Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோசமாக இனவாதத்தை தூண்டுகின்றது மஹிந்த அரசாங்கம் - அஸாத் சாலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Asath_Saliseithy-150.jpg

இலங்கை வரலாற்றில் இதுவரைக்கும் ஆண்ட எந்தவொரு அரசாங்கமும் மஹிந்த அரசாங்கம் போன்று படுமோசமாக இனவாதத்தை தூண்டவில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபை உறுப்பினருமான அஸாத் சாலி தெரிவித்தார். மேலும், மஹிந்த அரசின் ஊழல் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. எனவே இந்த மோசடிமிக்க அரசை கவிழ்க்க வேண்டிய காலம் வந்துள்ள நிலையில் எதிர்க்கட்சி இன்று பலவீனமாக காணப்படுகின்றது. எதிர்க்கட்சி பலமானதாக செயலுருவமுற்று இவ்வினவாத அரசை கவிழ்க்க அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும் என்றார்.

  

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில், 1915 ஆம் ஆண்டு கண்டியில் இடம்பெற்ற சிங்கள -முஸ்லிம் கலவரத்தினை நினைவையொட்டி தமிழர் மற்றும் முஸ்லிம்களின் மீது தாக்குதல் நடத்துவதற்கு பௌத்த பேரினவாதிகள் சதித் திட்டம் தீட்டுவதாக சந்தேகிக்கின்றோம். இதன் காரணமாக சிறுபான்மையினர் செறிந்து வாழும் பிரதேசங்களுக்கு உடனடியாக பாதுகாப்பினை வழங்கவேண்டும். இல்லையேல் 1915 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தை விட பயங்கரமான சூழல் ஏற்படலாம்.

 

வடமாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும் அவரை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று பௌத்த பேரினவாத சக்திகள் வலியுறுத்துகின்றன. ஆனால் அவரை கைதுசெய்வதற்கு முன்பு சிறுபான்மை மக்களின் மனம் நோகும்படி செயலாற்றிய விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க மற்றும் ஞானசார தேரரை பொலிஸார் முதலில் கைதுசெய்ய வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://seithy.com/breifNews.php?newsID=94133&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு, நீதிக்கும் சமாதானத்துக்குமான அமைப்பு, ஜனாயக மக்கள் முன்னணி உடன் சேர்ந்து சிறுபான்மை உரிமைகளை தக்கவைக்க ஏதும் செய்யலாம். அதை விட்டு யூ என் பி யுன் வாலை பிடித்து தொங்கினால், இதுவும் இதுக்கு மேலும் நடக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதிகளிடமும், அராஜகவாதிகளிடமும் கூட்டமைப்பின் ஜனநாயகம் எந்தளவில் வேலை செய்யும் என தெரியவில்லை. மேற்கு நாடுகளின் அழுத்தத்தால் தான் தமிழர்களின் கொலைகள்,காணாமல் போதல்கள் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. இனவாத மகிந்த அரசு தானாக தனித்து ஒரு நல்ல தீர்வை தமிழருக்கு தரப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்க்குநாடுகளே தரமுடியாது எனும் தீர்வை நாம் அரசிடம் கேட்டால், தீர்வை நமக்கு தரும்படி எந்த நாடும் அரசை வற்புறுத்தாது. 2002-2005இல் விட்ட அதே பிழை இது. தெளிவாக தனிநாடு வேண்டாம் எனறு சொல்லுவதே மற்றைய நாடுகளை அரசின் மீது அழுத்தம் பிரயோகிக வைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மேற்க்குநாடுகளே தரமுடியாது எனும் தீர்வை நாம் அரசிடம் கேட்டால், தீர்வை நமக்கு தரும்படி எந்த நாடும் அரசை வற்புறுத்தாது. 2002-2005இல் விட்ட அதே பிழை இது. தெளிவாக தனிநாடு வேண்டாம் எனறு சொல்லுவதே மற்றைய நாடுகளை அரசின் மீது அழுத்தம் பிரயோகிக வைக்கும்.

 

பின்னை கூட்டணி என்ன கொள்கையோடை நிற்குது என்று இவ்வளவு நேரமும் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

சமஸ்டியண்னே சம்ஸ்டி. பாலசிங்கதார் சொல்லுறபடி பார்த்தால் பெடெரல் எனும் இடரல்.

