Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம் பெயர் தமிழர்கள் முதலீடுகளை மேற்கொள்ள வட மாகாண சபை ஆவண செய்யவேண்டும் - சந்திரநேரு

Featured Replies

ஆம்

இதை நான் ஆமோதிக்கின்றேன்

தகவல்களை  முழுமையாக தரத்தேவையில்லை

இன்றைய  நிலையில் எந்தளவு தூரம் நாம் முதலிடலாம்

அவற்றை  எம்மக்களுக்காக எந்தளவுக்கு  பாதுகாப்பாக செலவிடலாம் போன்றவற்றையும் எழுதுங்கள்

அங்கே நீங்கள் ஒரு உதாரணத்திற்கு வாழைத்தோட்டம் ஒன்றை ஒரு ஏக்கரில் செய்கை பண்ணலாம் .. நிலத்தைக் கூட 3 வருட குத்தகைக்கு எடுங்கள் ஒரு ஏக்கரில் 800 கன்றுகளை நாட்டலாம்.. 1.5 ஏக்கர் எனில் 1200 வாழை... இதை ஒரே அடியா நாட்டாமல் 100- 100 ஆக ஒரு மாத இடைவெளியில் பயிரிட்டால் ..12ம் மாதத்தில் இருந்து மாதம் மாதம் 100 வாழைத்தார் கிடைக்கும் ஒரு திசு வாழைத்தாரை 1000 /= விற்றால் மாதம் மாதம் 1 இலட்சம் சம்பாதிக்கலாம்.. இதை இனிப்பு வாழைச் சிப்ஸ் செய்து ஐரோபாக்கு ஏற்றினால் இன்னம் இலாபம்..

Banana_cultivation.jpg

இப்ப 100 மில்லியன் அளவுக்கு முதலீடு செய்வதெண்டால் அது இலங்கையின் எந்த பகுதியா இருந்தாலும் கண்டிப்பா அரசியல் செல்வாக்கு இருந்தே ஆகணும் மற்றது கவனிக்க வேண்டியவங்களையும் அவ்வபோது கவனிக்கணும் இல்லாட்டி கஷ்டம் அண்ட் also இலங்கை இன்னும் பூரண ஜனநாயகத்துக்கு திரும்பல்ல ஒருத்தனிட்ட ஒரு துப்பாக்கி இருந்தால் காணும் அவனே friends கூட சேர்ந்து கடத்தி பணம் பண்ணுற வேலை எல்லாம் நடக்குது பணம் சம்பாதிக்க இது ஈஸி என்றதால

அண்மையில் ஒரு பிரதி போலீஸ் மா அதிபரே ஒரு முஸ்லிம் வர்த்தகர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு இருக்கார்.......

இறுதியில் பெரிய அளவில் முதலீடு செய்து அங்கெ தமிழர்கள் தொல்லை இல்லாமல் பிசினஸ் செய்ய முடியாது என்பதே உண்மை எல்லாருக்கும் சலாம் போட்டு சம்பாதிக்கிறதில பாதி கப்பமா போயிட்டே இருக்கணும்

பட் சின்ன முதலீடுகள் work out ஆகும்

பெரிய முதலீடு வேண்டாம் sme துறையே மக்களின் வாழ்வை மேம்படுத்தும் ...

sme பற்றிய ஒரு செய்தியை பாருங்கள்..

http://online-accounting-bookkeeping.blogspot.com/2011/10/sme-business-sales-raise-in-september.html

இதற்கான ஆதாரத்தைக் காட்ட முடியுமா..??! எமக்கு போய் வந்தவர்கள் சொன்ன தகவலின் படி.. அங்கு சிங்களவர்களும் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள செய்தியே கிடைத்தது. மேலும்.. வன்னியில் இருந்து என்று யாரும் தெரிவு செய்யப்பட்டு வேலை வழங்கும் பக்குவதில் அவர்கள் இல்லை என்றும் தெரிகிறது. அப்படி இல்லை என்று கூறும் நீங்கள் இதனை மறுக்கக் கூடிய ஆதாரங்களைக் காட்ட முடியுமா..??!

ரில்கோ ஹொட்டல்.. வன்னியில் போர் நடந்த காலத்திற்கு முன்னரே முதலீடு கொண்டு.. சென்று.. இயங்க ஆரம்பித்துவிட்டது. சமாதான காலத்தில் அது வளர்ச்சி கண்டது.

