Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவர்கள் மட்டுமா?! -மொறட்டுவை பல்கலைக்கழக பொறியியல் பீட தமிழ் மாணவர் சமுகம்-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர்கள் மட்டுமா?! -மொறட்டுவை பல்கலைக்கழக பொறியியல் பீட தமிழ் மாணவர் சமுகம்-

18 ஜூலை 2013

குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு அனுப்பி வைத்த கட்டுரை


தமிழ்த் தேசியத்தின் எழுச்சி, அதன் தற்போதய மென்மைப்போக்கு, அதற்கான காரணங்கள்/ தந்திரங்கள், சகோதர இனத்துடனான அதன் உறவு அல்லது அதனுடன் பேசி/ முரண்பட்டு தீர்வைப்பெறும் அதன் இயலுமை, மற்றும் தற்போதைய அரச இயந்திரத்துடன் தமிழர்தரப்பு முரண்படும் விடயங்களான அதிகாரப்பகிர்வு, காணி-பொலிஸ் அதிகாரம் மற்றும் இவற்றை மாகாணசபைகளுக்கு குறித்தொதுக்குதல் போன்றவற்றினைத் தர்க்க ரீதியாக விளங்கிக்கொள்ள ஒரு தளத்தை உருவாக்குதலே இக்கட்டுரையின் நோக்கம். ஆகவே இக்கட்டுரை மேற்படி பிரச்சனைகளுக்கான தீர்வுத்திட்டத்தை பற்றிப்பேசாது, மாறாக (யாதாயினும்?) ஒரு தீர்வுக்கான சகல பொதுமக்களினதும் சிந்தனை எவ்வாறிருக்கவேண்டும் என்பதாகவே அமையும். முதலாவதாக தமிழர்தரப்பு தற்போதுள்ள சிக்கலான நிலைக்கான வரலாற்றுக்காரணிகள் பற்றியும், பின் அதை மேலும் சிக்கலுக்குள்ளாக்காது அதன் சிக்கல்தன்மையை குறைக்க செய்ய வேண்டியவை பற்றியும் விளக்கங்களை இங்கு காணலாம்.

பொதுவாக காலனித்துவ நாடுகளின் வரலாற்றில் மலிந்துகிடக்கும் பிரச்சினை, அவற்றின் இறைமையானது அவற்றின் கைகளுக்கு போனவுடன் தான் ஆரம்பிக்கும். பொருத்தமான ஆட்சிமுறையை தெரிவு செய்யின் இப்பிரச்சினை ஓரளவுக்கு குறையும். தேவையானது ஒற்றை ஆட்சியா அல்லது சமஷ்டி ஆட்சியா என்பதை சரியாக தெரிவு செய்தலே இங்கு முக்கியபடி. ஓரினம், ஒரே மொழி, ஒரே மதம் மற்றும் ஒரே வகையான கலாசாரப்பின்னணியுடைய நாடுகளுக்கு முதலாவது ஆட்சிமுறை பொருத்தமானதும், நன்மை பயக்ககூடியதுமாகும். சமஷ்டி ஆட்சிமுறையானது பல்லினங்கள் கொண்ட நாடுகளுக்கும் நிர்வகிக்கக் கடினமான பெரிய, பரந்த பிரதேசத்தை கொண்ட நாடுகளுக்கும் பொருந்தும். இங்கு பெரும்பான்மையினர் (மத்திய அரசு என்று வைத்துக்கொள்வோம்) எடுக்கும் முடிவின் விளைவின் செறிவுத்தன்மை, சிறுபான்மையரிடத்தில் குறைந்துவிடும். காரணம் ஒட்டுமொத்த நாட்டின் நலன்பேணும் அமைப்பாக மத்திய அரசும், சிறுபான்மையினரின் நலன்பேணும் அமைப்பாக அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்ட மாநில அரசுகளும் தொழிற்பட இவற்றுக்கிடையிலிருக்கும் உறவின் சமநிலையிலே தான் இதன் வெற்றி தங்கியிருக்கிறது. ஆக சமீப(கடந்த நூற்றாண்டில்) வரலாற்றில் விடப்பட்ட முதலாவது பிழையாக பொருத்தமற்ற ஆட்சித்தெரிவை அடையாளப்படுத்தலாம்.

