Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கணவன் மனைவி பிரச்சினையில் அயலவர்(தமிழகம்) தலையீடு செய்ய வேண்டியதில்லை – விக்னேஸ்வரன்

Featured Replies

CV_CI.jpg

தமிழக அரசியல்வாதிகள் இலங்கை தமிழர் பிரச்சினையை சுயலாபத்திற்காக பனய்படுத்திக்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாhகணசபை முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
இலங்கைத் தமிழர்களை தங்களது தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளவே தமிழக அரசியல்வாதிகள் முனைப்பு காட்டி வருவதாகத் குறிப்பிட்டுள்ளார். பிரபல இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
எங்களது பிரச்சினைகளை தமிழக அரசியல்வாதிகள் டென்னிஸ் விளையாட்டில் பயன்படுத்தப்படும் பந்தைப் போன்று பயன்படுத்திக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். தனி நாடே தமிழர் பிரச்சினைக்கு சரியான தீர்வு என சில தமிழக அரசியல்வாதிகள் குறிப்பிடுவதாகவும் இதனால் சிங்கள பெரும்பான்மை அரசியல்வாதிகள் அச்சமடைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் வெளியிடப்படும் கருத்துக்கள் எங்களை நேரடியாக பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழக அரசியல்வாதிகளின் உணர்வுபூர்வமான கருத்துக்கள் இலங்கைத் தமிழர்களை மோசமாக பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான பிரச்சினையில் அயல் வீட்டவர் நுழைய வேண்டிய அவசியமில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அயலவர்கள்(தமிழகம்) தலையீடு சேய்வது கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் விவகாரத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒருநாள் முரண்பட்டுக் கொள்ளும் தாம் மறுநாள் இணைந்து செறய்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகம் இலங்கைத் தமிழர்கள் மீது காட்டி வரும் அனுதாபம் வரவேற்கப்பட வேண்டிய அதேவேளை, தீர்வுத் திட்டம் என்பது உள்நாட்டு ரீதியில் எட்டப்பட வேண்டியதொன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • Replies 125
  • Views 7.5k
  • Created
  • Last Reply

ஒருமதத்திற்கு முன்னர் வந்த திரிக்கப்பட்ட அதே செய்தியா?

குலோபல் தமிழுக்கு ஒருமாததிற்கு முந்தய பேச்சை பிரசுரிக்கும் அளவுக்கு செய்திகள் ஒன்றும் கிடைக்கவில்லையா? பரிதாபம்.

:திருத்தம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=129107&p=935564

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

அவர் தமிழக அரசியல்வாதிகள் பற்றியே குறிப்பிடுகின்றார். மக்களைப் பற்றியல்ல. ஆனால் திரு.விக்னேஸ்வரன் எப்போது இதைச் சொன்னாலும், அவருக்கும் கொஞ்சம் நாவடக்கம் வேண்டும் எனக் கருதுகின்றேன். போராட்டத்தின் அழிவு, இருப்பதையாவது காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் சொல்லியிருக்கலாம். ஆனால் தமிழக சொந்தங்களைப் பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது என்பதே எம் அவா.

ஒரு காலத்தில் அண்ணன்-தம்பி..இப்போ கணவன்-மனைவி....

  • கருத்துக்கள உறவுகள்

.....கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலான பிரச்சினையில் அயல் வீட்டவர் நுழைய வேண்டிய அவசியமில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்வாறு அயலவர்கள்(தமிழகம்) தலையீடு செய்வது கணவனுக்கும், மனைவிக்கும் இடையில் விவகாரத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கணவனுக்கும், மனைவிக்கும் இடையேயான பிரச்சனையை உங்கள் வீட்டுக்குள்ளேயே கமுக்கமாக முடித்துகொண்டால், எவனையா உங்களை கேடக்கப் போகிறார்கள்?

