்கணத்துக்குள் அடங்கிப் போக தமிழ் மக்கள் நட்டாற்றில் நிற்க வேண்டியது தான். இதையே சில புத்திசீவிகள் விரும்பினம். அவைக்கென்ன.. அவை விக்னேஸ்வரனுக்கூடாக மகிந்தரட்ட போய் பதவிகள் வாங்கிக் கொண்டு செளகரியமா இருப்பினம். ஆனால் மக்கள்..????????????! :icon_idea::o:rolleyes:

இம்  :D

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஷ்வரன் சட்ட அறிவு உள்ளவர் அதனால் அவர் தமிழருக்கு ஏற்ற முதலமைச்சர் என்பது ஏற்புடையதன்று. சிங்கள அரசிடம் இருந்து தமிழரின் உரிமைகைளை பெறுவதற்கு இவரிலும் பார்க்க அறிவும் அனுபவமும் மிக்க தலைவர்கள் இதற்குமுன் முயற்சித்து தோற்றுபோனதில்லையா? கூட்டமைப்பின் கூட்டத்தில் முதலில் எடுக்கவேன்டிய முடிவு சம்பந்தன் ஐயாவுக்கு அரசியலில் இருந்து கட்டாய ஓய்வு கொடுத்து அவரை வீட்டுக்கு அனுப்புவதா இல்லையா என்பதே! வேட்பாளருக்கு முதலில் இருக்கவேண்டிய தகமை என்ன என்பது உங்களுக்கு தெரியாததா என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் அறிவுஜீவின்னா அவர் இருக்க வேண்டிய இடம் கூட்டமைப்பின் ஆலோசகர் சபையில். முதலமைச்சராக அல்ல. இந்தப் பொம்மை முதலமைச்சர் பதவியில் அவரை இருத்தி ஏன் அவரின் திறமைகளை வீணடிப்பான்..??! முதலமைச்சரா வாறவர் செய்ய வேண்டியது.. இது ஒரு பொம்மை நாடகம் என்பதை உலகிற்குப் புரிய வைக்க வேண்டியதும்.. தமிழ் மக்கள் இதனை விரும்பவில்லை என்பதையுமே. அதற்கு மக்கள் ஆதரவு பெற்ற.. துடிப்புள்ள...சரியான ஆள் யார் என்று பார்ப்பதே அவசியம்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பல வருடங்களுக்கு முன்பு இந்திய சஞ்சிகை ஒன்றில் பிரேமானந்தாவுடன் (கள்ளச்சாமி) இலங்கையின் தமிழ் பிரதம நீதியரசர் ஒருவரின் படம் பிரசுரித்திருந்தார்கள்.....அந்த நீதியரசர் யார் என கள உறவுகளுக்கு தெரியுமா? தெரிந்தால் அறியத்தரவும்.......

அரசியல் அல்ல ..!

 

2009 மே18 பின் தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தி முடிவுக்கு வர ஈழ விடுதலையை முன்னெடுக்கும் முன்னெடுப்பார்கள் என நம்பியவர்கள்  எல்லாம் தமிழர் தலைகளில் கல்லை போட செய்வதறியாது நின்ற ஈழ மக்களுக்கு தேசியத்தின் தலைவர் கைகட்டி போன தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே எஞ்சி இருத்தது அதன் பிரகாரம் ஈழமக்கள் அவர்கள்  பின்ன நடக்க முழுமையான அரசியல் மட்டுமே செய்து பேசக்கூடிய செய்யக்கூடிய  ஒருதலைவரை இவர் போராட  பயப்பிடுறார் எனவும் சிங்களுத்துக்கு  சார்பா நடக்குறார்  எனவும் வசைபாடி துரோகியாக்கி என்ன எல்லாம் பேச முடியுமோ பேசி விலகி வைக்க பெரும் பாடு நடத்தது தெரிந்த விடையம்

 

இதில் என்ன வேடிக்கை என்றால் தலைவரால் கைகாட்டபடு கூப்பிட்டு கூட்டமைப்புக்கு  தலைவர் ஆகும்வரை சம்மந்தன் ஐயா பற்றி எவரும் வாய் திறக்க விலை அவரே கூறியது போல் புலிகளின் இலக்கில் நான் முதாலாய் இருத்தேன் இப்படி இருக்க அவரை  தேசிய தலைவர் எதுக்கு தெரிவு செய்தார் எவ் அவரை தலைவர் ஆக்கினார் அப்போது இப்ப தேசியம் பேசும்  ஊடகங்கள் எழுத்தாளர்கள் என் மவுனித்து இருத்தனர் தலைமைக்கு கடுபட்டா பயந்தா விடைதெரியா கேள்வியா போக

