Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாணசபை உரிய முறையில் பயணிக்கிறதா என்பதனை கண்காணிப்போம்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாணசபை உரிய முறையில் பயணிக்கிறதா என்பதனை கண்காணிப்போம்'

12 அக்டோபர் 2013

'வாக்கு வேட்டைக்காக பிரபாகரனை மாவீரன் என்று கூறிய முதலமைச்சர் இப்போ ஆயுதப் போராடத்தை மலினப்படுத்துகிறார்'

மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாணசபை உரிய முறையில் பயணிக்கிறதா என்பதனை தாம் கண்காணிக்க உள்ளதாக வட மாகாண சபையிக்கு தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயக அணியினர் தெரிவித்துள்ளனர்.

இன்றயதினம் (12.10.13) யாழ்ப்பாணத்தில் நடத்தும் ஊடக மகாநாட்டில் கருத்து வெளியிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும் ஈபீஆர் எல் எவ்பின் செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரத்தில் வாக்கு வேட்டைக்காக விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை மாவீரன் என்று கூறிய முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் இப்போது ஆயுதப் போராட்டத்தை கொச்சைப்படுத்தியும் மலினப்படுத்தியும் அறிக்கைகளை விடுத்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் முன்நாள் ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கங்களை மட்டும் அவர் கொச்சைப்படுத்துகிறார் என பலரும் மௌனித்திருக்கின்றனர். எனினும் அவரது அறிக்கைகளை கூர்ந்து கவனிப்பவர்கள் விடுதலைப்புலிகளின் ஆயுதப் போராட்டத்தையும் அவர் கொச்சைப்படுத்துவது நன்கு புலப்படும் என ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட பலரும் தெரிவித்துள்ளனர்.

கூட்டமைப்பின் இலக்கணங்களுக்கு புறம்பாக எதேட்சாதிகாரமாக செயற்படும் முதலமைச்சர் தனது உறவினர்களையும் வடக்கின் நிலமைகளை துளியளவும் உணரமுடியாத கொழும்பில் வசித்த தனக்கு வெண்டியவர்களுக்குமே இணைச் செயலாளர்கள் பதவியை வழங்க உள்ள நிலையில் மற்றவர்கள் மீது பழியை சுமத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அமைச்சுப் பதவிகளுக்காக அடிபடுகிறோம் என்ற கோதாவில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளையும் அதன் தலைவர்களையும் முதலமைச்சர் மலினப்படுத்தி வருவதாகவும் கூறிய சுரேஸ் தமது உறுப்பினர்கள் முள்ளிவாய்காகலில் தமது சத்தியப்பிரமான நிகழ்வை நடத்துவார்கள் எனவும் தெரிவித்தார்.

இன்றய ஊடக சந்திப்பில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிறேமச்சந்திரன், சிவசக்த்தி ஆனந்தன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97577/language/ta-IN/article.aspx

ஈ.பி, புளொட், ரெலோ சத்திய பிரமாணம் எடுக்காததன் பின்னணியில் சிறிலங்கா உளவுத்துறை.

ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ இயக்கங்களை சேர்ந்த 8 மாகாணசபை உறுப்பினர்களும் யாழ். நகரில் தந்தை செல்வா சிலைக்கு அஞ்சலி செலுத்திய பின் யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் சம்பந்தன் முன்னிலையில் சத்திய பிரமாண நிகழ்வை புறக்கணித்ததற்கு ஸ்ரீலங்கா உளவுப்பிரிவே காரணம் என நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.

