Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதல்வர் செய்த முதல் பணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Untitled-1.jpg

வடக்கு மாகாண முதலமைச்சராக நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்ட க.வி.விக்னேஸ்வரன் தனது முதல் பணியாக முதியோர் தினமான நேற்று சுழிபுரம் வழக்கம்பரை சிவபூமி முதியோர் இல்லத்துக்குச் சென்று அவர்களுடன் கலந்துரையாடினார்.

அத்துடன் அங்கு வசிக்கும் 101 வயதுடைய மூதாட்டி ஒருவர் மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தமைக்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.
 
வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியிடம் இருந்து நேற்றுக் காலை தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அங்கிருந்து நேரடியாக சுழிபுரம் வழக்கம்பரை சிவபூமி முதியயோர் இல்லத்துக்குச் சென்றார். 
 
முதியோர் தினமான நேற்று அவர் அங்கிருந்து முதியோர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன் அவர்க ளுக்கு உணவுப் பொருள்களையும் வழங்கினார். அங்கு வசிக்கும் 101 வயதுடைய மூதாட்டி தனது தள்ளாத வயதிலும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருந்தார். 
 
அவருடன் அளவளாவிய முதலமைச்சர், தமழர்களின் உரிமைக்காக தனது வாக்கைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அளித்து அதன் வெற்றிக்கு உதவி புரிந்த அவருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். 
 
முதல்வராக நியமனக் கடிதம் பெற்ற பின்னர் அவர் மேற்கொண்ட முதல் பணி இதுவாகும்.

http://www.onlineuthayan.com/News_More.php?id=873702334502774642

அங்கு வசிக்கும் 101 வயதுடைய மூதாட்டி தனது தள்ளாத வயதிலும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருந்தார். 

சுழிபுரத்தாருக்கு ஆயுள் கெட்டீப்பா! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி.. முதலமைச்சர்... சமூக சேவை புறப்பட்டிருக்கிறார்...! நாங்க எல்லாம் ஸ்கூலில.. சாரணர்..லியோ அமைப்புக்களில்.. இருக்கேக்க செய்ததை.. முதலமைச்சர் இப்ப செய்யுறார்..! இதுக்கு எதுக்கு.. கட்சி.. வாக்கு.. பதவி...!!! :rolleyes::)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் எமது விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய அந்த மாவீர செல்வங்களுக்கு ஒரு துயிலும் இல்லம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி இருந்தால் மன நிறைவு கண்டிருப்பேன். 

  • கருத்துக்கள உறவுகள்

ஏனையா வந்தும் வராததுமா? அந்தாள தூக்கி உள்ள போடுற ஐடியா வா?

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் எமது விடுதலைக்காக தம்மை ஆகுதியாக்கிய அந்த மாவீர செல்வங்களுக்கு ஒரு துயிலும் இல்லம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி இருந்தால் மன நிறைவு கண்டிருப்பேன். 

தற்போதைக்கு

அவர்கள் எமது நெஞ்சங்களில்  இருக்கட்டும்.....

  • கருத்துக்கள உறவுகள்

விடியல் காலையில எழும்பிச் சாமி கும்பிட்டுக் கோப்பியொண்டைக் குடிச்சுப்போட்டு என்ன செய்யிது எண்டு யோசிச்சிருப்பார். சும்மா அங்கையாவது போட்டு வருவமெண்டு போயிருக்கிறார்.  அவர் வேறை என்னத்தைத்தான் செய்யிறது. ஆட்சி, அதிகாரம், அலுவலகமெண்டு எதுவுமில்லாமல்.

இதில் 2 வகையாக  எடுத்துக்கொள்ளலாம்

1- 1977 இல்  நீங்க தானே  வாக்குப்போட்டு தமிழீழம் கேட்டவர்கள் என  அவர்களை  முதலில்  சந்தித்திருக்கலாம் (நல்லவகையாக எடுத்துக்கொண்டால் :icon_idea: )

2- புலிகளை  மட்டுமல்ல இளைஞர்இகளையே  சந்திக்க விரும்பல

   (பகையாக எடுத்துக்கொண்டால் :D )

  • கருத்துக்கள உறவுகள்

மாணவப்பிராயத்தில் செய்யாததை நீதியரசராக இருந்தபோது செய்யாததை இப்போது அரசியல்வாதியாகியவுடன் செய்ய விரும்புகின்றார்.
சமூகசேவையே அதாவது மக்கள் சேவையே மகேசன் சேவை.மகிந்தவிற்கு எதிராகக் கோடி தூக்க இன்னும் நாட்கள் இருக்கின்றனவாம்.அதுவும் நாள் நட்சத்திரம் எல்லாம் பார்த்தவுடன் தான் ஆரம்பிப்பாராம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏனையா வந்தும் வராததுமா? அந்தாள தூக்கி உள்ள போடுற ஐடியா வா?