 

முள்ளிவாய்க்கால் பின் ஈழத்தமிழர் தங்களுக்கான  பலம்  பொருந்திய ஒரு அரசியல் தலைவரை தெரிவு செய்யவில்லை அல்லது உருவாக்க வில்லை என்றே தோன்றுகிறது இருப்பவர் எல்லாம் துரோகிகள் என்றால் அங்கு அல்லல் பட்டு  துன்பப்படும் மக்களின் நிலைமைய கருத்தில்  கொள்ளது ஊடகபுலிகள் மீண்டும் எழுவேம் அடிப்போம் என்பதாக வரிவரியா கதை எழுதுவதுடன் போராட்டம் நடந்தவண்ணம்  இருக்க அங்கு காணமல் போதலும் கொலையும்  கலாசார சீரழிவும் இனிதே நடக்கு இதை தட்டி கேட்க எமக்குள்  பாரிய முரண்பாடு இருக்க எவர் கேட்பது என்பதுடன் நிக்குறது தேசியமும் மக்களும்

 

அதன் காரணியா தமிழ்தேசிய கூட்டமைப்பின் அரசியல் மேற்கு உலகுக்கும் இந்தியாக்கும் முக்கியம் ஆக புலி சாயம் பூசப்பட்ட கூட்டமைப்பு எங்கு போனாலும் உள் பூசலை தவிர்க்க முடியாமல் இருதது என்பதுதான் உண்மை தமிழ் தேசியத்துக்கு கட்டுபடுவம் என வந்தவர்கள் பதவிகளுக்கு அடிபட்டு நிக்கும் நிலை வேதனை ஆனது ஆளுமையான திறைமையான நாலு வெளிஉலகுக்கு தெரிய கூடிய மனிதர்களை முன்னிறுத்தி அரசியல் செய்தால் தான் இப்பொழுது இருக்கும் உலக ஒழுங்குக்கு ஏற்றாபோல் நகர  முடியும் ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் நின்று அரசியல் பேசுவதை தவிர்த்து ஒரு சர்வதேச பொறிமுறை அரசியலுக்கு நாங்கள் வளர வேணும்

 

இங்குதான் படித்தவர்கள் உயர் பதவிகளில் இருத்தும் விலை போகாதவர்கள் தேசியத்தில் பற்று உள்ளவர்கள் கண்டு எடுக்க பட்டு முன்னிறுத்தி கண்டும்போக்குகளுக்கு  தங்கள் அரசியல் வல்லமையால் பதில் அளித்து மக்களின் வாழ்விற்கு எவர் உறுதுணைய நிக்குறார்களோ அவர்களே இப்பொழுது ஈழ மக்களுக்கு வேண்டியவர்கள் தேவையும் கூட அதன் படி கேட்பார் அற்று இருக்கும் எமது இனத்தின் பாதுகாப்பை சமத்துவத்தை எவர்  உறுதிபடுத்தினாலும் அவரை கட்சி போதம் துரோகி என பாராது எமது சமூகத்துடன் அரவணைத்து போகவேண்டுய நேரத்தில்  நாம் இருக்குறோம் என்பது யதார்த்தம்

 

ஆகவே முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் அவர்களின் வரவு விடுதலையின் ஒரு புதிய அரசியலா இருக்கட்டும் அவரின் அரசியல் போக்கை பார்த்த பின்  மிக சிறந்த துரோகி பட்டம் கொடுக்கலாம் அதுவரை பொறுத்து இருப்போம் மக்களே .

