Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தெலுங்கானா மாநிலம் அமைக்க காங்கிரஸ் முடிவு ? ஆந்திராவில் ராணுவம் குவிப்பு.

Featured Replies

ஆந்திராவை 2 ஆக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க காங்கிரஸ் முடிவு செய்து உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது. மாநிலத்தை பிரிக்க கடலோர ஆந்திரா, ராயல சீமா பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். தெலுங்கானா அறிவிப்பு வெளியான பிறகு போராட்டம் பெரிய அளவில் வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போராட்டங்களை சமாளிக்க கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் துணை ராணுவமும் குவிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 15 கம்பெனி ராணுவபடை ஆந்திராவில் உள்ளது. இப்போது 35 கம்பெனிபடை வந்துள்ளது. மேலும் 15 கம்பெனி ராணுவம் வர உள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகாவில் இருந்து இவர்கள் வந்துள்ளனர். சித்தூர் மாவட்டத்தில் துணை ராணுவத்தினர் நேற்று அணிவகுப்பு நடத்தினர். முன்பு தெலுங்கானா பகுதியில் மட்டுமே ராணுவம் நிறுத்தபட்டு இருந்தனர். இப்போது அந்த பகுதியை தவிர்த்து கடலோர ஆந்திர, ராயலசீமா பகுதியில் உள்ள அனந்தபுரம், விசாகப்பட்டினம், கடப்பா, சித்தூர் போன்ற பகுதிகளில் ராணுவம் குவித்து வருவது மாநிலம் பிரிவதை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

 

http://dinaithal.com/tamilnadu/india/17764-telangana-congress-decided-to-set-up-in-andhra-pradesh-army.html

 

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி.. உது இந்திய இறையாண்மையை பாதிக்காதோ..! ஒன்றா உள்ளதைப் பிரிக்கிறது பாவமில்ல. சிறீலங்காவை பிரிச்சா இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு.. என்றவை.. ஆந்திராவைப் பிரிக்கிறது என்ன நியாயம்..????! :lol::D

அந்த ஆந்திர மக்கள் என்ன கேட்டார்கள் தங்கள் தனித் தன்மைய பாதுக்காக்க தனி மாநிலம் தானே கேட்டார்கள். ஆந்திர காங்கிரஸ் கார்கள் சோனியா காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக்கட்சி அமைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .

  • கருத்துக்கள உறவுகள்

//ஆந்திராவை 2 ஆக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க காங்கிரஸ் முடிவு செய்து உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.//

 

இந்திய அரசுக்கு வேலை எதுவும் இல்லையா?

அந்த ஆந்திர மக்கள் என்ன கேட்டார்கள் தங்கள் தனித் தன்மைய பாதுக்காக்க தனி மாநிலம் தானே கேட்டார்கள். ஆந்திர காங்கிரஸ் கார்கள் சோனியா காங்கிரசில் இருந்து பிரிந்து தனிக்கட்சி அமைக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .

 

இவர்கள் எல்லாரும் தெலுங்கு கதைப்பவர்கள் தானே. பிறகேன் அவர்களுக்குள் பிரிவு கேட்கிறார்கள். இதற்கு பின்னால் முஸ்லிம்கள் இருக்கலாமோ?

 

ஒரு நாடு இரண்டாக பிரிப்பதையும் ,ஒருநாட்டுக்குள்ளே ஒரு மாநிலத்தை இரண்டாக பிரிப்பதற்கும் வித்தியாசம் தெரியாதவங்கள் அரசியல் கருத்தெழுதி என்னெத்த கிழிக்க போறாங்களோ ??? :D  :icon_idea:

இவர்கள் எல்லாரும் தெலுங்கு கதைப்பவர்கள் தானே. பிறகேன் அவர்களுக்குள் பிரிவு கேட்கிறார்கள். இதற்கு பின்னால் முஸ்லிம்கள் இருக்கலாமோ?

 

மகாபாரதம் பிறந்த நாடாச்சே ,ஆகவே சகுனிகளின் சகுனி வேலையா இருக்கலாமுங்கோ  :D 

மகாபாரதம் பிறந்த நாடாச்சே ,ஆகவே சகுனிகளின் சகுனி வேலையா இருக்கலாமுங்கோ  :D 

 

அரை வேக்காடுகள் இப்பிடித்தான் சிந்திப்பார்களோ?

