Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எத்தனை குறும்புகள் செய்தாலும் வாத்தியார் கருமமே கண்ணாக இருக்கும் அழகே தனி அழகு.

வாத்தியார், எழுத்துக்கள் உச்சரிக்கப்படும்போது அவைகளின் ஒலி அளவுகள் இத்தனை மாத்திரை என்று கணித்துக் கொள்வதற்கு, கண்ணிமைக்கும் அல்லது கைநொடிக்கும் நேரங்களைச் சீராகக் கையாள்வதற்கு வழிமுறைகள் இருக்கின்றதா? அதாவது சங்கீதத்தில் சொற்களின் ஒலியளவைக் கையாள்வதற்கு ஸ்வரங்கள் துணையிருப்பது போல. அப்படி ஒரு துணை இருந்திருக்குமேயானால் சென்னைத்தமிழ், மதுரைத்தமிழ், இந்தியத்தமிழ், இலங்கைத்தமிழ் என்று ஒரு வேற்றுமை ஏற்பட்டிருக்காதோ?.

  • Replies 224
  • Views 20.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 மகரக்குறுக்கம்

சில நேரங்களில் ‘ம்’ என்ற எழுத்து தனது இயல்பான அரை மாத்திரை அளவிலிருந்து குறைந்து

கால் மாத்திரையாக ஒலிக்கும்.

‘ணன முன்னும் வஃகான் மிசையும் ம குறுகும்’ என்கிறது நன்னூல்.

அதாவது, கீழ்க்காணும் சூழ்நிலைகளில் ‘ம’கர எழுத்து குறுகி ஒலிக்கும்:

 ண், ன் ஆகிய எழுத்துகளுக்கு அடுத்து ‘ம்’ வரவேண்டும்

முதல் சொல்லின் நிறைவில் ‘ம்’ இருந்து, அடுத்த சொல்லின் தொடக்கத்தில் ‘வ’ எழுத்து இருக்கவேண்டும்

இதில் முதல் வகைக்கு உதாரணம் ‘மருண்ம்’ ‘போன்ம்’.

உங்கள் குழப்பத்தில் நியாயம் உண்டு. மருண்ம், போன்ம் என்றெல்லாம் நாம்  சாதாரணமாக எழுதுவதில்லை, பேசுவதில்லை அவை செய்யுளுக்கே உரிய சொற்கள்.

மருளும் என்ற சொல்லை செய்யுள்களில் மருண்ம் எனவும்

போலும் என்ற சொல்லை செய்யுள்களில் போன்ம் எனவும் எழுதுவார்கள்

தரும் வளவன் என்று அல்லது பெறும் வணிகண் என்று சத்தமாகச் சொல்லிப் பாருங்கள்.

முதல் சொல்லின் நிறைவில் உள்ள ‘ம்’ என்ற எழுத்து ஒலிப்பதே தெரியாது

அதுதான் கால் மாத்திரை மகரக்குறுக்கம்.

முதல் சொல்லின் நிறைவில் ‘ம்’ இருந்து, அடுத்த சொல்லின் தொடக்கத்தில் ‘வ’ என்ற எழுத்து இருந்தால் மகரம் குறுகி ஒலிக்கும்.

ஆய்தக் குறுக்கம்

‘ம்’போலவே, ‘ஃ’ என்ற ஆய்த எழுத்தும் அரை மாத்திரை கொண்டதுதான்.

சில நேரங்களில் அது இன்னும் குறுகி கால் மாத்திரையாக ஒலிக்கும்.

லள ஈற்று இயைபினாம் ஆய்தம் அஃகும்

அதாவது

ஒரு குறில் எழுத்தின் அடுத்து லகர மெய்யோ ளகர மெய்யோ வந்து 

அடுத்த சொல்லின் தொடக்கத்தில் தகரக் குடும்ப எழுத்து வந்து 

அவை புணரும்போது மெய் மறைந்து அங்கே ஆய்தம் தோன்றும் 

அது தன் அரை மாத்திரையிலிருந்து குறுகி ஒலிக்கும்.

