Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச செஞ்சோலை விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

m02(1).jpg

இரணமடுவிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்திற்கு  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று சனிக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனையும் சந்தித்துள்ளார். (படங்கள்: ஜனாதிபதி ஊடக பிரிவு)

m03.jpg

m01(6).jpg

  • Replies 70
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் என்னும் மறக்கவில்லை .........

2006081414xs9.jpg

kk4-620x348.jpg

நாங்கள் என்னும் மறக்கவில்லை ......... மறக்கவும் முடியாது 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செஞ்சோலையில் விமானம் குண்டுவீசியபோது, அங்கிருந்த மாணவிகள் என்ன பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்? முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி வந்தவர்களிடம் கேட்டால், வில்லங்கமான கதைகள் அல்லவா கூறுகிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தர் போனது கொடுமை.. அதற்குள் இந்தக் கொசுத்தொல்லை பெருங்கொடுமை.. :D

சபேசன் 35,

அப்படி என்ன கதை சொன்னார்கள் ?????? 

295710_129447163825989_183646260_n.jpg

தேசியத்தலைவருடன் காந்தரூபன் அறிவுச்சோலை சிறுவர்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் பெயர் வைத்து உருவாக்கிய கட்டமைப்பில் மகிந்த போய் தாழ்பணிந்து நிற்பது பிரபாகரனுக்கும் அவரின் மக்கள் சிந்தனைக்கும் கிடைத்த பெருமை.

ஆனால்.. செஞ்சோலைப் பள்ளி மாணவர்களைக் கொன்ற இந்தக் கிராதகன் அங்கு பயணம் செய்தமை.. மனித இன வரலாற்றில் மோசமான செயல் ஆகும்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வள்ளிபுனத்தில் உள்ள செஞ்சோலையில் சிறிலங்காப் படையினர் குண்டு வீசி அச்சிறார்களை கொலை செய்தததாக தூக்கிப் பிடிப்பவர்கள் அன்று அந்த செஞ்சோலை வளாகத்துக்குள் இருந்து உயிர் தப்பிய பிள்ளைகளை தொடர்பு கொண்டு கேளுங்கள். உண்மையில் நீங்கள் செஞ்சோலை சிறார்கள்தானா என்று.

அதற்கு அவர்கள் இல்லை; எங்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்துவிட்டு ஓய்வுக்காக அங்கே கொண்டு சென்று விட்டார்கள் என்று கூறுவார்கள்.

அதில் உயிர் தப்பிய பிள்ளை. பாவம் மிக அழகான பிள்ளை. முகம் அலங்கோலமாகி காலும் இல்லாத நிலையில் அழுதழுது கூறிய விடயம் மறக்க முடியாதது. அந்தப் பிள்ளை, தன்னை தனது தாய்-தந்தையரிடம் இருந்து பலவந்த ஆட்சேர்ப்பு மூலம் அழைத்துச் சென்று பயிற்சி தந்தார்கள் என்றும் தாம் உண்மையில் செஞ்சோலைச் சிறார்கள் இல்லை என்றும் கூறியது.

இவரைப் போல பல பிள்ளைகள் அங்கே போய் கேட்டால் கதை கதையாக கூறுவார்கள்.

சில விடயங்களை கூறினால் கேவலமாக இருக்கும். அனைத்தையும் 100 வீதம் என்று நம்பும் யாழ். கள உறவுகள் உண்மைகளை அறிந்து உரையாடுவது நல்லது. மேலெழுந்த வாரியாக அறிந்து கொண்டு ஒரு பக்க சார்பாக உரையாடுவது தவறு.

இங்கே சிங்களத்தினை நியாயப்படுத்த வரவில்லை. விடுதலைப் புலிகள் செய்தவை எல்லாம் 100 வீதம் என்று நம்பாது அவற்றை ஆராய்ந்து உரையாடுங்கள்.

