Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணம் இழப்பு மலர்தல் - இலன்டனில் நூல் அறிமுக நிகழ்வு

Featured Replies

இலன்டன் 46a east avenue Eastham e12 6sg அமைந்துள்ள
(tube eastham அருகில்) தமிழ் முன்னேற்றக் கழக மண்டபத்தில் மரணம் இழப்பு மலர்தல் நூல் வெளியீடு ஐப்பசி (அக்டோபர்) 20ம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெறவிருக்கின்றது.
மேலதிக விபரங்கள் விரைவில்.

 

இந்த நிகழ்வில் பின்வரும் தலைப்புகளில் உரையாற்றக் கூடியவர்களை பரிந்துரை செய்ய முடியுமா... அல்லது உரையாற்ற விரும்புகின்றவர்கள் தொடர்பு கொள்ளமுடியுமா? மூவரைத் தெரிவு செய்துவிட்டேன். குழந்தைகள் பெண்கள் தொடர்பாக உரையாற்ற ஒரு பெண் பேச்சாளரைத் தேடுகின்றேன்.

மரணம்: இழப்பும் வலியூம்
மரணம்: இழப்பும் பாதிப்பும் - பெண்களும் குழந்தைகளும்.
மரணம்: அஞ்சலியூம் அரசியலும்
மரணம்: இழப்பும் ஆற்றுப்படுத்தல் மலர்தல் - உளவியல் பார்வை

இந்த நூல் மரணம் இழப்பு அதன் வலி மற்றும் பாதிப்பு தொடர்பானதாக இருந்தபோதும்... அரசியலுக்கு அப்பாற்பட்டதல்ல...
மேலும் நமது போராட்டம் தொடர்பான விமர்சனங்களை முன்வைக்கின்றபோதும்.... போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாடுடையதல்ல.....
ஆனால் நிலவுகின்ற அதிகாரத்திற்கும் ஆக்கிரமிப்புக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிரானது.....


இந்த நிகழ்வில் யாழ் கள நண்பர்கள் என்னைச் சந்திக்கலாம்.
நன்றி

Edited by meerabharathy

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குத் தோதான பெண் பேச்சாளர் ரதிதான்..! :D

  • தொடங்கியவர்

மரணம் இழப்பு மலர்தல்

நூல் அறிமுக வெளியீட்டு நிகழ்வு

 

 காலம்: அக்டோபர் மாதம் 20ம் திகதி

இடம்: இலன்டனில்

தமிழ் முன்னேற்றக் கழக மண்டபம்

46a east avenue Eastham e12 6sg அமைந்துள்ள

(tube eastham அருகில்)

தலைமைபாலசிங்கம் சுகுமார் ...

உரையாற்றுவோர் -

மாதவி சிவலீலன் - மரணம்: இழப்பும் பாதிப்பும் பெண்களும் குழந்தைகளும்

நித்தியானந்தன் முத்தையா - மரணம் - அஞ்சலியூம் அரசியலும்

யமுனா ராஜேந்திரன் - மரணம் - இனஅழிப்பும் அரசியலும்

மீராபாரதி - இழப்பிலிருந்து மலர்தல் - நமது பொறுப்பு

மாலை 5.30 மணி வழமையாக தாமதமாக வருகின்றவர்களுக்கு.

மாலை 6.00மணி குறிப்பிட்ட நேரத்திற்கு வருகின்றவர்களுக்கு

 

ஆர்வமுள்ள அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்.

 

 

மரணம் இழப்பு மலர்தல்

நூல் அறிமுக வெளியீட்டு நிகழ்வு

 

 காலம்: அக்டோபர் மாதம் 20ம் திகதி

இடம்: இலன்டனில்

தமிழ் முன்னேற்றக் கழக மண்டபம்

46a east avenue Eastham e12 6sg அமைந்துள்ள

(tube eastham அருகில்)

தலைமைபாலசிங்கம் சுகுமார் ...

உரையாற்றுவோர் -

மாதவி சிவலீலன் - மரணம்: இழப்பும் பாதிப்பும் பெண்களும் குழந்தைகளும்

நித்தியானந்தன் முத்தையா - மரணம் - அஞ்சலியூம் அரசியலும்

யமுனா ராஜேந்திரன் - மரணம் - இனஅழிப்பும் அரசியலும்

மீராபாரதி - இழப்பிலிருந்து மலர்தல் - நமது பொறுப்பு

மாலை 5.30 மணி வழமையாக தாமதமாக வருகின்றவர்களுக்கு.