உயர்திணை, அஃறிணை என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ‘உயர்திணை’ புரிகிறது, உயர்ந்த திணை.  ‘அஃறிணை’? அஃறிணை என்பது அல் + திணை என்ற இரு சொற்கள் சேர்ந்து உருவானது.

அதாவது உயர்வு அல்லாத திணை.

இங்கே ‘அல்’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம், தனியே ஒரு குறில் (அ) வருகிறது, அடுத்து லகர மெய் (ல்) வருகிறது.
அடுத்து, ‘திணை’ என்ற சொல், இதன் தொடக்கத்தில், தகரக் குடும்பத்தைச் சேர்ந்த ‘தி’ என்ற எழுத்து வருகிறது.

 அல் + திணை சேரும்போது, லகர மெய் (ல்) மறைந்து, ஆய்த எழுத்து (ஃ) தோன்றும்.

இப்படிதான் அது ‘அஃறிணை’ என்று மாறுகிறது.

‘ஃ’ புரிகின்றது ‘றி’ எப்படி வந்தது என்று யோசிக்க வேண்டாம்.  புணர்ச்சி விதிகளைப்பற்றி இதே தொடரில் பின்னர் விரிவாகப்பார்க்கவிருக்கின்றோம்.
 
தற்சமயம்   ஆய்த எழுத்தைமட்டும் கவனியுங்கள். அது அரை மாத்திரை அளவில் ஒலிக்காமல் கொஞ்சம் குறுகி ஒலிக்கின்றது. அதைத்தான் ஆய்தக் குறுக்கம் என்கின்றோம்.

இதேபோல் இன்னும் சில உதாரணங்கள் சொல்லலாம், ஆனால் அவையெல்லாம் நாம் அன்றாடம் பயன்படுத்துகிற சொற்களாக இருக்காது, ஆகவே, இப்போது இந்த விளக்கம் போதும்.

மேலே உள்ள சூத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சில இடங்களைத்தவிர,

மற்ற இடங்களிலெல்லாம் ஆய்த எழுத்து தனக்குரிய அரை மாத்திரையில்

முழுமையாக ஒலிக்கும்.

ஆகவே அதை ‘முற்றாய்தம்’ என்று அழைப்பார்கள்.

அதற்கு எதிர்ப்பதம் குறுகி ஒலிக்கும் ‘ஆய்தக் குறுக்கம்’.

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் முதலாம் தவணைப்பரீட்சை இன்னும் எத்தனை வகுப்புகளுக்குப்பின்னால வரும்? மண்டைக்குள்ள ஏறமாட்டன் என்று அடம்பிடிக்குது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் முதலாம் தவணைப்பரீட்சை இன்னும் எத்தனை வகுப்புகளுக்குப்பின்னால வரும்? மண்டைக்குள்ள ஏறமாட்டன் என்று அடம்பிடிக்குது

படிக்கும்போது மண்டை வெடிக்கின்ற அளவிற்கெல்லாம் படிக்கக்கூடாது

சிறிது ஓய்வு சிறிது விளையாட்டு சிறிது படிப்பென இருக்கவேண்டும். :D

மூளையை  இறுக்காமல் இலகுவாக

வைத்திருந்தால் விளையாடி விளையாடிப் படிக்கலாம்

பரீட்சைக்கு நேரமிருக்கின்றது.

வகுப்பிற்கு வந்தவர்களுக்கு நன்றிகள்

ஊக்கம் தருபவர்களுக்கும் நன்றிகள்  :)  

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே வாத்தியார் விளையாடிக் கொண்டு படிக்கிறது?