ரில்கோ.. லண்டனில் இறங்கு முகம் கண்ட போது நிறைய சுருட்டிக் கொண்டு போனதுதான் அங்க முதலீடானது. அதில்  ஒட்டுக்குழு தலைவருக்கு லண்டனில் பிஸ்னஸ் போட்டுக் கொடுத்து வாங்கினதுகளும் அடங்குமாமே..????! ஒரு பக்கம் புலி ஆதரவு போல காட்டிக்கொண்டு இன்னொரு பக்கம்.. சிங்களவனோடும்.. ஒட்டுக்குழுக்களோடும் ஒட்டி ஓடியவர்களே இவர்கள். :lol::D

தமிழர்கள் அங்கு முதலிட்டதை நினைத்து மகிழ்ச்சி அடையுங்கள்.. அல்லாவிட்டால் சிங்களவனோ சோனியோ அங்கே ஹோட்டல் கட்டி இருப்பான்...

  • Replies 132
  • Views 15k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அது செய்ய ஆக்கள் வேணுமே அவர்களை எப்பிடி அடையாளம் கண்டு அவர்களிடம் பொறுப்பை கொடுப்பது ? இல்லை அங்கு இருப்பவர்களுடனும் புலத்தில் இருப்பவர்களுடனும் ஒரு தொடர்பு பாலமாய் இருக்க யாரவது இருகின்றார்களா அங்கெ small business இல் ஆர்வம் உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் தொடர்புகளை பேணுவது எவ்வாறு ?

என்னைத் தொடர்புகொள்ளுங்கள் உதவி செய்கின்றேன்...மனித வளம் , வியாபார ஆலோசனைகளையும் தருகின்றேன்...விருப்பம் இருந்தால் இன்பாக்ஸ் வாங்க வழிக்காட்ட நான் தயார்.....

  • கருத்துக்கள உறவுகள்

Ok :D

அண்ணா,

நல்ல யோசனை. எம்மை சுற்றி இருக்கும் கடல் நீர் வளத்தை அறுவடை செய்வது முதலிடத்தை பெற வேண்டும்.

அவற்றை சேமிக்க குளிர் அறை வசதிகளும், மற்றும் அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் உதவிகளையும் செய்யவேண்டும்.

நேசகரமும் தனது திட்டத்தில் வலை பிரச்சினைகள் பற்றி குறிப்பிட்டுள்ளது.

விவசாயம் முடிந்தவுடன் இந்த மார்கழி ஒரு கிராம மீன் அறுவடை திட்டத்திற்கு உதவ உத்தேசம்.

கோழி வளர்ப்பு ஒருத்தரை பணக்காரர் ஆக்காவிட்டாலும் அந்த குடும்பத்திற்கு உணவு பாதுகாப்பை(Food Security) கொடுக்கும். ஒரு கோழி யாழில் 800 ரூபாவிற்கு விலை போகிறது. பத்தாயிரம் ரூபா மாத வருமானமுள்ள குடும்பத்தால் மாதம் இரண்டு கோழி உண்பதே பெரிய பிரச்சினை.

எனது நண்பன் ஒருவன் தனது சித்தப்பா ஊடாக முல்லை தீவிலும்  வடமராட்ச்சி கிழக்கிலும்  கரை வலையில் முதலீடு செய்து இருக்கிறான்...  முல்லை தீவில் இறால் பிடிப்புக்கு  இடங்களை லீசுக்கும் எடுத்து விட்டு இருக்கிறான்... 

6 மாத காலத்தில் போட்ட முதலின் 40% மேல் செலவுகள் போக லாபமாக கிடைத்ததாக சொன்னான்...  லாபத்தையும் அங்கேயே மீண்டும் முதலீடு செய்ய வேண்டும் எண்டதுதான் நான் விடுத்த கோரிக்கை... 

இது தகவல் அடிப்படை மட்டும் தான்...    சரியான தரவை ஒண்டுக்கு இரண்டு தரம் விசாரிச்சு கொள்ளுங்கள்... 

 நான் சொல்ல வரும் கருத்து நாங்கள் அங்கை மீன் பிடிக்க முதலீடு செய்து அங்கு இருக்கும் மக்களுக்கு தொழில் வாய்ப்பை வளங்கவில்லை எண்றால் என்ன நடக்கும் என்பதே எனது கவலையாக இருக்கிறது... 

அங்கே மீன் பிடி தொழிலில் இருந்த மக்கள் தொழில் வாய்ப்புக்களை நோக்கி இடம்பெயர வேண்டிய நிலை வரும்...  

