Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

IPKF இந்திய இரணுவம் ஈழத்தில் செய்த அட்டூழியங்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

ஈழவன்85 wrote:

குழம்பிய இந்திய ஆதிக்கவர்க்க குட்டையில் மீன்பிடிக்கவேண்டியது இல்லை என்னை ஊக்கபடுத்திய சபேசன் குறுக்காலபோவன் ஆகியோருக்கு நன்றிகள் நான் தொடந்து இங்கு என் கருத்துக்களை எழுதுவேன் நண்பர்களே உதவி செய்யாவிட்டாலும் பறுவாயில்லை குறுக்கீடு செய்யாதீர்கள்.Vasampu, உங்களுக்கு சபேசன் மீது பெறாமை உள்ளது போல உள்ளது எனெனின் வேறு ஒரு கருத்துபிரிவில் அவரின் இணையத்தை பற்றி கிண்டல் செய்துள்ளீர்கள் அதனை தூயவன் கண்டித்து உள்ளார் உங்களால் அவரை போல இணையம் நடத்த முடியுமா சும்மா பெறாமை பட்டு இங்கு ஒரு பிரியோசனமும் இல்லை

ஈழவன்85

அட பட்டென்று கன்று பிடித்து விட்டீர். உமது பிடிப்பை வைச்சு மற்றவர் மாட்டையும் பிடித்து விட்டார். சத்தியமாய் அந்தத் தளத்தில் என்ன இருக்கென்று நான் பொறாமைப் பட என்பது எனக்குப் புரியவேயில்லை. அத்தோடு வெறும் பரபரப்பிற்காக ஊகங்களை வைத்து செய்தி போட்டுத் தளம் நடத்த சத்தியமாய் எனக்குத் தெரியவே தெரியாதுங்க!!!!! :roll: :roll: :roll: :roll:

மாடு மேய்பது உம் தொழில் உம்மை மேய்பது அதைவிட பெரிய தொழில் இரண்டையும் உம்மை ஈன்ற பெரிய மாட்டிடம் கேளும் சரியாய் சொல்லிதரும்

  • Replies 66
  • Views 12.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய நாளில்இவையெல்லாம் இந்த இடத்தில் தேவைதானா?

இன்றைய தேவையென்ன?

இன்றைய காலகட்டத்தில் யாழ்க்களம் சந்தர்ப்பவாதிகளின் சந்தியாகிவிட்டதா? அவரவர் இணையத்தளங்களை வைத்துள்ளீர்கள் அங்கு இத்தகைய விவாதங்களை ஆரம்பிக்கலாமே.... காலத்தின் தேவையறிந்து கலந்துரையாடுங்கள் வரவேற்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர் இணையத்தளங்கள் வைத்திருக்கிறார்கள் என்றால் அங்கேயே விவாதங்களை வைத்துக்கொண்டால் யாழ்களம் எதற்ககு?

  • கருத்துக்கள உறவுகள்

முழுமையாக இங்கு வாசித்துவிட்டுத்தான் பதில் வரைகிறீர்களா கறுப்பி?

ஒட்டுமொத்தமாக எங்கள் இனத்திற்குபெரும்பாதகங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் காலமறிந்த எங்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய விடயங்களைப் பேசிக்கொள்ளுங்கள்.

மிகப்பெரும் வல்லரசு எங்கள் இனத்தில் தன்கோரச்சூழ்ச்சிகளைத் திணிக்க முற்படும் இத்தருணத்தில் தேவையில்லாத கருத்தாடல்கள் தமிழினத்திற்கு மேலும் மேலும் இன்னல்களை வழங்கும். புலம்பெயர்ந்த எங்களுக்கு அல்ல தாயகத்தில் வாழும் உறவுகளுக்கு! அதற்காக இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளால் நாங்கள் பாதிக்கப்படவில்லை என்பது பொருளல்ல.... அதைச் சொல்ல வேண்டியதருணம் இதுவல்ல...

ஊருலகம் அறியாமல் உறங்கும் உண்மைகளை சொல்லவேண்டிய காலத்தில் சொல்லவேண்டிய தருணத்தில் சொல்வோம்.

  • கருத்துக்கள உறவுகள்

வல்வைசகாராவின் கருத்தே எனது கருத்தாகும்.

ஒவ்வொரு தளத்திற்கும் ஒரு நோக்கமும் இருக்கிறது. யாழ் களம் விவாதத்திற்கு என்று இருக்கிறது. ஆகவே கறுப்பி சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்.