  • கருத்துக்கள உறவுகள்
தெளிவாக தனிநாடு வேண்டாம் எனறு சொல்லுவதே மற்றைய நாடுகளை அரசின் மீது அழுத்தம் பிரயோகிக வைக்கும்.

 

 

கூட்டமைப்பு தான் தமிழ் மக்களுக்காக பேசப்போகும் அமைப்பு. அவர்கள் தமிழீழம் அல்லது பிரிவினை வேண்டாம் என்று பாரளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்திருக்கிறார்கள்.புலிகளின் era 2009  முடிந்து விட்டது. கூட்டமைப்புடன் தற்போது மேற்குநாடுகள் தாராளமாக பேசலாம் என்ற கருத்துப்பட எழுதியுள்ளேன். 

மேற்க்குநாடுகளே தரமுடியாது எனும் தீர்வை நாம் அரசிடம் கேட்டால், தீர்வை நமக்கு தரும்படி எந்த நாடும் அரசை வற்புறுத்தாது. 2002-2005இல் விட்ட அதே பிழை இது. தெளிவாக தனிநாடு வேண்டாம் எனறு சொல்லுவதே மற்றைய நாடுகளை அரசின் மீது அழுத்தம் பிரயோகிக வைக்கும்.

 

இலங்கை அரசு சொல்வதின் படி உங்களுக்குதான் எந்த பிரச்சினையும் இல்லையே...???   பிறகு எதுக்கு  மற்றய நாடுகள் உங்களோடை பேச வேண்டும்... 

 

இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சினை இருக்கிறதா...??  இலங்கயில் இருந்தது பயங்கரவாதம் மட்டுமே அதை தலை தூக்க விடாது நடவடிக்கை எடுக்கிறோம் எண்று இலங்கை அரசு சொல்கிறது...  

 

அதுக்கு கூட்டமைப்பிடம் பதில் ஏதும் இருக்கிறதா...??   தமிழர்கள் இனரீதியில்  ஒடுக்க படுகிறார்கள் எனும் கோசம் வைக்கப்படுகிறதா...??  அதுக்காக கூட்டமைப்பு காட்டும் ஆதாரங்களை சொல்ல முடியுமா...???  

 

அப்படி ஒரு தமிழன் எனும் காரணத்தால் நாங்கள் ஒடுக்கப்படுகிறோம் எனும் கோசத்தை வைத்தால்  அதில் தனியாக பிரிந்து போகும் சரத்துக்களையும் கோர முடியும்...   இது தான் தனிநாடு கண்ட பல தேசங்களில் நடந்தது... 

 

அரை குறை தனமாக  எதையாவது சொல்வதாலும் கூட்டமைப்புக்கு தாளம் போடுவதாலும்  எல்லாம் சரி எண்று ஆகி விடாது...  

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு சமச்டி பற்றி வெளிநாடுகளுடன் பேசணும், ஏனென்றால் அதுதான் அவர்களுக்கான மக்கள் ஆணை.ம்பேசத்தொடங்கி இருப்பார்கள் என எதிர்பார்காலம். ஆனால் அரசு ஊரூராய் போய் இது சமஸ்டி அல்ல, பிரிவினையின் முதல்படி எனறு பஜனை பாடும். புலிகள் எப்படி இதயசுத்தியில்லாமல் உங்களுடன் சம்ஸ்டி பற்றி பேசிய படியே ஆயுதம் இறக்கினார்களோ அப்படித்தான் கூட்டமைப்பும். இவர்கள் வாயளவில்தான் சம்ஸ்டி பேசுகிறார்கள் என்று சொல்லும். இதற்கு ஆரசு மலை என நம்பி இருப்பது புலம்பெயர் புண்ணியவான்கலைத்தான். நீங்கள் எழுப்பும் ஒவ்வொரு தனிநாட்டுக் கோசமும் சமஸ்டிதீர்வில் ஆணியாய் போய் இறங்கும். அதைகாட்டி அரசு மேற்குலகின் மனதை கலைக்கும்.

இந்நிலையில் இந்தியா கூட்டமைபுக்கு பக்கபலமாய் இருந்து உண்மையிலேயே தமிழர் தனிநாட்டை கைவிட்டு விட்டனர் எனும் ஒரு உத்தரவாததை வழங்கினால் சர்வதேச அழுத்தத்துக்கு மத்தியில் நமக்கு சம்ஸ்டி தீர்வு கிடைக்கலாம்.