இந்த வரலாற்றுச்சகதிக்குள் நின்ற படி நகர்ந்த அடுத்த தலைமுறைகள், பிரச்சினையை வளர்த்துச்சென்றுவிட்டன. இங்கு இன்னொரு விடயம் குறிப்பிட்டாக வேண்டும். ஒரு பிரச்சினை வளர்தல் என்பது சம்பந்தப்பட்ட இரு தரப்புகளிலேயும் தங்கியுள்ளது, இது தனி நபர்களுக்கும், சமூகங்களுக்கும், தேசியங்களுக்கும், நாடுகளுக்கும் பொருந்தும். சம்பந்தப்பட்ட ஒரு தரப்பு பிரச்சினையைத்தீர்ப்பதற்கான இதய சுத்தியுடன் அல்லது தந்திரத்துடன் நடக்காவிட்டால் பிரச்சினையின் பரிமாணம் பருத்துவிடும். தற்காப்பு நிலையில் நின்றபடி ஆரம்பத்தில்(நற்பதுகளிலிந்து எழுபதுகள் வரை) நகர்ந்த அரசியல், பின் அவற்றின் தூண்டுதலால் அபரீமித மாற்றத்துக்குள்ளாகி தற்கொலை/டை நிலைக்கு வந்தது. இனி இந்த சமூக அசைவியக்கத்தை இயங்கியல் விதியை வைத்துக்கொண்டு நோக்குவோம்.

இயங்கியல் (dialectics) என்பது முரணியங்களினால் (contradictions- சாதாரணமாக சொன்னால் பிரச்சினைகள்) அசைக்கப்பட்டு, அதாவது இரு எதிரெதிர் கருத்துக்கள் (கவனிக்க நபர்களன்றி கருத்துக்கள்!) ஒன்றுடனொன்று மோதி, இன்னொரு புதியகருத்துடன் அல்லது இரண்டுமிணைந்த கருத்துடன் மீள்வது(கட்டாயம் கருத்து மோதல் வேண்டும். அதனிலும் முக்கியம் அதன் முடிவில் தீர்வை கண்டுவிட வேண்டும்!). இது எங்களுடைய அண்டம் போல் தொடர்ந்து முடிவேயில்லாத பாதையில் இயங்குதலாகும். ஒரு உதாரணத்திற்கு இதை எங்களிலும் பரீட்சித்து பார்க்கலாம், எவ்வாறெனில் சில காலத்திற்கு முன்னர் அல்லது சிறுவயதில் ஒரு விடயத்தைப் பற்றி நாம் கொண்டிருந்த கருத்து தற்போதோ அல்லது எதிர்காலத்திலோ மாறலாம். இது எங்களுக்குள் இயங்கியல் சரியாக வேலை செய்வதையே காட்டுகிறது.

இதை வன்முறை சார்ந்த எழுச்சி நிலைகளிலும் பார்க்கலாம். எழுபதுகளிலும், எண்பதுகளிலும், தொண்ணூறுகளின் ஆரம்பத்திலும் கெரில்லா மற்றும் அதீத வன்முறையை (இப்போது பயங்கரவாதம் என சொல்லப்படுவது!) கையாண்ட அமைப்புகள், பின் இராணுவமாக வளர்ச்சி கண்டு, ஈற்றில் அரசாக வளர்ச்சி கண்டன/து. அவற்றின் மீதான விமர்சனங்கள் ஒருபுறமிருக்க, அவை பெற்ற இயங்கியல் வளர்ச்சியை அதன் மூலம் சமூகம் பெற்ற வளர்ச்சியை (உதாரணத்துக்கு வெறி கொண்ட சாதியத்தை உறங்கப்பண்ணியது, எல்லா மக்களையும் செயற்பாட்டுத்தளத்துக்கோ அல்லது ஆகக்குறைந்தது உரையாடல் தளத்துக்கோ இழுத்து வந்தது) இத்தத்துவத்தினூடு நாம் பொருத்திப்பார்க்கமுடியும்.மேலும் ஒருவரையோ அல்லது ஓரமைப்பு சார்ந்த கொள்கைகளையோ, தத்துவங்களையோ பின்பற்றுபவர்கள் அசைவியக்கத்தை மறுப்பவர்களாகவும், முன்னேற்றத்தினைப் பிற்போடுபவர்களாகவும் இருப்பார்கள் (இதுவும் மேற்குறித்த அமைப்புக்கள் எமக்கு கற்றுத்தந்த கசப்பான அனுபவங்கள்!). ஆரோக்கியமான சமூக இயக்கத்தை அவாவுவபர்கள் வயது, பால், தனிமனித, சமூக, கொள்கை வேறுபாடு பார்க்காமல் எல்லோரிடமிருந்தும் கருத்துக்களை உள்வாங்கி, தங்களுக்கொரு சொந்தமான பாதையை உருவாக்கிக்கொள்பவராகவும், பல்வகைமையை ஏற்றுக்கொள்பவராகவும் இருப்பர்.

