Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தா இல்லையேல் போரில் வெற்றியில்லை – சிறிலங்கா அதிபரின் செயலர்

Featured Replies

தமிழ்செல்வனின் இடம் காட்டிக் கொடுக்கப்பட்டுத்தானு அந்த இடத்தை துல்லியமாகத் தாக்கினார்கள்? கருணா தலைவரை சந்திக்க வருமாறு கேட்டிருந்தார்.. பொட்டம்மானை இயக்கத்தைவிட்டு அகற்றவேண்டும் எனவும் அப்போது அறிக்கைவிட்டிருந்தார்.. அதேநேரம் தமிழ்செல்வனைநல்லமாதிரி கூறி இருந்தார்..

தமிழ் செல்வன் தாக்கப்பட்ட விதம் "சரியான நேரமும், சரியான புள்ளியும்" வழமையில் மின்னியல் முறைகளை பாவித்துத்தான் எய்தப்படுவது. இது சாதாரண உளவு முலம் எய்தப்படத்தக்கது மாதிரி தெரியவில்லை. இருவருக்கிடையில் முரண்பாடு இருந்தால் காட்டிக்கொடுப்பில்த்தான் முடிந்ததாக காட்ட முயல்வது அவசர முடிவு. இதில் எதுவும் நடந்த சம்பவத்தை விளக்காமல் எதிர்க்கரையில்தான் சுட்டுகிறது.

  • Replies 97
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டு மொத்த புலிகளின் கட்டமைப்பே அழிகப்பட்டமைக்கு உள்வீட்டு சதிகளும் காரணமாக இருக்கலாம்....இந்திய இராணுவ காலத்திலையே தப்பி பிழைத்த ஒரு இயக்கம் எப்பிடி அழிந்து போனது என்பது இன்னும் கூட ஜீரணிக்க முடியாம இருக்கு

இதுக்கும் நம்மாளு ஒருத்தர் விளக்கம் வச்சிருந்தார்.. அதாவது இந்தியப்படைகள் உண்மையில் தலைவரைப் பிடிக்க முயற்சிக்கவில்லையாம்.. :D சும்மா போக்கு காட்டினார்களாம்.. :rolleyes:

எங்களுக்குத் தான் உதுகள் புதுசு. ஏகாதிபத்திய சக்திகளுக்குத் தெரியும் கால நீடிப்பும் சில அற்ப சொகுசுகளையும் கொண்டு எப்படி ஒரு போராட்டத்தை அழிக்கலாம் எண்டு. அதுக்கான தூபத்தை கட்டுநாயக்கா தாகுதலின் பின் போட்டாங்கள். பல வருடங்கள் கழித்து அதன் பக்க விளைவுகள் தான் மிச்சமெல்லாம் (உள்வீட்டு துரோகங்கள் உட்பட). 

2000 இல வெற்றியின் உச்சக் கட்டத்தில் நிறுத்தின போர். 2006 மட்டும் எப்பிடி ஒரு போராட்டக் குழுவால் அதன் வீச்சை தொடர்ந்து காத்து வைக்க முடியும். வழியே இல்லை. 

புலிக்கு தெரியும் இப்பிடி எல்லாம் செய்வாங்கள் எண்டு. ஆனா தாங்கள் அதையும் தாண்டி வெல்லுவம் எண்டு நினைச்சினம். ஆனால் ஒரு சில நியதிகள் எப்போதும் பொய்ப்பதில்லையே.

இதுக்கு மேலால எக்ஸ்ட்ராவா வந்து அடிச்சுது சுனாமி.

Edited by பரதேசி

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான் சொன்னேனே.. உண்மைகள் சுடும்.. ஏற்புடையதாக அமையாது.. ஆனால் நான் கூறுவதையும் உண்மை என என்னால் உறுதிப்படுத்த முடியாது.. நான் சிலருடன் உரையாடியதால் எனக்குள் ஏற்பட்ட ஊகம்.. நீங்கள் முன்பு வன்னியில் வாழ்ந்திருந்தால்.. கிளிநொச்சி பல் வைத்தியராக புலிகளால் பயிற்றுவிக்கப்பட்டு சுர்ட்டிபிக்கற் இல்லாமல் டாக்டராக இருந்தவர் எனது தம்பி முருகவேல் முருகானந்தன்தான் என்பதை அறியலாம்.. உங்களுக்கு கதைகளாக தெரிபவை என்னுடன் பரிமாறப்பட்ட அனுபவப் பகிர்வுகளாகவும் இருக்கலாம்.. பூநகரி தவளைப் பாய்ச்சலில் விழுப்புண் அடைந்து தலைவர் கையால் சிறந்த போராளி என ஒரு கடிகாரம் பரிசாக பெற்றவர் என்னுடைய என்னுடைய தம்பி முருகவேல் ஆனந்தகுமார்.. அவருடைய புலிப் பெயர் நெடுமாறன்.. ஆக நான் கதிரையில் இருந்து எழுத்துகளை தட்டினாலும் சிலருடன் பேசிவிட்டுத்தான் தட்டுகிறேன்.. இப்போதைக்கு இவ்வளவுதான்.. ஆனால் ஒன்று.. நீங்களோ நானோ தீர்மானிக்கிற விடயமல்ல இது.. ஆனல் தெளிவடைய முயற்சிக்கும் விடயம்..