இந்த தகவல்கள் சிறிலங்கா புலனாய்வு பிரிவினருடன் தொடர்புகளை பேணிவரும் கொழும்பு தமிழ் பத்திரிகை ஒன்றில் பணியாற்றிய ஒருவர் தெரிவித்தார். புளொட் சித்தார்த்தனிடம் தொடர்பு கொண்ட சிறிலங்கா உளவுத்துறை தமிழீழ கோரிக்கையை முன்வைத்த செல்வநாயகத்தின் சிலைக்கு அஞ்சலி செலுத்தி விட்டு நடத்தப்படும் சத்தியபிரமாண நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. தந்தை செல்வநாயகம் சிலைக்கு முன்னால் நடைபெறும் நிகழ்வுகளில் கண்டிப்பாக கலந்து கொள்ளக் கூடாது என சிறிலங்கா புலனாய்வுப்பிரிவு ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகிய இயக்கங்களுக்கு அறிவுறுத்தியதாக தெரியவருகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பிளவுகளை ஏற்படுத்தி அதனை பலவீனப்படுத்தவதற்காக கங்கணம் கட்டி செயற்பட்டு வரும் சிறிலங்கா புலனாய்வு பிரிவினர் புளொட் சித்தார்த்தன், சிவசக்தி ஆனந்தன் ஊடாக மிக நேர்த்தியாக காரியங்களை கையாண்டு வருவதாக தெரியவருகிறது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் பிளவுகளை ஏற்படுத்தவதற்காக கங்கணம் கட்டி நிற்கும் சிறிலங்கா உளவுத்துறை முன்னாள் இராணுவ ஒட்டுக்குழுக்களுடன் மிக இலகுவாக தொடர்புகளை ஏற்படுத்தி குழப்பங்களை உருவாக்கி வருவதாகவும், மாற்று அணியாக இருக்கும் 9 பேருடன் மேலும் நான்கு பேரை இணைத்துக்கொண்டால் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் வடமாகாணசபையை கொண்டு வரலாம் என்றும் சிறிலங்கா உளவுத்துறை முயற்சிகளை எடுத்து வருகிறது.

சிறிலங்கா உளவுத்துறையின் வழிகாட்டலின் கீழ் தான் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் மற்றும் சிவாஜிலிங்கம் போன்றோர் சத்தியபிரமாண நிகழ்வை புறக்கணித்தனரே தவிர கட்சி முரண்பாடல்ல என நம்பகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியில் சிறிலங்கா உளவுத்துறையுடன் ஆனந்தசங்கரியும் இருப்பதாகவும், விக்னேஸ்வரனை பதவியிலிருந்து இறக்கி விட்டு தமது கட்டுப்பாட்டின் கீழ் வடமாகாணசபை கொண்டு வரப்படும் போது ஆனந்தசங்கரிக்கு முக்கிய பதவி வழங்கப்படும் என அரசாங்கம் உத்தரவாதம் வழங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.

முன்னாள் இராணுவ ஒட்டுக்குழுக்களான ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ போன்ற இயக்கங்களுக்கும் சிறிலங்கா உளவுத்துறைக்கும் உள்ள தொடர்பாடல்கள், மற்றும் அவர்களின் எதிர்கால திட்டங்கள் பற்றிய விரிவான கட்டுரை ஒன்று விரைவில் வெளியாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

சே! இவ்வளவு நேரம் செலவழிச்சு ரைப் பண்ணியும் ஒருத்தனும் கண்டு கொள்ளேல்ல!, (nice try! better luck next time! :rolleyes: )

நம்பிட்டோம்........................

சே! இவ்வளவு நேரம் செலவழிச்சு ரைப் பண்ணியும் ஒருத்தனும் கண்டு கொள்ளேல்ல!, (nice try! better luck next time! :rolleyes: )

மேற்கூறப்பட்ட எனது செய்தி jvp news இனையத்தில் இருந்து எடுக்கப்பட்டது.

ஈ.பி, புளொட், ரெலோ சத்திய பிரமாணம் எடுக்காததன் பின்னணியில் சிறிலங்கா உளவுத்துறை.

