Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிப்பாய்ச்சல் அனுபவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நான்  களத்தில  நிற்கல

ஆனால  களத்தில  நின்ற  முரளிதரன் (கருணா)

இங்கு வந்தபோது சொன்னது

திட்டங்களுக்கான விளக்கங்கள்  முடிந்து

தலைவரிடமிருந்து விடைபெற்று

சண்டைகள் நடக்கும்போது

அங்கால அடியுங்கோ

இங்கால ஆளனுப்பு

அது இது என்று தலைவரின் குரல்  வருமாம்

தங்களுக்கு பலகாலமாக விழங்காதது

வன்னியில் நடந்த ஓயாத அலைகளின் போது 

தலைவர் பக்கத்தில் நிற்பதைப்பார்த்ததும் தான் புரிந்தது என்றார்.

வேண்டுமென்றால் சுவிசில் பேசும் போதும் இதைச்சொன்னதாக ஞாபகம்

காணொலியைப்போட முடியுமா என பார்க்கின்றேன்.

அதன்படி  பார்க்கும்போது

தலைவர்  சண்டைகளுடன் நின்றிருக்கின்றார்  என்பது தெரிகிறது

களமுனைக்கு நேரடியாகச் செல்வது வேறு, கட்டளைப்பீடத்தில் இருந்து கட்டளை வழங்குவது வேறு என நினைக்கின்றேன்.

  • Replies 115
  • Views 13.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஓயாத அலைகள் 3 காணொளிகளில் இதுபோன்றதொரு பதிவு இருந்த ஞாபகம்.. நேரம் கிடைக்கும்போது தேடிப்பார்க்கிறேன்.

ஒண்டுமே தெரியாமல் சும்மா பீலா விடும் உங்களை விடவா...??    புலிப்பாய்ச்சல் சண்டை அக்குவேறு ஆணி வேற புடுங்குவன் எண்ட போதே நினைச்சன்..   அண்ணை அந்த பக்கம் கூட் வந்திருக்க மாட்டார் ஊரிலை அரசியல் செய்து மூசிலை இருந்து இருப்பார் எண்டு...  

அண்ணை எப்ப தம்பி அரசியல்ல இருந்தவர்???? 

நீங்கள் சொன்னது அப்பட்டமான பொய் என்று உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். உங்களுடைய வார்ததைப் பிரயோகங்கள் அதைத்தான் காடடுகின்றன. 

  • தொடங்கியவர்

களமுனைக்கு நேரடியாகச் செல்வது வேறு, கட்டளைப்பீடத்தில் இருந்து கட்டளை வழங்குவது வேறு என நினைக்கின்றேன்.

களமுனைக்கே போகாத யாரும் கட்டளை வளங்குவதில்லை இது விடுதலை புலிகளுக்கு மட்டும் அல்ல சிங்கள இராணுவத்துக்கும் பொருந்தும்... 

  • கருத்துக்கள உறவுகள்

1983 இல் தலைவர் களமுனைகளில் நின்றார்.. வன்னிக்களங்களில் பெருமளவில் கட்டளைப்பீடங்களில் நின்றார்.. அப்ப தொண்ணூறுகளில் எவ்வாறு செயற்பாடுகள் இருந்தன?? இரண்டு விதமாகவும் இருந்திருக்கலாம்..

  • தொடங்கியவர்

அண்ணை எப்ப தம்பி அரசியல்ல இருந்தவர்???? 

நீங்கள் சொன்னது அப்பட்டமான பொய் என்று உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். உங்களுடைய வார்ததைப் பிரயோகங்கள் அதைத்தான் காடடுகின்றன. 

நீங்கள் செய்வது வெறும் சொறிச்செயல் எண்டதும் உங்களுக்கு தெரியும்...   புலிப்பாய்ச்சல் சண்டையில்  ஒரு பூண்டு கூட தெரியாமல் பினாத்தும் உங்களுக்கும் தெரியும்  ஏதும் நடந்து இருக்கலாம் எண்டு... !  

நடந்த தகவல்கள் தெரிந்தால் சொல்ல யாருக்கும் தயக்கம் இருக்காது சும்மா அரைச்ச மாவையே போட்டு திரும்ப திரும்ப பொய் பொய் எண்டு கத்துவதால் ஏதும் நடக்க போவதில்லை... 

 வேண்டும் எண்டால் சவாலாகவே கேக்கிறன்... 

புலிப்பாய்ச்சல்  சண்டக்கு முதல் இராணுவ கட்டுப்பாட்டுக்கை  போராளிகள் சிலர் ( விசேட வேவுப்பிரிவை சேர்ந்த ) இருந்தனர்  அவர்கள் எத்தனை பேர் எண்டதை மட்டும் சொல்லுங்கள்....   போதும் நம்பலாம்...!  படையணிகளில் இருந்த அனேகருக்கு இந்த தகவல் சொல்லப்பட்டு இருந்தது.... !   ( சகோதர சூடு நடக்காமல் இருக்க... ) 

Edited by தயா

களமுனைக்கே போகாத யாரும் கட்டளை வளங்குவதில்லை இது விடுதலை புலிகளுக்கு மட்டும் அல்ல சிங்கள இராணுவத்துக்கும் பொருந்தும்... 

 களமுனைக்குப் போகாத யாரும் கட்டளை வழங்குவதி்ல்லை என்ற யாரும் கட்டள வழங்குவதில்லை என்ற உங்களுடைய கருத்தில் இருந்தே அமைப்பின் கட்டமைப்பு சம்பந்தமாகவோ போரியல் சமபந்தமாகவோ எவ்விதமான அடிப்படை அறிவுகூட உங்களுக்கு இல்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது. 

இப்பிடியான அறிவிலித்தனத்தில் இருக்கும் உங்களுக்கு இதுக்குமேல் விளங்கப்படுத்தினால் அசிங்கம்தான்.

எருமை மாட்டில மழை பெய்ஞ்சது போல எண்டுவாங்கள் அது இப்பதான்பா எனக்கு விளங்குது, 

நீங்கள் ஏதோ புடுங்கவேணாம் எண்டு எழுதினீங்கள்....... அது 10000%  உண்மை தம்பி, நீங்கள் புடிங்கினது எல்லாமே தேவையில்லதா ஆணிதான். 

தாங்கள் வெறும் அரை குறை ஒண்டு  எண்டது மட்டும் சரியா விளங்குது...  

வாழ்க்கையில் கள முன் நிலைக்கு போகாத ஒருவர் புலிகளில் கட்டளை வளங்கினார் எண்டது நீங்கள் புலிகளை கொச்சை படுத்தும் செயல்... 

எங்கட தலைவர் வெறும் பங்கருக்க மட்டும் இருக்கிறவர் எண்ட தோற்றத்தை உருவாக்கும் உங்களின் களிநிலை தான் இங்கை வெளிச்சமாகிறது... 

கட்டளை தளபதியாக இருக்கும் போது புலிகளில் பல தளபதிகள் களமுனையில் காயம் அடைந்து இருக்கிறார்கள்...

வன்னி விக்கிரம 2 நடவடிக்கையில்  ஆரம்ப கட்டளை தளபதி ராஜன் அண்ணை காயம் அடைகிறார்..

மனலாற்று மின்னல் இராணுவ நடவடிக்கை எதிர்த்தாக்குதலுக்கு ஆரம்பத்தில் கட்டளை தளபதியாக இருந்த  ஜெயம் அண்ணை காயம் அடைகிறார்... 

யாழ் தேவி நடவடிக்கைக்கு கட்டளை தளபதி பால்ராஜ் அண்ணை காயம் அடைக்கிறார்...  

பூநகரி கூட்டுப்படை முகாம் தகர்ப்பு கட்டளை தளபதி சொர்ணம் அண்ணை  காயம் அடைகிறார்... 

Edited by தயா

ஒவ்வொருதரும் ஒவ்வொன்றை எழுதினம். இறுதிப் போரில் தலைவர் என்ன செய்தார், அவருக்கு என்ன நடந்ததது என்று கேட்டாலும் எழுத மாட்டார்கள் தெரிந்தால் தானே.

