Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரியா மீது தாக்குதலுக்கு தயாராகிறது அமெரிக்கா! - ஏவுகணைக்கப்பல் மத்திய கிழக்கிற்கு விரைவு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
us-war-ship-24813-150.jpg

சிரியாவில் அரசுப்படைகள் இரசாயனக் குண்டுகளை வீசி ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்களைக் கொன்றுள்ள நிலையில், அமெரிக்காவின் ஏவுகணை தாங்கி போர்க்கப்பல் ஒன்று மத்தியத்தரைக்கடல் விரைகிறது. ஏற்கனவே அப்பிராந்தியத்தில் மூன்று அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கப்பல் மூலம் அதன் எண்ணிக்கை நான்காக உயர்கிறது. இருந்தும் சிரியாவிற்கு எதிராக எந்த தாக்குதலையும் தொடுக்க ஆயுத்தமாக இருக்கும்படி எங்களுக்கு உத்தரவும் வரவில்லை என்று அங்குள்ள அமெரிக்க கப்பற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

  

சிரியாவில் பொதுமக்களுக்கு எதிராக ரசாயண ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டி வரும் அமெரிக்கா சிரியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்த தீர்மானித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=90993&category=WorldNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அல்கைடாவுக்கு கைகொடுக்க அமெரிக்கா களத்தில் இறங்கப்போகிறது..

  • கருத்துக்கள உறவுகள்

அல்கைடாவுக்கு கைகொடுக்க அமெரிக்கா களத்தில் இறங்கப்போகிறது..

 

ஆகா, அப்படி எல்லாம் பண்ண முடியாது.

 

அமெரிக்காவா, கொக்கா.

 

எகிப்த்தில நடக்கிறதை பார்க்கிறீர்கள் தானே.

 

முஸ்லிம் brotherhood க்கு ஆப்பு அடிக்க, ஆமியினை தூண்டியது யாரு இசை?

 

ஒருவேளை நீங்களோ? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா, அப்படி எல்லாம் பண்ண முடியாது.

 

அமெரிக்காவா, கொக்கா.

 

எகிப்த்தில நடக்கிறதை பார்க்கிறீர்கள் தானே.

 

முஸ்லிம் brotherhood க்கு ஆப்பு அடிக்க, ஆமியினை தூண்டியது யாரு இசை?

 

ஒருவேளை நீங்களோ? :icon_mrgreen:

 

ஓ.. அதுவும் அவிய்ங்கதானா? :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்திலையே முதன்முதலாய் சிரியாவிலைதான் நச்சுவாயு அடிச்சதை இந்த உலகமும்  அமெரிக்காவும் கண்டுபிடிச்சிருக்கு.....நச்சுக்குண்டு எண்டால் அமெரிக்கா உடனை நடவடிக்கை எடுக்கும்.அதோடை அமெரிக்கச்சனமும் கொந்தளிக்கும்..