ஏலவே சொல்லியது போல, சமூகங்களுக்கிடையிலான பிரச்சினையைத் தனிநபர் தளத்துக்கு கொணர்ந்து, அதைத் தீர்ப்பதற்கு ஏற்ற புறச்சூழலை எவ்வாறு எற்படுத்துவது? அதற்கு முன் கருத்தாதிக்கம், அதிகாரம், அகப்புரட்சி, பண்பு சார் கல்வி (value based education), இயல்பூக்கம் என்ற சொல்லாடல்களைப் புரிந்து கொள்வோம். கருத்தாதிக்கத்தை பற்றி விளங்கும் போது கருத்துருவங்களை பற்றியும் எங்களின் மையக்கருத்துருவமான ‘நான்’ என்பதைப் பற்றியும் பார்ப்போம். இந்த ’நான்’ என்பது ஒரு எண்ணம். ஒரு மைய சிந்தனைப் படிமம். மனித உடலுக்கு உயிர்ப்பை, சுயத்தை வழங்குவது இந்த ’நானே’. மனிதன் பிறந்ததிலிருந்து அவன் உள்வாங்கும் கருத்துப்படிமங்கள் இந்த ‘நானை’ உருவாக்குகின்றன. இந்த ‘நான்’ தான் எல்லாருக்குள்ளிருந்தும் அவர்களை இயக்குகிறது. இதிலிருந்து அவர்களின் செயற்பாட்டுக்கு காரணமாகிறது. ஆக, எல்லோரும் தங்களுடைய செயலுக்கு இந்த ‘நானை’ விட வேறொன்றையும் காரணம் காட்டமுடியாது. இனி இந்த ‘நான்’ என்ற மையகருத்துருவத்தைச் சார்ந்து நிற்கும் மற்றைய கருத்துருவங்கள், முன் சொன்னது போல சமூகத்திலிருந்து தான் உள்வாங்கப்படுகின்றன.

இந்த கருத்துருவங்களை சேர்த்துவைக்கும் பெளதிக அமைப்பான மூளை ஒருபுறமிருக்க, அதன் அகவயமான மனம் பற்றி இனிப்பார்ப்போம். இதை சாதாரணமாக உளப்பகுப்பாய்வாளர்கள் இரண்டு விதமாக பிரிப்பார்கள். ஒன்று பிரக்ஞை-வெளி மனம் (conscious). இது நாம் விழிப்பு நிலையிலிருக்கும் போது தொழிற்படுவது. நாம் சிந்திப்பது, ஞாபகம் கொள்வது எல்லாமே இந்த தளத்திலிருந்துதான். ஒவ்வொரு தனிநபரும் சிந்திப்பது வெவ்வேறாக என்று நமக்கு வெளிப்படையாகவே தெரியும். ஆக, இதனிலும் வேறுபட்ட, ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட, எம்மால் சாதாரணமாக அறுவை செய்து பார்க்க முடியாத சிந்தனை முறைகள் எல்லோருக்கும் உள்ளன. அந்த சிந்தனை முறைகளை உருவாக்கும் இடம் தான் மற்றைய நனவிலி (unconscious) மனம். இந்த மனத்தை நாம் நேரடியாக அணுகமுடியாது, வெளிமனத்தினூடாகவே அணுகமுடியும். இந்த எங்களின் சிந்தனை முறைகளை ( எங்களின் algorithm) வெளிமனத்தினூடாக தொடர் பயிற்சி செய்வதால் மாற்ற முடியும். இதற்கான சிறந்த உதாரணமாக சாதாரண இராணுவ வீரனை எடுத்து நோக்கலாம். சாதாரண மனிதனாக இருந்த இம்மனிதன், எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்ட, சமூகத்தால் சுலபமாக செய்யமுடியாத/ கூடாத வேலையை அவ்விராணுவ பயிற்சி முடிந்தவுடன் செய்கிறான் (தமிழரின் வன்முறை சார்ந்த அமைப்புக்களிற்கான பொதுமக்கள் தளத்திலான விமர்சனங்களும் இதன் பாற்பட்டதே). இங்கு இந்த உள உருவேற்றமும் பயிற்சியின் ஓரங்கமாக நிகழ்கிறது.