அங்கால பஞ்ச் நீங்கள் கரும்பலகையில் எழுதும் நேரம் திரும்பி பின்னால இருக்கிற என்னையும் சுமேயையும் முறைச்சு முறைச்சுப்பார்க்கிறார். பார்க்கவே பயமா இருக்கு...... இசை கடதாசி அம்பு விட்டுட்டு அதைக்காட்டி ஏதோ அபிநயம் பிடிச்சு சுமேக்கு எரிச்சலைக்கிளப்பி விடுறார் இதையும் தாண்டி படிப்பம் என்றால் தமிழ்சிறீ இலையான் அடிக்கிறன் என்று சளார்  சளார் என்று எனக்கு அறைஞ்சுபோட்டு நல்ல பிள்ளை மாதிரி நிற்கிறார். எனக்கு அழுகைதான் வருது. :( படிக்க வருதில்லை

அக்கா உது வேலைக்காவது வெளிக்கிடுங்கோ பேசாமல் மதிலாலை குதிச்சு போய் ஆச்சி வழவுக்கை சேலன் மாங்காய் எறிஞ்சு விழுத்தி லைட்போஸ்ற்றில குத்தி சாப்பிடுவம்... :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அக்கா உது வேலைக்காவது வெளிக்கிடுங்கோ பேசாமல் மதிலாலை குதிச்சு போய் ஆச்சி வழவுக்கை சேலன் மாங்காய் எறிஞ்சு விழுத்தி லைட்போஸ்ற்றில குத்தி சாப்பிடுவம்... :D

அப்படியே இரண்டு மாங்காய்களை நாளை வகுப்பிற்கும்

எடுத்து வாருங்கள். கொஞ்சம் உப்பும் மிளகாய்த்தூளும்

நான் கொண்டு வருகின்றேன் :D  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

படிக்கும்போது மண்டை வெடிக்கின்ற அளவிற்கெல்லாம் படிக்கக்கூடாது

சிறிது ஓய்வு சிறிது விளையாட்டு சிறிது படிப்பென இருக்கவேண்டும். :D

மூளையை  இறுக்காமல் இலகுவாக

வைத்திருந்தால் விளையாடி விளையாடிப் படிக்கலாம்

பரீட்சைக்கு நேரமிருக்கின்றது.

வகுப்பிற்கு வந்தவர்களுக்கு நன்றிகள்

ஊக்கம் தருபவர்களுக்கும் நன்றிகள்  :)  

வாத்தியார்.. பொம்பிளைப்பிள்ளையலும் ஆட்டத்துக்கு வந்தால்தான் நான் விளாட வருவன்..

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே இரண்டு மாங்காய்களை நாளை வகுப்பிற்கும்

எடுத்து வாருங்கள். கொஞ்சம் உப்பும் மிளகாய்த்தூளும்

நான் கொண்டு வருகின்றேன் :D  :D  :lol:

சரிவாத்தியார்..மேற்படி பரீட்சையில் பாத்துகவனியோங்கோ வாத்தியார்.... அடுத்தமுறை பெருசாய் வாத்தியாரை நான் கவனிக்கிறன்...விநாசியற்ற வளவுக்கை நிக்கிற பிலாவில உச்சீல ஒரு பத்துக்கிலோ தேறும் பழம்..கயிறுகட்டி இறக்கி நோப்படாமல் அப்பிடியே உங்கட வீட்டு தாழ்வாரத்துக்க போட்டுட்டு போறன்..அக்காவிட்ட சொல்லுங்கோ அடைக்கோழி ஏதும் தேவை எண்டால்... ஈரச்சாக்கு போட்டாவது கொண்டாறன்... பேப்பறை மாத்தி எண்டாலும் பாசாக்கிவிடுங்கோ வாத்தியார்.. :D

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே வாத்தியார் விளையாடிக் கொண்டு படிக்கிறது?

அங்கால பஞ்ச் நீங்கள் கரும்பலகையில் எழுதும் நேரம் திரும்பி பின்னால இருக்கிற என்னையும் சுமேயையும் முறைச்சு முறைச்சுப்பார்க்கிறார். பார்க்கவே பயமா இருக்கு......

