Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் துயிலும் இல்லங்கள் மீளமைக்கப்பட வேண்டும்என பிரேரித்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பிர்னர் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் துயிலும் இல்லங்கள் மீளமைக்கப்பட வேண்டும்என பிரேரித்த சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பிர்னர் கைது

18 அக்டோபர் 2013


பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வளர்களால் விசாரணைக்கு உட்பட்டுள்ளார்.


வடக்க்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் மீளமைக்கப்பட வேண்டும் என சாவகச்சேரி பிரதேச சபையினால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானம் குறித்து பலத்த சர்ச்சசை ஏற்பட்டு உள்ளதுடன் தீர்மானத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் பயங்கரவாத தடுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை வலையத்துள் கொண்டு வரப்பட்டு உள்ளனர்.

இந்த தீர்மானத்தின் எதிரொலியாக கிளிநொச்சி கரச்சி பிரதேச சபையும் நேற்று (17.10.13) மற்றயதொரு தீர்மானத்தை நிறைவேற்றியிருந்தது. அத்தீர்மானத்தில் வடக்கில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் மீளமைக்கப்பட வேண்டும் எனவும் அதற்கு ஏதுவாக இன்று அவற்றை சிரமதானம் செய்ய வேண்டும் எனவும் அந்த வகையில் கனகராயன்குளம் மாவீரர் துயிலும் இல்லப் பகுதி இன்று சிரமதானம் செய்யப்படும் எனவும் கரச்சிப் பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றி இருந்தது.

இந்த வகையில் சாவகச்சேரி பிரதேச சபையில் இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்த உறுப்பினர் கொழும்பில் இருந்து சென்ற விசேட புலனாய்வுப் பிரிவனரால் கைது செய்யப்பட்டு சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார். இதேவேளை குறித்த பிரதேச சபைத் தலைவரையும் பொலிஸ்நிலையத்திற்கு விசாரணைக்கு சமூகமளிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதற்கிடையில் கரச்சிப் பிரதேச சபையின் தீர்மாணத்திற்கு அமைவாக கனகராணன் குளம் மாவீரர் துயிலும் இல்லம் சிரமதானம் செய்யப்பட இருந்தது.  இதனை அறிந்து கொண்ட பாதுகாப்பு தரப்பு 300க்கு மேற்பட்ட படையினர் மூலம் அப்பிரதேசத்தை சுற்றி வளைத்து எவரும் உட்புக முடியாதவாறு பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

இதனால் சிரமதானப்பணி கைவிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று கரச்சிப் பிரதேச சபை உயுப்பினர்கள் மீதும் பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முடுக்கி விடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/97800/language/ta-IN/article.aspx

மாவீரர்கள் போற்றப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துக் கிடையாது. 

 

ஆனாலும் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டு சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து புனர்வாழ்வு முகாம்கள் என்ற பயங்கரவாத அரசின் சிறைகளில் வாடி உடலாலும் உள்ளத்தாலும் நொந்து போயுள்ள போராளிகள் பலர் இன்று சமூகத்தால் தீண்டத்தகாதவர்களாகப் பார்க்கப்பட்டு தமது எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலையில் தொழில் வாய்ப்பு எதுவுமின்றி வறுமையில் உழலுகின்றனர். 

 

அதுபோல தம்மைத் தாங்க வேண்டிய பிள்ளைகளையும் கணவனையும் போர்க்களங்களில் நாட்டுக்காக பறிகொடுத்துவிட்டு வாழ வழியற்ற நிலையில் ஏராளமான குடும்பங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன அவர்களுக்குக் கைகொடுக்கும் திட்டங்கள் தொழில் வாய்பபுகளை வழங்குவதற்கான திட்டங்கள் உடல் ரீதியாக இயலாதவர்களுக்கு மாதாந்த உதவி வழங்கும் திட்டங்கள் உள்ளிட்ட விடயங்களே இன்றைய முதன்மைப் படுத்தப்பட வேண்டிய விடயங்கள் என எனக்குப் படுகிறது.

 

அதைவிடுத்து மாவீரர் மயானங்களை அமைப்பதே முதல் பணி என்று பிரேரணைகளைக் கொண்டு வருவதும் வீணாகச் சிறைக்குச் செல்வதையும் பார்க்கும் போது  போராளிகளாக இருந்து இறந்தவர்களைப் போற்றுவோம் இருப்பவர்களைப் பற்றி அக்கறைப் பட மாட்டோம் என்ற எண்ணம் தமிழர் பிரதேசத்தில் தோன்றியுள்ளதோ என்று சந்தேகிக்க வைக்கிறது.

 

என்னைப் பொறுத்த வரையில் மாவீரர்களானவர்கள் ஒருவகையில் புண்ணியம் செய்தவர்கள். எந்தக் காரணத்திற்காக தாம் தமது உடல் பொருள் ஆவி அனைத்தையும் ஈந்து போராடினார்களோ அவை அனைத்தும் கனவகளாகிப் போனதைப் பார்க்கமலோ போய் விட்டார்கள். 

 

ஆனால் இருப்பவர்கள் தமது தியாகங்கள் அனைத்தும் வீண்போய் படையினரின் உள உடல் தாக்குதலையும் தாங்கி சமூகத்தின் புறக்கணிப்பையும் பொறுத்து வாழ்வாதாரத்திற்கான போராட்டத்தில் எதிர்காலமே நிச்சயிக்கப்படாமல் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

 

முதலில் கவனிக்கப்பட வேண்டியவர்கள் அவர்களே. 

