Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தீப்பிடிக்கும் குழந்தையுடன் கோவில் கோவிலாக அலையும் பெற்றோர்! - அரச மருத்துவக்குழு ஆய்வு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
fire-baby-8813-150.gif

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தை அடுத்த டி.பரங்கினி பகுதியை சேர்ந்தவர் கர்ணன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ராகுல் என்ற 2 மாத குழந்தை உள்ளது.ஒரு மாதத்துக்கு முன்பு ராகுல் வீட்டில் இருந்தபோது அவனது உடலில் திடீரென தீப்பிடித்தது. வீடும் தீப்பற்றி கொண்டது. அவனை காப்பாற்றி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அதன் பிறகு பக்கத்து வீட்டில் மர்மமாக தீப்பிடித்தது. இதனால் பயந்துபோன ராகுலின் பெற்றோர் அவனை புதுவை அருகே உள்ள சிங்கிரி கோவிலுக்கு கொண்டு வந்தனர். அங்கு ஒரு வீட்டில் தங்கி இருந்தபோதும் அவனது உடலில் தீப்பிடித்தது.

  

அதன்பிறகு வானூர் அருகே உள்ள உறவினர் கிராமத்துக்கு சென்று தங்கினார்கள். அங்கு குழந்தையின் உடலில் தீப்பிடித்தது. பக்கத்து வீடு ஒன்றும் தானாக தீப்பிடித்து எரிந்தது. அவனை எந்த ஊருக்கு கொண்டு சென்றாலும் தானாக அவனது உடலில் தீப்பிடிப்பதுடன் அந்த ஊரில் உள்ள வீடுகளும் எரிவதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். இதனால் ராகுலை ஊருக்குள் விட மறுத்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் பக்கத்து கிராமமான குமுளம்பட்டில் உள்ள மாரியம்மன் கோவிலில் ராகுலுடன் கர்ணன், ராஜேஸ்வரி தஞ்சமடைந்தனர்.

 

நேற்று இரவு பிரம்மதேசத்தில் உள்ள வக்கிர காளியம்மன் கோவிலுக்கு வந்தனர். இரவு முழுவதும் அந்த கோவிலிலேயே தங்கினர். இதனை அறிந்த பக்கத்து கிராம மக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து பார்த்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் திண்டிவனம் தாசில்தார் ஜெயக்குமார், துணை தாசில்தார் மதியழகன், பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். கர்ணன், ராஜேஸ்வரியிடம் ராகுல் உடல்நிலை குறித்து தாசில்தார் விசாரணை நடத்தினார். பின்னர் இதுபற்றி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சம்பத்துக்கு தகவல் தெரிவித்தார்.

 

அதைத்தொடர்ந்து மர்ம தீயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் உடலை பரிசோதிக்க விழுப்புரத்தில் இருந்து மருத்துவ குழுவை அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. 6 பேர் கொண்ட டாக்டர்கள் குழு இன்று பிரம்மதேசம் வந்தது. அவர்கள் குழந்தையை பரிசோதித்தனர். குழந்தை உடலில் எப்படி தீப்பிடிக்கிறது, உண்மையிலே தீப்பிடிக்கிறதா? அல்லது வேறு யாராவது தீ வைத்துவிட்டு ஏமாற்றுகிறார்களா? என்று ஆய்வு செய்தனர். பரிசோதனையில் உண்மையை கண்டு பிடிக்க முடியாவிட்டால் ராகுலை சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கவும் திட்டமிட்டுள்ளனர். ராகுலை பரிசோதிக்க டாக்டர்கள் குழு வந்ததை அடுத்து பிரம்மதேசம் மற்றும் பக்கத்து ஊர்களை சேர்ந்த ஏராளமானபேர் அங்கு திரண்டிருந்தனர்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=89585&category=IndianNews&language=tamil

முதலில் இக் குழந்தையின் அம்மாவுக்கும், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கும் மனநோய் உள்ளதா எனப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வந்த ஏனைய தகவல்களின் அடிப்படையில் ஆஸ்பத்திரியில் இருக்கும் போது இக் பச்சிளம் குழந்தைக்கு எந்தவிதமான தீக்காயமும் ஏற்படவில்லை. ஆனால் வீட்டுக்கு கொண்டு வந்த பின் தான் தீ பற்றுகின்றது.

