Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீண்டும் மகிந்த ராஜபக்‌ஷ முன்னிலையில் விக்னேஸ்வரன்!

Featured Replies

CVVigKi.jpgவடக்கு மாகாண முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரன், தமக்கு உரித்தான அமைச்சுக்களின் பொறுப்புக்களுக்காக, இன்று வியாழக்க்ிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.

ஜனாதிபதியின் ஊடக பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

வடமாகாண சபையின் ஏனைய அமைச்சர்கள் கடந்த 11ஆம் திகதி, தமது அமைச்சுகளுக்கான பொறுப்புக்களை முதலமைச்சர் முன்னிலையில் ஏற்றுப்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://tamilworldtoday.com/home

காணி அமைச்சு, நீதி அமைச்சு உள்ளடங்களாகவா? மகிந்தா அந்த சத்தியப்பிரமாணத்தை செய்து வைக்கீறாரா? :rolleyes:

முழுமையான செய்தி வெளிவரும் வரைக்கும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

கிழமைக்கு ஒரு முறை.... மாகாண முதல்வர்கள், ஜனாதிபதியை சந்திக்க வேண்டும் என்று எங்கோ... வாசித்தேன்.
அது.. உறுதியாகுது போலை கிடக்குது.
எதுக்கும்... வாறகிழமை மட்டும் பொறுத்திருப்பம். :D  :lol:

காணி அமைச்சு, நீதி அமைச்சு உள்ளடங்களாகவா? மகிந்தா அந்த சத்தியப்பிரமாணத்தை செய்து வைக்கீறாரா? :rolleyes:

முழுமையான செய்தி வெளிவரும் வரைக்கும் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

முதலமைச்சராக பதிவயெற்றத்துடான் இந்த பதிவிப்பிரமாண விடயங்கள் முடித்துவிட்தான என்று கூடமைப்பின்னர் எண்ணியிருந்த போதும் இன்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து வந்த அறிவுருத்தலின் படி அமைச்சு பதிவிகள் பின்னர் அறிவிக்கப்படதால் அன்றைய பதிவிபீரமாணததில் அவை உள்ளதபடிருக்ாவிலை என்று தெரியவந்தது. அதன் பின்னர் முதலமைச்சர் மீண்டும் அந்த அமைச்சுகளுக்காக பதிவிப்பிரமாணம் செய்ய வேண்டி வந்துலாதாக கொழும்பில் இருந்து தகவல்.

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் முடிந்து ஒரு மாதமாச்சு இன்னும் பதவிப்பிரமாணப் பிரச்சனையே முடியவில்லை.இனப்பிரச்சினை எப்ப தீரும்????????????????????

வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமது அமைச்சுப் பொறுப்புக்களுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள் - ஜனாதிபதி ஊடக பிரிவு)

 

 

01%28886%29.jpg

02%28709%29.jpg
03%28516%29.jpg
04%28354%29.jpg
05%28259%29.jpg
06%28182%29.jpg


தமக்கு பொறுப்பான அமைச்சுக்களுக்காக வட மாகாண முதலமைச்சர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

 

01%28885%29.jpg
வட மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமது அமைச்சுப் பொறுப்புக்களுக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று முற்பகல் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது. வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.விக்னேஸ்வரன், கடந்த வாரம் ஜனாதிபதி முன்னிலையில் முதலமைச்சராகவும் மாகாணசபை உறுப்பினராகவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இந்நிலையிலேயே தமக்கு பொறுப்பான அமைச்சுக்களுக்காக வட மாகாண முதலமைச்சர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

வடமாகாண முதலமைச்சரின் கீழ் வடமாகாண நிதி மற்றும் திட்டமிடல், சட்டம் மற்றும் ஒழுங்கு, காணி மற்றும் வீதி அபிவிருத்தி, மின்சாரம், வீடு மற்றும் நிர்மாணம், நீர்வள, கூட்டுறவு அபிவிருத்தி, சமூகசேவைகள் மற்றும் புனர்வாழ்வு, மகளீர் விவகாரம், கைத்தொழில் மற்றும் வர்த்தக மேம்பாடு, சுற்றுலா, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள், நிர்வாக மற்றும் உணவு வழங்கல்  மற்றும் விநியோகம் ஆகிய அமைச்சுகள் உள்ளடங்கும். 