சிவாஜிலிங்கம் கொடுத்த பேட்டி... தமிழரசு கட்சியின் தன்னிச்சை நடவடிக்கைக்கு எதிர்ப்பு மட்டுமே.... மக்களின் ஆணைக்கு மாறாக செயற்பட மாட்டார்கள் எண்று..

http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2013/10/369cd8b3_sivajiforweb_131012_sivajiselvamissue_au_bb.mp3

பிபிசி தமிழ்

Edited by தயா

ஒற்றுமையைக் குலைக்க யாருக்கும் உரிமையில்லை - சம்பந்தன்

தமிழ் மக்கள் எமக்கு ஒற்றுமையாக வாக்களித்திருக்கிறார்கள். அந்த ஒற்றுமையைக் குலைப்பதற்கு யாருக்கும் உரி மையில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித் தார். நேற்றைய பதவியேற்பு நிகழ் வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின் பதவியேற் பில் பங்கேற்க வேண்டிய எல் லோரும் பங்குகொள்ள வில்லை. இதைச் சர்ச்சை யாக்க விரும்பவில்லை. இது சர்ச்சையுமில்லை. எனது நண்பர்களைப் பார்த்துக் கூறிக்கொள்ளவிரும் புகின்றேன். நீங்கள் அவசரமாக ஒரு முடிவை எடுத்திருந்தாலும், எங்களுடைய பயணம் ஒரு கடினமான பயணம், அதில் நாங்கள் பலமாக இருக்க வேண்டும். எங்களுடைய பலத்தின் அத்தி பாரம் ஒற்றுமையே, மக்கள் ஒற்றுமையாக வாக்களித்திருக்கின்றார்கள். மக்கள் ஒற்றுமையை குலைப்பதற்கு யாருக்கு உரிமையில்லை. அதைப் பாதுகாக்க வேண்டியது எல்லோரதும் கடமை. நாங்கள் உங்களை வித்தியாசமாக ஒருபோதும் கத மாட்டோம். தாமதமில்லாமல் ஒன்றாகச் சேர்ந்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கரங்களைப் பலப்படுத்துங்கள், விக்னேஸ்வரனின் கரங்களைப் பலப்படுத்துங்கள். தமிழ் மக்களின் கரங்களைப் பலப்படுத்துங்கள் என்றார்.

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜிலிங்கம் என்றும், எமது மரியாதைக்குரியவர்.
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தால்... இறுக்கமான சூழ் நிலையில்.... அமைதியாக, ஆனால்.... ஆணித்தரமாக பல சமூக சேவைகளை செய்தவர்.
அதனை எமது,  பத்திரிக்கை ஊடகம் மறப்பது நல்லதல்ல.

தேர்தல் விஞ்ஞாபன இலக்கை நோக்கி பயணிப்போம்: சுரேஸ் .

வடமாகாண சபை தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறிய இலக்கை நோக்கிப் பயணிப்பதில் மிக உறுதியாகவும், கவனமாகவும் இருப்போம் என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எவ். இன் தலைவருமாகிய சுரேஸ் பிரமேச்சந்திரன் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அடுத்தகட்டப் போராட்டம் சர்வதேசத்தின் முன்னால் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். ரில்ஹோ சிற்றி ஹோட்டலில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் எப்பொழுதும் தமிழ் மக்களின் ஆணைக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதுடன், எமக்கு  தமிழ் மக்களினுடைய விடுதலை மிக முக்கியமானது. அதற்காகவே விடுதலை போராட்டத்தில் எம்மை இணைத்துக் கொண்டமோ தவிர, நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காகவும், மாகாண சபை உறுப்பினர் பதவிக்காகவும் இல்லை.

தமிழ் மக்களுக்கு சுயாட்சியை பெற்றுக் கொடுப்பதற்கான கூட்டு நடவடிக்கையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. 2002 ஆண்டு முதல் கூட்டாக இணைந்து செயற்பட்டு வரும் கூட்டமைப்புக்குள் பல முரண்பாடுகள் காணப்பட்டு வந்தன. இருந்தும் அவ்வாறான முரண்பாடுகளின் போது அங்கத்துவக் கட்சிகள் விட்டுக்கொடுப்புடன் நடந்துகொள்கின்றன.

