Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தம்புள்ளை காளி கோயில் இடித்து தரைமட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

451(2).jpg

தம்புள்ளை மகா பத்திரகாளியம்மன் ஆலயம் இடிக்கப்பட்டு முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவே இந்த ஆலயம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பல வருடங்களாக தங்களது வழிபாட்டு தலமாக விளங்கிய ஆலயம் தற்போது முற்றாக அகற்றப்பட்டுள்ளமை தொடர்பாக அங்குள்ள தமிழர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அந்தப் பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையொன்றை மையப்படுத்தி நாடு நகர அபிவிருத்தி வாரியத்தினால் புனித பூமியாக அடையாளப்படுத்தப்பட்ட எல்லைக்குள் இந்த ஆலயம் அமைந்திருந்தது.

அந்தப் பகுதிக்குள் வாழ்ந்த தமிழ் குடும்பங்கள் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட போதிலும் ஆலயத்தில் தொடர்ந்தும் பூசை வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

ஆலயத்தை அந்த இடத்திலிருந்து அகற்றுமாறு பௌத்த விகாரையின் பிரதம பிக்குவினால் ஆலய பரிபாலகர்களுக்கு அழுத்தங்களும் நெருக்குதல்களும் கொடுக்கப்பட்டுவந்தன.

ஆலயம் முற்றாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய ஆலய பரிபாலகரான கே.லட்சுமி, ஆலயத்திலுள்ள உடமைகளை அகற்றுவதற்கு நாளை புதன்கிழமை வரை கால அவகாசம் தான் கேட்டிருந்ததாகக் கூறுகின்றார்.

நேற்று திங்கட்கிழமை குறித்த விகாரையின் பிரதம பிக்குவினால் இது தொடர்பாக தமக்கு அறிவிக்கப்பட்ட போது அதனை அகற்றுவதற்கு முன்னதாக சமய கிரியைகளைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை விளக்கி இந்தக் கால அவகாசத்தை தான் கேட்டிருந்தாகவும் அவர் தெரிவித்தார் என்று பிபிசி தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே அம்மன் விக்கிரகம் அகற்றப்பட்டு சேதமாக்கப்பட்டதையடுத்து, புதிய விக்கிரகமொன்று நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜனினால் வழங்கப்பட்டிருந்தது. அதனைக் கூட வைத்து வழிபாடு செய்ய முடியாத நிலை தற்போது தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த கோவிலுக்கு அண்மையில் ஒரு பள்ளிவாசல் அமைக்க காணி தருவதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்தார் இப்படிக் கூறியபின்னர் இது நடந்துள்ளதென ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யோகராஜன் கூறினார்.

கோவில் அமைக்க ஒரு காணியை ஒதுக்கி கொடுக்கும்படி பிரதேச செயலாளருக்கு பணிக்குமளவுக்கு ஜனாதிபதி சென்றார் என அவர் கூறினார்.

தம்புள்ளை நகரிலிருந்து 10 கிலோ மீற்றர் தூரத்தில் பிரதேச செயலாளர் காணி ஒதுக்கினார் எனவும் புதிய காணி கிடைக்கும்வரை கோவிலுக்கு அண்மையில் வாழ்ந்தோருக்கு தற்காலிக வீடுகளை பெற்றுக்கொள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு இலட்சம் ரூபா கொடுக்கப்பட்டதெனவும் தெரிய வந்துள்ளது.

ஆயினும் கோவில் நிர்வாகம் புதிய இடத்துக்கு போக விரும்பவில்லை என யோகராஜன் கூறினார் இந்த கோவில் இடிக்கப்பட்டதையிட்டு இந்து முன்னனி எனும் அமைப்பு தனது மனவருத்தத்தை வெளியிட்டது. இந்த நடவடிக்கையால் தாம் பெரிதும் கலக்கமுற்று இருப்பதாக இந்து முன்னனியின் பேச்சாளர் கலாநிதி ஏ.என்.குமரகுருபரன் கூறினார்.

இந்த பகுதியில் வாழும் சகல இனஇ மத பிரிவினருக்கும் இடையில் நல்லெண்னம் நிலைக்கும் வகையில் உரு சுமுகமான தீர்வை காண வேண்டுமென அவர் அதிகாரம் வாய்ந்தோரிடம் கேட்டுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

புலி, இல்லாதது... எல்லோருக்கும் வசதியாய் போய் விட்டது.
இதனால்... ம‌ருத‌னார்ம‌ட‌த்தில்... வெறிக்குட்டிக‌ளின் அட்ட‌காச‌ம் உட்ப‌ட‌....
தமிழ்ப் பகுதிகளில்... ஏற்படும் விளைவுகளை, ஒட்டுக்குழுக்கள் சிந்திக்கத் தவறி விட்டது.
இனியாவ‌து... ஒட்டுக் குழு, திருந்துமா?
 

புலி, இல்லாதது... எல்லோருக்கும் வசதியாய் போய் விட்டது.

இதனால்... ம‌ருத‌னார்ம‌ட‌த்தில்... வெறிக்குட்டிக‌ளின் அட்ட‌காச‌ம் உட்ப‌ட‌....

