Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரொறன்ரோவில் நடைபெற்ற TNA வுடனான சந்திப்பு நிகழ்வில் மண்டபம் நிறைந்த ஆதரவாளார்கள் கலந்து கொண்டனர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
TNA-canada-2013-seithy-150.jpg

ரொறன்ரோ - ஸ்காபறோ பகுதியில் நேற்றையதினம் மாலை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் திரு-இராசம்பந்தன் மற்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு-எம் .எ. சுமந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்த இராப்போசன விருந்துபசார நிகழ்வி்ல் பெருமளவான வர்த்தகபிரமுகர்கள் நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்வானது (11-08-13) மாலை 5 மணிக்கு 90 Nolan Court - Jaasmin Banguet Hall மண்டபத்தில் நடைபெற்றது.

  

மேற்படி நிகழ்வை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கனடிய கிழைத் தலைவர் திரு- நக்கீரன் தங்கவேலு தலைமையிலான கனடாக்கிழை ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வை திரு - குகதாசன் ,திரு- துரைராஜா ,திரு- வீரசுப்ரமணியம் ஆகியோர் முன்நின்று ஒருகமைத்து நடாத்தினர். நிகழ்வில் கூட்டமைப்பின் தலைவர் இரா- சம்பந்தன் மற்றும் எம். எ. சுமந்திரன் ஆகியோர் தமது தற்போதைய அரசியல் செயற்பாடுகள் பற்றியும் வடமாகாணசபைத் தேர்தலை தாம் எதிர்கொள்ளவேண்டி யிருப்பதன் கட்டாயப்பாட்டையும் விரிவாக விபரித்து உரைநிகழ்த்தியதோடு மக்களால் முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.

 

கூட்டமைப்பினரது கனடாக்கிழையினர் ஏற்பாடு செய்திருந்த மேற்படி நிகழ்விற்கு ரொறன்ரோவிலுள்ள தமிழர் அமைப்புகளான கனேடிய தமிழர் தேசிய அவை (NCCT), கனேடிய தமிழர் காங்கிரஸ்(CTC), நாடுகடந்த தமிழீழ அரசு (TGTE) மற்றும் நாம் தமிழர் கனடா அகிய அமைப்புகளது பிரதிநிதிகள் , கனேடிய தமிழர் வர்த்தக சங்கம் , தமிழர் சட்டத்தரணிகள் சங்கம் ஆகியனவும் கலந்து கொண்டு தமது ஆதரவினை தெரிவித்திருந்தனர்.

 

படங்கள் - குணா

 

http://www.seithy.com/breifNews.php?newsID=89963&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நிமிடம் 20:00
"நீதி அமைச்சர் ப. சிதம்பரம் அவர்களையும்...."??!?!?

 

 

 

 

நல்லூர் கந்தனின் கொடியேற்றம் போல, கந்தனின் தேர் போல, மடுமாத உற்சவம் போல கருதி, எல்லாத் தமிழ்மக்களும் அன்றைய தினத்தில், நேர்த்தகடன் நிறைவேற்றுவது போல தேர்தல் சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும். ஏதோ போனோம் என்று போனால் காணது.  கிறுக்கினோம், புள்ளடி போட்டோம் என்று செய்தால் காணாது. புனிதகடமையாக கருதி சென்று புள்ளடி இட வேண்டும். ஏன் எனில் தேர்தலின் பின்னர்தான் புதிய போராட்டம் ஆரம்பமாக இருக்கிறது என்று முதலமைச்சர் வேட்பாளரான விக்கினேஸ்வரன் கூறியிருக்கிறார். தயாராகி கொண்டிருக்கும் மூன்றாவது நிலைப் போராட்டம் களமேற இந்த தேர்தலில் வாக்களிக்க வேண்டும். புனிதகடமையாக நினைத்து வாக்களித்தால் மட்டுமே தலைவர்களால் நடத்தப்படவிருக்கும் இராஜதந்திர போராட்டத்தில் தமிழ் மக்களின் அங்கீகார பின்புலம் இருப்பது வெளியாகும். 

 