அப்படி வரும் போது சிங்களம் அங்கு மீன் பிடிப்பதுக்காய் குடியேறும்...  எங்களின் வளங்களை எடுத்து தான் பயன் பெறும்... 

முடிஞ்சவை செய்யுங்கள்... !  

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

நான் பலகாலமாக சொல்லி வருவது இதைத்தான். அதாவது யாழில் இருக்கும் potential எமக்கு இன்னும் நன்கு புரியவில்லை. அதைப் புரிந்தவர்கள் சரியான விதங்களில் முதலீடு செய்து லாபமீட்டுகிறார்கள். சிறிலிங்கத்துக்கும், நிதர்சனுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நீங்கள் என்ன துறையில் முதலிட்டிருந்தாலும் ஊரில் இருக்கும் சில குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு வழி செய்திருப்பது மிக நல்ல விடயம். நாங்கள் முதலீடு செய்யாவிட்டால் கண்டிப்பாக யாரோ ஒருத்தன் முதலீடு செய்யவும் உழைக்கவும் போறான்.

தயா அண்ணா குறிப்பிட்டது போல எமது கடல்பகுதி மிகவும் செழிப்பானது. குறிப்பாக கடலட்டை, சிங்கறால், நண்டு போன்றவற்றைப் பிடித்து ஏற்றுமதி செய்கிறார்கள். வடமராட்சி கிழக்கிலே பலர் கடலட்டை தொழில் மூலம் நன்றாக உழைக்கிறார்கள். நீர்கொழும்பில இருந்து வந்து நிண்டு மீன் பிடிச்சுக்கொண்டு போறாங்கள், அப்படி இருக்கிறது எமது நிலை.

நெடுக்ஸ் அண்ணா, உங்களிடம் சில கேள்விகள்.
1) புலத்தில் இருக்கும் எம்மவர்களில் எத்தனை பேர் உற்பத்தி சார்ந்த துறைகளில் முதலீடு செய்திருக்கிறார்கள்? இங்கிருக்கும் சொந்த வியாபாரம் செய்யும் எம்மவர்களில் அநேகர் தமிழ்க்கடை/எதோ ஒரு கடை வைத்திருக்கிறார்கள், நிபுணர்கள் தங்கள் துறைசார்ந்த (வைத்தியர், கணக்கியலாளர், பொறியியலாளர்) சேவை வழங்கும் கடைகளை வைத்திருக்கிறார்கள்     
2) என்ன மாதிரியான முதலீடுகள் ஊரிலே செய்யலாம் எனக் கருதுகிறீர்கள்?
3) ஊரின் தற்போதைய demand/supply, market share, costing பற்றிய ஏதாவது கள அனுபவம் இருக்கிறதா? கோடி கோடியாக முதலீடு செய்து ஒரு தொழிற்சாலையைப் போடச்சொல்லி யாரும் கேட்கவில்லை, சிறிய முதலீடுகளை பலர் செய்வது பற்றித்தான் கதைக்கிறோம். (கடல் தொழில் செய்பவர்களுக்கு ஒரு உருப்படியான வலை, வள்ளம் போன்ற SME முதலீடுகள்)  
4) பெரிய முதலீடுகளை சிங்களம் அனுமதிக்காது என்று எந்த அடிப்படையிலே சொல்லுகிறீர்கள்? BOI ஊடாக உங்களுக்கு முதலிடும் விருப்பம் இருந்தால் அதற்கு எதுவிதமான தடையும் இல்லை.

சலாப்பாது, பந்தி பந்தியாக இல்லாது, வெறும் கூகிள்/விக்கிப்பீடியா சாராத நேரடிப் பதில்களா இருந்தா நல்லம். பதில் தெரியாதவற்றிட்கு தெரிந்தமாதிரி பதில் எழுத வேண்டிய அவசியமும் இல்லை.  

குறிப்பு - மாகாண சபையிலே எனக்கு எந்தவிதமான நம்பிக்கையும் இல்லாததாதல் அதைப் பற்றி எழுதுவதை வேணுமென்றே தவிர்த்திருக்கிறேன். ஊரிலே போய் முதலீடு செய்வதற்கும், மாகாண சபைக்கும் தொடர்பே இல்லை.

‘யுரோப்பியன் சோம்பர்ஒப் கொமர்ஷ்’ அலுவலகத்திற்குச் போய் அந்த நாட்டுக்கு என்ன தேவை எனக் கேட்டு அதன் படியும் செயற்படலாம் . ஊர்காவல்துறை கடலட்டைக்கும், வேலணை ‘ஒட்டி’க்கும் சுவிசில் ரொம்ப கிராக்கி அதை விற்று நல்லா சிலர் சம்பாதிக்காங்க என்பதும் கொசுறுத் தகவல்..

