Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு கதை - 2

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறு வயதிலிருந்தே திருமாறனிற்கு போராட்டம் பற்றிய அக்கறை இருந்தது. விபரம் தெரியாவிட்டாலும் இங்கு நடக்கின்ற அனைத்து ஊர்வலங்களிலும் கலந்துகொள்வான். இப்படியான நிகழ்ச்சிகள் அவனிற்கு நண்பர்களுடன் சேர்ந்து அரட்டை அடிக்க ஒரு சந்தர்ப்பமாகவே தெரிந்தது.

காலப்போக்கில் போராட்டம் பற்றிய அறிவும் தேடலும் அதிகரித்தது. கடமைக்காக பங்குபற்றிய காலம் போய் உணர்வுடன் பங்குபற்றிய காலம் வந்தது.

திருமாறனும் நண்பர்களும் பங்குபற்றாத நிகழ்ச்சிகள், போராட்டங்கள் என்று எதுமே இல்லையெனலாம். தமிழ் பாடசாலை முதல் கோயில் வரை விடுதலைப்போராட்டம் கிளைகளாய் பரந்திருந்த காலம் அது.

எங்கும் தமிழன் எதிலும் தமிழன் என்பது அந்த காலகட்டத்திற்கு பொருந்தும். நாம் பலமாக இருந்த காலம் அது.

இந்த நிலை 2009ஆம் ஆண்டு மெதுவாக மாறத்தொடங்கியது.

2009ஆம் ஆண்டு விடுதலைப்போர் உச்சக்கட்டத்தில் இருந்த ஆரம்பகாலம்.

கல்லூரியில் தேர்வு என்றும் பார்க்காமல் பல தடவை "கட்" அடித்துவிட்டு ஊர்வலங்கள், கூட்டங்கள் என தனது நண்பர்களுடன் கலந்துகொண்டான். எப்படியும் புலிகள் விடமாட்டார்கள் என்ற பலரின் கருத்தே அவனினதும் அவனின் நண்பர்களினதும் கருத்தாக இருந்தது.

போர் உச்சக்கட்டத்தில் இருந்த வேளை ஆயுதங்களின் தேவையை பல "பணியாளர்கள்" கூட்டங்கள் வைத்து விபரித்தார்கள். எக்காரணம் கொண்டும் புலிகளை தோற்கவிடக்கூடாது என்பதில் திருமாறனும் நண்பர்களும் உறுதியாக இருந்தார்கள்.

போரில் நிலமைகள் மோசமடையத் தொடங்கின. கண்டன ஊர்வலங்களும் எல்லைமீறி சென்று பொலிசாருடன் மோதலில் முடிந்து... மீண்டும் அடுத்த கண்ட ஊர்வலம்...

பல வெளிநாட்டு-உள்நாட்டு தலைவர்களின் பேச்சு நாம் தோற்கமாட்டோம் என்பதை கூறியது.

மேலும் மேலும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க நிதி உதவி வேண்டி பல "பணியாளர்கள்" புலம்பெயர் நாடுகளில் களத்தில் குதித்தார்கள். பணம் என்ன பெரிய பணம். நமக்கு எமது போராட்டம் தான் முக்கியம் என திருமாறனும் அவனது நண்பண் ஒருவனும் நிதி கொடுக்க முன்வந்தார்கள். தங்களின் சக்திக்கு மீறிய ஒரு தொகையை வங்கியில் கடன் வாங்க கையொப்பமிட்டு கொடுத்தார்கள் (அல்லது கையொப்பம் இல்லாமலும் எடுக்கப்பட்டது).

"ஒன்றும் பிரச்சனை இல்லை. நாங்கள் மாத மாதம் உங்களின் பணத்தை கட்டி போடுவம். நீங்கள் எடுத்து தந்தா மட்டும் போதும" என்று சிறுவயது முதலே பார்த்து வளர்ந்த ஒரு "பொறுப்பாளரின்" மீதுள்ள நம்பிக்கை திருமாறனையும் அவனது நண்பனையும் இதற்கு சம்மதிக்க வைத்தது.