946588_4491090215176_809300753_a.jpg

 

வடக்குகிழக்கின் முதலாவது முதலமைச்சர் இந்தியக்கூலிகளுடன் இணைந்து தன இனத்தை அழிச்சு போராடியவர்களை காட்டிக் கொடுத்து கடைசியில் தனக்கும்  இனப்பற்று இருக்கு எண்டு காட்டுவதட்காக தமிழீழப் பிரகடனம் செய்துவிட்டு ஒரிசாவிட்கு ஓடி அங்கிருந்து தமிழர் விடுதலைப் போராட்டத்தை எப்படி எல்லாம் அழிக்க முடியுமோ அப்பிடி எல்லாம் அழித்தார். அடுத்து பிள்ளையான் என்னும் முட்டாள் வடக்கு கிழக்கை பிரித்து கிழக்கின் முதலமைச்சர் என்று சொல்லி கிழக்கை வெறுமையாக்கினார். இப்ப உள்ள கிழக்கு முதல்வரோ ஆளுநர் ஒண்டுமே செய்ய விடுறார் இல்லை எண்டு மூக்கால் அழுகிறார். இனி விக்கினேஸ்வரன் நிலைமை என்ன எண்டு காலம் தான் பதில் சொல்லும். 

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் அவர்கள் முதலமைச்சர் பதவிக்குப் பொருத்தமானவரா என்ற கேள்விக்கு அப்பால் இன்று அவர் முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்ட நிலையில்

ஈழத் தமிழர்களாகிய நாங்கள் எங்கள் முழு ஒத்துழைப்புடன் அவரையும் சக வேட்பாளர்களையும்  தேர்தலில் வெல்ல வைத்து சிங்கள இனவாதிகளின் முகத்தில் கரியைப் பூச வேண்டும்.

 

மாகாண சபைத் தேர்தல் முடிந்த பின்னர் முதலமைச்சராக விக்னேஸ்வரன் அவர்கள் 

எவ்வாறு தனது செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார் என்பதை வைத்து 

அடுத்த கட்டத்திற்கு நகரலாம்.

 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தங்கள் ஆதரவை விக்னேஸ்வரன் அவர்களுக்காக 

வெளிப்படுத்தி இன்றைய நிலையில் தமிழர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும்    

  • கருத்துக்கள உறவுகள்

1649806334mano.jpg

இலங்கையின் 65 வருட போராட்ட வரலாறு விக்னேஸ்வரனுக்கு வழி காட்ட வேண்டும்!

இலங்கை தீவின் வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் கடந்த 65 வருட காலமாக அறவழி போராட்டங்களை முன்னெடுத்த தமிழ் கட்சிகளின் வரலாறும், ஆயுத போராட்டங்களை முன்னெடுத்த விடுதலை இயக்கங்களின் வரலாறும், வட மாகாண முதல்வர் வேட்பாளர் சி.வீ. விக்னேஸ்வரனுக்கு வழி காட்ட வேண்டும். இந்த இரண்டு வழித்தடங்களையும் எதிர்கால முதல்வர் சமமாக பாவித்து முன்னெடுக்க வாழ்த்துகின்றேன். 

தமிழ் இனத்தின் நலனை முன்னிலைபடுத்தியதன் மூலம் தமிழரசு கட்சியின் பொதுசெயலாளர் மாவை சேனாதிராசா எம்பி தமிழர் ஐக்கிய வரலாற்றில் அரிய இடத்தை பெற்று கொண்டுவிட்டார். 

"அண்ணன் மாவை என்ற அடைமொழிக்கு மெய்யான அர்த்தத்தை ஏற்படுத்தி தந்துவிட்டேன்" என்பது எதிர்கால முதல்வருக்கு மாவை சேனாதிராசா தந்துள்ள செய்தியாகும். 

வடக்கு மாகாணசபையில் தமிழர் பெரும்பான்மை ஆட்சி ஏற்பட போகும் சாத்தியம் வட மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு மாத்திரம் உரித்தான விடயமல்ல. 

நாடு முழுக்க மேற்கிலும், மலையகத்திலும், கிழக்கிலும் வாழும் ஒட்டுமொத்த தமிழ் இனத்துக்கும் நட்சத்திர நம்பிக்கையை தரும் எதிர்பார்ப்பாகும் என்பதை நமது எதிர்கால முதல்வர் புரிந்துகொண்டிருப்பார் என நாம் நம்புகின்றோம். 

தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கில் பெறப்போகும் வெற்றி மிகப்பெரும் பாரிய அதிரடி வெற்றியாக இருக்க வேண்டும். அந்த வெற்றிக்கான பிரச்சார நடவடிக்கைகளில் கூட்டமைப்பு அழைப்பு விடுக்குமானால் நமது கட்சி ஜனநாயக மக்கள் முன்னணி கலந்து கொள்ளுவதற்கான சாத்தியம் இருக்கின்றது. 

