Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நாள் - ஒற்றுமையான கதை உண்மையா?

Featured Replies

பிரிகேடியர் தமிழ்செல்வனின் நினைவு நாளில் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் உரையாற்றிக் கொண்டிருக்கிறார். „எங்கள் அண்ணனின் தம்பிகளுடன்தான் இத்தனை நாள் மோதிக் கொண்டிருந்தோமா என்று நினைக்கின்ற போது வருத்தமாக இருக்கிறது'

உணர்ச்சி வசமாக இருக்கின்றது அவருடைய உரை

மறுபுறத்தில் தலைமைச் செயலகத்தை சேர்ந்த ஒருவர் தன்னுடைய அணியில் இருப்பவரிடம் இப்படிச் சொல்கிறார் „தலைமைச் செயலகம் என்பது நாட்டில் இருந்து இயங்குவது, அந்தப் பெயரை பயன்படுத்துவது அவ்வளவு நன்றாக இருக்காதுதானே!'

ஒரு மாற்றத்தை உணர்த்துவதாக இருக்கிறது அவருடைய பேச்சு

„ஒரு மந்தையில் இருந்து பிரிந்து போன ஆடுகள் மீண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே' என்பதை விட உணர்ச்சிகரமாகவும், பரபரப்பாகவும் சில சம்பவங்கள் புலம்பெயர் நாடுகளில் நடந்து கொண்டிருக்கின்றன.

.........

2009இல் நடந்த மாவீரர் தினத்தில் „தலைமைச் செயலகம்' என்ற பெயரில் மாவீரர் தின அறிக்கை எல்லா நாடுகளிலும் வாசிக்கப்படுகிறது.

2010இல் நவம்பர் 26ஆம் திகதி ஒரு மாவீரர் தின அறிக்கையும், 27ஆம் திகதி „தலைமைச் செயலகத்தின்' பெயரில் ஒரு மாவீரர் தின அறிக்கையும் என இரண்டு அறிக்கைகள் வருகின்றன. பிளவு பற்றிய செய்தி மெதுவாக வெளிவருகிறது.

2011இல் முதன் முறையாக புலம்பெயர் நாடுகளில் இரண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் நடக்கின்றன. விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக் கிளைகளாக இயங்கிய „அனைத்துலக தொடர்பகம்' தனியாகவும், களத்திலிருந்து தப்பி வந்த போராளிகள் „தலைமைச் செயலககம்' என்னும் பெயரில் தனியாகவும் மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்கிறார்கள். பிளவு வெளிப்படையாக தெரிகிறது.

2012இல் மீண்டும் இரண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் நடக்கின்றன.

இப்பொழுது 2013இல் அனைத்து நாடுகளிலும் ஒரு மாவீரர் நாள் நிகழ்வே நடக்க இருக்கின்றது. „தலைமைச் செயலகத்தினர்' தமது சார்பில் மாவீரர் நாள் நிகழ்வை நடத்துவதை இந்த முறை தவிர்த்திருக்கிறார்கள்.

.........

தலைமைச் செயலகத்திற்கு ஆதரவாக திரண்டவர்களில் பெரும்பலானாவர்கள் „அனைத்துலகத் தொடர்பகத்தின்' செயற்பாடுகளில் அதிருப்தியும் வெறுப்பும் கொண்டிருந்தவர்கள்.

பாடசாலைகள், ஆலயங்கள், மன்றங்கள் என்று எங்கும் அனைத்துலகத் தொடர்பகத்தின் கரங்கள் நீண்டிருந்தன. அவர்கள் சொல்வதே சட்டம் என்று இருந்தது. விமர்சனம் செய்தவர்கள் மீது துரோக முத்தரை குத்தப்பட்டது.

இவற்றை எல்லாம் எதிர்த்து வெளிக்கிளம்பியவர்கள் இயல்பாக தலைமைச் செயலகத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

2009இற்கு பின்பு போராட்டம் பன்முகப்படுத்தப்பட வேண்டும் என்று விரும்பியவர்களுக்கும் „தலைமைச் செயலகத்தின்' மீள் உருவாக்கம் மகிழ்ச்சியைக் கொடுத்தது.