மலர் சொரியும் சோலையில் வண்டு பறந்து பறந்து தேன்குடித்தால், கண்ட புலவன் கவிபாடுகிறான். :D  

தமிழ் சொரியும் வகுப்பில் பாஞ், பாஞ்சு பாஞ்சு தான்படித்தால்! கண்ணடித்த வல்வை சகாறா, பாலைவனம்போல் சுட்டெரிப்பதும் ஏன் வாத்தியார்?... :( 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எழுத்துக்களின் பிறப்பிடம்
 
உயிரெழுத்துக்களான அ ஆ என்பன வாயைத் திறப்பதனால் பிறக்கின்றன.
 
இ ஈ எ  ஏ  ஐ என்பன வாயைத் திறந்த பின் மேல்வாய்ப்பல்லை நாக்கின் அடிப்பகுதியின் ஓரம் தழுவும்போது பிறக்கின்றன.
 
உ ஊ ஒ ஓ ஔ என்பன உதடுகளைக் குவிப்பதனால் பிறக்கின்றன.
 
மெய்யெழுத்துக்களான க ங என்ற இரண்டும் நாக்கின் அடி மேல் வாயின் அடிப்பகுதியைச் சேரும் போது பிறக்கின்றன
 
அதேபோல ச ஞ என்பன நடு நாக்கு மேல்வாய்ப்பகுதியையும்
ட ண என்பன நாக்கின் முன்பகுதி வாயின் முன்பகுதியையும் பொருந்தப் பிறக்கின்றன.
 
த ந என்ற மெய்யெழுத்துக்கள் நாக்கின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடியில் பொருந்தும்போது பிறக்கின்றன.
 
ப ம என்ற எழுத்துக்கள் மேலுதடும் கீழுதடும் பொருத்தும் போது பிறக்கின்றன.
 
என்பது நாக்கின் அடிப்பகுதி   மேல்வாயின் அடிப்பகுதியுடம் பொருந்தப்  பிறக்கிறது.
 
ர ழ என்ற இரண்டு சொற்களும் வாயின் மேல் பகுதியை நாக்கின் நுனி தடவும் போது பிறக்கின்றன.
 
என்ற எழுத்து மேல் வாய்ப் பல்லின் அடியில் இறுக்கமாகத் தடவும் போது பிறக்கின்றது.
 
என்பது நாக்கின் ஓரமானது மேல் வாயை இறுக்கமாகத் தடவும் போது பிறக்கின்றது.

என்பது கீழுதடு மேல்வாய்ப் பல்லுடன் பொருந்தும் போது பிறக்கின்றது.
 
ற ன என்பன நாக்கின் நுனி மேல்வாயுடன் பொருந்தும் போது பிறக்கின்றன.

ஆய்தம் தலையில் பிறக்கின்றது
ஆய்த எழுத்துத் தவிர்ந்த மற்றைய சார்பெழுத்துக்கள்
ஒன்பதும் மேலே பார்த்த முதலெழுத்துக்களின் பிறப்பினைப் போன்றே பிறக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் நான் ற சொல்லேக்குள்ள நாக்கு எதனுடனும் முட்டவே இல்லையே. காத்துத்தான் நாக்கை அசைச்சு அதிரப்பண்ணுது. இது எனக்கு மட்டுமோ அல்லது மற்றவை சொல்லேக்குள்ளும் இப்பிடியோ எண்டு விளங்கேல்லை

வாத்தியார்.. பொம்பிளைப்பிள்ளையலும் ஆட்டத்துக்கு வந்தால்தான் நான் விளாட வருவன்..

