Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எத்தனை மரங்கள் தாவும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தர்சினி லண்டனில் பிறந்து வளர்ந்தவள். அழகானவள். தன்னம்பிக்கை மிக்கவளும் கூட. ஆனால் இப்ப ஒரு மாதமாகத்தான் அவளது நம்பிக்கை தடம்புரண்டு போனதில் தன்மீதே நம்பிக்கை அற்றவளாகி செய்வது அறியாது தவிக்கிறாள்.

பெற்றோர்கள் அவளை எப்படிப் பொத்திப் பொத்தி வளர்த்தனர். அவளும் பெற்றோர் சொல் கேட்டு ஒழுங்காக வளர்ந்தவள் தான். இப்ப கொஞ்ச நாட்களாக குற்றம் செய்யும் உணர்வு. சதீசை என்று சந்தித்தாலோ அன்று பிடித்தது சனி. அடிக்கடி தாய் சொல்வதுதான் உந்த பேஸ் புக் நல்லதில்லை அம்மா. நெடுக உதுக்குள்ள கிடக்காதேங்கோ என்று. அப்ப விளங்கவே இல்லை.

பேஸ் புக் இல் சதீசை பார்த்த உடனேயே இவளுக்கு மனம் தடுமாற தொடங்கிவிட்டது. அவனும் எப்ப பார்த்தாலும் சற் பண்ண தயாராக இருப்பான். இவளும் நிர்பாட்டுவதில்லைத்தான். ஆனாலும் எந்நேரமும் அவனுடன் உரையாடச் செல்வதில்லை. இவளைச் சீண்டியபடி சதீசிடமிருந்து குறுந்தகவல்கள் வந்தவண்ணம் இருக்கும். இவள் எல்லாவற்றுக்கும் பதில் போடவில்லையாயினும் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே  இருப்பான்.

இவள் இத்தனை காலத்தில் பெற்றோரை விட்டுப் பிரிந்து வந்திருப்பது இதுவே முதற் தடவை. அவளுக்கு பல்கலைக்கழகம் தூர இடத்தில் கிடைத்தது அவளது துரதிஸ்ரம்தான் என்று இப்பதான் விளங்குகிறது. சதீஸ் கூட நகரத்தின் ஒரு  பல்கலைக்கழகத்தில் பயில்வதாகவே இவளுக்குக் கூறியிருந்தான். அவன் கூறியவற்றை எல்லாம் மடைத்தனமாக எப்படி எல்லாம் நம்பினாள்.

நல்ல காலம் இந்த  அளவில் தப்பித்ததே பெரிதுதான். அம்மாவுக்கு இந்த விடயம் தெரிந்தால் ........ நினைக்கவே பயமாக இருந்தது தர்சினிக்கு. முதலில் தொலை பேசி எண் கேட்டு அவன்தான் எழுதினான். இவள் முதலில் கொஞ்சம் யோசித்தால்தான். பிறகும் அவனின் குரலைக் கேட்போமே என அடிமனத்து ஆசை வெல்ல இலக்கத்தைக் கொடுத்தவள்தான். இன்று இப்படி வந்து நிற்கிறது.

இரவு பதினொன்று பன்னிரண்டு ஏன் விடிய மூன்று மணிவரை கூடத் தூங்காது அவனுடன் கதைத்ததை நினைக்க இப்ப வெறுப்பாக இருக்கிறது அவளுக்கு. எப்படி எல்லாம் பேசி என் மனத்தைக் கரைத்தான். அவனில் மட்டும் பிழை சொல்லி என்ன என்னிலும் தவறுதான். அம்மாவைப்போல் இலங்கையில் பிறந்த பெண்ண என்றாலும் பரவாயில்லை. இந்த நாட்டில் பிறந்துவிட்டு நல்ல பாடசாலையில் படித்தது நல்ல மதிப்பெண்களோடு பல்கலைக்கழகம் சென்ற எனக்கு சிந்திக்கத் தெரியவில்லையே என தன் மேலேயே கழிவிரக்கம் தோன்ற கண்களில் நீர் முட்டியது.