ஒரு சாதரண கலை விழா செய்வதற்கு கூட அவர்களை அனுசரித்துப் போக வேண்டும் என்றிருந்த நிலை மாறி, மாவீரர் நாள் நிகழ்வையே யாரிடம் கேட்காமல் செய்யலாம் என்கின்ற ஒரு நிலை உருவானது.

.........

மாற்றங்களை விரும்பாத பழமைவாதிகள் பெரும் எண்ணிக்கையில் „அனைத்துலகத் தொடர்பகத்துடன்' இருந்தார்கள். நூற்றுக் கணக்கான கலகக்காரர்கள் „தலைமைச் செயலகத்துடன்' இருந்தார்கள்.

எதிலும் சம்பந்தப்பட விரும்பாத பொதுமக்கள் வீட்டுக்குள் இருந்தார்கள். இதுதான் இன்றைய மாற்றத்திற்கு முக்கியமான காரணமாகியது.

ஐம்பதினாயிரம் பேர் வரை வந்த மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு இரண்டாயிரம், மூவாயிரம் பேர் வருகின்ற நிலை உருவாகியது. மக்கள் மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு செல்லாமல் தவிர்த்ததற்கு பல காரணங்கள் இருந்தன.

ஆனால் „மாவீரர் நாள்' நிகழ்வு என்பதை உணர்வுபூர்வமாக பார்த்தவர்களுக்கு இந்தப் பிளவுதான் முக்கிய காரணமாக இருந்தது. அவர்கள் வீட்டில் இருந்தபடி தீபத்தை ஏற்றினார்கள்.

„அனைத்துலகத் தொடர்பகம்' இன்றைக்கு மிகப் பெரியளவில் செய்து கொண்டிருக்கின்ற ஓரே ஒரு விடயமாகிய மாவீரர் நாள் நிகழ்வுக்கும் இப்படி மக்கள் வராமல் புறக்கணித்தது, அதற்கு அச்சத்தை கொடுப்பதாக இருந்தது.

மறுபுறம் குறைந்த ஆட்பலத்தோடும், நிதி வளத்தோடும் இரண்டு ஆண்டுகள் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்திய களைப்போடு „தலைமைச் செயலகத்தினர்' நின்றிருந்தார்கள்.

இணைந்து செயற்பட வேண்டிய கட்டாயம் இயல்பாக உருவாகத் தொடங்கியிருந்தது.

.........

அனைத்துலகத் தொடர்பகத்தினரால் „ஒற்றுமையாகி விட்டோம்' என்ற கதை பல இடங்களில் பரப்பப்படுகிறது. அவர்களின் ஒரு அணி போஸ்டர்களை ஒட்டியபடி ஒற்றுமைக் கதையை பரப்பிக் கொண்டு திரிகிறது.

அவர்களின் இன்னொரு அணியோ மாவீரர் நாள் நிதி சேகரிக்க தயாராகிக் கொண்டிருக்கிறது அல்லது சேகரித்துக் கொண்டிருக்கிறது.

ஆனால் „அனைத்துலகத் தொடர்பகம்', „தலைமைச் செயலகம்' என்கின்ற இந்த இரண்டு அமைப்புக்களும் இணைந்து ஒன்றாகி விட்டனவா என்றால், அதுதான் இல்லை.

இரண்டு அமைப்புக்களும் ஏதோ ஒரு புரிந்துணர்விற்கு வந்திருக்கின்றன. தலைமைச் செயலகம் இம்முறை மாவீரர் நாளை நடத்தாது விட்டுக் கொடுத்திருக்கிறது. அனைத்துலகத் தொடர்பகம் சில மாற்றங்களை செய்வதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறது.

அவ்வளவுதான்!

மற்றையபடி இரண்டு அமைப்புக்கள் இணைகின்ற போது செய்கின்ற நடைமுறைகள் எதுவும் இங்கே இடம்பெறவில்லை.