ஒருத்தரும் உங்களைச் சேர்க்க மாட்டினமாம்

அப்படியே இரண்டு மாங்காய்களை நாளை வகுப்பிற்கும்

எடுத்து வாருங்கள். கொஞ்சம் உப்பும் மிளகாய்த்தூளும்

நான் கொண்டு வருகின்றேன் :D  :D  :lol:

வாத்தியார்..வாத்தியார்..நல்ல பூவரசம் தடி நான் கொண்டு வாறேன் :D

Edited by கா ளா ன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தரும் உங்களைச் சேர்க்க மாட்டினமாம்

நானு பொம்பிளைப்பிள்ளையளைதான் ஆட்டத்துக்கு கேட்டன்..  :D

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

மலர் சொரியும் சோலையில் வண்டு பறந்து பறந்து தேன்குடித்தால், கண்ட புலவன் கவிபாடுகிறான். :D  

தமிழ் சொரியும் வகுப்பில் பாஞ், பாஞ்சு பாஞ்சு தான்படித்தால்! கண்ணடித்த வல்வை சகாறா, பாலைவனம்போல் சுட்டெரிப்பதும் ஏன் வாத்தியார்?... :( 

கண்ணடித்தால் பதிலுக்கு கண்ணடித்து றொமான்ஸ் பண்ணுவதை விட்டுவிட்டு காஞ்சமாடு வைக்கலை பார்ப்பதுபோல் பார்த்தால் என் கட்சிக்காரரின் கபாலத்தில் கடுப்பேறாதா வாத்தியார்...?

Edited by சுபேஸ்

எழுத்துக்களின் பிறப்பிடம்

உயிரெழுத்துக்களான அ ஆ என்பன வாயைத் திறப்பதனால் பிறக்கின்றன.

இ ஈ எ  ஏ  ஐ என்பன வாயைத் திறந்த பின் மேல்வாய்ப்பல்லை நாக்கின் அடிப்பகுதியின் ஓரம் தழுவும்போது பிறக்கின்றன.

உ ஊ ஒ ஓ ஔ என்பன உதடுகளைக் குவிப்பதனால் பிறக்கின்றன.

மெய்யெழுத்துக்களான க ங என்ற இரண்டும் நாக்கின் அடி மேல் வாயின் அடிப்பகுதியைச் சேரும் போது பிறக்கின்றன

அதேபோல ச ஞ என்பன நடு நாக்கு மேல்வாய்ப்பகுதியையும்

ட ண என்பன நாக்கின் முன்பகுதி வாயின் முன்பகுதியையும் பொருந்தப் பிறக்கின்றன.

த ந என்ற மெய்யெழுத்துக்கள் நாக்கின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடியில் பொருந்தும்போது பிறக்கின்றன.

ப ம என்ற எழுத்துக்கள் மேலுதடும் கீழுதடும் பொருத்தும் போது பிறக்கின்றன.

என்பது நாக்கின் அடிப்பகுதி   மேல்வாயின் அடிப்பகுதியுடம் பொருந்தப்  பிறக்கிறது.

ர ழ என்ற இரண்டு சொற்களும் வாயின் மேல் பகுதியை நாக்கின் நுனி தடவும் போது பிறக்கின்றன.

என்ற எழுத்து மேல் வாய்ப் பல்லின் அடியில் இறுக்கமாகத் தடவும் போது பிறக்கின்றது.

என்பது நாக்கின் ஓரமானது மேல் வாயை இறுக்கமாகத் தடவும் போது பிறக்கின்றது.

என்பது கீழுதடு மேல்வாய்ப் பல்லுடன் பொருந்தும் போது பிறக்கின்றது.

ற ன என்பன நாக்கின் நுனி மேல்வாயுடன் பொருந்தும் போது பிறக்கின்றன.

ஆய்தம் தலையில் பிறக்கின்றது

ஆய்த எழுத்துத் தவிர்ந்த மற்றைய சார்பெழுத்துக்கள்

ஒன்பதும் மேலே பார்த்த முதலெழுத்துக்களின் பிறப்பினைப் போன்றே பிறக்கின்றன.

பிறப்பிடத்தை birth place என்று சொல்லலாமோ வாத்தியார்...?

மாத்திரை

எழுத்துக்கள்  ஒலிக்கப்பட வேண்டிய நேரத்தை அளக்கும் முறையே மாத்திரை எனப்படும்

முற்காலத்தில் எழுத்துக்களின் ஒலியை கண்ணிமைக்கும் நேரம் மற்றும் கைநொடிக்கும் நேரம் ஆகியவற்றை வைத்தே அளந்தனர்.