இந்த நிலையை அடைய சில open gestures ஐ தமிழர்தரப்பு செய்யவேண்டி வரும். அதில் ஒன்று தனிநாட்ட்டை கைவிடுவது, மற்ரது, இந்தியாவுடன் நெருங்கிய உறவை பேணுவது, தெற்கில் மனோ உடன் நேர்ந்து ஒர் அரசியல் தளத்தை தாபிப்பது. மற்றும் ஜனாதிபதி முன் பதவி ஏற்றல் போன்ற சமிக்ஞை மூலம் ஒன்றுபட்ட இலங்கைக்குள் வாழ நாம் தயார் என தெற்கிற்க்கும், இந்த்ஹியாவுக்கும் உலகிற்கும் தெரிவிப்பது. இவையே சம்ஸ்டி நோக்கி எம்மை நகர்த்தும்.

சமஸ்டிதாங்கோ இல்லாட்டி தனியா போய்டுவம் என்று பேரம்பேசிய காலமும் இருந்தது, அது இப்போ இல்லை.

தமிழர்களுக்கு பிரச்சினை இருக்கிறது எண்டதை  சொல்லாமல் என்னத்தை பற்றி பேசப்போகிறார்கள்...  பிரச்சினையே இல்லாத ஒரு இனத்துக்கு தீர்வு எதற்க்கு...???   

 

இலங்கையின்  அரசியல் சட்டத்தை  ஏற்று  நாடாளுமண்றிலும் ,  மானிலங்களவையிலும் , மாநகரசபையிலும் சத்தியப்பிரமானம் செய்து  பதவி ஏற்று இருக்கும் கட்ச்சிகளின் கூட்டமைப்பு   இலங்கை அரசியல் சட்டத்துக்கும் இறைமைக்கு எதிராக  எதையுமே பேச முடியாது... !   மிக முக்கியமாக இன பாகுபாடுகள் பற்றி என்பதே உண்மை... 

 

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆளும் ஒரு நாட்டில்  பெரும்பான்மை மக்களால் தெரிவு செய்த  பாராளுமண்றையே  கலைக்க முடியும் போது  தமிழர்களுக்கான எந்த தீர்வு ஜனாதிபதியின் ஆணையின் பால் கலைக்கவோ  அகற்றவோ முடியும்...    ஆனால் அதை செய்யாத சிங்களம்  எப்போதும் வளக்குகள் போட்டு தனது  தேவையை பூர்த்தி செய்து கொள்கிறது... 

 

சமஸ்ரியை அடைய முன்னம் கூட்டமைப்பு சட்ட பூர்வமாக வடக்கையும் கிழக்கையும் கூட இணைக்க முடியாது எண்டதுதான் உண்மை...   

 

 

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

1) இலங்கையின் இறைமைக்கு உட்பட ஒத்துக்கொண்டு கேட்பதுதான் சம்ஸ்டி. சமச்டி அமையும் போது அரசியல் சட்டமே மாறும் ஏனென்றால் இப்போ இருப்பது ஒற்றையாட்சி அரசியல் சட்டம்.

2) மறுபடியும் அதே பதில், இறுதி தீர்வு சமஸ்டி அடிப்படையில் அமையும் போது, புதிய அரசியல் சட்டம் நடைமுறைக்கு வரும், அதில் ஜனாதிபதிக்கு இவ்வதிகாரங்கல் வராமல் பார்த்துகொள்ல வேண்டும்.

3) கிழக்கில் இப்போது தமிழரல்லதோர் 60% கும் மேல். ஆக இனி முஸ்லிம் களை விட்டுக்கொடுப்புடன் சேர்த்தாலே ஜனநயக ரீதியில் வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியம். வடக்கையும் கிழக்கையும் இணக்கும் முன் கிழக்கில் சர்வசன வாக்கெடுப்பு நடப்பது தவிர்க்க முடியாதது. இதில் ஆம் எனும் பதில் வெல்ல வேண்டுமாயின், முஸ்லிம்களுக்கு உரிய இடத்தை கொடுப்பது இன்றிஅமையாதது. இவையாவும் நடந்தால் ஒரு புதிய அரசியலமிபின் கீழ், இணைந்த வட கிழக்கு தமிழ் பேசும் மக்களின் சமஸ்டி அரசு அமயல்லாம்.