ஆனாலும் இவ்வளவு தூரத்திற்காவது இந்த இரண்டு அமைப்புக்களும் நெருங்கி வந்திருக்கின்றனவே என்று ஒற்றுமையை விரும்புகின்றவர்கள் ஆறுதல் கொள்கிறார்கள்.

.........

இந்த நெருக்கத்தை விரும்பாதவர்கள் இரண்டு தரப்பிலும் இருக்கிறார்கள்.

இத்தனை நாட்கள் „சிறிலங்கா அரசாங்கத்தால் அனுப்பப்பட்டவர்கள்', „கேபியின் ஆட்கள்' என்று அவர்களைப் பற்றி மக்களிடம் பரப்புரை செய்து விட்டு, பின் அவர்களுடனேயே எப்படி இணைந்து நிற்பது என்று அனைத்துலகத் தொடர்பகத்தை சேர்ந்த சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.

„கணக்கு காட்டவில்லை', „நிதியை கையாடி விட்டார்கள்', „அரசுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள்' என்று நாமும் அவர்களைப் பற்றி சொன்னோமே என்ற சங்கடம் தலைமைச் செயலகத்தை சேர்ந்தவர்களிடமும் தெரிகிறது.

ஆனால் இது ஒரு பெரிய விடயமாக இருக்காது. „அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா' என்று சொல்லி இதை இரு தரப்பும் கடந்து போய் விடும்.

அதே வேளை „அனைத்துலகத் தொடர்பகம்' தன்னுடைய அடாவடித்தனமான அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக தலைமைச் செயலகத்தை ஆதரித்தவர்கள் இந்த நெருக்கத்தை ஒரு கேள்விக்குறியோடு பார்க்கின்றார்கள்.

„நேற்று இரவு வரை அனைத்துலகச் செயற்பாட்டின் அணுகுமுறைகளில் மாற்றம் வந்ததாக தெரியவில்லை' என்று கவலையோடு அவர்கள் கூறுகிறார்கள்.

.........

ஐரோப்பாவின் நாடொன்றில் „தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்' சில வாரங்களுக்கு முன்னர் நினைவு கூரப்பட்டது. இரண்டாம் லெப் மாலதியின் நினைவு நாளே „தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாக' பிரகடனப்பட்டத்தப்பட்டிருக்கிறது.

இந்த நினைவு நாள் பிரசுரங்களில் வீரச் சாவடைந்த மூத்த பெண் போராளிகளின் படங்கள் இடம்பெற்றிருக்கும். படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலியும் நடைபெறும்.

இந்த ஆண்டு மேயர் சோதியாவின் படம் இடம்பெறாமல் போய் விட்டது. மேயர் சோதியாவின் சகோதரர் தலைமைச் செயலகத்துடன் நிற்பதனால், திட்டமிட்டே இது நடைபெற்றதாக அந்த நாட்டில் இருக்கின்ற தலைமைச் செயலகத்திற்கு ஆதரவானவர்கள் சந்தேகிக்கின்றார்கள். இப்படியான பிரச்சனைகள், சந்தேகங்கள் தொடர்கின்றன.

தலைமைச் செயலகத்தின் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிய ஊடகங்கள் இந்த முறை தமது மாவீரர் நிகழ்வுகளை பதிவு செய்யக் கூடாது என்கின்ற தடை உத்தரவுகளும் சில நாடுகளில் இப்பொழுதும் போடப்படுகின்றன.

„அனைத்துலகத் தொடர்பகம்' என்று சொல்லிக் கொண்டாலும், ஆளுமை மிக்க ஒரு தலைமை இல்லாததாலும், நாட்டின் கிளைகள் தமது விருப்பப்படி செயற்படுவதாலும் இப்படியான சம்பவர்கள் நடக்கின்றன.

உண்மையான ஒரு ஒற்றுமைக்கு இந்த நிலை ஒரு சவாலாக நிற்கின்றது.

.........