பக்கத்துவீட்டில் ஓரே கூச்சலும், அடிதடிகளும், அதனால் பொடிசுகளும் ஓடிவர, பொண்டாட்டியோ, கணவனோ குய்யோ முறையோன்னு தினந்தோறும் ஒப்பாரி வைத்து, அண்டை வீடுகளுக்கு படையெடுத்தால் அண்டை மனுசர்கள் வாழாவிருக்க முடியுமா? பக்கத்து வீட்டில் தீயெரிந்தால் எனக்கென்னேன்று நிம்மதியாக வாழ முடியுமா?

சரியாக பரமரிக்கத் தெரியாத, மனைவியின் விருப்பு வெறுப்புகளை மதியாத வக்கற்ற, ஆண்மையற்ற கணவனிடமிருந்து  மனைவி விவாகரத்து கோரும்பொழுது கொடுப்பதில் என்ன தவறு? பக்கத்து வீட்டார் தட்டிக்கேட்பதில் என்ன பிழை? :wub:

இந்த ஞானோதயம் ஏன் முன்னர் வரவில்லை?

ஐயா

நீங்கள்  எழுதியதெல்லாம் சிறு சிறு சச்சரவுகள்

அதை எல்லாம் தாண்டி

சொந்தப்பிள்ளையையே  வன்புணர்வு செய்தது

சொந்த பிள்ளையையே உயிருடன் கொழுத்தியது

புதைத்தது

தாகம் வரும்போதெல்லாம் வீட்டுக்குள் சூடு நடாத்தி எல்லோரையும் கொண்டது...............

என்று எல்லாம் செய்து முடித்து தண்டனைக்கு மட்டும்  காத்திருக்கும் ஒரு போர்க்குற்றவாளி சிங்களவன்

அவனிடம் தமிழர்களாகிய  எமக்கு எதுவித உறவும் கிடையாது

அது அவருக்கும்  தெரியும்

ஆனால் ஏன்  உளறுகிறார் என்று தான்   புரியல.

அரசியல்  என்று வந்தால  இப்படியெல்லாம் பேசவருமோ தெரியல

அல்லது

பத்திரிகைக்காறரின் வியாபார யுக்திக்குள் தமிழினமோ

சொல்ல முடியல............

அல்லது

அவர் சொன்னதில் என்ன தவறு இருக்கு எல்லோருமே எங்களை வைத்து காசு பார்த்தனர் அரசியல் நடத்தினர் எவர் எமக்கு  உதவ முன் வந்தனர் அதிகாரத்தில் இருத்தவர்கள் நாடகம் ஆடினார் அதிகாரம் இல்லாதவர் தெருவில் நின்டனர் இந்தியா எண்டு வந்துவிட்டால் இறையான்மை எண்டு ஒளிந்து கொள்வது தமிழக தலைவர்மார்களின் கொள்கை அப்பவே பெரியார் தந்தை செல்வாக்கு சொல்லிட்டார் ஒரு அடிமை இன்னொரு அடிமைக்கு உதவி செய்ய முடியாது என்று எமக்கு நாமே என்பதை நாம் முதல் உணரவேண்டும் ஞானிகளே...

இந்துவை தமிழ்கத்தால் துரத்தவேண்டும். தமிழக அரசியல் வாதிகள் கோமாளிகள் என்றதையும் இந்துதான் கொண்டுவந்தது. இந்து ராசபக்காவிடம் சிங்கள விபூசணம் பட்டம் வாங்க எல்லாம் பண்ணுகிறது. 

தமிழக அரசியல்வாதிகள் இலங்கை தமிழர் பிரச்சினையை சுயலாபத்திற்காக பனய்படுத்திக்கொள்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாக்கணசபை முதலமைச்சர் வேட்பாளர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மிகச்சரியாகதான் சொல்லி இருக்கிறார்.எதையும் புதிதாக சொல்லவில்லை குய்யோ முறையோ என்று குத்திமுறிய. எல்லா ஈழத்தமிழர்களுக்கும் தெரிந்த உண்மை. 83 இல் இருந்து இன்று வரை தொடரும் கண்துடைப்பு நாடகம்கள் அரசியல் போர்வையில்.