மிகவும் கடினமான பிராஜெக்ட் இது. கூட்டமைப்பு செய்து முடிக்குமா? காலம்தான் சொல்லும் பதிலை.

மூண்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு இல்லாத ஒரு நாடாளுமண்றால்  அரசியல் யாப்பை மாற்றி அமைக்க முடியாது...   தவிர்த்தால்  பொதுமக்களின் வாக்குகளிக்கும் விடப்பட வேண்டும் என்பதே இலங்கை அரசியல் சட்டமாகும்...   இனவாதம் தலை தூக்கிய ஒரு தேசத்தில்  சாத்தியமானதை பற்றி பேசுங்கள்... 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது இருக்கும் அரசு 2/3 பலத்துடந்த்ஹான் உள்ளது சர்வதேச/இந்திய அழுத்ததால் இந்த அரசை வைத்தே அரசியலமைப்பை மாத்தலாம்.

சோல்பரி யாப்பும் நீங்க சொல்லுவதுபோல மாற்றமுடியாத சரத்துக்களை கொண்டு இருந்தது. ஆனால் அரசியல் நிர்ணய சபை அதை மாற்றிவிட்டு 1972 குடியரசு யாப்பை கொண்டு வரவில்லை? சர்வதேசமும் இந்தியாவும் மனசுவைத்தால் எதுவும் முடியும்.

இந்த நேரத்தில் புலம்பெயர் அமைப்புக்கள் சர்வ அரசுகளுடன் ராஜதந்திர ரீதியான தொடர்பாடல்களை சிறிது சிறிதாக ஆரம்பித்து உயர்ந்த அதிகாரப்பகிர்வுடன் கூடிய சமஸ்டி குறித்தான கருத்துபகிர்வுகளை மேற்கொண்டு, இவ்வகையிலான சமஸ்டியில் தாமும் பற்றுறுதியுடன் இருப்பதை அந்நாடுகளுக்கு திறந்த மனதுடன அறிவிக்க வேண்டும். அதன்மூலம் ஶ்ரீலங்கா அரசுக்கு மேலும் அழுத்தங்களை ஏற்படுத்தி எமக்கான _நீதியான தீர்வை துரிதப்படுத்தலாம் என்பது எனது கருத்து.

 

நியானி: ஒரு சொல் திருத்தப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

மூண்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு இல்லாத ஒரு நாடாளுமண்றால்  அரசியல் யாப்பை மாற்றி அமைக்க முடியாது...   தவிர்த்தால்  பொதுமக்களின் வாக்குகளிக்கும் விடப்பட வேண்டும் என்பதே இலங்கை அரசியல் சட்டமாகும்...   இனவாதம் தலை தூக்கிய ஒரு தேசத்தில்  சாத்தியமானதை பற்றி பேசுங்கள்... 

 

அப்பயே  தான்

மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு  இருந்தாலும்

குறித்த நேரத்தில் 

அரைவாசிச்சிங்களவன் அடுத்த கட்சிக்கு மாறிநின்று வாக்குப்போடுவான்... :(  :(  :( 

தானியங்கி எழுத்து திருத்தி மூலம் ஏற்படுத்தப் பட்ட எழுத்துப்பிழை கருத்துப்பிழையை ஏற்படுத்தி விட்டது . கள் உறவுகள் மன்னிக்கவும் நீதியான என்பது எழுத்து திருத்தயால் அநீதியான என்று கருத்துப் பிழையை ஏற்படுத்திவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி துல்பென். சிந்திக்கும் ஆற்றல் உடயவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி.