மாலை 6.00மணி குறிப்பிட்ட நேரத்திற்கு வருகின்றவர்களுக்கு

 

ஆர்வமுள்ள அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள்.

 

 

  • தொடங்கியவர்

       

 

Edited by meerabharathy

நால் வெளியீடு சிறப்பாக அமைய வாழ்த்துகள். 

 

எம் சமூகத்தில் புத்தகங்களை வெளியிடுபவர்கள் வியாபார ரீதியில் வெற்றியடையாத சூழ்நிலையை மாற்ற ஏதேனும் வழிமுறைகள் இருப்பின் அவற்றினை கண்டுபிடித்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். சினிமா மற்றும் பொழுது போக்குக்கு என பல நூறு ரிவி சனல்கள் கனடாவில் இருந்தாலும் கூட இங்கு புத்தகங்களை, நாவல்களை வெளியிடும் ஆங்கில, பிற மொழி எழுத்தாளர்கள் வியாபார ரீதியிலும் வெற்றி அடைகின்றனர். ஆனால் இது எம் சமூகத்தில் நிகழ்வதில்லை. சிங்கள சமூகத்திலும் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டாளர்கள் வெற்றி அடைகின்றனர்.

 

என்னைக் கேட்டால் புத்தக வெளியீட்டுடன் நஸ்ரியாவின் தொப்புள் காட்சி உண்மையில் எடுக்கப்பட்டதா என ஒரு விவாதமும் நடத்தினால் நிறையப் பேரிடம் புத்தகத்தினை கொண்டு சேர்க்கலாம் என்றே நினைப்பேன். :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
உங்கள் புத்தக வெளியீடு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்
 

முடிந்தால் லண்டன் உறவுகள் இன் நிகழ்விற்கு போய் ஒரு வித்தியாசமான அனுபவத்தை பெறும்படி வேண்டி நிற்கின்றேன் .

நான் உண்மையில் மீராவின் நிகழ்வுகளுக்கு போய் வித்தியாசமான அனுபவத்தை கண்டவன் என்ற படியால் சொல்லுகின்றேன் .

நூல் வெளியீடு சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

  • தொடங்கியவர்

நன்றி  ரதி,arjun, kkaran


மரணம் இழப்பு மலர்தல்- நூல்வெளியீடு
18 அக்டோபர் 2013
lg-share-en.gif
 

 

Bahrathi%201_CI.jpg


ஈழத்தில்   புனைவு சாராத   கனதியான எழுத்து முயற்சிகள் இன்னும் பெருமளவில் வெளிவரத்தொடங்கவில்லை. இன்றைக்கு மிகவும் அவசியமாக இருக்கிற இந்த முயற்சியின் ஒரு வெளிப்பாடாக  மீரா பாரதி அவர்களின் மரணம் இழப்பு மலர்தல் என்னும் கட்டுரைத்தொகுதி வெளிவருகிறது. கடந்த மூன்று தசாப்தங்களாக இலங்கை இயற்கை மரணங்களை விடவும்  அகால மரணங்களையே அதிகம் சந்தித்து வந்தது. யுத்தம் நிழந்த -நிகழ்கிற நாடுகளில் இப்படியொரு நிலை தோன்றுவது புதிதில்லை.

ஆனாலும் யுத்தத்தினால் உருவாகும் மரணங்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வை அடையவேண்டிய தேவையைக் காலம் உணர்த்தி நிற்கிறது. இந்த விழிப்புணர்வின் மேலாக உயிர்களின் மரணத்தை எப்படி எதிர் கொள்வது என்ற கேள்வி வரும் போது  மீராபாரதியின் கட்டுரைத்தொகுதி  அதற்கான  விடையைத்தேடுவதற்கான களத்தை திறந்து விடுகிறது. முள்ளிவாய்கால் அவலத்தின் பின்பு நாங்கள்  அடைந்த அவலங்கள் காரணமாக ஆற்றுப்படுத்த வேண்டிய ஒரு சமூகமாகி விட்டிருக்கிறோம். நாங்கள் அரசியல் அனாதைகள் ஆனது மட்டுமன்றி தனிமனித நிலையிலும் சமுக நிலையிலும்  ஆதரவைத் தேடுவோர்களாகி இருக்கிறோம். மிக நுண்ணுணர்வான பார்வையுடன் ஈழத் தமிழர்களின் வாழ்வை அலசும் ஒரு உளவியலாளன்  இந்த முடிவை வந்தடைவது தவிர்க்க முடியாது. (இதன் அர்த்தம் நாம் மனநோயாளிகளாகி விட்டோம் என்பதல்ல) நாங்கள் எதிர்கொண்ட இழப்புகளும் மரணங்களும் எல்லோரையும் எதோ ஒரு வகையில் பாதித்திருக்கிறது என்பதே இதனர்த்தம். இந்தப்பாதிப்புகளில் இருந்து  விடுபடுவதற்கான  வழி என்ன?  பாரதியின் கட்டுரைத்தொகுதி  எங்களை இந்த  வழியை நோக்கி அழைத்துச்செல்கிறது. உளவியற் துறைசார்ந்தும் தன் சொந்த அனுபவம் சார்ந்தும்  உலக அனுபவங்களின் ஒளியோடும் அவர்  எங்களை மரணத்தில் இருந்து வாழ்வின் மலர்வு நோக்கி அழைத்துச்செல்ல விளைகிறார்.  