மே மாதம் 2009ஆம் ஆண்டோடு கள நிலையும் மாற்றமடைந்து புலம்பெயர்ந்த நாடுகளின் தமிழர்களின் நிலையும் மாற்றமடைய தொடங்கியது.

எமது உச்சிக்கிளைகள் முறிக்கப்பட்டு செய்வதறியாது நின்ற தருணம் அது. பல புதிய கிளைகள் முளைத்தன. போராட்டம் என்ற பெயரில் ஒவ்வொரு திசையில் ஒருவர். யார் நல்லவர் யார் கெட்டவர் என்று சிந்திக்க நேரமில்லை. அனைத்து போராட்டங்களிலும் பங்கு கொண்டான் திருமாறன் தனது நண்பணுடன். ஆம் நண்பண் மட்டும் தான். நண்பர்கள் அல்ல. மே மாதத்திற்கு பின் நண்பர்கள் வட்டம் குறைந்து போனது.

எம் தோல்விக்கு பலரால் பல காரணங்கள் கூறப்பட்டாலும் கொண்ட கொள்கையில் மாற்றம் இல்லை என்பதே திருமாறனினதும் அவனது நண்பனினதும் நிலை.

ஒரு நாள் வீட்டிற்கு வங்கிக்கடனுக்கு பணம் கட்டாமல் விட்டதற்கான கடிதம் வந்திருந்தது. ஏதோ தவறுதலாக கட்டாமல் விட்டிருப்பார்கள் என்று நினைத்து அதை பொருட்படுத்தாமல் விட்டான் திருமாறன்.

அடுத்த மாதமும் அதே கடிதம் வந்தது.

"எனக்கு கடிதம் வந்திருக்கு. உனக்கு ஏதாவது வந்ததோ" என்றான் நண்பனிடம் தொலைபேசியில். "ஓம் எனக்கும் வந்திருக்கு என்ன மாதரி என்டு தெரியேலை" என்றான் நண்பன்.

இது சம்மந்தப்பட்ட "பணியாளரிடம்" திருமாறன் தொடர்புகொண்டு கேட்டான். "இந்த மாதம் கட்டுங்கோ அடுத்த மாதம் நாங்கள் கட்டுறம்" என்றார். சரி என்று ஒரு தடவை தானே என்று கட்டினான். அவனது சம்பளத்தில் 30வீதம் இந்த மாதாந்த கடன் செலுத்த தேவைப்பட்டது.

அடுத்த மாதமும் அதே பிரச்சனை. மீண்டும் சம்மந்தப்பட்ட பணியாளரிற்கு தொலைபேசி எடுத்து விசாரித்தான். "இப்ப கொஞ்சம் கஸ்டமா இருக்கு. வங்கியில வந்த மாதாந்த பங்களிப்புகளும் தடைசெய்யப்பட்டுவிட்டது. அதனால எங்களால கட்டேலாமல் இருக்கு" என்றார்.

துரோகிகள் என்ற பட்டம் தாராளமாக வழங்கப்பட்டுக்கொண்டிருந்த மாதங்கள் அவை. யாரை நம்புவது யாரை நம்பாமல் இருப்பது என்ற உளவியல் போரில் புலம்பெயர் தமிழர்கள் மாட்டிக்கொண்ட காலம்.

வாரஇறுதி நாட்களில் திருமாறனும் அவனது நண்பணும் தங்களுடைய பழைய நண்பர்களுடன் சந்திப்பது வழக்கம். சினிமா, விளையாட்டு, அரசியல் என்று இப்படி பல விடயங்களை அலசுவார்கள். சில மாதங்களாக இறுதிப்போர் பற்றிய கலந்துரையாடல்களே நடந்தன.

"இந்தா வாறாங்கள் காசு கொடுத்த லூசங்கள்", "உங்கட காசில அந்த "பணியாளர்" கார் வாங்கீட்டாராம்", "இன்னொருத்தர் சாப்பாட்டுக்கடை வாங்கீட்டாராம்", "இந்தியாவில வீடு வாங்கீட்டாராம்", "இன்னும் கேட்டு வருவாங்கள் நீங்கள் குடுங்கோ" ........