அப் பல்கலைக்கழகத்தில் தமிழர்களே இல்லாததும்தான் தன்னை அவன்பால் சாய வைத்ததோ? எல்லோருமே வேற்றினத்தவர். ஒரு சீன இனத்தவளும் ஒரு மலாய் பெண்ணுமே இவளுடன் நெருக்கமாயினர். இவளுக்கு ஏனோ அவர்களிடமும் பெரிதாக ஒட்டவில்லை. அதனால்த்தான் மனம்விட்டுப் பேச ஒருவன் கிடைத்ததும் மடங்கிவிட்டேன் என தன் மனதைச் சமாதானம் செய்துகொண்டாள்.

அம்மாவும் பாவம். வேலையுடன் வீட்டுவேலை சமையல். தம்பியைப் பார்ப்பது என எத்தனை எண்டுதான் செய்ய முடியும். ஒவ்வொரு நாளும் அதிகாலையில் இவளை போனில் எழுப்பி ஐந்து நிமிடமாவது கதைத்துவிட்டு வேலைக்கு இறங்கிவிடுவார். இதைவிட ஒரு தாய் என்னதான் செய்ய முடியும். படிப்பில மட்டும் கவனத்தை வையம்மா. அதுதான் கடைசிவரை கை கொடுப்பது என அடிக்கடி தாய் கூறுவதைக் கேட்க முன்பெல்லாம் எரிச்சல் வரும். திரும்பத் திரும்ப தாய் ஏன் கூறினார் என இப்போதான் விளங்குகிறது.

அன்று பேஸ் புக் இல் நண்பி ஒருத்தி அனுப்பியிருந்த விழா அழைப்பிதழைப்  பார்த்தவளுக்கு, உடனேயே ஒரு மகிழ்ச்சி எட்டிப் பார்த்தது. சதீஸ் படிக்கும் பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. அனைத்து பல்கலைக்கழக மாணவர்களையும் வரும்படி அலைத்திருந்தனர். உடனே சதீசுக்கு தொலைபேசி எடுத்து நீயும் எதிலாவது பங்குபற்றுகிறாயா என்று இவள் கேட்டபோது இல்லை என்று ஆர்வமின்றிக் கூறினான் இவளை பாக்கவேணும் என நச்சரிப்பவன், இன்று வா என்று எதுவுமே கூறவில்லை.

அவன் கேட்டுக் கேட்டுச் சலிப்படைந்து விட்டுவிட்டான் என்றே இவள் எண்ணினாள். இம்முறை அவனுக்குச் சொல்லாமல் போய் அவன்முன் நின்று அவனை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தவேண்டும் என அவள் முடிவு செய்து கொண்டாள். தான் விழாவுக்கு வருவதை தன் நண்பிக்கு மட்டும் சொல்லி, யாருக்கும் கூறவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டாள்.

அன்று காலையில் எழுந்து அழகான ஆடை அணிந்து,  சதீஸின் முகம் மகிச்சியில் எப்படி மாறும், ஓடிவந்து என்னை அணைத்துக் கொள்வானா?? முத்தம் தருவானா என்றெல்லாம் கற்பனயில் மிதந்தபடியே மூன்று மணிநேரத் தொடருந்துப் பயணத்தைக் முடித்து, தரிப்பிடத்தில் இறங்கியவள் மனம் சொல்லமுடியாத மகிழ்வில் துள்ளியது.

ஒரு பத்து நிமிடம் நடந்துதான் யூனிக்கு வரவேண்டியிருக்கும் என்று நண்பி கூறியதால், தன் போனில் நவியை ஒன செய்தபடி மனதில் எதிர்பார்ப்பும் படபடப்பும் சேர விரைவாக நடந்தாள்.