 

 

குழந்தைகளை, பிராணிகளை தமக்கே தெரியாமல் சித்திரவதை செய்வதும் ஒரு மனநோய் தான்.  பிள்ளையை ஏதாவது ஒரு குழந்தை நல காப்பகத்தில் வைத்து விட்டு வீட்டில் உள்ளவர்களுக்கு மனநோய் இருக்கா என்று பார்த்து குணப்படுத்துவதுதான் சிறந்த மருந்து.

 

Spontaneous human combustion (SHC) describes reported cases of the burning of a living (or very recently deceased) human body without an apparent external source of ignition. As of 1995, there have been about 200 cited cases[1] worldwide over a period of around 300 years.

http://en.m.wikipedia.org/wiki/Spontaneous_human_combustion

 

அரிய தகவலுக்கு நன்றி.

பெற்றோர்கள் தினமும் வடிசாராயம் குடிப்பவர்களாக இருக்கலாம். :icon_idea:

 

  • கருத்துக்கள உறவுகள்

child%20child.jpg%201.jpg

 

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கர்ணன் - ராஜேஸ்வரி தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தை யின் உடலில் அடிக்கடி தீப்பற்றிக் கொள்வதாகக் கூறப்பட்டது.

 

இதையடுத்து, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதனை பரிசோதித்த குழந்தைகள் நல பேராசிரியர் நாராயணபாபு, குழந்தை ராகுலுக்கு உடலில் தீப்பற்றி எரியும் அபூர்வ நோய் ஏற்பட்டுள்ளது. இது மருத்துவ உலகில் அதி சயம். இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்கனவே சில நடந்துள்ளன. ஆனால், தமிழகத்தில் இதுவே முதல் முறை.

 

கடந்த 300 ஆண்டுகளில் சுமார் 200 குழந்தைகளுக்கு இந்த நோய் இருந்துள்ளது. இவர்களது உடலில் இருந்து வெளியேறும் ஆல்கஹால் எனப்படும் வாயுவால், உடலில் தீப்பற்றிக் கொள்கிறது.

 

இதற்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது வரை சோதனையிலேயே உள்ளது. எனினும், குழந்தையை பாதுகாப்பாக வைக்க வேண்டும். எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்களை குழந்தையின் அருகில் வைக்கக் கூடாது. தீக்காயங்களுக்கு மட்டுமே தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=105267

  • கருத்துக்கள உறவுகள்

பொதுவாக எமது உடலில் சுவாதத் தாக்கத்தின் போது.. போதியளவு ஒக்சிசன் இருந்தால்.. நீரும் காபனீரொக்சைட்டும் உருவாகும். போதிய ஒக்சிசன் இல்லாவிட்டால் ஒரு வகை அமிலம் உருவாகும். இந்தக் குழந்தைக்கு தாவரங்களில் ஒக்சிசன் இல்லாவிட்டால்.. உருவாவது போல அற்ககோல் உருவாகிறது. இது கல இரசாயனத் தாக்கப் பொறிமுறையில் நிகழ்ந்திருக்கும்.. விகார மாற்ற விளைவால் எரிபற்றக் கூடிய பதார்த்தங்கள் தோன்றுவதால் இருக்கலாம்.  அற்ககோல் விரைந்து எரிபற்றக் கூடியதாகும். உடல் சூட்டில் கூட எரியலாம்.

 

[இது இந்த எரிவுக்கான விஞ்ஞான விளக்கம் அல்ல. ஒரு ஊகம் மட்டுமே..!]

 

Irish pensioner 'died of spontaneous human combustion'

 

A pensioner whose body was found totally burned died of spontaneous human combustion, a coroner has ruled.