இங்கே நான் கூறியது பொய் என்றால் தமிழ்ச்செல்வனோடு இருந்து அரசியல்துறையில் பணியாற்றிய போராளிகள் பலர் நோர்வேயில் உள்ளனர் கேட்டுப் பாருங்கள் உண்மை தெரியும்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

ஆ அப்புறம் வேற என்னவாம் நிர்மலன் அண்ணா இப்பிடி அடிக்கடி நிறைய கதையளோட வாங்க சந்தானத்திண்ட காமடி பாத்து சிரிப்பே வருதில்ல

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன்.. இப்போதுதான் தொலைபேசியில் அழைத்துக் கேட்டேன்.. அங்கிருந்த வெத்திலைப் பெட்டியை திருப்பித் தரச் சொல்லி உங்களை கேட்கட்டாம்.. :unsure::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

என்னே சோகம், யாவுமே காமெடியாகத்தானே உங்களுக்கும் எனக்கும் இப்போது தெரிகின்றது. (விடுதலைப் புலிகளின் போராட்டத்தினைத்தான் கூறுகின்றேன்) பரிகாசம் செய்யுங்கள். என்று ஒருவன் உண்மையை உணர்ந்து கொள்கின்றானோ அன்றுதான் அவன் முழு மனிதனாக காட்சி அளிக்க முடியும்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

நிர்மலன் போன்றவர்கள் தான் சிங்கள இனவெறியன் மீதான தமிழ் மக்களின் வெறுப்பை அதிகரிக்கச் செய்பவர்கள்.

ஏனெனில் மக்கள் ஒரு எதிரியை எப்போது அதிகம் வெறுக்க ஆரம்பிக்கிறார்கள் என்றால் அவன் தனது தவறுகளை மறைத்து பொய்ப்பிரச்சாரங்களை முன்னெடுக்கின்ற போது.

இன்றைய வன்னிச் சூழலில்.. ஆக்கிரமிப்பு இராணுவ மற்றும் ஒட்டுக்குழு மயப்படுத்திய சூழலில்.. எங்களிடம் கேட்டால் கூட இராணுவம் நல்லது.. ஈபிடிபி கருணையா உருவானது என்று தான் சொல்வோம். ஏனெனில்.. அங்கு கருத்துச் சுதந்திரத்தை கதைக்கலாம்.. கதைத்துவிட்டு உயிர் வாழ முடியாது. தூக்கிலோ.. கிணற்றிலோ தான் மிதக்க முடியும்.

செஞ்சோலைப் படுகொலை மட்டுமல்ல.. நாங்கள் கண்ணால் தரிசித்த நவாலிப் படுகொலை.. யாழ் பெரிய கோவில் படுகொலை உட்பட பல விமானத்தாக்குதல்கள் சம்பவங்களுக்கு சிறீலங்கா சொல்லியதை நூறு வீதம் நிர்மலன் போன்ற ஒட்டுக்குழுவினர் நம்பலாம். ஏனெனில் அவர்களுக்கு சாப்பாடு போடுவது எதிரி. ஆனால் மக்கள் நாங்கள் நம்பத் தயார் இல்லை.

நவாலிப் படுகொலையின் பின்னர் கதிர்காமர் தந்த அறிக்கை.. புலிகளின் முகாம் அழிப்பு என்று. அதை நிர்மலன் நம்புவார். 100 % புலிகளை நம்ப முடியாது என்பார். சிங்களவனை குறை சொல்வது பாவம் என்பார்.

இப்படியானவர்களின் கீழ்த்தரமான நிலைப்பாடுகளாலும்.. உண்மையை மறைக்கும் நிலையாலும் தான் சிங்களவன் தமிழ் மக்களை விட்டு அதிக தூரம் விலக்கி வைக்கப்படுகிறான். இதனை சிங்களவர்கள் உணர்ந்து இந்த ஒட்டுக்குழுக்களுக்கு ஒரு முடிவுரை எழுதாதவரையும்... சிங்களவனுக்கும் உய்வில்லை. தமிழர்களுக்கும் உய்வில்லை.! :icon_idea:

Edited by nedukkalapoovan

கதை சொல்லுறவன் எல்லாம் கதாநாயகன் ஆகவேணும் எண்டா எப்பிடி பாஸ்...???