தூரத்தில் வளாகம் தெரிகிறது. சதீஸ் வந்திருப்பானா?? இன்னும் வரவில்லையா?? என எண்ணியபடி  நண்பிக்கு போன் செய்தாள். நண்பி வந்து இவளை அழைத்துக்கொண்டு மண்டபத்தை நோக்கிச் செல்கையில் தூரத்தில் சதீஸ் போல் இருக்கே என எண்ணிய வினாடியே மனதெங்கும் அடைக்க மீண்டும் வடிவாகப் பார்த்தவளுக்கு நெஞ்சில் கத்திக்கொண்டு குத்தியதுபோல் வலித்தது.

சதீஸ் ஒரு பெண்ணை அணைத்து முத்தமிட்டுக்கொண்டிருந்தான். இவளுக்கு ஒருகணம் கோபம், அவமானம், ஏமாற்றம் என அத்தனை உணர்வுகளும் ஒருசேர வந்தன. உடனேயே திரும்பிவிட நினைத்தவள் நண்பியை வா என்று கூடச் சொல்லாது விரைவாக  சதீஸ் இருக்குமிடம் சென்று, நீ எல்லாம் ஒரு மனிசனா என்று மட்டும் சொல்லிவிட்டு திரும்பி நடந்தாள்.

இவளின் நண்பிதான் இவள் பின்னால் ஓடிவந்து. தர்சினி நில்லு. என்ன நடந்தது என்று சொல்லிவிட்டுப் போ என இவளைப் பிடித்து நிறுத்தினாள். அவளுக்கு கோபத்தில் முகம் சிவந்து கண்களில் நீர் முட்டியது. அவன் நிற்குமிடத்தில் அழக்கூடாது என்று, வெளியே வா சொல்லுறன் என்று நண்பியின் கையை இறுகப் பற்றியபடி நடந்தாள்.

இது நடந்து இப்ப ஒரு மாதம் ஆகிறது. ஒருவாரம் அவள் பித்துப் பிடித்ததுபோல் தான் இருந்தாள். இப்ப சதீஸ் தெளிய வைத்துவிட்டான். அடுத்தநாளே இவளது போனுக்கு அவன் அழைக்க இவள் போனை நிப்பாட்டி வைத்துவிட்டாள். அவன் பேஸ் புக்கில் அவளுக்கு செய்தி அனுப்பினான். அவள் தொலைபேசியை எடுக்காவிடில் அவள் அவனுக்கு காதல் தலைக்கேறி இருந்தபோது அனுப்பிய குறுஞ் செய்திகளை எல்லாம் எல்லோரும் பார்க்கும்படி போடப்போவதாக.

அவளுக்குக் கோபம் வந்தாலும் என்ன செய்வது ,எப்படி இவனைக் கையாள்வது எனக் குழம்பிப் போனவளாக அவன் கூறியபடி போனை இயக்கினாள். எனக்கு உன்னைத்தான் பிடித்திருக்கு. நான் சும்மா விளையாட்டுக்குத்தான் அவளுக்கு முத்தமிட்டேன். என்னை நீ கண்டிப்பாகப் பார்க்கவேண்டும் என்றெல்லாம் தொலைபேசியில் மிரட்டுவதுபோல் கூறினான்.

போயும் போயும் இப்படி ஒருவனையா காதலித்தேன் என வேதனை கொண்டவள் ஒருவாறு முடிவுக்கு வந்தாள். தவறு செய்தது அவன் நான் ஏன் பயப்பட வேண்டும் என எண்ணியவள் காவல் நிலையம் செல்ல முடிவெடுத்து வீதியில் இறங்கினாள்.

  • கருத்துக்கள உறவுகள்

குழம்பித் தெளிவது மனசு. இதுவரையில் விழித்துக் கொண்டஅவளது நல்ல காலம்.

நடைமுறையில் அடிக்கடி நிகழும் ச ம்பவம். பகிர்வுக்கு நன்றி . பாராட்டுக்கள் 

.எத்தனை  மலர்கள் தா வும் பட்டாம் பூச்சி ........