  • கருத்துக்கள உறவுகள்

1-தலைவர் 

2-கட்டளைத் தளபதி

3- களமுனைத்தளபதி

4- பகுதித்தளபதி

5- அணிப்பொறுப்பாளர் என்றுதான் கட்டமைப்பு இருக்கும். 

இந்த ஐந்து வகை கட்டமைப்புக்களுடன்

முன்னோக்கிப்பாய்தல் நடந்தநேரம்  இயக்கம்  இருந்ததா????

உண்மையில்  அறிந்து கொள்ளத்தான் கேட்கின்றேன்

ஒவ்வொருதரும் ஒவ்வொன்றை எழுதினம். இறுதிப் போரில் தலைவர் என்ன செய்தார், அவருக்கு என்ன நடந்ததது என்று கேட்டாலும் எழுத மாட்டார்கள் தெரிந்தால் தானே.

ஆடான ஆடெல்லாம் தண்ணிக்கழ அங்கினை ஒரு மூலையில் கிடந்த நொண்டி ஆடு கொக்ககோலாக்கு அழுதிச்சாம். :lol:

  • தொடங்கியவர்

இந்த ஐந்து வகை கட்டமைப்புக்களுடன்

முன்னோக்கிப்பாய்தல் நடந்தநேரம்  இயக்கம்  இருந்ததா????

உண்மையில்  அறிந்து கொள்ளத்தான் கேட்கின்றேன்

அவர் கணக்கு தெரியாமல் உளறுகிறார்...

விளக்கமாக சொன்னால் ....    ( உங்களை இன்னும் குழப்ப இது உதவும்) 

2ம் லெப்ரினன்   5 - 7 பேருக்கு பொறுப்பானவர்  

லெப்ரினன்   10- 15 பேருக்கு பொறுப்பானவர்... 

கப்ரன் -    45 - 60 பேர்ருக்கு பொறுப்பானவர்

மேஜர் -   கொம்பனிக்கு பொறுப்பானவர்.. 

லெப் கேணல் கள முனைக்கு பொறுப்பானவர். 

அதுக்கும் மேலை கேணல் கட்டளை தளபதி 

பிரிகேடியர்  ஒருங்கிணைப்பு தளபதி... 

கட்டமைப்பு 1991 ல் இருந்து இருக்கிறது...   ஆனால் சண்டை எண்று வரும் போது தளர்வு வருவது தவிர்க்க முடியாது...  

இராணுவத்தை பொறுத்த வரைக்கும்  அமைப்பு 

செக்சன்       -  லான்ஸ் கோப்பிறல்   ( இது சிப்பாய்கள் தர பதவி நிலை)

பிளாட்டூன்      - 2ம் லெப்ரினன் - அல்லது லெப்ரினன் ( அதிகாரிகள் நிலை இங்கே தான் ஆரம்பிக்கிறது)

கொம்பனி     -  ( பதவி உயர்வுக்காக கத்திருக்கும்) லெப்ரினன்,   அல்லது கப்ரன். 

பற்றாலியன்  -  லெப் கேணல்  அல்லது பதவி உயர்வுக்காக காத்திருக்கும் மேஜர்

பிறிகேட்       -  பதவி உயர்வுக்கு காக்கும் கேணல்  அல்லது பிரிகேடியர்.

ரெஜிமற்      - மேஜர் ஜெனரல்...

அதுக்கும் மேலை இராணுவ தளபதி லெப்ரினன் ஜெனரல்... 

எண்று வரும் ( பதவி உயர்வுக்காய் எண்டு நான் சொன்னதை  சீனியர் எண்டு சொல்வார்கள்...)

சிப்பாய்கள் தரத்தில்

லான்கோப்பிரல்

கோப்பிரல்.

சாஜன்

ஸ்ராவ் சாஜன் 1

ஸ்ராவ் சாஜன் 2

சாஜன் மேஜர் எண்று பதவி நிலை உண்டு....   

இந்த பதவிகளிலை லான்ஸ் கோபிரலை தவிர  மற்றவர்கள்  அதிகாரிகளுக்கு உதவியாளர்களாகவும் இராணுவத்துக்கு பயிற்ச்சி  நிர்வாக வேலைகளில் இருப்பார்கள்... 

Edited by தயா

விசுகு தாமதமாக வந்ததிற்கு மன்னிக்கவும், அலுவலகத்தால் இப்பொழுதுதான் வர முடிந்தது.
 
விசுகு நீங்கள்  ஐந்து வகை கட்டமைப்பு இருந்ததா? முன்னோக்கிப்பாய்தல் நடந்தநேரம்  செயற்பாட்டில்  இருந்ததா? என கேட்டிருந்தீர்கள்
 
விடுதலைப்புலிகளின் இராணுவக்கட்டமைப்பில்  கட்டளை  பரிமாறப்படும் ஒழுங்கு முறையை விளங்கப்படுத்தத்தான் உள்ளார்த்தமாக நடைமுறையில் இருந்த விடயத்தை தெரிவித்திருந்தேன்.  அதாவது தலைவருடன் நேரடியான வழிநடத்தலில் சண்டைக்கான கட்டளைத்தளபதி அல்லது ஒருங்கிணைப்புத்தளபதி இருப்பார் அவர்களிற்கு கீழ் களமுனைத்தளபதி, பகுதித்தளபதி, அணிப்பொறுப்பாளர்கள் (களமுனைப்பொறுப்பாளர்கள்)என  கட்டளை வழங்கும்  ஒழுங்கு முறையை(Chain of command)விளங்கப்படுத்த அவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்.  இந்த நடைமுறை ஆரம்பத்திலிருந்து இருந்தாலும்  அதற்கான (நிலை) பெயர்வடிவம் ஜயசிக்குறுய் நடவடிக்கை காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டு இறுதிவரை இருந்தது. அதற்கு முன் பொதுவாக தளபதிகள் என்றே அழைக்கப்பட்டனர்.  எனவே நான் கட்டமைப்பு என்று கூற வந்த விடயம் சண்டைக்கானகட்டளை வழங்கும் ஒழுங்குமுறையைப்பற்றியதே (Chain of command) தவிர, இராணுவத்தின் அணிக்கட்டமைப்பை பற்றியதோ அல்லது பிரிவுக்கட்டமைப்பைப்பற்றியதோ அல்ல.
 
தலைவர் சண்டை தொடர்பான விடயங்களை அந்தச் சண்டைக்கு பொறுப்பான பிரதான தளபதி (கட்டளைத்தளபதி ) ஊடாகவே கையாள்வார். தேவைப்படின் தனியாகவோ அன்றி பொதுவான கலந்துரையாடலிலோ,  சண்டை தொடர்பாக ஏனைய தளபதிகளுடன் கதைப்பார். இவர்களின்  ஊடாகவே கட்டளைகள் மேலிருந்து கீழ்நோக்கி நகர்த்தப்படும்.
 
மூத்ததளபதிகள் சண்டையில் ஒன்றிணையும் போது ஒருங்கிணைப்புத்தளபதிக்கு சண்டையை ஒருங்கிணைக்கும் பிரதான பொறுப்பு இருந்தாலும் சண்டை ஒருங்கிணைப்பில் தலைவர் தனது சண்டைத்திட்டத்தை மூத்ததளபதிகளுடனும் அதற்கு அடுத்த கட்ட தளபதிகளுடனும் பரிமாறிக் கொள்வார். ஆனால் சண்டையின் போது ஒருங்கிணைப்புத்தளபதி ஊடாகவே சண்டையை வழிநடாத்துவர், இதில் மூத்ததளபதிகள் விடயத்தில் சில விதிவிலக்குகள் இருந்தன.
 