 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையினை இரண்டாகப்பிரித்து தமிழீழம் கொடுப்பது வேறு. வடக்கு கிழக்கு மாகாணத்தினை இரண்டாகப் பிரிப்பது வேறு. இதைத்தான் சிங்களம் விரும்புகிறது. இந்தியாவில் இருந்து கஸ்மீரையோ, ஆந்திராவையோ, தமிழ் நாட்டையோ பிரித்து தனி நாடாக இந்தியா ஒருபோதும் வழங்காது. ஆனால் தமிழ் நாட்டினை இரண்டாகவோ, மூன்றாகவே பிரிக்க இந்தியா விரும்பும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதெப்படி.. உது இந்திய இறையாண்மையை பாதிக்காதோ..! ஒன்றா உள்ளதைப் பிரிக்கிறது பாவமில்ல. சிறீலங்காவை பிரிச்சா இந்திய இறையாண்மைக்கு பாதிப்பு.. என்றவை.. ஆந்திராவைப் பிரிக்கிறது என்ன நியாயம்..????! :lol::D

 

கந்தப்பு சொன்னது போல மக்கள் கூட்டத்தை பிரிப்பதன மூலம் அவர்களின் பலத்தை குறைப்பதே இந்தியாவின் நரித்தந்திரம். பஞசாப் பெரிய மாநிலமாக சீக்கியருக்கு இருந்த போது ஹிரியானா எனும் மாநிலம் உருவாக்கப்பட்டது. பின்னர்  தோட்ட வேலைக்கு என  ஏழை இந்துக்களை  தந்திரமாக குடியேற்றி சீக்கிய சனத்தொகை பரம்பலை குறைத்ததும் இந்திய நடுவண் அரசு தான். தமிழ் நாட்டை பகுதி பகுதியாக ஏனைய மாநிலங்களுடன் இணைத்தது தமிழ் நாட்டின் தமிழரல்லாத தலைமைகள் தான். மக்களை சிந்திக்க விடாமல் மந்தைகளாக்கும் போது இத்தைகைய கைங்கரியங்களை இலகுவாக நடாத்தி முடிக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் நாட்டைப் பிரிப்பதற்கும், இந்தியாவில் மொழி மற்றும் கலாச்சார அடிப்படையில் ஒரு மாநிலத்தை நிர்வாக ரீதியில் பிரிப்பதற்கும் நிறையவே வேறுபாடு இருக்கிறது. 

 

ஆந்திராவைப் பிரிப்பதால் இந்திய இறையாண்மைக்கோ,பாதுகாப்பிற்கோ அல்லது வேறு எந்த ஆபத்திற்கோ இடமில்லை. புதிய ஆந்திர மாநிலம் வேறு எங்கும் போய்விடப்போவதில்லை. அவர்கள் பிரியுமுன்னரும் இந்தியர்கள், பிரிந்தபின்னரும் இந்தியர்கள்தான். இதை மகிழ்வுடனேயே இந்திய மத்திய அரசு செய்யும். ஏனென்றால் இந்திய மாநிலங்கள் எதற்குமே அதிகளவு அதிகாரங்களை மத்திய அரசு வழங்கவில்லை. ஒரேயொரு விடயம் என்ன்வென்றால் அந்தந்த மாநிலத்தில் அதே மொழி பேசுகின்ற ஒரு அரசு இயங்குகிறது. ஆனால் இந்த மாநில அரசுகளின் குடுமி எப்போதுமே மத்திய அரசின் கைய்யில் மிகவும் இறுக்கமாகப் பிடிக்கப்பட்டிருக்கிறது.

 

ஆனால் எமது பிரச்சினை அப்படியல்ல. என்னதான் எமது தாயகவிடுதலைப் போராட்டம் நியாயமானதாகவும், தார்மீக ரீதியானதுமாக இருந்தாலும் கூட, நாம் கேட்பது எமக்கென்று ஒரு தனியான நாடு. சிறிலங்கா எனும் சிங்களம் பேசும் நாட்டிலிருந்து வேறுபட்டு, அந்த நாட்டுடன் எந்தவித தொடர்புமற்ற  சுதந்திரமாக எம்மை நாமே ஆளுகின்ற தமிழீழம் என்கிற தேசத்தை.