இன்னொன்று.. புலிகளின் குரல் வானொலி யோகேந்திரநாதனை தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.. அவர் இன்னமும் உயிரோடு சுதந்திரமாகத்தான் உள்ளார்.. இப்படி ஒரு சிலர் உள்ளதால் சிலதுகளை என்னாலும் ஊகிக்க முடிகிறது..

பொட்டம்மானும் இரண்டரை வருடங்கள் இந்தியாவில்தான் காயத்துக்கு சிகிச்சை பெற்றார்.. :) இது கற்பனை இல்லைத்தானே?!

இயக்கத்தில் இருந்தவை என்பதற்காக எல்லாம் அறிந்திருப்பினம் என்றால்.. முள்ளிவாய்க்காலின் பின் தப்பிய எத்தனையோ ஆயிரம் போராளிகளும்.. ஒரு கதையை எல்லோ சொல்லி இருக்கனும்..! ஆனால் அப்படி வரவில்லை. ஒவ்வொருவரும்.. சரணடைந்த பின் தாம் எடுத்த நிலைப்பாடுகளுக்கு அமையவே கருத்துச் சொல்லி வருகின்றனர்.

 மேலும் பொட்டு அம்மான் மீது நாங்கள் வெளிக்காட்டும் சந்தேகத்தை விட எதிரி வெளிக்காட்டி இருந்தால்.. புலிகள் உட்பிளவாலும் அழிந்தார்கள்.. எனி நிமிரவே முடியாது என்ற ஒரு தோற்றப்பாட்டை இன்னும் விரிவாக சிங்களம் உருவாக்கி விட்டிருக்கலாம். ஆனால் சிங்களம் கூட அப்படிச் செய்யவில்லை.

பொட்டம்மான் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தாலும்.. அவரை மீறி நடந்த சம்பவங்களும் உள்ளன. ஆகவே சிலவற்றை கேட்டுக் கொண்டிருக்கலாம்.. ஆனால் தீர்மானிக்க முடியாது.

கடைசி வரை தலைவரின் பாதுகாப்போடு இருந்த... சில முக்கிய போராளிகள்.. முள்ளிவாய்க்கால் இறுதி முற்றுகைக்கு.. வெகு.. சில வாரங்களுக்கு முன்னரே நெருங்கிய உறவுகளிடம் இருந்து விடைபெற்றுச் சொன்றுள்ளனர். அவர்களின் கூற்றுப்படி பார்த்தால்.. தலைவர் அப்புறப்படுத்தப்பட்டதாகவும் நம்ப முடியும். ஊகங்களை வெளியிட முடியும்..!

முக்கிய காலக்கட்டங்களில்.. விடுதலைப்புலிகள் தலைவரையும் குடும்பத்தையும் ஒன்றாக வைத்திருப்பதில்லை. காரணம்.. ஆபத்தை எல்லோரும் விலைக்கு வாங்காமல் இருக்க. அந்த வகையில் தலைவரின் குடும்பம் சிதறி இருக்க வாய்ப்புள்ளது.

இன்றைய பொழுதில்.. கூற்றுக்களுக்குள்ள நியாயம்.. ஆதாரம்.. சாட்சியமாக இருக்க அவைக்குள்ள தகுதி குறித்தும் நாம் யோசிக்க வேண்டியவர்களாக உள்ளோம். எங்கிருந்து எது கிளப்பிவிடப்படுகிறது என்ற மூலம் தெரியாமல்.. ஊகங்களை.. வதந்திகளை விதைப்பதும்.. நல்லதல்ல. இருந்தாலும்.. ஒரு வாதப் பிரதிவாதம் மூலம் மக்களை தெளிவூட்டச் செய்யலாம்..! வரக்கூடிய வதந்திகள் குறித்து அறிவூட்டலாம். அவை அதிர்ச்சிகளை குறைக்க உதவும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

இன்றேல்.. சிங்கள இராணுவத்தின் ஒவ்வொரு அடிக்கும்.. ஒவ்வொரு ஆக்கிரமிப்புச் சிங்களக் கிராமமாக அழிந்து கொண்டிருக்கும். சிங்களப் படைகளும் அவற்றை நோக்கி நகரும் நிலை வந்திருக்கும்..!

..

2009 மட்‌டும் colombo வில் ஏதோ பெருசா நடக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம்...

Edited by naanthaan

..

2009 மட்‌டும் colombo வில் ஏதோ பெருசா நடக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம்...

அப்படி உங்களுக்கு நம்பிக்கையை தந்தது யார்...?? வீடுவீடாக காசு சேர்க்க வந்தவர்களா இல்லை பத்தி எழுத்தாளர்களா இல்லை விடுதலை புலிகளா...??

புலிகள் எண்டால் எந்த சந்தர்பத்தில் சொன்னார்கள் எண்டு தெளிவு படுத்த முடியுமா...??

கற்பனையில் திரிவுகள் செய்வது... இது ஒரு பரவி வரும் வியாதியாகி கொண்டு இருக்கிறது...

தமிழ்செல்வனின் இடம் காட்டிக் கொடுக்கப்பட்டுத்தானு அந்த இடத்தை துல்லியமாகத் தாக்கினார்கள்? கருணா தலைவரை சந்திக்க வருமாறு கேட்டிருந்தார்.. பொட்டம்மானை இயக்கத்தைவிட்டு அகற்றவேண்டும் எனவும் அப்போது அறிக்கைவிட்டிருந்தார்.. அதேநேரம் தமிழ்செல்வனைநல்லமாதிரி கூறி இருந்தார்..