அதற்கு அப்பால் திட்டமிட்ட சண்டைக்கான தயார்ப்படுத்தலில் இரண்டாம் கட்ட தளபதிகள் வரை சண்டையின் பிரதான திட்டத்தை விவாதித்து ஆலோசனைகளையும் திட்டங்களையும் கூறும் தலைவர், அதற்கு கீழ் உள்ள பொறுப்பாளர்களுக்கும் போராளிகளுக்கும் தேவைப்படும் இடத்தில் மட்டும் சண்டையைப்பற்றிக் (திட்டங்கள் பற்றியல்ல) கதைப்பார். சண்டைக்கு முன் அது தொடர்பாக நடைபெறும் பொதுவான சந்திப்பில் கதைப்பார். சண்டையின் போது  பிரதான தளபதி ஊடாகவே  சண்டையின் கட்டளைகளைக் கையாள்வார்.  இது தான் விடுதலைப்புலிகள் அமைப்பின் சண்டைக்கான பொதுவான கட்டளை வழங்கும் முறை.
 
சிறிலங்கா இராணுவத்தின் முன்னெறிப்பாய்ச்சலுக்கு எதிரான புலிப்பாய்ச்சல் நடவடிக்கையில் கட்டளைக்கட்டமைப்பு இருந்தாலும் சிறப்புப்பெயர் கொண்டு அழைக்கப்படாமல், பொதுவாக தளபதிகள் என்றே அழைக்கப்பட்டனர். ஆனால் நடைமுறையில்  கட்டளையை ஒழுங்குபடுத்தும் முறைக்காக தலைமைதாங்கிய தளபதி, வழிநடத்திய தளபதிகள், பகுதித்தளபதிகள், அணிப்பொறுப்பாளர்கள்என்ற ஒழுங்கு முறைதான் உள்ளார்த்தமாக இருந்தது.  பின்னர்  கட்டளையை முறையை ஒழுங்குபடுத்த மேம்படுத்தப்பட்ட வடிவமாக அப்பெயர்கள் பயன்பாட்டிற்கு வந்தன.
 
எனவே அதில் தெரிவித்திருந்த கருத்து, கட்டளை வழங்கும் ஒழுங்குமுறையை இலகுவாக விளங்கப்படுத்தும் நோக்கில் இறுதியாக நீண்ட காலம் பயன்பாட்டில் இருந்த முறைக்கூடாக புரியவைப்பதற்கு  எழுதப்பட்டது. இது பொதுவான கட்டமைப்பு. ஜயசிக்குறு நடவடிக்கை காலத்தில்தான்  கட்டளைத்தளபதி, களமுனைத்தளபதி, பகுதித்தளபதி இதுபோன்ற கட்டளை ஒழுங்குபடுத்துவதற்கான நிலைப்பெயர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
 
மேலும் விடுதலைப்புலிகள் அமைப்பில் வீரச்சாவடைந்தபின் தான் பதவி நிலைகள் வழங்கப்படும் என்பது எல்லோருக்கும் தெரியும். 1998 ஜயசிக்குறு நடவடிக்கைக் காலத்தில்தான் வீரச்சாவடைவதற்கு முன் முதன் முதலாக மூத்ததளபதிகளுக்கு கேணல் என்ற பதவி நிலை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பின் லெப்கேணல்  பின் மேஜர் என்ற பதவிநிலைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன.
 
முதன் முதல்  லெப்கேணல் விக்டர்(1986) கேணல் கிட்டு(1993) பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் (2007) பதவி நிலைகள் வீரச்சாவடைந்த பின் வழங்கப்பட்டன. 
 
2009ம் ஆண்டு இறுதிவரை யாருக்கும் வீரச்சாவடையாமல் கேணல் நிலைக்கு மேல் பதவிகள் வழங்கப்படவில்லை. வீரச்சாவடைந்தபின் தான்  பிரிகேடியர் பதவிநிலைகள் வழங்கப்பட்டன.
 
இது தவிர ஓயாத அலைகள்  தொடர்  நடவடிக்கையில்  ஒருங்கிணைப்புத்தளபதி கேணல் பானு, தளபதி கேணல் தீபன், தளபதி கேணல் பால்ராஜ் என்றே பதவி நிலைகள் இருந்தன. 
 
எனவே விசுகு   விடுதலைப்புலிகளின் கட்டளை வழங்கும் ஒழுங்குமுறையையும் அதி உயர் பதவி என்ன என்பதையும் புரிந்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.
 
மற்றும் ஒரு சண்டை தலைவரால் கட்டமைக்கப்படும் முறையை புலிப்பாய்ச்சல் சண்டைக்கூடாகவே பார்க்கலாம். திட்டமிட்ட தாக்குதலின் பிரதான திட்டத்தை வகுத்த தலைவர், புலிப்பாய்ச்சல் சண்டைக்கட்டமைப்பில் தரை நடவடிக்கைக்கு பிரதான தளபதிகளாக சொர்ணம், பால்ராஜ்  ஆகியோரையும், காங்கேசன்துறை துறைமுகத்தில் ஒரு திசைதிருப்புத்தாக்குதல் நடவடிக்கைக்கு கடற்புலிகளின் தளபதி சூசை அவர்களையும்  நியமித்திருந்தார். அதேநேரம், அளவெட்டிப்பகுதிக்குள்ளால் கரும்புலிகள் மற்றும் விசேடவேவுப்பிரிவு உள்ளடங்கலாக ஒரு அணியை உள்ளனுப்பி இராணுவத்தின் உள் செயற்பாட்டைக் குழப்பும் நடவடிக்கைக்கான ஒரு செயற்பாடும் முன்னெடுக்கப்பட்டது. மேலும் விமான எதிர்ப்பு ஏவுகணைப்பிரிவும் உள்வாங்கப்பட்டிருந்தது.
 
இது தவிர தகவல் ரீதியாக பிரதான மொனிற்றறிங்  மற்றும் புலனாய்வுத்துறை பொட்டம்மானால் வழங்கப்படும் இராணுவ நகர்வு தொடர்பான தகவல்கள் தலைவருக்கு நேரடியாகச் செல்லும். அத்துடன்,  சண்டைப்பின் களத்திற்கான பிரதான ஒழுங்குகள் தலைவர் சரிபார்ப்பார். தேவைப்படின் மேலதிக அணிகளையும் சிறப்பு அணிகளையும் அனுப்பி வைப்பார். தரைப்படை,கடற்புலிகள், கரும்புலிகள், விமான எதிர்ப்பு, இராணுவ தகவல் பரிமாற்றம், சண்டைக்கான பிற ஒழுங்குகள் போன்ற தனித்தனி நடவடிக்கைகளை தலைவர் தனது நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்து ஒழுங்கு படுத்துவதைத்தான் தலைவரின் நேரடி வழிநடத்தலில் என்று சொல்வது.  
 
தரைப்படை தலைமைக்கு  தரைவழித்தாக்குதலை முன்னெடுக்கும் பொறுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ஏனைய ஒவ்வொரு சண்டைக்கான கட்டமைப்புக்களும் தனித்தனியாக தலைவரால் நேரடியாகவே பொறுப்பாளர்கள் ஊடாகவே கையாளப்பட்டன. மேலும் புலனாய்வுத்துறை அல்லது பிரதான மொனிற்றறிங்(ஒட்டுக்கேட்டல்) மூலம் கிடைக்கும்  இராணுவ நகர்வு தொடர்பான முக்கிய தகவல்களை சம்பந்தப்பட்டவர்களுக்குத் தலைவர் கொடுப்பார். உதாரணமாக இராணுவம் வேறு ஒரு நகர்வை எடுக்கப்போகிறான் என்ற தகவலோ. அல்லது இராணுவம் நிலைகுலைந்துவிட்டது, தடுமாறிக் கொண்டிருக்கின்றது அல்லது எமது அணிகள் ஒரிடத்தில் மாட்டுப்பட்டுவிட்டன போன்ற தகவல்களை உடனடியாகத் தரைப்படைத்தலைமைக்கு வழங்கி அதைக்கையாள்வதற்குரிய திட்டம் அல்லது தகவலைப் பகிர்ந்து கொள்வார். அவர்கள் அதைப்பொறுப்பெடுத்து முன்னெடுத்தார்கள்.
 