  • கருத்துக்கள உறவுகள்

கதை சொல்லுறவன் எல்லாம் கதாநாயகன் ஆகவேணும் எண்டா எப்பிடி பாஸ்...???

:D ஹிஹி

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு பக்கமும் இராணுவம் முன்னேறுது

ஒட்டு மொத்த நிலமும் பறி போகுது தமிழர் வாழ்வே கேள்விக்குறியா நிக்குது இப்பிடியான சூழ்நிலையில் மக்களுக்கு கட்டைய இராணுவ பயிற்சி கொடுத்ததில் தப்பில

Israel இல் இருந்து பல நாடுகளில் கட்டாய இராணுவ பயிற்சி இருக்கு

மகிந்தவை கே.பீ சந்தித்தார் - செஞ்சோலைச் சிறார்களுடன் இருவரும் நேரத்தை கழித்தனர்
15 செப்டம்பர் 2013
lg-share-en.gif
 
kp%20makintha_CI.jpg

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் (செல்வராஜா பத்மநாதன்) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை செஞ்சோலை சிறுவர் இல்லத்தில் சந்தித்துள்ளார்.

நேற்று சனிக்கிழமை (14.08.13) இந்த  சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

வட மாகாண சபைத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்  பிரசாரக் கூட்டங்களில் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

இதன்போது, கிளிநொச்சி, இரணமடுவிலுள்ள செஞ்சோலை சிறுவர் இல்லத்திற்கு சென்ற அவர் அங்கு கேபீயால் பராமரிக்கப்படும் சிறுவர்களுடன் சிறுது நேரத்தை செலவிட்ட மகிந்த ராஜபக்ஸ கேபியுடனும் விசேட சந்திப்பில் இணைந்து கொண்டதாக தெரிவித்தார்.

இந்த சந்திப்பின்போது வடமாகாண தேர்தல், அபிவிருத்தி போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அங்கு சென்ற ஜனாதிபதி சிறுவர்களுக்கான கல்வித் தேவைகள் குறித்து கேட்டு அறிந்து கொண்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் சர்வதேச பொறுப்பாளரும் அவர்களின் ஆயுத முகவராகவும் இருந்து வந்த கே.பி போர் முடிவுக்கு வந்த பின்னர் மலேசியாவில் கைது செய்யப்பட்டார் என இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்தது.  அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் அவர், நீடோ என்ற அரசசார்பற்ற நிறுவனமொன்றை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/96565/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

நான்கு பக்கமும் இராணுவம் முன்னேறுது

ஒட்டு மொத்த நிலமும் பறி போகுது தமிழர் வாழ்வே கேள்விக்குறியா நிக்குது இப்பிடியான சூழ்நிலையில் மக்களுக்கு கட்டைய இராணுவ பயிற்சி கொடுத்ததில் தப்பில

Israel இல் இருந்து பல நாடுகளில் கட்டாய இராணுவ பயிற்சி இருக்கு

நீங்கள், நாங்கள் வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு அவர்கள் போராடப் போக வேண்டும் என்ன ஐயா நியாயம்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்ததற்கு உங்களைப் போன்ற எம்மைப் போன்ற சுயநலவாதிகள் பணம் இருந்த படியால் தப்பி வந்தோம்.

இதே வன்னிச் சனத்திடமும் பணம் இருந்தால் வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருப்பார்கள்தானே.