தமிழ் செய்வனின் செயலகம் அங்கை இருக்கிறது எண்டு எரிக் சொல்கைமுக்கே தெரியும்... ஹெலியிலை கொண்டு வந்து விடவரும் சிங்கள படைக்கு தெரியாதா...??

தமிழ் செல்லவை போட அவர் கொண்டு திரியும் சற்றலைட் தொலை பேசியே போதுமானது அவரை காட்டிக்குடுக்க...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

..

2009 மட்‌டும் colombo வில் ஏதோ பெருசா நடக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தது தான் மிச்சம்...

இது முற்றிலும் உங்களின் விசமத்தனமான எதிர்பார்ப்பு.

கொழும்பு நகரில் புலிகள் பொருண்மிய மையங்களை தாக்கியதற்குக் காரணம்.. சிறீலங்காவை நோக்கிய அந்நிய முதலீடுகளின் வரவை கட்டுப்படுத்தி.. சிறீலங்காவின் பொருண்மியத்தை பலவீனப்படுத்துவதே.

கொழும்பில் நடத்தப்படும் தாக்குதலால் பெரிய இராணுவ பரம்பல் மாற்றம் நிகழ வாய்ப்பில்லை. காரணம் கொழும்பின் முக்கியத்துவம் அறிந்து சிங்களம் பெருமளவு படைகளை அங்கு நிறுத்தி வைத்திருந்தது.

ஆனால் சிங்களக் குடியேற்றக் கிராமங்கள் மீதான தாக்குதல் என்பது சிங்கள அரசு மீதான சிங்கள மக்களின் நம்பிக்கையை தகர்க்கும் விடயம்..! அதனைக் கட்டுப்படுத்த.. நிச்சயம் இராணுவத்தை நகர்த்தி சிங்களவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய அவசியம் சிங்களத்துக்கு வரும்.

இதன் அடிப்படையில் தான் முன்னரும்.. பூநகரி.. மன்னார் மாவட்ட முகாம்களை மூடிவிட்டு சிங்களப் படைகளை கிழக்கு நோக்கி நகர்த்தினார்கள். சிங்கள குடியேற்றக் கிராமங்களை அண்டி புலிகள் அடிக்கடி சிங்கள ஊர்காவல் படை குண்டர்களை தாக்கி வந்த போது..!

புலிகள் புத்தளத்தை அண்டி.. பொலநறுவையை அண்டி நடத்திய தாக்குதலின் பின்னர் பொன்சேகா அடிச்சுப் பிடிச்சு அந்தப் பகுதிகளுக்கு விஜயம் செய்து மக்களை ஆசுவாசப்படுத்தினார். அந்த நிலை தொடர்ந்திருந்தால்.. நிச்சயம்... அது புலிகளுக்கு வடக்கில் ஒரு சாதகத்தன்மையை கொடுத்திருக்கும்..! ஆனால் சிங்களம் அதனை பொதுமக்கள் மீதான புலிகளின் பயங்கரவாதம் என்று சித்தரித்து.. சர்வதேசத்தின் நல்லபிமானம் வேண்டி நின்ற புலிகளைக் கட்டிப்போட்டு விட்டது..!

புலிகள் அதிகம் சர்வதேசத்திற்கு செவி சாய்க்கப் போய்த்தான் இறுதியில் தோல்வியையும் சந்திக்க வேண்டி வந்தது. அதில் அமெரிக்காவினதும்.. இந்தியாவினதும் கபடமே புலிகளின் தோல்விக்கு முக்கிய காரணம். சிறீலங்கா பெரிசா சாதிச்சு இந்த யுத்தத்தை வென்றது என்பது சிங்களவர்களை ஏமாற்றும் ஒரு மாயை அரசியலாகும்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சமாதான காலகட்டத்தில் பல போராளிகள் சிங்கள அரசால் வாங்கப்பட்டார்கள் ஈன்பதும் தோல்விக்கு ஒரு காரணம் மட்டும் அல்ல கசப்பான உண்மையும் கூட......

நெடுக்ஸ்.. போராளிகளுக்கு அங்கு நடந்தது சகலதும் தெரியாதுதான்.. சிலவேளை எமக்குத் தெரிந்தளவுக்குக்கூட தெரியாமல் இருக்கலாம். ஆனால் பொட்டர் தன்னிச்சையாக பலரை சிறை வைத்திருந்தார் என்பதும்.. தலைவர் தலையிட்டு அவர்களை அவ்வப்போது விடுவித்தார் என்பதும் நான் கேள்விப்பட்டவை.. நீங்களும் இதை வசதி இருந்தால் உண்மையா பொய்யா என விசாரித்துக் கொள்ளுங்கள்.

யோகேந்திரநாதன் என்பவர் புலிகளின் குரலிலும் ஈழநாதத்திலும் பல ஆக்கங்களை எழுதியவர்.. அவர் தற்போது தொலைபேசியில் தொடர்பு கொள்ளக்கூடிய நிலையில்தான் உள்ளார்.. ஆனால் மிகவும் வயதானவர். அத்துடன் வேறு கட்சியினர் அவரிடம் ஆக்கங்கள் கோருவதால் அவர் பெரும்பாலும் ஒரு இடத்தில் வசிப்பதில்லை என அறிகிறேன்.

நான் ஏற்கெனவே கூறியுள்ளேன்.. எவரையும் குழப்புவதோ ஏமாற்றுவதோ எனது நோக்கமில்லை. நான் அறிந்த சிலவற்றை இங்கே பகிர்கிறேன். அதன் உண்மைத் தன்மையை அறிவது வாசிப்பவர்களையே சாரும்.

