Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
25 வருடங்களாக  ராஜநாகத்தை’ (King Cobra) ஆராய்ச்சி செய்யும் வெளிநாட்டவர் ஒருவர், இந்தியாவின் மேற்குப்பகுதியில், கர்நாடக காடுகளில் தன் ஆராய்ச்சியை தொடர வருகிறார். இந்திய மாணவர்களும் இந்த ஆராய்ச்சியில் உடன் பணி செய்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சியின் முதற்கட்ட வேலையாக, ஆண், பெண் என இரண்டு ராஜ நாகங்களை, காடுகளில் மிகுந்த சிரமங்கங்களுக்கிடையில் தேடி பிடிக்கின்றனர். பிடிக்கப்பட்ட நாகங்கள் இரண்டிற்கும் மயக்கம் செலுத்தப்பட்டு, அவற்றின் உடலில் பாம்புகள் இருக்குமிடத்தை காட்டக்கூடிய இண்டிக்கேட்டர் பொறுத்தப்படுகிறது. 

மயக்கம் தெளிந்து, உடல்நிலை சீரான இரண்டு ராஜநாகங்களும்,  பிடிக்கப்பட்ட இடத்தை விடுத்து, வெகுதூரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, காட்டில் வெவ்வேறு இடங்களில் விடப்படுகின்றன. இரண்டையும்
king-cobra_592_600x450.jpg

ஆராய்ச்சியாளர்கள், இண்டிகேட்டரின் உதவியோடு பின் தொடர்கின்றனர். இரண்டு ராஜநாகங்களும் தன் இறையைத்தேடுவதோடு, தன் துணையையும் தேடுகின்றன.  ஒரு கட்டத்தில் காதலன் காதலி இரண்டும் சந்திக்கின்றன. இரண்டும் கூடி சந்தோஷமாக இருக்கின்றன. பெண் ராஜநாகம் கருவுகிறது.  
இந்நிலையில், வேறொரு இடத்திலிருந்து வரும், ஒரு ஆண் ராஜநாகம்(2) இவ்விடத்தில் குடியேற முனைக்கிறது. அப்படி புது இடத்தில் குடியேற நினைக்கும் ராஜநாகம்(2), அங்கு ஏற்கெனவே இருக்கும் ஆண் ராஜநாகத்தோடு(1) சண்டையிட்டு, அதனை வெற்றிப்பெற்றால் தான் குடியேற முடியும். அதனால், இந்த புதிய ஆண் ராஜநாகமும்(2), அங்கு முன்னமே இருக்கும் ஆண் ராஜநாகமும்(1) –(இண்டிகேட்டர் பொறுத்தப்பட்ட) சண்டையிட தொடங்குகின்றன. 2-3 மணி நேரம் நடைபெறும் இந்த பெரிய ஆக்ரோஷமான யுத்தத்தின் முடிவில், புதிய ராஜநாகம்(2) வெற்றிப்பெற்று அந்த இடத்தில் வெற்றிக்களிப்போடு குடியேறுகிறது.


இந்த புதிய ராஜநாகம்(2), அங்கிருக்கும் பெண் ராஜ நாகத்தை சந்திக்கிறது. அதன் மேல் மையல் கொண்டு தன் இச்சையை வெளிப்படுத்துகிறது. ஆனால்,  அதற்கு அடிபணிய மறுக்கும் பெண் ராஜநாகம், அதனை விட்டு விலகிசெல்கிறது. ஆனால் விடாமல் துரத்தும் புதிய ஆண் ராஜநாகம், கெஞ்சியும் கொஞ்சியும் மிகவும் நாகரீகமான முறையில் தன் ஆசைக்கு 
images.jpg
இணங்க வைக்க எல்லாவிதமான முயற்சியும் செய்கிறது.

பெண் ராஜநாகமோ, தன் காதலனின் கருமுட்டைகளை சுமந்துக் கொண்டிருப்பதால் புதிய ஆண் ராஜநாகத்தை அறவே வெறுத்து ஒதுக்குகிறது. ஒரு கட்டத்திற்கு மேல், பொறுமை இழக்கும் ஆண் ராஜநாகம், கோபம் கொண்டு வெறித்தனமாக அந்த பெண் ராஜநாகத்தை மிகச்சரியாக அதன் கழுத்தில் கடித்து, கொஞ்சம் கொஞ்சமாக துடிதுடிக்க சாகடிக்கிறது. சிறிது நேரப்போராட்டத்திற்கு பிறகு பெண் ராஜநாகம் இறந்தேப்போகிறது. ஆராய்ச்சியாளர்கள் இந்த பெண் ராஜநாகத்தின் வயிற்றை அறுத்துப்பார்க்கையில் அதனுள் 17 முட்டைகள் இருந்தன. இந்த இறந்த நாகத்தை நெருப்பு மூட்டி  எரித்துவிடுகின்றனர்.