இதனால் இன்னும் பலருக்கு நம்பிக்கை இல்லை. இந்த „ஒற்றுமைக் கதை' எல்லாமே மாவீரர் நாளுக்காக நடத்தப்படுகின்ற நாடகங்கள் என்கின்றார்கள் அவர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஒற்றுமைப்படுவதாக சொல்வதும், பேச்சுவார்த்தை நடத்துவதும், மாவீரர் நாளுக்கு சில நாட்களுக்கு முன்னர் அனைத்தையும் முறிப்பதையும் அனைத்துலகத் தொடர்பகம் வழக்கமாகக் கொண்டிருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

ஆனாலும் அனைத்துலகத் தொடர்பகம் தனது செயற்பாடுகள் மற்றும் அணுகுமுறைகளை மெது மெதுவாக என்றாலும் மாற்றிக் கொள்ளும் என்று தமது ஆதரவாளர்களை மிகவும் கஸ்ரப்பட்டு தலைமைச் செயலகம் சமாதானம் செய்து கொண்டிருக்கிறது.

„இனி யாரையும் துரோகி என்று முத்திரை குத்த மாட்டோம்', „மக்கள் அமைப்புக்களின் செயற்பாடுகளை குழப்ப மாட்டோம்' போன்ற வாக்குறுதிகளை அனைத்துலகத் தொடர்பகம் கொடுத்திருக்கிறதாம்.

உண்மையில் இதுதான் இப்பொழுது வேண்டியது.

யாரும் துரோகி என்று முத்திரை குத்தப்படக் கூடாது. பல்வேறுபட்ட அமைப்புக்கள் சுதந்திரமாக தலையீடுகள் இல்லாமல் இயங்க வேண்டும்.

மாற்றத்தின் முதற்படியாக இதுவே இருக்க வேண்டும். மற்றையவைகள் தன்பாட்டில் நிகழும்.

.........

குழப்பங்கள் சில இடங்களில் தொடர்ந்தாலும், சாதகமான மாற்றங்களும் ஆங்காங்கே தென்படுகின்றன.

„நாடு கடந்த அரசு' போட்டியின்றி வேட்பாளர்களை தேர்வு செய்தததை கிண்டலடித்து சில வாரங்களுக்கு முன் ஒரு கட்டுரை வெளிவந்தது. முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, „அனைத்துலகத் தொடர்பகத்தின்' செல்வாக்குக்கு உட்பட்ட ஊடகங்களில் இருந்து அந்தக் கட்டுரை தூக்கப்பட்டது.

„நாடு கடந்த அரசின்' தென்சூடான் பயணம் பற்றி சர்ச்சைக்குரிய ஒரு கட்டுரை வந்தது. அதுவும் அடுத்த நாளே தூக்கப்பட்டது.

„எந்த அமைப்பையும் விமர்சிக்க வேண்டாம், அனைத்தும் இயங்கட்டும்' என்கின்ற சிந்தனை மாற்றத்தின் வெளிப்பாடுகளாக இவைகளை சிலர் சுட்டிக் காட்டுகிறார்கள்.

உண்மையிலேயே மாற்றங்கள் ஏற்பட்டு, „துரோகி' பட்டம் கட்டுகின்ற செயற்பாடுகள் முடிவுக்கு வந்து, அனைத்துக் கருத்துக்களும் மதிக்கப்படுகின்ற ஒரு சூழல் வருமானால், அதை வரவேற்பதற்கு யாரும் பின்னிற்க மாட்டார்கள்.

Edited by சபேசன்

இரண்டு கூட்டமும் ஒண்டாக சேர்ந்து காசடிக்க போகிறார்கள் எண்டு ஆய்வறிக்கை தருவீர்கள் எண்டு பார்த்தால்  இப்படி நெஞ்சை நக்குகிறீர்கள்....???     உங்களுக்கே அடுக்குமா சபேசன்...??  :unsure:

Edited by தயா

உண்மையில் அக்குவேறாக ஆணிவேராக நேரம் எடுத்து ஆராய்ந்து இருக்கிறீர்கள் .உண்மையில் இந்த விரிவான கட்டுரையின் மூலம் தாயக விடுதலையின் மேலுள்ள அக்கறையை உணரமுடிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

சபேசன்

சந்தோசப்படுகிறாரா???