தமிழக அரசியலில் சுப்பிரமணியத்தின் ஜனதாவும், காங்கிரசும் ஒதுக்கப்பட்டுவிட்டன. சுப்பிரமணி,  பாரதிய ஜனதாவுக்குள் ஓடி ஒழிக்கிறார். இந்த நிலையில் தமிழகத்தில் முன்னணியில் இருக்கும் திராவிட, தமிழ் சார்பு அரசியல் கட்சிகளிடம் இருந்து சுப்பிரமணியையும் மற்றய கேடிகளையும் விடுக்க இந்து கூட்டமைப்பை டெனிஸ் பந்தாக்கப்பார்க்கிறது. தமிழகத்தில் தனக்கு என அரசியல் மேடை ஒன்று அலங்கரிக்க முடியாமல் போyவிட்ட இந்து தனது தோல்வியை ஒப்புக்கொண்டு தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். தமிழர் எதிரியான இந்து தமிழகத்தில் தனது பாச்சா பலிக்காமல் போனதை கண்டுவிட்டு, ஈழத்தமிழரை அறுதலி பிள்ளையாக நினத்துக்கொண்டு அங்கு தானது வாலை ஆட்ட வருகிறது.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சரி நடந்தது நடந்துவிட்டது...இனி யாவரின் தலையீடு தேவை இல்லையெனில் சந்தோசம்! :)

உங்கள் பாணியில் அயலவரை இனிமேலும் தொந்திரவு செய்யாமல், ஒற்றுமையாக குடும்பம் நடத்தி பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! :rolleyes:

தமிழகத்திலும், ஈழத்திலும் ஈகையில் உயிர்நீத்த பிள்ளைப் பூச்சிகளான அப்பாவி தமிழர்கள்தான் பாவம்.

அவர்கள் ஆத்மா சாந்தியடையுமா?

என்ன கோபமா ஐயா

நாங்கள் தமிழக தலைவர்களைவிட

நன்றாக அரசியல்  செய்வோம்.

இங்கும்  மக்களை  என்று எழுதவில்லை

அரசியல்வாதிகளை என்று மட்டும் தான்  எழுதியுள்ளோம்

மக்களை  எமக்கு  வேண்டும்

அதில் மட்டும்  சுயநலமுண்டு

ஆனால்  காட்டிக்கொள்ளமாட்டோம்... :(

உங்களுக்கு இது பழகியது தானே

முதல் முறையா  குட்டுகின்றோம்

சுணைப்பதற்கு......... :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் தலையிடுவது ஒருபுறம் இருக்கட்டும்.. கணவன் மனைவி பிரச்சினைக்குள் அயல்நாடுகள் தலையிடக்கூடாது என்று சொல்வாரா விக்கி? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கோபமா ஐயா

நாங்கள் தமிழக தலைவர்களைவிட

நன்றாக அரசியல்  செய்வோம்.

இங்கும்  மக்களை  என்று எழுதவில்லை

அரசியல்வாதிகளை என்று மட்டும் தான்  எழுதியுள்ளோம்

மக்களை  எமக்கு  வேண்டும்

அதில் மட்டும்  சுயநலமுண்டு

ஆனால்  காட்டிக்கொள்ளமாட்டோம்... 

இங்கே இருக்கிற தமிழனுக்கே உணர்வு போதவில்லையென ஆதங்கப்பட்டுள்ள நேரத்தில், இவரொருத்தர் இக்கட்டான நிலையில், "வள வள"ன்னு குறைசொல்லுறாரேன்னு

எரிச்சல்தான். :(

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே இருக்கிற தமிழனுக்கே உணர்வு போதவில்லையென ஆதங்கப்பட்டுள்ள நேரத்தில், இவரொருத்தர் இக்கட்டான நிலையில், "வள வள"ன்னு குறைசொல்லுறாரேன்னு