சமூகப்பிரக்ஞையோடு  குறுகிய பார்வைகள் அற்று மனிதம் என்னும் நிலையில் நின்று இதயசுத்தியுடன் தொழிற்படும் ஒரு செயற்பாட்டாளனாக மீராபாரதி இந்தக் கட்டுரைத்தொகுதியினூடு அதனை வாசிக்கிற ஒவ்வொருவருடனும் உரையாடுகிறார்.


எதிர் வரும் 20ம் திகதி லண்டனில் நிகழவிருக்கும் நூல் வெளியீட்டு நிகழ்வில் அவரின் நூலை வாங்கி வாசித்து நேரிலும் உரையாடுங்கள்.

காலம்: அக்டோபர் மாதம் 20ம் திகதி

இடம்: இலன்டனில் தமிழ் முன்னேற்றக் கழக மண்டபம்

46a east avenue Eastham

e12 6sg

அமைந்துள்ள (tube eastham அருகில்)

நன்றி

தேவ அபிராவின் குறிப்புடன்
நன்றி தேவஅபிரா Indran Thevaabira மற்றும் குருபரன் Nadarajah Kuruparan Globaltamilnews
http://tinyurl.com/oowc92t

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97803/language/ta-IN/--.aspx

 

 

  • கருத்துக்கள உறவுகள்

விழாவுக்கு வரமுடியாவிட்டாலும் என்னுடைய சிறிய அன்பளிப்பை பெற்றுக்கொண்டது மகிழ்ச்சி என்ன முழிக்கிறீங்கள் அந்த இரண்டு மாலைகளும் நான் அனுப்பியவைதான் உங்கள் முகநூலில் பார்த்தேன். யமுனா ராஜேந்திரனை தவிர மற்றையவர்கள் எல்லாரும் புலி எதிர்ப்பு புராணம் காதரக்கேட்டேன் எதிர்பார்த்த விடயமே ஆச்சரியபடஎதுவுமில்லை நன்றி .

  • தொடங்கியவர்

நிகழ்வுக்கு வருகை தந்த கிருபன் மற்றும் நண்பர்களுக்கும் நன்றி பல....

பெருமாள் அவர்கள் கூறுவது உண்மையாயின் அவருக்கும் நன்றி மாலை அவசியமற்றது...அதைவிட உங்கள் கருத்தை நீங்கள் பகிர்ந்திருந்தால் அது பெருமதியானது...

 

மலர் மாலையின் இரகசியம் என்னவென்று எனக்கும் தெரியாது...
நிகழ்வு ஆரம்பிக்கும் போது ஒருவர் வந்து இதை மீராபாரதியிடம் கொடுத்துவிட கூறினார்கள் எனக் சொல்லி தந்துவிட்டு சென்றார்....
நானும் யாரோ ஒரு நண்பர் சாப்பாடு கொடுத்தனுப்பியிருக்கின்றார் என்று திறந்து பார்த்தால் ,,,,
உள்ளே பூ மாலை....
நண்பர்கள் கூறினார்கள் 300 பௌவுன்ஸ் பெறுமதியாவது வரும் என....
எனது மரணத்திற்காக அனுப்பினார்களா...
மற்ற மாலை மரணம் நூலின் மரணத்திற்காக அனுப்பினார்களா....
இன்னும் தெரியாத இரகசியம் அது.....
ஆனாலும் அதைப் போட்டு கொண்டாடினோம் நாம்....
மனதில் சிறு பயத்துடன்....
மாலையில் என்ன இருக்கின்றது என்ற சந்தேகத்துடன்.....