நிர்மலன் அவர்களே புலிகள் என்ன வெற்றுக் கிரக வாசிகளா? இல்லை சிங்கள இனவாதிகளா?இல்லை கேவலம் கேட்ட தமிழ் ஓட்டுக் குழுக்களா ?புலிகளைப் பற்றி அவதூரு செய்யும் நீங்கள் உண்மையில் தமிழனா'? இல்லை தமிழர் விடுதலை விரும்பியா ?

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள், நாங்கள் வெளிநாடுகளில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு அவர்கள் போராடப் போக வேண்டும் என்ன ஐயா நியாயம்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்ததற்கு உங்களைப் போன்ற எம்மைப் போன்ற சுயநலவாதிகள் பணம் இருந்த படியால் தப்பி வந்தோம்.

இதே வன்னிச் சனத்திடமும் பணம் இருந்தால் வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருப்பார்கள்தானே.

எல்லாரும் போய் போராடனும் என்று அவசியம் இல்லை அமெரிக்கா Australia என்று வசிக்கும் யூதர்கள் தான் இன்று வரை இஸ்ரேல் என்ற நாட்டிற்கு உதவி செய்து கொண்டு இருக்கின்றார்க ஆக ஒவொரு வரும் ஒவோருவிதத்தில் உதவ முடியும் ...

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான்கு புறமும் சூழ்ந்த சிங்கள காடையரிடம் இருந்து தப்பிக்க செஞ்சோலையில் கொல்லப்பட்ட பெண் குழந்தைகள் தாமாகவே முன்வந்து ஆயுத பயிற்சி பெற்றார்கள். புலிகள் யாரையும் வற்புறுத்தி இயக்கத்தில் சேர்த்தார்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை. செஞ்சோலையில் நடந்த பயிற்சி, ஆயுதப் பயிற்சிதான். யுத்தம் நடக்கும்போது சமையல் பயிற்சியா கொடுக்க முடியும் நிர்மலன்?

யூதர்கள் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள்! கொசோவாவிலும், எத்தியோப்பியாவிலும், சூடானிலும் நடப்பது என்ன? வட கொரியாவில் கட்டாய ராணுவப் பயிற்சி உள்ளது. வடை சாப்பிட்டுக்கொண்டு கருத்து எழுதும் நிர்மலன் போன்ற கயவர்களுக்கு தெரியுமா இந்த உண்மை?

தமிழினத்தின் சாபக்கேடே நிர்மலன் போன்ற ஒட்டுக்குழு உறுப்பினர்கள்தான். புலம்பெயர் தமிழர்கள் பொருளாதார கொடை கொடுத்தார்கள். வன்னியில் இருந்தவர்களுக்கு அந்த வசதி இல்லை. உயிர்கொடை கொடுத்தார்கள். மானம் இழந்து வாழ்வதைவிட உயிரை விடுவது மேல் என்று தேசியத்தலைவரின் பொன்மொழி ஈழநாதம் பத்திரிகையில் வெளியானது. தலைவர் சொல்வது ஒன்று செய்வது ஒன்று அல்ல.

சுதந்திரம், விடுதலை பெற வேண்டும் என்றால், உயிர் கொடை அவசியம்.. களத்தில இருப்பவர்கள்தான் அதை செய்ய முடியும். புலத்தில் உள்ளவர்கள் அல்ல.

Edited by sabesan36

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தர் போனது கொடுமை.. அதற்குள் இந்தக் கொசுத்தொல்லை பெருங்கொடுமை.. :D

நன்றாக சொன்னீர்கள் இசைக் கலைஞன். யுத்தத்தில் உயிர்கொடை வழங்காமல் கொசு போல தப்பி வந்த சிலர் இப்படி கதை விடுகிறார்கள். பெரும் கொடுமை அண்ணா.. பெரும் கொடுமை.. மயிரிழந்தால் உயிரிழக்கும் கவரிமான் பரம்பரையில் வந்த தமிழர்கள் நாம். வீரப் பரம்பரையில் தப்பி வந்த கொசுக்கூட்டம் பற்றி உங்களுக்கு உள்ள ஆழ்ந்த அறிவு மெச்சப்பட கூடியது.

