Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழனிடம் அடிவாங்கிய ஹிந்தியன்..

Featured Replies

1987ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 12ம் திகதி, நேரம்: அதிகாலை 1 மணி, திட்டமிட்டபடி இந்தியப் படைகள் விடுதலைப் புலிகளின் தலைவரை குறிவைத்து தமது நகர்வினை ஆரம்பித்திருந்தன.

விடுதலைப் புலிகளின் தலைவரைக் குறிவைத்த அந்த அதிரடி இராணுவ நடவடிக்கையில் இந்திய இராணுவத்தின் இரண்டு முக்கிய படை அணிகள் ஈடுபடுத்தப்பட்டன.
1. இந்தியப் படையின் முக்கியமான படை அணியான பராக் கொமாண்டோக்கள் (Para Commandos)
2. 13வது சீக்கிய மெது காலாட் படையணி (13 - Sikh Light Infantry)

நான்கு எம்.ஐ.-8 (MI8) ஹெலிக்காப்டர்கள் பராக் கொமாண்டோக்களையும், விஷேட பயிற்சி பெற்ற சீக்கியக் காலாட்படையினரையும் தரையிறக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
ஸ்ரீலங்கா வான் படையினரின் வழிகாட்டல்களிலேயே இந்த தரையிறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தலைவர் பிரபாகரன் அவர்கள் தங்கிருந்ததாகக் கூறப்படும் இல்லத்தை முற்றுகையிட்டு அவரைக் கைப்பற்றும் பணி, 100 பராக் கொமாண்டோக்களிடம் (Para Commandos) ஒப்படைக்கப்பட்டிருந்தது.

புலிகளின் தலைவரைக் கைப்பற்றிக் கொண்டு திரும்பும் பராக் கொமாண்டோக்களை ஹெலிக்காப்டர்களில் பத்திரமாக திருப்பி அனுப்பிவைப்பதற்காக யாழ் பல்கலைக்கழக மைதானத்தை கைப்பற்றி, தளமாக்கி, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பணி 13வது சீக்கிய மெது காலாட் படையினரிடம் (13 - Sikh Light Infantry) ஒப்படைக்கப்பட்டிருந்தது.

திருநெல்வேலி வீதியும், பிறவுன் வீதியும் இணையும் சந்திக்கு அருகே உள்ள கொக்குவில் கிராமசபைக்கு முன்பாக உள்ள வெட்டவெளியில் பராக் கொமாண்டோக்கள் தரையிறக்கப்பட்டார்கள். 
ஆனால், இந்தியப் படைத்துறை அதிகாரிகள் நினைத்தபடி தரையிறக்கம் அத்தனை இலகுவானதாக இருக்கவில்லை.
இந்தியப் படையினர் சற்றும் எதிர்பார்க்காத அளவிற்கு புலிகள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்திருந்தார்கள். 
தரையிறக்கம் இடம்பெற்ற இடத்தினை வெகுவிரைவில் சூழ்ந்து கொண்ட விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள ஆரம்பித்தார்கள்.
எங்கிருந்து துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுகின்றன என்று தெரிந்து கொள்ள முடியாத அளவிற்கு பல முனைகளில் இருந்தும் தரையிறங்கிய ஹெலிகளைக் குறிவைத்து துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டபடியே இருந்தன.

ஐந்து தரையிறக்கங்களை மட்டுமே இந்தியப் படையினரால் அங்கு மேற்கொள்ள முடிந்தது. புலிகளின் எதிர்ப்பு அத்தனை கடுமையானதாக இருந்தது. இந்தியப்படையினரின் மூன்று ஹெலிகள் புலிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி தரையிறக்கத்தை கைவிட்டு தளம் திரும்பவேண்டி ஏற்பட்டது.