என்று தேசியத் தலைவருக்கும் பொட்டருக்கும் இந்திய நீதிமன்றில் பிடிவாறண்ட் அறிவிக்கப்பட்டதோ அப்பவே பொட்டர் குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கப்பட்டுவிட்டார் என ஒரு தகவல் எனக்கு கிடைத்தது. அதிலிருந்து புலிகளுக்கு விசுவாசமான முக்கியத்தர்கள் வலிந்து துரோகியாக்கப்பட்டார்கள் அல்லது அவர்களது சிறு பலவீனங்கள் பூதாகரமானதாக காண்பிக்கப்பட்டு செயலற்ற நிலைக்கு உள்ளாக்கப்பட்டு அவ்வப்போது புலிகளது இயக்கத்தை பலவீனமாக்க முயன்றார்கள் எனவும் ஒரு தகவல் காதில் விழுந்தது.

புலிகளது புலனாய்வு பிரிவுக்கு இலங்கையின் முக்கிய இடங்களில் பல பிரமுகர்களது தொடர்புகள் இருந்ததாகவும்.. அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே புலிகள் வெட்ட வெளியை நாட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் ஒருவர் கூறினார். ஆக 3வது தரப்பின் தலையீட்டையும் காப்பாற்றுதலையும் பலரும் எதிர்பார்க்க புலனாய்வுப் பிரிவே காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.. இது உண்மையோ பொய்யோ நான் அறியேன்.. ஆனால் நிகழ்தகவுக்கு இப்படியும் வாய்ப்பிருக்கிறது என்பது எனது கருத்து..

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

சரி புலனாய்வுப்பிரிவு தான் அப்பிடி சொல்லிச்செண்டா புலிகளின் தலைமையையே வெட்ட வெளிக்கு நகர்த்திய இரானுவப்பிரிவிர்க்கும் தலைவரின் பாதுகாப்பை கவனித்த பாதுகாப்பு பிரிவிற்கும் எங்கே போச்சு அறிவு?

மிகத்தீவிரமாக நம்பிய ஒருவரால் புலிகள் ஏமாற்றப்பட்டு இருக்கின்றார்கள் யார் அந்த ஒருவர் ? அது தான் மில்லியன் டாலர் கேள்வி

Edited by SUNDHAL

சோளியன் அண்ணோய்... 

1991 ம் ஆண்டு வரைக்கும் பொட்டம்மான் மணலாறு மாவட்ட தளபதி...   முஸ்லீம்கள் வெளியேற்றத்துக்கு பின்னர் மாத்தையாவிடம் இருந்த அரசியல் பொறுப்பு , புலநாய்வு பொறுப்பு , துணைத்தலைவர் பொறுப்பு என்பன பறிக்கப்பட்டது...  அதையே பின்னர் பொட்டம்மான் புலநாய்வு பிரிவின் பொறுப்பாளர் ஆக்கப்பட்டார்... 

இராஜீவ் கொலையில் பொட்டம்மான் பெயர் சேர்க்கப்பட்டது...   அதன் பிறகுதான் புலிகளின் புலநாய்வு துறையால் மாத்தையா இந்திய சதிக்கு உடந்தை எண்று கைது செய்யப்படுகிறார்...  

அப்போது முள்ளிவாய்க்காலில் பல அவலங்களையும் அனுபவித்த சனங்கள் தங்களைக் காப்பாற்ற அமெரிக்கா கப்பல் அனுப்பும் என தமக்குத் தாமே தேறுதல் கூறிக்கொண்டதாகவும் சிலர் கூறினார்கள். இறுதியாக தலைவரது மாவீரர் வணக்க நிகழ்வு போன்ற சில நிகழ்வுகளைப் பார்த்தீர்களானால்.. பொட்டர்தான் தலைவருடன் நெருக்கமாக நின்றார். ஏன்.. தலைவர் போட்டதுபோல ஒரு சவாரிசூட்டிலயும் பொட்டரின்  படம் பார்த்ததாக நினைவுள்ளது.. 2009 காலப்பகுதியில் தலைவரது அதிகூடிய நம்பிக்கைக்குரியவராக பொட்டர் இருந்திருக்கலாம்.. :unsure:

முள்ளிவாய்க்காலுக்குப்பின் கேணல்ராமுடன் தளபதி நகுலனின் அணிகள் உட்பட சுமார் 1000 போராளிகள் மட்டக்களப்பு- திருகோணமலை காடுகளுக்குள் நின்றார்களாம்..  அவர்களுக்கு போராடும் வலு குறைவாக இருந்தாலும் அவர்களை அழிக்க அல்லது ஒடுக்க குறைந்தது ஒரு வருடமாவது சென்றிருக்குமாம்.. ஆனால் ஒரு சில நாட்களுள் அவர்கள் அழிக்கப்பட்டார்கள் அல்லது சரணாகதியாக்கப்பட்டார்கள் என்றால் அதற்கும் மேற்கண்டவர்களே காரணம் என்கிறார்கள்.. அதேபோல்தான் கேபியின் சரணடைதலும் என்கிறார்கள்.. கேள்விப்பட்டதை கூறினேன்.. உண்மை பொய்யை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மௌனிக்கப்படுகிறது என்றால் எல்லாமே மௌனிக்கப்படுகிறது என்றுதானே அர்த்தம்? காட்டுக்குள் நின்று நொட்டுவது கடினம் இல்லை.. ஆனால் அது இலங்கை அரசுக்கு சார்பானதாகவே இருந்திருக்கும்..