எங்களுக்கு பதவி தேவை என்று ஒருபோதும் யாரிடமும் கேட்டதோ யோசித்ததோ இல்லை. மாறாக தமிழ் மக்களின் விடுதலைக்காக குரல் கொடுத்தும், யோசித்து கொண்டிருக்கின்றோம் என்றும் அவர் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகச் செயற்படுவதற்கு மக்கள் ஆணை தந்துள்ளார்கள். இந்நிலையில் கூட்டமைப்பாகச் செயற்படுகின்ற போது, ஒரு கட்சி தான் நினைத்தவாறு முடிவுகளை எடுப்பது ஜனநாயகமில்லை.

கூட்டமைப்பிலுள்ள 5 கட்சிகளும் ஒன்று சேர்ந்து அமைச்சரவையை அமைக்க வேண்டும். இருந்தும் அவ்வாறு அது அமையவில்லை. அமைச்சுப் பதவி தராவிட்டாலும் கூட உட்கட்சிக் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என பலமுறை கூறிய போதும், அது 'செவிடன் காதில் ஊதிய சங்காக போய்விட்டது.' என்றார்.

அமைச்சுப் பதவி கொடுப்பதாக இருந்தால் முல்லைத்தீவிற்கு கொடுங்கள் என என்னால் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும், அந்த கோரிக்கையினை தமிழரசுக்கட்சி ஏற்றுக் கொள்ளவில்லை.

அதேசமயம், கூட்டமைப்பின் கூட்டமொன்றில் மாவை சேனாதிராஜா முல்லைத்தீவிற்கு ஒருவரை நியமிக்குமாறு வலியுறுத்தியதாகவும், அதற்கு ஏனையோர் ஒத்துக் கொள்ளவில்லை என்றும் சுமந்திரன் தடுத்தாகவும், மாவை சேனாதிராஜா என்னிடம் தெரிவித்திருந்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஆரம்பித்திலிருந்து அங்கம் வகித்து வரும் நாம் கூட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் கூட்டாக பலமாக இருக்க வேண்டும். 

வடமாகாண சபை 4 அமைச்சுக்களில் தமிழரசு கட்சி இரண்டு அமைச்சுக்கள் தமக்கு வேண்டுமென்று கூறிவந்தது. தற்போதுள்ள பிரச்சினைக்கு மூலகாரணம் இதுவே தவிர ஏனைய கட்சிகள் இல்லை.

அத்துடன், முதலமைச்சரின் இணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்கள் ஊழல் நிறைந்தவர்கள் என்றும், முதலமைச்சரின் உறவினர்களும் ஆவார்கள். இவ்வாறான செயற்பாடுகளைத் தான் கூட்டமைப்பு என்ன செய்கின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஒரு அமைச்சுப் பதவி கிடைத்திருந்தால், அந்த மக்கள் மிக சந்தோஷமடைந்திருப்பார்கள், இருந்தும் அது நடைபெறவில்லை. அதற்கு தவறான காரணங்களை சொல்லிக் கொண்டிருப்பது அநாகரிகமானதுடன், முதலமைச்சரும் தவறான காரணங்களையே கூறுகின்றார்.

நாம் யாருக்கும் விலை போகமாட்டோம் என்பதுடன், விலை போபவர்களைத் தட்டி கேட்பவர்களாவே எப்பொழுதும் இருப்போம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Tamilmirror

அமைச்சுக்காக சத்தியப்பிரமாணத்தை புறக்கணிக்கவில்லை: சிவாஜிலிங்கம்.

தமிழரசுக் கட்சியின் தன்னிச்சையான செயற்பாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சத்தியப்பிரமாண நிகழ்வினைப் புறக்கணித்தோமே தவிர அமைச்சுப் பதவி கிடைக்கவில்லை என்பதற்காக இல்லையென்று கனகலிங்கம் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். ரில்ஹோ சிற்றி ஹோட்டலில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில்  தமிழர் விடுதலை இயக்கத்தின் (ரெலோ) அரசியல் தலைவரும், மாகாண சபை உறுப்பினருமான கனகலிங்கம் சிவாஜிலிங்கம் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஒருமித்த கருத்தைப் பெறாமல் தமிழரசுக் கட்சி தன்னிச்சையாக முடிவெடுத்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தோமே தவிர தமிழரசுக் கட்சி கூறுவது போன்று நாங்கள் தீவிரவாதப் போக்கில் நடக்கவில்லை.