இலண்டனில் “மரணம் இழப்பு மலர்தல்” நூல் வெளியீடு – பாலன் தோழர்

இன்று (20.10.13) லண்டனில் ஈஸ்ட்காமில் மீராபாரதியின் “மரணம் இழப்பு மலர்தல்” நூல் வெளியீடும் கலந்துரையாடலும் நடைபெற்றது.

death-in-london-002.jpg?w=372&h=282பாலசிங்கம் சுகுமார் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. யமுனா ராஜேந்திரன் “மரணம் இன அழிப்பும் அரசியலும்” என்னும் தலைப்பில் உரையாற்றினார். அடுத்து மு. நித்தியானந்தன் “மரணம் அஞ்சலியும் அரசியலும்” என்னும் தலைப்பில் உரையாற்றினார். அதையடுத்து மாதவி சிவலீலன் “மரணம் இழப்பும் பாதிப்புகளும் பெண்களும் குழந்தைகளும்” என்னும் தலைப்பில் உரையாற்றினார். இறுதியாக நூல் ஆசிரியர் மீராபாரதி நன்றி தெரிவித்து உரையாற்றினார்.

மீராபாரதி உரையாற்றும்போது தனது தந்தையின் இழப்பும் அதனை தான் ஆற்றுப்படுத்த தான் எதிர் கொண்ட அனுபவங்களுமே இந்த நூலை எழுத தூண்டியது என்றார். எனவே இங்கு அவரின் தந்தை பற்றி சில வரிகள் கூறவேண்டும் என விரும்புகிறேன். அவரது தந்தையார் “கரவை கந்தாமி” என அறியப்பட்டவர். அவர் தோழர் சண்முகதாசனின் கம்யுனிஸ்ட் கட்சியில் முன்னனி தோழராக செயற்பட்டவர். மாக்சிய லெனிய மாவோசிச சிந்தனையில் புதிய ஜனநாயகப் புரட்சிக்காக தன்னை அர்ப்பணித்து முழுநேர ஊழியராக செயற்பட்டவர். அவர் எனது ஊரைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவரைப் பற்றி நான் நன்கு அறிந்திருந்தாலும்கூட அவரை நான் ஒருபோதும் ஊரில் காணவில்லை. 1988ல் கொழும்பில் தோழர் சண்முகதாசனின் இல்லத்திலே அவரைக் கண்டிருக்கிறேன். தோழர் சண்முகதாசனை நான் வீடீயோ பேட்டி கண்டபோது அவரும் அங்கு நின்றிருந்தார். மிகவும் ஆர்வமுடன் அவற்றை பார்த்துக்கொண்டு நின்றார். இறுதியாக தனக்கும் அதில் ஒரு பிரதி தாருங்கள் என்று கேட்டார்.death-in-london-017.jpg?w=327&h=249

தோழர் கரவைக் கந்தசாமி தனது இறுதிக்காலங்களில் புளட் இயக்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டுக்கொண்டிருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணம் உண்மையில் புரட்சிகர தோழர்கள் மத்தியில் அதிர்சியையும் கடும் துயரத்தையும் கொடுத்திருந்தது.

அதேவேளை மகனாக அவரது அந்த கொடிய மரணத்தை மீராபாரதி எதிர்கொண்ட அனுபவங்களை நூலாக்கியுள்ளார். அது மட்டுமல்ல மீராபாரதி புளட் இயக்கத்தில் செயற்பட்டதாலும் மேலும் யுத்த பூமியில் வாழ்ந்ததாலும் அவர் பல மரணங்களை தன் வாழ்நாளில் சந்திருக்கிறார். அத்தோடு 2009ல் தமிழ் மக்களுக்கு எற்

1395262_311911348952034_1698600360_a.jpg

பட்ட பாரிய இழப்புகளும் அவரை இந்த நூலை எழுத தூண்டியிருக்கிறது.

பாலசிங்கம் சுகுமார் தனது தலைமையுரையின்போது சுனாமியில் தனது ஒரே மகள் மரணமடைந்தபோது தானும் மனைவியும் துயரம் தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்றதாகவும் ஆனால் தமது மகளின் நினைவுகள் தம்மை ஆற்றுப்படுத்தியதை தனது சொந்த அனுபவங்களினூடாக உரையாற்றினார். தனது மூதூர் கிராமம் பல மரணங்களை சந்தித்திருந்தாலும் அது வெளிச்சத்திற்கு வரவில்லை என்றும் இனிமேல் யாவும் பேசப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அவர் தான் தனது மகள் நினைவாக பல பொதுத் தொண்டுகள் செய்வதையும் சுட்டிக்காட்டினார்.