ஒரு முறை கை நொடிக்கும் நேரம் அல்லது கண்ணிமைக்கும் நேரத்தில் எழுத்துக்கள் ஒலிக்கப்பட்டால் அந்த நேரத்தை ஒரு ஒலி அளவு எனக்கொண்டார்கள்.

அதையே அன்றைய கால இலக்கண நூல்களை எழுதியவர்கள் மாத்திரை என்றார்கள்.

ஒரு ஒலி அளவில் ஒரு எழுத்து ஒலிக்கப்பட்டால் அதனை ஒரு மாத்திரை என்றனர்.

இரண்டு ஒலியளவில் ஒலிக்கப்படும் போது இரண்டு மாத்திரை என்றனர்.

அதாவது இரண்டுமுறை கண்ணிமைக்கும் நேரத்தின் அளவிற்கு அல்லது இரண்டு கைநொடிகளின் நேரத்திற்கு  ஒலிக்கப்பட்டால் இரண்டு மாத்திரை என்றனர்.

உயிரளபெடை 3 மாத்திரை (சில இடத்தில் 4 மாத்திரை வருவதும் உண்டு)

நெடில்  2 மாத்திரை

குறில் ,ஐகாரக்குறுக்கம்,ஒளகாரக்குறுக்கம்,ஒற்றளபெடை  1 மாத்திரை

மெய்,குற்றியலிகரம்,குற்றியலுகரம்,ஆய்தம்  1/2 மாத்திரை

மகரக்குறுக்கம்,ஆய்தக்குறுக்கம்   1/4 மாத்திரை

இவையே எழுத்துக்களின் ஒலி அளவுகளாகும்

நல்லவேளை.. தூக்கமாத்திரை இல்லாமற்போனது, இல்லையென்றால் தமிழே தூங்கியிருக்கும்.

வாத்தியார், தமிழை நன்றாகப் படிக்க ஏதும் ஊக்க மாத்திரை கிடைக்குமோ..?

பாடங்கள் எல்லாமே நன்றாகப் போகிறது, ஆனால் மனதில் சேமிக்கத்தான் கடினமாக இருக்கிறது. எதாவது அறிவுரை சொல்லுங்கள் சார்........

  • கருத்துக்கள உறவுகள்

பாடங்கள் எல்லாமே நன்றாகப் போகிறது, ஆனால் மனதில் சேமிக்கத்தான் கடினமாக இருக்கிறது. எதாவது அறிவுரை சொல்லுங்கள் சார்........

bhindi.jpg

தினமும் பச்சை வெண்டிக்காய் சாப்பிட்டால்.... பாடங்கள் இலகுவில் மனதில் பதியும்.

எங்களுக்கும் முன்பு.... பாடங்கள் மூளையில் பதிய கடினமாக இருந்தது, இப்போ ஓகே....

bhindi.jpg

தினமும் பச்சை வெண்டிக்காய் சாப்பிட்டால்.... பாடங்கள் இலகுவில் மனதில் பதியும்.

எங்களுக்கும் முன்பு.... பாடங்கள் மூளையில் பதிய கடினமாக இருந்தது, இப்போ ஓகே....

முயற்சி செய்துபார்க்கிறேன், நன்றி அண்ணா. உண்மையாத்தானே சொன்னீங்கள்?? :)

  • கருத்துக்கள உறவுகள்

நானு பொம்பிளைப்பிள்ளையளைதான் ஆட்டத்துக்கு கேட்டன்..  :D

கண்ணடித்தால் பதிலுக்கு கண்ணடித்து றொமான்ஸ் பண்ணுவதை விட்டுவிட்டு காஞ்சமாடு வைக்கலை பார்ப்பதுபோல் பார்த்தால் என் கட்சிக்காரரின் கபாலத்தில் கடுப்பேறாதா வாத்தியார்...?