தமிழ்ப் பகுதிகளில்... ஏற்படும் விளைவுகளை, ஒட்டுக்குழுக்கள் சிந்திக்கத் தவறி விட்டது.

இனியாவ‌து... ஒட்டுக் குழு, திருந்துமா?

 

 

 

நீங்கள் என்ன பாஸ் இப்படிச் சொல்லீட்டீங்க... இதுக்கும் புலிகள் தான் காரணம் என்றும், முக்கியமாக தலைவர் பிரபாகரன் மட்டுமே தான் இதற்கு காரணம் என்றும் கட்டுரையில் இருந்து கவிதை வரைக்கும் வடிக்க ஆட்கள் தொடங்கிட்டினம் என்று கேள்வி,

 

தாம் கட்டி இருக்கும் கோவணம் அறுந்து விழுவதற்கும் புலிதான் காரணமாம்.

451(2).jpg

 

இந்த நிலைமையிலும் மனத்தில் நமபிக்கை.

 

அம்மாளாச்சியை சென்று வணங்கியிருக்கிறார்கள். 

 

அவ இந்த ஏழைகளைக் கைவிட்டு விட்டு பட்டு சேலை கட்டிய பெண்கள் வணங்கும் கோவில்கள் பக்கமாக போயிருப்பா! 

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒன்றும் பெரிய விடயமல்ல. நல்லூரயாவ புத்ததம்ம மகாபோதிய  என்று மாற்றினால் கூட ஆச்சரியப்பட முடியாது. இது சிங்கள அராயகத்தின் காலம்.

அம்மாளாச்சி கண்ணை குத்துவா பாருங்கோ... !

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாளாச்சிக்கு காளி என்று அழைப்பது இப்ப விருப்பம் இல்லையாம்....துர்க்கை,சரஸ் என்று அழைப்பதுதான் விருப்பமாம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

cartoon-31-10-2013.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கும் எங்கள் சாமிக்கும் வாழ ஒரு இடமில்லை - தம்புள்ளை மக்கள் கண்ணீர் -

31 அக்டோபர் 2013


குளோபல் தமிழ் செய்தியாளர்


_dambullah_temple_512x288_bbc_nocredit_C



தம்புள்ளை பௌத்த சிங்கள புனித நகரமாக்குதல் திட்டம் காரணமாக ஐம்பது வருடங்களுக்கு மேலாக வசித்த தமிழ் குடும்பங்கள் எங்கு போவதென்று தெரியாத நிற்கதி நிலையில் உள்ளனர். குறித்த குடும்பங்கள் வெளியேற வேண்டும் என்று பல்வேறு தரப்புக்களால் தொடர்ந்தும் எச்சரிக்கப்படுகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக அண்மையில் அந்த மக்கள் வணங்கி வந்த 50 வருடங்கள் பழமையான பத்திரகாளியம்மன் ஆலயம் தரைமட்டமாக அழிக்கப்பட்டது. கடந்த சில மாதங்களின் முன்னர் இனந்தெரியாத நபர்கள் என்ற போர்வையில் இந்த ஆலயத்தின் சிலை சேதமாக்கப்பட்டு  வீசப்பட்டிருந்தது.

இந்நிலையில் இவ்வாலயத்தினை இரவோடு இரவாக தரைமட்டம் ஆக்கியதைத் தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆலயம் உடைக்கப்பட்டிருந்தததைப் பார்த்த மக்கள் தலைகளில் கைகளை வைத்து ஓ... என அழுததினால் அப்பகுதியே அதிர்ந்தது.
 
நகர சபை இவ்வாலயத்தையும் இப்பகுதி மக்களையும் வெளியேறுமாறு அறிவித்த நிலையில் மக்கள் மாற்றிடங்களுக்கு செல்ல முதலில் சம்மதிக்காதபோதும் பின்னர் சம்மதித்தனர். ஆனாலும் மாற்றிடங்கள் மறுக்கப்பட்ட நிலையில் திருட்டுத்தனமாக இந்த மக்கள் வணங்கி வந்தத பழமை மிக்க ஆலயம் அழிக்கப்பட்டிருக்கிறது.

எங்களுக்கும் எங்கள் சாமிக்கும் வசிக்க ஒரு இடமில்லை என்று இந்த மக்கள் கண்ணீர் மல்கத் தெரிவிக்கின்றனர். ஆலயம் அழிக்கப்பட்டதன் காரணமாக இப்பகுதியில் உள்ள தமிழ் மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 

தமிழர்கள் என்பதினால் வடக்கில் மாத்திரமல் நாங்கள் தெற்கிலும் வாழ முடியாத நிலமையே காணப்படுகிறது என்று இப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். சிங்கள பௌத்த புனித நராக்கல் திட்டத்தினால் தாம் பெரும் ஆபத்தின் மத்தியில் வாழ்வை உணர்வாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். 

எவரும் எங்கும் சென்று குடியேறலாம் என்று அரசாங்கம் பேசிக்கொண்டே எமது இருப்பிடத்தை அழித்து இங்கிருந்து துரத்தி இதை சிங்கள பௌத்த புனித நகரம் ஆக்குவது ஏன் என்று மக்கள் கேள்வி எழுப்பினர்.