1380569_311911625618673_867727586_n.jpg
யமுனா ராஜேந்திரன் தனது உரையின்போது கோவிந்தனின் “புதியதோர் உலகம்” நாவலுக்கு பின்னர் அதுபோன்று எந்த ஒரு மீள்பார்வை கொண்ட எழுத்தும் வரவில்லை என்றார். இயக்க அரசியலுக்கு அப்பால் முள்ளிவாய்க்கால் அவலம் குறித்த எழுத்துகள் வரவேண்டும் என்றும் அந்த வகையில் மீராபாரதியின் இந்த நூல் அதற்கு ஒரு முதற்படியாக இருக்கிறது என்றார்.
மு.நித்தியானந்தன் தனது உரையில் திலீபன் மரணம், ரஜனிதிரங்கமவின் மரணம் அவற்றின் அஞ்சலிகள் அதன் பின்னனியில் அமைந்த அரசியல்கள் குறித்து பேசினார். எல்லா காலம் சென்ற விரிவுரையாளர்களின் படங்களும் வைக்கப்பட்டிருக்கும்
1385267_311911785618657_1015115385_n.jpg

யாழ் பல்கலைக்கழகத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட மருத்துவபீட பேராசிரியர் ரஜனி திரங்கமவின் படம் இன்னும் வைக்கப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

கலந்துரையாடலின்போது கவுன்சிலர் போல் சத்தியநேசன் பல நல்ல கருத்துகளை கூறினார். குறிப்பாக லண்டனில் தமிழ்மக்கள் மரண நிகழ்வின் போது பல சிரமங்களை எதிர் கொள்வதையும் தான் அதற்கு உதவி வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
1376606_311911988951970_1000877198_n.jpg
சபேஸ் சுகுனசபேசன் அவர்களும் கலந்து கொண்டு கலந்துரையாடலின்போது தனது கருத்துகளை தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்ல அவர் புகைப்படங்களும் எடுத்தார். அவர் அதை இங்கு முடியுமானால் பரிமாறினால் நல்லது.
1378468_311913092285193_383016850_n.jpg
death-in-london-015.jpg?w=360&h=270
death-in-london-014.jpg?w=360&h=270
death-in-london-005.jpg?w=360&h=270
மரணம்
ஒரு நிகழ்வு..
ஒவ்வொரு கணமும் நடைபெறுகின்றது..
நாம் எதிர் கொள்கிறோமோ? இல்லையோ?
நாம் அதை கவனிக்கிறோமோ? இல்லையோ?
அது நம்முடன் இருக்கிறது. வாழ்கின்றது.
நம் மூச்சைப்போல..
1377295_311916295618206_1707673268_n.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

 

நிகழ்வுக்கு வருகை தந்த கிருபன் மற்றும் நண்பர்களுக்கும் நன்றி பல....

பெருமாள் அவர்கள் கூறுவது உண்மையாயின் அவருக்கும் நன்றி மாலை அவசியமற்றது...அதைவிட உங்கள் கருத்தை நீங்கள் பகிர்ந்திருந்தால் அது பெருமதியானது...

 

 

யமுனா ராஜேந்திரன் உரையாற்றும் போதே போல் சத்தியநேசன் சபையடக்கம் தெரியாது குறுக்கிட்டு பின் யமுனா உரையை குறுக்கிக்கொண்டதை காணக்கூடியதாய் இருந்தது இதுக்குள் நம்ம கருத்தா  ? மாலைகளின் உபயோகம் உங்களுக்கு புரிந்தது சந்தோஷமே.

