Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்.....

Featured Replies

நடந்து முடிந்துள்ள வட மாகாண சபையின் தேர்தல் முடிவுகளை பதிவு செய்வதற்கான பதிவு.

நான் முடிந்த வரையில் பதிவு செய்ய முயற்சிக்கும் அதே வேளையில் ஏனையவர்களும் தாம் அறியும் முடிவுகளை இணைத்துங் கொள்ளுங்கள்...

  • Replies 392
  • Views 31.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தேர்தல முடிவுகள் தேர்தல் தொகுதி அடிப்படையிலேயே அறிவிக்கப்படும்....

யாழ் மாவட்டத்தில் 11 தேர்தல் தொகுதிகள் உள்ளன.

1. ஊர்காவற்துறை

2. வட்டுக் கோட்டை

3. காங்கேசன்துறை

4. மானிப்பாய்

5. கோப்பாய்

6. உடுப்பிட்டி

7. பருத்தித்துறை

8. சாவகச்சேரி

9. நல்லூர்

10. யாழ்ப்பாணம்

11. கிளிநொச்சி

வன்னி தேர்தல் மாவட்டத்தில் மூன்று தேர்தல் தொகுதிகள் உள்ளன.

1. மன்னார்

2. வவுனியா

3. முல்லைத்தீவு

  • கருத்துக்கள உறவுகள்

அவசரம் தேவையான... நல்லதொரு தலைப்பு மணிவாசகன். :) 
ஆவலுடன்... உங்கள் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.....

tna-house-vote-logo.jpg

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

உத்தியோகப்பற்றற்ற தகவல்களின் படி வட மாகாணத்தில் கணிசமான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது.

வாக்களிப்பு வீதம் மாவட்ட ரீதியாக

யாழ்ப்பாணம் 50%
 
கிளிநொச்சி 60%
 
வவுனியா 61%
 
முல்லைத்தீவு 63% 
 
மன்னார் 70%

அவசரம் தேவையான... நல்லதொரு தலைப்பு மணிவாசகன். :) 
ஆவலுடன்... உங்கள் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றேன்.....

பகிர்விற்கு நன்றி தமிழ்சிறி அண்ணா!

சனிக்கீழமை எனக்கு மிகவும் பிசியான நாள். எனவே நீங்களும் உங்களுக்குக் கிடைக்கும் தேர்தல் முடிவுகளை பதிவிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தத் தேர்தலில்.... அதிக அக்கறை செலுத்தாததால்...
போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர் விக்னேஸ்வரன், தவறானராசா போன்றவர்களை செய்திகளின் மூலம் அறிந்தேன்.
வேறு... எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றது.... போன்ற தகவல்களைத் தந்தால்... கொஞ்சம் உதவியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு தலைப்பு மணிவாசகன்.

தொடருங்கோ

  • கருத்துக்கள உறவுகள்

உத்தியோகப்பற்றற்ற தகவல்களின் படி வட மாகாணத்தில் கணிசமான வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளது.

வாக்களிப்பு வீதம் மாவட்ட ரீதியாக

யாழ்ப்பாணம் 50%

கிளிநொச்சி 60%

வவுனியா 61%

முல்லைத்தீவு 63% 

மன்னார் 70%

----

மன்னாரில்.... மற்றைய இடங்களை விட அதிக வாக்குப் பதிவு இடம் பெற்றுள்ளதால்....

முஸ்லீம்கள், சிங்களவரின் குடியேற்றம் அதிகமாகி விட்டது என்று நினைக்கின்றேன்.

இப்போது கிடைக்கும் வீதங்கள் அதிகம் உபயோகமானவையாக இருக்காது.

சில நேரம் வடக்கில் 130%, 140 % 150%  எல்லாம் வாக்களிக்கும் சந்தர்ப்பம் இருக்கு. 

Edited by மல்லையூரான்

நான் இந்தத் தேர்தலில்.... அதிக அக்கறை செலுத்தாததால்...

போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர் விக்னேஸ்வரன், தவறானராசா போன்றவர்களை செய்திகளின் மூலம் அறிந்தேன்.

வேறு... எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றது.... போன்ற தகவல்களைத் தந்தால்... கொஞ்சம் உதவியாக இருக்கும்.