புலிகளின் மறைவுக்குப் பின், ஒரு புதிய வெளி தோன்றியுள்ளது.. இலங்கை அரசாங்கம் எந்த அளவு இனப்பிரச்சினையைத் தீர்க்கும் ஆவலில் உள்ளது.. எந்த அளவுக்கு கொடுத்த உறூதிமொழிகளை செயற்படுத்தும் தன்மை கொண்டது என்பது இந்த வெளியில் தெரிந்துவிடும். இதற்கு புலிகள் காட்டுக்குள் நின்று கெரில்லா யுத்தம் செய்வது எந்த வகையிலும் உதவாது..

இசைக்கலைஞன் அண்ணா சொல்வது போல காட்டுக்குள் இருந்து தொடர்ந்து தொந்தரவு கொடுத்திருக்கலாம் ஆனால் அது சிங்கள அரசுக்குத்தான் சாதகமாக அமைந்திருக்கும் விடுதலை புலிகளின் ஆயுத மௌனிப்பு என்பது தூரநோக்கு சிந்தனை இதனை புரியாது எதையெதையோ எழுதுகினம் 

இப்ப என்னமோ சாதகமில்லாததுமாதிரி கதைக்கிறீங்க!! :)

  • கருத்துக்கள உறவுகள்

மௌநிக்கப்படுகின்ற்றது என்பதை கூட ஒரு அழுத்தம் காரணமாக அல்லது வேறு ஒருவர் கொடுத்த அறிக்கையை அவர்கள் கொடுத்திருக்கலாம் இல்லையா....

மௌனிக்கப்படுகிறது என்றால் எல்லாமே மௌனிக்கப்படுகிறது என்றுதானே அர்த்தம்? காட்டுக்குள் நின்று நொட்டுவது கடினம் இல்லை.. ஆனால் அது இலங்கை அரசுக்கு சார்பானதாகவே இருந்திருக்கும்..

புலிகளின் மறைவுக்குப் பின், ஒரு புதிய வெளி தோன்றியுள்ளது.. இலங்கை அரசாங்கம் எந்த அளவு இனப்பிரச்சினையைத் தீர்க்கும் ஆவலில் உள்ளது.. எந்த அளவுக்கு கொடுத்த உறூதிமொழிகளை செயற்படுத்தும் தன்மை கொண்டது என்பது இந்த வெளியில் தெரிந்துவிடும். இதற்கு புலிகள் காட்டுக்குள் நின்று கெரில்லா யுத்தம் செய்வது எந்த வகையிலும் உதவாது..

புலிகளுக்கு இவ்வளவுக்கும் உதவியதே கொரில்லா யுத்தம்தானே.. மரபுவழி யுத்தமானது அவர்களுக்கு பெரியளவில் இழப்புகளை ஏற்படுத்தியதையும் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்?! இலங்கை அரசின் ஆவல் எல்லோருக்கும் தெரிந்த விடயம்தானே..

  • கருத்துக்கள உறவுகள்

This Friday, LTTE cadres and their invisible leaders were holed up in an area less than 10 square kilometres. They faced almost 40,000 Sri Lankan Army troopers and heavy artillery in front and the Bay of Bengal coastline, heavily patrolled by Sri Lankan Navy ships, at the back. And over their

related stories

Don’t write the Tigers’ obit yet

Sri Lankan Army 6 km away from last LTTE hideout

After Govt's assurance, Karuna ends hunger strike: Reports

heads, fighter jets and unmanned vehicles criss-crossed the sky.

Just three years ago, the LTTE controlled more than 15,000 square kilometres. They ran a parallel government from Kilinochchi, with its own courts, schools and a civic administration. Now, summer winds howl through the empty buildings of the town. The Sri Lankan Army has set up offices in some of them.

In one such building, Brigadier Shamindra Silva, 58 Division Commander, has put up his headquarters. “The LTTE put in (the front) at least 15 different regiments. But we attacked them after midnight. They were not alert enough,” said Silva, explaining the operations that led to the exodus of more than 1.5 lakh Tamil civilians from the no fire zone.

But since 2006, many more factors apart from the lack of alertness and the inability to fight in the dark have eroded the LTTE’s conventional fighting capabilities.

Harsh V Pant of the defence studies pepartment at King’s College, London, wrote in a recent analysis: “The rising global abhorrence of political violence post-9/11, the drying up of support from the Tamil diaspora, as well as Colombo’s success in courting China and Pakistan to strengthen its military capabilities enabled the Sri Lankan government to turn the long-running battle in its favour.’’

The LTTE’s cadre strength rapidly dwindled and it did not do well in procuring arms. In the last three years, according to the military, the LTTE lost 18,000 cadres.

Former Sri Lanka foreign secretary Bernard Goonetilleke traced the rebels’ downfall to the Rajapaksa regime’s realisation that it was impossible to negotiate with the LTTE. ‘’Within 10 days of the President’s swearing in towards the end of 2005, the LTTE carried out a strike. In April 2006, Army chief Sarath Fonseka was attacked by a suicide cadre,” Goonetilleke listed out.

He added that small events, which went unnoticed during the time, also contributed to the LTTE’s failings. “Between 2006 and 2007, the Sri Lankan Navy sank at least 11 ships coming from Southeast Asia carrying arms, ammunition and other supplies for them. At about the same time, the European Union and Canada began to crack down on LTTE offices in their countries. It impacted fund collection. There were also two major raids and arrests in the US in mid-2006. Tamil Tigers from Canada and the UK were arrested in New York and Baltimore while attempting to purchase weapons,’’ he said.