  • 10 months later...
  • கருத்துக்கள உறவுகள்

மரணமும் மீராவின் ஆற்றுதலும்

- யமுனா ராஜேந்திரன்

முப்பதாண்டு காலம் ஆயுதப் போராட்டம் நிகழ்த்திய போராளித் தலைவனின் மரணம் அங்கீகரிக்கப்படாத தமிழகப் புகலிட அரசியல் சூழலில், இலங்கையில் அமைதி நிலவுகிறது அபிவிருத்தி கொழிக்கிறது எனப் பிரச்சாரம் செய்யப்படும் காலத்தில், தாயின் கல்லறையில் அழுது ஆற்றுப்படுத்திக் கொள்வது என்பது கவிஞர் வ.ஐ ச.ஜெயபாலனுக்கு ஒரு பெரும் அரசியல் போராட்டமாக ஆகிவிட்ட காலத்தில் நாம் வாழ்கிறோம். தருணத்திற்குப் பொருத்தமாக மீராபாரதி மரணமும் ஆற்றுப்படுத்தலும் குறித்து மரணம் இழப்பு மலர்தல் எனும் தலைப்பில் அவசியமான முன்னோடி நூல் ஒன்றினை எழுதியிருக்கிறார்.. மரணங்கள் இரு வகையிலானவை@ இயல்பாக நிகழும் மரணங்கள் மற்றும் சுமத்தப்பட்ட மரணங்கள். இயல்பாக நிகழும் மரணங்கள் குறித்த ஆற்றப்படுத்துதல் எந்தச் சமூகத்திலும் இயல்பாகவே அனுமதிக்கப்பட்டிருக்கிறது. எந்தச் சமூகமும் அதற்கென மரபான சடங்குகளையும் கொண்டிருக்கிறது. ஆற்றுப்படுத்தலின் வழியில் மனிதர்கள் தம்மை எதிர்கால வாழ்வுக்கு மீட்டுக் கொள்கிறார்கள். சுமத்தப்பட்ட மரணங்களில் இதற்கான வாய்ப்பு அதனோடு சம்பந்தப்பட்ட மனிதர்களுக்கு இல்லாது போகிறது. சுமத்தப்பட்ட மரணங்கள் எனும்போது அவற்றைத் தற்கொலை படுகொலை வெகுமக்கள் மரணங்கள் என நாம் வகைப்படுத்துகிறோம். இயக்க உட்படுகொலைகள் மறைக்கப்பட வேண்டிய காரணங்களால் நிகழும் தற்கொலைகள் அரசினால் ஏவப்படும் வெகுமக்கள் படுகொலைகள் என இவற்றை வகைப்படுத்துகிறோம். பெரும்பாலுமான சமயங்களில் இத்தகைய மரணங்களை உறுதிப்படுத்திக் கொள்ள முடிவதில்லை. இந்த மரணங்களுக்கு எவரும் பொறுப்பேற்பது இல்லை. இந்த மரணங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசுவது பேசுபவரின் மரணத்திற்கும் இட்டுச் செல்வதாக இருக்கிறது.

செல்வி அல்லது ரஜனி திரணகமா எந்தச் சூழலில் கொல்லப்பட்டனர்? சிவரமணியை தற்கொலை நோக்கி இட்டுச் சென்ற குறிப்பான சூழல் எது? கோவிந்தனைக் கொலை செய்த மனிதர்களின் தனிப்பட்ட அடையாளம் என்ன? பாலச்சந்திரனை அல்லது இசைப்பிரியாவை எப்படிக் கொன்றர்கள்? காணாமல் போன கவிஞர் புதவை இரத்தினதுரை இன்னும் உயிருடன் இருக்கிறரா இல்லையா? யுத்தத் தவிர்ப்பு வலயங்களில் கொல்லப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை என்ன? இவர்களை நினைவு கூறும் சூழல் அன்றன்று ஆயுத அதிகாரம் கொண்டவர்களால் மறுக்கப்படும்போது அவர்களின் உறவுகள் எவ்வாறு தம்மை ஆற்றுப்படுத்திக் கொள்வதும் தமது இழப்புக்களில் இருந்து மீள்வதும் சாத்தியம்? போருக்குப் பின்னான நிலைமையில் இலங்கையில் புகலிட நாடுகளில் இதற்கான சாத்தியங்கள் குறித்துப் பேசுகிறது மீராவின் மரணம் இழப்பு மலர்தல் நூல்.

இரண்டு பகுதிகளாலான இந்த நூலின் முதல் பகுதி மரணமும் இழப்பும் ஆற்றுதலும் அதிலிருந்து மீளுதலும் ஆன சூழல் குறித்து வரலாற்றில் நடந்த ஆய்வுகளை யூதர்கள் நாசிகள் போன்றவர்களின் அனுபவங்களை முன்நிறுத்திப் பேசுகிறது. இரண்டாவது பகுதி மீரா பாரதியின் தந்தையாரின் படுகொலை குறித்த அவரது துயரத்தைக் கடந்து போதலாக ஆத்மரீதியான பயணமாக இருக்கிறது. தனது சொந்தத் தந்தையின் இழப்பிலிருந்தான சுய தேடலில் இருந்து வரலாற்று ஆய்வுகளின் வழி ஈழ நிலைமைக்குத் தக்கபடி ஆற்றுதல் குறித்த கோட்பாடுகளை அதன் வழி உகந்த நடைமுறைகளை எட்ட நினைக்கிறார் மீரா.