கூட்டமைப்பின் வட மாகாண சபைக்கான முதல்வர் வேட்பாளராக ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வீ. விக்கினேஸ்வரன் ஏகமனதாக அறிவிக்கப்பட்டமை தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
 
 

தமிழ்க் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன்

 

லக்ஷ்மி பரசுராமன்

 

வட மாகாண சபைக்கான தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரனை நியமிப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராஜாவா அல்லது சி. வி. விக்னேஸ்வரனா நியமிக்கப்படுவார் என்ற சர்ச்சை பூதாகரமாகியிருந்த நிலையிலே நேற்று நடைபெற்ற கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

n-3.jpgகூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் உள்ளடங்கிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கூட்டமைப்புத் தலைவர் இரா. சம்பந்தனின் தலைமையில் கட்சி தலைமையகத்தில் நேற்று காலை நடைபெற்றது.

கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரை தெரிவு செய்வதற்காக கட்சி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடந்த வாரங்கள் பல தடவைகள் கூடியபோதும் முடிவுகள் இன்றியே கூட்டங்கள் நிறைவடைந்தன.

முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜாவை நியமிக்க வேண்டும் என ஒரு சாராரும் முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரனை நியமிக்க வேண்டுமென்று மற்றொரு சாராரும் வலியுறுத்தி வந்தனர். மாவை சேனாதிராஜாவுக்கு ஆதரவாக சில த. தே. கூட்டமைப்பு எம். பி. களும் தமிழரசுக்கட்சி கிளைகளும் அறிக்கை விட்டிருந்ததோடு சி. வி. விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவித்து சிலர் கருத்து வெளியிட்டு வந்தனர்.

முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு விவகாரத்தினால் கூட்டமைப்பு உடைபடும் நிலை ஏற்படலாம் என பரவலாக பேசப்பட்டதோடு ஏனைய பிரதான கட்சிகளும் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அறிவதில் ஆர்வமாக இருந்தன.

விக்னேஸ்வரனை முதலமைச்சராக தெரிவு செய்தால் தனித்துப் போட்டியிடுவதாக சில தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்கள் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்த ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நேற்று நீண்ட நேரம் கூடி ஆராய்ந்தது. காரசாரமான வாதப் பிரதிவாதங்கள் இங்கு இடம் பெற்றதாக கட்சி வட்டாரங்கள் கூறின. சி. வி. விக்னேஸ் வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதில் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் விடாப்பிடியாக இருந்ததாகவும் அறிய வருகிறது.

நேற்றைய கூட்டமும் முடிவு எதுவும் எடுக்காமல் நிறைவடையும் சூழல் காணப்பட்டது. இந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் முதலமைச்சர் தெரிவில் இருந்து ஒதுங்குவதாக மாவை சேனாதிராஜா எம். பி. அறிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் எம். பி. முதலமைச்சர் வேட்பாளராக சி. வி. விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டிருப்பதாக உத்தியோ கபூர்வமாக அறிவித்தார்.

முதலமைச்சர் வேட்பாளர் தெரிவு தொடர்பில் கடந்த காலங்களில் கூட்டமைப்பிற்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவிய போதும் வேட்பாளர் தெரிவினைத் தொடர்ந்தும் இவ்வாறான கருத்து வேறுபாடுகள் இனிமேலும் நீடிக்காது. அனைவரும் ஏகமனதாகவே கூட்டமைப்பிற்கான முதலமைச்சர் வேட்பாளரை தெரிவு செய்துள்ளோமென செல்வம் அடைக்கலநாதன் எம். பி. தெரிவித்தார்.

மேலும் மாவை சேனாதிராஜா வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட மாட்டாரெனவும் தெரிய வருகிறது.