What also helped matters was India’s position. Pant wrote: “India, itself facing secessionist challenges, has maintained that the conflict of Sri Lanka must be resolved within the territorial integrity of the nation. Given its own sensitivities about the involvement of outside powers in myriad insurgencies from Kashmir to the Northeast, it’s in India’s interest to support a solution within the Sri Lankan framework.”

In Sri Lanka, the military was evolving and streamlining new strategies. A Colombo-based strategic expert, requesting anonymity, said it helped that defence secretary Gotabhaya Rajapaksa and the President are brothers.

The defection of Colonel Karuna, Prabhakaran’s strongman in the East, was a big blow for the LTTE. The rebels lost a few thousand cadres. Not long afterwards, the LTTE was pushed out of the eastern districts.

The Lankan army’s victory in the East triggered a spurt in military recruitment. It not only countered the high rate of desertion but bolstered the strength especially for the army. Ever since, the army has largely outnumbered the LTTE cadres.

The Lankan Air Force, too, has played a crucial role. Since 2006, fighter jets have flown more than 13,000 sorties over LTTE territory, carpet bombing many areas. “Earlier, the LTTE’s missiles were a worry. But in the last two-three years, the air force outmaneuvered the LTTE,’’ Goonetilleke said.

But does the end of LTTE’s military might mark the end of grievances of the Tamil community? No.

Rajan Hoole of the Jaffna-based University Teachers for Human Rights warned: “At the moment, the people are very angry with the LTTE. But their grievances remain. They are worse than third-class citizens under a government pursuing a Sinhalese extremist agenda. That is where the source of future trouble lies. The leader might go, but there is room for a mythified LTTE to re-emerge with a larger base. India cannot be complacent and must use its authority to ensure that the minorities in Lanka get a fair deal.”

It is at once a warning and a plea.

http://www.hindustantimes.com/world-news/SriLanka/What-led-to-the-LTTE-s-defeat/Article1-404332.aspx

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளுக்கு இவ்வளவுக்கும் உதவியதே கொரில்லா யுத்தம்தானே.. மரபுவழி யுத்தமானது அவர்களுக்கு பெரியளவில் இழப்புகளை ஏற்படுத்தியதையும் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்?! இலங்கை அரசின் ஆவல் எல்லோருக்கும் தெரிந்த விடயம்தானே..

சண்டை மூலம் விடுதலை அடைந்த நாடு என்று ஒன்று சமகாலத்தில் இல்லைதானே.. சண்டை ஒரு உந்துகோலாகவும் அரசியல் தீர்வு அதன் விடையாகவும் இருந்துள்ளன.. ஆக, ஆயுதப்போர் ஒருநாள் முடிவுக்கு வந்தேயாக வேண்டும்..

2001 இல் தமிழர்கள் நிறுத்தினார்கள்.. தீர்வு வரவில்லை (இந்தியாவின் நரிப்புத்தி) 2009 இல் வலுக்கட்டாயமாக நிறுத்தப்பட்டுவிட்டது.. (மீண்டும் நரிப்புத்தி)

ஆக, ஆயுதப்போராட்டத்தின் தேவை முடிந்துவிட்டதா? இல்லை என்பதே இப்போதுள்ள நிலைமை.. தேவை பூர்த்தியாகியிருந்தால் ஐநாவின் தலையீடு இன்னும் காத்திரமாக இருந்திருக்கும்.. ஆனால் ஐநாவிற்கு இன்னும் சிறிது கால அவகாசம் உள்ளது..

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி உங்களுக்கு நம்பிக்கையை தந்தது யார்...?? வீடுவீடாக காசு சேர்க்க வந்தவர்களா இல்லை பத்தி எழுத்தாளர்களா இல்லை விடுதலை புலிகளா...??

புலிகள் எண்டால் எந்த சந்தர்பத்தில் சொன்னார்கள் எண்டு தெளிவு படுத்த முடியுமா...??

கற்பனையில் திரிவுகள் செய்வது... இது ஒரு பரவி வரும் வியாதியாகி கொண்டு இருக்கிறது...

தமிழ் செய்வனின் செயலகம் அங்கை இருக்கிறது எண்டு எரிக் சொல்கைமுக்கே தெரியும்... ஹெலியிலை கொண்டு வந்து விடவரும் சிங்கள படைக்கு தெரியாதா...??

தமிழ் செல்லவை போட அவர் கொண்டு திரியும் சற்றலைட் தொலை பேசியே போதுமானது அவரை காட்டிக்குடுக்க...

தமிழ்செல்வனின் முகாம் அங்கிருப்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் அந்த நேரத்தில் த.செ அங்கிருப்பது யாருக்குத் தெரியும்?
சற்லைட்டை வைத்து இடத்தை கண்டு பிடிக்கலாம் என்டால் ஏன் மற்ற தளபதிகளை அப்படிக் கொல்ல முடியவில்லை?
ஆமி ஓவ்வொரு இடமாக பிடித்துக் கொண்டு போகும் போது தலைவரது குடும்ப படங்கள்,கொஞ்ச ஆவணங்கள் சிக்கியது.பொட்டமானது ஒரு படம் கூட சிக்கவில்லை.அவர் முன் ஜாக்கிரதையாக இருந்ததால் ஒன்றுமே சிக்கவில்லை என்டால் தலைவரையும் முன் ஜாக்கிரதையாக இருக்க வைத்திருக்கலாம் தானே?
கருணா பிரிகிறது இது தான் காரணம் என்று ஒரு காரணம் சொன்னார்கள்.அதற்கு ஆதாரம் வேற இருக்குது என்டார்கள்.கருணா இப்ப துரோகி தானே அந்த ஆதாரத்தை பொது மக்களுக்கு வெளியிடலாம் தானே :unsure:
 