பின்னர், அதே காட்டில் புதிய ராஜநாகத்தின் மூலமாக கருவுற்ற வேறொரு பெண் ராஜநாகம் 21 முட்டைகளை இட்டு, அதை அடைக்காக்க காய்ந்த மூங்கில் தழைகளையும், இலைகளையும் ஒரு அடி உயரத்திற்கு குவித்து, முட்டைகளுக்கு தேவையான சீதோஷனநிலையை உருவாக்கி அவற்றிற்கு பாதுக்காப்பாக அங்கேயே இருக்கிறது.

King_Cobra1.jpgஇப்படியாக முடிவுபெறும் இந்த ராஜநாகத்தின் ஆராய்ச்சி கதையை "நேட் ஜியோ" வில் பார்த்த போது, காதலன் பாம்பு காதலியை தேடும் போதும், அவற்றின் தவிப்புகளும், தேடிக் கிடைத்தப்பின் அவற்றின் காதல் லீலைகளும், இரு ஆண் ராஜநாகங்களுக்கு இடையே நடக்கும் சில மணி நேர நிஜமான யுத்தமும், பின்பு பெண் ராஜநாகத்தை கொல்லும் போது ஆண் ராஜநாகத்தின் வெறித்தனத்தையும் பார்க்கையில் ஒரு வித பதட்டமும் ஆச்சரியமும் ஏற்படாமல் இல்லை.

சிறந்த திரைக்கதையில் அமைந்த ஒரு தமிழ் புராணக்கதை பார்த்தது போன்றே இருந்தது.  இது இப்பவும் நடக்கும் உண்மை சம்பவம் என்பதை அறிவுஏற்றுக்கொள்ள நேரம் பிடித்தது. 

ஆண்’ என்பவன், இந்த உலகத்தில் எந்த ஜீவராசி வடிவில் பிறந்திருந்தாலும் அதீத வீரத்தோடும், பெண்ணை அடக்கி ஆள்பவனாகவும், அடிமைப்படுத்துபவனாகவும், அதே சமயம் அவனே பெண்ணிற்கு சிறந்த பாதுகாப்பாளனாகவும் இருக்கிறான். இதை இயற்கையின் படைப்பில் ஒன்றாகவே பார்க்கவேண்டுமே ஒழிய.... பெண்ணீய பிதற்றல்களோடு பார்த்து..... .....அடடே  சப்ஜெக்ட் மாறுதே....?!!... ராஜநாகத்திற்கு வருவோம். 

ராஜநாகங்களைப் பற்றிய சில தகவல்கள் : 

ராஜநாகங்கள், 300 அடி தொலைவுக்குள் தன் இறையை பார்க்கும் வலிமைப்பெற்றது.  இவற்றிற்கு மிகவும் பிடித்த உணவு மற்ற பாம்பினங்களே. 

இவை, நேரடியாக நரம்பு மண்டலத்தை தாக்கி, மயக்கத்தை உண்டாக்கி, தூக்க நிலைக்கு செல்லவைத்து பிறகு இறக்கவைக்கும் விஷத்தன்மை கொண்டவை. 

ராஜநாகங்கள், மிக அறிதாகவே மனிதர்களை தாக்குக்கிறது. அதேசமயம், யானையை ஒரே கடியில் சாய்க்குமளவுக்கு தன்னுள் கடுமையான விஷத்தைப்பெற்றவை. அவ்விஷமானது ஒரே நேரத்தில் 20 மனிதர்களை சாகடிக்க வல்லவை. 

தன் உடலின் நீளத்தில், மூன்றில் ஒரு பங்கு உடலை தூக்கி நிற்ககூடியது. 

மேற்கிந்தியாவில் அதிகமாக ராஜநாகங்கள் காணப்படுகின்றன. 

காய்ந்த இலைகள், காய்ந்த மூங்கில் தழைகளைக்கொண்டு தன் முட்டைகளை மூடி அதற்கு தேவையான சீதோஷன நிலையை உருவாக்குகின்றது.  இதனை ஒரு மலைப்போல ஒரு அடி உயரத்திற்கு முட்டைகளின் மேல் கூட்டிவைத்து தன் முட்டைகளை காக்கிறது. 