நேற்றைய கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 5 கட்சிகளையும் சேர்ந்த 21 பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

2001 முதல் 2004 வரை உச்சநீதிமன்ற நீதியரசராக பணி புரிந்த சி. வி. விக்னேஸ் வரன் அதற்கு முன்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் என்பவற்றிலும் பணியாற்றி யிருந்தார். மட்டக்களப்பு, சாவகச்சேரி மற்றும் மல்லாகம் மாவட்ட மற்றும் நீதவான் நீதிமன்றங்களில் பணியாற்றியுள்ள அவர் 1995 இல் மேன் முறையீட்டு நீதியரசராக நியமிக்கப்பட்டார். இவரின் மகன் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் மகளை மண முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

http://www.thinakaran.lk/2013/07/16/?fn=n1307163

நீதித்துறையில் 30 வருடங்களாக கடமையாற்றியுள்ள சி.வி.விக்னேஸ்வரன், பொது அரசியல் தளத்தில் தொடர்ந்தும் கவனிக்கப்பட்டு வந்த ஒருவராவார். எனினும், நேரடியான அரசியல் களத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதன் மூலம் காலடி வைக்கிறார்.

தமிழ் தேசியம், பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்கிற கருத்தியலை அடிக்கடி பொது மேடைகளில் விதைத்து வந்த சி.வி.விக்னேஸ்வரனின் அரசியல் வரவை பல தளத்திலிருக்கிறவர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். குறிப்பாக, இளையோர்களிடமும், புத்திஜீவிகளிடமும் புதிய- ஆளுமை மிக்க தலைமையை எதிர்பார்த்து காத்திருந்தனர். அதனை, அவர் நிறைவேற்றுவார் என்றும் நம்புகின்றனர்.

இதனிடையே, வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் முன்னிறுத்தப்படுவதை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் அவ்வளவாக ரசிக்கவில்லை. அத்தோடு, சர்வதேச ரீதியில் தமிழ் மக்களின் குறிப்பிடத்தக்க அரசியல் தலைவராக செயற்படுவதற்கு விக்னேஸ்வரனால் முடியும். இது, அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று ஊடகங்கள் கருத்து வெளியிடுகின்றன.

இதனிடையே, எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபைத் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திலிருந்து முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வர் போட்டியிடுவார் என்று தெரிகிறது.

http://www.4tamilmedia.com/newses/srilanka/15621-2013-07-15-08-02-09

பொது வேட்பாளராக அறிவித்ததால் ஒப்புதல் : விக்னேஸ்வரன்
  •  
130715145131_cv_vigneswaran_and_r_sampan

நீதிபதி விக்னேஸ்வரன் மற்றும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் பொது வேட்பாளராக தன்னை அறிவித்ததால், வட மாகாணத்துக்கான முதல்வர் பதவிக்கான, கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் ஒப்புதல் அளித்துவிட்டதாக, இலங்கை உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியும், கூட்டமைப்பின் வடமாகாண முதல்வர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவருமான சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.

தமிழோசைக்கு பேட்டியளித்த விக்னேஸ்வரன், அரசியலுக்கு வெளியில் இருந்து வந்தாலும், தான் அரசியலை தீவிரமாக அவதானித்து வந்தவர் என்ற வகையில், இந்த அரசியல் பிரவேசம் பெரிய சவாலாக இருக்காது என்று நம்புவதாகவும் கூறினார்.

மேலும், தமிழ் அரசியலில், முன்பு இருந்த பொன்னம்பலம், ராமனாதன், அருணாசலம், செல்வநாயகம் போன்ற தலைவர்களும் கொழும்பில் சட்டப்பணியாற்றி யாழ்ப்பாண அரசியலுக்கு வந்தவர்கள் என்பதையும், வந்த பின்னர் அவர்கள் சாதாரண மக்களின் சுக துக்கங்களில் பங்கேற்றுக்கொண்டனர் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் நீதித்துறை அரசியல்மயமாகிறது என்ற குற்றச்சாட்டை, இவரது அரசியல் பிரவேசமும் வலுவாக்குமா என்று கேட்டதற்கு, தான் நீதித்துறையிலிருந்து ஓய்வு பெற்று சுமார் பத்தாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இது போன்ற குற்றச்சாட்டுக்கு இடமில்லை என்றும், தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி சிந்தித்து நடவடிக்கை எடுப்பது, நீதித்துறையின் சுயாதீனத்தை பாதிக்காது என்றார் அவர்.

 

சுரேஷ் பிரேமசந்திரன் பேட்டி

 

வட மாகாணத்தில் நடக்கவிருக்கும் இந்த தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல், 13வது அரசியல் சட்டப்பிரச்சினைகள், அதற்கு மேலும் தமிழ் மக்களுக்கு தேவைப்படும் அரசியல் உரிமைகள் குறித்த சட்டப்பிரச்சினைகள் போன்றவற்றை கையாள்வதற்கு விக்னேஸ்வரன் போன்ற நீதித்துறை மற்றும் சட்ட வல்லமை பெற்றவரின் அனுபவம் பயன்படும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் கூறினார்.