திருமாறனுடனும் அவனது நண்பனுடனும் ஊர்வலங்களில் புலிக்கொடி பிடித்த கைகள், தலைவரை புகழ்ந்த வாய்கள் இன்று இப்படியாகிவிட்டன. இதற்கு பதில் சொல்ல முடியாமல் இருவரும் கூனிக்குறிகி அவமானத்துடன் வெளியேறியதே அதிகம்.

காலப்போக்கில் அந்த "நண்பர்களின்" பேச்சு புலிகளையும் வஞ்சிக்கத் தொடங்கியது.

 

"போராட்டத்திற்கு நிதி கொடுத்தவன் எல்லாம் முட்டாள் என்றால் அதில் நானே முதல் முட்டாளாக இருந்துவிட்டுபோகிறேன்" என்று திருமாறன் தனது மனதிற்குள் நினைத்துவிட்டு அந்த "நண்பர்கள்" வட்டாரத்தை முற்றுமுழுதாக தவிர்க்கத்தொடங்கினான்.

வங்கியிலிருந்து கடிதங்கள் வந்து குவியத்தொடங்கின. நிதிப்பொறுப்பாளரின் தொடர்பும் துண்டிக்கப்பட்டது. பலர் பல விதமான கதைகளை சொன்னார்கள். நின்று ஆராய்வதற்கு நேரம் இல்லை. இந்த கடன் சுமையை இன்னும் 5 வருடங்களிற்கு தான் சுமக்கு வேண்டும் என்பதை திருமாறன் உணரத்தொடங்கினான். ஆனால் எந்தத் தருணத்திலும் திருமாறனும் அவனது நண்பனும் புலிகளின் பெயரை கலங்கப்படுத்தக்கூடாது என்பதில் உறுதியாக இருநந்தார்கள்.

"எங்களிட்ட காசு இல்லாமல் இருக்கலாம். ஆனா காசு இருக்கிறவங்கள விட நாங்கள் சந்தோசம சுத்திறம்" என்று திருமாறன் அடிக்கடி தனது நண்பனிடம் சொல்வான்.

ஒரு நாள் ஒரு பிச்சைக்காரனை தூரத்தில் பார்த்துவிட்டு "தம்பி நீ கையில தட்டோட நிக்கிறாய். நான் அது இல்லாமல் நிக்கிறன். இது தான் எங்க ரெண்டு பேருக்கும் உள்ள வித்தியாசம். மற்றபடி நானும் உன்னை மாதரி ஒரு பிச்சைக்காரன் தான்" என்று மனதிற்குள் நினைத்ததை தனது நண்பனிடம் சொல்லி சிரிப்பான்.

எமது போராட்டம், அதன் முடிவு பற்றி பல வதந்திகள் வந்துகொண்டே இருந்தன. ஒரு கட்டத்தில் திருமாறனும் அவனது நண்பனும் மனம்முறிந்து எந்த ஒரு நிகழ்ச்சியிலும், போராட்டத்திலும் கலந்துகொள்வதை தவிர்த்துவிட்டார்கள். ஆனால் தங்களால் முடிந்ததை பின் நின்று செய்யாமல் விட்டதுமில்லை.

இன்று கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் முடிந்தவிட்ட நிலையில் திருமாறன் கடனிலிருந்து மீளும் மாதங்களை எண்ணிக்கொண்டிருக்கின்றான். பழைய உணர்வுடன் செயல்பட தொடங்கியுள்ளான். போராட்டமும் வேறு திசையில் பயணிக்கத்தொடங்கிவிட்டது. தோல்வியை கண்டு ஓடிய "நண்பர்கள்" மீண்டும் நாம் வெற்றிப்பாதையில் செல்வதை பார்த்து எம்முடன் இணைவதை புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றான்.