 

http://www.telegraph.co.uk/news/worldnews/europe/ireland/8783929/Irish-pensioner-died-of-spontaneous-human-combustion.html

Edited by nedukkalapoovan

...... ஆனாலும் மருத்துவமனையில் இருக்கும் காலங்களில் ஏன் இந்தக் குழந்தைக்கு தீ பிடிக்கவில்லை என்ற கேள்வி என் மண்டையைக் குடைஞ்சு கொண்டு இருக்கு. அதுவும் வசதிகள் பெரிசா இல்லாத ஊர் மருத்துவமனையில் கூட இப்படி எரியவில்லை.... என் டவுட் அக் குழந்தையை சுற்றி இருப்பவர்கள் மீது தான்,

  • கருத்துக்கள உறவுகள்
சென்னை: தானாக தீப்பிடித்து எரியும் அதிசய குழந்தை சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள டி.பரஸ்கனி கிராமத்தைச் சேர்ந்தவர் கர்ணன் (26). இவரது மனைவி ராஜேஸ்வரி (23).
 
காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த மே மாதம் 22 ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று இந்த தம்பதிக்கு பிறந்தது. அந்த குழந்தைக்கு ராகுல் என பெயர் சூட்டினர். சரியாக 8ம் நாளில் குழந்தையின் உடலில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.இதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். ‘
 
சென்னையில் தீவிர சிகிச்சை!
 
தீ பிடித்த குழந்தை பச்சிளங் குழந்தையின் உடலில் தீப்பிடித்து எரிந்ததால் உடலில் பல இடங்களில் தீக்காயங்கள் ஏற்பட்டன. சில நாட்களில் அந்த காயம் ஆறிப்போனது. ஒருமுறையல்ல இருமுறையல்ல பிறந்து இரண்டரை மாதத்தில் பலமுறை குழந்தையின் உடலில் தீப்பிடித்து எரியவே காரணம் தெரியாத பெற்றோர் கதறித்துடித்தனர். பல மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் கோவில் கோவிலாகப் போய் பரிகாரம் வேறு செய்தனர். பாண்டிச்சேரியில் சிகிச்சை இறுதியாக, புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகும் ராகுலின் உடலில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த கிராம மக்களே அதிர்ச்சி அடைந்தனர். குடும்பத்தை ஊரைவிட்டும் ஒதுக்கி வைத்தனர். இதனால் தற்கொலை வரை சென்றார் குழந்தையின் தாய்.
 
 
சென்னையில் தீவிர சிகிச்சை!
 
மண்ணெண்ணைய் வாசனை இந்நிலையில், குழந்தை தீப்பிடித்தும் எரியும் செய்தி தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் பரவியது. குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையின் உடலில் இருந்து மண்எண்ணை வாசனை வருவதாக தெரிவித்தனர். அதிசய குழந்தை ராகுலை அதிசய குழந்தையாகவே மருத்துவர்கள் பார்த்தனர். இதனையடுத்து ராகுல், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டான்.
 
கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர் ராமகிருஷ்ணன் மேற்பார்வையில் ராகுல் உடல் முழுவதும் பரிசோதனை செய்யப்பட்டது. மிரண்ட மருத்துவர்கள் குழந்தை தீப்பற்றி எரிவது குறித்து பெற்றோர் கூறிய தகவல் சென்னை டாக்டர்களையும் மிரள வைத்துள்ளது.
 
குழந்தைகள் நல வார்டில் சிறப்பு டாக்டர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகிறார்கள். குழந்தைகள் நலம், சிறுநீரகம் துறை மற்றும் தோல் நோய் துறை டாக்டர்கள் முழுமையாக இன்று பரிசோதனை செய்தனர். அபூர்வ நோய் குழந்தை ராகுலுக்கு உடலில் தீப்பற்றி எரியும் அபூர்வ நோய் ஏற்பட்டுள்ளது.
 
இது மருத்துவ உலகில் அதிசயம்.
 