பரசூட்டில் குதித்த சீக்கியர்கள்:
இதேவேளை, இந்தியப் படையினர் தமது முற்றுகைத் தாக்குதல் திட்டத்தின் அடுத்த கட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்தார்கள். 
யாழ் பல்கலைக்கழக மருத்துவபீடத்தை அண்டிய பகுதியில் 13வது சீக்கியப் படையணியினரைப் பரசூட்டுக்களின் மூலம் தரையிறக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள எத்தனித்தார்கள். 
முன்னைய தரையிறக்க நடவடிக்கையைப் போலல்லாமல், இந்த தரையிறக்க நடவடிக்கையை மிகவும் இரகசியமாக மேற்கொள்ளுவதே இந்தியப் படையினரின் திட்டமாக இருந்தது. 
கொக்குவில் பிரதேசத்தில் பராக் கொமாண்டோக்களை ஆரவாரத்துடன் தரையிறக்கி புலிகளின் கவனத்தை அங்கு முற்றாகத் திருப்பிவிட்டு, பல்கலைக்கழக மருத்துவபீட பிரதேசத்தில் சீக்கியத் துருப்பினரை பரசூட்டுக்கள் மூலம் இரகசியமாக தரையிறக்கி நிலை கொள்ள வைப்பதே இந்தியப்படையினரின் திட்டமாக இருந்தது. இவ்வாறு இரகசியமாக தரையிறங்கும் சீக்கியப்படையினர், யாழ் மருத்துவபீட வளாகத்தைத் தமது தளமாக ஆக்கிக் கொள்ளுவதுடன், தேவை ஏற்பட்டால் கொக்குவில் பிரதேசத்தில் தரையிறங்கிய பராக் கொமாண்டோக்களுடன் சண்டைகளில் ஈடுபட்டிருக்கொண்டிருக்கும்விடுதலைப் புலிப் போராளிகளுக்கு பின்புறம் இருந்து தாக்குதல்களைத் தொடுத்து, ஒரு அதிர்ச்சி நடவடிக்கையை மேற்கொள்ளுவதும் அவர்களது திட்டமாக இருந்தது.

உண்மையிலேயே இது நல்லதொரு திட்டம்தான். 
ஆனால் எதிர்காலத்தையும், எதிரியின் எந்த ஒரு நகர்வினையும் கச்சிதமாகக் கணிப்பிடவல்ல தலைவர் என்று அவரது எதிரிகளால் கூட பாராட்டப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர், இந்தியத் துருப்புக்கள் இவ்வாறுதான் தமது நகர்வினை மேற்கொள்ளக்கூடும் என்று தமது போராளிகளுக்கு ஏற்கனவே எச்சரித்திருந்தார். அப்படி ஒரு நகர்வு மேற்கொள்ளப்படும் பொழுது அதனை எவ்வாறு எதிர்கொள்ளுவது என்றும் அவர் திட்டமிட்டிருந்தார்.

அதன்படி, யாழ் மருத்துவ பீட கட்டிடத்தின் மாடிகளிலும், அருகில் இருந்த மரங்களிலும் விடுதலைப் புலிப் போராளிகள் நிலை எடுத்திருந்தார்கள். பின்நாட்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவுப் பொருப்பாளராக இருந்த பொட்டு அம்மாணின் தலைமையிலேயே இந்த தற்காப்புத் தாக்குதல் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்தியப் படை வீரர்கள் பரசூட்டுக்களில் குதிக்க ஆரம்பித்ததும் ஏற்கனவே நிலையெடுத்து பதுங்கியிருந்த விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள ஆரம்பித்திருந்தார்கள்.

நள்ளிரவு.
காரிருளில் பரசூட்டுக்களில் தொடர்ச்சியாகக் குதித்துக்கொண்டிருந்த இந்திய படையின் சீக்கிய காலாட் படைப்பிரிவினருக்கு எங்கிருந்து துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்படுகின்றன என்று புரியவில்லை. திரும்பிய பக்கமெல்லாம் இருந்து துப்பாக்கிச் சன்னங்களின் ஒளிகள் தம்மை நோக்கி வந்துகொண்டிருப்பதை அவர்கள் அவதாணித்தார்கள். பரசூட்டுக்களில் தரையிறங்கிக்கொண்டிருந்த பல இந்திய வீரர்கள் தரையைத் தொடும் முன்னதாகவே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அநியாயமாக இறந்துவிட்டிருந்தார்கள்.