கூட்டமைப்பில் உட்கட்சிப் பிரச்சினைகளை மறைக்க கூட்டமைப்புக்கு வெளியேயிருந்து இவரை நியமித்ததாக கருத்து நிலவுவது சரியல்ல என்று அவர் கூறினார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/07/130715_vigneswaran_comments.shtml

 

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தவின் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் ’ மகளை விக்னேஸ்வரைன் மகன் திருமணம் செய்து இருக்கின்றார் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன்

விக்னேஸ்வரன் ஒரு சந்தர்ப்ப வாதியாக இருக்க விரும்பினால் தமிழ் இனத்தை முழுமையாக மகிந்தவின் காலடியில் விழ வைக்கலாம் .... வாசுவின் ஆசிர்வாதத்துடன் !!!!!!!!

அவர் தமிழர் மானம் காக்க விரும்பினால் வாசுதேவா விக்ரமபாகு மனோ கணேசன் போன்றதலைவர்களை ஓரணியில் திரட்டி தமிழர்களின் நியாயமான அபிலாசைகளை நிறைவேற்ற முயலலாம்

ஆனால்... அவற்றைச் செய்வதற்கு அவர் உயிருடன் இருக்க வேண்டும்,,,,.. தமிழர்களின் ஆயுதக் கலாச்சாரத்துக்கு அமைய அவர் துரோகிப் பட்டத்துடன் கொல்லப்படலாம் ....அல்லது... கோதபயாவினாலும் கொல்லப்படலாம் .......

பொறுத்திருந்து பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்துடன் 13ஆம் திருத்த சட்டம்பற்றி பேச்சுவார்த்தை நடத்தப்போகிறார் என அறிக்கை விட்டுள்ளார்....மீண்டும் வேதாளம் அரசமரத்தில் ......அப்புக்கத்துமார் இவ்வளவு காலமும் அரசியல் செய்தார்கள் இப்பொழுது முதல்தடவையாக தமிழ்மக்களுக்கு மீட்பராக நீதியரசர் வரப்போகிறார் பொறுத்திருந்து பார்ப்போம்....

இது உண்மைக்குப் புறம்பான செய்தி. உண்மைக்கு மாறான செய்தி. இப்படியான செய்திகளை கயிறு திரித்து
வெளியிடுவதில் யாருக்கு என்ன இலாபம் என்பது தெரியவில்லை. இந்தக் கயிறு திரிப்பு சிலரிடம் பெரிய நோயாக வளர்ந்து வருகிறது.

நீதியரசர் விக்னேஸ்வரன் போட்டியிட முன்வந்தது மகிந்த இராசபக்சேக்கு பின்னடைவேயொழிய இலாபம் இல்லை.

இந்தியா சொல்லித்தான் சம்பந்தன் விக்னேஸ்வரனை போட்டியிட வைத்தார் என்பது கற்பனை கலந்த முட்டாள்த்தனமான வாதம்.

இந்தியா இதுபோன்ற விடயங்களில் தலையிடுவதில்லை.

சிங்கள அரசு வெளிநாட்டில் நெடுங்காலம் வாழ்ந்துவிட்டு நாடு திரும்பிய இலட்சுமன் கதிர்காமரை வெளியுறவு அமைச்சராக்கி
அவர் மூலம் வி.புலிகளை வேரறுத்தார்கள். இது போன்ற இராசதந்திரம் தமிழர்களிடைய இல்லை. படித்தவர்களை பிடிக்காத ஒரு
கூட்டம் படித்தவர்களை ஓரம் கட்டி அவர்களை நோகடித்து உள்நோக்கம் கற்பித்து தமிழினம் தலைநிமிர முடியாத அளவுக்கு பாடுபட்டு வருகிறது.

இந்தக் கூட்டத்தை சேர்ந்தவர்கள்தான் விக்னேஸ்வரனின் நியமனத்தை எதிர்ப்பவர்கள்.



நக்கீரன்

மின்னஞ்சலில் வந்ததை இணைத்துள்ளேன் .

Edited by Gari

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.