முள்ளிவாய்க்காலினால் கிடைத்த அறிவும் அனுபவமும் விலைமதிப்பற்றவை. எமது போராட்டம் அடுத்த சந்திக்கானதாக இருக்க வேண்டுமே தவிர, அது அடுத்த சந்ததிக்கு போககூடாது என்ற தலைவரின் சிந்தனைக்கேற்ப திருமாறனையும் அவனது நண்பனை போன்று பொருளாதாரத்தால் அளிந்துபோன பல பீனிக்ஸ் பறவைகளையும் இணைத்து போராட்டம் தொடர்கிறது. எம்மை தூற்றிய வாய்கள் நிச்சயம் ஒரு நாள் புகழ் பாடும்.

Edited by செங்கொடி

  • கருத்துக்கள உறவுகள்
வணக்கம் செங்கொடி இதை நீங்களா எழுதினீர்கள்? இந்த கதை மூலம் என்ன சொல்ல வாறீங்கள் :unsure:
 
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி எழுதிய இதே போன்ற கதை ஒன்றை ஏற்கனவே  வாசித்தது . இருவரும் ஒரே ஆட்களைப் பற்றி எழுதியுள்ளார்கள் என எண்ணுகிறேன். அவரும் சுவிசில் உள்ளவர்கள் என்றுதான் எழுதியிருந்தார்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் முடிந்தவிட்ட நிலையில் திருமாறன் கடனிலிருந்து மீளும் மாதங்களை எண்ணிக்கொண்டிருக்கின்றான். பழைய உணர்வுடன் செயல்பட தொடங்கியுள்ளான். போராட்டமும் வேறு திசையில் பயணிக்கத்தொடங்கிவிட்டது. தோல்வியை கண்டு ஓடிய "நண்பர்கள்" மீண்டும் நாம் வெற்றிப்பாதையில் செல்வதை பார்த்து எம்முடன் இணைவதை புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருக்கின்றான்.

முள்ளிவாய்க்காலினால் கிடைத்த அறிவும் அனுபவமும் விலைமதிப்பற்றவை. எமது போராட்டம் அடுத்த சந்திக்கானதாக இருக்க வேண்டுமே தவிர, அது அடுத்த சந்ததிக்கு போககூடாது என்ற தலைவரின் சிந்தனைக்கேற்ப திருமாறனையும் அவனது நண்பனை போன்று பொருளாதாரத்தால் அளிந்துபோன பல பீனிக்ஸ் பறவைகளையும் இணைத்து போராட்டம் தொடர்கிறது. எம்மை தூற்றிய வாய்கள் நிச்சயம் ஒரு நாள் புகழ் பாடும்.

 

செங்கொடி காலம் இப்படித்தான் வெல்லும் திசையிலேயே நகர்ந்து பழகிய மனிதர்களைக் கொண்டு செல்கிறது. வீழ்ந்தால் பழிக்கும் எழுந்தால் இப்படித்தான் பின்னே வரும். வாழ்த்துக்கள் யதார்த்தத்தை கண்முன் நிறுத்தியமைக்கு.

 

தமிழர்கள் தமது விடுதலைக்காய் தம் இனத்தில் மட்டும்தான் தங்கி இருந்தார்கள்.சிறிய இனத்தில் சிலர் சுமக்க முடியா சுமையை சுமந்தார்கள்.அதில் இவர்களும் அடங்குவார்கள்.
 
பகிர்விற்கு நன்றி செங்கொடி அண்ணை 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

வணக்கம் செங்கொடி இதை நீங்களா எழுதினீர்கள்? இந்த கதை மூலம் என்ன சொல்ல வாறீங்கள்  :unsure:

 

 

வணக்கம் ரதி அக்கா

 

ஆம் இதை நான் தான் எழுதினேன். நான் சொலல வந்ததை கதையில் சொல்லிவிட்டேன்  :rolleyes:

 

 

சாத்திரி எழுதிய இதே போன்ற கதை ஒன்றை ஏற்கனவே  வாசித்தது . இருவரும் ஒரே ஆட்களைப் பற்றி எழுதியுள்ளார்கள் என எண்ணுகிறேன். அவரும் சுவிசில் உள்ளவர்கள் என்றுதான் எழுதியிருந்தார்.