தற்பொழுது அழிக்கப்பட்ட பத்திரகாளியம்மன் ஆலயத்தின் சிலை அப்பகுதியில் உள்ள மக்களின் வீடு ஒன்றிலேயே வைக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டிற்குச் சென்று தமது சாமியை வழங்கி வருகிறோம் என்று தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் தமக்கும் தமது சாமிக்கும் வசிக்க இடம் ஒன்று வேண்டும் என்கின்றனர்.

கடந்த ஒரு சில தினங்களின் முன்பாகவே அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவும் ஜே.பி.வியின் செயலாளர் ரில்வின் சில்வாவும் அரசாங்கம் பலவந்தமாக குடியேற்ற முடியாதே தவிர நாட்டில் எங்கும் எவரும் சென்று குடியேறலாம் - அது அவர்களின் உரிமை என்று தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடதத்தக்கது.
 
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98349/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

ஆலய உடைப்புக்கெதிராக முஸ்லிம்களும் குரல் கொடுக்க வேண்டும்!
31 அக்டோபர் 2013



 
கடந்த ஞாயிறு நடுநிசியில் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டு விட்டது யாழ்ப்பாணம்-கண்டி A9  வீதியில் அமைந்திருந்த மகா பத்ரகாளி அம்மன் ஆலயம்.  பெரும் இயந்திரங்களைக் கொண்டு இந்த ஆலயம் நிர்மூலம் செய்யப்பட்டிருக்கிறது.


ஓர் இனத்தின் மத தாற்பரியத்தின் மீது புல்டோசர்கள் பேயாட்டம் ஆடியிருக்கின்றன. ஒரு சமூகத்தின் இரத்த நாள-நாடிகளுடன் இரண்டறக் கலந்த நம்பிக்கைகளின் மீது அராஜகம் மீண்டும் தனது கோரத்தைப் பதிவு செய்திருக்கிறது.
 
ஒவ்வொருவருக்கும் அவரவர் மதங்களும் வழிபாட்டுத் தளங்களும் . சமயம் சார்ந்த நம்பிக்கைகளும் புனிதமானவை; உயர்ந்தவை. அவற்றை மதித்து வாழ்வது மனித பண்பாடாகும். அதுமட்டுமன்றி,  மாற்று மதங்களை இழித்துரைப்பதே குற்றமென்றிருக்கையில் அவற்றை அழித்தொழிப்பதென்பது அநியாயமும் அநாகரீகமும் ஆகும். ஆனால், இவ்வாறான அக்கிரமங்கள் அண்மைக் காலங்களாக இலங்கையில் அதிகரித்தே வருகின்றன.
 
 
தொடர்ச்சியாக நடைபெறுகின்ற இஸ்லாமிய மக்களின் பள்ளிவாசல்களின் மீதான தாக்குதல்களோடு சம்பந்தப்பட்டோர் திருப்தியடைந்து விடவில்லை. தேவாலயங்கள், கோவில்கள் மீதான தாக்குதல்களையும் அவர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது தம்புள்ள அம்மன் ஆலயம் முற்றாக அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கட்டுரை எழுதி முடிப்பதற்குள் இன்னொரு கோயிலோ, பள்ளிவாசலோ, தேவாலயமோ     தாக்குதலுக்குள்ளாகியிருக்காது என்பதற்கு எவ்வித  உத்தரவாதங்களும் இல்லை.
 
தம்புள்ள ஆலயம் நிர்மூலமாக்கப்பட்ட விடயம் அடுத்த ஒரு விடயத்தைச் சொல்லாமல் சொல்கிறது. அதனைப் பகிரங்கமாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக முஸ்லிம் மக்களுக்கு அது நன்கு தெரியும்.
 
அம்மன் ஆலய அழிப்புக்கெதிராக அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்புக் குரல் எழுப்ப வேண்டும். பள்ளிவாசல்கள் உடைப்புகளுக்கெதிராக தமிழ்த் தலைவர்களும் முற்போக்கு அரசியல்வாதிகளும் மற்றும் நேர்மையும் மனிதமும் நிறைந்த தமிழ்-சிங்கள மக்களும் கண்டனக் குரலெழுப்பியதைப் போல, இந்த விடயத்திலும் முஸ்லிம் அரசியற் தலைமைகளும் புத்திஜீவிகளும் பொதுமக்களும் தமது எதிர்ப்பையும் கண்டனத்தையும் உரத்த தொனியில் பதிவு செய்ய வேண்டும்.
 
அரசியல் ரீதியாகத் தமக்குள்ளிருக்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பால் பொது விடயங்களில் இணைந்து செயற்படுவது இன்றைய சூழலில் மிக இன்றியமையாதது. ஐக்கியப்பட்ட மக்களின் எதிர்ப்பலைகளானது உடனடியாக இல்லாவிட்டாலும் காலவோட்டத்தில் அதிசயிக்கத்தக்க நன்மாற்றங்களை நிச்சயம் ஏற்படுத்தும்.             



 
 
http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98357/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.