  • கருத்துக்கள உறவுகள்

1003960_465833616824921_1644932967_n.jpg

தொடர்ந்து இணையுங்கள்

பலரைக்கவரக்கூடும்....... :icon_idea:

தொடர்ந்து இணையுங்கள்

பலரைக்கவரக்கூடும்....... :icon_idea:

இப்படி என்னை உற்சாகப்படுத்தினால் தொடர்ந்து செய்வேன் நன்றி விசுகு ...

pv08a.jpg

ஒரு ஏக்கர்... மாதம் ஒரு இலட்சம் இலங்கை ரூபா எடுக்கலாம்... கிறங்க வைக்கும் கீரை சாகுபடி... பட்டையைக் கிளப்பும் 'பட்டாம்பூச்சி' பாசனம்!

தினமும் ஆயிரத்து முன்னூறு கட்டு வரைக்கும் மகசூல் கிடைக்கும்....

ஐரோப்பின் மிக பெரிய நிறுவனம்மான லைக்கா மொவையில்  நிறுவனம் இலங்கையில் வடக்கில் தனது மிகப்பெரிய காரியலாம் கட்ட ஒப்பந்தம் இட்டுள்ளதா தகவல் பத்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் நடந்தா நல்லம் .

நல்ல விடயம் .. நாம் யார் எண்டு சண்டை பிடிச்சி நிரூபிக்கிற விட,..வியாபாரத்திலும் . கல்வியிலும் , நிர்வாகத்திலும் நாம் யார் என நிரூபிப்போம்... வெற்றி நிச்சயம்...ஓயாத அலையாய் வியாபாரம் செய்வோம்...

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது.. நல்லது..

உங்கள் சொந்தக் காசிலேயே முதலீட்டைச் செய்து மக்களுக்கு வேலை வாய்ப்பையும், நாட்டின் பொருளாதாரத்தையும் முன்னேற்றி கொஞ்சம் சம்பாத்தியத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள்.

"அபாரமாக லாபம் கிடைக்கும் வாருங்கள் வந்து முதலீடு செய்யுங்கள்" என்று இந்தியாவில் சீட்டுக் கம்பனி ஆரம்பிப்பது போன்று எதுவும் செய்யாவிட்டால் சரி!

அவர் ..அவர் அளவிற்கேற்ப முயற்சி செய்யுங்கள்... ஒரு நல்ல விடயம் நிறையப் பேர் இந்த திரியை வாசித்துவிட்டு சிறிது தெளிவாக இருக்கிறார்கள்... சொல்லப்போனால் சுமார் 3 மாதங்களுக்கு முன்னர் ஏக்கர் 5 இலட்சம் படி 4 ஏக்கர் தென்னம் தோட்டம் வாங்கினார் நோர்வே தமிழர் ஒருவர் நான் தான் வாங்கிக் குடுத்தன்... 20 இலட்சம் செலவு....இன்று நல்ல வருமானம் பார்க்கின்றார்..விரைவில் தன் பணியை 50 % குறைக்கவும் உள்ளார்.. எப்படி நாம் பதவிப்பிரமாணம் பற்றி சண்டை பிடிச்சிக்கொண்டு இருக்கிறம்..சிலர் வாழ்வில் வெற்றியை நோக்கிச் செல்கின்றனர்..நம்ம அதிர்வு இணையத்தை வாசித்துவிட்டு பியர் அடிச்சிட்டு இருக்கம்..இங்கே நம்ம என்பது நானில்லை.. நீங்கதான்...

ஐரோப்பின் மிக பெரிய நிறுவனம்மான லைக்கா மொவையில்  நிறுவனம் இலங்கையில் வடக்கில் தனது மிகப்பெரிய காரியலாம் கட்ட ஒப்பந்தம் இட்டுள்ளதா தகவல் பத்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் நடந்தா நல்லம் .

தகவல் சரியானதாயின் நல்ல செய்தி.

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் வாழ்வில் வெற்றியை நோக்கிச் செல்கின்றனர்..நம்ம அதிர்வு இணையத்தை வாசித்துவிட்டு பியர் அடிச்சிட்டு இருக்கம்..இங்கே நம்ம என்பது நானில்லை.. நீங்கதான்...