ஏன் தயா அண்ணா இதே யாழில் 2009 மேயிக்கு முதல் எழுதிய சிலர் புலிகள் கொழும்பில் பெரிசாக அடிப்பினம் என எழுதியிருந்தார்கள்[நீங்கள் எழுதினீர்களோ தெரியவில்லை]

Edited by ரதி

அப்படி உங்களுக்கு நம்பிக்கையை தந்தது யார்...?? வீடுவீடாக காசு சேர்க்க வந்தவர்களா இல்லை பத்தி எழுத்தாளர்களா இல்லை விடுதலை புலிகளா...??

புலிகள் எண்டால் எந்த சந்தர்பத்தில் சொன்னார்கள் எண்டு தெளிவு படுத்த முடியுமா...??

வீட்டுக்கு காசு சேர்க்க வந்தவர்கள் தான் கூறினார்கள்...தலைவர் "பெரிசா செய்யுறதுக்கு நிறைய plan களோடு இருக்கிறார்...ஒவ்வொரு குடும்பமும் 'இந்த' தொகையை தரவும்" என்று விடாப்பிடியாக நின்றார்கள்...negotiation உம் இல்லை...அவர்கள் சொன்னார்கள் இந்த amount "வன்னியில்" set பண்ணினது என்று....

என்ற படியால் தான் எனக்கு கடுப்பு.... நான் எவ்வளவு தாறது என்று "நான்தான்" set பண்ணுறது...வன்னி இல்லை

அவர்கள் சொன்ன "கெத்தை" பார்த்தா...தமிழீழமே நிச்சயம் என்று இருந்தேன்....

"நானாக நினைச்சது தான் Colombo'லே பெருசா விழ போகுது என்று :unsure: "

தமிழ்செல்வனின் முகாம் அங்கிருப்பது எல்லோருக்கும் தெரியும் ஆனால் அந்த நேரத்தில் த.செ அங்கிருப்பது யாருக்குத் தெரியும்?

சற்லைட்டை வைத்து இடத்தை கண்டு பிடிக்கலாம் என்டால் ஏன் மற்ற தளபதிகளை அப்படிக் கொல்ல முடியவில்லை?
ஆமி ஓவ்வொரு இடமாக பிடித்துக் கொண்டு போகும் போது தலைவரது குடும்ப படங்கள்,கொஞ்ச ஆவணங்கள் சிக்கியது.பொட்டமானது ஒரு படம் கூட சிக்கவில்லை.அவர் முன் ஜாக்கிரதையாக இருந்ததால் ஒன்றுமே சிக்கவில்லை என்டால் தலைவரையும் முன் ஜாக்கிரதையாக இருக்க வைத்திருக்கலாம் தானே?
கருணா பிரிகிறது இது தான் காரணம் என்று ஒரு காரணம் சொன்னார்கள்.அதற்கு ஆதாரம் வேற இருக்குது என்டார்கள்.கருணா இப்ப துரோகி தானே அந்த ஆதாரத்தை பொது மக்களுக்கு வெளியிடலாம் தானே :unsure:
 
ஏன் தயா அண்ணா இதே யாழில் 2009 மேயிக்கு முதல் எழுதிய சிலர் புலிகள் கொழும்பில் பெரிசாக அடிப்பினம் என எழுதியிருந்தார்கள்[நீங்கள் எழுதினீர்களோ தெரியவில்லை]

இறுதி போரில் தலைவர் குடும்பத்து விபரங்களை விட வேறை எதையும் அவர்கள் தேடவில்லை என்பதுதான் உண்மை...  சிக்கவில்லை என்பது பொய்...    பொட்டம்மான் மட்டும் இல்லை சுசை அண்ணை,   பாணு அண்ணை,  பால்ராஜ் அண்ணை, ஜெயம் அண்ணை ,  இன்னும் பல தளபதிகளின் குடும்ப படங்கள் எதுவும் வெளிவரவிலை... 

தமிழ் செல்வன் மட்டும் தான் வெளி உலகோடு அந்த வேளைகளில்  தொடர்பில் நேரடியக இருந்தவர்..   தொலை பேசி அழைப்பை ஏற்படுத்துவதுக்கு மட்டும் இல்லை வெளியில் இருந்து வரும் அழைப்பை  ஏற்கவும் அவருக்கு ஒரு இலக்கம் நிலையாக தேவை...  

மற்றய தளபதிகள் வைத்து இருக்கும் இலக்கம் அல்லது கருவியை உறுதி செய்ய தனிப்பட்ட தகவல்கள் தேவை...  அதே நேரம் அந்த தளபதி அந்த இலக்கத்தை வைத்து இருக்கிறாரா என்பதையும் உறுதி செய்யப்பட வேண்டும்... 

வீட்டுக்கு காசு சேர்க்க வந்தவர்கள் தான் கூறினார்கள்...தலைவர் "பெரிசா செய்யுறதுக்கு நிறைய plan களோடு இருக்கிறார்...ஒவ்வொரு குடும்பமும் 'இந்த' தொகையை தரவும்" என்று விடாப்பிடியாக நின்றார்கள்...negotiation உம் இல்லை...அவர்கள் சொன்னார்கள் இந்த amount "வன்னியில்" set பண்ணினது என்று....