இதேவேளை, வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் ஏழு பேரும் இன்று மாலை ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தை வைத்து நாட்டை நாறடிக்கும் ஒரு நாட்டாண்மையிடம், :icon_mrgreen:  சட்டத்தை வைத்து நீதி தேடமுயலும் ஒரு சேவகர். :D  நாற்றம் பரவுமா....? நீதி வெல்லுமா....? :unsure:  :rolleyes:  

சட்டத்தில் மாகாண சபை ஆட்சி ஏற்கனவே இருக்கு. தேர்தலை கொண்டுவர உழைத்த வெளிநாடுகளின் எதிபார்ப்புகளின் படி தமிழர் சட்டப்படி மாகாண சபையை அமைத்து அதற்கு அதிகாராம் கிடைக்கிறதா இல்லையா என்பதை முதலில் பார்த்துக்கொள்ள் வேண்டும். அப்படிக்கிடைக்காவிட்டால் அவர்கள் தங்களுடன் அது பற்றி பேச இடம் கொடுப்பார்கள். எனவே விக்கினேஸ்வரன் ஏற்கனவே தெற்கில் ஏற்படுத்தப்பட்ட சம்பிரதாயங்களை மதிப்பதை தவிர்க்க முடியாது. மேலும் அவர் அவற்றை எல்லாம் செய்தவுடன் தமிழ் ஈழமும்  வராது. ஆனால் அவர் அவற்றை எல்லாம் செய்து சட்டத்திற்கு அமைவாக நிறைவேற்றினால் சம்பந்தருடன் சேர்ந்து அடுத்த இராஜதந்திர நடவடிக்கைகளில்  சென்று வெளிநாடுகளுக்கு தனது அனுபவத்தை கூறலாம். அதை இதுவரை சம்பந்தர் கூறிவந்த கருதுகோள் விவாதங்களை விட அனுபவ ரீதியான சரித்திர உண்மையாக வெளிநாடுகள் ஏற்க வேண்டிய நிலையில் இருப்பார்கள். 

 

மாற்றுக் கருத்துக்கள் இது தாம் எதிர்வு கூறியமாதிரியே தேர்தலின் மூலம் கூட்டமைப்பு தேடிக்கொண்டுவிட்ட தோல்வி என்று விபரிப்பார்கள். சில அவசரக்குடுக்கைகள் சி.வி. காலில் விழுகிறார்,துரோகியாகிறார் என்பார்கள்.  ம்கிந்தா தனது தோல்வியை இன்னொருதடவை ஐ.நா.வில் தனது வெற்றியாக பேசுவார். ஆனால் நாம் இந்த சலசலப்புகளை சட்டை செய்யத்தேவை இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

தீர்க்கமான சிந்தனை மல்லை. இப்படியோசிக்க அறிவு மட்டுமில்லை, தூய கொள்கைபற்றும் அவசியம்.

இங்கே பலர், தமிழ்நெட் உட்பட, எங்கே நீங்கள் மேற்சொன்ன விடயங்கள் நடந்தால் தங்கள் வியாபாரத்தில் மண்விழுந்துடுமோ என்று பயப்பிடுகிறனர். அதனால் சீவீ, சம்பந்தன் மீது சேற்றை வாரியிறைக்கிறனர். இதே பிரகிருதிகள் சுரேஸ் கீழ்த்தரமாக பதவிச் சண்டை பிடித்தபோது, சுரேசுக்கும் ஏன் சித்தருக்கும் கூட ஆலவட்டம் பிடித்தனர்.

சீவீ எவ்வளவோ நல்ல விசயங்களை ஏற்கனவே செய்து விட்டார்.

1) ஆனதசங்கரியை போனஸ் மூலம் வராமல் தடுத்தது

2) சித்தர்ருக்கு அமைச்சர் பதவி தர மறுத்தது

3) கோமாளி சிவாஜிலிங்கத்தை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தது

4) புதிய துடிப்பான செயல் திறன் மிக்க இளைஞருக்கு வாய்ப்புக் கொடுத்தது

இது ஒரு புதிய முறை அரசியல், இவர் சாதிக்க இன்னும் எவ்வளவோ இருக்கு, கொஞ்சம் நேரம்தான் கொடுத்துப் பார்ப்போமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.