அத்துடன் ராஜீவ்காந்தி மற்றும் இந்தியப் படைகள் குறித்து இங்கு விவாதிக்கப்படுவது சரியான காலகட்டத்தில்தான் என நினைக்கிறேன்.

தற்பொழுது தமிழ்நாட்டில் ஈழத் தமிழர் பற்றிய விவாதம் சூடு பிடித்துள்ளது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலை உருவாகிறது. இதைக் குலைக்கும் விதமாக இன எதிரிகள் ராஜீவ்காந்தி கொலையை தூக்கிப்பிடிக்கிறார்கள்.

ஆகவே நாங்கள் இந்திய இராணுவம் ஈழத்தில் செய்த கொடுமைகள் குறித்து பேசுவதே "ராஜீவ்காந்தி கொலை" குறித்து குற்றச்சாட்டிற்கு பொருத்தமான பதிலாக இருக்கும்.

அத்துடன் இந்தியா குறித்து என்னுடைய பார்வை இவ்வாறு இருக்கிறது.

"இந்தியா தற்பொழுது இந்திய இராணுவத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட சீக்கிய இனத்தை சேர்ந்த ஒருவரை பிரதமராகவும், ஒரு இஸ்லாமியத் தமிழரை ஜனாதிபதியாகவும், மேலைத்தேய முற்போக்குச் சிந்தனைகள் கொண்ட ஒருவரை அதிகார மையத்திலும் கொண்டிருக்கும் ஒரு நாடாக இருக்கிறது."

ராஜீவ்காந்தியின் இழப்பால் இந்தியா பெற்ற வலியை விட இந்திய இராணுவத்தால் தமிழீழம் பெற்ற வலி மிகப் பெரியது என்பதை உணர்த்துவதற்கு இதை விட்டால் வேறு நல்ல தருணம் கிடைக்காது.

உவ்வளவு ஆக்ரோசமாக எழுதும் நீர் ஏன் நண்பர்கள் சொன்னார்கள் என்று உமது தளத்தில் இதுபற்றி எழுதாமல் விட்டீர். உமது சொந்தத் தளத்தில் எதையும் சுதந்திரமாக எழுதக் கூடிய நிலையிருந்தும் அதனை ஏன் தவிர்த்தீர். சுயநலத்திற்காக ஏதாவது நொண்டிச் சாட்டு சொல்ல வேண்டாம். எரியிற நெருப்பில் எண்ணெய் ஊற்றினால்த் தானே உம்போன்றவர்களின் பிழைப்பும் நடக்கும்.

  • தொடங்கியவர்

உவ்வளவு ஆக்ரோசமாக எழுதும் நீர் ஏன் நண்பர்கள் சொன்னார்கள் என்று உமது தளத்தில் இதுபற்றி எழுதாமல் விட்டீர். உமது சொந்தத் தளத்தில் எதையும் சுதந்திரமாக எழுதக் கூடிய நிலையிருந்தும் அதனை ஏன் தவிர்த்தீர். சுயநலத்திற்காக ஏதாவது நொண்டிச் சாட்டு சொல்ல வேண்டாம். எரியிற நெருப்பில் எண்ணெய் ஊற்றினால்த் தானே உம்போன்றவர்களின் பிழைப்பும் நடக்கும்.

****************************

நீக்கம் -யாழ்பாடி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

image1758850b-d204-40a0-ba83-c5f225973b9e.jpg

நாம் பட்ட வேதனைகள் லெபனானிய மக்களும் படக்கூடது என்று பிரார்த்திப்போம்.....

மிக அருகில் தமிழினம் அழிக்கப்படுகின்றது. தமிழினத்தை அழிப்பவர்களுக்கு இந்திய அரசு மறைமுக உதவிகளை செய்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள தமிழன் நாம் எதற்காக இந்தியக் கூட்டாட்சிக்குள் இன்னும் இருக்க வேண்டும் என்று கேட்பது எனக்குத் தவறாகப் படவில்லை. இதை நான் அவர்களுக்கு உள்ள உரிமையாகவே பார்க்கிறேன்.

சபேசன்!

உங்கள் தொனியைப் பார்த்தால் தமிழகத்தில் பெருகி வரும் ஆதரவைக் குலைக்க முயற்சிக்கும் தொனி தெரிகிறதே?

இதுபோலவே வேறு சில களங்களிலும் கூட நல்லுறவு மலர்வதற்கு எதிரான கருத்துக்களை நீங்கள் எடுத்து வைத்ததை கண்டிருக்கிறேன்.....

லக்கிலூக்!

