Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாசாவின் Voyager -1 விண்கலம் சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறிச் சாதனை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_66509267_r2620085-voyager_spacecraft-sp

அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனம் சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்னர் (1977 இல்) விண்ணுக்கு அனுப்பிய Voyager விண்கலம் நீண்ட பயணத்தின் பின்னர் சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறி எமது பால்வீதி அகிலத்தின் இன்னொரு பகுதியில் பயணித்துக் கொண்டிருப்பதாக நாசா அறியத்தந்துள்ளது.

மனிதன் உருவாக்கிய ஒரு பொருள் விண்வெளியில் இத்தனை தூரம் பயணித்தமை இதுவே முதற்தடவையும் ஆகும்.

Voyager இப்பொழுது பூமியில் இருந்து சுமார் 19 பில்லியன் கிலோமீற்றர்கள் தொலைவில் உள்ளதாகவும் அதில் இருந்து சமிக்ஞைகளைப் பெற 17 மணி நேரங்கள் ஆவதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அத்தோடு சில சந்தர்ப்பங்களில் Voyager இல் உள்ள உணரிகள் அதன் உள்ளக சூழ்நிலை மாற்றமடைவதை இனங்காட்டியதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

_69806156_2a196dfb-fba1-4851-8c8d-22945b

Voyager இன்னும் 40,000 ஆண்டுகள் தற்போதைய அதன் வேகத்தில் (45 கிலோமீற்றர்கள்/செக்கன்) பயணித்தால் மட்டுமே இன்னொரு நட்சத்திர மண்டலத்தை அடைய முடியும் என்றும் நாசா விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர்.

_69809416_dot.jpg

[Voyager எமது பூமியை படம் பிடித்த போது பூமி மங்கலான வெளிர் நீல புள்ளியாகத் தோன்றும் காட்சி.]

http://kuruvikal.blogspot.co.uk/

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவியாரே1 விஞ்ஞானசெய்திக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

36 வருடமாக... எந்தப் பழுதும் இல்லாமல், 19 பில்லியன் கிலோ மீற்றர்கள் இந்த விண்கலம் பயணித்ததே.... ஆச்சரியம்.
நல்ல பயனுள்ள தகவல் நெடுக்ஸ்.

நன்றி நெடுக்ஸ். 
 
யான் அறிந்த இன்னும் சில தகவல்கள்...
 
Voyagerஇல் தங்கத்தட்டில் (ஒரு ரெக்கோடர்) பதிவு செய்து அனுப்பியுள்ளார்கள். அதில் பூமியில் உள்ள பல்லின மக்களிடமிருந்து 55 மொழிகளில் பதிவு செய்யப்பட்ட வாழ்த்து ஒலிகளையும் 70களில் பிரபல்யமானவர்களின் இசையினையும் வேற்றுகிரகவாசிகள் கேட்பதற்க்காக பொருத்தியுள்ளார்கள். திரவிட மொழிகளில் தெலுங்கும் கன்னடத்திலும் மட்டும் வாழ்த்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமக்கென்றொரு நாடு இல்லாதவர்கள் தமிழர்கள், ஒரு கிரகத்தை சொந்தமாக எப்படி வைத்திருப்பார்கள் என்றோர் அலட்சியமா? அல்லது தமிழன் எங்கிருந்தாலும் வேறு மொழிகளில் ஆர்வமுள்ளவன் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையா?
 
golden_rec_sidebar.gif
 
இவற்றின் ஆரம்ப இலக்கு வியாழன், சனி, யூரெனஸ் போன்ற அந்நேரத்தில் அதிகம் அறியப்படாத கிரகங்களைப் பற்றி அறிந்து கொள்வதற்க்காக. .Voyager 2,  செப்டம்பர் 5, 1977இலும், அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்   ஆகஸ்ட் 20, 1977 இல் Voyager 1ம் அனுப்ப‌ப்பட்டது. இரண்டும் வெவ்வேறு பாதைத் தெரிவுகளில் ஒன்றன் பின் ஒன்றாக‌ பயணித்தாலும் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் பயணிக்க முடிந்தது என்றால் அதற்கு காரணம் மைக்கேல் மினோவிச் என்ற கணித மேதைதான். மணிக்கு பத்தாயிரக்கணக்கான மைல்கள் வேகத்தில் தன்னைத்தானே சுற்றிகொண்டு சூரியனயும் வலம் வரும் கிரகங்களின் வேகத்தை இந்த விண்கலங்களுக்கு பெற்றுக்கொடுத்த அவரது கணிப்பு 40 வருட கால பயணத்தை 10 வருடங்களாக சுருக்கியதோடல்லாது இன்று வெவ்வேறு திசைகளில் இரண்டு விண்கலங்களும் சூரிய ஆதிக்கத்திலிருந்து விலகி பயணித்துக் கொண்டிருக்கின்றன.
 
http://www.youtube.com/watch?v=7BP4a5uyV1M
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பகிர்விற்கு நன்றி சிமால் பொயிண்ட். :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கென்றுதான் ஆங்கிலம் இருக்கிறதே என்று விட்டிருப்பார்கள்..

Edited by இசைக்கலைஞன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கென்றுதான் ஆங்கிலம் இருக்கிறதே என்று விட்டிருப்பார்கள்..