துக்கப்படுகிறாரா???

 

  • தொடங்கியவர்

இரு தரப்பும் சேர்ந்து காசுக் கணக்குப் பார்க்கும் நிலை இன்னும் ஏற்படவில்லையே!

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் அக்குவேறாக ஆணிவேராக நேரம் எடுத்து ஆராய்ந்து இருக்கிறீர்கள் .உண்மையில் இந்த விரிவான கட்டுரையின் மூலம் தாயக விடுதலையின் மேலுள்ள அக்கறையை உணரமுடிகிறது. 

 

ஏமாந்திட்டீங்க ராசா..... :(

  • தொடங்கியவர்

விசுகு! இரண்டு அமைப்புக்களும் நெருங்கி வருவதன் மூலம் இதுவரை இருந்து வந்த அணுகுமுறைகள் மாற்றம் அடையும் என்றால், அது உண்மையில் எனக்கு மகிழ்ச்சியையே கொடுக்கும். அதை விரும்பியே, சில விடயங்களை தவிர்த்தும், சாதகமான முறையிலும் கட்டுரையை முடித்திருக்கிறேன்.

அப்படி நடைபெறவில்லை என்றால், எனக்கு அது துக்கத்தையே கொடுக்கும்

இரு தரப்பும் சேர்ந்து காசுக் கணக்குப் பார்க்கும் நிலை இன்னும் ஏற்படவில்லையே!

 

சனம் குடுத்தால்தானே...  அப்பவே குடுக்காதுகள் இப்பவா குடுக்குங்கள்....?? 

 

அதோடை  அண்ணை வாங்க சொன்னவர் எண்டு சொல்லி கையை காட்டி கேக்க இப்ப ஏலாது பாருங்கோ...   :)

  • தொடங்கியவர்

நானும் தமிழ்சூரியனும் ஒற்றுமையாவது விசுகுவிற்கு பிடிக்கவில்லை :-(

  • கருத்துக்கள உறவுகள்

சனம் குடுத்தால்தானே...  அப்பவே குடுக்காதுகள் இப்பவா குடுக்குங்கள்....?? 

 

அதோடை  அண்ணை வாங்க சொன்னவர் எண்டு சொல்லி கையை காட்டி கேக்க இப்ப ஏலாது பாருங்கோ...   :)

 

 

உங்களுக்கு சில  உண்மைகள் தெரியுது

இப்ப நானும் கொடுப்பதில்லை

அவர்களும் கேட்பதில்லை

 

ஆனால் கேட்கிறார்கள்

கொடுக்கிறார்கள் (இவர்கள்   கொடுப்பதில்லையாம்) என்று இங்கு கதை இருக்கு

அதை வடித்ததில் சபேசனுக்கு பெரும் பங்குண்டு...............

ஏமாந்திட்டீங்க ராசா..... :(

விசுகு அண்ணா கட்டுரையையும் அதன் நோக்கத்தையும் நன்றாக அறிவேன் :lol: ..............சென்ற முறை இவர்களின்  குத்தி முறிவுகளை கண்டேன் .இம்முறையும் காண்கிறேன் :icon_idea:  ஆராய்ச்சி வடிவில் ......................ஆனால் நடக்கும் விடயம் இவர்களின் சக்திக்கு அப்பாற்பட்டது எனவும் அறிவேன் ..................இந்த விடயங்களில்; அன்றிலிருந்து இன்று வரை ஒன்ரித்திருப்பவன் என்ற வகையில் ..........................

  • தொடங்கியவர்

மாற்றம் வர வேண்டும். இல்லையென்றால் அடுத்த ஆண்டு வேறு ஒரு சவாலை சந்திக்க வேண்டியிருக்கும். உள் மோதல்களிலேயே எமது காலம் ஓடிக் கொண்டிருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சகுனம் சொல்லும் நாரதர்கள் அதிகமாகிவிட்டார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

சகுனம் சொல்லும் நாரதர்கள் அதிகமாகிவிட்டார்கள். 