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா.. பையன்களை மட்டும் இப்படி செய்வதில்லை... பெண்களும்தான் இப்படி பலர்... மனதுள் தெளிவான சிந்தனையும் எதிர்காலம் பற்றிய தெளிவும் உள்ள எந்த ஒரு ஆணும் பெண்ணும் தெளிவாக இருப்பார்கள்.. இன்றைய பல சமூகப் பிரச்சினைகளுக்கு இந்த முகப்புத்தகம் போன்ற பல சமூக வலைத்தளங்கள் பெரியளவு காரணியாக இருக்கின்றன.. இவற்றை எவ்வாறு கையாள்வது என்ற தெளிவற்றவர்கள்தான் இப்படியான பிரச்சினைகளுக்குள் போய் விழுகிறார்கள்..தர்சினி தெளிவான பெண் என்று தெரிகிறது..இந்தக்கதை உண்மை என்றால் கண்டிப்பாய் இனி ஒரு முறை இப்படி ஏமாறமாட்டார்.. நல்ல கதை நன்றி அக்கா பகிர்விற்கு..

 பகிர்வுக்கு நன்றிஅக்கா 

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  பதிவுக்கு

களவும் கற்றுமற............

இதுவும்  கடந்து போகும்.......

அதுவே  வாழ்க்கை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி  பதிவுக்கு

களவும் கற்றுமற............

இதுவும்  கடந்து போகும்.......

அதுவே  வாழ்க்கை

முதலில் இப்படி ஒரு தவறான கருத்தை விதைப்பதை நிறுத்துவோம் அண்ணா.

'களவும் கற்று மற'

burglar.jpg

தவறாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ள தமிழகப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. இதிலும் ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் பொருள் தவறு நேர்ந்துள்ளது. அதைப் பற்றிக் காணும் முன்னர் இதன் பொருள் என்ன என்று காணலாம்.

' திருட்டுத் தொழிலைக் கூட கற்றுக்கொண்டு பின்னர் மறந்துவிடு.' - இதுவே இதன் பொருள் ஆகும்.

எப்படி இருக்கிறது பொருள்?. மிகவும் ஆச்சர்யப்படுத்துகிறது அல்லவா?. எப்படி இதுபோன்ற பொருளில் பழமொழிகள் உலாவருகின்றன என்பதே தெரியவில்லை. இப்படித் தவறான பழமொழிகள் புழங்குவதால் தான் சமுதாயத்தில் ஒழுக்கம் குன்றி தவறுகள் அதிகரித்து விட்டன. 'ஏன் தவறு செய்கிறாய்?' என்று கேட்டால், 'களவும் கற்று மற' என்று பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்களே அதனால் நானும் இந்தத் தவறை ஒருமுறை செய்துவிட்டு பின்னர் மறந்துவிடுகிறேன் என்று சாக்கு சொல்லுகிறார்கள். இப்படி இளைய சமுதாயத்தினருக்கு ஒரு தவறான வழியைக் காட்டுவதாக ஒரு பழமொழி இருக்கலாமா?. கூடவே கூடாது. அதை ஒரேயடியாக நீக்கவேண்டும் இல்லையேல் அதன் உண்மைப் பொருளைக் கண்டறிந்து அதனை மக்களுக்கு உணர்த்த வேண்டும். முன்னோர்கள் சொல்லிவிட்டுச் சென்ற இப்பழமொழியை நீக்குவதை விட இதன் உண்மைப் பொருள் என்ன என்று கண்டறிந்து அதை மக்களுக்கு உணர்த்தினால் நன்றாக இருக்கும் என்னும் ஆவலில் ஏற்பட்டது தான் இந்த ஆய்வு.