இப்படிப்பட்ட குழந்தைகள் அரிதாகத்தான் பிறக்கும். அப்படித்தான் ராகுலும் பிறந்துள்ளான். இந்த குழந்தை அதிசய குழந்தை என்றே கூறலாம். தமிழ்நாட்டில் முதன் முதலாக இப்போதுதான் இதுபோன்று அதிசய குழந்தை பிறந்து இருக்கிறது' மருந்து கிடையாது கடந்த 300 ஆண்டுகளில் சுமார் 200 குழந்தைகளுக்கு இந்த நோய் இருந்துள்ளது. இவர்களது உடலில் இருந்து வெளியேறும் ஆல்கஹால் எனப்படும் வாயுவால், உடலில் தீப்பற்றிக் கொள்கிறது. இதற்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை.
 
தீவிர கண்காணிப்பில் ராகுல்
 
ராகுலுக்கு தற்போது தீக்காயத்திற்கான பொதுவான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒரு டாக்டர் மற்றும் நர்ஸ் குழந்தையை கண்காணித்து வருகிறார்கள். ராகுலின் பெற்றோரும் அருகில் இருந்து ராகுலை கவனித்து வருகின்றனர். மீண்டும் உடலில் தீப்பிடிக்காமல் இருக்க தண்ணீர், தீ தடுப்பு சாதனங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/09/tamilnadu-burning-child-undergo-treatment-chennai-180923.html
  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒரு கொடுமை.. :blink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
rahul-9813-150.gif

இரண்டரை மாத குழந்தையின் உடலில் அடிக்கடி தீப்பிடிப்பது ஒரு அபூர்வ நோய் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கர்ணன் - ராஜேஸ்வரி தம்பதியினருக்கு பிறந்த ஆண் குழந்தையின் உடலில் அடிக்கடி தீப்பற்றிக் கொள்வதாகக் கூறப்பட்டது. இதையடுத்து, ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. அதனை பரிசோதித்த குழந்தைகள் நல பேராசிரியர் நாராயணபாபு, குழந்தை ராகுலுக்கு உடலில் தீப்பற்றி எரியும் அபூர்வ நோய் ஏற்பட்டுள்ளது.

  

இது மருத்துவ உலகில் அதிசயம். இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்கனவே சில நடந்துள்ளன. ஆனால், தமிழகத்தில் இதுவே முதல்முறை. கடந்த 300 ஆண்டுகளில் சுமார் 200 குழந்தைகளுக்கு இந்த நோய் இருந்துள்ளது. இவர்களது உடலில் இருந்து வெளியேறும் ஆல்கஹால் எனப்படும் வாயுவால், உடலில் தீப்பற்றிக் கொள்கிறது. இதற்கு இதுவரை எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது வரை சோதனையிலேயே உள்ளது. எனினும், குழந்தையை பாதுகாப்பாக வைக்க வேண்டும். எளிதில் தீ பற்றக் கூடிய பொருட்களை குழந்தையின் அருகில் வைக்கக் கூடாது.

 

காற்றோட்டமான குளிர்ந்த இடத்தில் இருக்க வேண்டும். எளிதில் தீ பிடிக்க கூடிய உடைகளை அணிவிக்க கூடாது. சில நேரம் உடலுக்கு உள்ளேயும் எரிந்து செல்லும். அதனால் குழந்தையை நன்கு கண்காணிக்க வேண்டும். இல்லையென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். ராகுலை பொறுத்தவரை நன்றாக இருக்கிறான். அவன் உயிருக்கு ஆபத்து இல்லை. விரைவில் தீக்காயங்கள், வடு போன்றவை ஆறிவிடும்.அமெரிக்காவில் 73 வயதான ஒருவர் இந்நோயால் தாக்கப்பட்டு உயிர் இழந்தார். ராகுலுக்கு தீக்காயத்திற்கான பொதுவான சிகிச்சை தற்போது அளிக்கப்பட்டுள்ளது. உடலில் தீப்பிடிக்காமல் இருக்க தண்ணீர், தீ தடுப்பு சாதனங்கள் தயாராக வார்டில் வைத்திருக்கிறோம். ஒரு டாக்டர் மற்றும் நர்சு குழந்தையை கண்காணித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=89677&category=IndianNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
fire-boy-11813-150.jpg