இதனை இன்னொரு விதமாக சொன்னால் மனித மனத்தின் இந்த இயல்பை நாம் திட்டமிட்டுப் பயன்படுத்தி, எமக்குத் தேவையான கருத்துருவங்களை விதைக்கமுடியும். இவ்வாறு விதைப்பதைத்தான் கருத்தாதிக்கம் என்று கூறலாம். சமூகத்திலுள்ள அம்சங்களான வழிபாட்டிடங்கள், கல்விக்கூடங்கள், ஊடகங்கள், சக மனிதர்கள் எல்லாமே இந்த வேலையைத்தான் தங்கள் தங்கள் நிலைக்கு ஏற்றாற்படி செய்கின்றன. ”கல்வி”யும் இதைத்தான் செய்கின்றது. ஆனால் மற்றைய முறைகளுக்கும் கல்விக்குமுள்ள வித்தியாசம் கல்வி நன்றாக கட்டமைக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட ஒரு செயன்முறை. இதன் வினைத்திறன் மற்றைய யாவற்றிலும் அதிகம்.

அடுத்ததாக ‘இயல்பூக்கம்’ என்றால் மனித இனத்தின் இருத்தலை உறுதிப்படுத்த, மனிதனுக்குள் இயல்பாகவே ஏற்படும் மனிதம் சமூகத்தின் மீதும், சூழல் மீதும், சகமனிதர்கள் மீதும் கொள்ளும் இச்சை அல்லது பற்றாகும். இந்த மனிதனுக்குள் எழும் இயல்பூக்கத்தை புறக்கணித்தபடி, நாம் எதையும் செய்து விட முடியாது. இதை ஒரு இயல்பூக்கமான பாலுணர்ச்சியை (அடிப்படைத்தேவைகளுக்கான இயல்பூக்கங்கள், உபதேவைகளுக்கான இயல்பூக்கங்கள் என்று ஏராளமிருந்தாலும் கூட!) உதாரணத்துக்கெடுத்து விளக்குவோம். உயிர்த்தொடர்ச்சியின், சகல ஜீவராசிகளின் மீளாக்கத்துக்குமான அடிப்படை உணர்வாக இது அமைகிறது (காதல் மற்றும் அதற்கான சமூக அங்கீகாரமான திருமணங்கள் போன்றவற்றையும் இக்கட்டுரை இதே நோக்கிலேயே பார்க்கிறது). இதிலிருந்து ஒரு ஜீவராசியும் தப்பிவிடமுடியாது. படைத்தலின் தவிர்க்க முடியாத நியதியாக அது எல்லா ஜீவராசிகளையும் பணிய வைக்கும். இன்ப நுகர்ச்சியை காட்டி எல்லா ஜீவராசிகளையும் அது கட்டிப் போடும். இந்த இயல்புணர்ச்சிகளை அறுவை செய்து பார்த்து, அதனுள் இருக்கும்- தற்காலத்துக்கு தேவையான, இயல்பூக்கங்களாக நாம் அவற்றை மாற்றாலாம். அதாவது இந்த இயல்பூக்கங்களை உயர்நிலை மாற்றம் (sublimation) செய்யலாம். உதாரணமாக காதல் மற்றும் திருமணங்களினால் சமூகத்தின் அடிப்படையான அமைப்பான குடும்பம் உருவாகிறது. ஒரு மனிதனுக்கு முதலாவதாக கருத்துருவாக்கம் நடைபெறும் இடம் இதுவே. ஆயின், இங்கிருந்தே சிறந்த, தேவையான மாற்றங்களை செய்யவேண்டும்.