அத்துடன், ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டினை மாற்றி அவர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை, ஒரு நிகழ்ச்சி நிரலில் கீழ் இடம்பெற்று வருகின்றதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுக்கு அமைச்சுப் பதவிகள் கிடைக்கவில்லையென்ற காரணத்தினால் 'எட்டாப்பழம் புளிக்கும்' என்று நாங்கள் இவற்றினை கூறுவதாக சொல்வார்கள். ஆனால், வடமாகாண சபைத் தேர்தல் நிறைவடைந்த காலத்திலிருந்து நாம் இதனை வலியுறுத்தி வருகின்றோம்.

கட்சிகளுக்குள் பிளவு ஏற்படுத்தும் வகையில் வேண்டுமென்றே தமிழரசுக் கட்சி இவ்வாறு செய்திருக்கின்றது.
உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் சுயாட்சியை வென்றெடுப்பதற்கான திட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம். அத்துடன், சர்வதேச விசாரணை தேவை என்பதனையும் வலியுறுத்தி வருவதுடன், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதிலும் நாம் பாடுபடுவோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

யாரெண்டு நினைவில்லை அனால் ஒரு மேற்கத்தேய அறிஞ்சர் சொன்னது ஞாபகத்துக்கு வருது.

"அயோக்கியர்களின் கடைசி அடைக்கலம் தேசபற்று" என்று.

இதுக்கு இலங்கையில்

  • ஹெல உறுமய 
  • ஜே. வி. பி 
  • ராவணய சேன
  • புடுபல சேன
  •  
  • இதோட சுரேஷ் மற்றும் சிவாஜிலிங்கத்தையும் சேர்க்கவேண்டி வரும்போல கிடக்கே? 

உங்கள் கூட்டமைப்பு, உள்வீட்டு பிரச்சனைஎல்லாம் மேடைபோட்டு சொல்லவேண்டியதில்லை. உங்கட கூட்டத்துக்கு போய் அங்கே அடிபடுங்கோ, வேணுமெண்டா சம்பந்தரை கூப்பிட்டு நாலு சாத்து சாத்துங்கோ அனா வெளில சத்தம் வரக்கூடாது.

உங்களுக்கு தரப்பட்ட பொறுப்பு மகத்தானது, அதை தனியொரு அமைப்பைபாக செயற்படுத்த முடியாது பல இழப்புகளை எதிர்நோக்கவேண்டி வரும். ஏற்கனவே பரராசசிங்கம், ரவிராஜ், பத்திரியைளார் நிமலராஜன் என்று பலரை இழந்தாச்சு.

இப்படி இலட்ச்கனக்கு சங்களையும் போராளிகளையும், மையமாக இருந்த இயக்கத்தையும் இழந்தது உங்கட சண்டையை கேட்கிறதுக்கு இல்லை. 

முடிஞ்சால் செயுங்கோ முடியாட்டி வீட்டுக்குப்போய் ஓயவேடுங்கோ, நாங்கள் வேறு ஆட்களைப் பார்ப்போம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பதவி விவகாரத்தில் முரண்டு பிடித்து பகிஷ்கரிக்க எந்த உளவுத்துறையும் வந்து ஐடியா கொடுக்க தேவையில்லை.. இதெல்லாம் ரத்தத்தில் ஊறிய சமாச்சாரம்.