மேற்குநாடுகளில் தேர்தல்களில் மக்கள் வாக்களிக்க விரும்புவதில்லை. அங்கு பிரச்சனைகள் குறவு. அதனால் ஏனோதானோ என்ற மனோபாவம் இருக்கிறது. இது தமிழர்களுக்கிடையில் இருக்க கூடடாததொன்று. இதனால் தேர்தலை புனித நாளாக கொண்டு புனித கடமையாக வாக்களிக்க வேண்டும்.  புனித கடமையாக வாகளித்தால் மட்டுமே அதிகாரம் இல்லாத, ஆழுனரின் கீழ முஅடக்கபடும் 13ம் திருத்ததின் கீழ் வரும் தேர்தல் ஒன்று வாக்களிக்க தக்க மன நிலையை பெற்றுக்கொள்ள முடியும். தேர்தலின் பின்னர் மாகாண ஆட்சியை பின் போட ஜனாதிபதிக்கு முடியும், தேர்தலை ரத்து செய்ய முடியும், மாகாண சபையை உடனேயே கலைக்க முடியும். இவை நடந்தால் தாங்கும் மனநிலை வேண்டும். தலைவர்களுடன் சேர்ந்து சர்வதேசத்துக்கு நிலைமைகளை வெளிக்கொண்டுவர தயாராக இருக்க வேண்டும்.  தேர்தல் முடிந்தவுடன், தமிழ் மக்கள் காத்திருக்கும் பொருளாதார, அரசியல் உரிமை சுகங்கள் தமிழருக்கு வந்து சேரும் சந்தர்ப்பம் குறைவு. அதன் பின்னர் இன்றை மூண்றாம் கட்டத்தை களமேற்றித்தான் உரிமை பெற வேண்டும். சம்பந்தரின் பேச்சின் படி அவர்களிடம் ஒரு மாறுதல் கொண்ட வீயூகம் இருக்குகிறது. எனவே நமது போரட்டம் தமிழரின் புனித உரிமை போராட்டம் தொடரர, தமிழ்மக்கள் தேர்தலை புனித கடமையாக ஏற்று வாக்களிக்க வேண்டும். பல்வேறு காரணங்களால் கிழக்கில் போதிய அளவு தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. இதனால் அதாரவுக்கு மு.க. வை கெஞ்ச வேண்டிய நிலை வந்தது. அவர்கள் பின் வளத்தைக்காட்டிவிட்டு அரசுடன் சங்கமமாகிவிட்டார்கள். ஆனால் அவர்கள் தம் மதகடவுள் மீது செய்த சத்தியத்தால், சமயத்தை கடைப்பிடிப்பதாக வெளிப்பார்வைக்கு காட்டுவதற்காக ,  தம்மை அரச மாகாண உறுப்பினர்களாக கூறாமல் தவிர்த்து வருகிறார்கள். ஆனால் அவர்கள் செயல்பாட்டால் அரச உறுப்பினர்கள் ஆகிவிட்டார்கள்.  

 

அந்த காரணங்களில் பல இன்று திருந்தியிருக்கலாம். எனவே வமாகாணமக்கள் அதிக தொகையில் வாக்களித்து கிழக்குமாகணத்தில் இழந்ததையும் ஈடு செய்ய முயல வேண்டும்.  :)

வட பகுதியிலும் ஆர்வமற்றவர்கள் 40% இருப்பர்.  முக்கிய காரணம் பெரும்பாலான கூட்டமைப்புக்காரர் தேர்தல் முடிந்ததும் அந்தப் பக்கம் போகவே மாட்டார்கள்.

சிறிதரன், சிவாஜிலிங்கம், யோகேஸ்வரன் போன்றவர்கள் தான் மக்களுடன் அதிகம் நெருங்கிப் பழகும் தன்மை உடையவர்கள்.

சிதம்பரம் எதற்குள் வருகிறார் என்பது தெரியவில்லை. ஆனால் அவரை பசிலுடன் இணைந்த அவரின் தொலைபேசிக் கம்பனிகளின் மூதலீடுகளை வைத்து கையாள முயன்றதாக அணமையில் செய்திகள் வெளியாகியிருந்தன. 

 

சிதம்பரம் தமிழ் அமைச்சர் என்ற முறையில் சேர்த்து ஆலோசிக்கப்படுகிறாராக இருக்கலாம்.

 

ஆகவும் கூட்டி சொல்வதாயின் காங்கிரசின் பிரதமர் ஆசையில் சிதம்பரம் இன்னமும் இருக்கிறாரோ தெரியாது. அப்படியாயின் வருங்காலப் பிரதமர். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

நிறைய கேள்விகள் இருந்தாலும் கூட்டமைப்பின் வெற்றி தமிழர்களின் வெற்றியாக உலகம் நோக்குவதால் உங்கள் உறவினர்கள் நண்பர்களிடம் கூறி இனப்படுகொலைக்கு உதவிய மகிந்த அரசுக்கும் பேச்சுவார்ந்தை மூலம் தமிழர்களின் அரசியல் ஆசையை நிர்மூலமாக்க சகுனியாக செயற்பட்ட ஐ.தே.கா வுக்கோ அல்லது தீவு பகுதியில் குடிகொண்டுள்ள டக்ளசின் உயிர் வாழினங்கள் வாழும் பகுதிக்கு  வாக்களிப்பதை நிறுத்தி கூட்டமைப்பு வெற்றி பெற உழைப்போம்.

அர்ஜூன் சம்பந்தரோடு கதைத்தீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்
இராப்போசன விருந்துபசார நிகழ்வி்ல் பெருமளவான வர்த்தகபிரமுகர்கள் நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
ஐயோ தமிழ்தேசியம் முதலாளித்துவ தலமைக்குள் சென்றுவிட்டது..... :D,மேட்டுகுடி தலமைக்குள் சென்றுவிட்டது... :D

ஐயோ தமிழ்தேசியம் முதலாளித்துவ தலமைக்குள் சென்றுவிட்டது..... :D,மேட்டுகுடி தலமைக்குள் சென்றுவிட்டது... :D

 

பிரபாகரன் சாதி குறைஞ்சவர் எண்டதுக்காக எதிர்த்தவர்கள்  தானே எங்கட ஆக்களில் ஏராளம்....   சங்கரியார் முதல் கதிர்காமர் எண்டு எங்கட ஆக்கள் ஆதரிக்கிறதுக்கும் அதுவே காரணம்...  

 

சங்கரியையும் சித்தார்தனையும்  தகுதியானவையாக பார்க்கும் ஆக்களுக்கு கருணாவும் பிள்ளையானும்  சரியானவர்கள் கிடையாது...    

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.