திசை திருப்பலுக்கான கரும்புலி அணிகள் உள்நகர்த்தப்பட்டபோது,  தரைப்படைத்தலைமை முக்கிய அணியை வைத்து பாதையை உடைத்து உள்நகர்த்துவதுடன் பணி முடிந்துவிட்டது. பின்னர் அதற்குரிய பொறுப்பாளர் அதை தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் வழிநடாத்துவார். இதற்கும் தரைப்படைத்தலைமைக்கும் கட்டளை ரீதியான தொடர்பில்லை. இப்படித்தான் புலிப்பாய்ச்சல் சண்டை தலைவரால் வழிநடாத்தப்பட்டது. இவ்வாறு சண்டைக்கான பல கட்டமைப்புக்களையும் ஒருங்கிணைத்து திட்டங்களையும் தேவையான அறிவுறுத்தல்களையும் கட்டளைகளையும் வழங்கி ஒழுங்குபடுத்தியதைத்தான் தலைவரின் நேரடி வழிநடத்தலில் நடைபெற்ற சண்டை என்று சொல்லப்பட்டது. 
 
விசுகு யாழ்களத்தில் நான் பார்த்த உண்மையான தேசப்பற்றாளர்களில் நீங்கள் ஒருவர். உங்களுடைய பதிவுகள், விவாதங்களைப் பார்த்திருக்கின்றேன். போராட்டத்தின் மீதும் தமிழ் மக்கள் மீதும் அளவுகடந்த பற்று வைத்துள்ளீர்கள். இன்றைய நிலைக்காக அதிகம் வருத்தப்பட்டிருக்கின்றீர்கள். உங்களுடைய அந்தப்பற்றுக்குத் தலைசாய்த்து நீங்கள் கேட்டதை எழுத வேண்டிய கடமை எனக்கு உண்டு. ஆனால் விரிவாக எழுதப்போனால் நீண்டு செல்லும் என்பதால் முடிந்தவரை சுருக்கமாக எழுதியுள்ளேன். உங்களுக்கான பதில் கிடைத்திருக்கும் என நம்புகின்றேன்.  

Edited by காளமேகம்

  • தொடங்கியவர்

இது தவிர தகவல் ரீதியாக பிரதான மொனிற்றறிங்  மற்றும் புலனாய்வுத்துறை பொட்டம்மானால் வழங்கப்படும் இராணுவ நகர்வு தொடர்பான தகவல்கள் தலைவருக்கு நேரடியாகச் செல்லும். அத்துடன்,  சண்டைப்பின் களத்திற்கான பிரதான ஒழுங்குகள் தலைவர் சரிபார்ப்பார். தேவைப்படின் மேலதிக அணிகளையும் சிறப்பு அணிகளையும் அனுப்பி வைப்பார். தரைப்படை,கடற்புலிகள், கரும்புலிகள், விமான எதிர்ப்பு, இராணுவ தகவல் பரிமாற்றம், சண்டைக்கான பிற ஒழுங்குகள் போன்ற தனித்தனி நடவடிக்கைகளை தலைவர் தனது நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்து ஒழுங்கு படுத்துவதைத்தான் தலைவரின் நேரடி வழிநடத்தலில் என்று சொல்வது.  

தரைப்படை தலைமைக்கு  தரைவழித்தாக்குதலை முன்னெடுக்கும் பொறுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ஏனைய ஒவ்வொரு சண்டைக்கான கட்டமைப்புக்களும் தனித்தனியாக தலைவரால் நேரடியாகவே பொறுப்பாளர்கள் ஊடாகவே கையாளப்பட்டன. மேலும் புலனாய்வுத்துறை அல்லது பிரதான மொனிற்றறிங்(ஒட்டுக்கேட்டல்) மூலம் கிடைக்கும்  இராணுவ நகர்வு தொடர்பான முக்கிய தகவல்களை சம்பந்தப்பட்டவர்களுக்குத் தலைவர் கொடுப்பார். உதாரணமாக இராணுவம் வேறு ஒரு நகர்வை எடுக்கப்போகிறான் என்ற தகவலோ. அல்லது இராணுவம் நிலைகுலைந்துவிட்டது, தடுமாறிக் கொண்டிருக்கின்றது அல்லது எமது அணிகள் ஒரிடத்தில் மாட்டுப்பட்டுவிட்டன போன்ற தகவல்களை உடனடியாகத் தரைப்படைத்தலைமைக்கு வழங்கி அதைக்கையாள்வதற்குரிய திட்டம் அல்லது தகவலைப் பகிர்ந்து கொள்வார். அவர்கள் அதைப்பொறுப்பெடுத்து முன்னெடுத்தார்கள்.

இராணுவ நடவடிக்கையை கண்காணித்ததும் ஒட்டு கேட்டதும் புலநாய்வு பிரிவா...?? அப்படி எப்பவுமே இருக்க வில்லையே...?? 

புலிகளின் கட்டமைப்பை பற்றி யாராவது பினாத்திறதை கேட்டு போட்டு சேத்து வைச்சு அவிக்கிறீர்... நீங்கள் செய்யிற வேலையை தான் மற்றவன் செய்யிறான் எண்டு நினைக்க தோணுதோ...??

மற்ற விசயம் எல்லாம் எங்கட இதயசந்திரன் , அரூஸ் ,  தாரகி ,  ஜெயராஜ் அண்ணை ,  அதைவிட முக்கியமாய்  DBS ஜெயராஜ்  எழுதின கட்டுரைகளை வாசிச்சாலே போதும்...  எழுதலாம்.... !   ஆனா முக்கியமானதிலை கோட்டை விட்டு விட்டீரே மக்கா...  

விசுகு யாழ்களத்தில் நான் பார்த்த உண்மையான தேசப்பற்றாளர்களில் நீங்கள் ஒருவர். உங்களுடைய பதிவுகள், விவாதங்களைப் பார்த்திருக்கின்றேன். போராட்டத்தின் மீதும் தமிழ் மக்கள் மீதும் அளவுகடந்த பற்று வைத்துள்ளீர்கள். இன்றைய நிலைக்காக அதிகம் வருத்தப்பட்டிருக்கின்றீர்கள். உங்களுடைய அந்தப்பற்றுக்குத் தலைசாய்த்து நீங்கள் கேட்டதை எழுத வேண்டிய கடமை எனக்கு உண்டு. ஆனால் விரிவாக எழுதப்போனால் நீண்டு செல்லும் என்பதால் முடிந்தவரை சுருக்கமாக எழுதியுள்ளேன். உங்களுக்கான பதில் கிடைத்திருக்கும் என நம்புகின்றேன்.

திருப்பி அடி விளாமல் இருக்க காலிலை விழும் தந்திரமா...?? புலிகளிலை எப்போதும் இல்லாத புது தந்திரமாக இல்லை இருக்கு... இப்பெல்லாம் இதை பாவிச்சு தான் பயன் பெறுகிறிங்களா...?? :D :D :D

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

அட போங்கப்பா புலிகளே ஆயுதத்த மௌனிச்சு தங்கள் அமைப்ப கலைச்சு 4 வருஷம் ஆச்சு நீங்கள் இன்னும் சண்டை போட்டுக்கொண்டு...

அட போங்கப்பா புலிகளே ஆயுதத்த மௌனிச்சு தங்கள் அமைப்ப கலைச்சு 4 வருஷம் ஆச்சு நீங்கள் இன்னும் சண்டை போட்டுக்கொண்டு...

உண்மை தான் சுண்டு...அது தான் இவையளின் வீரம்  :lol:

  • தொடங்கியவர்

அட போங்கப்பா புலிகளே ஆயுதத்த மௌனிச்சு தங்கள் அமைப்ப கலைச்சு 4 வருஷம் ஆச்சு நீங்கள் இன்னும் சண்டை போட்டுக்கொண்டு...