இதில் தரையிறங்கிய இந்தியப் படைப்பிரிவிற்கு பொறுப்பான அதிகாரி மேஜர் பீரேந்திர சிங்கும் ஒருவர். அத்தோடு தரையிறங்கிய இந்தியப் படைப்பிரிவின் தொலைத்தொடர்பு இயக்குனரும் கொல்லப்பட்டிருந்தார்.

இந்திய ஜவான்களுக்கு ஏற்பட்ட தடுமாற்றம்:

தரையிறங்கிக்கொண்டிருந்த சீக்கிப் படைவீரர்களுக்கும்சரி, தரையிறக்கத்தை பாலாலி இராணுவத் தளத்தில் இருந்து நெறிப்படுத்திக்கொண்டிருந்த இந்தியப் படை அதிகாரிகளுக்கும் சரி, களமுனையில் என்ன நடக்கின்றது என்று ஒன்றுமே புரியவில்லை.

சீக்கிய காலாட் படையினரை தரையிறக்கவெனச் சென்ற ஹெலிக்கப்டர்கள் சுமார் 30 படையினரை மட்டுமே தரையிறக்கிவிட்டு, துப்பாக்கிச் சூடு அதிகமாக இருப்பதாகவும், மற்றவர்களை தரையிறக்கமுடியாது என்றும் கூறிவிட்டு தளம் திரும்பிவிட்டன. தரையிறங்கியவர்களின் கதி என்னவென்று அறிவதற்கும் தளத்தில் இருந்தபடி தாக்குதல் நடவடிக்கைகளை நெறிப்படுத்திக்கொண்டிருந்த அதிகாரிகளால் முடியவில்லை. தொலைத் தொடர்பு முற்றாகவே துண்டிக்கப்பட்டிருந்தது.

தரையிறக்கத்தை மேற்கொண்டிருந்த படையினர் கதி அதைவிட மோசமானதாக இருந்தது. திரும்பிய பக்கமிருந்தெல்லாம் துப்பாக்கி வேட்டுக்கள் தம்மை நோக்கி வந்தவண்ணம் இருந்தன. கடும் இருளில் தமது சகாக்கள் எங்கிருக்கின்றார்கள், தாம் எங்கு நிலை எடுக்கவேண்டும், அடுத்து என்ன செய்யவேண்டும் என்று எதுவுமே அவர்களுக்குப் புரியவில்லை. தமது அணிக்கு தலைமைதாங்கிவந்த அதிகாரியிடம் இருந்தும் எந்த வித உத்தரவும் வந்தபாடில்லை. தளத்துடனும் எந்தவித தொடர்பும் இல்லை. தமது தரப்பில் எத்தனை பேர் தப்பி இருக்கின்றார்கள்? யார் யார் உயிருடன் இருக்கின்றார்கள்? யார்யார் இறந்திருக்கின்றார்கள்? அவர்கள் எங்கெங்கு நிலை எடுத்திருக்கின்றார்கள்? தமது தற்போதைய பலம் என்ன? தமக்கு வெளியில் இருந்து எதாவது உதவிகள் கிடைக்குமா? - எதுவுமே அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. காரிருள் அவர்களுக்கு எதனையும் தொடர்ந்து செய்வதற்கு அனுமதியளிக்கவும் இல்லை.

இரகசியமான நகர்வினை மேற்கொள்ளவென வந்த அவர்களது நடவடிக்கைகள் பகிரங்கமானது அவர்கள் சற்றும் எதிர்பார்க்காதது. இரகசியமாகத் தரையிறங்கி, அங்கு பாதுகாப்பு அரன்களை உருவாக்கி நிலையெடுப்பதற்கு ஏதுவாக இந்தியப் படையினர் தம்முடன் சிறிய சவள்களும், சாக்குப் பைகளும் கொண்டு வந்திருந்தார்கள். தரையில் படுத்திருந்தபடி தாம் உடன் கொண்டுவந்திருந்த சவள்கள் மூலம் மண்ணைத் தோண்டிய சீக்கியப் படை வீரர்களுக்கு பலத்த ஏமாற்றமே கிடைத்தது. அந்தப் பிரதேசம் கடினமான தரையமைப்பைக் கொண்ட பிரதேசம் என்பதால், அவர்களுக்கு அதுவும் முடியவில்லை.