உடலில் தீப்பிடித்து எரியும் குழந்தையின் வியர்வை, சிறுநீர், ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மரபியல் குறைபாடு பற்றியும் ஆய்வு நடக்கிறது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் டி.பரஸ்கனி கிராமத்தை சேர்ந்த தம்பதி கர்ணன் (27), ராஜேஸ்வரி (24). இவர்களுக்கு கடந்த மே மாதம் ராகுல் என்ற மகன் பிறந்தான். திடீரென குழந்தையின் 2 கால்களும் தீப்பிடித்து எரிவதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். தண்ணீர் ஊற்றி தீயை அணைத்துள்ளனர். அதன்பிறகு 3 நாட்கள் கழித்து மீண்டும் குழந்தையின் உடல் தீப்பிடித்து எரிந்ததால் செய்வதறியாது பெற்றோர் தவித்தனர்.   

 

இதைத்தொடர்ந்து குழந்தையின் மார்பு பகுதியில் திடீரென தீப்பிடித்துள்ளது. இதனால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளித்துவிட்டு வீடு திரும்பினர். அதன்பிறகும் குழந்தையின் தலையில் தீப்பிடித்து எரிந்ததுள்ளது.இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை ராகுலை சேர்த்தனர். குழந்தைகள் நல தலைமை மருத்துவர் நாராயணபாபு தலைமையில் மருத்துவக்குழுவினர் குழந்தையின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்.

 

குழந்தையின் நாடி துடிப்பு, இதய துடிப்பு பற்றி அறிய மல்டிபேரா மானிடர் கருவி பொருத்தியுள்ளனர். உடலில் தீப்பிடித்தால் அணைப்பதற்காக அருகில் தண்ணீர் வைத்துள்ளனர். பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் ஜெகன்மோகனும் சிகிச்சை அளித்து வருகிறார். இதுகுறித்து டாக்டர் நாராயணபாபு கூறுகையில், இந்தியாவில் முதன்முறையாக குழந்தை உடலில் திடீரென தீப்பற்றி எரிவது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. குழந்தை ராகுல் உடலில் இருந்து வெளியேறும் வாயு, வியர்வையால் தீப்பிடிக்கிறதா என கண்டுபிடிக்க வியர்வை, சிறுநீர், ரத்தம் ஆகியவற்றை பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். ஸ்கேன் பரிசோதனையும் செய்துள்ளோம். தற்போது குழந்தை ஆரோக்கியத்துடன் உள்ளது. மருத்துவக்குழுவினர் குழந்தையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர் என்றார்.

 

குழந்தைகள் நலத்துறை பேராசிரியர் கே.ஜெயச்சந்திரன் கூறுகையில், பெட்ரோல், கிரசின் எளிதில் தீப்பற்றக்கூடியது, ஆனால் தானாக எரியாது. தீப்பற்றவைத்தால் தான் எரியும். பொஸ்பரஸ் என்ற மூலகம் மட்டுமே தானாக தீப்பற்றி எரியும் தன்மை கொண்டது. ஆதனால் பொஸ்பரஸ் எப்போதும் தண்ணீருக்குள் வைக்கப்படும். குழந்தையின் உடலில் பொஸ்பரஸ் உற்பத்தியாகி வியர்வை மூலம் வெளியாகி தீப்பற்றி எரிகிறதா என ஆராய்ந்து வருகிறோம்.

 

இதற்கிடையே, ராகுலின் ரத்தம், சிறுநீர் ஆகியவற்றை பரிசோதனை செய்து பார்த்தபோது சரியான விகிதத்தில் உள்ளது. குழந்தையின் மூளை, சிறுமூளை, இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் ஆகியவையும் சி.டி. ஸ்கேன் மூலம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உள் உறுப்புகள் நல்ல நிலையில் உள்ளன. குழந்தையின் முன்பகுதி மட்டுமே தீப்பிடித்து எரிவதால் மரபியல் குறைபாடு உள்ளதா என்றும் பரிசோதித்து வருகிறோம். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதால் உடலில் உள்ள தீக்காயங்கள் குணமாகி வருகின்றன என்றார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=89857&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அதிசயமாக உள்ளது. பாவம்... அந்தப் பச்சைக் குழந்தை.