நச்சுக்குண்டு அடித்த பொறுப்பு சிரியாவுக்கு அல்ல. பொறுப்பு ரூசியாவுக்கே.  குண்டு ரூசியாவிலிருந்து வந்திருக்க வேண்டும். இது பற்றி ஏற்கவே அமெரிக்கா ரூசியாவுக்கு கவலை தெரிவித்திருந்திருக்கும். ஓபாமா பதவிக்கு வந்ததில் இருந்து பலமுறை புட்கினுடன் சினேகிதம் பிடிக்க முயன்றார்.  ஆனால் அவர் சுத்தி விட்டார். போலந்தில் ஏவுகணைகளை நிறுவுவதை கூட ஓபாமா நிறுத்திவைத்திருந்தார். எத்தனயோ பேர் எவ்வளவோ ஆக்கினை கொடுத்தும் சிரியாவில் அல்கைடா இருப்பதாக நடித்து ரூசியாவின் நண்பனை விட்டு வைத்திருந்தார். புட்கின் தனி ஒரு கேசை வைத்துக்கொண்டு அமெரிக்கர்கள் ரூசியாவில் தத்து எடுக்க கூடாது என்று அமெரிக்காவை கறுப்பு பட்டியலில் போட்டார். சினோடன் கேசில் விமான நிலையத்திலிருந்து அவரை வெளியே போக விட்டது சர்வதேச உடன்படிக்கைகளுக்கு எதிர். அவர் ஒரு ஒற்றர் குற்றவாளியாக அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட பின்னர்தான் ரூசியாவுக்குள் அனுமதிக்கப்பட்டார். இது வெளிப்படையாக அமெரிக்காவில் ஒருவர் ஒற்றர் வேலை செய்தால் ரூசியாவில் அடைக்கலம் கிடைக்கும் என்ற நிலை. இது ஜெனீவா அடைக்கல விதிகளையே துர்ப்பிரயோகம் செய்வது. இதனால் புட்கின் அமெரிக்க - ரூசிய நல்லுறவுகளுக்கு செயல் ரீதியாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அதன் பலனை அசாத் வாங்கப் போகிறார். புட்கின் காலத்தை கடக்க விட்டுவிட்டார். புட்கின் இனி அசாத்தை காப்பாறுவதாயின் நேராக அமெரிக்காவுடன் சண்டைக்கு இறங்க வேண்டும். அது நடக்காது.. ஆனால் இதுக்கு மேலே போய் பழைய பனிப்போராக மாறாதுவிட்டால் நல்லது.

 

வடகொரியா வாலை சுருட்டிக்கொண்டது. மிஞ்சியிருப்பது ஈரான் மட்டுமே. அசாத்தின் அரசியல் முடிவு நமக்கு நன்றாக மாறிவரத்தான் சந்தர்ப்பம் இருக்கு.  இந்த பயத்தில் ராஜபக்சா இந்தியாவுக்கு சாம்பூரில் தானே தான் இலவச அனல் மின்சார நிலையம் கட்டித்தாறன் என்று கெஞ்சப்போகிறார். நாமும் நமது பறையையும் அடிக்க வேண்டியதுதான். "நயினார் செத்தது நல்லது நல்லது. எட்டுச் சோத்துக்கு நல்லது நல்லது. நயினார் செத்தது  நல்லது நல்லது". 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

 

"நயினார் செய்தது நல்லது நல்லது. எட்டுச் சோத்துக்கு நல்லது நல்லது. நயினார் செத்தது  நல்லது நல்லது". 

 

 

மல்லை முடியலயப்பா. :D

அமெரிக்கா செய்யும் திருகு தாளங்களையும் சிலர் ரசிக்கிறார்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

 

 

Russian Foreign Minister Sergei Lavrov has warned the United States against the ‘extremely dangerous consequences’ of military action against Syria.

Lavrov made the remarks during a telephone conversation with US Secretary of State John Kerry on Sunday. 

 

“Sergei Lavrov drew attention to the extremely dangerous consequences of a possible new military intervention for the whole Middle East and North Africa region,” the Russian Foreign Ministry said in a statement.

It added that Moscow was “deeply alarmed” by Washington’s statement about its readiness to intervene in Syria. 

Foreign Minister Lavrov urged restraint during the conversation with John Kerry, the statement said. 

US Defense Secretary Chuck Hagel said on August 23 that the Pentagon was positioning military forces as part of “contingency options” provided to US President Barack Obama regarding Syria. 

France and the Israeli regime have also called for military action against the government of President Bashar al-Assad. 

Hagel’s comments have been interpreted as a tacit suggestion that the US may be preparing for a military strike on Syria. The US defense secretary repeated similar remarks on Sunday during a visit to Malaysia. 

Syrian President Bashar al-Assad said in a recent interview with the Russian newspaper Izvestia that any military intervention by the US would end in “failure.” 