கூட்டமைப்பிற்குள் ஜனநாயகம் பின்பற்றப்படாமை எதிர்காலத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்: சித்தார்த்தன்  

கூட்டு அரசியல் தலைமைத்துவத்திற்கான ஜனநாயகப் பண்புகள் பின்பற்றப்படாமையானது வடமாகாண சபையில் நிர்வாக முடிவுகளை எடுக்கும் பொழுது ஒரு கட்சி மேலாதிக்கத்துவத்தினை நிலைநாட்டக்கூடிய ஏதுநிலை காணப்படுகின்றது. இதனாலேயே நாம் சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என புளட் அமைப்பின் தலைவரும், மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வில் கலந்துகொள்ளாமை தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று நடைபெற்ற வடமாகாணசபை உறுப்பினர்களுக்கான பதவியேற்பு நிகழ்வில் பங்குகொள்வதை எமது அமைப்பு தவிர்த்திருந்தது. இம்முடிவானது, மக்கள் மத்தியிலும், எமது அமைப்பின் ஆதரவாளர்கள் மத்தியிலும் சில கேள்விகளை எழுப்பியிருக்கக் கூடும். எனவே இது குறித்து, சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு எமக்குண்டு.

நாம் ஏன் இத்தகையதொரு முடிவை எடுக்க நேர்ந்தது?

வடமாகாணசபை என்பது, உண்மையில் வடக்கு மக்களுடன் மட்டுமே தொடர்புபட்ட ஒரு விடயமல்ல. இது - ஒட்டுமொத்த தமிழ் மக்களும், இலங்கைத் தீவில் கௌரவத்துடனும், சமத்துவத்துடனும் வாழ்வதற்கான, ஒரு அரசியல் தீர்வை நோக்கி முன்செல்வதற்கான, ஆரம்பப் புள்ளியாகும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு, வடமாகாணசபையை, அவ்வாறானதொரு நோக்கில் கையாள வேண்டும் என்பதுதான், கொழும்பின் மீது அழுத்தங்களை பிரயோகித்துவரும் சர்வதேச சமுகத்தின் எதிர்பார்ப்புமாகும். ஆனால் அத்தகையதொரு நோக்கிலிருந்து கூட்டமைப்பு விலகிச் சென்றுவிடுமோ, என்னும் அச்சம் எமக்குள் எழுந்துள்ளது. எமது மக்கள், வடமாகாணசபைத் தேர்தலின் போது, எமக்களித்த பேராதரவை, வெறும் கட்சி அரசியலுக்குள் முடக்கி, கிடைத்திருக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தையும் இழந்துவிடக் கூடிய ஆபத்தை, நாம் உணர்கிறோம்.

வடமாகாணசபைக்கான அமைச்சர்கள் மற்றும் ஏனைய பொறுப்புகளுக்கான நியமனங்களின் போது, ஒரு கூட்டு அரசியல் தலைமைத்துவதற்கிற்கான ஜனநாயக பண்புகள் பின்பற்றப்படாமையானது. எதிர்காலத்தில் வடமாகாணசபையை, ஒரு அரசியல் தீர்விற்கான தளமாக பயன்படுத்திக் கொள்வதில், பல்தரப்பு உடன்பாட்டை காண முடியாத நிலைமையை தோற்றுவிக்கலாம். தமிழ் தேசியக் கூட்டமைப்பில் ஜந்து கட்சிகள் இருந்தும், வடமாகாணசபை நிர்வாக முடிவுகளில், ஒரு கட்சி மேலாதிக்கத்தை, நிலைநாட்டக் கூடிய ஏது நிலையே காணப்படுகிறது. ஜந்து கட்சிகளின் பொது உடன்பாட்டின் பேரில், வடமாகாணத்திற்கான முதல்வராக ஏற்றுக்கொள்ளப்பட்ட, விக்னேஸ்வரன் அவர்கள், அந்த உடன்பாட்டிற்கு மாறாக, வெறும் கட்சிமனோபாவ அரசியலுக்குள் முடக்கப்படக் கூடிய ஆபத்தும் காணப்படுகிறது.

முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள், மேற்படி நிலைமைகளை கவனத்தில் கொண்டு, அவற்றை ஆரம்பத்திலேயே நிவர்த்தி செய்யாது விட்டால், வடமாகாணசபையை ஒரு இறுதி அரசியல் தீர்வு நோக்கி முன்கொண்டு செல்வதில் நாம் தோல்வியடைய நேரிடலாம். நாம் தோல்வியடைய வேண்டும் என்பதுதான், அரசாங்கத்தின் விருப்பமும் கூட. எனவே வடமாகாணசபையில் ஒரு கட்சி மேலாதிக்கத்தை நிறுவ முற்படுவதானது, அதன் இறுதி அர்த்தத்தில், தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை இழுத்தடிக்கும் நோக்கில், காரணங்களை தேடியலையும், ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் அரசியல் நிகழ்சி நிரலை வலுப்படுத்துவதில் முடிவுறும்.

இறுதியில் நாம், எமது மக்களுக்களித்த வாக்குறுதிகளை, ஆகக் குறைந்தளவு கூட நிவர்த்தி செய்ய முடியாத கையறு நிலைக்கு தள்ளப்படுவோம்

எனவே, இவ்வாறான விடயங்கள் தொடர்பில், எமக்குள்ள அதிருப்தியை வெளிப்படுத்தும் நோக்கிலேயே, எமது அமைப்பு மேற்படி பதவியேற்பு நிகழ்வை பகிஸ்கரித்திருந்தது. உரியதை உரிய நேரத்தில், சுட்டிக் காட்டும், மக்கள் நலன்சார் அரசியல் வேலைத்திட்டமாகவே, நாம் மேற்படி பகிஸ்கரிப்பை கருதுகிறோம். ஏனெனில் தலைவர்கள் வென்று கொண்டிருப்பதல்ல அரசியல், எங்களை நம்பும் மக்களை வெல்ல வைப்பதே அரசியல். அந்த வகையில், இறுதி அரசியல் தீர்வொன்றுதான், நாம் நேசிக்கும், அந்த மக்களை வெற்றிபெறச் செய்வதற்கான ஒரே வழியாகும். அந்த உயரிய நோக்கில் எமது அமைப்பு தொடர்ந்தும் பணியாற்றும்.

இந்த பதவியேற்பு நிகழ்வில் நாம் பங்கேற்காமை எந்த ஒரு சந்தர்ப்பதிலும் வட மாகாண சபையின் வருங்கால செயற்பாடுகளை பாதிக்காது என்பதுடன் வட மாகாண சபையின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு எமது முழுமையான ஆதரவினையும் கொடுப்போம் என்றார்.

virakesari

என் குறிப்பு

நீர் எல்லாம் ஜனநாயகம் பற்றி கதைக்கலாமா..? வவுனியாவில் நீர் செய்த அட்டூழியங்களை  நினைத்து பாரும்.., இறுதி யுத்தம் முடிந்த பின்னர் முகாம்களில் இருந்த மக்களை , பிரித்தெடுத்து இராணுவத்திடம் கொடுத்த கர்ண கொடூரன் நீர் , கோத்தபாயாவின் மிக நெருங்கிய நண்பன் நீர், `கோத்தாவின் யுத்தம் `நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதிகளில் நீயும் ஒருத்தன், அங்கு நீ பேசிய பேச்சு.....? எவ்வளவு பெரிய கொடூரன் நீர் , என்னைப் பொருத்த வரை நீர் தமிழனே இல்லை.........,பிறகு எப்படி தமிழ் கூட்டமைப்பில் இருக்கலாம் ? தற்போதய பிரச்சினைகளுக்கெல்லாம் ட நீரும் ஒரு முக்கிய காரணம்., நீர் கோத்தபாயாவின் கட்டளைகளை நிறைவேற்றவே கூட்டமைப்பினுள் நுழைந்துள்ளீர், அப்படி செய்யாவிடின் நீர் சிவராமின் கொலை வழக்கில் உ ள்ளே செல்ல வேண்டி வரும் என்பதும் எமக்கு தெரியும். தவறு செய்தவர்களை மறக்கலாம், மன்னிக்கலாம், ஆனால் தமிழர் உச்சக்கட்ட கொடுமைகளை அனுபவிக்கும் போது எதிரிக்கு துணை நின்ற கொடூரண்களுக்கு இந்த விதி பொருந்தாது,.