கவலை வேண்டாம் இசை. தமிழனைப் புறக்கணித்த இவர்களின் வாழ்த்தை ஏலியன்கள் படிக்கவோ.. பதில் தகவல் அனுப்பவோ மாட்டார்கள். அனுப்பியவர் செத்துத் தொலைஞ்சாலும் உது நடக்காது. உந்த ரோவரை விட வானலையில் மிதக்கும் தமிழின் ஒலி பிரபஞ்சத்தில் அதிகம் ஊடுருவி பரவி இருக்கும் இப்போது..! :):icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களுக்கென்றுதான் ஆங்கிலம் இருக்கிறதே என்று விட்டிருப்பார்கள்..

எங்கடை சனத்துக்கு பாசை பெரிய முக்கியமில்லை எண்டது பெரியபெரிய விஞ்ஞானிகளுக்கும் தெரிஞ்சுபோச்சுது.
 
வெளிநாட்டுக்கு வந்து முப்பது நாப்பது வருசமெண்டாலும் கைப்பாசையாலையும் கண்ணாலை கதைச்சும் அலுவலை கொண்டுபோறவன் இந்த வீரத்தமிழன் எண்டு அவங்களுக்கும் தெரிஞ்சு போச்சுது......

எங்களை விட மோசமான கூட்டங்கள் லண்டனில் இருக்குது உ+ம் சிங்குகள் வெஸ்ரண் மார்கட் (இரவு மரகறி சந்தை) அந்த பக்கம் போனால் ஊரிலை துண்டுபோட்டு விலை பேச்சு தோத்திடும் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களை விட மோசமான கூட்டங்கள் லண்டனில் இருக்குது உ+ம் சிங்குகள் வெஸ்ரண் மார்கட் (இரவு மரகறி சந்தை) அந்த பக்கம் போனால் ஊரிலை துண்டுபோட்டு விலை பேச்சு தோத்திடும் .

சரி....அவங்கள்ளை ஆரெண்டாலும் கை வைக்கட்டும் பாப்பம்??????...அவ்வளவுதான் சாருக்கான் தொடக்கம் சந்தானம் வரைக்கும் அந்தமாதிரி வோய்ஸ் குடுப்பாங்கள்.

ஆனா எங்களுக்கு??????? கூட இருக்கிறவனே நக்கலடிச்சு ஓரம் கட்டுவாங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நெடுக்ஸ். 
 
யான் அறிந்த இன்னும் சில தகவல்கள்...
 
Voyagerஇல் தங்கத்தட்டில் (ஒரு ரெக்கோடர்) பதிவு செய்து அனுப்பியுள்ளார்கள். அதில் பூமியில் உள்ள பல்லின மக்களிடமிருந்து 55 மொழிகளில் பதிவு செய்யப்பட்ட வாழ்த்து ஒலிகளையும் 70களில் பிரபல்யமானவர்களின் இசையினையும் வேற்றுகிரகவாசிகள் கேட்பதற்க்காக பொருத்தியுள்ளார்கள். திரவிட மொழிகளில் தெலுங்கும் கன்னடத்திலும் மட்டும் வாழ்த்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமக்கென்றொரு நாடு இல்லாதவர்கள் தமிழர்கள், ஒரு கிரகத்தை சொந்தமாக எப்படி வைத்திருப்பார்கள் என்றோர் அலட்சியமா? அல்லது தமிழன் எங்கிருந்தாலும் வேறு மொழிகளில் ஆர்வமுள்ளவன் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையா?
-----

உலகத்தில் வாழும்... எட்டுக் கோடித் தமிழனின் தலைவன், என்று... கட்டைக் குரலில் பேசும்... "டெட் பாடி" செத்துப் போயிட்டதா?

ராஸ்கெல்ஸ்... உங்களுக்கு, பணம் சேர்க்கத் தான்... தெரியுமா? தமிழையும்.... வளருங்களேன்.

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய தொழில் நுட்ப வளர்சியுடன், 36 வருடங்களுக்கு முந்திய தொழில் நுட்பம், எவ்வாறு ஒத்துப் போகிறது என்பது ஆச்சரியமானது.

  • கருத்துக்கள உறவுகள்

என்னது, 46,000 வருசமா?

புராணக்கதைகளிள், முனிவர்கள், தேவர்கள், நினைத்தவுடன் அங்க, இங்க என்று போய் வந்தார்களே.

விஞ்ஞானம் இன்று சொல்வதை, அவர்கள் அன்றே, சொன்னதெப்படி?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னது, 46,000 வருசமா?

புராணக்கதைகளிள், முனிவர்கள், தேவர்கள், நினைத்தவுடன் அங்க, இங்க என்று போய் வந்தார்களே.

விஞ்ஞானம் இன்று சொல்வதை, அவர்கள் அன்றே, சொன்னதெப்படி?

மெய்ஞானத்தை விஞ்ஞானம் களவாடி விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

"Voyager 2, செப்டம்பர் 5, 1977இலும், அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் ஆகஸ்ட் 20, 1977 இல் Voyager 1ம் அனுப்ப‌ப்பட்டது" இங்கு திகதி மாறியுள்ளது: Voyager-2 முன்பாகவும்(20.08.1977) Voyager-1 பின்பாகவும்(05.09.1977) விண்ணில் ஏவப்பட்டது என்பதே சரி.

Edited by vanangaamudi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.