எரிச்சல்தான். :(

http://www.yarl.com/forum3/index.php?showtopic=129109&hl=

நான் வேலையில்  நின்று இங்கு எழுதிக்கொண்டிருக்க

என்  உறவுகள்

எல்லாவற்றையும்  ஒதுக்கி வைத்துவிட்டு எமக்காக பயணம்  போகிறார்கள்

இதைப்பார்த்த  நெஞ்சுள்ளவர்  எவரும் சுட்டுவிரல்  நீட்டார்

விக்கினேஸ்வரன் அயல்வீட்டாரை தங்கள் விடையத்தில் கை போட வேண்டாம் என்கிறார் என்றதை கிந்திய மேலிடத்துக்கு சொல்லிவைக்குமா கிந்து?. இன்னொருதடவை இராசாயநக் குண்டை தமிழ் மக்கள் மீது கிந்தியா சோதனை பண்ணிப்பார்க்க வேண்டாம் என்று தமிழ் மக்கள் கேட்கிறார்கள் சொல்லிவிடுமா?

கிந்தியாவை ஈழத்தமிழர் தங்கள் பாட்டை பார்க்கவிட்டுவிட்டு கிந்தியா ஐ.நா பிரேரணையில் தலையிடகூடாது என்பதைகிந்து கிந்திய தலைமை பீடத்திற்கு அறிவுக்குமா? சொல்லெயும் நேராகவே புலிகளுக்கும் சிங்களத்துக்குமிடையில் போர்நிறுத்தம் ஒன்று வராமல் பார்த்துகொண்டது கிந்தியாதான் என்று சொன்ன போது கிந்தநேன் அதை விக்கினேஸ்வரனுக்கு நினவு படுத்தவில்லை. உடனே "இந்தியா எப்போதுமே ஈழத்தமிழர் விவகாரத்தில் மூக்கை நுளைக்கிறது தானே, இப்போது மட்டும் ஏன் தமிழக தலைவர்களை மட்டும் பிரத்தியேகமா கணவன் மனைவிக்குள் விவாகரத்தை வரவழைக்கிறர்கள்" குற்றம் சாட்டுவான் என்று கேட்டிருக்கலாமே.

எதற்கு கிந்து தமிழக அரசியல் வாதிகள் மட்டும்தான் ஈழத்தமிழர் பிரச்சனையில் பேசக்கூடாது என்று தடுக்க முயல்கிறது? ஐ.நா பிரேரணையை தவிடுபொடியாக்க சுப்பிரமணி அமெரிக்கா போனதையும் தடுத்திருக்கலாமே.

ஆரியத்துவேசி கிந்து தமிழக தமிழரையும் ஈழத்தமிழரையும் பிரித்துவைக்கை சிண்டுமுடியும் பேட்டிகளுக்கு கேட்டால் கூட்டமைப்பு இனி ஒத்துப்போககூடாது. 

ஒரு திணிக்கப்பட்ட திருமண ஒப்பந்ததில் தொடர்ந்தும் கொடுமைக்கார கணவனுடன் வாழ்வதா இல்லையா என்பதை மனைவியே தீர்மானிக்க முடியும். அத் தீர்மானிக்கும் உரிமயை அவருக்கு வழங்கும் படி கோரியே உறவினரான தமிழக உறவுகள் கேட்டு வருகின்றனர். இந்த உரிமையை விக்கினேசுவரன் என்னும் தனிப்பட்ட நபர் தீர்மானிக்க முடியாது.அது ஒட்டு மொத்த தமிழர்களும் கூட்டாக ஒரு தேர்தலின் மூலம் தீர்மானிக்க வேண்டும்.

விக்கினேசுவரன் இவ்வறான பேட்டிகள் வழங்குவது வருங்கால தமிழக நல் உறவுக்கு கெடுதல் விழைவிக்கும்.இதனை கூட்டமைப்பில் உள்ளவர்கள் அவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

இதனால் எமக்கான நேச சக்திகளை நாமே அழித்துக் கொள்கிறோம். கடைசியில் அரசனை நம்பி புரிசனைக் கைவிட்ட நிலையே ஏற்படும். 