பழமொழிகளின் பல்வேறு பயன்பாடுகளில் ஒன்று தான் ' இளையோரை வழிநடத்துதல்' ஆகும். பெரியோர்கள் தாம் அனுபவத்தால் பெற்ற அறிவை இளையோருக்குக் கூறி அதன்படி நடந்தால் நன்மைகள் பெறலாம் என்னும் உயர்ந்த நோக்கத்தில் உருவானவை பல பழமொழிகள். அத்தகைய பழமொழிகளுள் ஒன்று தான் இந்தப் பழமொழியும். 'தவறுகளைச் செய்யாதே' என்று தான் பெரியவர்கள் அறிவுரை கூறுவார்களே ஒழிய ' தவறுகளைப் பழகிக்கொள் பின்னர் மறந்துவிடு' என்று ஒருபோதும் சொல்லமாட்டார்கள். இனி இப் பழமொழியின் உண்மையான பொருள் என்ன என்று காண்போம்.

paanchaali+sapatham.jpgஅக்காலத்திலும் சரி இக்காலத்திலும் சரி செய்யக்கூடாத தவறுகள் பட்டியலில் 'திருட்டு, சூது' ஆகியவை அடங்கும். இந்த இரண்டு தவறுகளும் ஒரு மனிதனை எந்த நிலைக்குக் கொண்டுசெல்லும் என்பதை இங்கே சொல்லத் தேவையில்லை. ஏனென்றால் அது உலகறிந்த உண்மை. திருட்டு என்பது பிறருக்கு உரிமை உடைய பொருளை அவருக்குத் தெரியாமல் தான் எடுத்துக் கொள்வது ஆகும். சூது என்பது பிறருக்குச் சொந்தமான பொருளை தந்திரத்தால் ஏமாற்றித் தான் கொள்வதாகும். தாயக்கட்டைகளை உருட்டி விளையாடும் இந்த விளையாட்டிற்கு 'சூதாட்டம்' என்று பெயர். இந்த தந்திரமான விளையாட்டின் அடிப்படையில் தானே 'மகாபாரதம்' உருவானது. துரியோதனன் துகில் உரிப்பதற்கும் பாஞ்சாலி சபதம் செய்ததற்கும் அடிப்படையே இந்த விளையாட்டு தானே.

இதைப் பற்றி ' சூது' என்னும் தலைப்பில் பத்து குறள்களில் மிக அருமையாக விளக்கியுள்ளார் திருவள்ளுவர். சூது விளையாடியவனின் நிலை பற்றி ஒரு குறளில் வள்ளுவர் இவ்வாறு கூறுகிறார்.

' கவறும் கழகமும் கையும் தருக்கி

இவறியார் இல்லாகி யார்.' - குறள் எண்: 935.

இங்கே 'கவறு' என்பது 'சூதாடும் கருவியையும்', 'கழகம்' என்பது 'சூதாடும் இடத்தையும்' குறிக்கும். ' சூதாடும் கருவியையும் சூதாடும் இடத்தையும் தம் கைகளையும் நம்பி மேல்சென்றவர்கள் ஒன்றும் இல்லாதவராய் ஆவர்.' என்பதே இக்குறளின் பொருள் ஆகும். சூதாடும் கருவியைக் குறிக்கும் இந்த 'கவறு' என்னும் சொல்லை 'கற்று' என்று பழமொழியில் பிழையாக எழுதியதால் தான் தவறான பொருள்கோளுக்கு வழிவகுத்து விட்டது. களவுத்தொழிலைக் கையால் தான் செய்யவேண்டும். அதேபோல சூது விளையாட்டையும் முழுக்க முழுக்க கைகளால் தான் ஆடவேண்டும். ' இந்த இரண்டையும் கையில் தொடாமல் இரு' என்பதே இப்பழமொழியில் பெரியவர்கள் கூற வரும் அறிவுரை ஆகும். இனி சரியான பழமொழி இது தான்:

' களவும் கறு மற.'