 

இலங்கையரசைப் பொறுத்தவரை இது மிகவும் பாரதூரமான விடயம். அதன் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவிக்கும் விடயம், ஆகவேதான் இன்றுவரை எம்மில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்களை மனித விழுமியங்களுக்கும் அப்பால் சென்று பலியிட்டிருக்கிறது. நாம் தொடர்ந்தும் சுதந்திரம் கேட்டால் இதுபோல இன்னும் பலியிடல்களை அது செய்யத் தயங்கப்போவதில்லை. 

 

ஆகவே ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிவதையும் இலங்கை இரண்டாகப் பிரிவதையும் ஒப்பீடு செய்து பார்க்கவேண்டாம். 

Edited by ragunathan

தனி தெளுங்கானாவிற்காக போராடி, மத்திய அரசை அவன் அடிபணிய வச்சுட்டான், ஆனால் , சித்தூர், நெல்லூர் போன்ற தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் தமிழ் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள் , இவை முன்னர் தமிழ் நாட்டிற்கு உரிய பகுதிகள், தமிழர் அல்லாத திராவிடர்களால், அல்லது தமிழ் இந்திய விதிகளால் இந்த பகுதிகள் தாரை வார்ரக்கபட்டன், திருப்பதி உட்பட, திருப்பதி தமிழர்களுக்கு சொந்தமான் ஆலயம், எந்தவிதமான அடிப்படை வசதிகளுமற்ற பகுதிகளாக்க பட்டு விட்டன இந்த சித்தூர், நெல்லூர் போன்ற பகுதிகள்,, தமிழர்கள் இங்கே வாழ்வதால் ஆந்திர அரசு புறக்கணிக்கிறது.

தனி தெலுங்கான அமைந்தால் இந்த பகுதிகள் , எந்த மாநிலத்திற்கு சொந்தமாகும்?, இநத பகுதியில் வாழும் மக்கள் எந்த மாநிதுடன் சேந்து வாழ விரும்புவார்கள்? , இதை பற்றி ஒருபோதும் நம்ம தமிழ் நாடு திராவிட கட்சி காரன் பேசமாட்டான், ஏன்னா , அவன் தமிழன் இல்லையே. ஆனாபடியால் , அங்கே வாழும் தமிழ் மக்கள் தான் அந்த கோரிக்கையை முனவைது வேண்டும், 

தனி தெளுங்கானாவிற்காக போராடி அவர்கள் வெற்றி பெற முடியுமாயின் , இது ஏன் ,முடியாது?, நம்மை ஒன்று படவோ, நம்மை போராடவோ, எந்த திராவிட கட்சிகாரனும் , அனுமத்தித்தது இல்லையே. நாமளும் நமது போராட்டங்களை வலுவானதாக நடத்தியதில்லை.

அப்புறம் கும்முறான், குடயுறான் என ஓலமிடுவது தான் நம்ம புளப்பா போச்சு!, இது ஒரு தக்க தருணம், இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்க வாய்ப்பில்லை.

நன்றி முகனூல் நண்பர்கள் 

Edited by யாழ்அன்பு

972300_698497320177353_499741364_n.jpgஇந்த "எழுமலையான்" யார் பக்கம்!????

நன்றி முகனூல் நண்பர்கள் 

 
தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி இந்திய அரசிற்கு எதிராக தொடர்ந்து பல வருடங்களாக ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட தெலுங்கானா மாணவர்களும், மக்களும் ஒன்று சேர்ந்து பல உயிர்களை பலிகொடுத்து நடத்திய போரில் இன்று இறுதிகட்டத்தை அடைந்துள்ளனர்.

ஐதராபாத் நிஜாம் ஆட்சியில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்படாத தனி நாடாக விளங்கிய தெலுங்கானா பகுதி மக்கள், தங்கள் கடும் உழைப்பில் உருவாகி வைத்திருந்த ஐதராபாத் என்ற தலைநகரோடு அயோக்கிய இந்திய அரசு கொடுத்த போலி வாக்குறுதிகளை நம்பி, நிஜாம் ஆட்சியை எதிர்த்து போராடி ஆங்கிலேயர் உருவாக்கிய இந்தியாவில் இணைந்தனர்.

பேய்க்கு பயந்து பிசாசிடம் மாட்டிய கதையாக. தனி நாடாக மாற வேண்டிய தெலுங்கானா பகுதி அயோக்கிய மக்கள் விரோத இந்திய அரசில் இணைந்ததால் தங்கள் மொழி பேசுகிற மக்களாலே சுரண்டப்பட்டு, ஏமாற்றப்பட்டு, உரிமைகளை பறிக்கப்பட்டு, கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டு கையறு நிலைக்கு உள்ளான காலகட்டத்தில் தனி மாநில கோரிக்கை வெடித்தது.