ஏற்க்கனவே இதெல்லாம் செய்யப்போவதாக மக்களிடம் சொல்லித்தானே தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் . பின்னர் ஏன் தயங்கவேண்டும் ? 

  • கருத்துக்கள உறவுகள்

நடக்கிறத பேசுங்கப்பா அவரோ அவர்கள் அப்பிடி மாவீரர் துயிலும் இல்லங்களை மீழமைத்தால் நான் யாழ் களத்தின் அரசியல் கருத்துகளில் இருந்தே விலகி கொள்கின்றேன்

இலங்கை சட்டப்படி அவற்களுக்கு இருக்கும் அதிகாரங்கள் படி அவர்களால் அவளவு தூரத்திற்கு எல்லாம் போக முடியாது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தற்போதைக்கு

அவர்கள் எமது நெஞ்சங்களில்  இருக்கட்டும்.....

தற்பொழுது அல்ல எப்பொழுதும் அவர்கள் எமது நெஞ்சங்களில் இருப்பார்கள். :) நான் கேட்பதெல்லாம் அவர்களை வைத்து வணங்க ஒரு ஆலையம் வேண்டும் என்பதே 

நடக்கிறத பேசுங்கப்பா அவரோ அவர்கள் அப்பிடி மாவீரர் துயிலும் இல்லங்களை மீழமைத்தால் நான் யாழ் களத்தின் அரசியல் கருத்துகளில் இருந்தே விலகி கொள்கின்றேன்

இலங்கை சட்டப்படி அவற்களுக்கு இருக்கும் அதிகாரங்கள் படி அவர்களால் அவளவு தூரத்திற்கு எல்லாம் போக முடியாது

இலங்கை சட்டப்படி நடப்பதானால் பின்னர் எதற்கு தனியான வடமாகாண முதல்வர் பேசாமல் மகிந்தரிடத்தில் ஆமாம் சாமியாக இருக்கலாம். :blink:  

இன்றைய  நிலையில் எவராலும் தாயகத்தில்  அவற்றை  செய்யமுடியாது சுண்டல்.

அத்தடன் மீண்டும் மீண்டும் இடிக்கும் வகையில் கட்டுவதை நாம் அனுமதிக்கக்கூடாது...

தமிழ் அரசு உங்களுக்கும்  சேர்த்துத்தான்....

  • கருத்துக்கள உறவுகள்

அதற்க்கு இலங்கை ஒரு போதும் சம்மதிக்காது ஒரே வழி தன்னாட்சி அதிகாரம் இல்லது தமிழ் ஈழம்

தற்பொழுது அல்ல எப்பொழுதும் அவர்கள் எமது நெஞ்சங்களில் இருப்பார்கள். :) நான் கேட்பதெல்லாம் அவர்களை வைத்து வணங்க ஒரு ஆலையம் வேண்டும் என்பதே

இலங்கை சட்டப்படி நடப்பதானால் பின்னர் எதற்கு தனியான வடமாகாண முதல்வர் பேசாமல் மகிந்தரிடத்தில் ஆமாம் சாமியாக இருக்கலாம். :blink:

முதல்வரை விட சகல அதிகாரமும் இருப்பது ஆளுநரிடம் அதை விட ஜனாதிபதியிடம் இவ்வர்கள் நினைத்தால் மாகாண சபையை கலைத்து விட்டு ஆளுனரின் ஆட்சியின் கீழ் கொண்டுவரலாம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதற்க்கு இலங்கை ஒரு போதும் சம்மதிக்காது ஒரே வழி தன்னாட்சி அதிகாரம் இல்லது தமிழ் ஈழம்

முதல்வரை விட சகல அதிகாரமும் இருப்பது ஆளுநரிடம் அதை விட ஜனாதிபதியிடம் இவ்வர்கள் நினைத்தால் மாகாண சபையை கலைத்து விட்டு ஆளுனரின் ஆட்சியின் கீழ் கொண்டுவரலாம்

அப்படியானால் இவர்களின் பத்திரிக்கை அறிக்கைகளைப் பார்த்து புகாகிதம் அடையாமல் தன்னாட்சி அல்லது ஈழம் அடைவதற்கு வழிபார்க் கவேண்டியத்தான் 

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியானால் இவர்களின் பத்திரிக்கை அறிக்கைகளைப் பார்த்து புகாகிதம் அடையாமல் தன்னாட்சி அல்லது ஈழம் அடைவதற்கு வழிபார்க் கவேண்டியத்தான் 

ஏன்  ராசா  ஏதாவது எதிர்பார்த்தீர்களா????