இவைகளும் நான் இங்கு தெரிவித்த கருத்துக்கள். இவைகளையும் கவனத்தில் எடுங்கள்.

"யாழ் களத்தில் நடப்பது தனி மனிதர்களின் விவாதம். இங்கே சொல்லப்படுகின்ற தனிப்பட்ட கருத்துக்கள் இந்திய அரசையோ, தமிழீழத்தையோ எந்த விதத்திலும் பாதிக்கப் போவதில்லை. என்னுடைய கருத்து ஒன்றும் விடுதலைப்புலிகளின் கருத்து அல்ல. என் மனதில் இருப்பதைச் சொல்லுகிறேன்."

"இந்தியாவோடு இணைந்திருப்பதும் பிரிந்து செல்வதும் தமிழ்நாட்டுத் தமிழர்களின் முடிவு. இதில் எதையும் நாம் ஊக்குவிக்கத் தேவையில்லை. பெரும்பாலான தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்தியாவோடு இணைந்திருப்பதையே விரும்புவதாக தெரிகிறது. அவர்கள் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு தமிழர்களாக எங்களின் ஆதரவும் இருக்கும்."

அத்துடன் நீங்கள் இன்னும் ஒன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். நான் குறிப்பிட்டது தமிழ்நாட்டு மக்களின் உரிமை குறித்து. அனைத்து தேசிய இனத்திற்கும் உள்ள உரிமை தமிழ்நாட்டு மக்களிற்கும் உண்டு. அதை நீங்களோ நானோ மறுக்க முடியாது.

ஒரு பொதுக் களத்தில் பல தனிமனிதர்களின் கருத்துக்கள் சேர்ந்துதான் ஒரு சமுதாயத்தின் கருத்தாகக் கருதப்படுகின்றது. அதனால் அப்படியான கருத்துக்கள் ஒரு இனத்தின் கருத்தாகவே பார்க்கப்படும்.

தனி ஒருவரின் கருத்து அவரின் சொந்தக்க களத்தில் வைக்கப்படும் போது அது அவரின் கருத்தாக மட்டுமே பார்க்கப்படும்.

வசம்பு!

இங்கே நீங்கள் எழுதுகின்ற கருத்துக்களை எங்கள் சமுதாயத்தின் கருத்தாக யாராவது எடுத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறீhகளா???!!!

என் கருத்தையொத்த கருத்தை பலர் எழுத நேரிட்டால் அதனை அப்படி எடுக்க வேண்டி வரும். அவ்வாறு பலரை எழுதத் து}ண்டி அதைச் சமுதாயக் கருத்தாக்க உம் போல் நான் முயல்வதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகளுக்கு எனது வணக்கம்!

இந்தியா எமக்கு கொஞ்சம் சாதகமாக திரும்புகிறது.......

இந்த நேரத்தில் ஏன் இவர் பழைய குட்டையை கலக்குகிறார் என்று பலரும் ஆவேச படுவது. என்னை சிறிதளவு சிந்திக்க துண்டியது அதனாலேயே தொடர்கிறேன்.

இந்தியா (மத்திய அரசு) எமக்கு உதவி செய்வதோ சாதகமான வார்த்தைகளை அள்ளி வீசுவதோ இதுதான் முதல்தடவை அல்ல.

ஒவ்வொரு முறை உதவிய போதும் அதன் பிண்ணணி ஏதுவாக இருந்தது என்பதை மீண்டுமொருமுறை உதவ துடிக்கும் போது இந்தியாவின் உதவிகளை நேரடியாக அனுபவித்தவர்கள் எண்ணியோ அலசியோ பார்ப்பது அறிவுசார்ந்தது. நடந்தவைகளை மறந்துவிட்டு கைகோர்த்து நடப்பதற்க்கு இது காதலல்ல. பிறநாட்டு ஜனங்களை உயிருடனேயே புதைத்து விட்டு அந்நாட்டின் முலதனங்களை அப்படியே அள்ளிகொண்டு செல்ல துடிக்கும் அரசியல். நடந்தவைகளை அனுபவங்களாக கொள்வதில் குற்றம் என்ன இருக்கிறது? ராஜீவ்காந்தியின் கொலை எப்படி அநியாயமானது? பேச வேண்டியவர்கள் மௌனமான ஒரே ஒரு காரணம்தான். ராஜீவ் இந்தியாவின் துரோகி தனது தாய் இறந்த போது இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பல உயிர்களை கொடுத்து போராடிய சீக்கய (சிங்) இன மக்களை கொடுரமாக கொன்றவன். போரஸ் பீரங்கி வங்குவதாக கூறி இந்தியநாட்டு பணத்தை கொள்ளையடித்த ஒரு கொள்ளைகாரன். இவன் எப்படி பிற நாட்டுக்கு உதவுவான்?

