Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையை சர்வதேச அரங்கில் "குறிவைப்பது" சரிதானா? மஹிந்த கேள்வி

Featured Replies

பாதுகாப்பு, மனித உரிமைகள் போன்ற போர்வையில் சில நாடுகள் மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதை அனுமதிக்கக்கூடாது என்று இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.

130925095425_mahindarajapaksheun_304x171

"பாதுகாப்பு, மனித உரிமை என்ற போர்வையில் தலையீடு கூடாது" மஹிந்த ராஜபக்ஷ

ஐ.நா மன்றத்தில் 68வது பொதுச் சபைக் கூட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ, சர்வதேச ஒப்புதலுடன், இந்தக் கடமைகளை ஆற்றவென்று ஐ.நா மன்றம் பணிக்கப்பட்டிருக்கும் சூழலில், இது போல சில நாடுகள் சர்வதேச அரங்கில் “போலிஸ்கார்” வேலை பார்ப்பது தேவையற்றது என்றார்.

 

குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் இது போன்ற காரணங்களைக் காட்டி, சில நாடுகள் தலையிட்டு வருவது கவலையளிக்கும் விஷயம் என்றார் மஹிந்த ராஜபக்ஷ.

வேறு விதமான கலாசாரங்கள் உள்ள நாடுகளில், ஒரு குறிப்பிட்ட விதமான ஜனநாயகத்தைத் திணிக்க முயல்வது பெருங்குழப்பத்தையே விளைவிக்கும் என்றார் மஹிந்த ராஜபக்ஷ. இந்தத் தலையீடுகளால் இந்த நாடுகளில் என்ன மேலதிக ஸ்திரத்தன்மை ஏற்பட்டுவிட்டது என்றும் அவர் கேட்டார்.

'இலங்கை குறிவைக்கப்படுவது சரியா?'

போருக்குப் பிந்தைய இலங்கை பற்றிக் குறிப்பிட்ட மஹிந்த, இலங்கை பயங்கரவாதத்தைத் தோற்கடித்த பின்னர், இப்போது நாட்டில் நல்லிணக்கத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது என்றார்.

இந்தச் சூழலில், வட மாகாணத் தேர்தலைப் பற்றிக் குறிப்பிட்ட மஹிந்த , இப்பகுதி மக்களுக்கு சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது, மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றார்.

இது போல தெளிவாகத் தெரியும்படியான முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையிலும், இலங்கை ஐ.நா மன்றத்துடன் ஒத்திசைந்து இயங்கிவரும் நிலையிலும், இலங்கையை சில நாடுகள் சர்வதேச அரங்கில், ஐநா மன்றத்தின் பல்வேறு அரங்குகளைப் பயன்படுத்தி, குறிவைப்பது சரிதானா என்றும் மஹிந்த வினவினார்.

இலங்கை விவகாரங்களுக்குத் தரப்படும் அள்வுக்கு மீறிய அழுத்தம் பல நாடுகளை ஆச்சர்யப்படவைத்திருக்கிறது என்று கூறிய மஹிந்த , ஐ.நா மன்றம், இது போன்ற விஷயங்களில், சமமற்ற அளவுகோல்கள் பயன்படுத்தப்படுவதைப் பற்றி விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

'போரையும் மீறி வளர்ச்சி'

முப்பதாண்டு கால உள்நாட்டுப்போர் மற்றும் சுனாமி போன்றவைகளையும் மீறி, இலங்கை, ஐ.நா மன்றத்தின் புத்தாயிர வளர்ச்சி இலக்குகளை எட்டியிருக்கிறது என்றும் மஹிந்த சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக வறுமை ஐந்தாண்டுகளுக்கு முன்னர் 25.2 சதவீதத்திலிருந்து 2012ம் ஆண்டில் 6.5 சதவீதமாக குறைந்திருக்கிறது என்றார் மஹிந்த. 2012ம் ஆண்டின் மனித மேம்பாட்டு குறியீட்டெண்ணில் பட்டியலிடப்பட்டிருக்கும் 287 நாடுகளில்,இலங்கைக்கு 92வது இடம் தரப்பட்டிருக்கிறது என்பதையும் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/09/130925_mahindaun.shtml

குறி வைக்கப்படாது.

  • கருத்துக்கள உறவுகள்
இந்தச் சூழலில், வட மாகாணத் தேர்தலைப் பற்றிக் குறிப்பிட்ட மஹிந்த , இப்பகுதி மக்களுக்கு சுமார் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு தரப்பட்டிருக்கிறது, மக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்றார்.

 

 

போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆகியும் லட்சக்கணக்கான இராணுவம் தமிழ் மக்களை அச்சுறுத்திய வண்ணம் உள்ளதால் உலக நாடுகள் உங்களை குறி வைக்கிறது. உங்களின் அமைச்சரே (வேறை யார் பிரச்சார பீரங்கி தான்) இயலுமாயின் ராணுவத்தை வெளியேற்றிப்பார் என அச்சுறுத்துவது ஏன்? உங்களை அறியாமலே அல்லது அறிந்தோ இராணுவ பலம் கொண்டு மக்களை நசுக்க நினைத்ததன் பலாபலன் தான் நடந்து முடிந்த தேர்த்தலில் உங்களின் படுதோல்வி.25 ஆண்டுகளுக்கு பின்  ஏதோ விரும்பி தேர்ததல் வைத்தது போலல்லவா உங்களின் கதை. உலக நாடுகளின் அழுத்தத்தினால் தான் தேர்த்தலே நடந்தது. ஆனாலும் வெற்றி பெற ஒட்டுக்குழுக்களையும், சீருடை அணியாத இராணுவத்தினரின் அராஜகங்களுக்கு மத்தியிலும் துணிந்து உங்களுக்கு வாக்களிகாத மக்களைப் பற்றி ஒரு வரி  ஐ.நாவில் சொல்ல துணிவில்லை.இவரெல்லாம் ஒரு நாட்டின் தலைவர் ஐ.நா வரை சென்று பேசுகிறாராம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவரெல்லாம் ஒரு நாட்டின் தலைவர் ஐ.நா வரை சென்று பேசுகிறாராம்.

 

ஐநா  தலைவரே

என்னால முடியல இவனை  அடக்க என்று கைவிரித்தபின்...........

இதென்ன  கேள்வி.......?? :(

மகிந்தரே தமிழ் மக்களை தாங்கள் குறிவைத்தது சரியா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.