"யாழ் மாற்றுக்கருத்துகள்" தாங்கள் என்ன சிறுவர்களை சொல்ல சொல்லும்படி பாடம் சொல்லிக்கொடுத்தார்கள் என்பதை இங்கே எழுதுவிட வேண்டியது தானே. இதற்கேன் இனி அந்த சிறார்களிடம் போய்கேட்டபான். தற்சமையம் ஒப்புவிப்பதில் சிறார்கள் பிழைவிட்டுவிட்டால் அரசாங்கத்து அவமானம். பிறகு தங்கள் கைகள் நோக நோக அந்த சிறார்களை அடித்து திருத்த வேண்டி நேரலாம்.  

சிறார்கள் நிறைய சொல்ல் வருகிறார்கள் என்று நவநீதம் பிள்ளையும் சொல்லிக்கொண்டுதான் போயிருக்கிறா. இதனால்தான் புலிகளின் ஆதரவாளர்கள், கூட்டமைப்பு, BTF,GTF, TGTE எல்லாமே விசாரணை என்று கேட்டும் மகிந்தா கொஞ்சம் பயப்படுகிறார் போலிருக்கு.

நிர்மலானா அல்லது சபேசனா அல்லது யாராவது இலங்கை கொலைகளத்தில் வாக்குமூலம் கொடுத்த வைத்தியர்களை அதை மறுத்து புதிய வாக்கு மூலம் கொடுக்க வசனம் எழுதுதியது யார் என்று கூறமுடியுமா? அப்புறம் இந்த சிறார்கள் என்ன சொல்லவருகிறார்கள் எனப்து எல்லோருக்கும் புரியும். <_<

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சோலையில் விமானம் குண்டுவீசியபோது, அங்கிருந்த மாணவிகள் என்ன பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்? முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி வந்தவர்களிடம் கேட்டால், வில்லங்கமான கதைகள் அல்லவா கூறுகிறார்கள்?

சபேசன்36 இப்படிக் கருத்தெழுதும்போது உங்களின் மண்டையில் இருக்கின்ற கொண்டை தெரிகின்றது... கவனம்

வள்ளிபுனத்தில் உள்ள செஞ்சோலையில் சிறிலங்காப் படையினர் குண்டு வீசி அச்சிறார்களை கொலை செய்தததாக தூக்கிப் பிடிப்பவர்கள் அன்று அந்த செஞ்சோலை வளாகத்துக்குள் இருந்து உயிர் தப்பிய பிள்ளைகளை தொடர்பு கொண்டு கேளுங்கள். உண்மையில் நீங்கள் செஞ்சோலை சிறார்கள்தானா என்று.

அதற்கு அவர்கள் இல்லை; எங்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்துவிட்டு ஓய்வுக்காக அங்கே கொண்டு சென்று விட்டார்கள் என்று கூறுவார்கள்.

அதில் உயிர் தப்பிய பிள்ளை. பாவம் மிக அழகான பிள்ளை. முகம் அலங்கோலமாகி காலும் இல்லாத நிலையில் அழுதழுது கூறிய விடயம் மறக்க முடியாதது. அந்தப் பிள்ளை, தன்னை தனது தாய்-தந்தையரிடம் இருந்து பலவந்த ஆட்சேர்ப்பு மூலம் அழைத்துச் சென்று பயிற்சி தந்தார்கள் என்றும் தாம் உண்மையில் செஞ்சோலைச் சிறார்கள் இல்லை என்றும் கூறியது.

இவரைப் போல பல பிள்ளைகள் அங்கே போய் கேட்டால் கதை கதையாக கூறுவார்கள்.

சில விடயங்களை கூறினால் கேவலமாக இருக்கும். அனைத்தையும் 100 வீதம் என்று நம்பும் யாழ். கள உறவுகள் உண்மைகளை அறிந்து உரையாடுவது நல்லது. மேலெழுந்த வாரியாக அறிந்து கொண்டு ஒரு பக்க சார்பாக உரையாடுவது தவறு.