(கவறு மற = கவறும்+அற; அற - தவிர்)

பி.கு: சூதாடும் இடத்தைக் குறிக்கின்ற 'கழகம்' என்ற சொல்லை தமிழக அரசியல் கட்சிகள் பல தங்களது பெயருடன் இணைத்து வைத்துள்ள நோக்கம் என்னவோ?. சூதாடும் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஏமாற்றுக்காரர்களாக இருப்பதுபோலவே அரசியல் கட்சிகளும் மக்களை ஏமாற்றி வருவதன் மறைபொருள் இப்போது தான் புரிகிறது.

http://thiruththam.blogspot.de/2009/02/blog-post_1218.html

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  ஜீவா,

அருமையான  விளக்கம்

தேவையானதும் கூட.

ஆனால் இவை மருகி  இப்படி ஆயின  என்பதற்கும் காலம் பதில் சொல்கிறது

களவும் கற்றுமற  என்பதும்

களவெடு

பின்னர் அனுபவப்பட்டு  வாழு  என்பதாக நான் நினைத்து எழுதவில்லை

அனுபவமே அதி  உத்தம பாடம் என்றே களவும் கற்றுமற  என்பதை நான் எடுக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

களவும் கற்றுமற............

காதல் வாழ்க்கையைக் கூறும் அகத்திணையின் இரு பகுதிகளாகக் களவும், கற்பும் அமையும். ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொள்ளும் ஒழுக்கம் களவு என்று வழங்கப்படும். அகப்பொருள் பற்றிய இலக்கியங்களில் களவு தான் மிகுதியாகப் பேசப்படும்.களவாவது, பிறர் நன்கு அறியாதபடி மறைவாக நிகழும் ஒழுக்கம். இயற்கையாகவே ஒத்த இளமை, முதலிய ஒத்த தன்மைகளையுடைய ஒருவனும், ஒருத்தியும் ஓரிடத்தில் எதிர்ப்பட்டு அன்பு கொண்டு காதலில் திளைப்பர். அக்காதலர் ஊரறிய மணவினை நிகழும் அளவு, களவு நெறியில் இருப்பர். களவு நெறியைக் குற்றமாகப் பெற்றோர் எண்ணினாலும் சமூகம் குற்றமாகக் கருதவில்லை.

தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியலை அடுத்து, களவியல் என்ற இயல் வருகின்றது. இக்களவியல் அகத்திணைகளில் ஒருதலைக் காதலாகிய கைக்கிளை, பொருந்தாக் காதலாகிய பெருந்திணை ஆகியவற்றை நீக்கி, அன்பின் ஐந்திணைகளை மட்டும் கூறுகின்றது

கற்பு என்பது திருமணத்துக்குப் பின்னர் ஆணும் பெண்ணும் உறவு பூண்டு வாழும் வாழ்க்கை.

திருமணத்துக்கு முன்னர் வாழும் வாழ்க்கையைக் களவு என்றும், திருமணத்துக்குப் பின்னர் வாழும் வாழ்க்கையைக் கற்பு என்றும் கொள்வது தமிழ்நெறி. களவையும் கற்பையும் கைகோள் என்பர். இத் தொடரில் கை என்பது கைப்பற்றி வாழும் ஒழுக்கத்தைக் குறிக்கும். இந்த ஒழுக்கம் பற்றிய செய்திகளைத் தொல்காப்பியம் பொருள் அதிகாரத்தில் கற்பியல் என்னும் தலைப்பில் விளக்குகிறது

இந்தக் களவு என்பது திருமணம் வரை மட்டுமே இருக்க வேண்டும்

திருமணத்தின் பின்னர்  களவொழுக்கத்தைக் கைவிட்டுவிட வேண்டும்.

இதனாலேயே களவும் கற்று மற என்ற தொன்மொழியும் உண்டாகியது :D .