நான் போராளியாக இருந்ததாக  இந்த களத்திலை இணைஞ்சது முதல் என்னை பிரபல்யப்படுத்தியது கிடையாது...  ஒரிரு தடவை அர்சுணின் கேவலப்படுத்தல்களுக்காக சொல்ல வேண்டி வந்திருக்கலாம்... 

அப்படி ஒரு அடையாளம் என்னை களத்தில் இருந்து பலரிடம் இருந்து அன்னியப்படுத்தி வைக்கும் என்பதால் நான் அப்படி சொல்வதில் நாட்டமும் கொண்டிருக்கவில்லை... 

ஆனால்  தலைவர் பற்றிய தகவல் கோவையில் நான் அடைந்த அனுபவத்தை சொல்லவேண்டும் எண்று நினைத்தமையை  ஆதாரமே இல்லாமல் சிலர் கொச்சை படுத்துவதை கூட ஓரிரு பதிகளோடு தவிர்க்கவே பர்த்தேன்...  ஆனால்  கிருபன் , விசுகு , இசைக்கலைஞன்  நயமாக பேசிய பின்னரும்  விடுவதாக இல்லை... 

போராளி என்பவன் எப்படி இருந்து இருப்பான் இருக்க வேண்டும் எனும் உங்களின் எண்ணத்துக்கு விரோதமாக  பொதுமக்களையோ இல்லை முன்னாள் போராளிகளையோ கொச்சை படுத்துவதையோ வதைப்பதையோ  விடுதலைப்புலிகள் அமைப்பு எப்போதும் அனுமதித்தது கிடையாது...  போராளியாக இருந்த எல்லாருக்குமே அது தெரியும்...  அப்படி நடந்து கொள்ளும் போராளிகள் இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்படுவதும் இயக்க மரபு... 

இருக்கும் போது தங்களை முன்னாள் போராளிகள் எண்று சொல்லிக்கொள்ளும் சிலரால் செய்யப்படும் இந்த விதமான கேவலப்படுத்தல்கள்,  அவர்கள் செயற்பாடுகள் , தனி மடல்கள் இப்படி எல்லாம் எண்று பார்க்கும் போது இப்போதும் இவர்கள்  ஒரு குழு நிலையில் இயங்குவது மட்டும் உறுதியாக தெரிந்தது...  நான் இங்கு அவர்களை விட தனித்து இயங்குவதாக அவர்கள் நினைத்து என் மீது கொண்ட காள்புணர்வால்  நடத்தப்படும் அவதூறான தாக்குதல் என்பதும் புரிந்தது...   இதில் சாத்திரியாரின் பங்கும்  அதை உறுதிப்படுத்தியது... ! 

இப்படி கேவலமானவர்களை முன்னாள் போராளிகளாக இருப்பார்கள் எண்று கூட என்னால் நினைக்க முடியவில்லை...  அதுக்கு தேவையான கண்ணியம் இவர்களிடம் கிடையாது ... மற்றும் இப்படி இவர்களால் ஏற்படுத்தப்படும் மன உளச்சல் இதை போல்  வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதினால் மட்டுமே ஆரம்பித்தேன்... 

( இது உங்களின் மனதை காயப்படுத்தி இருந்தால் உங்களிடம் தனிப்பட மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்) 

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

பொதுமக்கள் தண்ணீர் போன்றவர்கள்.. தலைவர்கள் அதை ஏந்தும் பாத்திரம் போன்றவர்கள்..

பொதூமக்களில் இருந்து தொண்டர்கள் தலைவர்களிடம் சேரும்போது அந்தத் தலைவரின் பாத்திரத்தைப் பிரதிபலிப்பார்கள்.. :rolleyes:

பாத்திரம் நேர்த்தியாக இருந்தால் தண்ணீரின் வடிவமும் நேர்த்தியாக இருக்கும்.. ஓட்டைப்பாத்திரம் என்றால் தண்ணீர் ஓடிக்கொண்டே இருக்கும்.. :D கோணல் பாத்திரம் என்றால் தண்ணீரின் வடிவமும் அலங்கோலமாகத் தெரியும்..

ஆனால் நேர்த்தியான பாத்திரங்களுக்கும் பிரச்சினைகள் வருவதுண்டு.. தண்ணீரில் பாதரசம் அல்லது ஆர்சனிக் கலந்திருந்தால் அதுவும் பார்வைக்கு நேர்த்தியாகத்தான் தெரியும்.. அவை விஷம் என்று அறிய சில காலங்கள் பிடிக்கலாம்.. :rolleyes:

ஆரம்பம் முதலே நாட்டுக்காக இயக்கத்தில் சேர்ந்தவர்கள் பலர்.. ஆனால் பரீட்சை தோல்வி, காதல் தோல்வி, வேலை இல்லை என்று சேர்ந்தவர்களும் உள்ளார்கள்.. இவர்களில் திருந்தியவர்கள் போக ஏனையோர் விலகி நின்று படம் காட்டல் நடப்பதும் சாத்தியமே.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

காளமேகம் தலைவரின் மெய்ப்பாதுகாவலராக இருந்தவர் மாதிரியல்லவா தோன்றுகின்றார்!

அதிகாரபூர்வமற்ற பதிவுகள் எல்லாம் வரலாற்று உண்மைகளாகிவிடாது. எனவே உண்மை பொய்களை நிரூபிப்பதை விட்டுவிட்டு நடந்த கதைகளை எழுதுங்கள். வாசிக்க நிறையப்பேர் இருக்கின்றோம். :)

முன்னர் எல்லாம் கிருபனின் கருத்தில் ஒரு நீதி,நியாயம் இருக்கும்.தற்போது அது காணக் கிடைக்குதில்லை :( பழகினவர்கள்/தெரிந்தவர்கள்,முகப் புத்தக நண்பர்கள் என்று பார்த்து ஆதரவாக கருத்தெழுதுவதும்,பச்சை குத்துவதும் :icon_mrgreen: என்னையா நடந்தது :)

காளமேகம் தலைவரின் மெய்ப்பாதுகாவலராக இருந்தவர் மாதிரியல்லவா தோன்றுகின்றார்!

அதிகாரபூர்வமற்ற பதிவுகள் எல்லாம் வரலாற்று உண்மைகளாகிவிடாது. எனவே உண்மை பொய்களை நிரூபிப்பதை விட்டுவிட்டு நடந்த கதைகளை எழுதுங்கள். வாசிக்க நிறையப்பேர் இருக்கின்றோம். :)

முன்னர் எல்லாம் கிருபனின் கருத்தில் ஒரு நீதி,நியாயம் இருக்கும்.தற்போது அது காணக் கிடைக்குதில்லை :) பழகினவர்கள்/தெரிந்தவர்கள்,முகப் புத்தக நண்பர்கள் என்று பார்த்து ஆதரவாக கருத்தெழுதுவதும்,பச்சை குத்துவதும் :icon_mrgreen: என்னையா நடந்தது :unsure:
  • தொடங்கியவர்

காளமேகம் சொன்ன பொட்டம்மானின் பொறுப்பில் இருந்த  புலநாய்வுது துறையாலை இராணுவ புலநாய்வு தகவகள் சண்டைகளுக்கு வளங்கப்படும் எனும் தகவல்  உண்மையானது கிடையாது...   அப்பட்டமான பொய்...  போராட்டம் முடிந்த பிறகு இதை பற்றி பேசுவது தவறு இல்லை என்பதால் சொல்ல முனைகிறேன்...

1994 பங்குனி மாதம் வரைக்கும்  இராணுவ தொலை தொடர்பை ஒட்டுக்கேட்ப்பது முரசு மோட்டையில் வீரச்சாவடைந்த  கேணல் தினேஸ்( வீரத்தேவன் ) அண்ணையின் கீழ் தொழில் நுட்ப பிரிவோடை இயங்கி வந்தது...   1991  கார்த்திகை மாதம் முதல்  விசேட வேவுப்பிரிவு தோற்றம் பெற்று அதுக்கு பயிற்சி ஆசிரியராகவும்  பொறுப்பாளராகவும் கேணல் சசிகுமார்  மாஸ்ரர்  இருந்தார்...   இந்த இருவருமே மாறி மாறி அதை இயக்கி வந்தனர்...

