Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாணசபையை சர்வதேச மயப்படுத்தல் - வெளிநாட்டு இராஜதந்திரிகள் முன்னிலையில் முதலமைச்சர் பதவிப் பிரமாணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Vigneswaran-seithy-150.jpg

வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் வடக்கு மக்கள் முன்னிலையில் வட மாகாணசபை முதலமைச்சர் உள்ளிட்டோர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேற்குலக நாடுகளின் தூதுவர்கள், அரச சார்பற்ற நிறுனப் பிரதானிகள் மற்றும் வடக்கு மக்கள் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். யாழ்ப்பாணம் கைதடியில் கோலாகலமான நிகழ்வு ஒன்று நடத்தப்பட உள்ளதாகவும் இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து பதவிப் பிரமாணம் செய்து கொள்ளப்பட உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், ஜனாதிபதி அல்லது வடக்கு ஆளுனர் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்வது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

  

ஜனாதிபதி அல்லது ஆளுனரின் முன்னிலையில் கட்டாயம் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை அழைத்து பதவிப் பிரமாணம் செய்து கொள்வதன் மூலம் வட மாகாணசபை நடவடிக்கைகளை சர்வதேச மயப்படுத்த முயற்சிக்கப்படுவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. பெருமளவிலான வடக்கு மக்களை பதவிப் பிரமாண நிகழ்வில் பங்கேற்கச் செய்ய கூட்டமைப்பு முயற்சிப்பதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாகாணசபை முதலமைச்சர் பதவிப் பிரமாண நிகழ்வுகளில் இதுவரையில் வெளிநாட்டு தூதுவர்கள் பங்கேற்றதில்லை. இதேவேளை, பதவிப் பிரமாண நிகழ்வுகளில் தமிழகத்தைச் சேர்ந்த இலங்கையை எதிர்க்கும் தரப்பினர் பங்கேற்கின்றார்களா என்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

 

 

http://seithy.com/breifNews.php?newsID=94025&category=TamilNews&language=tamil

இப்பதான் நமக்கு பிடிச்ச ஒரு மாதிரி பதவி பிரமாணம் பற்றி பேசுகிறார்கள். நடை பெறுமா இது? அல்லது இன்னொரு தமிழ் ஊடக செய்தி மட்டும்தானா?

  • கருத்துக்கள உறவுகள்
சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

 

 

உண்மையில் என்ன நடக்கப்போகிறது என அறிய சிங்கள பத்திரிகை இப்படியான செய்திகளை அவிழ்த்து விட்டுள்ளது போலுள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் என்ன நடக்கப்போகிறது என அறிய சிங்கள பத்திரிகை இப்படியான செய்திகளை அவிழ்த்து விட்டுள்ளது போலுள்ளது.

நாடி புடிச்சு பார்க்கின்றார்கள் போல ......  :D

  • கருத்துக்கள உறவுகள்
 
 
நியமனக் கடிதத்தை ஆளுநரிடமிருந்து பெற்றார் விக்கினேஸ்வரன்
 

முன்னாள் நீதியரசரும் வடமாகாண சபைத் தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுக்கொண்டவருமான சி.வி.விக்கினேஸ்வரன் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியிடமிருந்து வடமாகாண முதலமைச்சருக்கான நியமனக்கடிதத்தை இன்று பெற்றுக் கொண்டதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் வீரகேசரி இணையத்திற்கு தெரிவித்தார்.

Letter-Hand-Over.jpg

அதன்படி நியமனக் கடிதம் இன்று வடமாகாண ஆளுநரின் இல்லத்தில் வைத்து விக்கினேஸ்வரனிடம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் யார் முன்னிலையில், எங்கு, எப்போது முதலமைச்சர் பதவியேற்பது குறித்து கூட்டமைப்பு தீர்மானிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

cv1.jpg

cv2.jpg

cv3.JPG

 
  • கருத்துக்கள உறவுகள்

இராணுவமேதையும் சட்டமேதையும் அப்படி என்னத்தை பரிமாறுகிறார்கள்? இராணுவமா?சட்டமா? பொருத்திருந்து பார்ப்போம்....

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு விடயத்தைச் சொன்ன சிங்களப்பத்திரிகைக்கு நன்றி வாக்களித்த மக்களுக்கு முன்னால் சட்டத்திற்காக ஒரு சட்டத்தரணி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் எடுப்பது நல்லது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.