The United Nations says over 100,000 people have been killed and a total of 7.8 million of others displaced due to the turmoil that has gripped Syria since March 2011. 

 

http://www.presstv.com/detail/2013/08/26/320519/russia-warns-us-against-attack-on-syria/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அமெரிக்கன் எல்லாத்தையும் தானே செய்துபோட்டு சிரியாவுக்கை உள்ளுடுறதுக்கு அலுவல் பாக்கிறான்......சதாம் முடிஞ்சுது....இப்ப சதாத்? இரண்டு பேருமே இஸ்லாமிய தீவிரவாதிகளில்லை.......எப்ப பாத்தாலும் கோட்டும் சூட்டும்தான்...அதாவது வெஷ்டன் போக்குடையவர்கள்.அப்பிடியிருந்தும் அமெரிக்கன் அடிக்கிறான் எண்டேக்கை??????எல்லாம் அந்தப்பிரச்சனைதான் எண்டு நினைக்கிறன்.....எண்ணை....எண்ணை :D

  • கருத்துக்கள உறவுகள்

மில்லியன் தொன்கள் "ஒறேஞ்" எனப்படும் இரசாயன கலவையை வியட்நாமில் கொட்டி லட்சக்கணக்கில் மக்களை கொன்றவர்கள் அமெரிக்கர்கள். இன்று சிரியா இரசாயன ஆயுதத்தை பாவித்ததாம்.அவர்களை தாக்க போகிறார்களாம்.

  • கருத்துக்கள உறவுகள்

சிரியாவில் அதிபர் ஆசாத் படைக்கும் போராளிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில் போராளிகள் வசமுள்ள பகுதிகளில் நூற்றூக்கணக்கான பொதுமக்கள் விஷக்குண்டுகள் தாக்கியதில் மூச்சுதிணறி உயிரிழந்தனர். அதற்கான வீடியோ ஆதரங்களும் வெளியிடப்பட்டன. தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அரசு வீசிய விசக்குண்டு தாக்குதல்களில் 322 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடத்த தீர்மானித்துள்ளது. இதையடுத்து மத்தியத்தரைக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் ஆயுத்த நிலையில் உள்ளன. அமெரிக்க தலைமையில் இப்பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ் படைகள் தாக்குதலை தொடுக்க தயாராகி வருகின்றன. 

அமெரிக்கா

அமெரிக்காவின் ஏவுகணை தாங்கி கப்பல் மத்தியத்தரைக்கடலுக்கு விரைகிறது. மத்தியத்தரைக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள யூ.எஸ்.எஸ். ஹாரி எஸ். ட்ரூமான் என்ற விமானந்தாங்கி கப்பல் சூயஸ் கால்வாய் வழியாக செங்கடலுக்கு விரைகிறது. இது அங்கிருந்து சிரியா மீது தாக்குதல் நடத்தும். 

இந்த கப்பலுக்கு பாதுகாப்பாக செல்லும் மற்ற சிறு கப்பல்களும் ஏவுகணைகளை வீசி தாக்கும். மேலும் ஜோர்டானில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள எப்.16 ரக போர் விமானங்கள் பல்முனை தாக்குதலில் ஈடுபடும் என்றும் கூறப்படுகிறது. 

பிரான்ஸ்

மத்தியத்தரைக்கடல் டவுலான் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பிரெஞ்சு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் சிரியா மீது தாக்குதலுக்கு தயாரான நிலையில் உள்ளது. மேலும் ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மிராஜ் மற்றும் ரபேல் ஜெட் விமானஙகள் சிரியாவின் மீது தாக்குதல் நடத்தும் என்று கூறப்படுகிறது. 