  • கருத்துக்கள உறவுகள்

சரி நடந்தது நடந்துவிட்டது...இனி யாவரின் தலையீடு தேவை இல்லையெனில் சந்தோசம்! :)

உங்கள் பாணியில் அயலவரை இனிமேலும் தொந்திரவு செய்யாமல், ஒற்றுமையாக குடும்பம் நடத்தி பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க! :rolleyes:

தமிழகத்திலும், ஈழத்திலும் ஈகையில் உயிர்நீத்த பிள்ளைப் பூச்சிகளான அப்பாவி தமிழர்கள்தான் பாவம்.

அவர்கள் ஆத்மா சாந்தியடையுமா?

விக்னேஸ்வரன் என்ன... உளறிக் கொட்டினாலும், அதனைப் பற்றித் தமிழகத் தமிழர் கவலைப் பட வேண்டியதில்லை.

காரணம் விக்னேஸ்வரனின் முதலமைச்சர் தெரிவு, சம்பந்தனால்... நடத்தப் பட்டது.

சம்மந்தனின்.... அரசியல் வியாபாரம் எல்லோருக்கும் தெரியும். அதில்... இந்தியாவின் அழுத்தங்களும்... உள்ளடங்கும்.

ஆனால்... இதில், தமிழ்க் கூட்டமைப்பை விட்டால், வேறு வழியில்லை... என்பதே ஈழ மக்களின், வேண்டாத விருப்பம்.

இதில்... நாம், புடுங்குப்பாடு செய்தால்.... ஒட்டுக்குழுக்கள் ஆட்சிக்கு வரும்.

அதனையே... விக்னேஸ்வரனை களமிறக்கி சாதிக்கிறார் சம்பந்தன்.

மாவையை... முதலமைச்சர் வேட்பாளராக்கி இருந்தால்... இப்படியான இழுபறிகள் வந்திருக்காது.

அதற்கு... இந்தியாவும், ஸ்ரீலங்காவும், சம்பந்தனும்... சம்மதித்திருக்க மாட்டார்கள் என்பது தான்... உண்மை.

Edited by தமிழ் சிறி

உண்மைதான்.. ஒட்டுக்குழு வந்துவிடும் என்கிற காரணத்திற்காகவே இந்திய அடிமை சேவகம் செய்யும் சம்ந்தன் ஐயாவின் தலைமையை ஆதரிக்கவேண்டி உள்ளது.. கஜேந்திரகுமார், கஜேந்திரன் போன்றவர்களும் இதன் காரணமாகவே ஒதுங்கி நிற்கிறார்கள்.. இதைப் பயன்படுத்திக்கொண்டு ஏகபோகத்துடன் பேசுவதை அனுமதிக்கக்கூடாது.. கீரைக்கடைக்கும் எதிர்க்கடை தேவை என்பது சரிதான்.. இரு தேசிய ஆதரவு சக்திகள் வேணும்.. சிங்களவனுக்கு உள்ளதுபோல..

கஜேந்திரக்குமார், கஜேந்திரன், சிவாஜிலிங்கம் போன்றவர்களை... இதற்காகத்தான்,

சம்பந்தன் ஐயா முழையிலே கிள்ளி விட்டு, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இவருக்கு உண்மையிலே... தமிழருக்கு சேவை செய்ய மனமில்லை.

அடாத்துப் பிடிக்கு, கூத்தமைப்புப் பதவியில் இருந்து கொண்டு....

நொந்து போன தமிழனுக்கு, இன்னும்... நோகப் பண்ணிக் கொண்டு இருக்கிறார்.

இயலாவிட்டால்... ஒதுங்கி இருக்கிறது தான்.... நல்ல மனுசனுக்கு அழகு.

இது... தேவாங்கு மாதிரி, தலைவர் பதவியிலை... ஒட்டிக் கொண்டிருக்குது.