இயக்க அரசியல் கருத்தியல் கொண்டிராதபோது அது வெறும் வெறுப்பு அரசியலாகவே எஞ்சும்@ அதனது தேவைகள் மறைந்த பின்பும் வெறுப்பு அரசியலாகவே இயக்க அரசியல் இன்றும் ஈழ நிலைமையில் எஞ்சி நிற்கிறது. இயக்கம் தாண்டிய அளவில் நடந்து முடிந்த படுகொலைகள் உள்கொலைகள் வெகுமக்கள் கொலைகள் அணுகப்படவில்லை. வன்மம் மிக்க இயக்க அரசியல் இங்கு ஆற்றப்படுத்தலுக்கான மிகப்பெரும் தடையாக இருக்கிறது. இது நிறைவேறும்போது அற மொழியில் இதனை ஆற்றுதல் எனவும் அரசியல் மொழியில் மக்கள்நேய உணர்வு எனவும் சொல்லலாம். துரதிருஷ்டவசமாக இன்றளவிலும் வன்மமே இங்கு அரசியல் உரையாடலாக இருக்கிறது. சபிப்பதும் வெறுத்தலும் அவதூறும் பழிவாங்கும் உணர்வும் துவேஷமும் தூஷணமும் ஒரு போதும் ஆற்றுதலை உருவாக்க முடியாது. மீராபாரதி இந்த வெளியில்தான் மிகச் சிக்கலான தவிர்க்கமுடியாத ஒரு உரையாடலைத் துவங்கி வைக்கிறார்.

மீரா ஓஷோவினால் அதிகம் பாதிப்பப் பெற்றிருக்கிறர். ஓஷோவுக்கு காமத்தைக் கடத்;தலும் வன்முறையைக் கடத்தலும் அன்பு செய்வதற்கான முன்நிபந்தனைகள். அவரைப் பொருத்து தான் எனும் அகந்தையைக் கடத்தலும் அன்பு செய்வதற்கான பிறிதொரு நிபந்தனை. இதன் அடிப்படையில் மரணத்தை ஒப்புதல் சடங்குகள் மற்றும் நினவு கூறுதலின் வழி மரணத்தைக் கடந்து செல்லுதல் பற்றி மீரா பேசுகிறார். கொலைகளுக்குக் காரணமானவர்களை அடையாளம் தெரிந்தவர்கள் சந்தேகத்தக்குரியவர்கள் உறுதிபடச் சொல்ல முடியாதவர்கள் என அனைவரையம் மன்னித்தல் எனும் வழியை சுமத்தப்பட்ட மரணமெனும் துயரிலிருந்து மீளுவதற்கான வழிமுறையாக மீரா முன்வைக்கிறார். எதிரியை மன்னித்தல் எனும்போது எதிரியின் குடும்பம் இலங்கை ராணுவத்தினர்; அவர்களது குழந்தைகள் குறித்தும் மீரா பேசுகிறார்.

இலங்கை ராணுவத்தின் இழப்புக்களைக் கவனிக்கவும் அவர்களது உளவியல் மேம்பாட்டுக்காகவும் இலங்கை அரசு மற்றும் படை அமைப்பின் நிர்வாகப் பொறிமுறை மருத்துவ மனைகள் மனநலக் காப்பகங்கள் இவற்றிற்கான பொருளாதார வளம் என அனைத்தும் அவர்களுக்கு இருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகமொன்று இது குறித்துக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அது தனது மக்களின் துயர் குறித்துக் கவலபை;பட்டால் மட்டும் போதும். சித்திரவiயாளனின் உளவியல் சிதைவு பற்றி சித்திரவதைக்கு உள்ளான மக்கள் கூட்டம் கவலைப்பட வேண்டிய அவசியமி;ல்லை. இதனையே கொலை செய்ததால் உளச்சிதைவுக்கு ஆட்படும் இஸ்ரேலிய ராணுவத்தின் பற்றி நான் கவலைப்பட வேண்டிய அவசியில்லை கொல்லப்பட்ட எமது சந்ததிகள் பற்றித்தான் நான் கவலைப்பட வேண்டும் என்கிறார் பாலஸ்தீனக் கோட்பாட்டாளரும் கவிஞருமான ஹனன் அஸ்ராவி. ஈழ நிலைமையில் தமிழர்களை இலங்கை அரசு அடிப்படை உயிரிகளாகவே கருதாத சூழலில் இது குறித்த அக்கறை உடனடியில் ஈழத்தமிழ் மக்களிடம் சாத்தியமில்லை

