Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடாளுமன்றத்தில் அறிவித்தது போல் நவம்பர் முதல் சாகும் வரை உண்ணாவிரதம்-செல்வம் அடைக்கலநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

adaikalanathan.jpg

தமிழீழ விடுதலைப் பதவியில் இருந்து விலகினாலும் நாடாளுமன்றத்தில்  நான் அறிவித்தது போல் நவம்பரில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்

அரசு தமிழர்களுக்கு நிரந்தர தீர்வை வழங்காவிட்டால் சாகும் வரையிலான போராட்டத்தில் ஈடுபடப்போவதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்த நிலையில் ரெலோ இயக்கத்தின் தலைமைப்பதவியில் இருந்து விலகினால் போராட்டம் கைவிடப்படுமா எனக்கேட்ட போது அவர் இவ்வாறு தெரிவித்தார்
இது தொடர்பாக செல்வம் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
நான் கடந்த நான்கு வருடம் அரசுக்கு தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரு வருட கால அவகாசம் கொடுத்திருந்தேன். ஒரு வருடத்துக்குள் பிரச்சனை தீர்க்கப்படாதுவிடின் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேனென்று. நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தேன்.,

ஆனால் அரசு இன்னும் எமது மக்களின் பிரச்சனைக்கு தீர்வை முன்வைக்கவில்லை. எனவே நான் கட்சித்தலைமையிலிருந்து விலகினாலும் திட்டமிட்டபடி எதிர்வரும் நவம்பர் மாதம் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றார்.

 

 

http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9507:2013-10-08-07-02-02&catid=1:latest-news&Itemid=18

  • 1 month later...

நவம்பர் மாதம் முடியப்போகுது ... எப்ப உண்ணாவிரதம் இருக்கிறயல் ????????????????????????

  • கருத்துக்கள உறவுகள்

நவம்பர் மாதம் முடியப்போகுது ... எப்ப உண்ணாவிரதம் இருக்கிறயல் ????????????????????????

அந்த மனுசன் அந்தரம் அவசரத்துக்கு உதவும் என்டு எப்பவோ சொன்னதை இப்ப வந்து கேட்கிறது.நியாயமில்ல சிறியண்ணே
  • கருத்துக்கள உறவுகள்

பொறுங்கோ விக்கியர் இப்ப தான் யாகம் தொடங்கி இருக்கிறார்.. எனி கடவுள் வந்து உண்ணாவிரதம் இருந்தாலும் சாகமாட்டார் என்று.. வரம் கொடுத்தாப் பிறகு தான் செல்வம் உண்ணாவிரதம் இருப்பார்.

 

அறிவுக்கும்.. உணர்வுக்கும் இடையில் விக்கியர் பயணிச்சுக் கொண்டிருந்ததால.. அவரால சரியான நேரத்துக்கு.. யாகத்தைத் தொடங்க முடியல்ல. தன்ர பிள்ளைகள் காதலிச்சு சிங்களத்திகளை கட்டினது போல.. தமிழ் மக்களும்.. நாட்டை சிங்களவரின் கழுத்தில் கட்டிவிட்டால் எவ்வளவு சோக்கா இருக்கும் என்று அறிவுபூர்வமாக சிந்திக்கிற அதேவேளை.. கடவுள் அதற்கு அனுமதி அளிப்பாரோ என்று.. உணர்வு பூர்வமாகவும் சிந்திச்சிட்டு இருந்திருக்கிறார்.

 

இப்ப என்ன கேள்வி என்றால்.. முள்ளிவாய்க்கால் அவலத்தை காட்டி.. வரும் வெளிநாட்டுத் தலைவர்களை முள்ளிவாய்க்காலோடு எந்த வகையிலும்... சம்பந்தப்படாத சிங்களச் சம்பந்திகள்.. சுமந்திரனும்... சம்பந்தனும்.. விக்கியரும் சந்திச்சுப் பேசுறது முத்தையா முரளிதரன் வெளிப்படையா சொல்லுற கருத்துக்களுக்கும் இடையே வேறுபாடு இருக்குமோ.. என்று ஒருக்கா உணர்வை தள்ளி வைச்சிட்டு அறிவுபூர்வமாக மக்கள் சிந்தித்துப் பார்த்தால் என்ன..???! முரளி வெளிப்படையா சொல்லுறார். உவை ரகசியமா கதைக்கினம். என்ன கதைக்கினம் என்றது.. அவர்களின் அறிவுக்கும்.. கடவுள் என்ற உணர்வுக்குமே வெளிச்சம்..! வாக்குப் போட்ட மக்களுக்கு ஒன்றும் தெரியாது.

 

கமரூன் வந்து போய் 2 நாள் ஆகுது. இதுவரை தமிழ் மக்களுக்கு அவரோடு என்னத்தைப் பேசிச்சினம் என்றதை தலீவர்கள்.. ஒரு பத்திரிகையாளர் மாநாட்டைக் கூடக் கூட்டிச் சொல்லேல்ல. அந்தளவுக்கு தமிழ் மக்கள் விவகாரம்.. சிங்களச் சம்பந்திகளின் சொந்த வீட்டு விவகாரமாப் போச்சுது. இப்படியே போய்க்கிட்டு இருந்தா.. தமிழர் தலையில்.. இவர்கள் மூவரும் மிளகாய் அரைத்து ரொட்டி தட்டி சாப்பிட்டு ஏப்பம் விடும் நிலை தான் ஏற்படும்..!

 

புலிகள் ஒவ்வொரு தடவையும் சிங்கள அரசுப் பிரதிநிதிகள் ஆகட்டும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளாகட்டும் சந்திச்சுக் கதைச்ச பிறகு ஒரு மக்கள் அறிவிப்பை தருவார்கள். அந்த குறைந்த பட்ச நேர்மை கூட இவர்களிடம் இல்லை. இவர்களை.. எப்படி தமிழ் மக்கள் நம்புறது..????????????????! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலுக்கு முன் ஈஸ்ட்காமில் சம்மந்தரின் கேள்வி பதில் நேரம்

கேள்வி 1. பிரபாகரனை பயங்கரவாதியென பேட்டி குடுத்துள்ளீர்களே உண்மையா? 

 

சம்மந்தர்: நாங்கள் ஒருபோதும் அப்படிசொல்லவில்லை சொல்லவும்மாட்டம் (சிறிது இடைவளிவிட்டு) ஆனால் சமாதானத்துக்கு வந்த இந்தியன் ஆமியுடன் சண்டையிட்டது ஒரு பயங்கரவாதசெயலாகவே பார்க்கிறோம் மாவிலாறு சம்பவமும் பயங்கரவாதமே.

 

 

இதுக்குள்ள தண்ணியடிச்சிட்டு வந்த நாலைஞ்சு பெரிசுகள் சம்பந்தரை பார்த்து கையெடுத்து கும்பிட்டு தேவாரம் பாடாதகுறை.

  • 2 weeks later...

இன்னம் 2 நாட்களே உள்ளன .... என்ன ஐயா.. எப்ப இருக்கிறயல்....

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் விடுற ஐடியா இல்லப்போல

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் விடுற ஐடியா இல்லப்போல

 

இவரும் அவரும் ஒண்டுதான்.சொல்லுவினம் செய்ய மாட்டீனம் :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.