 பின்னர் பூநகரி தாக்குதலின் பின்னர் தலைவரால் ஒரு மாற்றம் கொண்டு வரப்படது ... இராணுவ புலநாய்வு பிரிவு அல்லது படைய புலநாய்வு பிரிவு தனியாக ஆரம்பிக்க பட்டது...   ஆங்கிலத்தில் Military Intelligence எண்று அழைக்கப்படும்...  அதற்க்கு பொறுப்பாக கேணல் சசிகுமார் மாஸ்ர் நியமிக்க பட,   விசேட வேவுப்பிரிவுக்கு  பிரிகேடியர் தீபன் அண்ணை நியமிக்க பட்டார்.. 

Military intelligence பற்றி பொதுவாக சொன்னால்  சரத் பொன்சேகா யாழ்ப்பாணத்தில் வைத்து சொன்னாரே தற்போதைய இராணுவ தளபதி புலிகளிடம் பணம் பெற்றவர் எண்று  அது இந்த military intelligence கீழ் தான் வரும்...   தொலை தொடர்பை ஒட்டு கேட்ப்பது இலகுவானது ஆனால் அவர்கள் பயன் படுத்தும் சங்கேத குறுஞ்செய்திகளை அவர்கள் வைத்திருக்கும் ஒரு chord sheet  வைத்திருந்தால்  மட்டுமே  உடைப்பது சாத்தியம்...  விலக்கு வாங்கப்ப்ட்டவர்கள் அதையும் இராணுவ நகர்வுகள் சம்பந்தமான சமிக்கைகளையும் கொடுப்பார்கள்... 

அதையும் தாண்டி பார்த்தால்  இராணுவ கட்டுப்பாட்டுக்குள் போய் வரும் பொதுமக்கள்,  இராணுவ சாரதிகள் , இராணுவ தொலைத்தொடர்பு சாதன தொடர்பாளர்கள் , மாற்று ஆயுத குழுக்கள் எண்டு வலை நீழும்...

இந்த military intelligence தகவல்களும்  விசேட வேவுப்பிரிவுன் தகவல் அறிக்கைகளும் , தொகுப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் பகுப்பாய்வு செய்யப்படும்...   அவை  சரியாக இருக்கும் பட்சத்திலேயே சண்டைக்கான திட்டமிடல் ஆரம்பிக்கும்...  இல்லை எண்றால் வேவுப்பிரிவினரின்  நொங்கை பிதுக்கி எடுக்கப்படும்...   

1996 ல் மிக முக்கிய ஆவணங்களோடை முக்கியமான ஒருவனான ஒப்பிலாமணி எனும்  ஒருவன் படையப்புலநாய்வு தகவல்களோடை  இராணுவதில் சரண் அடந்தான்...   அது யாழ்பாணம் மீட்ப்புக்கு இராணுவத்துக்கு மிகவும் கை கொடுத்தது...  பின்னர் இராணுவம் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய போது  விசாரணை பிரிவுக்கு பொறுப்பாக  இருந்தான்... 

இதேடை இதிலை இருந்து களண்டு கொள்கிறேன்... 

நண்றி வணக்கம்... 

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

2009 ம் அண்டு புதுக்குடியிருப்பில் நடைபெற்ற தாக்குதலில் தீபன் அண்ணை, கடாபி அண்ணை, விதுஷா அக்க்கா, துர்க்கா அக்கா ஆகியோர்  உட்பட பலர் வீரச்சாவடைந்தனர். இரணப்பாலையும் எதிரியின் கைவசம் சென்று விட்டது. பொக்கணை தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான பிரதேசத்தில் சுற்றிவளைக்கப்பட்டிருந்த நேரம், முக்கிய தளபதிகளின் இழப்பால்  போராளிகளின் உளவுரண் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த தருணத்தில் ஒன்று கூடுவதே கடினமாக இருந்த நிலையில் கூட சில தளபதிகளுடன் தலைவர் கலந்துரையாடினார். அங்கு கலந்துரையாடலுக்கு சென்ற தளபதியெருவருடன் சென்ற நான் , அது முடிந்த பின் தலைவர் என்ன சொன்னவர் என்று ஆவலுடன் கேட்டேன்.

அதற்கு அவர்  சந்திக்கப்போகும் போது ‘எமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் ’ என்ற பாடலின் வரியை சொல்லி விட்டு கலந்துரையாடலைத் தொடங்கினார்.

அப்போது  ‘தீபன் கடாபி வீரச்சாவுகள் எதிர்பார்த்ததுதான் ஆனால் துர்க்கா, விதுஷா ஆகியோரின் வீரச்சாவுதான் என்னை கவலைக்குள்ளாயிருக்கிறது. நான் இருந்தாலும் மகளிர் படையணியை அவர்கள் இருவரும் தான் வளர்த்து எடுத்தார்கள். நாங்கள் தொடர்ந்து சண்டையை பிடிப்பம்’ என்று கூறினார்.

இதைச் சொல்லிய தளபதி  ‘கிளிநொச்சியில் எந்தளவிற்கு நம்பிக்கையுடன் தெளிவாக கதைத்தாரோ அதே நம்பிக்கையுடன் தலைவர் இருக்கிறார் ’ எனச் சொன்னார்

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தலைவர் தீபன்,கடாபி அண்ணாக்கள் செத்தாலும் பரவாயில்லை என்று சொன்ன மாதிரி இருக்குது.மு.வாய்க்காலில் கடைசி வரைக்கும் நின்று இருக்கிறீங்கள் தலைவரை விட்டுட்டு எப்படி உங்களால் தப்பி வர முடிஞ்சது

நான் போராளியாக இருந்ததாக  இந்த களத்திலை இணைஞ்சது முதல் என்னை பிரபல்யப்படுத்தியது கிடையாது...  ஒரிரு தடவை அர்சுணின் கேவலப்படுத்தல்களுக்காக சொல்ல வேண்டி வந்திருக்கலாம்... 

அப்படி ஒரு அடையாளம் என்னை களத்தில் இருந்து பலரிடம் இருந்து அன்னியப்படுத்தி வைக்கும் என்பதால் நான் அப்படி சொல்வதில் நாட்டமும் கொண்டிருக்கவில்லை... 

ஆனால்  தலைவர் பற்றிய தகவல் கோவையில் நான் அடைந்த அனுபவத்தை சொல்லவேண்டும் எண்று நினைத்தமையை  ஆதாரமே இல்லாமல் சிலர் கொச்சை படுத்துவதை கூட ஓரிரு பதிகளோடு தவிர்க்கவே பர்த்தேன்...  ஆனால்  கிருபன் , விசுகு , இசைக்கலைஞன்  நயமாக பேசிய பின்னரும்  விடுவதாக இல்லை... 

போராளி என்பவன் எப்படி இருந்து இருப்பான் இருக்க வேண்டும் எனும் உங்களின் எண்ணத்துக்கு விரோதமாக  பொதுமக்களையோ இல்லை முன்னாள் போராளிகளையோ கொச்சை படுத்துவதையோ வதைப்பதையோ  விடுதலைப்புலிகள் அமைப்பு எப்போதும் அனுமதித்தது கிடையாது...  போராளியாக இருந்த எல்லாருக்குமே அது தெரியும்...  அப்படி நடந்து கொள்ளும் போராளிகள் இயக்கத்தில் இருந்து வெளியேற்றப்படுவதும் இயக்க மரபு... 