அதிகபட்சமாக 24 முட்டைவரை இடக்கூடியவை, ஆனால் எத்தனை முட்டைகள் இட்டாலும், அவற்றில் பிழைத்து வருவது என்னவோ 1-2 ராஜநாகங்கள் மட்டுமே.

 

நன்றி : நேட் ஜியோ & கூகுள்.
  • கருத்துக்கள உறவுகள்

பாப்பின் இரை பாம்பாக இருப்பதை நம்ப முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

உயிருள்ள  எல்லாவற்றிற்கும் உணர்வு ஒன்றுதான் போலுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி பெருமாள்.. இரண்டாம் ஆண் ராஜநாகம் செய்த வேலையைத்தான் குரங்கு, சிங்கம், புலி, மன்னர்கள் எல்லாம் செய்வது.. :D இப்ப மனிதர்கள் பொலிசுக்குப் பயந்து செய்வதில்லை.. :unsure::rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் பதிவிற்க்கும் மெசொபொத்தேமியா சுமேரியர் , விசுகு, sOliyAn,இசைக்கலைஞன்  அனைவருக்கும் நன்றி. பாம்புகள் ஆச்சரியபடுத்தும் வகையில் சில நடவடிக்கைகள் கொண்டிருப்பவை சில பதிவர்களின் பதிவுகளை இனைக்கமுடியாத அளவுக்கு ஒரு குடம் தண்னீரில் ஒரு துளி விசம் போல் சில புனைவுகளையும் எழுதிய படியால் இங்கு அவற்றை இனைக்க முடியவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கட்டுரைகளைத் தேடி இணைக்கும் பெருமாளுக்கு நன்றிகள்!

 

இதை எதற்காக 'ராஜநாகம்' என அழைக்கிறார்கள்?

 

நிறம் வெள்ளை என்பதற்காகவா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கட்டுரைகளைத் தேடி இணைக்கும் பெருமாளுக்கு நன்றிகள்!

 

இதை எதற்காக 'ராஜநாகம்' என அழைக்கிறார்கள்?

 

நிறம் வெள்ளை என்பதற்காகவா?

 இராச நாகம் - King Cobra

i_icon_minicat.png by kirupairajah on Wed Jul 29, 2009 2:26 pm

 
இராச நாகம் என்பது தென்கிழக்கு ஆசிய பகுதிகளில் வசிக்கும் ஒரு பாம்பு இனம் ஆகும். இதன் அறிவியற்பெயர் Ophiophagus hannah என்பதாகும். நச்சுப்பாம்புகளில் இதுவே உலகில் மிக நீளமானது. பொதுவாக அடர்ந்த காட்டுப்பகுதிகளிலேயே வாழும் இந்த வகை பாம்புகள், மற்ற பாம்புகளையே பெரும்பாலும் உணவாகக் கொள்கின்றன. இதன் நஞ்சின் கடுமை ஒரே கடியிலேயே ஒரு மனிதனைக் கொல்லவல்லது. இதன் கடியால் இறப்பு நேரிடும் வீதம் 75% வரை இருக்கும்

பொதுவாக இந்த பாம்புகள் 12 முதல் 13 அடி நீளம் வரை வளருகின்றன. 6 கிலோ வரை எடை கொண்டதாக இருக்கின்றன. இவற்றில் தென் தாய்லாந்து நாட்டில் உள்ள நக்கோன்-சி-தம்மாரத் மலையில் பிடிபட்ட ஒரு பாம்பு 18.5 அடி நீளம் இருந்தது. இதற்கு மேலாக லண்டன் உயிரினக்காட்சி சாலையில் இருந்த ஒரு பாம்பு 18.8 அடி நீளம் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. இவை பெரும்பாலும் மஞ்சள் கலந்த பளுப்பு அல்லது பாசியின் பச்சை நிறத்திலான உடலில் மஞ்சள் கலந்த வெள்ளை நிறத்தினால பட்டைகளுடன காணப்படுகின்றன[4]. இப்பாம்புகள் மிகப்பெரிய கண்களுடன் வட்டவடிவத்திலன கட்பார்வை கொண்டவையாகும். ராசநாகத்தின் தோலில் பாம்புச் செதில்கள் காணப்படும். பாம்புகளில் இச்செதில்களின் எண்ணிக்கையும் மற்றும் வடிவமும் ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனத்தை வேறுபடுத்திக் கண்டறிய உதவுகிறது. இந்த நிற அமைப்பு இளம் பருவத்தில் மிகவும் சற்று வெளிச்சமாக காணப்படும்.ஆண் இனம் பெண்ணை விட அதிக நீளமாகவும், தடிமனாகவும் இருக்கின்றன. இவற்றின் வாழ்நாள் 20 ஆண்டுகள் ஆகும்