அது வாத்தியார்

(இதை எல்லாம் தாண்டித்தானே ஐயா  வந்தோம்)

நன்றி  நேரத்துக்கும் கருத்துக்கும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்த உறவுகள் நிலா அக்கா, சுபேஸ், கரன், விசுகு அண்ணா, ஜீவா, வாத்தியார் ஆகிய உறவுகளுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

காதல் வாழ்க்கையைக் கூறும் அகத்திணையின் இரு பகுதிகளாகக் களவும், கற்பும் அமையும். ஒருவனும் ஒருத்தியும் தமக்குள்ளே கண்டு காதல் கொள்ளும் ஒழுக்கம் களவு என்று வழங்கப்படும். அகப்பொருள் பற்றிய இலக்கியங்களில் களவு தான் மிகுதியாகப் பேசப்படும்.களவாவது, பிறர் நன்கு அறியாதபடி மறைவாக நிகழும் ஒழுக்கம். இயற்கையாகவே ஒத்த இளமை, முதலிய ஒத்த தன்மைகளையுடைய ஒருவனும், ஒருத்தியும் ஓரிடத்தில் எதிர்ப்பட்டு அன்பு கொண்டு காதலில் திளைப்பர். அக்காதலர் ஊரறிய மணவினை நிகழும் அளவு, களவு நெறியில் இருப்பர். களவு நெறியைக் குற்றமாகப் பெற்றோர் எண்ணினாலும் சமூகம் குற்றமாகக் கருதவில்லை.

தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் அகத்திணையியல், புறத்திணையியலை அடுத்து, களவியல் என்ற இயல் வருகின்றது. இக்களவியல் அகத்திணைகளில் ஒருதலைக் காதலாகிய கைக்கிளை, பொருந்தாக் காதலாகிய பெருந்திணை ஆகியவற்றை நீக்கி, அன்பின் ஐந்திணைகளை மட்டும் கூறுகின்றது

கற்பு என்பது திருமணத்துக்குப் பின்னர் ஆணும் பெண்ணும் உறவு பூண்டு வாழும் வாழ்க்கை.

திருமணத்துக்கு முன்னர் வாழும் வாழ்க்கையைக் களவு என்றும், திருமணத்துக்குப் பின்னர் வாழும் வாழ்க்கையைக் கற்பு என்றும் கொள்வது தமிழ்நெறி. களவையும் கற்பையும் கைகோள் என்பர். இத் தொடரில் கை என்பது கைப்பற்றி வாழும் ஒழுக்கத்தைக் குறிக்கும். இந்த ஒழுக்கம் பற்றிய செய்திகளைத் தொல்காப்பியம் பொருள் அதிகாரத்தில் கற்பியல் என்னும் தலைப்பில் விளக்குகிறது

இந்தக் களவு என்பது திருமணம் வரை மட்டுமே இருக்க வேண்டும்

திருமணத்தின் பின்னர்  களவொழுக்கத்தைக் கைவிட்டுவிட வேண்டும்.

இதனாலேயே களவும் கற்று மற என்ற தொன்மொழியும் உண்டாகியது :D .

இந்தக் கதையின் நாயகிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை

இவர் இங்கு காதல் எனும் பாதையில் தடக்கி விழுந்திருக்கின்றார்.

அல்லது விழ வைக்கப்பட்டுள்ளார். இப்போது விழித்துக் கொண்டார்

கதையைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுமேரியர் :D 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையின் நாயகிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை

இவர் இங்கு காதல் எனும் பாதையில் தடக்கி விழுந்திருக்கின்றார்.

அல்லது விழ வைக்கப்பட்டுள்ளார். இப்போது விழித்துக் கொண்டார்

கதையைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சுமேரியர் :D 

வாத்தியார் இப்பதான் நித்திரையால எழும்பின்னியள் போல :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பொல்லைக் கொடுத்து அடி வாங்கிறது என்று இதைத்தான் சொல்வது :)  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் கரு நல்லது ஆனால் சொன்ன விதத்தில் தடுமாற்றம்.

ம்ம்

நான் தான் பாவம் காதலிச்சா பெண்ணையே கலியாணம் கட்டியபாவி ;)

மிக  அருமை யதார்த்தமும் கூட இப்படி பல இன்னும் இருப்பதுதான் வேதனை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களைப் பரிமாறிய உறவுகள் சாத்திரி,அஞ்சரன் ஆகிய உறவுகளே நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.