  ஆகா :D

  • தொடங்கியவர்

ஒப்பீட்டுத் தேவை கருதி 2010ம் ஆண்டு  பொதுத் தேர்தல் பெறுபேற்றை இங்கே இணைக்கிறேன்

(யாழ் மாவட்டம்)

lankai Tamil Arasu Kadchi 65,119 43.85% 5 ஆசனங்கள்

United People's Freedom Alliance 47,622 32.07% 3 ஆசனங்கள்

United National Party 12,624 8.50% 1  ஆசனம்

Akila Ilankai Thamil Congress 6,362 4.28% 0 ஆசனம்

Valid Votes148,50388. 25%

Rejected Votes19,77411.75%

Total Polled168,27723.33%

Regis.Electors721,359

வன்னி மாவட்டம்

Ilankai Tamil Arasu Kadchi 41,673 38.96% 3 ஆசனங்கள்

United People's Freedom Alliance 37,522 35.07% 2 ஆசனங்கள்

United National Party 12,783 11.95% 1 ஆசனம்

Democratic People's Liberation Front 5,900 5.52% 0

Valid Votes 106,977 91.29%

Rejected Votes 10,208 8.71%

Total Polled 117,185 43.89%

Regis.Electors 266,975
 
Edited by Manivasahan

  • தொடங்கியவர்

நான் இந்தத் தேர்தலில்.... அதிக அக்கறை செலுத்தாததால்...

போட்டியிடும் கட்சிகளின் வேட்பாளர் விக்னேஸ்வரன், தவறானராசா போன்றவர்களை செய்திகளின் மூலம் அறிந்தேன்.

வேறு... எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றது.... போன்ற தகவல்களைத் தந்தால்... கொஞ்சம் உதவியாக இருக்கும்.

கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களுமாக ஏராளமானவை போட்டியிடுகின்றன. ஆனாலும் தமீழ் தேசியக் கூட்டமைப்பும் ஈபிடிபியை உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணியுமே கணிசமான வாக்குக்களை பெறப் போகின்றன.

சில வேளைகளீல் ஐக்கிய தேசியக் கட்சியும் ஓரளவு வாக்குக்களை பெறலாம். ஆனால் ஏனைய கட்சிகள் வெற்றி பெறும் நோக்கில் போட்டியிடுகின்ற கட்சிகள் அல்ல....

  • கருத்துக்கள உறவுகள்

1(48).jpg

  • தொடங்கியவர்

இப்போது கிடைக்கும் வீதங்கள் அதிகம் உபயோகமானவையாக இருக்காது.

சில நேரம் வடக்கில் 130%, 140 % 150% விதம் எல்லாம் வாக்களிக்கும் சந்தர்ப்பம் இருக்கு. 

வணக்கம் மல்லையூரான். நான் பதிவிட நினைத்த ஒரு விடயத்தை பதிவிட்டிருக்கிறீர்கள். மிக அதிகமான குளறுபடிகள் வாக்குப் பெதிவு முடிவடைந்த பின்னரே நடைடபெறுவது வழக்கம். பெட்டிகளை மாற்றுதல் ஏற்கனவே புள்ளடியிட்ட வாக்குச் சீட்டுக்களைத் திணித்தல் உள்ளிட்ட இன்னோரன்ன கைங்கரியங்களில் ஆளும் தரப்பு ஈடுபடலாம்........

அத்துடன் வடக்கில் பெரும்பாலான தேர்தல் அதிகாரிகளாக தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவர்களே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்தல் குளறுபடிகளில் தேர்தல் அதிகாரிகளும் கை தேர்ந்தவர்கள்...

1(48).jpg

வணக்கம் நுணாவிலான்

அரச தரப்பினால் வெளியிடப்படும் கருத்தக்கணிப்புகள் போலவே உதயனது கருத்துக்கணிப்பையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

காரணம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தபபடும் பொது பல தொழினுடப விடயங்கள் கருத்தில் எடுக்கப்பட வேண்டும்.

(Sampling method, percentage of sample....etc)

இவையெல்லாம் இந்ததக் கருத்துக் கணிப்பில் கருத்திற் கொள்ளப்பட்டதா தெரியவில்லை.

Edited by Manivasahan

  • தொடங்கியவர்

மன்னாரில்.... மற்றைய இடங்களை விட அதிக வாக்குப் பதிவு இடம் பெற்றுள்ளதால்....