இனி ‘அகப்புரட்சி’ யைப்பற்றி சற்று பார்ப்போம். வெறுமனே ‘புரட்சி’ என்றால் உங்களுக்கு இரத்தச்சிவப்புத்தான் நிழலாடும். அதனால் தான் இந்த ‘அக’த்தையும் அதனோடு சேர்த்துள்ளார்கள். ஏற்கனவே கூறியதன் படி தனிமனித ஆளுமையைத் தேவைக்கேற்றாற்போல் விருத்தி செய்தால் சமூகத்தில் விரும்பிய மாற்றங்களை ஏற்படுத்தலாம், ஏனெனில் ஒவ்வொருத்தரையும் உள்ளிருந்து இயக்குவது மனந்தான், இந்த மனத்தில் தேவையான மாற்றங்களை செய்வதுதான் இந்த அகப்புரட்சி. எனவே சமூகத்தில் எதாவது மாற்றத்தை இரத்தம் சிந்தாமல், நீடித்து நிலைக்கும் வகையில் ஏற்படுத்த வேண்டுமாயின், மனப்புரட்சிதான் ஒரே வழி. இந்த மனப்புரட்சியை ஏற்படுத்த நடைமுறையிலுள்ள முறையான கல்வி (formal education) பொருத்தமற்றது. ஒன்றில் நாங்கள் எதாவது முறைசாராக் கல்வி வடிவங்களை நாடவேண்டும். அல்லது முறையான கல்வியைப் பண்புசார் கல்வியாக மறுசீரமைக்க வேண்டும். இரண்டாவதாக சொன்ன முறை அரசு இயந்திரத்திலேயே தங்கியுள்ளது. ஆகவே அது அரசியலாளர்களுக்கே பொருத்தமானது. எனவே முதலாவது முறையான முறைசாராக்கல்வி முறைகளையே நாம் நாடலாம்.

இதற்கான எளிய தொடங்கு புள்ளியாக இன்றைய இணையத்தளம், மற்றும் சமூக வலைத்தளங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.. இன்றைய இளைஞர், யுவதிகளில் பலர் இவ்வாறான சமூக வலைத்தளங்களேதான் இணையம் என்றெண்ணுமளவுக்குக் கட்டுண்டு கிடக்கிறார்கள். அவர்களின் அறியாமையைப் (?!) பயன்படுத்தி, இந்த கருத்தாதிக்கத்தை மேற்கொண்டு, அதனூடு மனப்புரட்சியை ஏற்படுத்தலாம். பச்சையாக சொன்னால் எமது சமூகத்தையும் எம்மையும் சரியாக சிந்திக்கப்பண்ணுவோம்.