இந்த கேள்வியை சில இந்தியர்களே தமத்குள் கேட்டிருக்கிறார்கள். ராஜீவை யார் திட்டம் தீட்டி கொன்றார்கள் என்பது எனக்கு தெரியாது ஆனால்....................... புலிகள் அதை செய்திருப்பின் அவர்களை பாராட்டாமல் என்னால் இருக்க முடியாது. காரணம் கொலை நடந்த காலம். மீண்டும் பிரதமரகுவதற்கு தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போதே கொல்லப்பட்டார். ஒரு வேளை அவர்கள் அதை செய்யாது அவரே பிரதமராகியிருப்பின்............ ஈழத்தில் மீண்டும் இந்திய ராணுவம் புகுந்திருக'கலாம் பல ஆயிரம் மக்கள் இறந்திருக்கலாம். இதை இப்படி சிந்தித்து பாருங்கள் (சதாம் ஒரு கொலைகாரன் என்பதை உலகே கூறிய போது அவனுக்கு உதவியது அமெரிக்கா. நான் சதாம் நல்லவன் என்று கூற வரவில்லை) ஏற்கனவே இராக்கை பதம் பார்த்த புஸ்சின் மகன் ஜோர்ஜ் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் பிரச்சாரம் செய்தபோது இராக் நாட்டு புலனாய்வு பிரிவு ஒரு கண்வைத்திருந்தால்......... இன்று இராக்கின் நிலை வேறாக இருக்கும். 1500000 (கிட்டதட்ட) இராக் நாட்டு மக்கள் இறந்திருக்க தேவையில்லை.

நான் இந்தியாவையோ அமெரிக்காவையோ எதிர்ப்பவன் அல்ல. சில சுயநல வாதிகளின் கைகளில் அதிகாரம் போவதால் வரும் வினைகளை தான் குறிப்பிடுகிறேன்.

இவை என்னுடைய தனிபட்ட கருத்துக்கள். இது பிழை என கூற இதை வாசிக்கும் அனைவருக்கும் உரிமையுண்டு!

உறவுகளே!

அமைதிப்படையின் அட்டூழியங்களை நான் மறக்கவோ, மறைக்கவோ முயலவில்லை.... இந்த அட்டூழியங்களைச் செய்து முடித்து தாயகம் திரும்பிய அவர்களுக்கு இன்று வரை வரலாற்றில் எந்த நாட்டு இராணுவத்துக்கும் கிடைக்காத அவமரியாதை கிடைத்தது....

அதாவது இந்தியாவின் ஒரு மாகாண முதல்வர் அவர்களை வரவேற்காமல் புறக்கணித்து அவமானப்படுத்தினார்.... இந்தியாவில் கிட்டத்தட்ட தேசியக் கொடியை அவமானப்படுத்துவதற்கு சமமான செயல் இராணுவத்தை அவமானப்படுத்தியது....

அமைதிப்படையின் அட்டூழியங்களை இந்தியர்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்று மட்டும் நீங்கள் நினைத்து விடக்கூடாது என்பதற்காகவே இந்த விளக்கம்.....

இந்தியர்கள் பாசமானவர்கள், மனிதாபிமானம் மிக்கவர்கள்... இந்தியாவுக்கு வந்து பழகிப் பார்த்தவர்களுக்கு இது தெரியும்....

நன்றி!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சத்தியமாய் இந்த பகுதியை நான் படிக்கவில்லை. எனினும்,

தெளிந்திருக்கும் குட்டையை குழுப்ப நினைப்பது யாரோ?

குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது யாரோ?

வேலையில்லா வேலையாப்போச்சு யாழ் களத்தில கொஞ்த்துக்கு. ராஜீவ் காந்தியின் நிகழ்வு துன்பகரமானது மன்னித்துக் கொள்ளுங்கள் என்ற தொனியில் தமிழீழமே கருத்து தெரிவிக்க, நீங்கள் அதை மன்னித்தாலும், நாங்கள் இதை மன்னிக்க மாட்டோம் என்று, கத்துவதில் என்ன உள்ளதோ!?

அது தொடர்பான கருத்துக்களை படிக்காது விடியும், இந்திய நண்பர்களிடம் இந்த விடையத்தில் எனது மன வருத்தத்தை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன், லக்கி லுக் உங்கள் இறுதிக்கருத்தோடு நானும் உடன் படுகின்றேன்,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.