பிரிட்டன் 

மத்தியத்தரைக்கடலில் பிரிட்டன் ஒரு நீர்மூழ்கி கப்பலை நிறுத்திவைத்துள்ளது. மேலும் தாக்குதல் நடத்தும் அவசியம் ஏற்பட்டால் ஏவுகணை தாங்கி போர்க்கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை இத்தாக்குதலுக்கு பயன்படுத்த கூடும். சைப்ரஸ் ஒத்துக்கொண்டால் அதன் ராணுவத்தளத்தை பிரிட்டன் பயன்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. 

 

http://www.maalaimalar.com/2013/08/25135954/US-UK-and-French-forces-near-S.html

அவர்கள் தங்களுக்குள்ளை அடிபட்டு சாகும்வரை அமெரிக்கா வேடிக்கை பார்க்கும்.

யாரோ ஒருவர் எதையாவது கண்மண் தெரியாமல் பயன்படுத்தி சண்டை ஓய்கிற மாதிரி இருந்தால் அமெரிக்கா சும்மா இருக்காது. உள்ளே புகுந்து இருவரையும் உசுப்பிவிட்டு வேடிக்கை பார்க்கும். :D

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா எங்களை தாக்கினால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் தீப்பற்றி எரியும் - சிரியா எச்சரிக்கை

 

சிரியாவில் அதிபர் ஆசாத் படைக்கும் போராளிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில் போராளிகள் வசமுள்ள பகுதிகளில் நூற்றூக்கணக்கான பொதுமக்கள் விஷக்குண்டுகள் தாக்கியதில் மூச்சுதிணறி உயிரிழந்தனர். அதற்கான வீடியோ ஆதரங்களும் வெளியிடப்பட்டன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அரசு வீசிய விசக்குண்டு தாக்குதல்களில் 355 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளது. ஆனால் எதிர்க்கட்கிகளோ 1300-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகிவிட்டதாக தொடர்ந்து கூறி வருகிறது.

இந்நிலையில், அமெரிக்கா சிரியா மீது தாக்குதல் நடத்த தீர்மானித்துள்ளது. இதையடுத்து மத்தியத்தரைக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்க போர்க்கப்பல்கள் ஆயத்த நிலையில் உள்ளன. அமெரிக்கா தலைமையில் சிரியா மீது தாக்குதல் நடத்த இப்பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள அமெரிக்க, பிரிட்டன், பிரான்ஸ் படைகளும் தயாராகி வருகின்றன.

அமெரிக்காவின் ஏவுகணை தாங்கி கப்பல் மத்தியத்தரைக்கடலுக்கு விரைந்தது. மத்தியத்தரைக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள யூ.எஸ்.எஸ். ஹாரி எஸ். ட்ரூமான் என்ற விமானந்தாங்கி கப்பல் சூயஸ் கால்வாய் வழியாக செங்கடலுக்கு விரைகிறது. இது அங்கிருந்து சிரியா மீது தாக்குதல் நடத்தும்.

இந்த கப்பலுக்கு பாதுகாப்பாக செல்லும் மற்ற சிறு கப்பல்களும் ஏவுகணைகளை வீசி தாக்கும். மேலும் ஜோர்டானில் பயிற்சியில் ஈடுபட்டுள்ள எப்.16 ரக போர் விமானங்கள் பல்முனை தாக்குதலில் ஈடுபடும் என அஞ்சப்படுகிறது.

மத்தியத்தரைக்கடல் டவுலான் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பிரெஞ்சு அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் சிரியா மீது தாக்குதலுக்கு தயாரான நிலையில் உள்ளது. மேலும் ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மிராஜ் மற்றும் ரபேல் ஜெட் விமானஙகள் சிரியாவின் மீது தாக்குதல் நடத்தும் என்று கூறப்படுகிறது.

மத்தியத்தரைக்கடலில் பிரிட்டன் ஒரு நீர்மூழ்கி கப்பலை நிறுத்திவைத்துள்ளது. மேலும் தாக்குதல் நடத்தும் அவசியம் ஏற்பட்டால் ஏவுகணை தாங்கி போர்க்கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களை இத்தாக்குதலுக்கு பயன்படுத்த கூடும். சைப்ரஸ் ஒத்துக்கொண்டால் அதன் ராணுவத்தளத்தை பிரிட்டன் பயன்படுத்தும் என்றும் தெரியவருகிறது.