2009 தொடக்கத்தில் தீக்குளிப்பு போராட்டங்கள் வெகு விரைவாக பரவின, அடுத்த 4 மாதத்தில் தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி கிட்டதட்ட 300 மேற்பட்டோர் தீக்குளித்தனர். உஸ்மானிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை வலுவாக்க தொடங்கினர்..பின்னர் நடந்த தொடர்ச்சியான போராட்டங்களால் தங்கள் கோரிக்கையை உயிப்புடன் வைத்து இன்று வெற்றி பெற்றுள்ளனர்.. இந்திய அரசின் துரோகம் நிச்சயம் தொடரும், அதை உணரும் போது தனி நாடாக போகும் போராட்டத்தை அடுத்து அவர்கள் நிச்சயம் முன்னெடுப்பார்கள்.

இதிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம் :அழுகிற பிள்ளைக்கு தான் பால் கிடைக்கும்.போராடினால் தான் உரிமையை வென்றெடுக்க முடியும். சாதி என்னும் விசத்தை பரப்பி தமிழக மக்களை துண்டாட துடிக்கும் பார்ப்பனிய இந்திய அரசுக்கு எதிராகவும், ஈழம் உட்பட தமிழகத்துக்கான அத்துனை உரிமைகளை வென்றெடுக்க உரிமைக்கான அரசியல் போராட்டம் தொடங்கப்பட வேண்டும்.

தெலுங்கானாவை போல் மத்திய அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு,ஒடுக்கப்பட்டு,சுரண்டப்பட்டு வரும் தமிழகம் தனது தேசிய விடுதலைக்கான போராட்டங்களை தொடங்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயம்.

“”அரசியல் விடுதலையே மக்கள் விடுதலை”” .அதனை மாணவர்களாகிய நாம் முன்னின்று முன்னெடுக்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பம். தேவையும் கூட.
577158_634322429920546_290123635_n.jpg

 

முகநூலில் இருந்து 

தோழர் தமிழானந்தன்      30 July 2013

-------------------------------------------------------------------------------------------------------------

Rajkumar Palaniswamy
தெலுங்கானா மாநிலம் பிரிவதை அடுத்து கன்னடர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரை. உண்மையில் இது போன்ற கட்டுரைகளை நாம் தான் எழுதவேண்டும். ஆனால் நாம் இன்னும் இந்த பாடத்தை தொடவில்லை என்றே தோன்றுகிறது. இந்திய அரசு டெல்லியில் இருந்து நடத்தும் ஒற்றை ஆட்சி முறையை இன்னும் நாம் கேள்விக்கு உட்படுத்தவில்லை. இதை மற்ற மாநிலத்தவர்கள் கூட அறியத் தொடங்கிவிட்டனர் . இந்தியா என்னும் அதிகாரவர்க்கம் மாநிலங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்கு என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை நாம் உணரவேண்டும்.

சிறிய மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படுவதோடு, அம்மாநிலங்களின் பெரிய அளவில் வளர்ச்சியும் காணப்படுவதில்லை. மாறாக இந்திய அரசு நேரடியாக யூனியன் பிரதேசமாக கருதும் ஒன்றியப் பகுதிகளை உருவாக்க முனைகிறது. சிறிய மாநிலங்களுக்கு பேரம் பேசும் உரிமை மிகக் குறைவாகவே காணப்படுகிறது. மொழி வழி மாநிலங்களாக நாம் பிரிந்தாலும் எல்லா மாநிலங்களுக்கும், மொழிகளுக்கும் சமமான உரிமை இந்தியாவில் தரப்படுவதில்லை. அப்படி இருக்கும் போது ஒரே மொழி பேசும் மாநிலங்கள் இரண்டாக பிரிவது யாருக்கு இலாபம் ? இந்திய நடுவண் அரசுக்கு தானே. மாநிலங்களுக்கு அல்லவே ! இதை பற்றி அலசி ஆராய்கிறது இந்த ஆங்கிலக் கட்டுரை. அவசியம் படியுங்கள். நாம் கொஞ்சம் விழிப்புடன் இருப்பது நமக்கு நல்லது.
-PAXP-deijE.gif

 

 

முகநூலில் இருந்து  --  

Rajkumar Palaniswamy   30 July 2013

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.