ஆம் சாத்திரி அண்ணாவின் கதையும் நான் வாசித்தேன். அது வேறு ஒருவரை பற்றியது. இங்கு பலரின் கதை இப்படி இருப்பது ஒன்றும் வியக்கத்தக்கதல்ல. 

 

செங்கொடி காலம் இப்படித்தான் வெல்லும் திசையிலேயே நகர்ந்து பழகிய மனிதர்களைக் கொண்டு செல்கிறது. வீழ்ந்தால் பழிக்கும் எழுந்தால் இப்படித்தான் பின்னே வரும். வாழ்த்துக்கள் யதார்த்தத்தை கண்முன் நிறுத்தியமைக்கு.
 

மிக்க நன்றி அக்கா. உங்களை போன்றவாகளின் கருத்துகள் உற்சாகமளிக்கின்றன. 

 

 

 

தமிழர்கள் தமது விடுதலைக்காய் தம் இனத்தில் மட்டும்தான் தங்கி இருந்தார்கள்.சிறிய இனத்தில் சிலர் சுமக்க முடியா சுமையை சுமந்தார்கள்.அதில் இவர்களும் அடங்குவார்கள்.
 
பகிர்விற்கு நன்றி செங்கொடி அண்ணை 

 

நன்றி கரன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"டேய் என்ன செய்யிற?" 

 

"ஒன்டுமில்ல சும்மா சோபாவில படுத்துக்கொண்டு ரிவி பாக்கிறன்"

 

"ஏன் மனிசியோட வெளியில போகலாம் தானே"

 

"வெளியில போனா சிலவு அதால பேசாமல் வீட்டுக்குள்ள இருந்தா ஒரு பிரச்சனையும் இல்லை"

 

"சனிக்கிழமை என்ன பண்ணுறாய்"

 

"வேறயென்ன வழக்கம் போல தான். சும்மா வீட்ட தான் நிப்பன்."

 

"அப்ப இங்கால வாவன்"

 

"ஏன் ஏதாவது பண்ணுறீங்களோ?"

 

"நீ வா சொல்லுறன். இஞ்ச தங்கீட்டு போற மாதிரி வா"

 

"வாறது பிரச்சனை இல்லை. தங்கிறது பற்றி மனிசயட்ட கேட்டிட்டு சொல்லுறன். உங்கள மாதிரி ஆக்களோட சேர்ந்து தான் நான் கெட்டுப்போய்ட்டனாம்"

 

" ******* "

 

"ஓகே ஒகே நான் வெள்ளிக்கிழமை சொல்லுறன் என்ன மாதிரி என்டு."

 

--------------------------

 

திருமாறனிற்கு திருமணமாகிவிட்டது. அவனிற்கு இருந்த ஒரு நண்பனையும் விட்டு தூரத்தில் மனைவியுடன் வாழ்ந்தாலும் மாதத்தில் ஒரு முறை சந்தித்துக்கொள்வார்கள். 

 

ஏழு கழுதை வயசாகியும் கல்யாணம் பண்ணாமல்  இருக்கிறது அவ்வவு சுலபமில்லை என்று காலம் காட்டீட்டுது. போற வாற இடமெல்லாம் "டேய் நீங்கள் எப்ப தான்டா கல்யாணம் பண்ண போறீங்கள். இஞ்ச பார் எனக்கு கல்யாணமாகி ரெண்டு பிள்ளை வேற இருக்கு. போற போக்கை பாத்தா என்ர பிள்ளை வளர்ந்து கல்யாணம் பண்ணீடும் போல கிடக்கு."

 

இது அடிக்கடி கேட்டு புளிச்சுப்போன வசனம் தான். 

 

"மச்சி இருக்கிறவனுக்கு ஒரு வீடு. இல்லாதவனுக்கு உலகமே வீடு விளங்குதே?"  ஏதோ ஒரு படத்தில வந்த வசனத்தை பதிலா சொல்லீட்டு நிப்பம். பலபேருக்கு இதின்ர அர்த்தம் உடனே விளங்கிறதில்லை. 

 

இதை விட கேவலமான கேள்வியளும் சமயத்தில வரும். 