இலங்கையில் ஒரு முதலீட்டைச் செய்வது மிகவும் சுலபமானது. காணிகளை இலகுவாக வாங்கலாம் என்பது கொஞ்சம் இடிக்கின்றது.

நான் ஆகஸ்ட்டில் யாழ்ப்பாணத்தில் நின்றேன். இலங்கை குடியுரிமை இல்லாதவர்களின் காணிகள் வாங்குவது பற்றிய சட்ட அபிப்பிராயம் என்ன என்று ஒரு பிரபல பிரக்கிராசியிடம் கேட்டபோது அவர் சொல்லியது இதுதான்.

அண்மையில் கொண்டு வரப்பட்ட சட்டப்படி பிறநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் காணி வாங்கவேண்டும் என்றால் 100% வரி கட்டவேண்டும். அதாவது ஒரு ஏக்கர் உள்ளூர்க்காரருக்கு 5 இலட்சம் என்றால், வெளி நாட்டவர் 10 லட்சம் கொடுத்துத்தான் வாங்கலாம். 100% வரி கட்டிக் காணி வாங்கி முதலீடு செய்வது இலாபம் தருமா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும். இலங்கைக் குடியுரிமை வைத்திருப்பவர்களின் பெயரில் காணி வாங்குவது வரி கட்டுவதைத் தவிர்க்க உதவும் என்றாலும் அது ஒரு ரிஸ்க்கான பிஸினஸ்!

மேலும் இன்னுமொன்றையும் சொல்லியிருந்தார். இலங்கையில் பிறந்தவர்களுக்கு காணிகள் இருந்தால் அவர்கள் பிறநாட்டுக் குடியுரிமை பெற்றாலும் அவர்களின் காணிகளை அரசாங்கம் பறிக்கமுடியாது. அதற்குச் சட்டத்தில் இடமில்லை. எனவே பிறநாட்டுக் குடியுரிமை எடுத்தவர்கள் காணிகள், வீடுகள் வைத்திருந்தால் அவை பறிபோகும் என்று கவலைப்படவேண்டாம்.

ஐரோப்பின் மிக பெரிய நிறுவனம்மான லைக்கா மொவையில்  நிறுவனம் இலங்கையில் வடக்கில் தனது மிகப்பெரிய காரியலாம் கட்ட ஒப்பந்தம் இட்டுள்ளதா தகவல் பத்தாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல் நடந்தா நல்லம் .

என்ன வேலை கொடுக்கப்போகின்றார்களாம்?

Call centre நடத்தினாலும் 10000 பேருக்கு வேலை கொடுக்கமுடியாது. சிலவேளை ஆடைத் தொழிற்சாலை தொடங்கப்போகின்றார்களோ :unsure:

வவுனியாவில் ஏற்றுமதி பயிராக மாறியுள்ள பப்பாசி. 

அமெரிக்­காவின் அய­ன­மண்­டல பிர­தே­சத்தில் உரு­வாக்கம் பெற்ற பப்­பாசி செய்கை இன்று பல்ே­வறு நாடு­க­ளிலும் பயிரி­டப்­பட்டு வரும் நிலையில் மருத்­துவ குணம் நிறைந்­த­தா­கவும் காணப்­ப­டு­கின்­றது.

அந்த வகையில் வவு­னியா மாவட்­டத்தில் தற்­போது பப்­பாசி செய்கை சிற­ப்பு பெற்று விளங்­கு­வ­துடன் மீள்­கு­டி­யே­றிய பிர­தேச மக்­களின் வாழ்­வா­தார தொழி­லா­கவும் காணப்­ப­டு­கின்­றது என வவு­னியா மாவட்ட பிரதி விவ­சாய பணிப்­பாளர் ஏ.சகி­லா­பாணு தெரிவித்தார்.

வவு­னியா மாவட்­டதின் பப்­பாசி செய்கை தொடர்பில் அவரிடம் கேட்­ட­போதே அவர் இவ்­வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து ெதரி விக்­கையில்,

வவு­னியா மாவட்­டத்தில் மீள்­கு ­டியே­றிய பகு­தி­களை இலக்­காக கொண்டு நாம் பப்­பாசி செய்­கை யை மேற்­கொண்டு வரு­கின் றோம். அம் மக்­களின் அய­ராத உழைப்பும் ஆர்­வமும் இன்று வவு­னியா மாவட்­டத்தில் இருந்து பப்­பா­சியை ஏற்­று­மதி செய்யும் அள­விற்கு வளர்ச்­சி­ய­டைந்­துள்­ளது.

