Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை நிச்சயம் நட்பு நாடாக ஏற்க முடியாது : முதலமைச்சர் ஜெயலலிதா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை நிச்சயம் நட்பு நாடாக ஏற்க முடியாது : முதலமைச்சர் ஜெயலலிதா
  • 1375776773jayalalitha_6.jpg

    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தும் இலங்கையை நிச்சயம் ஒரு நட்பு நாடாக ஏற்க முடியாது என முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இன்று எழுதியுள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.அக் கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாட்டைச் சேர்ந்த 70 அப்பாவி மீனவர்கள் மீன் பிடிக்க சென்ற போது இலங்கை கடற்படையினரால் கடத்தி செல்லப்பட்டு ஜெயில்களில் அடைக்கப்பட்டுள்ளதை உங்களுக்கு நான் கடந்த 17.6.2013, 8.7.2013, 1.8.2013 மற்றும் 2.8.2013 ஆகிய நாட்களில் எழுதிய கடிதங்களில் தெரிவித்து இருந்தேன்.இந்த விவகாரத்தில் தாங்களே நேரிடையாக தலையிட்டு தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு இருந்தேன்.ஆனால் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் தொடர்ந்து வாடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 3ஆம் திகதி ராமேசுவரத்தில் மீன் பிடிக்க சென்ற 20 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி செயல்பட்டு சட்ட விரோதமாக கடத்தி சென்றுள்ளனர். இது கடந்த ஒரு மாதத்தில் நடந்துள்ள 3–வது கடத்தல் சம்பவமாகும்.கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது சிங்கள கடற்படையினர் அவர்களை சட்ட விரோதமாக கடத்தி சென்று விட்டனர். தலைமன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 4.8.2013 வரை காவலில் வைக்கப்பட்டனர்.அப்பாவி தமிழக மீனவர்கள் தொடர்ந்து எதிர் கொள்ளும் துன்புறுத்தல், கடத்தல், தாக்குதல், சிறை வைப்பு ஆகியவை குறித்து நான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் கடிதம் எழுதி தெரிவித்து உள்ள போதிலும் மத்திய அரசு கவனம் செலுத்தாமல் உள்ளது.

    மத்திய அரசின் இந்த உறுதியற்ற நடவடிக்கையால்தான் சிங்கள ராணுவம் துணிச்சல் கொண்டு தொடர்ந்து அப்பாவி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கடத்தப்படுவதும், கடலோர மீனவ சமுதாயத்தினரிடம் பதட்டத்தையும், போராட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் அப்பாவி தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் மட்டுமின்றி மீனவர்கள் போர்வையில் வரும் சிங்கள வெறியாளர்களாலும் தாக்கப்படுகிறார்கள்.இதற்கு மத்திய அரசு தூதர்கள் அளவில் தலையிட்டு உறுதியான பதில் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள இயலாது என்று தூதர் மூலம் கடுமையாக கண்டிக்க வேண்டும்.

    கொழும்பில் உள்ள நமது நாட்டு தூதர் இதுபற்றி இலங்கை அரசிடம் பேச வேண்டும். அவர்கள் கவனத்துக்கு கொண்டு சென்று உறுதியான நடவடிக்கை எடுத்து இலங்கை சிறைகளில் உள்ள 90 தமிழக மீனவர்களையும் உடனே விடுவிக்க செய்ய வேண்டும்.பாக்ஜலசந்தில் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகிறார்கள். சமீபகாலமாக அங்கு மீன் பிடிக்க செல்பவர்களை சிங்கள ராணுவம் தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.ஆகையால் இலங்கை அரசுடன் தூதரக அளவில் பேச்சுவார்த்தை நடத்தி இதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நீங்கள் விரைந்து தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு முதல்–அமைச்சர் ஜெயலலிதா அதில் கூறி உள்ளார்.

  • http://srilanka.thaalamnews.com/news-40563-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-:-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-40563

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை நிச்சயம் நட்பு நாடாக ஏற்க முடியாது : முதலமைச்சர் ஜெயலலிதா
 
  • ....அப்பாவி தமிழக மீனவர்கள் தொடர்ந்து எதிர் கொள்ளும் துன்புறுத்தல், கடத்தல், தாக்குதல், சிறை வைப்பு ஆகியவை குறித்து நான் உங்களுக்கு மீண்டும் மீண்டும் கடிதம் எழுதி தெரிவித்து உள்ள போதிலும் மத்திய அரசு கவனம் செலுத்தாமல் உள்ளது.

    மத்திய அரசின் இந்த உறுதியற்ற நடவடிக்கையால்தான் சிங்கள ராணுவம் துணிச்சல் கொண்டு தொடர்ந்து அப்பாவி தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கடத்தப்படுவதும், கடலோர மீனவ சமுதாயத்தினரிடம் பதட்டத்தையும், போராட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் அப்பாவி தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையினரால் மட்டுமின்றி மீனவர்கள் போர்வையில் வரும் சிங்கள வெறியாளர்களாலும் தாக்கப்படுகிறார்கள்.இதற்கு மத்திய அரசு தூதர்கள் அளவில் தலையிட்டு உறுதியான பதில் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை பொறுத்துக் கொள்ள இயலாது என்று தூதர் மூலம் கடுமையாக கண்டிக்க வேண்டும்.

இப்படி மீண்டும் மீண்டும் கடிதம் எழுதினேன் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என பழியை கடத்திவிட்டு, அண்டை நாட்டின் அடாவடி செயலால் சாகும் தமிழனின் உயிரை பொருட்டாக நினைத்தால் உடனே டெல்லி சென்று மேல்மட்ட அளவில் அழுத்தமன்றோ கொடுக்க வேண்டும்? இப்படி கொலைஞ்ஞர் மாதிரி வெற்று அறிக்கையல்லவே?

கலைஞரையும் இவவையும் ஒப்பிட முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.