 

"இந்தா வாறாங்கள் பார் ****காயள், நீங்க உண்மையாவே அது தானோடா?"

 

"ஏன் அப்பிடி இருந்தா என்ன தப்பு என்டு கேட்கிறன். உங்கள மாதிரி மனிசின்ர தொல்லை தாங்கேலாமல் வேலை முடிஞ்சு பியர் ரின்னோட வாற ஆக்களுக்கு எங்களை மாதிரி தனிக்கட்டையளும் இல்லாட்டி யாரோட பொழுது போகும்? விரும்பின நேரம் வெளியில போகலாம் வரலாம். இதெல்லாம் உங்களால முடியுமோ?"

 

இதில ஒருத்தருக்குமே தெரியாத விசயம் திருமாறனிற்கு காதலி இருந்தது. பல வருசமா இந்த லவ் களவா ஓடிக்கொண்டிருக்கு. அது யார் என்டு கண்டுபிடிக்க வெளிக்கிட்டு நிறையப்போர் தோத்துப்போயிருக்கினம். 

 

திருமாறனுக்கு லவ் இருக்கிறது அவன்ர நண்பனுக்கு தெரியும். ஆனா அது யார் என்டு தெரியாது. 

 

"உவன் கல்யாணம் பற்றி கதச்சா பிறகு பாப்பம் என்டு சொல்லுறான். எங்கயாவது லவ் இருக்கோ?" என்டு திருமாறனின்ர அப்பா அவன்ர நண்பனிட்ட வருடாவருடம் தவறாமல் கேட்டு வைப்பார்.

 

"இல்லை அப்பிடி ஒன்டும் இருக்கிற மாதிரி தெரியேலை" என்டு அவன் திருமாறன்ர அப்பாட்டையும் திருமாறன் அவன்ர அம்மாட்டையும் மாறி மாறி பொய் சொல்லுவம். 

 

இப்பிடி மாறி மாறி ஏமாத்திறது பல வருசங்களுக்கு முன்னர் தொடங்கினது. இரவு 11மணிக்கு ஓடுற தமிழ் படங்களை பார்க்க போறதுக்கு சொல்லுற பொய்யள் கொஞ்சநஞ்சமில்ல. 

 

"ஏங்கயடா வெளிக்கிட்ட?" 

 

"புட்போல் விளையாடுற ஒரு பெடியன்ர அண்ணைக்கு கல்யாணம். சோடிக்க வரச்சொன்னவன். நாங்க ரெண்டு பேரும் தான் போறம்"என்டு தன்ர நண்பனையும் இழுத்துவிடுவான். 

 

இதே கதை மற்றவன்ர வீட்டையும் ஓடும். கடைசி வரைக்கும் ரெண்டு வீட்டிலையும் கண்டுபிடிக்கேல. 

 

இந்த "கல்யாண சோடிப்போட" "படிக்கிற பொடியன்ர பிறந்தநாள்" "வேலையிடத்தால சாப்பிட போறம்" போன்ற அயிட்டங்களும் அடிக்கடி வாயில வந்துபோகும்.

 

படத்துக்கு என்டு சொன்ன பொய் கடைசியா டிஸ்கோ போறதுக்கும் பயன்பட்டிச்சு. சொன்னா நம்ப மாட்டீங்கள். எங்களுக்கு டிஸ்கோவை காட்டினதே ஊரில இருந்து வந்து இங்க காம்பில இருந்த ஒரு பொடியன் தான். அவ்வளாத்துக்கு நாங்க பட்டிக்காடா இருந்திருக்கிறம். 

 

"மச்சி இன்டைக்கு எத்தின சரக்கை புடிச்சனி?" 

 

"ஒன்டா ரண்டா நினைவில வச்சிருக்கிறதுக்கு." கடுப்பில ஒரு குரல் கேட்கும்.

