Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவீபிள்ளை-ஹக்கீம் இன்று சந்திப்பு; வடக்கிற்கு நாளை செல்கிறார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Navi(1).jpg
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் நவனீதம்பிள்ளை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமை இன்று திங்கட்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் மற்றும் சட்டமா அதிபர் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரையும் அவர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

அத்துடன், வடக்கிற்கு நாளை விஜயம் செய்யவிருக்கின்றார். வடக்கில், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கே விஜயம் செய்யவிருக்கின்றார்.

முன்னாள் போர் வலயப் பகுதிகளுக்கும் செல்லும் நவனீதம்பிள்ளை அங்கு மக்களை சந்திக்கவுள்ளார்.

அதுமட்டுமன்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோரையும் நவி பிள்ளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருகின்றார்.

யுத்தக்காலத்தில் காணாமல்போனவர்களின் உறவினர்களையும் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்திப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

தனது வடக்கு விஜயத்தை முடித்துக்கொண்டு  ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை எதிர்வரும் வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

கக்கீம் ஒவ்வொரு வெளிநாட்டு பிரதான பிரமுகரையும் சந்திக்கும் பொது மகிந்தாவுக்கு எத்தனை வயது என்று சாத்திரம் தான் கேட்கிறார் போலிருக்கு.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஹக்கீம் முதலாவது தனது பதவிக்காக சொந்த இனத்தை விற்றிருப்பார். அடுத்ததாக சிங்களவனுக்கு வால்பிடிப்பதற்காக தமிழர்களைக் காட்டிக்கொடுத்திருப்பார். இவையிரண்டையும் தவிர வேற என்னத்தைச் செய்து கிழித்திருப்பார்?

ம்.. கக்கீம் என்ன கக்கினார் என்று தெரிய வரும்தானே?!

Navipillai.jpgஇலங்கை பயணித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணணாயளர் நவநீதன்பிள்ளை தனது பணிகளை ஆரம்பித்துள்ளார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளை நேற்று (25) கொழும்பில் சந்தித்த அவர், அதன்பின்னர் ஊடகங்களுக்கும் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று தனது உத்தியோகபூர்வ பணிகளை ஆரம்பிக்கின்றார்.

இதன்படி, மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தினால் அசாதாரணமான முறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாநாயக்கவைச் சந்திக்கிறார்.

அத்துடன், தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்க, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோரையும் நவம்பிள்ளை இன்று சந்திக்கிறார்.

இலங்கை பயணத்தின் பின்னர் இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து நவநீதன்பிள்ளை அறிக்கையொன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசாங்கம் நவநீதன்பிள்ளையை இலங்கை வருமாறு விடுத்த உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே நவநீதன்பிள்ளை இலங்கைவந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamilworldtoday.com/?p=29451

தொடர்புடைய செய்தி : விமர்சனம் செய்வதற்கு இலங்கை பயணிக்கவில்லை! நவம்பிள்ளை (Audio)

  • கருத்துக்கள உறவுகள்

காத்தானிஸ்தான் கேட்டிருப்பார்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

முதல் சந்திப்பே பிழையாக இருக்கிறது.தமிழர்கள் இனப்படுகொலைக்கு உடந்தயான அரசகளுடன் சேர்ந்து அமைச்சுப் பதவிகளை அனுபவித்தவரிடம் எப்படியான விளக்கத்தைப் பெற்றிருப்பார்.முதற்கோணல் முற்றிலும் கோணல்?????????????

நீதி அரசர் சிராணி சொல்லியிருப்பார் அந்த ஒடுகாலி அரச வக்காலத்து மட்டும்தான்; அதிகாரம் ஒன்றும் இல்லாதவர் என்று. சிராணி விடையத்தில் இவர் ஏன் பதி விலக கூடாது என்று கேட்ட போது நீதிஅரசர்கள் தனக்கு கீழ் இல்லை என்று முடித்துவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த நாட்டை விட்டு ஓடி விட்டார் என ஐ.தே.க குற்றம் சாட்டுகிறது.(நவநீதம்பிள்ளையை சந்திக்காமல் விடுவதற்கு)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.