ஆரம்ப கட்­ட­மாக வவு­னியா மாவ ட்­டத்தில் கன­க­ரா­யன்­குளம் நெடுங்­கேணி விவ­சாய போத­னா­சிரியர் பிரிவு­களில் 53 ஏக்கரில் 200 பய­னா­ளி­க­ளுக்கு ஐ.எல்.ஓ. நிறு­வ­னத்தின் நிதி­யு­த­வி­யுடன் விவ­சாய திணைக்­க­ளத்தின் தொழில்நுட்ப அனு­ச­ர­ணை­யுடன் ரெட்­லேடி எனப்­படும் கலப்­பின பப்பாசி வர்க்கம் வழங்­க ப்­பட்­டி­ருந்­தது. 2012 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்ட இத் திட்­டமே இன்று வரு­மா­னம்­தரும் வழி­யாக மாறி­யுள்­ளது.

ஒரு விவ­சா­யி­க்கு 0.25 ஏக்­க­ருக்கு பப்­பாசி செய்­கைக்கு உதவி செய்­கின்றோம். அந்­த­வ­கையில் ஆரம்ப செல­வாக 800 00 ரூபா செல­வா­கின்­றது.

எனினும் நாம் முதல் கட்­டத்தில் உதவி பெற்­ற­வர்­க­ளுக்கு பல்­வேறு உத­விகள் மூலம் அதனை வழங்­கி­யி­ருந்தோம்.

இத­ன­டிப்­ப­டையில் முதல் வரு­ட த்­திற்­கான வரு­மா­னத்தை முதல் மூன்று மாதங்­களில் இருந்­து­பெற முடி­கின்­றது. அந்த வகையில் முதல் வருட வரு­மா­ன­மாக 75 ஆயிரம் ரூபா பெற முடியும். எனினும் இரண்­டா­வது வரு­டத்தில் 30 ஆயிரம் ரூபா செலவு செய்­யப்­படும் நிலையில் வரு­டாந்தம் 0.25 ஏக்கரில் மூன்று இலட்சம் ரூபா வரு­மா­ன­மாக பெற முடி­கின்­றது.

வவு­னியா மாவட்­டத்தில் பப்­பாசி செய்­கையில் ஈடு­படும் 200 பய­னா­ளி­க­ளை­யும் ஒன்­றி­ணைத்து வவு ­னியா வடக்கு பழச்­செய்­கை­யா­ளர்கள் கூட்­ டு­றவு சங்­க­மாக அமைக்­கப்­பட்­டுள் ­ளது.

இக் கூட்­டு­றவு அமைப்­பா­னது தங்கள் பிர­தே­சத்தில் உள்ள பழங்­களை ஏற்­று­மதி செய்­வ­தற்­காக சி. ஆர் எக்ஸ்போட் என­ப்படும் ஏற்­று­ மதி நிறு­வ­னத்­துடன் 49.51 வீத பங்­கு­தாரர் அடிப்­ப­டையில் வடக்கு தெற்கு பழ உற்பத்தியாளர் கம்ப னியை உருவாக்கி நிர்வாகம் செய்து வருகின்றது.

இதன் மூலமாக நிர்ணயிக்கப்பட்ட விலையாக ஏற்றுமதிக்கு தகுதி யான பழங்களை கிலோ ஒன்று ரூபா 30 வீதம் வழங்கி பழ செய்கையாள ர்களை பாது காத்து வருகின்றது என வும் அவர் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/local.php?vid=7613

Edited by nitharsanan

இலங்கையில் ஒரு முதலீட்டைச் செய்வது மிகவும் சுலபமானது. காணிகளை இலகுவாக வாங்கலாம் என்பது கொஞ்சம் இடிக்கின்றது.

நான் ஆகஸ்ட்டில் யாழ்ப்பாணத்தில் நின்றேன். இலங்கை குடியுரிமை இல்லாதவர்களின் காணிகள் வாங்குவது பற்றிய சட்ட அபிப்பிராயம் என்ன என்று ஒரு பிரபல பிரக்கிராசியிடம் கேட்டபோது அவர் சொல்லியது இதுதான்.