என்ற படியால் தான் எனக்கு கடுப்பு.... நான் எவ்வளவு தாறது என்று "நான்தான்" set பண்ணுறது...வன்னி இல்லை

அவர்கள் சொன்ன "கெத்தை" பார்த்தா...தமிழீழமே நிச்சயம் என்று இருந்தேன்....

"நானாக நினைச்சது தான் Colombo'லே பெருசா விழ போகுது என்று :unsure: "

காசுகளை உங்களிட்டை வாங்கி தாங்கள் நல்லா இருக்கிறாங்கள் எண்டது கொஞ்சம் கவலையான விசயம் தான்...  

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி போரில் தலைவர் குடும்பத்து விபரங்களை விட வேறை எதையும் அவர்கள் தேடவில்லை என்பதுதான் உண்மை...  சிக்கவில்லை என்பது பொய்...    பொட்டம்மான் மட்டும் இல்லை சுசை அண்ணை,   பாணு அண்ணை,  பால்ராஜ் அண்ணை, ஜெயம் அண்ணை ,  இன்னும் பல தளபதிகளின் குடும்ப படங்கள் எதுவும் வெளிவரவிலை... 

தமிழ் செல்வன் மட்டும் தான் வெளி உலகோடு அந்த வேளைகளில்  தொடர்பில் நேரடியக இருந்தவர்..   தொலை பேசி அழைப்பை ஏற்படுத்துவதுக்கு மட்டும் இல்லை வெளியில் இருந்து வரும் அழைப்பை  ஏற்கவும் அவருக்கு ஒரு இலக்கம் நிலையாக தேவை...  

மற்றய தளபதிகள் வைத்து இருக்கும் இலக்கம் அல்லது கருவியை உறுதி செய்ய தனிப்பட்ட தகவல்கள் தேவை...  அதே நேரம் அந்த தளபதி அந்த இலக்கத்தை வைத்து இருக்கிறாரா என்பதையும் உறுதி செய்யப்பட வேண்டும்... 

காசுகளை உங்களிட்டை வாங்கி தாங்கள் நல்லா இருக்கிறாங்கள் எண்டது கொஞ்சம் கவலையான விசயம் தான்...  

நீங்களே சொல்கிறீர்கள் சற்லைட் தொலைபேசியால் தான் அவர் இருந்த இடம் கண்டு பிடிக்கப்பட்டது என்று அவர் இறந்த நேரம் எல்லோரும் அப்படித் தான் கதைத்தவர்கள்.உங்களுக்கே ச.தொலைபேசியால் ஆபத்து என்று தெரியும் போது த.செக்கோ அல்லது புலிகளுக்கோ தெரியாமல் இருக்குமோ :unsure: அல்லது ஆபத்து என்று தெரிஞ்சும் எல்லா இடமும் கொண்டு திரிஞ்சவரோ :(

தலைவரின்ட தனிப்பட்ட பாதுகாப்புப் அணியினருக்கும்,புலனாய்வு அணியினருக்கும் கடைசி நேரத்தில் முட்டி இருக்குமோ என்னவோ :unsure: ...அரசிற்கு மற்ற தளபதிகளை விட பொட்டம்மானும்,தலைவரும் தானே முக்கியம்

தமிழ்செல்வனின் வீரச்சாவு மிக நிச்சயமான பாதுக்காப்பு செயற்பாடில் இருந்த தளர்வு நிலையே காரணம்...   தமிழ்செல்வனோ வேறு யாராக இருந்தாலும்  தங்களின் பாதுக்காப்பு அணியை தாங்களே தெரிவு செய்யும் நிலைதான் இருந்தது... 

சாதாரணமாக சந்தேகப்பட கூடிய ஒரு தாக்குதல் வீரச்சாவும் சம்பந்தப்பட்டால் MO எனப்படும் இராணுவ அலுவலக சமராய்வு பிரிவினரால் பல கட்ட விசாரணக்கு பிறகு பகுப்பாய்வு தொகுப்பாய்வு களின் இறுதியில்  சரியான முடிவுவை எட்டுவார்கள்...  இதில் தவறு வர வெறும் 1% மே சந்தர்ப்பம் இருக்கும்...  இறுதிப்போரில் தர்ம புரத்தில் வீரச்சாவைந்த (வெடி) கேணல் தினேஸ் அண்ணை ( வீரத்தேவன்) பொறுப்பாக இருந்தார்...  தலைவரின் மிக நம்பிக்கையானவர்களில் அவர் ஒருவர்... 

தவிரவும் MI எனப்படும்  இராணுவ புலநாய்வு பிரிவினரின் தகவல்களும் இராணுவ தொலைத்தொடர்புகளை ஒட்டுக்கேட்டல் மற்றும் பலவளிகளில் பெற்று ஒப்பிட்டு பார்க்கப்படும்...  தகவல்கள் ஒண்றாக இருந்தால் முடிவு எட்டப்படும்...  இல்லையாயின் விசாரணைகள் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படும்...  MI க்கு  இறுதிப்போரில் வீரச்சாவடைந்த  சசிகுமார் மாஸ்ரரும் கடாபி அண்ணையும் பொறுப்பில் இருந்தனர்... 

இந்த இரு பிரிவும் தலைவரின் நேரடிக்கட்டுப்பாட்டில் இருந்தவை...  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.