இந்த இனமானது, மற்ற பாம்புக்ளைப் போலவே தனது இரையை அதன் மணத்தைக் கொண்டே அறிகின்றது. இதன் இரட்டை நாக்குகளில் மணம் தரும் வேதிப்பொருள்களை உணரும் நுகரணுக்கள் உள்ளன. இவற்றில் இருந்து வரும் செய்தியை வாயின் மேல் அண்ணத்தில் உள்ள யாக்கோப்சன் உறுப்பு என்னும் நுகர்பொறி உணர்கின்றது. தன் இரையின் மணத்தை உணர்ந்தபின் இரட்டை நாக்கை அசைத்து, இருகாது கேள்விபோல் (stereo) உணர்ந்து துல்லியமாய் இரை எங்குள்ளது என்று உணர்கின்றது இதன் நுண்ணிய பார்வைத்திறன், 300 அடிக்கு அப்பால் உள்ள இரையின் சிறு அசைவைக்கூட அறியும் திறன் கொண்டது. மற்ற பாம்புகளை போலவே இவற்றிற்கும் நான்கு புறமும் வாய்த்தசைகள் விரியும் அமைப்பு உள்ளது. இதன் மூலம் இவை முழு இரையையும் ஒரே முறையில் விழுங்கிவிடுகின்றன. மேலும் இதன் வாய்த்தசைகள், இதன் தலையை விட பெரியதாக விரியும் தன்மை கொண்டவை. பெரும்பாலும் நாள் முழுவதும் வேட்டையாடும் இவற்றை, இரவில் காண்பது அரிது.

இவை ஒரு முறை உணவை உட்கொண்டால், அதன் பிறகு பலநாட்கள் உணவு இல்லாமல் உயிர் வாழும் தன்மை கொண்டவை.

பொதுவாக இவ்வகை பாம்புகள் தனது இரையைத் தவிர மற்றவர்களை தாக்குவதில்லை. தனது வழியிலேயே செல்கின்றன. இதை தவிர்த்து எதிரிகள் இதன் வழியில் குறிக்கிடும் பொழுது, தன்னை தற்காத்துக்கொள்ளும் பொருட்டு இவை தனது உடலை, தரையில் இருந்து பல அடி எழுந்து உயர்த்தி காட்டுகின்றன. பின் படம் எடுத்து காட்டுகின்றன. மேலும் 'ஸ்ஸ்ஸ்' என்று காற்றொலி எழுப்புகின்றன. தனது சக்தியை, எதிரிகளுக்கு காட்டும் பொருட்டே இவை இவ்வகையான செயல்களில் ஈடுபடுகின்றன. இதையும் தாண்டி எதிரி தன்னை நெருங்கும்பொழுதே, இவை அவற்றை தாக்கி அதன் உடலில் நஞ்சைப் பாய்ச்சுகின்றன

இராச நாகத்தின் நஞ்சானது மிகவும் கொடியது. இது தனது ஒரே கடியில் மனிதனை கொல்ல வல்லது. இது கடித்த சில நிமிடங்களிலேயே மனிதன் கோமா நிலைக்கு சென்று மரணத்தை தழுவிவிடுவான். மேலும் ஆசிய யானைகளும் இது கடித்த 3 மணி நேரத்தில் இறந்து விடும்.இதன் நஞ்சானது ஆப்பிரிக்க கறுப்பு மாம்பா பாம்புகளை விட 5 மடங்கு அதிகமானது.

உண்மையில் இதன் நஞ்சானது குறைந்த அளவு நச்சு தன்மையே கொண்டதுதான். ஆனால் இவ்வகை இராச நாகங்கள் ஒரு முறை எதிரியைக் கடிக்கும் பொழுது, ஏறத்தாழ 6 முதல் 7 மில்லி அளவு நஞ்சை அதன் உடலில் செலுத்தவல்லது. இதன் காரணமாகவே இதன் எதிரிகள் உடனடியாக மரணத்தை தழுவுகின்றன.

இதன் நஞ்சை முறிக்க இதுவரை இரண்டு மருந்துகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதலாவது தாய்லாந்து நாட்டில் இயங்கும் செஞ்சிலுவை சங்கம் கண்டுபிடித்தது. மற்றது இந்திய மத்திய ஆராய்ச்சி மையம் கண்டுபிடித்தது. ஆனால் இவை இரண்டும் பரவலாக கிடைக்காத காரணத்தால், இதன் கடி பட்ட பலரும் இறந்து விடுகின்றனர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.