 

 

தூக்கம்  வர வேறு வழி........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

tamileelampengal.jpg

 

ஐரோப்பாவின் நாடொன்றில் „தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்' சில வாரங்களுக்கு முன்னர் நினைவு கூரப்பட்டது. இரண்டாம் லெப் மாலதியின் நினைவு நாளே „தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளாக' பிரகடனப்பட்டத்தப்பட்டிருக்கிறது.

இந்த நினைவு நாள் பிரசுரங்களில் வீரச் சாவடைந்த மூத்த பெண் போராளிகளின் படங்கள் இடம்பெற்றிருக்கும். படங்கள் வைக்கப்பட்டு அஞ்சலியும் நடைபெறும்.

இந்த ஆண்டு மேயர் சோதியாவின் படம் இடம்பெறாமல் போய் விட்டது. மேயர் சோதியாவின் சகோதரர் தலைமைச் செயலகத்துடன் நிற்பதனால், திட்டமிட்டே இது நடைபெற்றதாக அந்த நாட்டில் இருக்கின்ற தலைமைச் செயலகத்திற்கு ஆதரவானவர்கள் சந்தேகிக்கின்றார்கள். இப்படியான பிரச்சனைகள், சந்தேகங்கள் தொடர்கின்றன.
 

„நாடு கடந்த அரசு' போட்டியின்றி வேட்பாளர்களை தேர்வு செய்தததை கிண்டலடித்து சில வாரங்களுக்கு முன் ஒரு கட்டுரை வெளிவந்தது. முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, „அனைத்துலகத் தொடர்பகத்தின்' செல்வாக்குக்கு உட்பட்ட ஊடகங்களில் இருந்து அந்தக் கட்டுரை தூக்கப்பட்டது.

 

சபேசன் அண்ணா நீங்களும் கிண்டலடித்து எழுதிவிட்டு தூக்கிய விடயத்தையும் குறிப்பிட்டிருக்கலாமே? :icon_idea:

  • தொடங்கியவர்

நாடு கடந்த அரசு பற்றி எழுதிய எதையும் நான் தூக்கவில்லை. இதுதான் நான் முகநூலில் எழுதியது. அப்படியே இருக்கிறது. இதில் கிண்டல் இருக்கிறதா என்பது தெரியவில்லை. https://www.facebook.com/shabesanv/posts/566415780073589

தலமைச் செயலகத்தின் கொடுப்பனவுகள் தீர்ந்தபடியால்தான் அவர்களால் முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தா பிரதி அமைச்சர் பதவிகள் கொடுத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருப்பதுபோலவே, அனைத்துலக தொடர்பகம் பெரும் எண்ணிக்கையில் பதவி ஆசை கொண்டவர்களுக்குப் பதவிகொடுத்து தன் கரங்களை வலுப்படுத்திக் கொண்டுள்ளதை, இத்திரி வெளிக்காட்டத் தயங்கியுள்ளது.

 

அனைத்துலக தொடர்பகத்தில் உள்ள தவறானவர்களை நீக்கி மக்களுக்கு உதவ முன்வந்த தலைமைச் செயலகத்தினர், தங்களுக்குள் இருப்பவர்களைப்பற்றியே வெளிப்படையாக விமர்சனம் செய்யப் புறப்பட்டதால் புறம்தள்ளப்பட்டுள்ளனர்.

 

மக்களிடம் சேகரித்த பணத்தைப் பதுக்கிக் கோடீசுவரராக இருக்கும் புலம்பெயர் மக்களை அதிகம் கொண்டுள்ள அனைத்துலக தொடர்பகத்தை, அரச உதவிப்பணத்தில் வாழும் போராளிகள் பலரைக் கொண்ட தலைமைச் செயலகத்தினரால் எதுவும் செய்துவிட முடியாது.