தனிநபர் தளத்திலான முன்னேற்றங்களைப் பற்றி, கட்டுரையின் பேசுபொருள் பற்றிய ஆய்வை முடித்து விட்டோம். இனி, அரசியல் தளத்தைப் பற்றி சிறிது பார்ப்போம். இங்கு பல கொள்கைகளைத் தமிழர் தரப்பில் இக்கட்டுரை அடையாளம் கண்டாலும் கூட, தற்போது ஆட்சி பெற்றிருக்கின்ற ‘தமிழ்த் தேசியத்தை’ பற்றியே ஆராயப் போகிறது. ’தமிழ்த்தேசிய’ தேவையின் நதிமூலம் எங்கிருக்கிறது என்று பார்த்தால், சிங்கள தேசியத்துடன் சமநிலையைப் பேணுவதற்காகவே (முரண்படுவது என்று கூறுவது பொருத்தமற்றது!) என்று புரியும். வெளிப்படையாகச் சொன்னால், சிங்களத்துடன் ஓர் இணக்கப்பாடு ஏற்பட்டு, நிரந்தரத் தீர்வொன்று எட்டப்படுமாயின் (சமபலம் என்ற அடிப்படையில்) தமிழ்த்தேசியத்துக்கான தேவை தானாகவே இல்லாது போகும். ஒரு கருதுகோள் நிலைக்காக, தமிழ்த்தேசியம் சிங்கள தேசியத்தை மேவி, பலம் பெறுகிறது என வைத்துக் கொண்டால், இன்றுள்ள நம் நிலையைப் போல சிங்களம் தொடர்ந்து தன் இருப்பைத்தக்கவைக்க போராடவேண்டி வரலாம். எனவே நாம் சிங்களத்தின் இன்றைய நிலைக்கு காரண-காரிய தொடர்பை ஆராயாது, தீர்வுப்பொதியொன்றைத்தருவதற்கான சிங்களத்தின் இயலுமை அல்லது இதய சுத்தியைப்பற்றி எதிர்வுகூறமுடியாது. இன்றைய சிங்களத்தின் பரப்புரைகள் அதன் ’சிங்கள பெளத்த தனிநாட்டுக்கோரிக்கை’ யையே சுட்டி நிற்கின்றன. அதை காலங்கடந்த தமிழர் போராட்ட அமைப்பொன்றின் மூலமான காழ்ப்புணர்ச்சியுடனான பரப்புரைகளினூடாக மறைத்து சாயம் பூசி வருகிறது. இந்தக்கருத்தாதிக்கம் இவ்வளவு தெளிவாகவும், திட்டமிட்டும் நடைமுறைப்படுத்தப்படுவது, அந்தக்காலங்கடந்த அமைப்பை தற்போது தாங்கிப்பயணிக்கும் ’வெளிவாசிகள்’ புரிந்து, பொருத்தமான எதிர் இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஆக சிங்களத்தின் இந்த ‘தனிநாட்டுக்கோரிக்கை’ க்கான காரணமாக உள்ள அதன் தனிமை உணர்ச்சியையும், இலங்கையை விட்டால் வேறு சொந்த நாடுகளற்ற அதன் இயலாமையையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். இவ்வாறான சிங்களத்தின் மனநிலையை பெருக்கப்பண்ணியது அந்த தமிழர் போராட்ட அமைப்பும் அதன் பங்காளிகளும் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை அந்த அமைப்பு தொடர்ந்து இருந்திருக்குமானால், விடுதலையை அவாவும் எமது சமூகம், இன்னொரு விடுதலையை விரும்பும் சிங்களத்துக்கு இழைக்கும் மாபெரும் கொடூரம் வரலாற்றில் நிகழ்ந்திருக்கும்!. இதைப்புரிந்து கொண்டு எமது தீர்வைப்பற்றி எமது அரசியலாளர்களும், சட்டவல்லுனர்களும் நடவடிக்கை எடுத்தல் நன்மை பயக்கும்!.

எமது தமிழ் தேசங்கள் தமது தலைமைகளை தேர்ந்த்தெடுப்பது என்பது ஒரு சாதாரணமாக மேலைத்தேய நாட்டு மக்கள் தங்களது தலைவர்களை தேர்ந்த்தெடுப்பது என்பதிலிருந்து வேறுபட்டது. அதற்கு முக்கிய காரணம் எம்மவர் வெறுமென அரசியல்வாதியாக மாத்திரம் இருந்துவிட முடியாது அதையும் தாண்டி அவர் பல பரிணாமங்களை எடுக்கும் வல்லமை பொருந்தியிருக்கவேண்டும். தமிழ் மக்களின் வாக்குகளை வென்றால் மாத்திரம் தமிழ்மக்களின் தலைநிமிர்வை காணலாம் என்றால் அவர்கள் இக் கட்டுரையாளர்களுடன் முரண்பட்டே ஆக வேண்டும். அதற்கு பெரியளவில் உதாரணங்கள் எடுத்துக்காட்டவேண்டிய தேவையில்லை , எமது தமிழ் பிரதேசங்களில் இருந்து பிரசன்னமாகும் தமிழ் அரசியல் பிரமுகர்களால் ஒரு பகுதியளவேனும் தமிழர் பிரச்சனைக்கு தீர்வுகாண இயலாத்தன்மை கடந்தகாலங்களின் கசப்பான உண்மை. தமிழர் பிரதிநிதி என்பவர் அரசுடனோ தமிழினத்தினோடோ உறவாடுவதை காட்டிலும் அல்லது அதற்கு சமனாக சர்வதேசத்துடனும் ஏனைய அயல் நாடுகளுடனும் ஊடாட வேண்டும். அவர்களின் பலம் பொருந்திய வாதத்தாலும் அரசியல் அறிவாலும் சட்ட நுணுக்கங்களாலும் சாணக்கியத்தாலும்/இராஜதந்திரத்தாலும் மற்றும் மேலே ஆராயப்பட்ட பொதுமக்களின் தனிநபர் வளர்ச்சிகளாலுமே இனப்பிரச்சினைக்கு தீர்வு சாத்தியம். தலைவர்கள் மட்டும் எப்போதும் கஸ்டப்படுவது என்ன நியாயம்?!