நிலத்தில் படுத்திருந்து நிலை எடுத்தபடி அனைத்து திசைகளை நோக்கியும் சுட்டுக்கொண்டிருந்தார்கள். இரண்டு இந்திய ஜவான்கள் தமது துப்பாக்கி ரவைகள் தீர்ந்துவிட்ட நிலையில் தம்மைப் பாதுகாக்கவெனத் தமது துப்பாக்கி முனைகளில் பொருத்தப்பட்டிருந்த பையனைட் கத்திகள் (Bayonet) கொண்டு புலிகளை தாக்க ஆரம்பித்திருந்தார்கள்.

விடிய ஆரம்பித்ததும், விடுதலைப் புலிகள் தமது இலக்குகளை இனங்கண்டு துல்லியமாகத் தாக்குதல்களை மேற்கொண்டார்கள். யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட வளாகத்தினுள் தரையிறங்கிய 30 இந்திய சீக்கியப் படைவீரர்களுள் 29 வீரர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ஒரு ஜவான் புலிகளால் உயிருடன் பிடிக்கப்பட்டார்.

இதேவேளை, கொக்குவில் பிரதேசத்தில் ஏற்கனவே தரையிறக்கப்பட்டிருந்த 100 பாராக் கொமாண்டோக்களும், அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார்கள்.

◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘◘
எங்களுடன் வலைத்தளத்தில் இணைய,
இணையத்தள முகவரி:- www.thaayakam.com
முகநூல் பக்கம்:- Thaayakam.Com

  • தொடங்கியவர்

அந்த புலிகளால் உயிருடன் பிடிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட அந்த எருமை தான் ஐநா செயலாளர் பாங்கி மூன் இன் மருமகன். அதனால் தான் எமது தமிழனம் பழிவாங்கப் பட்டது

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. கதை அப்பிடிப் போகுதா??

நன்மை செய்ய போன இடமெல்லாம் தமிழரின் கதி அப்படித்தான் போயிருக்கு. விடுவிக்காமல் வைத்திருந்தால் பாக்கியும், நம்பியாரும்  மனச்சாட்சியாக நடந்திருந்திருப்பார்கள்.

பாண்டி பசாரில் உமா -பிரபா சூட்டு சம்பவ இடத்தில் இருவரையும் கைது செய்தபோது இலங்கை கேட்டதற்கு இணங்கி கொடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் .

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசு இன்று இந்தியாவுக்கு தண்ணி காட்டுவதை அப்போதே காட்டி இருப்பார்கள்.

பாண்டி பசாரில் உமா -பிரபா சூட்டு சம்பவ இடத்தில் இருவரையும் கைது செய்தபோது இலங்கை கேட்டதற்கு இணங்கி கொடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் .

பிரபா-உமவை பிடித்து இலங்கையிடம் கொடுப்பதுதான் இந்தியாவுக்கு நன்மையான விடயம். ஆனால் முற்றும் துறந்த ஞானிகள் ஆன இந்திய அரசியல்வாதிகள் தமிழருக்கு நன்மையாக செய்தார்கள். அதே போல் தேவா ஒரு நாள் மன்மோகன் சிங்கை சந்திக்க இந்தியா போகும் போது தேவாவையும் பிடித்து ஒரு நாள் சென்னையில் கொடுப்பார்கள். அதுக்கும் தமிழர்களின் நன்மைத்தான் காரணம்.. 

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

பாண்டி பசாரில் உமா -பிரபா சூட்டு சம்பவ இடத்தில் இருவரையும் கைது செய்தபோது இலங்கை கேட்டதற்கு இணங்கி கொடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் .

என்னது பண்டாரவன்னியனும் காக்கைவன்னியனும் ஒன்றா இருந்தார்களா?

  • தொடங்கியவர்

நன்மை செய்ய போன இடமெல்லாம் தமிழரின் கதி அப்படித்தான் போயிருக்கு. விடுவிக்காமல் வைத்திருந்தால் பாக்கியும், நம்பியாரும்  மனச்சாட்சியாக நடந்திருந்திருப்பார்கள்.