 

 

மகிந்தா பிரதி அமைச்சர் பதவிகள் கொடுத்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருப்பதுபோலவே, அனைத்துலக தொடர்பகம் பெரும் எண்ணிக்கையில் பதவி ஆசை கொண்டவர்களுக்குப் பதவிகொடுத்து தன் கரங்களை வலுப்படுத்திக் கொண்டுள்ளதை, இத்திரி வெளிக்காட்டத் தயங்கியுள்ளது.

 

அனைத்துலக தொடர்பகத்தில் உள்ள தவறானவர்களை நீக்கி மக்களுக்கு உதவ முன்வந்த தலைமைச் செயலகத்தினர், தங்களுக்குள் இருப்பவர்களைப்பற்றியே வெளிப்படையாக விமர்சனம் செய்யப் புறப்பட்டதால் புறம்தள்ளப்பட்டுள்ளனர்.

 

மக்களிடம் சேகரித்த பணத்தைப் பதுக்கிக் கோடீசுவரராக இருக்கும் புலம்பெயர் மக்களை அதிகம் கொண்டுள்ள அனைத்துலக தொடர்பகத்தை, அரச உதவிப்பணத்தில் வாழும் போராளிகள் பலரைக் கொண்ட தலைமைச் செயலகத்தினரால் எதுவும் செய்துவிட முடியாது.

 

 

 

இருக்கலாம் பாஞ்ச்.  ஆனால், ஆமை, முயல் போட்டியில் கடைசியில் வென்றது ஆமைதான்.  இவர்கள் விடயத்திலும் அதுதான் நடக்கும்.  கடல் அமைதியாக இருந்தாலும் உள்ளே கொந்தளித்துக் கொண்டுதான் இருக்கும்.  அதேபோலத்தான் தலைமைச் செயலகத்தினரும். காலம் கனிந்து வரும்போது, அவர்கள் நிச்சயம் வெளியில் வருவார்கள்.

 

ஆறு வயதில், உடலில் தீக்காயங்களைக் கொண்ட ஒரு பெண்மணியின் சோகத்தையும் இருவரை ஆமி அடித்ததைப் பார்த்துக் கோபப்பட்ட ஒரு சிறுவன்தான் பின்னர் சர்வதேசம் வியந்த ஒரு தலைவனானான்.  அந்தத் தலைவனின் வழியில் வந்த போராளிகள் எத்தனையோ பேர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.  30 வருடங்களாகப் போராட்டத்தையே வாழ்வாகக் கொண்ட எம்மிலும் அதனைவிடவும் ஓர்மமானவர்கள் பலர் இருப்பார்கள்.  காலம் கனியும்போது, இவ்வாறானவர்கள் வெளியில் வருவார்கள்.   தலைமைச் செயலகத்தில் உள்ள போராளிகள் களத்தில் நின்றுவிட்டு வந்தவர்கள்.  அப்போராளிகள் முதலில் வாழத் தொடங்கட்டும்.  அவர்கள் பொங்கியெழத் தொடங்கினால் புலத்தில் சொகுசில் வாழ்ந்த அனைத்துலகத்தினரால் தாக்குப் பிடிக்க முடியாது.  ஆகவே, அனைத்துலகச் செயலகத்தினரின் அராஜகம் இன்னும் 2-3 வருடங்கள்தான்.  

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து

உங்களது தனிப்பட்ட பிரச்சினைகளை  நேரடியாக பேசித்தீர்த்துக்கொள்ளுங்கள்............

அவை

மாவீரர்  நாட்களில் வேண்டாம்.. :(  :(  :(

தயவு செய்து

உங்களது தனிப்பட்ட பிரச்சினைகளை  நேரடியாக பேசித்தீர்த்துக்கொள்ளுங்கள்............

அவை

மாவீரர்  நாட்களில் வேண்டாம்.. :(  :(  :(

 

 

இவர்களால் வாழ்க்கையை இழந்தவர்களுக்குத்தான் அதன் வலியும் வேதனையும் தெரியும்.  உங்களைப் போன்று பகுதி நேரமாகவும் பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு வாளா இருந்தவர்களுக்கும் அதன் வலி தெரிய வாய்ப்பில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

தயவு செய்து

உங்களது தனிப்பட்ட பிரச்சினைகளை  நேரடியாக பேசித்தீர்த்துக்கொள்ளுங்கள்............