  • கருத்துக்கள உறவுகள்
திண்டிவனம் அருகே 2 மாத குழந்தை உடலில் திடீரென தீப்பிடிக்கும் அதிசயம்
 

திண்டிவனத்தை அடுத்த உப்பு வேலூர் அருகே உள்ளது. பொம்மடிபட்டு கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் கர்ணன் (வயது 25), கூலி தொழிலாளி. இவரது மனைவி ராஜேஸ்வரி (21). இவர்களுக்கு நர்மதா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராஜேஸ்வரிக்கு 2 மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு ராகுல் என்று பெயர் வைத்தனர்.

பிரசவத்தை அடுத்து ராஜேஸ்வரி தனது தாய் ஊரான மயிலம் அருகே உள்ள நெடுமொழியனூர் கிராமத்தில் தங்கியிருந்தார். ஒரு மாதத்துக்கு முன்பு திடீரென ராகுலின் கை தீ பிடித்து எரிந்தது. இதனால் கையில் காயம் ஏற்பட்டது. முண்டியம் பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள்.

அதன்பிறகு அந்த ஊரில் சில வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இந்த குழந்தைக்கு ஏதோ பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் குழந்தை உடலில் தீ பற்றுவதுடன், வீடுகளிலும் தீ பிடிக்கிறது என கிராம மக்கள் கருதினார்கள்.

எனவே ஊரை விட்டு செல்லும்படி ராஜேஸ்வரியை வற்புறுத்தினார்கள். இதனால் புதுவை அருகே உள்ள சிங்கிரிகோவிலுக்கு வந்து தங்கினார். அங்கு அபிஷேகபாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்த போது மீண்டும் குழந்தை உடலில் தீபிடித்தது. இதனால் குழந்தையை கிருமாம் பாக்கத்தில் மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை முடிந்து அவர் தனது கணவரின் ஊரான பொம்மடிபட்டுக்கு சென்றார்.

அங்கு 3 நாட்களுக்கு முன்பு மீண்டும் குழந்தை உடலில் தீ பிடித்தது. திண்டிவனம் ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்துவிட்டு வீடு திரும்பினார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் குழந்தை தங்கியிருந்த வீட்டின் பக்கத்து வீட்டில் தீ பிடித்தது.

இந்த குழந்தையால் தான் வீடுகள் தீ பிடிக்கிறது என்று கருதி கிராம மக்கள் கோபம் அடைந்தனர். இதனால் குழந்தையை அங்குள்ள கோவிலில் கொண்டு வைத்தனர்.

இதற்கிடையே மனவேதனையில் இருந்த குழந்தையின் தாய் ராஜேஸ்வரி நேற்று விஷம் குடித்தார். அவரை முண்டியம் பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இது தொடர்பாக குழந்தையின் தந்தை கர்ணன் கூறியதாவது:–

எனது குழந்தையை எங்கு கொண்டு சென்றாலும் அங்கு விபரீத சம்பவம் நடந்து வருகின்றது. குழந்தை உடலில் தீபிடிப்பதுடன் அந்த ஊரில் உள்ள வீடுகளிலும் தீ பிடிப்பதால் ஊர்மக்கள் அச்சம் அடைந்து எங்களை ஊருக்குள்ளேயே விடாமல் விரட்டியடிக்கின்றனர்.

இதனால் பெரும் மன உழைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம். குழந்தையை நாங்கள் தொடர்ந்து வளர்த்தால் ஏதேனும் பிரச்சினை ஆகிவிடுமோ என பயமாக இருக்கிறது. எனவே குழந்தையை அரசிடம் ஒப்படைத்து விடலாமா? என்று யோசித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நேற்று முன்தினம் குழந்தை உடல் தீ பற்றி எரிந்ததை பார்த்த சரளா என்ற பெண் கூறியதாவது:–