இதில் பாங்கிக்கு 2 மகள்கள்  அதில் ஒன்று நம்பியார் மகனும் மற்றதை யாழில் தப்பிய இந்தியனும் கட்டி இருக்குறார்கள். இவங்க இருவரும் ஐநாவில் முக்கிய பதவிகளில் இருக்குறார்கள். இந்திய ராணுவம் திரும்பி போனவுடன் வேலைய விட்டு ஐநாவில் பணிக்கு சேர்ந்து பாங்கியின் மகளை மணம்  பிடித்து எங்களுக்கு சனி பிடித்தது. :icon_idea: 

இதில் பாங்கிக்கு 2 மகள்கள்  அதில் ஒன்று நம்பியார் மகனும் மற்றதை யாழில் தப்பிய இந்தியனும் கட்டி இருக்குறார்கள். இவங்க இருவரும் ஐநாவில் முக்கிய பதவிகளில் இருக்குறார்கள். இந்திய ராணுவம் திரும்பி போனவுடன் வேலைய விட்டு ஐநாவில் பணிக்கு சேர்ந்து பாங்கியின் மகளை மணம்  பிடித்து எங்களுக்கு சனி பிடித்தது. :icon_idea: 

விபரத்திற்கு நன்றி. நான் மாட்டியது நம்பியாரின் மகன் என்று நினைத்தேன். கிந்தியன் என்று தலைபில் இருந்தாலும், மலையாளியையும் கிந்திய ஆமியாக பார்த்துவிட்டேன். 

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

விபரத்திற்கு நன்றி. நான் மாட்டியது நம்பியாரின் மகன் என்று நினைத்தேன். கிந்தியன் என்று தலைபில் இருந்தாலும், மலையாளியையும் கிந்திய ஆமியாக பார்த்துவிட்டேன். 

சென்ற ஆண்டு நெடுமாறன் ஐயாவை சந்திக்கும் பொது அவர் இதன் விபரங்களை அக்கு வேறா ஆணி வேறா விபரித்தார். நானும் முன்பு தனிய மலயாளி என்று எண்ணினேன் அப்புறம் கிந்தியனும் என்று பிறகுதான் தெரியும். அவனது பெயர் சொன்னவர் நான் மறந்திட்டேன். அந்த பெயரை கூகிலில் அடித்து பார்த்தால் முழுவிபரமும் வரும் என்று சொன்னவர். :icon_idea: 

என்னது பண்டாரவன்னியனும் காக்கைவன்னியனும் ஒன்றா இருந்தார்களா?

 

அக்காலத்தில் உமாமகேஸ்வரன் துரோகியா?. உமாமகேஸ்வரன் சிங்கள இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டாரா?. ஒபரேய் தேவன் துரோகியா?. டெலோ, ஈபிஆர் எல் எவ், தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் துரோகியா?. ரெலா துரோகியா?. டெலோ துரோகி என்றால் அடைக்கல நாதன் எம்பி துரோகியா?. சிவாஜிலிங்கம் துரோகியா?. ஈபிஆர் எல் எவ் துரோகி என்றால் சுரேஸ் பிரேமச்சந்திரன் துரோகியா?. விடுதலைப்புலிகளுடன் இணையவேண்டும் என்று நினைத்து இந்தியாவுக்கு படகில் சென்று வேறு இயக்கத்தின் கீழ் இணைந்தவர்களும் துரோகியா?. 80களில் வெளினாட்டுக்கு செல்வோரும் துரோகிகளாக பொதுமக்களில் சிலர் சொல்வதுண்டு. அப்படியானால் நான் துரோகியா? நீங்கள் துரோகியா?. ஆனையிறவு வீரச்சமரில் ஒருவேளை கருணா இறந்திருந்தால் அவர் மாவீரரா? . உமாமகேஸ்வரனின் கீழ் இயங்கிய தராகி சிவராம் துரோகியா?. அவருக்கு மாமனிதர் பட்டம் வழங்கலாமா?. இப்படியே முள்ளிவாய்க்காலுக்குப்பின்பும் எங்களுக்குள் அடிபட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் மகிந்தாவும் இரணிலும் தமிழர்களை அழிக்கும் போது ஒரே நோக்கில் செயற்படுகிறார்கள். இயக்கமொன்றின் தலைமைப்பீடம் செய்யும் தவறினால் ஈழம் வேணுமென்ற காரணத்தினால் எதாவது ஒரு இயக்கத்தில் சேர்ந்தவர்களையும் துரோகிகளாக, ஒரு போராட்டத்திலும் ஈடுபடாமல் வெளினாட்டுக்கு தப்பி ஒடியவர்கள் கூறிவது சரியா?. 2002 ல் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை விடுதலைப்புலிகளினால் உறுவாக்கும் போது டெலோ, ஈபிஆர் எல் எவ் இயக்கத்தில் இருந்தவர்களையும் சேர்ந்தார்கள். அதாவது முன்பு பகைவர்களாக இருந்தவர்களையும் இணைத்தார்கள். ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் இருப்போர் இவன் துரோகி, அவர் கள்ளன் என்று எங்களுக்குள் அடிபட்டு நடப்பது சரியா?.