பெண்ணென்றும் பாராது எள்ளிநகையாடிவிட்டு பின், என் கட்சிக்காரர் என பந்தா காட்டுவதிலும் நீங்கள் சூரர்தான். சபாஸ் சுபேஸ்!.

எனக்குத் தங்கைப் பாக்கியம் இல்லை. அதனால் இளநங்கைகள் எல்லாம் என் பாசமலர்கள். அவர்களோடு எப்படி நான் கண்ணடித்து றொமான்ஸ் பண்ணமுடியும்! மெசொபொத்தேமியா சுமேரியர் என் பாசமலர்களில் ஒருவர். அவர் கண்ணடித்தார்! என்று நான் தெரிவித்ததை தவறாக விளங்கிக்கொண்டீர்கள் போல் தெரிகிறது. பிரம்பால் அடித்து, கையால் அடித்து ஒருவரை படிய வைப்பதுபோல் கண்ணாலும் அடித்துப் படியச் செய்யலாம். நீங்கள் கேள்விப்பட்டதில்லையா! பசிலின் ஒரு கண்பார்வையில் டக்ளஸ் தேவானந்தா அடங்கிப்போனதாக!....

சுபேஸ் எங்கடை கதையிலை நாங்கள் வாத்தியின் பாடத்தைக் கவனிக்கேல்லை. பாருங்கோ அவருக்கு கடுப்பேறிவிட்டது. ஏதாவது மாங்காய், தேங்காய் கதையை அவிழ்த்து விடுங்கோ, உப்பும், மிளகாய்த்தூளும் தேடுவதில் அவர் கவனத்தைத் திருப்பிவிடலாம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் நிலை எழுத்துக்கள்
 
ஒரு சொல்லை அமைக்கும்போது எல்லா எழுத்துக்களும் அந்தச் சொல்லின்  முதல் எழுத்துக்களாக
வரமாட்டாது.
உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் க ச த நப ம வ ய ஞ ங என்னும் பத்து உயிர் மெய்யெழுத்துக்கள் மற்றும் அந்த பத்து உயிர் மெய்யெழுத்துக்களின் வர்க்க எழுத்துக்கள் என்பனவே சொல்லின் முதல் எழுத்தாக இருக்கும்

அவை தவிர்ந்த ட ண ர ல ழ ள ற ன என்ற உயிர் மெய்யெழுத்துக்கள் சொற்களின் முதல் எழுத்தாகாது.
 
இறுதி நிலை எழுத்துக்கள்

சொல்லுக்கு  முதல் இந்த எழுத்துக்கள் தான்  வரவேண்டும் என்பதைப்போல சொல்லுக்கு இறுதியில் வரும் எழுத்துக்களையும் வகுத்துள்ளனர். இவற்றிற்கு இறுதி நிலை எழுத்துக்கள் எனப்பெயர்.
பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள எனும் உயிர்மெய்யெழுத்துக்களும் அதன் வர்க்கங்களும் சொல்லின் இறுதியில் வரும்
 
க ங  ச ட த ப ற என்பன சொல்லின் இறுதியில் வராது.
சொல்லின் இறுதியில் க் ச் என்ற வரிசையில் வரும் ஆறு வல்லின மெய்யெழுத்துக்கள் வரமாட்டாது
 
அவ்வாறான சொற்கள் குற்றியலுகரத்துடன் முடியும்
பாக்க் = பாக்கு
பாட்ட் = பாட்டு
இதைப்போன்றே ங என்ற சொல் இறுதியில் வாரா
குரங்ங் = குரங்கு  

‘ட‘ என்னும் எழுத்து, ‘ண‘ என்னும் எழுத்து என்று எழுத்தைக் குறிப்பிடும் போது இவையும் முதலில் வருகின்றன.

தமிழ்மொழி பேசும் மக்கள் பிறமொழி பேசுகிறவர்களுடன் கலந்து பழகி வாழ்கின்றனர். அவ்வாறு அவர்களுடன் பழகும்போது பிறமொழிச் சொற்களையும் பயன்படுத்துகிறார்கள்.