அண்மையில் கொண்டு வரப்பட்ட சட்டப்படி பிறநாட்டுக் குடியுரிமை பெற்றவர்கள் காணி வாங்கவேண்டும் என்றால் 100% வரி கட்டவேண்டும். அதாவது ஒரு ஏக்கர் உள்ளூர்க்காரருக்கு 5 இலட்சம் என்றால், வெளி நாட்டவர் 10 லட்சம் கொடுத்துத்தான் வாங்கலாம். 100% வரி கட்டிக் காணி வாங்கி முதலீடு செய்வது இலாபம் தருமா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும். இலங்கைக் குடியுரிமை வைத்திருப்பவர்களின் பெயரில் காணி வாங்குவது வரி கட்டுவதைத் தவிர்க்க உதவும் என்றாலும் அது ஒரு ரிஸ்க்கான பிஸினஸ்!

மேலும் இன்னுமொன்றையும் சொல்லியிருந்தார். இலங்கையில் பிறந்தவர்களுக்கு காணிகள் இருந்தால் அவர்கள் பிறநாட்டுக் குடியுரிமை பெற்றாலும் அவர்களின் காணிகளை அரசாங்கம் பறிக்கமுடியாது. அதற்குச் சட்டத்தில் இடமில்லை. எனவே பிறநாட்டுக் குடியுரிமை எடுத்தவர்கள் காணிகள், வீடுகள் வைத்திருந்தால் அவை பறிபோகும் என்று கவலைப்படவேண்டாம்.

என்ன வேலை கொடுக்கப்போகின்றார்களாம்?

Call centre நடத்தினாலும் 10000 பேருக்கு வேலை கொடுக்கமுடியாது. சிலவேளை ஆடைத் தொழிற்சாலை தொடங்கப்போகின்றார்களோ :unsure:

எதுக்கெல்லாம் இலங்கையை பாவிக்கிரிங்கள்?

நீங்கள் காணி வாங்கினால் அங்க சனங்களுக்கு என்ன வரப்போகுது?

முதலீடு காணி வணங்குவதோட நிக்காது.. விரும்பியோ விரும்பாமலோ இலங்கையில் தான் இதெல்லாம் நடக்கப்போகுது.

அதனால் இலங்கை வெளிநாட்டு முதலீட்டு சபையினூடாக நீங்கள் சிலர் அல்லது பலர் சேர்ந்து முதலிடலாம். விவசாய முதலீட்டுக்கு நல்ல தளர்வுகள் இருக்கு.

இலகுவாகத் தென்னந்தோட்டம் வாங்கலாம், காணி வாங்கி விவசாயம் செய்யலாம் என்பதற்கான பதில் அது. தவிர, என்னுடைய முதலீடு எல்லாம் இலங்கையில் இல்லை!

உற்பத்திகளில் முதலீடு செய்தால் அது சனங்களுக்குத் தொழில் வாய்ப்புக் கொடுக்கும்தானே. எனவே வன்னி, கிழக்கு போன்ற விவசாயம் செய்யக் கூடிய இடங்களில் உற்பத்திகளை ஊக்குவிக்க முதலீடு செய்யலாம். ஆனால் அங்கு முதலிட்டு வருமானம் முழுவதையும் வெளிநாடுகளுக்கு எடுப்பதில் சம்மதமில்லை. அது எமது மக்களின் உழைப்பையே நாம் உறிஞ்சுவது போலாகிவிடும்.

இதைத்தான் வால்மாட்டு விவாதம் என்பது.

இனி  தமிழ் ஈழத்தில் புலம் பெயர் மக்கள் மட்டும் அல்ல முதலிடக்கூடாது; சர்வதேச கம்பனிகளும்தான் என்று விவாதம் திசை திரும்ப போகிறது.  அவர்கள் தமிழ் ஈழத்தை கொள்ளை அள்ளி வெளியே கொண்டுவருவதை தடுக்க செயல் வீரர் கூட்டம் ஒன்று கொடுக்கு கட்டப்போகிறது.

ரத்தம் ஓடாம் புலம் பெயர் நாடுகளில் பியர் மட்டும் ஓடும் தலைகளின் பொருளாத்தார கண்டுபிடிப்புக்கள் ஒன்றன் பின் ஒன்றாக அபாரம். 

<_<

கிருபன்  தங்களுடைய  கருத்துக்களை  வாசித்தேன்

உண்மைதான்

என்னைப்பொறுத்தவரை

தற்பொழுது தாயகத்தில் முதலீடு செய்வோர்

லாபநோக்கன்றி

மக்களின் சுபீட்சத்துக்கு முதலிடம் கொடுப்பவர்களாக இருப்பர்.

எனவே அந்த வகையில் நாலு  பேரை ஊக்கப்படுத்துவோம்

நாமும் 

நேரடியாக அல்லது எமது உறவுகளுடாக சில லட்சங்களை  முதலீடு செய்வோம்

வேண்டுமென்றால்

சில காலத்துக்குப்பின் வேண்டுமென்றால் முதலைத்திருப்பி  எடுக்கும் வகையில்... 