தகவலுக்கு நன்றி யாழ் அன்பு.

 

 

Moon and Nambiar families’ allegiance to India and war crimes

 

There is a view that the UN Organization General Secretary Ban Ki Moon appointed a panel of experts to investigate the human rights (HR)  violations and the war crimes committed during the Sri Lanka (SL) war was  in order to get an extension for  his term in office as Gen. Secretary. It is evident that when his first term is  about to end , he is resorting to various ploys to get it extended.. One such ploy  is the panel of experts appointed by him to inquire into Sri Lankan violations. There were widespread and repeated  allegations from the Western countries, Foreign NGOs and the International media that Ban Ki Moon took no measures against the Human Rights  violations and the war crimes  committed in Sri Lanka during the war. Through a prominent member Vijaya Nambiar of the UN Organization , accusations were levelled that Ban Ki Moon was maintaining close and cordial ties with   the Sri Lanka President Rajapaksa , and is therefore suppressing the war crime charges against Sri Lanka. There were also allegations that India was using Nambiar towards this end.

When Ban Ki-Moon’s policies pertaining to Sri Lanka came up for questioning by the Foreign media from the UN Ambassador to  France, Gerard Aroud , the latter stated , India and China are obstructing Moon from taking drastic measures against Sri Lanka. Now it has become known that Moon’s son in law Siddharth Chatterjee was a former officer of the Indian Army, and during the period of the 1987 Indo Lanka accord , he had served in the Indian peace keeping Force which arrived in Sri Lanka. Presently  , Moon’s son in law Chatterjee is holding a post in the UN Organization at D2 level ; charges are current  against Moon for giving preferential treatment to his son in law..

Similarly , the International media recently revealed that during the final phase of the Sri Lanka war , a former Chief of the Indian Army , Satish Nambiar, the brother of chief of staff in  the UN Organization Vijaya Nambiar , was sent here  by Ban Ki- Moon to protect the civilian population . The former chief of the Indian Army proffered advice to Sri Lankan  Army  regarding the war . The International media however   charged  that by Vijaya Nambiar  acting according to  Satish Nambiar’s advice and India’s needs, no efforts were made to save the Tamil  Tiger leaders who came forward holding white flags,  or the civilian population in the final stages of the war.

In an earlier article of mine I had made mention of how the Sri Lankan President Mahinda Rajapaksa extended support to appoint Ban Ki-Moon as the UN Organization Gen. Secretary,by making Jayantha Dhanapala , the Sri Lankan  candidate for the UN Gen. Secretary  post to withdraw, in order to facilitate Ban Ki- Moon’s election to the post of Gen. secretary  of the UN Organization .Consequent upon this , Ban Ki-Moon became  very closely associated with the President and his brother Basil Rajapaksa.

Ban Ki-Moon’s close ties with the Rajapaksa brothers apart, there is another reason which incapacitates Moon from  taking  drastic measures against Sri Lanka – the support that was given to him by Mahinda Rajapaksa to secure the post of UN Gen. secretary . It is possible that these are the  relationships which compelled Ban Ki Moon to ignore the  repeated requests made to him to intervene and take action to halt the war at the last stages.