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரதேச சபை உறுப்பிர்னர் கைதை வாசித்ததும், என்னுள் எழுந்து குமுறிய எண்ணங்கள் என்னை வதைத்தன. மணிவாசகனின் பின்னூட்டம் என் குமுறலுக்கு வடிகால் அமைத்து தந்ததுபோல் உள்ளது. நன்றிகள். 

 

இலங்கையைப் போத்துக்கேயர் ஆண்ட காலத்தில் சைவசமயத்தினர் தங்கள் சமயவழிபாடுகளைப் படைகள் அறியாதவண்ணம் மேற்கொண்டபின்பு, தாங்கள் படையல் உண்ணப்பாவித்த வாழை இலைகளையும் கூரையில் செருகி மறைத்து வைத்துச் சமய நெறிகளைப் பாதுகாத்தனர் என்று படித்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நேரத்தில் இப்படியான தீர்மானங்கள் எடுக்கப்படுவது  விவேகமற்ற வேலை.

  • கருத்துக்கள உறவுகள்
அவர்கள் சரியானதை செய்கிறார்கள் ........... நாம்தான் சாட்டுபோக்கு கண்டு பிடிக்கிறோம்.
சிங்களவன் சும்மா நின்றாலும் அடிப்பான்.
ஆரம்பத்தில் இப்படிதான் அடித்தான்.................... ஆயுத போராட்டம் தொடங்க அதுவே காரணம் ஆகியது. தமிழன் என்ற ஒரு காரணம் அவனுக்கு போதும்.
ஏதும் செய்யும் போது  அடித்துவருவதால்........
ஒன்றும் செய்யாதவனை சில நாட்களாக அடிக்கவில்லை என்பதும் உண்மைதான்.
அதற்காக அவன் அடிக்க மாட்டான் என்று பொருள் கிடையாது.
 
எல்லாவற்றுக்கும் புலிகளை சாடியவர்கள்.............
இன்று மக்கள் கேட்கிறார்கள்? இவர்கள் என்ன சொல்ல போகிறார்கள்?
இப்போ எந்த பயங்கரவாதமும் இல்லை........... அங்கே மக்கள் நிற்கிறார்கள் அவர்களையும் அடிக்கிறார்கள்.
நீங்கள் இப்போ என்ன சொல்கிறீர்கள் என்று.
மேலை நாடுகளை தடி கேட்க வேண்டியவர்கள் நாங்கள்தான்.
 
மாறாக அடிவேண்டியவனை............. அழாதே அதுதான் இப்போது விவேகம் ஆனது என்று கூறிவருகிறோம்.
நேர சென்று மூட்ட முடியாது அதே பலம் கிடைக்கும் வரை.
ஆனால் மக்கள் குரல்களை எழுப்ப வேண்டும்.
  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் சரியானதை செய்கிறார்கள் ........... நாம்தான் சாட்டுபோக்கு கண்டு பிடிக்கிறோம்.

சிங்களவன் சும்மா நின்றாலும் அடிப்பான்.

ஆரம்பத்தில் இப்படிதான் அடித்தான்.................... ஆயுத போராட்டம் தொடங்க அதுவே காரணம் ஆகியது. தமிழன் என்ற ஒரு காரணம் அவனுக்கு போதும்.

ஏதும் செய்யும் போது அடித்துவருவதால்........

ஒன்றும் செய்யாதவனை சில நாட்களாக அடிக்கவில்லை என்பதும் உண்மைதான்.

அதற்காக அவன் அடிக்க மாட்டான் என்று பொருள் கிடையாது.

எல்லாவற்றுக்கும் புலிகளை சாடியவர்கள்.............

இன்று மக்கள் கேட்கிறார்கள்? இவர்கள் என்ன சொல்ல போகிறார்கள்?

இப்போ எந்த பயங்கரவாதமும் இல்லை........... அங்கே மக்கள் நிற்கிறார்கள் அவர்களையும் அடிக்கிறார்கள்.

நீங்கள் இப்போ என்ன சொல்கிறீர்கள் என்று.

மேலை நாடுகளை தடி கேட்க வேண்டியவர்கள் நாங்கள்தான்.

மாறாக அடிவேண்டியவனை............. அழாதே அதுதான் இப்போது விவேகம் ஆனது என்று கூறிவருகிறோம்.

நேர சென்று மூட்ட முடியாது அதே பலம் கிடைக்கும் வரை.

ஆனால் மக்கள் குரல்களை எழுப்ப வேண்டும்.

Clicked: Like

புலம்பெயர்ந்தவர்கள் பேசக்கூடாது.. நிலத்தில் உள்ளவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று கோசான் வகையறாக்கள் வழக்கமாக எழுதுவார்கள்..! ஆனால் அந்த நிலத்து மக்களின் உண்மைப் பிரதிநிதியை கைது செய்தால், அந்தப் பிரதிநிதிக்கு அட்வைஸ் மட்டும்தான் இங்கு கிடைக்கிறது.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

Clicked: Like

புலம்பெயர்ந்தவர்கள் பேசக்கூடாது.. நிலத்தில் உள்ளவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்று கோசான் வகையறாக்கள் வழக்கமாக எழுதுவார்கள்..! ஆனால் அந்த நிலத்து மக்களின் உண்மைப் பிரதிநிதியை கைது செய்தால், அந்தப் பிரதிநிதிக்கு அட்வைஸ் மட்டும்தான் இங்கு கிடைக்கிறது.. :rolleyes:

 

எழுதும் கை எழுதிக்கொண்டே இருக்கிறது. எழுதாத கை ஏதாவது செய்யும் என்ற நம்பிக்கையுடன் பார்த்தால் அதுவும் பேனாவுக்கு மை நிரப்புவதுபோல் தெரிகிறது. :D 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.