-மொறட்டுவை பல்கலைக்கழக பொறியியல் பீட தமிழ் மாணவர் சமுகம்-


http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/94147/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கான எளிய தொடங்கு புள்ளியாக இன்றைய இணையத்தளம், மற்றும் சமூக வலைத்தளங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.. இன்றைய இளைஞர், யுவதிகளில் பலர் இவ்வாறான சமூக வலைத்தளங்களேதான் இணையம் என்றெண்ணுமளவுக்குக் கட்டுண்டு கிடக்கிறார்கள். அவர்களின் அறியாமையைப் (?!) பயன்படுத்தி, இந்த கருத்தாதிக்கத்தை மேற்கொண்டு, அதனூடு மனப்புரட்சியை ஏற்படுத்தலாம். பச்சையாக சொன்னால் எமது சமூகத்தையும் எம்மையும் சரியாக சிந்திக்கப்பண்ணுவோம்

வாசிப்புதன்மை மக்களிடையே மிகவும் குறைந்து செல்கின்றது இந்தநிலையில் எப்படி இணையம் மூலம் மனப்புரட்சி செய்வது,.....மேலும் இணையத்தில் சினிமா புரட்சி செய்யலாம் மனபுரட்சி செய்யமுடியாது..... :D

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

வாசிப்புதன்மை மக்களிடையே மிகவும் குறைந்து செல்கின்றது இந்தநிலையில் எப்படி இணையம் மூலம் மனப்புரட்சி செய்வது,.....மேலும் இணையத்தில் சினிமா புரட்சி செய்யலாம் மனபுரட்சி செய்யமுடியாது..... :D

 

 

உங்களுக்கு   எனது  பாராட்டுக்கள்  புத்தர்

 

இவ்வளவு புரிந்திருக்கே

நானும்  வாசித்தேன்

ஒன்றும்  புரியல

மக்களை  விட்டு இவர்கள்  பல  மைல் தூரத்தில்............. :D

  • கருத்துக்கள உறவுகள்

சமூகவியலில் கலாநிதிப் பட்டம் பெற்ற யாராவது இந்தக் கட்டுரையை மொழிபெயர்ப்புச் செய்து இணைத்து விட்டால் என்ன சொல்ல வருகீனம் எண்டாவது விளங்கும்! :D

சீனா /கொரியா இந்த  product ஐ கொடுத்தால் reverse engineering செய்து  மலிவான ( எல்லோரும்புரியக் கூடிய மாதிரி )  product ஐ சந்தையில் விடுவார்கள்

  • 2 weeks later...

இது வேறொரு மொழியில் எழுதியதை தமிழ் பேசுபவர்களால் (தமிழரால் இல்லை) தமிழ் மொழியாக்கம் செய்ததுபோல் உள்ளது.

சமூகவியலில் கலாநிதிப் பட்டம் பெற்ற யாராவது இந்தக் கட்டுரையை மொழிபெயர்ப்புச் செய்து இணைத்து விட்டால் என்ன சொல்ல வருகீனம் எண்டாவது விளங்கும்! :D

 

நான் எனக்கு மட்டும்தான் விளங்கேல என்று நினைச்சு வெட்கப்பட்டுக் கொண்டு இருந்தன்...ஒருத்தருக்கும் விளங்கவில்லை போல இருக்கு. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.