It is not certain whether Ban Ki Moon’s conduct in the final phase of the war was influenced and induced by the support lavished on him to be appointed as the Gen. Secretary by the Rajapaksa govt. or was it due to the pressure brought to  bear on him by India via his son in law. ?

If Moon’s son in law Chatterjee had been in Sri Lanka during the 1987  Indo Lanka accord period as an Indian Peace keeping Force (IPKF) officer, he ought to be well conversant with the Sri Lankan war and the Tamil Tiger Organization. He must have experienced very difficult times when the Tamil Tigers waged war against the IPKF . It is not unlikely that he could have made Moon understand that the Tamil Tigers had no desire for peace , and that they should be annihilated.

On the one hand India must have silenced Moon by using his son in law , while on the other, India must have also used the UN Organization chief of staff Vjaya Nambiar who was appointed by Moon,  to take steps to safeguard the Sri Lankan  civilian population . Indeed , there are charges that Satish Nambiar, a former Indian Army Chief was used to exert influence on his brother Vijaya Nambiar.

It is exceedingly clear that the combined efforts based on the ‘game  plan’ of India orchestrated  by the Rajapaksa family, the son in law Chatterjee  of UN Organization Gen. Secretary  Ban Ki-Moon’ s family   and the brother of chief of staff Vijaya Nambiar’s family  had worked effectively and efficaciously . But Moon who fell prey to this game plan is now , again confronted by odds and obstacles militating against his appointment  as the General secretary for  a second term.

This is because western countries are questioning his role in this  game  plan. Moon may have appointed a panel of experts relating to  Human Rights  violations in Sri Lanka  only to please the Western countries which have now turned sour against him.

No matter what amount of effort Moon may put to please the Western countries to fortify his position and keep his post , India however will not relent or relax in its attempts to use the Rajapaksa , Ban-Ki Moon and the Nambiar families which were contributory to the Tamil Tiger devastation to suppress the war crime charges surfacing against Sri Lanka .

 

http://print2.dailymirror.lk/opinion1/5639.html

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அக்காலத்தில் உமாமகேஸ்வரன் துரோகியா?. உமாமகேஸ்வரன் சிங்கள இராணுவத்துடன் இணைந்து செயற்பட்டாரா?. ஒபரேய் தேவன் துரோகியா?. டெலோ, ஈபிஆர் எல் எவ், தம்பாப்பிள்ளை மகேஸ்வரன் துரோகியா?. ரெலா துரோகியா?. டெலோ துரோகி என்றால் அடைக்கல நாதன் எம்பி துரோகியா?. சிவாஜிலிங்கம் துரோகியா?. ஈபிஆர் எல் எவ் துரோகி என்றால் சுரேஸ் பிரேமச்சந்திரன் துரோகியா?. விடுதலைப்புலிகளுடன் இணையவேண்டும் என்று நினைத்து இந்தியாவுக்கு படகில் சென்று வேறு இயக்கத்தின் கீழ் இணைந்தவர்களும் துரோகியா?. 80களில் வெளினாட்டுக்கு செல்வோரும் துரோகிகளாக பொதுமக்களில் சிலர் சொல்வதுண்டு. அப்படியானால் நான் துரோகியா? நீங்கள் துரோகியா?. ஆனையிறவு வீரச்சமரில் ஒருவேளை கருணா இறந்திருந்தால் அவர் மாவீரரா? . உமாமகேஸ்வரனின் கீழ் இயங்கிய தராகி சிவராம் துரோகியா?. அவருக்கு மாமனிதர் பட்டம் வழங்கலாமா?. இப்படியே முள்ளிவாய்க்காலுக்குப்பின்பும் எங்களுக்குள் அடிபட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் மகிந்தாவும் இரணிலும் தமிழர்களை அழிக்கும் போது ஒரே நோக்கில் செயற்படுகிறார்கள். இயக்கமொன்றின் தலைமைப்பீடம் செய்யும் தவறினால் ஈழம் வேணுமென்ற காரணத்தினால் எதாவது ஒரு இயக்கத்தில் சேர்ந்தவர்களையும் துரோகிகளாக, ஒரு போராட்டத்திலும் ஈடுபடாமல் வெளினாட்டுக்கு தப்பி ஒடியவர்கள் கூறிவது சரியா?. 2002 ல் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை விடுதலைப்புலிகளினால் உறுவாக்கும் போது டெலோ, ஈபிஆர் எல் எவ் இயக்கத்தில் இருந்தவர்களையும் சேர்ந்தார்கள். அதாவது முன்பு பகைவர்களாக இருந்தவர்களையும் இணைத்தார்கள். ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் இருப்போர் இவன் துரோகி, அவர் கள்ளன் என்று எங்களுக்குள் அடிபட்டு நடப்பது சரியா?.