இங்கே சிங்களத்தினை நியாயப்படுத்த வரவில்லை. விடுதலைப் புலிகள் செய்தவை எல்லாம் 100 வீதம் என்று நம்பாது அவற்றை ஆராய்ந்து உரையாடுங்கள்.

இங்கே நான் கூறியது பொய் என்றால் தமிழ்ச்செல்வனோடு இருந்து அரசியல்துறையில் பணியாற்றிய போராளிகள் பலர் நோர்வேயில் உள்ளனர் கேட்டுப் பாருங்கள் உண்மை தெரியும்.

அப்போ செஞ்சோலைப் பிள்ளைகள் இல்லையெனில், குண்டு வீசியது "ஓரளவு சரியோ?" என்/உன் உறவுகள்தான் அங்கே மாண்டார்கள், அதை எப்படி நீர் நியாயப்படுத்த முடியும்? ஒரு உண்மைத் தமிழனால் இதை நியாயப்படுத்த முடியாது. என் சொந்தங்களை குஞ்சு குருமன் என்றும் பாராது கொன்று குவித்தை எப்படி நியாயப் படுத்த முடியும்? போர்க்காலத்தில் எல்லா மக்களுமே தற்காப்புப் பயிற்சியோ/வேறு பயிற்சியோ பெற்றிருக்கவேண்டியது அவசியமானதுதான்.

இந்தமாதிரியான செய்திகள் போடும்போது இந்த யாழிலேயே பலரைப் பார்த்திருக்கிறேன், வந்து புலி வாந்தியெடுப்பதே நோயாகிவிட்டது. உங்களிடம் குறிப்பாக ஒன்றை மட்டும் கேட்கிறேன், பதில் தாருங்கள். '2009 மே 19 இன் பின்னர் புலிகளின் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டன. அதன் பின்னர் இன்றுவரை அவர்கள் வெளிப்படையாக இயங்கவுமில்லை, தாயகத்தில் எந்த நிகழ்வுகளிலும் தலையிடவுமில்லை. ஆனால்... இன்று எம் தமிழ் இனமும் தாயகமும் அங்கே முன் எப்போதுமில்லாத அளவில் மிகவும் துன்பத்துடனும் நெருக்கடியிலும் வாழ்கிறர்கள். நிலங்கள் பறிபோகின்றன, கலாச்சாரம் திட்டமிடப்பட்டே அழிக்கப்படுகிறது, போதைப்பொருட்களால் இளைய சமூகம் சீரழிக்கப் படுகிறது, பாலியல் வன்கொடுமைகள்/ சிறுமிகள் சீரழிப்பு இன்னும் பல. இவை உங்களுக்கெல்லாம் தெரியுமா? இல்லையெனில் அங்கே தொலைபேசியெடுத்து கேளுங்கள், கேட்டுவிட்டு இங்கே வந்து எழுதுங்கள் என்று உங்களைப் போலவே சொல்லமாட்டேன். ஆனால் இவற்றையெல்லாம் பற்றி எங்காவது கருதிடுகிறீகளா? எதிர்த்துக் கேட்கமாட்டீகளா? இதுதானே இப்பொது முதற்செயற்பாடாக இருக்கவேண்டும்? உலத்தமிழினமே சிங்கள அரசை இனப்படுகொலை அரசென சர்வதேச மட்டத்தில் நிறுவ முற்பட்டிருக்கும்போது, வெண்ணை திரண்டுவரும்போது, எதற்காகத் தாழியை உடைகிறீகள்? எமது இப்போதைய தேவை, எமக்குள் குத்துப்படுவதல்லவே.