மீராவின் தந்தையாரது படுகொலையை முன்வைத்த அவரது அனுபவம் சார்ந்த மூன்று கட்டுரைகள்தான் இந்நூலின் மையமான பகுதி. சொந்த அனுபவத்தை மக்கள்நேய உணர்விலிருந்து பொது அனுபவமாக மாற்றும் உன்னதமான மனத்தை மீரா பெற்றிருக்கிறார். தனது தந்தையைப் படுகொலை செய்தார்கள் என எந்தக் குறிப்பிட்ட மனிதரையும் குறிப்பிட்ட இயக்கத்தையும் அவர் குற்றம் சுமத்தவில்லை. இந்தப் படுகொலை எனும் நிகழ்வை ஈழ சமூகத்தில் கடும்பனியாகி உறைந்துபோன அரசியல் கலாச்சாரத்தின் பகுதியாக அவர் பார்க்கிறார். இந்தக் கலாச்சாரம் எவ்வாறு உருவாகியது அதனை எவ்வாறு முழு சமூகமும் அங்கீகரித்து மௌனித்தது என்பது குறித்து அந்த சமூகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் அதற்கான நேரம் இதுவே எனவும் அவர் கோருகிறார்.

ஈழ நிலைமையில் ஆற்றுதல் என்பது நடைமுறையில் எவ்வாறெல்லாம் நிகழ முடியும் என்கிற கேள்வியை எழுப்பிக் கொள்ளும் மீரா பாரதி இலக்கியம் சுய நினைவு கூறல்கள் துயர்களை எழுத்தில் பதிவு செய்தல் கோட்பாட்டு உருவாக்கம் உளவியல் ஆய்வுகள் என்றெல்லாம் நிகழ முடியும் என்கிறார். துரதிருஷ்டவசமான இதை எழுதுபவனின் வாசிப்பு அனுபவத்தில் யுத்த காலம் குறித்த ஈழ இலக்கியம் குறிப்பிட்ட அளவில் மேலும் பிளவுன்ட மனிதர்களுக்கடையில் வெறுப்பையும் வன்மத்தையும் விதைப்பதாகவே இருக்கிறது. பெர்னார்ட் ஸ்லிங்கின் ரீடர் போன்ற ஒரு நாவல் கோவிந்தனினது புதியதோர் உலகம் நாவலை அடுத்து அதனை மீறின போராட்டம் குறித்த இருளும் ஒளியும் பற்றிய இலக்கியம் எதுவும் இங்கு உருவாகவில்லை.

மீராவின் நூல் இந்த இடைவெளியில் முகிழ்த்திருக்கும் புனைவல்லாத ஒரு முன்னோடி நூல். படைப்பமைதி கொண்ட நூல். ஆய்வு நோக்கு கோட்பாட்டு உருவாக்கம் அனுபவத்திலிருந்து மீளுதல் நோக்கிய பயணம் என எல்லா வகையிலும் மீராபாரதியின் மரணம் இழப்பு மலர்தல் எனும் இந்த நூல் ஈழப்பரப்பில் ஒரு முன்னோடி நூல். ஆற்றுதல் என்பதன் முதல்படி மரணங்களைச் சுமத்தியவர்கள் அதனை ஒப்பி அதற்குப் பொறுப்புக் கூறுதலாகும். தனிமனிதர்கள். இயக்கங்கள் படையினர் இலங்கை அரசு என அனைவரும் இதனைச் செய்ய வேண்டியிருக்கிறது. மீரா பாரதியின்; நூலைத் தொடர்ந்து விவாதிப்பதன் வழி இந்தப் பிரம்மாண்டமான கேள்விகளுக்கு நியாயமாக நாம் விடை காண முயலலாம். அதற்கான நடைமுறைகளையும் உருவாக்க முயலலாம். தமது சொந்தத் துயரை சமூகத் துயராக பிரபஞ்சத் துயராகக் காணும் மீராபாரதி தனது சுயதேடலில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார். இது ஈழ சமூகத்திலும் இலங்கையின் தெற்கிலும் எப்போது நேரும் எனும் ஆற்றாமை இந்த நூலை வாசித்து முடிக்கையில் மனதைப் பாரமாக அழுத்திக்கொண்டிருக்கிறது.

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2253:2014-08-22-04-12-01&catid=55:2013-08-30-03-06-41&Itemid=71

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.