குழந்தை உடலில் தீ பற்றியதை அவனது அத்தை செல்வி பார்த்து விட்டு என்னிடம் கூறினார். உடனே நான் அங்கு ஓடி சென்றேன் குழந்தையின் கையில் அப்போது தான் தீ பற்றி எரிந்து கொப்பளம் ஏற்பட்டது. ஏன் இப்படி நடக்கிறது என்றே தெரியவில்லை. ஏதோ சாமி குற்றம் இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பொம்மடிபட்டு கிராமத்தை சேர்ந்த அய்யனார் கூறியதாவது:–

இந்த குழந்தை ஊருக்கு வந்ததிலிருந்தே ஊரில் என்ன நடக்குமோ? என்று எல்லோரும் பீதியில் இருக்கிறோம். இந்த குழந்தையை 2 நாட்களாக கோவிலில் கொண்டு வைத்தோம். அப்போது ஊரில் எந்த சம்பவமும் நடக்கவில்லை. ஆனால் வீட்டுக்கு கொண்டு வந்தால் ஏதாவது விபரீதம் நடக்கிறது. குழந்தையின் உடலில் தீ பிடித்ததும் காயம் ஏற்படுகிறது. ஆனால் அந்த காயம் அடுத்த நாளே முற்றிலும் ஆறி குணமாகி விடுகிறது. இது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இது சம்மந்தமாக டாக்டர்கள் ஆய்வு செய்து விபரத்தை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

http://www.maalaimalar.com/2013/08/01153955/2-month-child-sudden-fire-near.html

 

என்ன கொடுமை இது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதிசு புதிசாக என்னமோ நடக்குது ..... பாவம் பச்சிளம் பாலகன்.  :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
test-16813-150.jpg

விழுப்புரம் மாவட்டம் டி.பரங்கனி கிராமத்தை சேர்ந்த கர்ணா, ராஜேஸ்வரி தம்பதியரின் இரண்டரை மாத ஆண் குழந்தை ராகுல் உடலில் திடீரென தானாக தீப்பிடித்தது. இதனால் சிகிச்சைக்காக கடந்த 8ம் தேதி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ராகுலை சேர்த்தனர். குழந்தையின் ரத்தம், சிறுநீர், வியர்வை, தோல் ஆகியவை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் ராகுலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து ஐதராபாத், மும்பையில் உள்ள பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவு இன்னும் வரவில்லை.

  

குழந்தையின் உடலில் இருந்து பொஸ்பரஸ் வெளியாகிறதா அல்லது எளிதில் தீப்பிடிக்கும் மீத்தேன், அசிட்டோன், எத்தனால் ஆகிய வாயு வெளியாகிறதா என்பதை கண்டுபிடிக்க ஜப்பானில் நவீன கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வாங்கி இருப்பது தெரியவந்தது. அந்த கருவியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து, ராகுல் உடலில் இருந்து வாயு வெளியாகிறதா? என்பதை கண்டுபிடிக்கும்படி டீன் ராமகிருஷ்ணன் கேட்டு கொண்டார்.

 

அதன் பேரில் நேற்று காலை சாஸ்த்ரா பல்கலைக்கழக நிபுணர்கள் கணேஷ், ஜான்பாஸ்கோ ஆகியோர் அந்த கருவியை கொண்டு வந்து அதன் மூலம் ராகுல் உடலில் தீப்பிடித்த பகுதியை 5 முறை சோதனை செய்தனர். குழந்தை உடலில் இருந்து வாயு எதுவும் வெளியாகவில்லை என்று தெரியவந்தது. காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை மாலை 4 மணிக்கு முடிந்தது. இது பற்றி டாக்டர் நாராயண பாபு கூறுகையில், மருத்துவமனையில் சேர்த்தது முதல் குழந்தையின் உடலில் தீப்பிடிக்க வில்லை. நேற்று காலையில் லேசான காய்ச்சல் மட்டும் இருந்தது என்றார்.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=90227&category=IndianNews&language=tamil

உடலில் தீப்பிடித்தால் அணைப்பதற்காக அருகில் தண்ணீர் வைத்துள்ளனர்.

 

இது சரியான நடை முறையா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.