இந்நிலையில், சிரியா மீது அமெரிக்கா தலைமையிலான படைகள் தாக்குதல் நடத்தினால், ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் தீப்பற்றி எரியும் என சிரியா எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக, நேற்று பேட்டியளித்த சிரியாவின் தகவல் அமைச்சர் ஒம்ரான் அல்-ஜோபி கூறுகையில், ‘தற்போதைய நிலையில் எங்கள் நாட்டு பிரச்சினையில் யார் தலையிட்டாலும் அது தீயை வீசுவதற்கு ஒப்பானதாகும். அந்த தீ சிரியாவை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளையும் எரித்து விடும்.

சிரியா மீது தாக்குதல் நடத்திவிடலாம் என நினைப்பது அவ்வளவு சாதாரனமாக நடக்கக்கூடியது அல்ல’ என்று கூறியுள்ளார்.

சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது அபாயக் கோட்டை தாண்டும் நடவடிக்கையாகும் என ஈரானும் எச்சரித்துள்ளது.

‘போர்க்கப்பல்களை அனுப்புவதால் நிலைமை மேலும் தீவிரமாகுமே ஒழிய, கட்டுப்படுத்த முடியாது’ என ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அபாஸ் அரக்ஜி கூறியுள்ளார்.

அந்நாட்டின் ராணுவ துணைத் தலைவர் மசூத் ஜசாயெரி, ‘அபாயக் கோட்டை அமெரிக்கா தாண்டினால் விளைவுகளை வெள்ளை மாளிகை சந்திக்க நேரிடும். எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுபவர்கள் மக்களிடம் இருந்து தப்பிவிட முடியாது’ என்று கூறியுள்ளார்.

 

அமெரிக்கன் அடிக்கிறான் எண்டேக்கை??????எல்லாம் அந்தப்பிரச்சனைதான் எண்டு நினைக்கிறன்.....எண்ணை....எண்ணை :D

அரபுக்களின் எண்ணை அது எப்பவோ அமெரிக்கனின் கையில் தான் புதுசா சிரியாவை அடிச்சு தான் எண்ணை எடுக்க வேண்டும் என்று இல்லை  :D

 

 

அமெரிக்கா எங்களை தாக்கினால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் தீப்பற்றி எரியும் - சிரியா எச்சரிக்கை

இப்பிடி தான் கடாபி,சதாம் எல்லோரும் சொன்னவை ஒருத்தரும் ஒரு ஆணையையும் புடுங்கலை  :D

உலகையே முஸ்லிம் மயமாக்குவோம் என்ற முஸ்லிம்களின் திருட்டு திட்டம் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் . அதிலும் அரபுக்களில் அதிகமானோருக்கு இந்த முஸ்லிம் மயமாதல் என்ற திட்டங்களில் விருப்பம் இல்லை. அவர்கள் அரபுக்கள் வேறு முஸ்லிம்கள் வேறு என்று நினைப்பவர்கள் . சில அரபுக்கள் மட்டும் முஸ்லிம் திட்டத்திற்கு உதவி செய்பவர்கள் அதனால் அவர்கள் அமெரிக்க வழிக்கு கொண்டுவர வேண்டிய தேவை உள்ளது . அதனால் கலகங்களை தூண்டி தனக்கு ஆதரவான ஆட்சிய அமைக்க அமெரிக்க உதவுகிறது. இடைக்கிடை ரசியாவும் தனது அமெரிக்க வஞ்சத்தை தீர்க்க அமெரிக்கவிற்கு எதிரான சில வேலைகளை செய்கிறது . தென்னாசியாவை முழு முஸ்லிம் ஆக்கும் திட்டம் ஓரளவிற்கு முஸ்லிம்களால் வெற்றிநடை போடுகிறது உலக மயமாக்கல் என்ற திட்டம் மட்டும் பெருசா வெற்றி பெறவில்ல அதற்கு காரணம் இவர்களுக்கு உதவும் அரபு முஸ்லிம் நாடுகள் அமெரிக்க கூட்டனியால் அடக்கப் படுவதே காரணம் . இல்லை என்றால் இந்த முஸ்லிம் பயங்கரவாதம் எம்மை எப்பவோ முழுங்கி இருக்கும் . :icon_idea:

அமெரிக்கா எங்களை தாக்கினால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் தீப்பற்றி எரியும் - சிரியா எச்சரிக்கை

1003918_644586032233013_2071505464_n.jpg

சிரியா //இப்புடியே உசுப்பேத்தி உசுப்பேத்தி ஒடம்ப ரணகலமாக்கிட்டானுங்களேடா.....//

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அரபுக்களின் எண்ணை அது எப்பவோ அமெரிக்கனின் கையில் தான் புதுசா சிரியாவை அடிச்சு தான் எண்ணை எடுக்க வேண்டும் என்று இல்லை  :D

 

ஆனால் சிரியாவோடை ஒப்பந்தங்களை மற்றவங்களெல்லே வைச்சிருக்கிறாங்கள்....அதோடை அரபுவசந்தம் ஒரேயடியாய் அடிக்கேக்கை இதுமட்டும் ஏன் நந்திமாதிரி நடுவிலை நிக்கோணும்? :icon_idea:

அமெரிக்கா எங்களை தாக்கினால் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு பிராந்தியமும் தீப்பற்றி எரியும் - சிரியா எச்சரிக்கை

 

 

அமெரிக்காவினதும், பலரினதும் விருப்பமும் அதுதானே!

 

அமெரிக்காவினதும், பலரினதும் விருப்பமும் அதுதானே!

புஸ் போனதின் பின்னர், அங்கு தேவையில்லாமல் விழுந்துளக்கி அவதிப்படாமல் எட்ட நின்று அலுவல் பார்ப்பதையே விரும்புகிறார்கள். தேவை இல்லாத சதாமை பிடிக்க எவ்வளவுக்கு நாடு வங்குரோத்துக்கு போனது. அதையே பாகிஸ்தானில் செய்து ஓசமா பின லேடனை பிடித்திருந்தால் இப்போது அமெரிக்க நாடே அழிந்து போயிருந்திருக்கும். நோகாமல் கடாபியை போட்டு,  மோர்சியை மடக்கி, ஒசாமவை போட்டு, இப்போ சிரிய அதிபர் பசீர் அசாத்தும் போக வைக்கும் நேரமும் வந்துவிட்டது. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
troops-28813-150.jpg

சொந்த நாட்டு மக்களை கொன்று குவித்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள சிரியா மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் தொடுக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 21ந் தேதி தலைநகர் டமாஸ்கஸ் புறநகர்களில் அப்பாவி மக்கள் மீது அதிபர் ஆதரவு படையினர் ரசாயன குண்டு வீச்சு நடத்தி 1300க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர். இந்த தாக்குதலில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது உண்மையா என்பதை கண்டறியும் ஆய்வை ஐ.நா. குழு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும், சிரிய படைகள் ரசாயன குண்டுவீச்சு நடத்தியதற்கு ஆதாரம் இருப்பதாக அமெரிக்கா நம்புகிறது.