சிற்றின்பத்தை அடைவற்கு பல வழிகள் உண்டு, புலி வாங்தியெடுத்துத்தான் அடையமுடியுமென்றில்லை. கண்விழித்து மற்ற இனங்களையும் பாருங்கள், இறுதிப் போர் நடந்தபோது அவர்களின் ஒற்றுமையை. எவனாவது இது சொந்த மக்கள் மீதான படுகொலை என்று கத்தினானா? என்றாவது மகிந்த மேற்கொண்ட படுகொலையை ரணில் தப்பென்று சொன்னதுண்டா? இன்றுவரை சர்வதேச விசாரணை என்றொன்று வரக்கூடாதென்பதிலேயே கவனம் செலுத்துகிறது ஒட்டுமொத்த சிங்கள இனமும் அதன் கட்சிகளும். அந்த இன ஒற்றுமையை உங்களிடம் காணவில்லையே...?  

செஞ்சோலையில் விமானம் குண்டுவீசியபோது, அங்கிருந்த மாணவிகள் என்ன பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்கள்? முள்ளிவாய்க்காலில் இருந்து தப்பி வந்தவர்களிடம் கேட்டால், வில்லங்கமான கதைகள் அல்லவா கூறுகிறார்கள்?

எதிலிருந்து தப்பி வந்தார்கள்? உங்கள் மாற்றுச் சிந்தனைக்காக காத்திருக்கிறேன்.

அத்துடன், இராணுவத்தால் வாகனங்களில் ஏற்றிக்கொண்டுசெல்லப்பட்டு, காணாமற்போனவற்களின் கதைகளையும் கேட்க ஆவல், போனடித்துக் கேட்டுச் சொல்லுங்கள். அவை வில்லங்கமில்லாக் கதைகளாக இருக்குமோ?

வள்ளிபுனத்தில் உள்ள செஞ்சோலையில் சிறிலங்காப் படையினர் குண்டு வீசி அச்சிறார்களை கொலை செய்தததாக தூக்கிப் பிடிப்பவர்கள் அன்று அந்த செஞ்சோலை வளாகத்துக்குள் இருந்து உயிர் தப்பிய பிள்ளைகளை தொடர்பு கொண்டு கேளுங்கள். உண்மையில் நீங்கள் செஞ்சோலை சிறார்கள்தானா என்று.

அதற்கு அவர்கள் இல்லை; எங்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்துவிட்டு ஓய்வுக்காக அங்கே கொண்டு சென்று விட்டார்கள் என்று கூறுவார்கள்.

அதில் உயிர் தப்பிய பிள்ளை. பாவம் மிக அழகான பிள்ளை. முகம் அலங்கோலமாகி காலும் இல்லாத நிலையில் அழுதழுது கூறிய விடயம் மறக்க முடியாதது. அந்தப் பிள்ளை, தன்னை தனது தாய்-தந்தையரிடம் இருந்து பலவந்த ஆட்சேர்ப்பு மூலம் அழைத்துச் சென்று பயிற்சி தந்தார்கள் என்றும் தாம் உண்மையில் செஞ்சோலைச் சிறார்கள் இல்லை என்றும் கூறியது.

இவரைப் போல பல பிள்ளைகள் அங்கே போய் கேட்டால் கதை கதையாக கூறுவார்கள்.

சில விடயங்களை கூறினால் கேவலமாக இருக்கும். அனைத்தையும் 100 வீதம் என்று நம்பும் யாழ். கள உறவுகள் உண்மைகளை அறிந்து உரையாடுவது நல்லது. மேலெழுந்த வாரியாக அறிந்து கொண்டு ஒரு பக்க சார்பாக உரையாடுவது தவறு.

இங்கே சிங்களத்தினை நியாயப்படுத்த வரவில்லை. விடுதலைப் புலிகள் செய்தவை எல்லாம் 100 வீதம் என்று நம்பாது அவற்றை ஆராய்ந்து உரையாடுங்கள்.