நன்றி கோஷன் சே. தங்கள் கருத்துகளுக்கும் நன்றி. சொல் திருத்தி உதவிய நியானிக்கும் எனது நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

Thulpen நீங்கள் சொல்லுவது ஒரு முக்கியமான பொயிண்ட். கூட்டமைப்பும் நிலத்தமிழ்ரும் மட்டுமில்லை புலத்தமிழரும் விட்டுக்கொடுப்பாய் சமஸ்டியை ஆராயவாவது தயாராய் உள்ளனர் என்று சர்வதேசம்/ இந்தியா நம்பும்போது சம்ஸ்டிக் கோரிக்கைக்கு வலு அதிகமாகும். ஆனால் புலத்தில் எவ்வளோ திறமையானவர்கள் இருந்தும் புல அரசியல் தனிநாடு கோரும் கடும்போக்காளர்களினால்லே வழி நடத்த படுகிறது. உதாரணத்துக்கு உருத்திர்குமார். சமஸ்டி பட்டி அவர் அறியாததல்ல. ஒஸ்லோ பிரகடனத்தில் அவர் பங்கு அதிகம். ஆனால் நா.க. அ எண்டி நகைப்பான ஒரு விடயத்தில் மினெக்கெடுறார். எங்கே புல புன்னியவான்கள் தமக்கு துரோகி பட்டம் கட்டி விடுவார்களோ என்ற பயத்தில் இப்படி செய்கிறார்களோ தெரியாது.

சமஸ்டிக்கு இரு எதிரிகள் ஒன்று நிலத்தில் பேரினவாதிகள், புலத்தில் தனிநாடு வாதிகள். இவர்கள் இருவரும் இன்னுமொரு போரை விரும்புகிறார்கள். புலத்து தனிநாட்டு வாதிகள் நினீக்கிறார்கள் வரலாறு திரும்பும், முள்ளிவாய்க்காலில் முடிந்தது ஆனைகோட்டையில் எழும்பும். மீண்டும் ஒரு ஆயுத போராட்டம் நிகழ்த்தி நாடு பிடிக்கலாம் என்று. இதையேதான் பேரினவாதிகளும் விரும்புகிறனர். இன்னொரு யுத்தம் வந்தால் இருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழனையும் அழித்துவிட்டு, நாட்டை மொத்தமாக தம்வசப்படுத்தலாம் என்பது அவர் எண்ணம்.

இனியும் ஒரு ஆயுதபோரையோ தனிநாடு கோரி அகிம்சை போரையோ தொடங்கு. அளவுக்கு நிலத்து மக்கள் முட்டாளாக இல்லை என்பதே என் கணிப்பு.

ஒருவேளை இது பிழையாய் இருந்து இனியொரு ஆயுதப்போராட்டம் நாட்டில் வருமாயின் அதன் இறுதி முடிவு புலம்பெயர் தனிநாட்டுவாதிகள் வேண்டும் முடிவாய் இருப்பதை விட பேரினவாதிகள் விரும்பும் முடிவாய் இருக்கவே சாத்தியக்கூருகல் மிக, மிக அதிகம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸாத் சாலி போன்றவர்களுக்கு இருக்கும் துணிவு சம்மந்தன் சுமந்திரன் போன்றவர்களுக்கு இல்லை

சமஸ்டிக்கு இரு எதிரிகள் ஒன்று நிலத்தில் பேரினவாதிகள், புலத்தில் தனிநாடு வாதிகள். இவர்கள் இருவரும் இன்னுமொரு போரை விரும்புகிறார்கள். புலத்து தனிநாட்டு வாதிகள் நினீக்கிறார்கள் வரலாறு திரும்பும், முள்ளிவாய்க்காலில் முடிந்தது ஆனைகோட்டையில் எழும்பும். மீண்டும் ஒரு ஆயுத போராட்டம் நிகழ்த்தி நாடு பிடிக்கலாம் என்று. இதையேதான் பேரினவாதிகளும் விரும்புகிறனர். இன்னொரு யுத்தம் வந்தால் இருக்கும் கொஞ்ச நஞ்ச தமிழனையும் அழித்துவிட்டு, நாட்டை மொத்தமாக தம்வசப்படுத்தலாம் என்பது அவர் எண்ணம்.

 

1948ம் ஆண்டு சமஸ்டிக்கட்சி ஆரம்பித்ததில் இருந்து தொடக்கம் இன்று வரையும் சமஸ்டிக்கு ஒரே ஒரு எதிரி இலங்கையை ஆளும் அரசுகளும் அதன் அடிவருடிகளும் மட்டுமே. 

 

65 ஆண்டுகளுக்கு பிறகும், தமிழர்களிடம் புதிய சிந்தனை ஒன்று வரவிடாமல்  இந்த மாற்றுக்கருத்துகள் அரசை பாதுகாத்து வருகின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.