இருக்கும் போது தங்களை முன்னாள் போராளிகள் எண்று சொல்லிக்கொள்ளும் சிலரால் செய்யப்படும் இந்த விதமான கேவலப்படுத்தல்கள்,  அவர்கள் செயற்பாடுகள் , தனி மடல்கள் இப்படி எல்லாம் எண்று பார்க்கும் போது இப்போதும் இவர்கள்  ஒரு குழு நிலையில் இயங்குவது மட்டும் உறுதியாக தெரிந்தது...  நான் இங்கு அவர்களை விட தனித்து இயங்குவதாக அவர்கள் நினைத்து என் மீது கொண்ட காள்புணர்வால்  நடத்தப்படும் அவதூறான தாக்குதல் என்பதும் புரிந்தது...   இதில் சாத்திரியாரின் பங்கும்  அதை உறுதிப்படுத்தியது... ! 

இப்படி கேவலமானவர்களை முன்னாள் போராளிகளாக இருப்பார்கள் எண்று கூட என்னால் நினைக்க முடியவில்லை...  அதுக்கு தேவையான கண்ணியம் இவர்களிடம் கிடையாது ... மற்றும் இப்படி இவர்களால் ஏற்படுத்தப்படும் மன உளச்சல் இதை போல்  வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதினால் மட்டுமே ஆரம்பித்தேன்... 

( இது உங்களின் மனதை காயப்படுத்தி இருந்தால் உங்களிடம் தனிப்பட மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்) 

தயாண்ணா நீங்கள் ஒரு சம்பவம் நடந்தது என்று எழுதினீர்கள்.பல பேர் வந்து அப்படி நடக்கவில்லை என்று சொன்னார்கள்.இல்லை உண்மையில் அப்படி நடந்திருந்தால் உங்களால் ஏன் அவர்களுக்கு தகுந்த பதிலைக் கூற முடியவில்லை.இயக்கத்தில் இருந்தோம் என்று சொல்லும் எல்லோரும் வந்து சொன்னப் பிறகும் நீங்கள் அப்படி இல்லை என்று சொல்லி விதண்டவாதம் செய்கிறீர்களே தவிர,அவர்களுக்கு தகுந்த பதிலை நீங்கள் எழுதவில்லை என்பது என் கருத்து.
 
கிருபனோ,இசையோ அல்லது விசுகண்ணாவோ இயக்கத்தில் இருக்கவில்லை.அதுவும் இந்த சம்பவம் நடைபெற்ற நேரம் ஊரிலேயே இருந்திருக்க மாட்டார்கள்.அவர்கள் வந்து உங்கள் பக்கம் கதைத்தால் நீங்கள் எழுதியது சரி என்று ஆகி விடாது அல்லவா.இதற்காக உங்களுக்கு எதிராக எழுதினர்வர்கள் எழுதினது எல்லாம் சரியென்றோ/பிழையென்றோ நான் சொல்ல வரவில்லை.ஆனால் நீங்கள் அவர்களுக்கு தக்க பதில் கொடுக்கவில்லை என்பது என் கருத்து.
 
யாழில் நான் உட்பட பல பேருக்கு உங்கள் மேல் மிகுந்த மதிப்பு உள்ளது அண்ணா.அவசரப்பட்டு,உணர்ச்சி வசப்பட்டு எழுதி உங்கள் மதிப்பை நீங்களே கெடுத்து கொள்ளாதீங்கோ.இது என் தாழ்மையான வேண்டுகேள்.குறை நினைக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.நன்றி
  • தொடங்கியவர்

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் தலைவர் தீபன்,கடாபி அண்ணாக்கள் செத்தாலும் பரவாயில்லை என்று சொன்ன மாதிரி இருக்குது.மு.வாய்க்காலில் கடைசி வரைக்கும் நின்று இருக்கிறீங்கள் தலைவரை விட்டுட்டு எப்படி உங்களால் தப்பி வர முடிஞ்சத

தயாண்ணா நீங்கள் ஒரு சம்பவம் நடந்தது என்று எழுதினீர்கள்.பல பேர் வந்து அப்படி நடக்கவில்லை என்று சொன்னார்கள்.இல்லை உண்மையில் அப்படி நடந்திருந்தால் உங்களால் ஏன் அவர்களுக்கு தகுந்த பதிலைக் கூற முடியவில்லை.இயக்கத்தில் இருந்தோம் என்று சொல்லும் எல்லோரும் வந்து சொன்னப் பிறகும் நீங்கள் அப்படி இல்லை என்று சொல்லி விதண்டவாதம் செய்கிறீர்களே தவிர,அவர்களுக்கு தகுந்த பதிலை நீங்கள் எழுதவில்லை என்பது என் கருத்து.

கிருபனோ,இசையோ அல்லது விசுகண்ணாவோ இயக்கத்தில் இருக்கவில்லை.அதுவும் இந்த சம்பவம் நடைபெற்ற நேரம் ஊரிலேயே இருந்திருக்க மாட்டார்கள்.அவர்கள் வந்து உங்கள் பக்கம் கதைத்தால் நீங்கள் எழுதியது சரி என்று ஆகி விடாது அல்லவா.இதற்காக உங்களுக்கு எதிராக எழுதினர்வர்கள் எழுதினது எல்லாம் சரியென்றோ/பிழையென்றோ நான் சொல்ல வரவில்லை.ஆனால் நீங்கள் அவர்களுக்கு தக்க பதில் கொடுக்கவில்லை என்பது என் கருத்து.

யாழில் நான் உட்பட பல பேருக்கு உங்கள் மேல் மிகுந்த மதிப்பு உள்ளது அண்ணா.அவசரப்பட்டு,உணர்ச்சி வசப்பட்டு எழுதி உங்கள் மதிப்பை நீங்களே கெடுத்து கொள்ளாதீங்கோ.இது என் தாழ்மையான வேண்டுகேள்.குறை நினைக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன்.நன்றி

ஓ நீங்களும் பக்க சார்ப்பா...??  சரி பார்ப்பம்...  நிறைய பதில் சொல்லி இருக்கிறனே...??  அவர்கள் எதை பிழை எண்டுச்சினம்...??   சொன்ன பதிலுக்காவது ஏதும் குறிப்பிட்டார்களா....?? 

நடந்த சம்பவங்கள் பற்றி நிறைய கேட்டும் இருக்கிறேன் எதுக்காவது பதில் வந்ததா...?? 

அதுக்கு நான் என்னை பற்றி சொல்ல வேண்டி இருக்கும்   என்பதால் நிறய சொல்லவில்லை... !

சீரணிப்பாலத்துக்கு ஒரு பக்கம் வட்டுக்கோட்டை பக்கமாக  ஒரு நாள் முழு நிலவு எண்டும் பார்க்காமல்  மறு நாள் சண்டைக்காய் சொர்ணம் அண்ணை எங்களை ( விசேட வேவு பிரிவில் இருந்த )வேவுக்காக  விட்டிருந்தார்...    அடுத்த அணியை  சண்டிலிப்பாய் பக்கம்  விட்டிருந்தார்...   நாங்கள் இருந்த சாக்கு எல்லாம் வெட்டி சுத்தி கொண்டு  இரவெல்லாம் தவண்டு திரிஞ்சு இரண்டு சாதகமான பாதையை கண்டிருந்தோம்... 

அடுத்தநாள்  கூலாக வந்த  சொர்ணம் அண்ணை உங்கட பாதை வேண்டாம் நாங்கள் மற்ற அணி பாத்த பக்கம் தான் இறங்க போறம் எண்டு சொல்லி போட்டு போட்டார்... 

நாங்கள் ஒரு ஐஞ்சு பேர் பிறகு தீவகம் அராலிக்கை வேவுக்காக பொன்னாலையில நிண்ட இன்னும் 5 பேரையும் சேர்ந்து 10  பேரா ஒரு இடத்திலை விட்டிச்சினம்...    

சண்டை காலை 5 மணிக்கு ஆரம்பிச்சுது ஒரு 7 மணி அளவிலை எங்களை கூப்பிட்டு  சண்டை பிடிப்பவர்களுக்கு  பக்கவாட்டாக எந்த தாக்குதலும் வராமல் இருக்க  ஒரு கட்டவுட் போட சொன்னதால் மேலை நான் குறிப்பிட்ட இடத்துக்கு போய் சேர்ந்தோம்...  ஏற்கனவே இருந்த இராணூவ நிலை இடத்திலை எதிர்பாராமல் ஒரு சின்ன சண்டை எங்களை முன்னாலை எதிர்ப்பார்த்து இருந்து இருபான் நாங்கள் பக்கவாட்டாக போய் ஏறி இருந்தோம்... !  

