Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்த முயன்றார் – பிள்ளை மீது பீரிஸ் சரமாரி குற்றச்சாட்டு

Featured Replies

சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலை குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கொழும்பில் வெளியிட்ட கருத்துகள், முற்றிலும் நியாயமற்ற – தவறான – பக்கசார்புடையவை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

நவநீதம்பிள்ளையின் அறிக்கையின் தொனி மற்றும் பொருள் என்பன நடுநிலைமைக் குறைபாட்டை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றும் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கம்போடியாவிலும், யூகோஸ்லாவியாவிலும் போர் முடிந்து பல ஆண்டுகளாகியும் செய்யமுடியாத புனரமைப்புப் பணிகளை சிறிலங்கா அரசாங்கம் நான்கே ஆண்டுகளில் செய்திருப்பதாகவும், அதை நவநீதம்பிள்ளை கவனத்தில் கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிப்படைத்தன்மை மற்றும் தெளிவான நோக்குடனேயே சிறிலங்கா அரசாங்கம், நவநீதம்பிள்ளைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அவருக்கு எந்த இடத்துக்கும் செல்வதற்கு தடைவிதிக்கப்படவில்லை என்றும் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஆனால், வடக்கில் சிறிலங்கா இராணுவத்தின் பங்கு தொடர்பாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளதாகவும், சிறிலங்கா படையினர் அழையா விருந்தாளியாக, தேவையின்றி தலையீடு செய்வதாகவும், ஒடுக்குமுறைகளை கையாள்வதாகவும் குறிப்பிட்டுள்ளது தவறானது.

சிறிலங்கா எதேச்சாதிகாரப் பாதையில் செல்வதாக குற்றம்சாட்டிய நவநீதம்பிள்ளை அதற்கான ஆதாரங்களை வழங்கவில்லை என்றும், நவநீதம்பிள்ளையை சந்தித்தவர்கள் மிரட்டப்பட்டுள்ளதாக கூறிய குற்றச்சாட்டுக்கும், அவர் ஆதாரங்களை தரவில்லை என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.

நவநீதம்பிள்ளையை சந்தித்தவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும், அவர்கள் மிரட்டப்பட்டதற்கு ஆதாரங்கள் தரப்பட்டால் விசாரிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்காலில், நவநீதம்பிள்ளை மலர்வளையம் வைக்க இருந்து திட்டத்தை அவர் சிறிலங்கா அரசாங்கத்துக்கு தெரியாமல் மறைத்திருந்தார்.

எனினும் அந்தத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.

போரில் கொல்லப்பட்ட அனைவருக்காகவும் அவர் அஞ்சலி செலுத்தி விரும்பியிருந்தால், அதற்கு பொதுவான ஒரு இடத்தை தெரிவு செய்திருக்கலாம்.  இது ஒருதலைப்பட்சமானது என்றும் பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.http://goldtamil.com/?p=7863

Edited by chinnavan

  • கருத்துக்கள உறவுகள்

நவநீதம்பிள்ளை அவர்களது இறுதி அறிக்கை வெளிவரும்போது பீரிசின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது

  • கருத்துக்கள உறவுகள்
பீரிசைப் பொறுத்தளவில் முள்ளிவாக்காலில் இறந்த தமிழர்கள் அனைவரும் பிரபாகரன்கள்தான்.
 
என்னும் சொல்லப்போனால் சிறிலங்கா அரசுடன் ஒட்டித்திரியும் ஒட்டுகுழுக்களின் உறவினர்கள் முள்ளிவாக்காலில் கொல்லப்பட்டு இறந்திருந்தாலும் அவர்களும் பீரிசைப் பொறுத்தவரையில் பிரபாகரன்கள்தான்.
 
    
  • கருத்துக்கள உறவுகள்

 

பீரிசைப் பொறுத்தளவில் முள்ளிவாக்காலில் இறந்த தமிழர்கள் அனைவரும் பிரபாகரன்கள்தான்.
 
என்னும் சொல்லப்போனால் சிறிலங்கா அரசுடன் ஒட்டித்திரியும் ஒட்டுகுழுக்களின் உறவினர்கள் முள்ளிவாக்காலில் கொல்லப்பட்டு இறந்திருந்தாலும் அவர்களும் பீரிசைப் பொறுத்தவரையில் பிரபாகரன்கள்தான்.

 

 

சிங்களவனின் சிந்தனையே அதுதான்.
நாதாரி தமிழனுக்கு இன்னமும் அது புரியவில்லை.
  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் கொல்லப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்த முயன்றார் – பிள்ளை மீது பீரிஸ் சரமாரி குற்றச்சாட்டு

 

இவருக்கு

கையும்  வாயும்  நீளம்

புத்திமட்டும்  மற்றவன் சொல்லிக்கொடுத்தால்  மட்டும் வேலை செய்யும்......