அப்படிப் பேச்சுவாக்கில் தமிழ் மொழியில் நுழைந்த பிறமொழிச் சொற்கள் பலவும் தமிழ்மொழியில் பயன்பாட்டில் உள்ளன. அவற்றையும் தமிழ் மக்கள் பயன்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட பிறமொழிச் சொற்களில் ட, ண, ர, ல, ற என்னும் ஐந்து மெய்எழுத்துகளும் முதலில் வருகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக"

வாத்தியார் இங்குள்ள சொற்கள் பற்றி கொஞ்சம் விளக்கம் தாங்கோ...

பற என்பது சொல் இல்லையா?

நட என்றால் சொல் ஆகாதா? குழப்பமா இருக்கு வாத்தியார் விளக்கம் தாங்கோ :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணென்றும் பாராது எள்ளிநகையாடிவிட்டு பின், என் கட்சிக்காரர் என பந்தா காட்டுவதிலும் நீங்கள் சூரர்தான். சபாஸ் சுபேஸ்!.

பாஞ் .. நான் விளாட்டுக்கு அறைகூவல் விடுத்தது பொம்பிளைப்பிள்ளைகளை.. பொம்பிளைஅம்மாக்களை அல்ல.. :D

எனக்குத் தங்கைப் பாக்கியம் இல்லை. அதனால் இளநங்கைகள் எல்லாம் என் பாசமலர்கள். 

இப்படிக்கு அண்ணண் உத்தமன்... :D

சுபேஸ் எங்கடை கதையிலை நாங்கள் வாத்தியின் பாடத்தைக் கவனிக்கேல்லை. பாருங்கோ அவருக்கு கடுப்பேறிவிட்டது. ஏதாவது மாங்காய், தேங்காய் கதையை அவிழ்த்து விடுங்கோ, உப்பும், மிளகாய்த்தூளும் தேடுவதில் அவர் கவனத்தைத் திருப்பிவிடலாம்.

வாத்தியாருக்கு மாங்காய் எண்டதும்..பல்லெல்லாம் கரகரத்து வாயூறுது...நான் என்ன செய்ய பாஞ்..? :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக"

வாத்தியார் இங்குள்ள சொற்கள் பற்றி கொஞ்சம் விளக்கம் தாங்கோ...

பற என்பது சொல் இல்லையா?

நட என்றால் சொல் ஆகாதா? குழப்பமா இருக்கு வாத்தியார் விளக்கம் தாங்கோ :unsure:

"அடியிரண்டும் தொடுத்தல் முதலாயின தொடையே"

செய்யுளில் பல அடிகளிலும்  அல்லது பல சீர்களிலும்

எழுத்துக்கள் ஒன்றாக வர அமைக்கப்படுவது தொடை எனப்படும்.

பொருளுக்கும் இடத்திற்கும் தக்கவாறு ஒத்திசை கூடிய ஓசைகளை அல்லது எழுத்துக்களைக் கொண்டு அமைந்த சொற்களால் செய்யுள்களைப் புலவர்கள் அமைப்பார்கள் .

தொடை எனப்படுவது ஐந்து வகைப்படும்

நீங்கள் கூறிய குறள்

"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்கு தக"

மோனைத்தொடை ஆகும்

இவற்றை யாப்பதிகாரத்தில் காணலாம்  

அடுத்தது நட என்பது இலக்கணப் பிழையானதாக இருக்கும்

நட என்பதற்குப் பதிலாக செல் எனக் கூறலாம்

பற என்பதற்குப் பதிலாகப் பறந்து செல் எனவும் கூறலாம்

பேச்சு வழக்குத் தமிழிற்கும் இலக்கணத் தமிழிற்கும்

வித்தியாசங்கள் உண்டு  :)  

  • கருத்துக்கள உறவுகள்

நட, பற  என்பவை வினை அடிகள் என்று கூற முடியாதா???

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.