 

"அது ஒன்டுமில்லையடா உவளுவளுக்கு ஒன்டில் வெள்ளைக்காரனா இருக்க வேணும். இல்லாட்டி ஆப்பிரிக்கனா இருக்க வேணும். எங்கட கலர் நடுவில இருக்கிறதால தான் பிரச்சனையே. ***** நீ எல்லாம் ஒரு கடவுளா? அடுத்த பிறவியில என்னை வெள்ளைக்காரனா இல்லை ஆப்பிரிக்கனா பிறக்க வச்சிடு" என்டு இடையில ஒரு குரல் கேட்கும். 

 

 

இந்த கூட்டத்தில கல்யாணம் ஆக ஆக ஒவ்வொருத்தரா காணமல் போய் கடசியில 2009ல  மிஞ்சினது திருமாறனும் அவன்ர நண்பனும் தான். 

 

------------------------

 

திருமாறன்ர ஆளின்ர வீட்டயும் இப்ப கல்யாணம் பண்ணச்சொல்லி ஒரே தொல்லை. இனி வேறை வழியில்ல என்டு லவ் மேட்டரை ரெண்டு பேரும் வீட்ட சொல்லியாச்சு. பெரிசா ஒரு பிரச்சனையும் இல்ல. எங்கட விருப்பம் தான் அவையின்ர விருப்பம் என்டு என்னை தூக்கிகொண்டு போய் கிணத்தில போட்டிச்சினம். 

 

கல்யாண வேலை தொடங்க முதலே திருமாறன் சுவிஸ் புத்தகத்துக்கு எழுதி போட்டிருந்தவன். அதுக்கு இப்ப இன்ரர்வியுவுக்கு கூப்பிட்டிருக்கினம். பெரிசா எந்த தடங்கலும் இருக்காது. அதுக்கு பிறகு இந்த சிறீலங்கன் பாஸ்போட்டை கொண்டு போய் ஜ.நா.க்கு முன்னால நடக்கிற ஊர்வலத்தில எரிக்கிற என்டு மனசுக்குள்ள சபதம் வேற. 

 

"டேய் என்ன மாதிரி. சுவிஸ்காரன் ஆகிட்டியோ?"

 

" ***** கதை கதைக்காத. இந்த பொலிஸ் நாயள் உந்த கடன் பிரச்சனை கேசுக்கு எங்களை கூப்பிட்டு விசாரிச்சதென்டும் கேஸ் நடந்துகொண்டிருக்கென்டும் அவளுக்கு கடிதம் போட்டிருக்குதுவள். அவள் இப்ப கடனை கட்டீட்டு வா உனக்கு பாஸ்போட் தாறம் என்டுறாள். நானும் கடன் இருந்தா பாஸ்போட் தரகூடாது என்டு சட்டம் இருக்கோ என்டு குறுக்குகேள்வி கேட்டன். அவள் அதுக்கு கடன் இருந்தா தரலாம். ஆனா கேஸ் இருந்தா தரமுடியாது என்டாள். போங்கடி நீங்களும் உங்கட பாஸ்போட்டும் என்டு வந்திட்டன்."

 

"கடன் முடிஞ்ச பிறகு தான் கல்யாணம் என்டா நீ பென்சன் எடுத்தபிறகு தான் பண்ண வேணும். பேசாமல் பண்ணு. இதில இன்னுமொரு நல்லதும் இருக்கு. உன்ர மனிசிக்கு சுவிஸ் பாஸ்போட் என்டதால உனக்கும் 3 வருசத்தால தருவாங்கள். அதுக்கு நீ இங்க இருந்தா கிடைக்கிறது கஸ்ரம். பேசாமல் வேற இடத்துக்போய்டு." 

 

-----------

 

"நான் நாளைக்கு வாறன். இரவுக்கு ஏதாவது சமைச்யுங்கோ" என்டு ஒரு எஸ்.எம்.எஸ். போட்டுவிட்டன். 

 

"பண்டிக்கால் ஒன்டு கிறில்ல போட்டுக்கொண்டு வாறன்" என்டு அங்க இருந்து பதில். 

 

நானும் அடுத்த நாள் போய் போன் பண்ணினன்.

 

"எங்க நிக்கிற? நான் வந்திட்டன்."

 

"இன்னும் வேலை முடியேலை. தீபன்ர ரூமில போய நில். அவன் இரவுக்கு றால் சமைக்கிறான்."