புலமும்

தமிழகமும்

உலகத்தமிழர்களும்

தொடர்ந்து பயணிக்கணும்  இலக்கு நோக்கி.......... :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மாகாணசபையானது பின்வரும் நிர்வாகக் கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும்.

ஆளுனர்

மந்திரி சபை

முதலமைச்சர்

4 மாகாணசபை அமைச்சர்கள்

மாகாணசபை பொதுப் பணிகள் ஆணைக்குழு

தலைமை செயலாளர்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏன்  ராசா  ஏதாவது எதிர்பார்த்தீர்களா????

புலமும்

தமிழகமும்

உலகத்தமிழர்களும்

தொடர்ந்து பயணிக்கணும்  இலக்கு நோக்கி.......... :icon_idea:

மன்னிக்கவேண்டும், புலகாகிதம் என்று எழுதுவதற்கு பதிலாக தவறாக எழுதிவிட்டேன்  

நான் உண்மையில் தேர்தல் முடிவின் பின்னர் ஒரு மயக்கத்தில்தான் இருந்தேன்  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பட்டியலின்படி முதல் அமைச்சரின் அதிகாரம் 3 ஆம் இடத்தில் தான் இருக்கு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

sat(3).jpg

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவேண்டும், புலகாகிதம் என்று எழுதுவதற்கு பதிலாக தவறாக எழுதிவிட்டேன்  

நான் உண்மையில் தேர்தல் முடிவின் பின்னர் ஒரு மயக்கத்தில்தான் இருந்தேன்  :icon_idea:

தமிழரின்  அவல வாழ்வில்  சிறு துரும்பு இது.

ஆனால்

சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட  நாம் போராடணும்.

அதிலும்

இன்று  இத்தேர்தலால்

தமிழர்களின்  ஒற்றுமையால்

சிங்களவன் மீண்டும உசாராகிவிட்டான் :(

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாண சபை என்பது இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கான சட்டவாக்க அவை ஆகும். இலங்கை அரசியலமைப்பின் படி, வட மாகாண சபை வடக்கு மாகாணத்தின் வேளாண்மை, கல்வி, சுகாதாரம், வீடமைப்புத் திட்டம், உள்ளூராட்சிகள், சாலைவழிப் போக்குவரத்து, சமூக சேவை போன்றவற்றின் நிருவாகங்களைக் கவனிக்கும். இவற்றை விட காவல்துறை அதிகாரம், காணி போன்றவற்றுக்கும் அரசியலமைப்பின் படி இதற்கு அதிகாரங்கள் உள்ளன, ஆனாலும் நடுவண் அரசு இவற்றுக்கான அதிகாரங்களை மாகாண அரசுக்கு வழங்க மறுத்து வருகின்றது. வட மாகாண சபையில் 38 பேர் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இச் சபைக்கு முதல்முறையாகத் தேர்தல் செப்டம்பர் 21, 2013 அன்று நடைபெற்றது.[1]

பொருளடக்கம் [மறை]

1 வரலாறு

2 மாகாணசபைத் தேர்தல்கள்

2.1 2013 தேர்தல்

3 மேற்கோள்

வரலாறு[தொகு]

1987 சூலை 29 இல் கையெழுத்திடப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி அதே ஆண்டு நவம்பர் 14 இல் இலங்கை நாடாளுமன்றம் தனது அரசியலமைப்பில் 13வது திருத்தம் மற்றும் மாகாணசபைச் சட்டம் இல. 42 (1987) ஆகியவற்றை அறிவித்தது.[2] 1988 பெப்ரவரி 3 இல் ஒன்பது மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. இந்த ஒன்பது மாகாணசபைகளில் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் படி கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு நிருவாகத்தின் கீழ் கொண்டுவர இணக்கம் காணப்பட்டது. இவ்விணைப்பு நிரந்தர இணைப்பாக இருப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் 1988 திசம்பர் 31 இற்குள் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.[3] 1988 செப்டம்பர் 2 இல் இரு மாகாணங்களும் வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற பெயரில் இணைக்கப்பட்டன.[4] இந்த இணைந்த மாகாணசபைக்கான முதலாவது தேர்தல் 1988 நவம்பர் 19 இல் நடத்தப்பட்டது. இந்தியாவின் ஆதரவில் இயங்கிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி இத்தேர்தலில் வெற்றி பெற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி இத்தேர்தலில் பங்கேற்கவில்லை.