 

 

உங்களது  ஆதங்கம்  சரியே

இது

அவர்கள்  தற்போதையநிலையில்   என்ன  செய்து கொண்டிருக்கிறார்கள்  என்பதை  வைத்தே அறியமுடியும்.

உண்மையில்  நாம்  ஒன்றுபட  நினைத்திருந்தால் முள்ளிவாய்க்காலுக்கு  பின்னர்  இலட்சியத்தில் மிக  நீண்டதூரம  முன்னேறியிருக்கவேண்டும்.  இங்கு  நான் புலிகள்  பற்றிக்கூறவில்லை.  அவர்களை எதிர்த்தவர்கள்  அல்லது அவர்களால்   எதிர்க்கப்பட்டவர்கள்  முள்ளிவாய்க்காலுக்கு பின்  எதையும்  செய்ய  முன்வரவில்லை  என்பது தான்  யதார்த்தம்.................

அத்துடன் முடிந்தவரை  இன்றும் காலைவாரிவிடுவதும  அவர்களே........

சென்ற ஆண்டு நெடுமாறன் ஐயாவை சந்திக்கும் பொது அவர் இதன் விபரங்களை அக்கு வேறா ஆணி வேறா விபரித்தார். நானும் முன்பு தனிய மலயாளி என்று எண்ணினேன் அப்புறம் கிந்தியனும் என்று பிறகுதான் தெரியும். அவனது பெயர் சொன்னவர் நான் மறந்திட்டேன். அந்த பெயரை கூகிலில் அடித்து பார்த்தால் முழுவிபரமும் வரும் என்று சொன்னவர். :icon_idea: 

அண்ட புளுகனும் ஆகாச புளுகனும் சந்தித்தார்களா :icon_mrgreen: .

உயிரோடு இருந்த திலீபனின் தந்தையை இந்திய ஆமி கொன்றதேன்று தனது புத்தகத்தில் கொன்ற புழுகர் நெடுமாறன் .

  • தொடங்கியவர்

உண்மையான தியாகிகளை நான் மதிக்கிறேன் சிவகுமார் அண்ணா. எனக்கும் பல உறவுகள்  மாற்று அமைப்பில் இருந்தவர்கள். அர்யுன் அண்ணாவின் கடுப்பேத்தலுக்கு பதில் சொல்லவே அப்பிடி எழுதினேன். உண்மையில் இந்த செய்திக்கும் உமா பிரபா கலவரத்துக்கும் என்ன தொடர்பு? அர்யுன் அண்ணா எதுக்கெடுத்தாலும் இப்பிடி வாந்தி எடுப்பார் அவருக்கு நாம் பதில் சொல்ல இப்பிடியான ஆயதங்களை எடுக்கவேண்டி இருக்கு 

  • தொடங்கியவர்

உண்மைதான் தப்பிலி அண்ணா ஒரே குடும்பத்தை சேர்ந்த பலர்(இருவருக்கு மேல்) ஐநாவில் பதவி வகிக்க முடியாது என்று ஐநா சட்டம் சொல்லுது ஆனால் பாங்கி  குடும்பத்தில் 5,6 பேர் ஐநாவில் முக்கிய பதவிகளில் இருக்குறார்கள் இது ஐநாவின் பல முக்கிய முடிவுகளை பக்க சார்பாக்குது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.