சிவாஜிலிங்கம் என்றும், எமது மரியாதைக்குரியவர்.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தால்... இறுக்கமான சூழ் நிலையில்.... அமைதியாக, ஆனால்.... ஆணித்தரமாக பல சமூக சேவைகளை செய்தவர்.

அதனை எமது,  பத்திரிக்கை ஊடகம் மறப்பது நல்லதல்ல.

வல்வெட்டித்துறை நகரசபை வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டது- சிவாஜியின் சாதனை

Published on January 4, 2013-9:30 am   ·   No Comments

sivajilinkam.jpgதனக்கு தலைவர் பதவி தராவிட்டால் வல்வெட்டித்துறை நகரசபையை இயங்க விட மாட்டேன் என்றும் நகர சபை நிர்வாகத்தை முடக்கப்போவதாக தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜாவுக்கு 28.07.2011 அன்று கடிதம் எழுதிய சிவாஜிலிங்கம் அதனை தற்போது நிறைவேற்றியுள்ளார்.

இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டு அச்சபை கலைக்கப்பட கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினரும் ஈ.பி.டி.பியினரும் இணைந்து வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் சமர்ப்பித்த வரவு செலவு திட்டத்தை தோற்கடித்துள்ளனர்.

தலைவரினால்,வரவு செலவுத் திட்டம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டபொழுது, கூட்டமைப்பின் உறுப்பினரான க.சிவாஜிலிங்கம் தான் அதனை நிராகரிப்பதாகக் கூறி முன்மொழிய அவரது கூற்றை ஏற்ற ஈபிடிபி உறுப்பினரான பொ.தெய்வேந்திரன் அதனை

வழிமொழிய சூ.சே.குலநாயகம் மற்றும் சில உறுப்பினர்களும் அதற்கு ஆதரவளித்தனர். இதனால் வல்வெட்டித்துறை நகரசபையின் வரவு செலவுத்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

சிவாஜிலிங்கத்தின் பதவி ஆசையால் வல்வெட்டித்துறை நகரம் நாறிக்கிடக்கின்றது.

- See more at: http://www.thinakkat...

http://www.yarl.com/forum3/index.php?showtopic=130291&hl=

Edited by Gari

வடமாகாணசபை தேர்தல் முடியும் வரை உங்களுக்கு இது தெரியாதோ....

பேப்பர் தின்றதுகளுக்கேல்லாம் ஏன் அரசியல் .

உங்களை சொல்லுறியள்....

இவர்கள் ( ஈப்ஸ், புளொட்...) செய்யும் சண்டித்தனங்கள் கன காலத்துக்கு இல்ல. கொஞ்ச நாள் கத்திப்போட்டு அடங்குவார்கள்.
 
மாகாணசபை குளப்பினால் அல்லது  மாகாணசபை அமைப்பை விட்டு வெளியேறினால் அட்ரஸ் இல்லாமல் போவார்கள். ( முதல் இருந்ததாக்கும் )  :D
 
விக்கி, சம்பந்தனோட சமாளிச்சுக் கொண்டு போகத்தான் இருக்கு.

முதலமைச்சர் விக்கினேஸ்வரன் யாழ். மஸ்ஜித் முஹம்மதியாவிற்கு விஜயம்.  

வட மாகாண சபையின் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் யாழ்ப்பாணம் மஸ்ஜித் முஹம்மதியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டு விசேட தூஆ பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

இதையடுத்து அங்குள்ள முஸ்லிம் மக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

tna-muslim1.jpg

tna-muslim3.jpg

tna-muslim4.jpg

tna-muslim2.jpg

tna-muslim2.jpg

Virakesari

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.