நன்றி.

pv08a.jpg

ஒரு ஏக்கர்... மாதம் ஒரு இலட்சம் இலங்கை ரூபா எடுக்கலாம்... கிறங்க வைக்கும் கீரை சாகுபடி... பட்டையைக் கிளப்பும் 'பட்டாம்பூச்சி' பாசனம்!

தினமும் ஆயிரத்து முன்னூறு கட்டு வரைக்கும் மகசூல் கிடைக்கும்....

நல்ல வேலை செய்யுறீங்கள் நண்றி... !  

இதிலை புலம்பெயந்தவைக்கு உந்த விவசாயத்திலை முதலீடு நேரடியாக இங்கை இருந்து செய்ய நடைமுறை சிக்கல் கனக்க இருக்கு...   அதோடை நேரடியாக கண்காணிக்க வேண்டிய  தேவையும் இருக்கு...  உழைப்பை 100% போட்டால் தான் விவசாயம் கை குடுக்கும் எண்டு நம்புறன்... 

எனது மாமனார் (மனைவியின் அப்பா) ஊரில் ஒரு விவசாயி  என்பதால் இதை சொல்கிறேன்...   கூலிக்கு ஆள் பிடிப்பது கூட கடினமான வீடயம் நாளுக்கு 1000 ரூபாவுக்கு கூட யாரும் அறுவடை செய்ய வரவில்லை எண்றார்... ! 

அறுவடை செய்யும் இயந்திரங்களுக்கு அங்கு தட்டுப்பாடு...  அதற்க்கு கூட காத்திருந்து மழை வரக்கூடாது எண்று நேர்த்தி வைக்கும் நிலையிலை தான்  தாயகம் இருக்கிறது... 

ஆகவே குறை நினைக்காமல்  நேரடியாக 100% கண்காணிக்க தேவை இல்லாத முதலீடுகளை தாங்கோ...   

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் வால்மாட்டு விவாதம் என்பது.

இனி  தமிழ் ஈழத்தில் புலம் பெயர் மக்கள் மட்டும் அல்ல முதலிடக்கூடாது; சர்வதேச கம்பனிகளும்தான் என்று விவாதம் திசை திரும்ப போகிறது.  அவர்கள் தமிழ் ஈழத்தை கொள்ளை அள்ளி வெளியே கொண்டுவருவதை தடுக்க செயல் வீரர் கூட்டம் ஒன்று கொடுக்கு கட்டப்போகிறது.

ரத்தம் ஓடாம் புலம் பெயர் நாடுகளில் பியர் மட்டும் ஓடும் தலைகளின் பொருளாத்தார கண்டுபிடிப்புக்கள் ஒன்றன் பின் ஒன்றாக அபாரம். 

<_<

தமிழரசுக் கட்சிக்கு வால் பிடிக்கும் மல்லை ஐயாவுக்கு வால்மாட்டு விவாதமாகத் தெரிவதில் வியப்பில்லை.

முதலீடு செய்வது/செய்யாமல் விடுவது ஒவ்வொருவரது கொள்கைகளையும் தேவைகளையும் பொறுத்தது. போர் முடிந்துவிட்டது. இனி தலைவரும் வரமாட்டார், பொட்டரும் வரமாட்டார் என்று விளங்கியவர்கள் சிங்களவர்களும், முஸ்லிம்களும் வடக்கு கிழக்கில் முதலீடு செய்து வளங்களையும் உழைப்பையும் சுரண்டுவதைக் இயலுமான அளவு தடுக்க புலம்பெயர் நாடுகளில் இருந்து முதலீடு செய்கின்றார்கள். இவை பொருளாதாரத்தையும், வேலை வாய்ப்பையும் அதிகரித்து மக்கள் முன்னேறினால் நல்லதுதான்.

அதேவேளை அங்கு முதலீடு செய்பவர்கள் இலாபமாக வருவதை மேலும் அங்கு முதலீடு செய்து தாயகப் பொருளாதாரத்தை அதிகரிக்கச் செய்வதை நோக்கமாகக் கொள்ளவேண்டும். அதைவிடுத்து வளங்களையும், உழைப்பையும் சுரண்டிக் கொழுக்கலாம் என்பதை நோக்கமாகக் கொள்ளக்கூடாது என்பதுதான் எனது கருத்து.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.