இரவு முதல் சும்மா இருந்ததால் எங்களின் வோக்கிகளின் நடந்த சண்டையின் நெர் முக வர்ணனை கேட்ப்பதுக்காக அணைக்காமல் இருந்ததாலும் , கேட்டு கொண்டு இருந்ததால்  மின் கலன் முடிஞ்சு போச்சு...   பிரதான சண்டையிலை நாங்கள் இல்லாததாலை எங்களுக்கு மேலதிகமாக தரவும் இல்லை... 

அதுக்கும் மேலை நான் முன்னமே எழுதி இருந்தது தான் நடந்தது...   நாங்கள் இருந்த பகுதிக்கு தலைவர் வந்தார் என்பது மட்டுமே நான் குறிப்பிட்டது...  பிரதான சண்டையில் எங்களின் பங்குகள் இருந்தமை பற்றி கூட சொல்ல வில்லை...  எனது கூற்றை  உறுதிப்படுத்த  விசேட வேவுப்பிரிவில் இருந்தவர்களை நீங்களே விசாரித்து கொள்ளலாம்...  மற்றும் படி தான் முன்னணிக்கு போனதை தலைவர் விளம்பர படுத்தும் அரசியல் வாதி கிடையாது...

Edited by தயா

நீங்கள் போராளியாய் இருந்திருந்தால் எந்த முகாமில், என்ன பெயரில் இருந்தனீர்கள் என்று சொல்லலாம் தானே. அதற்கு என்ன தயக்கம்?

  • தொடங்கியவர்

நீங்கள் போராளியாய் இருந்திருந்தால் எந்த முகாமில், என்ன பெயரில் இருந்தனீர்கள் என்று சொல்லலாம் தானே. அதற்கு என்ன தயக்கம்?

உங்களுக்கு எல்லாம் என்ன பிரச்சினை எண்டு விளங்கேல்லை... 

நான் 1990 ல் இருந்து 1999 வரைக்கும் புலிகளிலை இருந்தனான்....   கிட்டத்தட்ட 9 வருடம் என் இளமையின் பெரும் பகுதியை துலைச்சு போட்டு  ஏற்கனவே பட்ட காயங்களால்  குளிர் கஸ்ரப்பட்டு கல்வியும் வேலையும் எண்று என்னை முதலில் இருந்து வளர்த்து இருக்கிறேன்...    இண்டைக்கு வரைக்கும்  கடந்து போன 9 வருடங்களை பெருமையாக நினைத்ததும் கிடையாது  கவலைப்பட்டதும் கிடையாது என்னாலை முடிந்த வரைக்கும் ஏதாவது செய்தன் எனும் நிலைதான்.... !  

இங்கை எனது கடந்த காலத்தை அறிய ஏன் துடிக்கிறீர்கள் என்பதோ அதை கேவலப்படுத்துவதால் உங்களுக்கு எல்லாம் என்ன நன்மை என்பதோ எனக்கு புரியவில்லை... 

உங்கள் எல்லாரையும் போல  கீழ்த்தரமான கூட்டத்துக்காகவும் சேர்த்து தலைவர் போராடினார் நாங்களும் போனோம் எண்ற மன நிலை மட்டும் தான் இப்போது இருக்கிறது... 

  • கருத்துக்கள உறவுகள்

ஓ நீங்களும் பக்க சார்ப்பா...??  சரி பார்ப்பம்...  நிறைய பதில் சொல்லி இருக்கிறனே...??  அவர்கள் எதை பிழை எண்டுச்சினம்...??   சொன்ன பதிலுக்காவது ஏதும் குறிப்பிட்டார்களா....?? 

நடந்த சம்பவங்கள் பற்றி நிறைய கேட்டும் இருக்கிறேன் எதுக்காவது பதில் வந்ததா...?? 

அதுக்கு நான் என்னை பற்றி சொல்ல வேண்டி இருக்கும்   என்பதால் நிறய சொல்லவில்லை... !

சீரணிப்பாலத்துக்கு ஒரு பக்கம் வட்டுக்கோட்டை பக்கமாக  ஒரு நாள் முழு நிலவு எண்டும் பார்க்காமல்  மறு நாள் சொர்ணம் அண்ணை எங்களை ( விசேட வேவு பிரிவில் இருந்த )  விட்டிருந்தார்...    அடுத்த அணியை  சண்டிலிப்பாய் பக்கம்  விட்டிருந்தார்...   நாங்கள் இருந்த சாக்கு எல்லாம் வெட்டி சுத்தி கொண்டு  இரவெல்லாம் தவண்டு திரிஞ்சு இரண்டு சாதகமான பாதையை கண்டிருந்தோம்... 

அடுத்தநாள்  கூலாக வந்த  சொர்ணம் அண்ணை உங்கட பாதை வேண்டாம் நாங்கள் மற்ற அணி பாத்த பக்கம் தான் இறங்க போறம் எண்டு சொல்லி போட்டு போட்டார்... 

நாங்கள் ஒரு ஐஞ்சு பேர் பிறகு தீவகம் அராலிக்கை வேவுக்காக பொன்னாலையில நிண்ட இன்னும் 5 பேரையும் சேர்ந்து 10  பேரா ஒரு இடத்திலை விட்டிச்சினம்...    

சண்டை காலை 5 மணிக்கு ஆரம்பிச்சுது ஒரு 7 மணி அளவிலை எங்களை கூப்பிட்டு  சண்டை பிடிப்பவர்களுக்கு  பக்கவாட்டாக எந்த தாக்குதலும் வராமல் இருக்க  ஒரு கட்டவுட் போட சொன்னதால் மேலை நான் குறிப்பிட்ட இடத்துக்கு போய் சேர்ந்தோம்...  ஏற்கனவே இருந்த இராணூவ நிலை இடத்திலை எதிர்பாராமல் ஒரு சின்ன சண்டை எங்களை முன்னாலை எதிர்ப்பார்த்து இருந்து இருபான் நாங்கள் பக்கவாட்டாக போய் ஏறி இருந்தோம்... !  

இரவு முதல் சும்மா இருந்ததால் எங்களின் வோக்கிகளின் நடந்த சண்டையின் நெர் முக வர்ணனை கேட்ப்பதுக்காக அணைக்காமல் இருந்ததாலும் , கேட்டு கொண்டு இருந்ததால்  மின் கலன் முடிஞ்சு போச்சு...   பிரதான சண்டையிலை நாங்கள் இல்லாததாலை எங்களுக்கு மேலதிகமாக தரவும் இல்லை... 

அதுக்கும் மேலை நான் முன்னமே எழுதி இருந்தது தான் நடந்தது...   நாங்கள் இருந்த பகுதிக்கு தலைவர் வந்தார் என்பது மட்டுமே நான் குறிப்பிட்டது...  பிரதான சண்டையில் எங்களின் பங்குகள் இருந்தமை பற்றி கூட சொல்ல வில்லை...  எனது கூற்றை  உறுதிப்படுத்த  விசேட வேவுப்பிரிவில் இருந்தவர்களை நீங்களே விசாரித்து கொள்ளலாம்...  மற்றும் படு தான் முன்னணிக்கு போனதை தலைவர் விளம்பர படுத்தும் அரசியல் வாதி கிடையாது... 

தயாண்ணா நான் ஒரு பக்கச் சார்பாகவும் எழுதேல்ல.அப்படி எழுதுறது என்டால் உங்கட பக்கம் தான் நின்று எழுதியிருப்பேன்.ஏனெனில் அவர்கள் யாழுக்கு வர முதலே நீங்கள்,என்னோட யாழில் இருக்கிறீங்கள் :)

Edited by nunavilan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.