1990, மார்ச்சு 1 அன்று, இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கையை விட்டுப் புறப்படும் தறுவாயில், வடகிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் அ. வரதராஜப் பெருமாள் மாகாணசபைக் கூட்டத்தில் தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தி விட்டு நாட்டை விட்டு வெளியேறினார்.[5] இதனை அடுத்து அன்றைய அரசுத்தலைவர் பிரேமதாசா வட-கிழக்கு மாகாணசபையைக் கலைத்து, நடுவண் அரசின் நேரடி ஆட்சியைக் கொண்டு வந்தார்.

வட-கிழக்கு இணைப்புத் தொடர்பான பொது வாக்கெடுப்பு எப்போதும் இடம்பெறவில்லை. ஒவ்வோர் ஆண்டும் அரசுத்தலைவர்களால் தற்காலிக இணைப்பாக நீடிக்கப்பட்டு வந்தது.[6] இலங்கைத் தேசியவாதிகளால் இந்த இணைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வந்தது. 2006 சூலை 14 இல் மக்கள் விடுதலை முன்னணி கிழக்கு மாகாணத்துக்கெனத் தனியே மாகாணசபை நிறுவ வேண்டும் என இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.[4] இவ்வழக்கு விசாரணையை அடுத்து அன்றைய அரசுத்தலைவர் ஜெயவர்தனாவினால் அறிவிக்கப்பட்ட இணைப்பு சட்டவிரோதமானது எனக் கூறி அதனை செல்லுபடியற்றதாக்குவதாக 2006 அக்டோபர் 16 இல் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.[4] இதனை அடுத்து 2007 சனவரி 1 இல் வடகிழக்கு மாகாணசபை இரண்டாகப் பிரிக்கப்பட்டது. கிழக்கு மாகாணசபை கொழும்பின் நேரடி நிருவாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, 2008 மே 10 இல் முதலாவது தேர்தல் நடைபெற்றது. ஆனாலும், வட மாகாணசபைக்கு தேர்தல்கள் அறிவிக்கப்படாமல் இருந்து வந்தது. 2009 மே மாதத்தில், ஈழப்போர் முடிவுக்கு வந்ததை அடுத்து, வட மாகாண சபைக்கு தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் உட்படப் பல வெளிநாடுகள் அழுத்தம் கொடுத்ததை அடுத்து, 2013 செப்டம்பர் 21 இல் தேர்தல்கள் இடம்பெற்றன.

விக்கிபீடியா

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

மாகாணசபையானது பின்வரும் நிர்வாகக் கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும்.

ஆளுனர்

மந்திரி சபை

முதலமைச்சர்

4 மாகாணசபை அமைச்சர்கள்

மாகாணசபை பொதுப் பணிகள் ஆணைக்குழு

தலைமை செயலாளர்

சுண்டல்  உங்களது கருத்துப்படி

இராணுவம்

அதற்கு மேல் மகிந்த கோத்தபாய  பிக்குகள் ..........  என்று இன்னும் தலைகள்   இருக்கு :(

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் உங்களது கருத்துப்படி

இராணுவம்

அதற்கு மேல் மகிந்த கோத்தபாய பிக்குகள் .......... என்று இன்னும் தலைகள் இருக்கு :(

)

அரசு தர முன்வந்தாலும் பிக்குகள் விட மாட்டார்கள் ப்மகிந்தவிர்க்கு கனவில் பண்டார நாயக்காவிற்கு ஏற்ப்பட்டது வந்து போகும்

  • கருத்துக்கள உறவுகள்

அரசு தர முன்வந்தாலும் பிக்குகள் விட மாட்டார்கள் ப்மகிந்தவிர்க்கு கனவில் பண்டார நாயக்காவிற்கு ஏற்ப்பட்டது வந்து போகும்

பாவம்

அந்தாளை  நோவானேன்......... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.