முஸ்லீம்கள், சிங்களவரின் குடியேற்றம் அதிகமாகி விட்டது என்று நினைக்கின்றேன்.

நீங்கள் சொல்வது உண்மை தான். பொதுவாகவே முஸ்லிம் பகுதிகளில வாக்களிப்பு வீதம் எப்போதுமே அதிகமமாகவே இருக்கும் (கள்ள வாக்குகளும் அதிகம்)

ஆனாலும் கடந்த பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும் போது தமிழ் மக்கள் பெருமளவில் வாக்களித்திருக்கிறார்கள்.

வணக்கம் ஹரி

தேர்தல் திணைக்களத்தின் இணையத்தளத்தில் உத்தியொகபூர்வமான முடிவுகள் வெளியிடப்படும் என்றாலும் அதில் சிறிது தாமதம் இருக்கிறது

நல்லதொரு தலைப்பு மணிவாசகன்.

தொடருங்கோ

வணக்கம் விசுகு அண்ணா! சுகமாக இருக்கிறீங்களா???

நீங்களும் உங்கள் பதிவுகளை இடுங்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மல்லையூரான். நான் பதிவிட நினைத்த ஒரு விடயத்தை பதிவிட்டிருக்கிறீர்கள். மிக அதிகமான குளறுபடிகள் வாக்குப் பெதிவு முடிவடைந்த பின்னரே நடைடபெறுவது வழக்கம். பெட்டிகளை மாற்றுதல் ஏற்கனவே புள்ளடியிட்ட வாக்குச் சீட்டுக்களைத் திணித்தல் உள்ளிட்ட இன்னோரன்ன கைங்கரியங்களில் ஆளும் தரப்பு ஈடுபடலாம்........

jaffna%20in%20400%20260.jpg

jaffna%20in%201.jpg

jaffna%20in%202.jpg

jaffna%20in%204.jpg

jaffna%20in%205.jpg

தேர்தல் கண்காளிப்பாளர்கள் பல்வேறு நாடுகளிலிருந்து... வந்து என்னத்தை பார்வையிடுகிறார்கள்?

தேர்தலைச் சாட்டாக வைத்து, பென்சன் எடுத்த ஆக்களெல்லாம்... வடக்கு மாகாணத்துக்கு சுற்றுலா வருகின்றார்கள் போலுள்ளது.

ஐயா உவையள் ஏற்கனவே தீர்ப்பை எழுதி வைச்சுப் போட்டு அரசாங்கத்தின்ரை கவனிப்பிலை ஊர் சுத்திப் பாக்கிற கூட்டம்.  உவையளை கண்காணிப்பாளர்கள் எண்டே  சொல்ல வேண்டாம்....

  • கருத்துக்கள உறவுகள்

Go TNA Go

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா உவையள் ஏற்கனவே தீர்ப்பை எழுதி வைச்சுப் போட்டு அரசாங்கத்தின்ரை கவனிப்பிலை ஊர் சுத்திப் பாக்கிற கூட்டம்.  உவையளை கண்காணிப்பாளர்கள் எண்டே  சொல்ல வேண்டாம்....

நல்ல... வெள்ளை மணல் உள்ள, கடற்கரையோரமான இடங்களை.. இவர்கள் பார்வையிட்ட போதே....

இவர்கள்... சிலோன் கடற்கரையில், குளித்து கும்மாளமடிக்க வந்த கூட்டம் என்று தெரிந்து விட்டது. :D

அதிலை... ஒராள், நெற்றியிலை... நாமம் போட்டுக் கொண்டு.. சிம்பாலிக்காக... உங்களுக்கும் "அரோகரா....." என்ற மாதிரி நிற்கிறார். :lol:

மற்ற ஒருத்தர்... கறுப்புக் கண்ணடியை போட்டுக் கொண்டு, கையிலை வைச்சிருக்கிற கடுதாசியை... பார்க்காமல், அவற்றை சப்பாத்தைப் பார்க்கிறார். :icon_idea:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

முன்னர் ஐரோப்பிய ஒன்ிறயத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் வரவழைகக்கப்பட்டிரு;நதனர். அவர்களது நடுநிலைமையயான அறிக்கைகள் அரசாங்கத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து இப்போதெல்லாம் தமககுத் தலையாட்டக்கூடிய இந்தியா பாகிஸ்தான மாலைதீவுகள் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களை வரவழைத்து தேர்தர் கண்காணிப்பாளர்கள் என்று நாடகமாடுகின்றனர்