இன்னும்... என்னென்ன, இழவுகளை தமிழனுக்குத் தரப் போகுதோ... எண்டு, நெஞ்சிடியாய்க் கிடக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்.. ஒட்டுக்குழு வந்துவிடும் என்கிற காரணத்திற்காகவே இந்திய அடிமை சேவகம் செய்யும் சம்ந்தன் ஐயாவின் தலைமையை ஆதரிக்கவேண்டி உள்ளது.. கஜேந்திரகுமார், கஜேந்திரன் போன்றவர்களும் இதன் காரணமாகவே ஒதுங்கி நிற்கிறார்கள்.. இதைப் பயன்படுத்திக்கொண்டு ஏகபோகத்துடன் பேசுவதை அனுமதிக்கக்கூடாது.. கீரைக்கடைக்கும் எதிர்க்கடை தேவை என்பது சரிதான்.. இரு தேசிய ஆதரவு சக்திகள் வேணும்.. சிங்களவனுக்கு உள்ளதுபோல..

புலத்தில்  இரு அமைப்புக்கள்  வந்தபோதும்

தாயகத்தில் 

கூட்டமைப்பிலிருந்து சிலர்  பிரிந்தபோதும்

சில கலந்துரையாடல்களில்   கலந்து கொண்டேன்

இது இரண்டுமே தப்பு என்ற கருத்துடன் வாதாட்டத்துடன்

இரு தேசிய  சக்திகள் வேண்டும்

ஒரு பகுதியிடம் எதையுமே ஒப்படைப்பது ஆபத்தானது என்று

சில முக்கிமானவர்கள் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்

பல பேச்சுவார்த்தைக்குப்பின் அவர்கள்  சொல்வது சரி என்ற முடிவுக்கு வந்தேன்.

அதிலிருந்து இரண்டையும் ஆதரித்து வருகின்றேன்.

இரண்டுக்கும்  சந்தாக்காசு கட்டுவேன்.

ஏனெனில்

உறுப்பினரானால்தான் உரிமையுடன் பேசமுடியும்.

இப்போது... ஈழத்தமிழர் இருக்கும் நிலையில்,

இரண்டு அமைப்புகள் ஆபத்தானது.

தமிழகத்தில்... தி.மு.க./ அ.தி.மு.க. போன்றதை ஒத்தது.

அவ செய்தால்... இவர் விடார், இவர் செய்தால்... அவ விடா.

இதனால்... ஒட்டு மொத்தத் தமிழகமே பாதிக்கப்படுகின்றது.

காவிரிப் பிரச்சினையிலிருந்து கச்சதீவு, அணு உலை என்று....

அறிஞர் அண்ணா உருவாக்கிய கட்சியை நாசம் பண்ணிக் கொண்டு நிற்கிறார்கள்.

இதனைப் பார்த்தாவது.... ஈழத் தமிழனுக்கு... புலிகளைப் போல்... ஒரு தலைமை, அவசரமாகத் தேவை.

இல்லையேல்... எல்லோரும், கூண்டோடு அழிவது திண்ணம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் தலையெடுக்கும் வரை யாருக்கும் விலைபோகாத ஒற்றைத் தலைமையே தற்போதைய அவசரத் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் தலையெடுக்கும் வரை யாருக்கும் விலைபோகாத ஒற்றைத் தலைமையே தற்போதைய அவசரத் தேவை.

சிறிக்கும்

உங்களுக்கும் ஒரே பதில்

அப்படியொன்று சாத்தியமே இல்லை.

அதற்காக ஏங்குவதைவிடுத்து

காலத்தை கருத்தில்  கொண்டு

எத்தனை  அமைப்புக்கள் இருந்தாலும்

இலட்சியம்  ஒன்றாக இருப்பதே சிறந்தது

அதுவே இன்றைக்கு சரி  வரக்கூடியது....

அத்துடன்

எவரையும் நம்பமுடியாது

அதனால்

இன்னொரு அமைப்பு அதற்கு போட்டியாக

தயாராக இருப்பது அவசியம்

இன்றைய  சூழ்நிலையில்.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலில் வென்றுவிட்டு இந்தியாவின் தாளத்துக்கு ஆடாமல் விட்டால் சரி.. ஆனால் அது சாத்தியமற்றது என்று தோன்றுகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.