 

தீபன் எங்களுக்குள்ளை இடையில வந்த ஆள். ஊரில புலனாய்வுத்துறையில இயக்கத்துக்கு வேலை செய்த என்டு சொன்னவன். சில நேரங்களில அவன் சொல்லுற கதையளை கேட்க உண்மையாவே புலனாய்வுத்துறையில இருநதவன் போல இருக்கும். எங்களுக்கு தான் ஊர் எப்பிடி இருக்கும் என்டே தெரியாதே. அதால அவன் சொல்லுறதை ஆ என்டு கேட்டுக்கொண்டிருப்பம். 

 

அதே மாதிரி நாங்களும் அவனை ஏமாத்துவம். 

 

ஊரில இருந்து வாறவைக்கு இஞ்ச இருக்கிற பொடியள் அந்த மாதிரி வாழ்க்கை வாழுறாங்கள் என்டு ஒரு எண்ணம் இருக்கும். அப்ப நாங்களும் அதுக்கு ஏற்ற மாதிரி கதையளை அள்ளிவிடுவம்.

 

"இப்பிடி தான்ரா ஒருக்கா ரெயினுக்கு நிக்கேக்க ஒரு வெள்ளைக்காரி பாத்து சிரிச்சவள். நானும் சிரிச்சன். கிட்ட வந்து ஒரு கதையுமில்லை....."

 

"பிறகென்னடா நடந்தது?"

 

"பிறகென்ன ரெயில்வே ஸ்ரேசன் ரோய்லெற்றுக்க கூட்டிக்கொண்டு போய்...."

 

அவன் உடனே நம்பமாட்டான். ரெண்டு பேரும் சிரிக்காம முகத்தை வெறப்பா வச்சிருக்க்கிறதை பாத்திட்டு  ஆள் நம்பத்தொடங்கீடும். 

 

"இப்பிடிதான்டா ஒருக்கா..." என்டு இன்னுமொரு கதை தொடங்குவம். இப்பிடியே கற்பனையில நாங்கள் மிதப்பம். அப்பிடி ஏமாத்திறது எங்களுக்கும் ஒரு சுகமா இருக்கும்.  

 

இப்ப ஒரு 6 மாசமா இந்த கதையள் பொய் என்டு கண்டுபிச்சிட்டாராம்.

 

-------------

 

கதவை திறந்து உள்ள போனவுடனயே "வாடா என்ன குடிக்கிற. இந்தா வைன் குடியன்" என்டு கிளாசை நீட்டினான். 

 

அந்த ரூமில சமைக்கிற இடமும் ரோய்லெற்றும் ஒன்டா தான் இருக்கும். ஒரு சீலையாலை ரெண்டையும் பிரிச்சு பிரிச்சு வச்சிருக்கு. சில நேரம் சமச்சு கொண்டிருக்கேக்கயே மற்ற வேலையும் நடக்கும். 

 

கிளாசை வாயில வைக்க கதவு திறந்து உள்ள வந்தவன் "வந்த உடனே தொடங்கீட்டீங்களாடா?". 

 

"என்ன ஏதோ முக்கியமான விசயம் சொல்லுறன் என்டனி. கல்யாணம் பண்ண போறியே?"

 

"இல்லை மச்சி எனக்கு இந்த மாசத்தோட கடன் முடிஞ்சிது...."

 

"இன்டைக்கு ரெண்டு போத்தில கவுக்கிறமடா"

 

Edited by செங்கொடி

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்

 

 

Edited by விசுகு

தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

"இல்லை மச்சி எனக்கு இந்த மாசத்தோட கடன் முடிஞ்சிது...."

 

"இன்டைக்கு ரெண்டு போத்தில கவுக்கிறமடா"

 

செங்கொடி, அனுபவத்தை அப்படியே கதையாக்கியுள்ளீர்கள். அனுபவம் கசப்பாயினும் உங்கள் நண்பர்கள் அனைவரும் கடனிலிருந்து மீண்டு தங்களது வாழ்வை ஒருங்கமைக்க வேண்டும்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.