  

சிரியாவில் நடந்துள்ள ரசாயன ஆயுதத்தாக்குதல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மிகுந்த கவலை வெளியிட்டார். சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத்தை தண்டிக்கும் வகையில் ராணுவ நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அவர் ராணுவ அதிகாரிகளுடனும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுடனும் ஆலோசனை நடத்தினார்.இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர், ஆஸ்திரேலியா, பிரான்ஸ் நாடுகளின் தலைவர்களுடனும் ஒபாமா ஆலோசனை நடத்தினார். டேவிட் கேமரூனுடன் 4 நாளில் 2 முறை ஆலோசனை நடத்தினார். சிரியா மீது தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என ஈரான் விடுத்த எச்சரிக்கையை அமெரிக்கா பொருட்படுத்தவில்லை. சிரியாவில் நடந்த ரசாயன ஆயுத தாக்குதலுக்கு பின்னர் அமெரிக்கா வெளிநாட்டு தலைவர்களுடன் பேசுவதற்காக 88 தொலைபேசி அழைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் கூறுகின்றன.

 

அமெரிக்கா தனது நேச நாடுகளுடன் கை கோர்த்துக்கொண்டு எந்த நேரத்திலும் சிரியா மீது ராணுவ நடவடிக்கையை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சிரியாவில் நடந்து வருகிற உள்நாட்டுப்போரில், மேற்கத்திய நாடுகள் மேற்கொள்கிற தீவிர நடவடிக்கையாக இது இருக்கும் என சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

 

இதற்கிடையே துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் மேற்கத்திய நாடுகளின் தூதர்கள், சிரிய எதிர்க்கட்சியான சிரிய தேசிய கூட்டணி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது, அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படையினருக்கு எதிராக எந்த நேரத்திலும் ராணுவ நடவடிக்கையை எதிர்பார்க்கலாம் என்று மேற்கத்திய நாடுகளின் தூதர்கள், சிரிய தேசிய கூட்டணியிடம் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவின் நெருங்கிய நேச நாடும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை ஏற்க உள்ள ஆஸ்திரேலியாவும், சிரியா மீதான தாக்குதல் நடவடிக்கையை இன்று உறுதி செய்தது.

 

அமெரிக்க ராணுவ மந்திரி சக் ஹேகல், சிரியா மீது தாக்குதல் நடத்துவதற்கு மத்திய தரைக்கடல் பிராந்தியத்தில் தங்களது படைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், ஜனாதிபதி ஒபாமாவின் உத்தரவுக்காக காத்திருப்பதாகவும் ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது. சிரியா மீது தாக்குதல் தொடுப்பதற்கு இங்கிலாந்து படைகளும் திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. இது தொடர்பாக இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நாளை (வியாழக்கிழமை) முக்கிய விவாதம் நடைபெறுகிறது. இத்தனைக்கு மத்தியிலும் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை சிரியா மீண்டும் மறுத்துள்ளது.

 

http://www.seithy.com/breifNews.php?newsID=91345&category=WorldNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

அனேகமாக வியாழக்கிழமை அளவில் தாக்குதல் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கபடுகின்றது 3 நாட்கள் 4 நாட்கள் இந்த தாக்குதல் தொடரலாம் என்றும் கூறப்படுகின்றது

சிரியா பிரச்சனையையும், ஈரான் பிரச்சனையையும் அமெரிக்கா தீர்க்காதவரைக்கும் நாடுகளுக்கு இலங்கை இருப்பது தெரிய வரப்போவதில்லை. அந்த விடையம் விரைவில் முடித்துவைக்கப்பட வேண்டும். சிரியா இனி சமாதனம் மூலமாக தீர்க்க முடியாதது. 25% வீத மக்கள் வரையில் அவருக்கு எதிர்ப்பு இருந்தாலே அவரால் இனி நாட்டை ஆளமுடியாது. அது முஸ்லீம் நாடு. 100% விதமும் ஏற்றால்த்தான் ஒரு ஜனநாயகத் தலைவர் ஒருவர் முஸ்லீம் நாடு ஒன்றை ஆள முடியும். எனவே அசாத்தால் இனி ஜனநாயகமாக நடக்க முடியாது என்பதால் பதவியை விட வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

main-cartoon-2(6).jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.