அவை

மாவீரர்  நாட்களில் வேண்டாம்.. :(  :(  :(

 

அன்பர் விசுகு அவர்களின் புரிதலின்படி இதனைத் தனிப்பட்ட பிரச்சனை என்ற வட்டத்திற்குள் உள்ளடக்கி விடுவோம். மாவீரர் நாட்களில் வேண்டாம்!. மக்களை ஏமாற்றி அவர்கள் பணத்தையும் சுரண்டுவதாக, பலராலும் விமர்ச்சிக்கப்படும் ஒரு கூட்டம், அந்த மக்களை மேலும் சுரண்டி மாவீர்களுக்கு செய்விக்கப்படும் அஞ்சலியே புனிதமான அஞ்சலியாகும்!. பிறிதொரு நாளில், அதாவது மாவீரர்கள் நினைவுக்கு வராமல் மறந்துபோகும் நாட்களில், நேரடியாக அந்தக் கூட்டத்துடன் பேசித் தீர்த்துக் கொள்ளுவோம். தும்பைவிட்டு வாலைப்பிடித்து அடுத்த மாவீரர் நாள்வரை தொடரலாம்.

 

'இதுவரை காலமும் புலம்பெயர் நாடுகளில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் போல இம்முறை மாவீரர் நாளும் பெரும் எதிர்பார்ப்புகளோடு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது. வழமை போல மாவீரர் உறவுகள் கௌரவிப்பு முதல் அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறுகிறது.

ஆனாலும் இம்முறை மாவீரர் நாள் கொண்டாடுவதற்காக யேர்மனியில் மக்களைத் தேடிப்புறப்பட்டுள்ளனர் வசூல் மன்னர்கள். மாவீரரை நினைவுகூர மக்களிடம் பணம் வசூலிப்பதற்கு மும்முரமாக யேர்மனியில் பல பாகங்களிலும் ரிக்கெற்றுடன் புறப்பட்டுள்ளனர் பிரதிநிதிகள். 20,40,50,100யூரோக்கள் வகையாக இந்தப் புதிய விற்பனை ஆரம்பமாகியுள்ளன' - ஆதாரம் தமிழரங்கம்.

 

மேலும் இயக்க நிதியாக 1000யூரோக்கள் கோரப்படுவதும் நம்பகமாகத் தெரியவந்துள்ளது. இதேநேரம் யேர்மனிய சட்டத்திற்கு உட்படாது நிதிசேர்க்க முயல்வோர்பற்றி அறியத்தருமாறு பிரத்யேகமாக தமிழர்களுக்குப் பொலிசார் அறிவித்தலை வழங்கி வருகின்றனர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களால் வாழ்க்கையை இழந்தவர்களுக்குத்தான் அதன் வலியும் வேதனையும் தெரியும்.  

 

உங்களைப் போன்று பகுதி நேரமாகவும் பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு வாளா இருந்தவர்களுக்கும் அதன் வலி தெரிய வாய்ப்பில்லை. 

 

 

நீங்கள் எதற்குள்  உள்ளீர்கள்

நான் எதற்குள் இருந்தேன் என்பதல்ல பிரச்சினை.

மாவீரர் திரிகளில் மட்டும் இவை  புறப்படுவதைத்தான் வேண்டாம் என்றேன்.

மற்றும்படி  நீங்கள் என்ன  செய்தீர்கள் என்பதை நானறிவேன்.

அதை என்றும்  மதிக்கின்றேன்.

இங்கு பலமுறை  எழுதியும் உள்ளேன்.

அத்துடன் நான் எந்தக்கட்சி  சார்ந்தவனும் அல்ல.

 

உழைத்த பணத்தைக்கொடுத்தவனுக்கு வலி  கிடையாது என்பதும்

பகுதி  நேரம் வேலை செய்தவன் பகுதியாகத்தான் பேசணும் என்பதும் விடுதலைப்பாதைக்கு சரியானதா?? :( 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.