 

நவநீதம்பிள்ளையை இவர்கள்  சீண்டுவது பல உண்மைகளை  வெளியில்  கொண்டுவரலாம்

தொடரட்டும் இவரது கேள்விக்கணைகள்

  • கருத்துக்கள உறவுகள்
போரில் கொல்லப்பட்ட அனைவருக்காகவும் அவர் அஞ்சலி செலுத்தி விரும்பியிருந்தால், அதற்கு பொதுவான ஒரு இடத்தை தெரிவு செய்திருக்கலாம்.  இது ஒருதலைப்பட்சமானது என்றும் பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்

 

 

அதையும் கொன்ற ஆட்கள் தான் தெரிவீர்கள் போல உள்ளது.

ஒரு மனிதாபிமான செயலைக்கூட அனுமதிக்காத சிங்களம் தமிழர்களுக்கு தீர்வு ஒன்றை வழங்குமா என்பதுதான் எனக்குள்ள கேள்வி 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனிதாபிமான செயலைக்கூட அனுமதிக்காத சிங்களம் தமிழர்களுக்கு தீர்வு ஒன்றை வழங்குமா என்பதுதான் எனக்குள்ள கேள்வி 

 

 

இதில் பெரும்  சதியுள்ளது

இருக்கிறார்

இல்லை  என  இரு பகுதியாக்கி

மீண்டும் நவநீதம்பிள்ளையைத்தாக்க வழி தேடுகிறார்கள்.

 

(நானே ஆரம்பித்துவைத்தால்

தலைவர்  இருக்கிறார்

அவருக்கு எப்படி நவநீதம்பிள்ளை மலர்வளையம்  வைக்க முயற்சிக்கலாம்............. :( )

  • கருத்துக்கள உறவுகள்

பீரிஸ் இதைச் சொல்வதன் காரணம் பிள்ளை அவர்களின் நம்பகத்தன்மையை சிதைப்பதற்கு.. காட்டமான ஒரு அறிக்கை வெளிவரும்போது இதைத்தான் நாங்கள் ஏற்கனவே சொல்லிவிட்டோமே என்பார்கள்.. மற்றும்படி, தலைவர், மலர்வளையம் எல்லாம் இரண்டாம் பட்சம்.. இறந்த மக்களுக்கு அகவணக்கம் செலுத்த மலர்வளையம் எடுத்துச் சென்றிருப்பார்..

 

இதில் இன்னொன்றும் உள்ளது.. நீங்கள் புலி அனுதாபி என்று சிங்களம் சொன்னால், தான் அப்படியல்ல என்று பிள்ளை சொல்லுவார்.. அதற்கு வலு சேர்க்கும் முகமாக புலிகள் கொலை செய்தார்கள் என்பார்.. பயங்கரவாதிகள் என்பார்.. சிங்களம் அப்போது கொடுப்புக்குள் சிரிக்கும்.. புலியை உலக மட்டத்தில் பயங்கரவாதிகள் என்று திரும்பத் திரும்ப சொல்லவைத்த மகிழ்ச்சியில்..

நவநீதம் பிள்ளை பிரபாகரன் இறந்த இடத்தில் வணக்கம் செலுத்த முயன்றார் என்பது பாரதூரமான குற்றச்சாட்டு. இப்படியானதொன்றை இலங்கையில் இருப்பவர் இலங்கை மந்திரி ஒருவர் மீது சொன்னால் அவர் மீது பாரிய மான நட்ட வழக்கு தொடரப்பட்டிருக்கும். 

 

பீரிசு போர் முடிய இந்தியாவில் நின்று இலங்கை தமிழர்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் என்று இந்தியாவுடன் இணைந்து வெளிவிட்ட அறிக்கையை இலங்கையில் அதன் அரசு அது அவரின் தனிப்பட்ட கருத்து என்று கூறி மறுத்தது. பீரிசு எதையும் கூறுவார். எந்த மந்திரியும் எதையும் கூறுவார். ஆனால் அரசு தேவைப்படும் போது மறுக்கிறது. 

 

இலங்கை ஒரு இடத்தில்  இறந்தவர்களுக்கு மலர் வளையம் சாத்தி வணக்கம் தெரிவிக்குமாறு நவநீதம் பிள்ளைக்கு அழைப்பு விடுத்திருந்தால்  இலங்கை நல்லிணகத்துக்கு தயாராக இருக்கிறது என்றது வெளியாகும்.  இலங்கைக்கே பிரபாகரன் இறந்தாரா, அது முள்ளிவாய்க்காலில் எந்த இடம் என்பது தெரியாமல் இருக்கும் போது நவநீதம் பிள்ளை இறந்த இடத்தில் மலர் வளையம் சாத்த சென்றார் என்பது என்ன கருத்தில் சொல்லப்படுகின்றது என்பதை ந்வநீதம் பிள்ளை ஐ.நா வில் தெளிவுற விளங்க வைக்க வேண்டும். நவநீதம் பிள்ளை இலங்கையின் குற்றச்சாட்டான "மேற்கு நாட்டு இராஜதந்திரிகள் புலிகளின் சம்பளப்பட்டியலில்" என்ற வாசகத்தையும் தனது அறிக்கையில் சேர்க்க வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.