இங்கே நான் கூறியது பொய் என்றால் தமிழ்ச்செல்வனோடு இருந்து அரசியல்துறையில் பணியாற்றிய போராளிகள் பலர் நோர்வேயில் உள்ளனர் கேட்டுப் பாருங்கள் உண்மை தெரியும்.

"அச்சிறார்களை கொலை செய்தததாக தூக்கிப் பிடிப்பவர்கள்"

இதன்மூலம் நிர்மலன் அந்தக்கொலைகளை நியாயப்படுத்துவது தெரிகிறது. இதைவிட உங்களைப் புரிந்துகொள்ள வேறொன்றும் அவசியமில்லை.

வள்ளிபுனத்தில் உள்ள செஞ்சோலையில் சிறிலங்காப் படையினர் குண்டு வீசி அச்சிறார்களை கொலை செய்தததாக தூக்கிப் பிடிப்பவர்கள் அன்று அந்த செஞ்சோலை வளாகத்துக்குள் இருந்து உயிர் தப்பிய பிள்ளைகளை தொடர்பு கொண்டு கேளுங்கள். உண்மையில் நீங்கள் செஞ்சோலை சிறார்கள்தானா என்று.

அதற்கு அவர்கள் இல்லை; எங்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்துவிட்டு ஓய்வுக்காக அங்கே கொண்டு சென்று விட்டார்கள் என்று கூறுவார்கள்.

அதில் உயிர் தப்பிய பிள்ளை. பாவம் மிக அழகான பிள்ளை. முகம் அலங்கோலமாகி காலும் இல்லாத நிலையில் அழுதழுது கூறிய விடயம் மறக்க முடியாதது. அந்தப் பிள்ளை, தன்னை தனது தாய்-தந்தையரிடம் இருந்து பலவந்த ஆட்சேர்ப்பு மூலம் அழைத்துச் சென்று பயிற்சி தந்தார்கள் என்றும் தாம் உண்மையில் செஞ்சோலைச் சிறார்கள் இல்லை என்றும் கூறியது.

இவரைப் போல பல பிள்ளைகள் அங்கே போய் கேட்டால் கதை கதையாக கூறுவார்கள்.

சில விடயங்களை கூறினால் கேவலமாக இருக்கும். அனைத்தையும் 100 வீதம் என்று நம்பும் யாழ். கள உறவுகள் உண்மைகளை அறிந்து உரையாடுவது நல்லது. மேலெழுந்த வாரியாக அறிந்து கொண்டு ஒரு பக்க சார்பாக உரையாடுவது தவறு.

இங்கே சிங்களத்தினை நியாயப்படுத்த வரவில்லை. விடுதலைப் புலிகள் செய்தவை எல்லாம் 100 வீதம் என்று நம்பாது அவற்றை ஆராய்ந்து உரையாடுங்கள்.

இங்கே நான் கூறியது பொய் என்றால் தமிழ்ச்செல்வனோடு இருந்து அரசியல்துறையில் பணியாற்றிய போராளிகள் பலர் நோர்வேயில் உள்ளனர் கேட்டுப் பாருங்கள் உண்மை தெரியும்.

இதைப்போலவே சிங்கள அரசு செய்தவற்றின் உண்மைகளையும் அறிய ஆவல். அந்தப்பக்கம் யாராவது இருந்தால் சொல்லுங்கள், கேட்டுப் பார்ப்பதற்கு.

உங்களிடம் பலவற்றுக்கு ஆதாரங்கள் இருக்குப்போல. எனக்கும் சில வேண்டும், எடுத்துத் தரமுடியுமா?

1. ஆனந்தபுரத்தில் இரசாயனக் குண்டுவீச்சு.

2. பாதுகாப்பு வலயத்தை அறிவித்தவர்களே அதற்கு குண்டு வீசியமை.

3. வைத்தியசாலைகள் மீதான தாக்குதல்.

4. பத்தாயிரம் மக்கள் மட்டும்தானாம் புலிகளுடன் இறுதிக் காலங்களில் இருந்தார்கள்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.