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மல்லையூரான். நான் பதிவிட நினைத்த ஒரு விடயத்தை பதிவிட்டிருக்கிறீர்கள். மிக அதிகமான குளறுபடிகள் வாக்குப் பெதிவு முடிவடைந்த பின்னரே நடைடபெறுவது வழக்கம். பெட்டிகளை மாற்றுதல் ஏற்கனவே புள்ளடியிட்ட வாக்குச் சீட்டுக்களைத் திணித்தல் உள்ளிட்ட இன்னோரன்ன கைங்கரியங்களில் ஆளும் தரப்பு ஈடுபடலாம்........

அத்துடன் வடக்கில் பெரும்பாலான தேர்தல் அதிகாரிகளாக தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவர்களே நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தேர்தல் குளறுபடிகளில் தேர்தல் அதிகாரிகளும் கை தேர்ந்தவர்கள்...

வணக்கம் நுணாவிலான்

அரச தரப்பினால் வெளியிடப்படும் கருத்தக்கணிப்புகள் போலவே உதயனது கருத்துக்கணிப்பையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

காரணம் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தபபடும் பொது பல தொழினுடப விடயங்கள் கருத்தில் எடுக்கப்பட வேண்டும்.

(Sampling method, percentage of sample....etc)

இவையெல்லாம் இந்ததக் கருத்துக் கணிப்பில் கருத்திற் கொள்ளப்பட்டதா தெரியவில்லை.

எப்படியான கருத்து கணிப்பை நடாத்தினார்கள் என்பது தெரியவில்லை.கிழக்கு தேர்த்தலில் தாங்கள் சரியாக கணித்தார்கள் என்பதால் ஒரு சிறு நம்பிக்கை உண்டு.
 
மேலும் அரசுக்கு தனது தோல்வி தெரியும் என்பதால் கள்ள வாக்குகளை அளிப்பதில் அவர்கள் முன்னிற்பார்கள் என்பதில் ஐயமில்லை.வந்த தேர்த்தல் கண்கணிப்பாளர்களை பார்க்க சேர்ந்து கும்மி அடிக்கும் நாடுகளில் இருந்து வந்திருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. இவர்களின் தில்லு முல்லுகளை கூட்டமைப்பு அறிவிக்கும் வரை பொறுத்திருப்போம்.
  • கருத்துக்கள உறவுகள்

தபால் மூல வாக்களிப்பு

முல்லைத்தீவு -

TNA -646,

UPFA -146,

UNP -2,

DP -1,

ஆதாரம் - சூரியன் வானொலி

Edited by புலிக்குரல்

வாக்களித்த வாக்காளன் என்ற முறையில நானும் தேர்தல் முடிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

  • தொடங்கியவர்

தபால் மூல வாக்களிப்பு

முல்லைத்தீவு -

TNA -646,

UPFA -146,

UNP -2,

DP -1,

ஆதாரம் - சுரியன் வானொலி

அநேகமான தேர்தல்களில் தபால் மூல வாக்குகளிற்கும் ஏனைய வாக்ககளிற்கும் பெருமளவு வித்தியாசம் இருப்பதில்லை. ஆனாலும் முல்லைத்தீவு மாவட்டத்தைப் பொறுத்த வரையில் ரிசாத்தும் ஈபிடிபியினரும் கடும் அச்சுறுத்தல்களையும் தாண்டி வாக்களிப்பதை சில அரச ஊழியர்கள் விரும்பாமல் இருந்திருக்கலாம். எனினும் நல்லதோர் ஆரம்பம்

நாமம் போட்டவர் - முன்னால் இந்திய தேர்தல் அதிகாரி ..திரு கோபால சுவாமி

http://en.wikipedia.org/wiki/N._Gopalaswami

தேர்தல் பற்றி "தினத்தந்தியில்" முதல் பக்க தலைப்பு செய்தி !

DT21Sep2013.jpg

http://tamilepaper.blogspot.com/2013/09/25.html

http://tamilepaper.blogspot.com

கிளிநொச்சி : PostalVotes 
தபால் வோட்டுகள்

TNA : 756  ( 82.26%)

upfa  :  160  ( 17% )

=====================================

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.